Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

18

பவானிக்கு, அன்று முழுவதும் பதட்டம்.. யோசனை.. மாமியாரிடம் சொல்லலாம் என்றாலும்.. அவர் பயந்துக் கொள்வார் என எண்ணம்.. அப்படியே கணவனிடம் சொல்லவும் பயம். ‘வெளிநாட்டில் வேலை விஷயமாக சென்றிருக்கிறான் இப்போது போய் சொல்லி, ஏதேனும் அவனும் பதட்டபட்டால்..’ என எண்ணிக் கொண்டு.. ஸ்ரீ எங்கிருக்கிறான்  என கேட்போம் என எண்ணிக் கொண்டாள் பெண்.

வேதா, இரவு உணவிற்குதான் வந்தார்.. மில்லில் அமர்ந்துக் கொண்டார். செந்திலை, வேறு எதோ வேலையாக கோவைக்கு அனுப்பி இருக்கிறான் விசு. எனவே வேதாதான் இன்று முழுவதும் மில்லில் இருந்தார்.

இரவுதான் வீடு வந்தார். எனவே மருமகள் மேலே படித்துக் கொண்டிருப்பாள் என எண்ணி உண்டு உறங்கிவிட்டார்.. மருமகளை பார்க்கவேயில்லை வேதா. பார்த்திருந்தால், ஒருவேளை பவானியின் முகத்தைப் பார்த்தே ஏதேனும் உள்ளது என கணக்கிட்டிருப்பாரோ என்னவோ.

இரவு, தன் நண்பன் ராகவ்க்கு அழைத்து பேசினாள்.. பொதுவாக ஸ்ரீ எப்படி இருக்கிறான்.. என கேட்டாள். அவளிற்கு அவனை பற்றி இப்போது எந்த நினைப்பும் இல்லை. 

ஆனால், ராகவ் சத்தம் போடத் தொடங்கிவிட்டான் ‘நீ இப்படி பேசுவேன்னு நான் நினைக்கலை வனி.. இன்னுமா அவன் நினைப்பு’ என கொஞ்சம் திட்டியும் இருந்தான்.

பவானிக்கு அந்த திட்டுக்கள் எல்லாம் இப்போது வலிக்கவே இல்லை.. அவள் மனதில் தன் நண்பன் சொல்லுவது போல எந்த எண்ணமும் இல்லையே.. அதனால் வலிக்கவில்லை.. ஆனால், நண்பனின் திட்டுக்கள் இனித்தது. 

ராகவ், சற்று ஓய்ந்து போகவும் பவானி சிரித்தாள்.. நக்கலாக. இப்போதும் ராகவ்க்கு கோவம் “என்ன வனி.. இவ்வளோ சொல்றேன்.. உன் லைஃப் நீயே கெடுத்துக்காத..” என்றான் ஒய்ந்த்க் குரலில்.

பவானி, அவனை இன்னமும் சோதிக்க எண்ணாமல் “டேய் அறிவு.. நா.. இன்னிக்கு, என்ன நடந்தது தெரியுமா” என தொடங்கி மாலையில் நடந்ததை விவரிக்கத் தொடங்கினாள் பெண்.

ராகவ், முதலில் அதிர்ந்து போனான்.. ஆனாலும் கிண்டலாக “என்ன சினிமா ஏதாவது பார்த்தியா.. கனவு கண்டியா.. சும்மா கதை விடாத. அதுவும் உங்க வீட்டுக்கிட்ட இப்படி நடந்தது.. என்ன வியாயாடுறியா..” என முதலில் கலாய்த்தான்.

ஆனால், பவானி அவர்கள் வந்தது பற்றி மீண்டும் மீண்டும் விவரித்து.. “அதனால், ஸ்ரீயாக இருக்குமோன்னு என சந்தேகம் ராகவ்..” என்றாள்.

ராகவ்க்கு, யோசனை வந்தது.

ராகவ் “ம்.. அப்போவே அவன் பேச்சே சரியில்லை வனி.. ரொம்ப கோவத்தில் இருந்தான். எக்ஸாம் முடிந்து கிளம்பும் போது நாங்க அவனை பார்த்து பேக்.. செய்துதான் அனுப்பினோம். அப்போவும் கோவமாகதான் பேசினான்.. அவன் எதையும் உணரலை.. முதல் வருடம் இருந்த ஸ்ரீ இல்லை அப்போது அவன். ம்…” என சொல்லி, சுதாரித்தான் ராகவ். 

மீண்டும் அவனே “என்னை அடிக்க இவங்க யாரு.. அப்படி இப்படின்னு கோவமாக்தான்  இருந்தான். ஆனால், அவங்க அப்பா, நல்லவிதமாக பேசினார்.. என் பையனை எனக்கு கொடுத்துட்டாங்க.. இல்லைன்னா, எனக்கு எதுவுமே தெரியாமல் போகியிருக்கும்முன்னு சங்கடப்பட்டார். உன்னை நினைத்தும் வருந்தினார்.. உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்ன்னு சொன்னார். எங்ககிட்ட” என்றான்.

பவானி “அப்படியா.. ஏன் டா, என்கிட்ட சொல்லல..” என்றாள்.

ராகவ் “விசு சார் கிட்ட நாங்க பேசினோம்.. ஆனால், விசு சார் சம்மதிக்கலை.. ‘ஸ்ரீ, மன்னிப்பு கேட்டிருந்தால் கூட அனுமதிக்கலாம்.. அவன் இப்படி அவளை பேசியது சங்கடமாக இருக்கு. இனி அவங்க பேச்சே வரகூடாதுன்னு’ சொல்லிட்டார். அதனால், நாங்களும் ஸ்ரீ அப்பகிட்ட சொல்லிட்டோம். அவரும் சரிதான்.. அந்த பெண் நல்லா இருக்கட்டும்.. என சொல்லி அமைதியாகிவிட்டார்..” என்றான் ராகவ்.

பவானி “ஓ… இவ்வளோ நடந்திருக்கு என்கிட்டே சொல்லவேயில்ல..” என்றாள்.

ராகவ் “சரி அதை விடு, விசு சர் எப்படி பார்த்துக்கிறார்.. எல்லாம் ஓகே ஆகிடுச்சா” என்றான்.

கணவனின் பேச்சும் பிடிவாதமும் மனக் கண்ணில் வந்து போனது பெண்ணுக்கு.. பவானி “.ம்.. எல்லாம் ஓகேதான்.. அத விடு இப்போது ஸ்ரீ இல்லை இதற்கு காரணம்..” என்றாள் கடைசி வார்த்தைகளை அதட்டலாக கேட்டாள் பவானி.

ராகவ் “கண்டிப்பாக இருக்காது.. அவனை அனுப்பி விட்டார், அவங்க அப்பா. அத்தோடு, சர்.. அதான் ஸ்ரீ, நாம் மெஸ்சேஜ் செய்தால் கூட எடுப்பதில்லை.. பதில் அனுப்புவதில்லை.. அவன் இல்லை கண்டிப்பாக. நீ விசு சர் கிட்ட சொல்லு.. ஆனாலும், எனக்கு இன்னமும் டௌட் தான், இந்த சீன் எல்லாம் நடந்ததா.. இல்ல, ஏதாவது கனவு கண்டியா” என்றான் சிரிக்காமல்.

பவானிக்கு, சிரிப்புதான் வந்தது. மாலையில் இருந்த படபடப்பு எல்லாம் காணமால் போனது தன் நண்பனின் பேச்சில்.. இப்போது. இன்னும் சற்று நேரம் தங்களின் கல்லூரி நட்புகள் பற்றி பேசிவிட்டுதான் வைத்தனர் இருவரும்.

அதன்பின்தான் கொஞ்சம் தெளிந்தாள் பவானி.. பின் உண்டு, மேலே வந்து உறங்க தொடங்கினாள்.

மறுநாள் இயல்பாக கல்லூரிக்கு கிளம்பி போனாள்.. வந்தால். நேற்று நடந்தது.. ராகவ் சொன்னது போல, கனவோ.. சினிமாவோ.. என தோன்ற தொடங்கிவிட்டது பவானிக்கு. இன்று யாருமே அப்படி வரவில்லை, போகவில்லை. எப்போதும் போல வீடு வந்து சேர்ந்தாள்.

அடுத்தடுத்த நாட்களும் அப்படியேதான் சென்றது அவளிற்கு, யாரேனும் பின் தொடர்கிறார்களா என பார்த்துக் கொண்டுதான் வந்தாள்.. செல்லும் போதும் கவனமாக சென்றாள். ஆனால், அப்படி ஏதும் அவள் கண்ணில் படவில்லை.. ஒருவாரத்தில் இந்த நிகழ்வை மறந்தும்விட்டாள்.

!@!@!@!@!@!@!@@!@!@!@!@

வேதாவிற்கு, மில் வேலை சரியாக இருந்தது.. அதனால், அவரின் தினப்படி நிகழ்வுகள் ரோட்டரி, தங்களின் பெண்கள் இயக்கம் என எதற்கும் செல்ல முடியாமல் போனது.

ம்… விசு, சென்று கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்குகிறது.. இன்னமும் அவன் வரவு பற்றி தெரியவில்லை. அங்கே ‘தானே’ நேரில் மார்கெட் தேடிக் கொண்டிருக்கிறான் விசு. எனவே, இன்னமும் வந்து சேராததால், வேதாதான் திண்டாடி போனார். 

வேதாவின் உலகம் வேறு.. பெண்களுக்காக ரோட்டரியில் இருக்கிறார். வாரம் ஒரு மீட்டிங். வார நாட்களில் ஏதேனும் விழா விருந்து. அத்தோடு டொனேஷன் கலெக்ட் செய்ய என குழுவாக பிரிந்து வேலை பார்ப்பார்கள். அத்தோடு உதவி என வயோதிகர்களின் இருப்பிடம் செல்லுவது, கைவிடப்பட்ட பெண்களுக்கான அமைப்பும் வைத்திருக்கிறார்கள்.. எனவே, வேதா பிஸிதான் எப்போதும் தனக்கான உலகத்தில்.

இப்போது, அவர்களின் தொழில் என்றாலும், மகன் வேலையை செய்வதால்.. அதுவும் அவனின் திருமணம் முடித்து வந்தும்.. அந்த வேலையையை தான் பார்ப்பது எதோ தன் சுதந்திரம் போனதாக உணர்ந்தார் வேதா. எனவே, மகனிடம் இன்று கேட்டுவிட வேண்டும் என அவனின் இரவு அழைப்புக்காக காத்திருந்தார் அன்னை.

இன்று வெள்ளிகிழமை, இப்போதுதான் பவானி வந்தால் கல்லூரி முடிந்து. வேதா, மில்லிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.. மருமகளை பார்க்கவும் இரண்டு  நாளாகிற்று பேசி என அமர்ந்தார் ஹாலில்.

பவானியும் “ஏன், அத்தை, இப்போவே மில்லிற்கு போறீங்களா.. மணி ஐந்துதான் ஆகுது.. ஏன் அத்தை வேலை நிறைய இருக்கா..” என்றாள், எதார்த்தமாக.. ஒரு அக்கறையில் கேட்டாள் பெண்.

வேதா “ஆமாம் டா, என்ன செய்ய உன் புருஷன்தான் அங்க இருக்கான், எப்போ வரேன்னு ஒன்னும் சொல்லவே இல்லை.. ஏதாவது உன்கிட்ட சொன்னானா?..” என மருமகளை ஆராய்ந்தார் பேச்சால்.

பவானி “இல்லையே அத்தை.. என்கிட்டே ஏதும் சொல்லலை..” என்றாள்.

வேதா “நான் வெளியிலேயே போக முடியலை.. என் சர்வீஸ் எல்லாம் அப்படியே நிக்குது.. என் குரூப்ல நேற்று ஒருத்தரோட பர்த்டே பங்க்ஷன்.. என்னால் அட்டென் செய்ய முடியலை.. இன்னிக்கு கூட மகளிர் தினவிழா எங்கள் அமைப்பை கௌரவிக்கிரார்கள்.. என்னால் போக முடியாது போல.. செந்தில் இன்னமும் வரலை..” என்றார் கொஞ்சம் அமைதியான குரலில் பேசிக் கொண்டிருந்தார். பெரிதாக சத்தம் எல்லாம் இல்லை.. ஆனால், முகம் சிவந்து இருந்தது.

அதை பார்த்த பவானிக்கு இப்போதுதான் தன் மாமியாருக்கு கோவம் என புரிந்தது.. கொஞ்சம் பயந்து போனாள். அவள் வந்து மூன்று மாதங்களை நெருங்குகிறது.. ஆனால், தன் மாமியார் இப்படி பேசி அவள் பார்த்ததே இல்லை. அவர் கோவமாக பேசுகிறார் என சொல்லவே முடியாது.. குரலில் அதிர்வுகளே இல்லை, ஆனால், முகத்தில் அத்தனை அதிர்வுகள் தெரிந்ததை இப்போதுதான் பார்க்கிறாள்.. பாய்ந்து போய் அமர்ந்துக் கொண்டாள், மருமகள்.

வேதா “இன்னிக்கு பேசும்போது கேளு.. எப்போ வரான், என்ன.. என..” என்றார் அதே அமைதியானக் குரலில்.

பவானி “அ.. அத்தை இன்னிக்கு நீங்க உங்க பங்க்ஷனுக்கு போங்களேன் அத்தை.. நா..நான் மில்லிற்கு போறேன்.. அங்க செந்தில் சர் இருப்பாரில்லா.. நான், சும்மா போயிட்டு வரேன்..” என்றாள், தன் மாமியாரின் கோவம் பார்த்து.

வேதா “செந்தில் இல்லையே, அவனையும் வேலை சொல்லி அனுப்பி இருக்கான் உன் புருஷன்..” என்றார், தன் அமைதி மாறாமல்.

பவானி “அத்தை பரவாயில்லை.. நீங்க உங்க பங்ஷனை பாருங்க அத்தை.. நான் மேனேஜ் செய்துக்கிறேன்.. ஏதாவது தேவை இருந்தால் உங்களை கூப்பிடுறேன்..” என்றாள் அவரின் கோவத்தை போக்க வேண்டும் என்ற நோக்கில்.

Advertisement