Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

15

அடுத்த நான்கு நாட்களும் சென்றது, தன் படிப்பு பற்றி, கணவரிடம் ஏதும் கேட்டவில்லை சொல்லவில்லை  பவானி.

வேதாவிற்கு, இதுவரை இருவர் மேல் இருந்த சந்தேகம் இந்த நான்கு நாட்களில் உறுதியாகியது, பவானியின் அமைதியில். 

எனவே இன்று, காலையில் யோகா முடித்து.. குளித்து வந்த மருகளிடம்  “என்ன பவானி எப்போ போறீங்க காலேஜ்க்கு.. டைம் அதிகம் இல்லையே” என தானாகவே பேச்சை ஆரம்பித்தார்.

பவானி அப்போதுதான் கீழே வந்திருந்தாள்.. இன்னும் கிட்சென் செல்லவில்லை.. விசுவிற்கு காலையில் பரிமாறு வேலையை அவளுக்கு கொடுத்திருந்தார் வேதா. இப்போது விசு வந்துவிடுவான். இப்போது இந்த கேள்வி தன் அத்தையிடமிருந்து. மருமகளுக்கு என்ன பதில் சொல்லுவது என தோன்றாமல் “டைம் ஆச்சு அத்தை, இருங்க வரேன்” என்றவள் கிட்சென் சென்றுவிட்டார்.

விசு, சற்று நேரத்தில் இறங்கி வந்தான். வேதா “என்ன விசு, பவானி சொன்னாளா” என ஆரம்பித்தார், மகனிடம்.

விசுவிற்கு எது பற்றி என ஏதும் தெரியவில்லை “எங்க ம்மா, எதோ சொன்னாள்.. எனக்கு இப்போது டைம் இல்ல, அப்புறம் பேசலாமா”” என்றான் அசித்ரையாய், தெரிந்தே பொய் சொன்னான்.

வேதா “கொஞ்சம் வீட்டையும் கவனி விசு.” என்றார் சலித்துக் கொண்டு.

விசு, இப்போது தன் அன்னையை பார்த்து ‘கொஞ்சம் அமைதியாக இருங்க’ எனும் விதமாக தன் கண்களை மூடி திறந்து, வாயில் விரல் வைத்து சைகை ‘உஷ்’ செய்தான். பின் எதோ செந்திலுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினான்.

இப்போது வேதா “விசு, என்ன டா, இப்படி இருக்க.. இன்னும் ஒரு வாரத்தில் காலேஜ் ஓபன் ஆகிடும்.. உன்னை தொந்திரவு செய்ய வேண்டாம்ன்னுதான் அங்க காலேஜ்ஜில் போய், சீட் கேட்டோம். இல்லைன்னு சொல்லிட்டாங்க.. கொஞ்சம் அதை என்னான்னு பாரேன். அதை என்னான்னு பார்த்து ஏற்பாடு செய்துக் கொடு விசு. ஒரு வருஷம் வீனாகிடப் போகுது..” என்றார் 

விசு, எதையும் கவனிக்காதவன் போல.. விஷயத்தை உள்வாங்கிக் கொண்டான். அசால்ட்டாக  போனையே பார்த்துக் கொண்டிருந்தவன் “எந்த காலேஜ்” என்றான்.

வேதா, மருமகளை திரும்பி பார்க்கும் முன், பவானியிடமிருந்து பதில் வந்தது “— காலேஜ்” என்றாள் அவசரமாக.

இப்போது குரல் வந்த திசை நோக்கி திரும்பினான், அவளின் கணவன்.. ‘ம்.. என்கிட்டே மட்டும் கேட்க மாட்டாங்களாம்.. எத்தனை அழுத்தம் இவளுக்கு’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை அவனால். அவனின் பார்வை உணர்ந்த.. மனையாளுக்கு ‘என்ன முறைக்கிறாங்க..’ எனதான் தோன்றியது.

விசு “அதே காலேஜ்தான் போகனுமா” என்றான் அழுத்தம் திருத்தமானக் குரலில், தன் மனையாளை பார்த்து வினவினான், நேரடியாக.

வேதா எழுந்து சென்றுவிட்டார்.

பவானி “அ..அது” என ஆரம்பித்து “கிடைச்சா நல்லா இருக்கும்..” என்றாள், கை இரண்டையும் விரித்து.

விசு, அவளை பார்க்காமல் எதோ யோசனைக்கு சென்றான். 

பவானி “டிபன் எடுத்து வரவா” என்றாள், அமைதியானக் குரலில்.

விசு, ஏதும் சொல்லவில்லை.. போனில் எதையோ தேடியபடியே இருந்தான். சற்று நேரத்தில் தானே உண்பதற்கு உணவு மேசைக்கு வந்தான்.. பவானி தட்டு வைத்து பரிமாறினாள். நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை அவளை.. ‘உண்பதற்காகவே பிறப்பெடுத்திருக்கிறேன் நான்..’ என உண்டான், விசு.

பவானி, ‘கணவன் பார்ப்பான் ஏதாவது பேசலாம்..’ என எண்ணிக் கொண்டிருந்தாள் ‘இல்லங்க, நைட் சொல்லனும்ன்னு நினைக்கிறேன்.. நீங்கதான்.. முறைச்சிகிட்டே இருக்கீங்க.. எப்படி பேசறது.. கேட்கறதுன்னு தெரியலை.. அதான், சொல்லலைன்னு’  என இவள் எண்ணிக் கொண்டே.. அவன் எப்போது நிமிருவான் என பார்த்திருந்தாள்.

சற்று நேரத்தில் போன் வந்துவிட்டது விசுவிற்கு.. பேசிக் கொண்டே உண்டவன்.. அப்படியே கைகழுவிக் கொண்டு, ஹாலில் அமர்ந்தான். இன்னமும் செந்தில் வரவில்லை.. எனவே போனில் பேசிக் கொண்டே இருந்தான் அடுத்தடுத்து, விசு.

இப்போது பவானி தன் அத்தையை அழைத்து வந்தாள் உண்பதற்கு.

வேதா “நீயும் வா.. உட்கார்” என அழைக்க.. மாமியார் மருமகள் இருவரும்  உண்டனர்.

வேதா “என்ன சொன்னான்.. எப்போ போறீங்க” என்றார்.

பாவனி “தெரியலை அத்தை.. ஒன்னும் சொல்லலை” என்றாள். இருவரும் உண்டு முடித்து.. ஹாலுக்கு வர.. இன்னமும் விசு அங்கேயே இருந்தான்.

இப்போது விசு “அம்மா, அந்த, அந்த காலேஜ் வேண்டாம் ம்மா, நீங்க போயே சீட் இல்லைன்னு சொல்லிட்டாங்க.. எதுக்கு அங்க திரும்பவும் ட்ரை பண்ணிக்கிட்டு. என்ன சரிதானே” என்றான் கேள்வியாய்.. வேதா மருமகளை பார்த்தார். மருமகள் மாமியாரை பார்த்தாள்.. மகனும் தன் அம்மாவையே பார்த்தான்.. யாரிடமிருந்தும் வார்த்தை வரவில்லை.

விசுவே மீண்டும் பேசினான் “இது ‘—காலேஜ்’  நல்லா இருக்கும்.. நம்ம, திருவோட பங்காளிதான் நடத்தறாங்க.. சீட் ஆரேஞ் செய்தாச்சு. ஒருமணி வரைக்கும் இருப்பாராம் சேர்மேன்.. போயிட்டு அட்மிஷன் போட்டுக்கலாம் ம்மா… ஓகேவா..” என்றான் பொதுவாக மீண்டும் தன் அன்னையிடம் பார்வையை வைத்து.

மீண்டும், வேதாவிடம் இருவரின் பார்வையும் குவிந்தது.. வேதா, இருவரையும் என்ன செய்யலாம் என்ற யோசனைக்கே சென்றுவிட்டார்.. தன் மகனை முறைத்தார் இப்போது.

வாசலில் செந்தில் வந்ததற்கான அறிகுறியாக.. கார் ரிவர்ஸ் எடுக்கும் சத்தம் கேட்டது. விசு, தன் அன்னையின் பார்வை உணர்ந்து எழுந்துக் கொண்டான்.. விசு “நீ.. நீங்க.. பார்த்துப்பீங்கள்ள.. இல்ல, நான் வரணுமா” என்றான் இப்போது தன் மனைவியை பார்த்து, விசு.

பவானிக்கு சட்டென்ற இவனின் கேள்வியில் ஒன்றும் புரியவில்லை.. வேதா, அமர்ந்தபடி பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார். 

பவானி, இப்போது கணவனின் கண்ணை பார்க்க.. அது.. அந்த ப்ரௌன் நிறம்.. எப்போதும் போல அவளை பயமுறுத்தியது. சட்டென அவளுக்கு எதோ எண்ணம் ‘என்ன இப்படி கேட்க்கிறார்.. கதையெல்லாம் சொல்லும் வேதாளம் கடைசியாக ஒரு கேள்வி கேட்க்குமாமே.. அதற்கு பதில் சொல்லவில்லை என்றால்.. மீண்டும் மரத்தில் ஏறிக் கொள்ளுமாம் அப்படி இருக்கு.. இவர் இந்த கேள்வியை கேட்பது.. எல்லா கதையையும் சொல்லிட்டு.. கடைசியாக என்னை கேட்டகிறார்.. தெரியாதா.. வர வேண்டும் என.. நானே பதிலை சொல்லனும்மா.. ஆனால், இந்த ப்ளூகலர் ஷர்ட்டில் வேதாளம் நல்லாத்தான் இருக்கு.. அந்த கண்ணை மட்டும் பார்க்க கூடாது’ என எண்ணியபடியே நின்றவளுக்கு, கணவன் அவளை பார்த்துவிட்டு, வெளியே சென்றது தெரியவில்லை.

வேதா “எனக்கு எங்க க்ளப்பில் மீட்டிங் இருக்கு பவானி..” என்றார்.

பவானி “ம்… சரி அத்தை..” என்றவள் அவசரமாக வெளியே சென்றாள்.

விசு, காரில் ஏறி இருந்தான். கார் இன்னும் கிளம்பவில்லை.. பவானிக்கு எப்படி அழைப்பது கணவனை என தெரியாமல் பார்த்துவிட்டு உள்ளே வந்துவிட்டாள்.

பவானிக்கு கல்லூரி கிண்டல் போகவில்லை போல ‘வேதாளம்.. போல.. அதான் பதில் சொல்லலைன்னு.. போயிட்டாங்க’ என தோன்றியது.. பின் ‘ஐயோ!.. பவாணீ…. உன் நாதன் அவர்.. நீயே கிண்டல் பண்ணலாமா’ என தன்னை தானே கேட்டுக் கொண்டாள், பெண்.

வேதா, தன்னறைக்கு சென்றுவிட்டார்.

உள்ளே வந்த பவானிக்கு, கணவனின் வார்த்தைகளில் நல்ல மனநிலையில் இருந்தது.. எனவே, கணவனை முதல்முறை போனில் அழைத்தாள்.. இரண்டே ரிங்கில் எடுத்துவிட்டான் விசு “ம்..” என்றான் ஏதும் பேசாமல்.

பவானிக்கு எப்படி அழைப்பது கணவனை ‘என்னங்கன்னா..’ அய்யோ பழசா இருக்கே.. பேர் சொல்லி கூப்பிடற அளவுக்கு இன்னும் பேசலையே நான்..’ என எண்ணிக் கொண்டவள் “அது.. அத்தைக்கு வேலை இருக்காம்.. நீங்க வ… வந்து அட்மிஷன் போட்டு தரீங்களா.. இல்ல, உங்களுக்கு வேலை இருந்தால்.. இல்ல, நான் அப்பாவை கூட்டி போகவா” என்றாள் மெதுவானக் குரலில், திக்கி திணறி, கேள்வி கேட்டு தானே பதில் சொல்லி.. ப்பா… தடுமாறினாள் கணவனிடம் பேசுவதற்கு.

விசுவிற்கு, ‘வாங்கன்னு சொல்லாமல் இதென்ன பேச்சு’ என  இவளின்  வார்த்தைகள் கோவத்தை தந்தாலும்.. வேறு வழியும் இருக்கவில்லையே என அவனுக்கே புரிய “நானே வரேன்.. பனிரெண்டு மணிக்கு வரேன்..” என்றான்.

பவானி “தேங்க்ஸ்..” என்றாள்.. போனை வைக்கவில்லை.. என்ன சொல்லி வைப்பது என தெரியவில்லை, எனவே அப்படியே இருந்தாள். 

விசுவிற்கும் என்ன சொல்லுவது என தெரியவில்லை.. ‘உன் தேங்க்ஸ் வேண்டாம்..’ என எண்ணினாலும், வாய் திறந்து ஏதும் சொல்லவில்லை அவன்.. தானே, போனை வைத்தும் விட்டான்.. ஏதும் சொல்லாமல்.

பவானிக்கு ‘அப்பாடா… காலேஜ் போக போறோம்..’ என எண்ணம்தான்.. மற்றபடி கணவனின் நிலை என்பது.. அவளுக்கு இன்னமும் புரியாதநிலை.. அதை அவள் இப்போது தெரிந்துக் கொள்ளவும் முயலவில்லை. எனவே தனக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.

வேதா, மருமகளிடம் ‘தனக்கு லஞ்ச் வேண்டாம்’ என சொல்லிக் கொண்டு   தன் வேலையை பார்க்க.. கிளம்பிவிட்டார்.

பவானி கிளம்பி ஹாலில் அமர்ந்திருந்தாள்.

சரியாக சொன்ன நேரத்திற்கு வந்தான் விசு. வேலை செய்பவர், இருவருக்கும் மோர் கொடுத்தார்.. பருகினர் இருவரும்.. கிளம்பினர்.

விசு, முன்னே நடக்க பின்னால் சென்றாள் பவானி. காரில் ஏறினர் இருவரும். ஒன்றும் கேட்கவில்லை அவன்.. அவளும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. மனதில் இருவருக்கும் அமைதி.

இருவரும் கல்லூரி வந்தனர்.. விசு முன்னே நடக்க நடக்க அவனின் வேகம்.. இவளை ஓட வைத்தது. பின் பவானியே பொறுமையாக செல்ல தொடங்கிவிட்டாள்.. அருகில் பவானி வராததை கவனித்த அவனாகவே கொஞ்சம் வேகம் குறைத்து நடந்தான்.

இப்படியாக இருவரும் வந்து சேர்ந்தனர். விசு முறையாக சேர்மேன்னிடம் “பவானி, என் வைஃப்” என அறிமுகம் செய்தான்.. 

பவானிக்கு அவனின் தயக்கமில்ல அறிமுகம்.. என்னமோ செய்ததது.. சட்டென கரம் குவித்தாள் பெண். 

விசுவும் சேர்மேன்னும் பேச தொடங்கினர். விசு, பவானி என்ன படித்திருக்கிறாள்.. இப்போது என்ன தேவை அவளுக்கு.. என தொடங்கி.. ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான் அவன்.

பவானியிடம் எந்த கேள்வியுமே வரவில்லை.. இறுதியாக சேர்மேன் “என்ன மேஜர் வேணும்மா” என்றார் அவ்வளவுதான்.

பவானி, அதற்கு மட்டும் பதில் சொன்னாள்.. மற்றபடி வேறு கேள்விகளே இல்லை. 

எல்லாம் பேசி முடித்து வெளியே வந்தனர்.. அலுவலக அறையில் விண்ணப்பம் பூர்த்தி செய்தல்.. பணம் கட்டுதல்.. என எல்லாவற்றையும் பொறுமையாக அவனே செய்தான். அவளிடம் கையெழுத்து போடுவதற்கு மட்டுமே விண்ணப்பத்தை நீட்டினான்.. இயல்பாக விசு “செர்டிபிகேட்ஸ் எடு.. போட்டோ கொடு..” என கேட்டு வாங்கிக் கொண்டான். அவ்வளவு இனிமையாக பேசினான்.. அருகிலேயே நின்றான்.

 

Advertisement