Advertisement

விசு, சற்று நேரம் சென்றுதான் இறங்கி  வந்தான்.. இலகுவான உடை.. மனமும் முகமும் கொஞ்சம் இலகிதான் இருந்தது போல “ம்மா.. காம்ப்ளான்” என்றான் சிறு பையனாக.

அன்னைக்கு பொங்கியது “இன்னும் என்ன காம்ப்ளான்.. அதான் எல்லாம் நீங்களே பார்த்துக்க்கிறீங்களே.. போ, அதையும் நீயே எடுத்து போட்டு குடுச்சிக்கோ” என்றார் கோவமானக் குரலில்..

விசுவிற்கு என்னவென புரியவில்லை ஒரு நிமிடம், இப்போது அங்கிள் வந்து சென்றிருப்பார் என தோன்றவும் “என்ன மா.. என்ன விஷயம்” என்றான் கொஞ்சம் டென்ஷனான குரலில்.

வேதா, வேலையாட்களிடம் காம்ப்ளான் கலக்க சொன்னார், இங்கிருந்தே கட்டளையாக. அந்த குரலில்தான் விசுவிற்கு புரிந்தது அன்னையின் கோவம். அன்னை டென்ஷன் ஆகுவார் என தெரியுமே எனவே “என்ன ம்மா.. அங்கிள் வந்தாரா..” என்றான்.

வேதா “எந்த அங்கிள்..” என்றார் புரியாதவராக வேண்டுமென்றே.

விசு “பத்து அங்கிள் உங்ககிட்ட பேச வரேன்னு சொன்னார்.. அதான் கேட்டேன்.” என்றான்.

வேதாவிற்கு, மீண்டும் தான் வேறான எண்ணம் வந்துவிட்டது.. அழுகையும் சட்டென வந்தே வந்தது.. “என்னமோ பண்ணுடா.. எப்படியோ போ.. எதுவும் என்னை கேட்பதில்லை என்னிடம் சொல்லுவதில்லை..” என சொல்லிக் கொண்டே தன் அறை நோக்கி நடந்தார்.. விசு பின்னாடியே சென்றான் “ம்மா ம்மா… என்னம்மா.. என்ன ஏன் என்ன ஆச்சு” என கேட்டுக் கொண்டே அவரோடு, அறைக்கு சென்றான்.

விசு “சொல்லும்மா.. அங்கிள் வந்தாரா இல்லையா” என்றான்.

கோவமாக அன்னை “வந்தார் டா, வந்து என் பையன் கல்யாண விஷயத்தை என்கிட்டையே கேட்க்கிறார்.. நான் எதற்கு இங்கே.. நான் யாருக்காக இருக்க வேண்டும்.. நான் போறேன்.. நான் போறேன்”  என ஆவேசமாக சொல்லியவர், கப்போர்ட் திறந்தார்.. விசு தன் அன்னையை தடுத்து நிறுத்தி அவரின் கையை பிடித்து இழுத்து வந்தான்.

அங்கிருந்த கட்டிலில் அமர வைத்து, தானும் ஒரு சேர் போட்டு அமர்ந்தான். விசு “அம்மா, இது நடந்து எத்தனை மாசம் ஆகுது.. உனக்கு இது இன்னிக்கு நேத்துதான் தெரியுமா? நாமே போய் பேசியிருக்கனும், அவங்க வந்து பேசற அளவுக்கு நீ இருக்க.. சரி என்ன கோவம் சொல்லு, அதுதான் கோவமா, இல்லை, என கோவம் சொல்லு” என்றான்.

அன்னை “என்ன டா.. எல்லா முடிவும் நீயே எடுத்துட்டியா” என்றார்.

விசு “வேற என்னம்மா பண்ண சொல்ற, அன்னிக்கே என்னை மீறி நடந்திடுச்சி.. அதை மாத்த முடியுமா.. எனக்கு.. அதை ஒதுக்கவே முடியலை ம்மா.. அதான், ஏன் ம்மா, உனக்கு அந்த பெண்ணை பிடிக்கலையா.. நீ என்ன நினைக்கிற..“ என்றான் முகமும் அந்த விழிகளும் வேண்டி நின்றது இப்போது.

வேதாவிற்கு, அதை பார்க்கவே என்னமோ போல் இருந்தது.. ‘என்ன இவன் இவ்வளவு செண்டிமெண்டாக பேசறான்..’ என பார்த்துக் கொண்டே இருந்தார் மகனை.

விசு “சொல்லும்மா.. அவள் ட்ரக் அடிக்ட்டுன்னு நினைக்கிறியா” என்றான்.

வேதாவிற்கு இந்த எண்ணம் இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது, முதல் எண்ணம் ‘அந்த பத்மநாபனின் பெண்’ என்பதுதான். ஆனால், மகனே இப்படி சொல்லவும் அன்னை ஆம்.. என்பதாக தலையசைத்தார்.

அன்னை “விசு, அப்படி ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு எப்படி டா சரியா இருக்கும், அப்பா இல்லைன்னு, எதோ ஒரு பெண்ணை பார்த்து முடிச்சி வைச்சிட்டான்னு சொல்ல மாட்டங்களா… ஃப்யூச்சர்ல அவ அப்படி இப்படின்னு ஆகிட்டா.. நினைக்கவே பயமா இருக்குடா…” என்றார்.

விசு “ம்மா, உனக்கு ஒரு விஷயம் தெரியலை..” என ஆரம்பித்து, அவளிற்கு நடந்தது பற்றி சொன்னான்.. காதல் என சொல்லாமல் அவளின் நண்பர்கள் கொடுத்துவிட்டார்கள் என சொன்னான்.

வேதா துருவி துருவி கேள்வியாக கேட்டார்.. இவள் ஏன் போனால்.. ஏன் எங்க நடந்தது.. இப்போதும் அப்படியான பார்ட்டிக்கு போவாளா’ என   கேட்க, ஒவ்வொன்றுக்காக பதில் சொன்னான் விசு, பொறுமையாக.

வேதா “இவ்வளோ கம்பிளிகேஷன் இருக்கிறப்போ.. ஏன் டா..” என்றார்.

விசு “எ.. எனக்கு என்னமோ.. இதெல்லாம் அவ்வளோ பெரிய இஸ்ஸுவாக தெரியலை ம்மா.. அத்தோடு, எ..எனக்கு என்னமோ அவங்களை தாண்டி யோசிக்கவே முடியவில்லை.. விடேன் இப்படி எல்லாம் பையனை கேள்வி கேட்ப்பியா.. நீ” என்றான், கொஞ்சம் வெட்கமான குரலில், அதட்டலாக சொன்னான்.

ஏனோ அன்னைக்கு அதை ரசிக்க முடியவில்லை  “என்ன டா.. அந்த பொண்ணேதான் வேணுமா.. அவளை விட அருமையான ஜாதகம் இரண்டு கொண்டு வந்திருக்கார் ஜோசியர்.. பெண்ணு போட்டோவை பாரு, அப்புறம் அந்த பெண்ணை நினைக்கவே முடியாது உன்னால்.. அப்போது நடந்தது சும்மா ப்ரெண்ட்ஸ்குள்ள நடந்ததுன்னு நினைச்சிக்கோ.. நீ மனசில் ஏதும் வைச்சிக்காத டா.. அம்மா நல்ல பெண்ணாக பார்க்கிறேன் டா.. இவ்வளோ காம்ப்ளிக்கேட் இருக்கிற இவள் வேண்டாம் டா உனக்கு..” என்றார் கெஞ்சலாக.

விசு எழுந்துக் கொண்டான் இப்போது “அம்மா.. நீ ரொம்ப ரொம்ப முக்கியம். அதே போல, என் எண்ணமும் எனக்கான உணர்வுகளும் முக்கியம். ப்ளீஸ்.. இதை நான் எக்ஸ்ப்ளைன் முடியலை உன்கிட்ட.. விடு, நாளைக்கு பேசலாம்” என்றவன் அவரின் அறையின் கதவை சாற்றிக் கொண்டு மேலே சென்றுவிட்டான்.

அதன்பின் மீண்டும் அவனுக்கு இந்த யோசனைகளை வரவிடாமல் செந்தில், போனில் பேச தொடங்கினார்.. இன்றைக்கு நடந்த வேலைகள் குறித்து சொல்லிக் கொண்டிருந்தார்.. எனவே நேரம் சென்றது. 

அதன்பின் மெயில் பார்த்து அமர்ந்துக் கொண்டான்.. சற்று நேரத்தில் பசிக்கவும் இறங்கி கீழே சென்றான்.. அப்போதுதான் உணவை எடுத்துக் கொண்டு, தன் அன்னையின் அறைக்கு வேலையாட்கள் செல்லுவதை கவனித்து, தான் உண்ண தொடங்கினான்.

!@!@!@!@!@!@!@!@!@!@

பவானிக்கு, தன் பெற்றோர் விசுவின் வீட்டிற்கு சென்றது முதல் அழுகையாக வந்தது.. பயத்தில். தன் புதிய வாழ்க்கையை நினைத்து நினைத்து அழுகை.. அவன் சொன்னது போல நான் எதற்கும் சரியில்லை என எண்ணம் வந்தது. எப்படி நான் சரியாக இருப்பேன் என அழுகை. படிப்பு.. புக்.. என தன்னை அவள் வேறு பாதைக்கு மாற்றிக் கொண்டாலும் விசுவின் இன்றைய வார்த்தைகள் பயத்தை தந்தது.

இந்த திருமணம் என்பது.. தன் பெற்றோரை பொறுத்தவரை என்றோ முடிவானது, அதை நான் மறுத்ததால்தான் இந்த பேச்சுகள்.. கோவங்கள் என்மீது என புரிகிறது அவளிற்கு. ‘என்னால் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது’ என சொன்னதினால்தான்.. தன் தந்தை என்னுடன் பேசுவதே இல்லை.. என புரிந்தது பெண்ணுக்கு. ஆனால், சட்டென நடந்து முடிந்ததை கடந்து, வெளியே வர முடியவில்லை அவளால்.

ஒரு பெண்ணின் வாழ்வு என்பது.. அவள் ஏற்றுக் கொள்கிறாளோ இல்லையோ.. அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த விஷயங்கள் அதுபோக்கில் நடந்துக் கொண்டே இருக்கும்.. அதை தடுக்கும் சக்தி அவளுக்கு பலசமயங்கள் இருப்பதில்லை.

அப்படிதான் பவானிக்கும் தந்தை பேசுவதில்லை.. அன்னையும் எப்படியோ போ என்றுவிட்டார்.. என்ன செய்வது.. வீட்டை விட்டு சென்றுவிடலாமா எனதான் தோன்றியது அபத்தமாக. எவ்வளவு ஈசியான வேலை, ஆனால், அதனால் குடும்பம் படும் அவஸ்த்தை என்ன என இந்த நாட்களில் அவள் தெரிந்துக் கொண்டிருந்தாலே.. அதனாலேயே அப்படி ஒரு எண்ணத்தை மனதில் ஏற்றவில்லை பெண்.

மேலும், பழைய வாழக்கை அவளுக்கு ஒரு படிப்பினையை அல்லவா.. சொல்லி தந்திருந்தது. அதை சரியாக க்ரகித்துக் கொண்டாள் பெண். நான் காதலித்தேன், ஆனால் தவறு செய்யவில்லை. அந்த காதலில் தோற்றுவிட்டேன் அவ்வளவுதான். நான்தான் ஏமாந்திருக்கிறேன்.. நான் ஏமாற்றவில்லை.. நான் எதற்கு ஓடவேண்டும் என எண்ணம்.. அது ஒரு உறுதியை தந்திருந்தது, அதனால்தான் விசுவோடு பேசி சம்மதம் சொன்னாள்.. எனவே, அடுத்த வாழ்க்கைக்கு தயாரானால் பெண்

ஆனாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளால். திருமணம் என்பதில் பயம் வந்தது.. தான் எப்படி இன்னொருவனை மனதில் நினைப்பேன்.. என இயல்பான பயம் வந்தது. விசு வேறு ‘ஒருமுறை கமிட்டாகிட்டால் அவ்வளவுதான்’ என சொன்னது மனதை வதைக்கிறது. நான் எப்படி சரியாக இருப்பேன் என எண்ணம். ‘சிடுசிடுன்னு பேசறாங்க.. நான்தான் தப்பாச்சே.. அப்படிதானே பேசுவாங்க.. எப்படி இருக்க போகுது எங்க லைஃப்’ என கண்ணில் நீரோடு அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் பெற்றோர் வந்தனர். அன்னை தந்தையர், பவானியிடம் ‘அவர்கள் சீக்கிரம் வந்து பேசுவார்கள்’ என சொல்லி வைத்தனர், பெண்ணிடம். வேறு பெரிதாக ஏதும் சொல்லவில்லை.. இவளிற்கு என்ன கேட்பது என தெரியவில்லை. தலையாட்டி தன்னறைக்கு சென்றுவிட்டாள்.

அங்கே அவளை பார்த்து சிரித்தது, அந்த ஊரின் கல்லோரி பட்டியலை தாங்கிய, அவளின் லாப்டாப். இங்கே எந்த காலேஜ் என நெட்டில் தேடி, தனக்கு தெரிந்த அளவில் எடுத்து வைத்திருந்தாள்.. இப்போது எது தனக்கு முக்கியம் என அவளால் தேர்வு செய்ய முடியவில்லை, மீண்டும் கண் கரித்தது.

ஒருமுறை தவறினால்.. வாழ்க்கை இப்படிதான் மற்றவர்கள் கைக்கு சென்றுவிடும் போல.. பெண்களை பொறுத்தவரை.

இரவு உண்ணும் போது, பவானி தன் படிப்பு குறித்து பேசினாள். அது குறித்து தன் அன்னையின் எதிரில்.. தந்தையிடம் இரவு சொல்லத் தொடங்கினாள்.

பத்மநாபன் எல்லாம் கேட்டுவிட்டு இன்னும் டைம் இருக்கு.. நிச்சயம் முடியட்டும்.. பார்க்கலாம். எனக்கு நிச்சயம் வேலை முடிந்தால்தான் அடுத்த வேலை ஓடும்.’ என சொல்லி உறங்க சென்றுவிட்டார்.

பவானிக்கு இன்னும் தன் தந்தை தன்னை நம்பவில்லை எனத்தான் தோன்றியது.. முகம் வாடி போனது.. எதிர்த்து எதிர்த்து பேசிக் கொண்டிருந்தவள் சற்று.. ஓய்ந்து போகத் தொடங்கினாள்.

வாசுகி, ஏதும் சொல்லாமல், பெண்ணை கண்டும்காணாமல் சென்றார். பெண்ணை, தாங்களே.. தாங்கி தாங்கி.. அவளிற்கு நல்லது.. கெட்டது.. அன்பு.. பாசம்.. தெரிவதே இல்லை’ என எண்ணிக் கொண்டார். எனவே, ‘அழட்டும், அப்பாவை வருந்த வைக்க கூடாது’ என புரியட்டும் என எண்ணிக் கொண்டார் அன்னை.

வாழ்க்கை பாடம் நெருக்கி நெருக்கி தனது ஸிலபஸ்சை எடுத்துக் கொண்டிருந்தது.. பல பல ஸிலபஸ்கள் காலாண்டுக்கு என சில, அரையாண்டுக்கு என சில.. நடுவில் திருப்புதல் தேர்வுகளும்.. மாதாந்திர தேர்வுகளுக்கு என சில அட்டவணைகளும் உண்டு. இது இவளின் காலாண்டு சிலபஸ் போல தேறிவிடுவாளா.. என இவர்களின்  திருமண தேதிதான் சொல்ல வேண்டும்.

“மேற்கு சூரியன் மீண்டும் 

காலையில் கிழக்கில் 

தோன்றி தான் தீரும்..

நதியோடு போகின்ற..

படகென்றால் ஆடாதா..

ஆனாலும் அழகாக.. 

கரை சென்று சேராதா..

உயிரே என் உயிரே ஒரு.. 

வாய்ப்பை தருவாயா..”

!@!@!@!@!@!@!@!@!@!@!@!

விசு, மேலே வந்தான்.

இப்போதுதான் உறங்கி எழுந்ததால் உறங்கும் எண்ணம் இல்லை போல அவனுக்கு,  போனை கையிலெடுத்துக் கொண்டு.. அதில் எதையோ தேடிக் கொண்டு பால்கனியில் நடந்தான்.

சற்று நேரத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும்.. எனத்தான் யோசனை.. தன் அன்னையின் பேச்சு, மனதை உறுத்தினாலும், அவனால் அதற்கு செவி சாய்க்க முடியவில்லை.. திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என எண்ணிக் கொண்டான். 

பத்மநாபன் மறுநாள் விசுவிடம் பேசினார். அதன்பின் இவர்களின் திருமண வேலைகள் நடந்தது. நிச்சயம் என இல்லை, அடுத்த மாதத்தில் திருமணத்திற்கு நாள் குறித்தனர் இரு வீட்டாரும்.

Advertisement