Advertisement

பவானி “ஏன் படிச்சா என்னை கல்யாணம் செய்துக்க மாட்டாரா அவர்.. பயமா அவருக்கு?” என்ற கேள்வியில் வந்து நின்றாள் பெண்.

பத்மநாபன், பெண்ணிடம் சத்தம் போட்டுவிட்டு, ஓய்ந்து போய் சோபாவில் அமர்ந்துக் கொண்டார். வாசுகி தன் பெண்ணிடம் பொறுமையாக இருக்கும்படி சொல்லி கணவருக்கு குடிக்க கொண்டு வந்து கொடுத்தார்.

இந்த இரண்டு மாதமும் பவானியை வீட்டில் வைத்து சமாளிக்க முடியவில்லை.. உக்ரமாக மாறி இருந்தாள்.. அழுத்தம், வார்த்தையின் வேகம்.. ஒரு சின்ன சின்ன விஷயத்திற்கும் கோவம்  என உக்ர்மானாள்.  

பவானி, காலையில் தோசை இல்லை என்றால் உண்பதில்லை, மதியம் ரசத்தில் உப்பு சற்று குறைவாக இருந்தால் உண்பதில்லை.. தன் அறையிலிருந்து கீழே வருவதில்லை.. தன் தோழிகளின் திருமணத்திற்கு செல்லுவதில்லை. எப்போதும் கையில் ஏதேனும் புக் இருந்துக் கொண்டே இருக்கிறது. எதையோ படித்துக் கொண்டே இருக்கிறாள்.. ஆனால், அதற்கான பண்பு வரவேயில்லை அவளிடம். எனவே வாசுகி பயந்தார் .

தன் கணவனிடம் வாசுகி “அவள்தான் எதோ படிக்கனும்ன்னு சொல்றாளே.. படிக்கட்டுமே.. வீட்டிலேயே இருக்கா.. அதான் அவளுக்கு கோவம் வருது“ என்றார்.

பத்மநாபன் “இல்ல வசு, கல்யாணம் செய்துகிட்டு, எதுவேண்ணா படிக்கட்டும். இந்த வாரத்தில் வீராவின் திதி வரும்.. அப்போ போய் வேதாவிடம் பேசலாம்ன்னு இருக்கேன்.. ம், பெண்ணை பெற்றுவிட்டேனே.. எனக்குதான் பொறுப்பு வேணும்.. வேணும்ன்னா.. நம்ம கம்பெனிக்கு வரசொல்லு அவளை.. கொஞ்சம் தெரிஞ்சிக்கட்டும்..” என்றுவிட்டார்.

மறுநாள் விசுவே, அழைத்தான் பத்மநாபனுக்கு. ‘அப்பாவின் திதி அங்கிள்.. புதன் கிழமை கோவிலுக்கு வந்திடுங்க.. அங்கிருக்கிற மடத்தில் சாப்பாடுக்கு ஏற்பாடு செய்திருக்கேன்’ என  எப்போதும் போல சொல்லி வைத்துவிட்டான்.

பத்மநாபனுக்கு, எதோ விடை கிடைத்த நிம்மதி.

இரண்டு நாட்கள் சென்று.. எப்போதும் பத்மநாபன் மட்டும்தான் செல்லுவார். இந்த வருடம் வாசுகியையும் அழைத்துக் கொண்டு சென்றார் கோவிலுக்கு. எல்லோருக்கும் பத்மநாபனை தெரியும்.. அவர்கள் குடும்பத்தில், எனவே எல்லோரும் பேசினர்.. வேதாவும் ஏதும் காட்டிக் கொள்ளாமல் பேசினார்.

அங்கே காரியங்கள் எல்லாம் முடித்து.. உண்டு எல்லோரும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர். மிக முக்கியமாக நான்கு குடும்பம் மட்டும்தான். பத்து, வீராவின்  ஒன்றுவிட்ட அண்ணன் மகன் குடும்பம்.. வேதாவின் அக்கா குடும்பம் என அவ்வளவுதான்.

பத்மநாபன் பொறுப்பாக விசுவிடம் இன்று மாலை வீட்டிற்கு வருகிறோம் என சொல்லிவிட்டார். விசுவிற்கு, புரிந்தது, தன் அன்னையிடம் பேச விரும்புகிறார் என புரிகிறது அவனிற்கு. 

ஆனாலும் மனதில் ஒரு எண்ணம் எழ, ‘வீட்டுக்கு போயிட்டு நான் சொல்றேன் அங்கிள்’ என்றுவிட்டான் விசு.

பத்மநாபனுக்கு ஒருமாதிரி ஆனது முகம். விசு “இல்ல அங்கிள், நெகட்டிவ்வாக யோசிக்காதீங்க.. இன்னிக்கு கொஞ்சம் அப்பாகிட்ட மனசார கேட்க்லாம்ன்னு எண்ணம்.. அப்புறம், அவங்ககிட்டயும் முழு சம்மதம்மான்னு நானே கேட்டு தெரிஞ்சிக்கணும்.. அவங்க நம்பர் அனுப்பி விடுங்க.. ப்ளீஸ் அங்கிள்.. என்னை அவங்க, ப்..பிடிக்காமல் கல்யாணம் செய்துக்க கூடாதே.. நான் கேட்டனும்” என்றான் ச்திர்மானக் குரலில்.

பத்மநாபனுக்கு தன் பெண்ணிடம் கேட்கணும் என்பதில் மனது அடித்துக் கொண்டது அவருக்கு ‘அவ ஒத்துக்கமாட்டாளே..’ என தோன்ற.. பத்மநாபன் “இ..இல்ல விசு..” என்க.

விசு, தன் ப்ரவுன் நிற விழிகள் அடர் மஞ்சள் நிறத்தை உமிழ்ந்த வண்ணம் எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டே “ப்ளீஸ் அங்கிள்..” என்றான் அழுத்தமாக.

பின் பத்மநாபன் ஒன்றும் சொல்லாமல், தன் பெண்ணின்  நம்பரை உடனே அனுப்பி வைத்தார் விசுவிற்கு. 

எல்லோரும் விடைபெற்று கிளம்பினர்.

பத்மநாபன் வீடு வந்ததும் தன் பெண்ணிடம் பொறுமையாகத்தான் பேச எண்ணி “விடு கால் பண்ணுவான்.. உனக்கு திருமணத்தில் சம்மதமான்னு கேட்பான்.. பார்த்து பேசும்மா” என்றார்.

பவானி “என்ன பார்த்து பேசணும், அவருக்காவது தெரியுதே.. பெண்ணோடு விடுப்பம் இல்லாமல் கல்யாணம் செய்ய கூடாதுன்னு. அது வரை சந்தோசம். ஆனால், அதுக்காக எல்லாம் சம்மதம் சொல்ல முடியாது. இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்.. அது யாராக இருந்தாலும் சரிதான்.” என்றாள்.

பத்மநாபன் தன் கோவத்தை கட்டுபடுத்திக் கொண்டு பொறுமையாக தன் மனைவியை பார்த்தார்.

வாசுகிக்கு வெறுத்தே போனது.. இழுத்து பிடிக்க பிடிக்க.. இவளின் போக்க மாறுகிறது என எண்ணி “சரி.. உனக்கு எப்படி இஷ்ட்ட்மோ அப்படி பண்ணு. இனி, உன் கல்யாணத்தை பத்தி நாங்க எப்போதும் பேசமாட்டோம்.. எப்படியோ போ.. இது நல்லதுன்னு சொல்றேன்.. வேணும்ன்னே பிடிவாதம் செய்து நின்றால் நின்னு.. என்னங்க.. வாங்க.. நீங்க ஏன் உடம்பை கெடுத்துக்கிறீங்க..” என சொல்லி தங்களின் அறையினுள் சென்றார்.. சற்று நேரத்தில் பத்மநாபனும் சென்றுவிட்டார்.

பவானிக்கு, என்னமோ போலானது. ‘முன்பெல்லாம் இப்படி இல்லை நான்’ என தோன்றுகிறது அவளுக்கு.. “செல்ல பிடிவாதங்கள்.. சின்ன கோவங்கள் எனத்தான் இருந்தேன்.. ஏன் இப்படி ஆகிவிட்டேன்.. எங்கே மாறினேன்.. “ என எண்ணம் வந்துவிட்டது பெண்ணுக்கு.

எங்கும் எழுந்து செல்லவில்லை.. அப்படியே டீபாய் மேல், கால் வைத்துக் கொண்டு.. சோபாவில் சாய்ந்துக் கொண்டு.. கண்மூடிக் கொண்டாள் பெண். உறக்கம் இல்லை, பெற்றோரின் வார்த்தை அவளை தாக்கிக் கொண்டிருந்தது.

மாலை மணி ஐந்துக்கு மேலிருக்கும்.. தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது, பவானிக்கு. 

பத்மநாபன் கம்பெனிக்கு சென்றிருந்தார். வாசுகி கிட்செனில் நின்றிருந்தார்.

பவானிக்கு, மனதில் மதியம் தன் அன்னை சொன்னது நினைவு வந்தது.. அழைப்பை ஏற்றாள்.. கம்பீரமான ஆண் குரல் “ஹெலோ பவானி.. நான் விசு” என ஆரம்பித்தது.

பவானி, உண்மையாகவே தடுமாறினாள்.. எதோ சட்டென உள்ளங்கை வேர்த்தது.. அன்று நேரில் பார்த்த போதெல்லாம் தெரியவில்லை.. இன்று, தன் அன்னையின் பேச்சை கேட்டபின் என்னமோ செய்தது இந்த அழைப்பு அவளை.

பவானி “ஹலோ.. சொ.. சொல்லுங்க…” என்றாள், அமைதியானக் குரலில்.

விசு “எனக்கு ஒரு விஷயம் கேட்கனும்.. உங்ககிட்ட” என்றான், குரலில் எந்த தடுமாற்றமோ.. யோசனையோ இல்லை.. குத்தி கிழிப்பது போல மனதில் உள்ள ரணத்தோடு கேட்டான்.

பவானி “சொ..சொல்லுங்க” என்றாள்.

விசு “எனக்கும் உங்களுக்கும் கல்யாணம்ன்னு.. பேசிகிட்டு இருக்காங்க.. உங்களுக்கு, அதில் விருப்பமா.. இல்லை, நான் செயின் போட்டுட்டேன் அப்படின்னு.. ஒரு கம்பல்ஷனில் இந்த கல்யாணம் நடக்குமா என தெரியலை.. எனக்கு. உங்களுக்கு முழு விருப்பமிருந்தால்.. மேற்கொண்டு பேசலாம்.. எனக்கு இது முக்கியமான விஷயம்.. நான் ஒன்ஸ் கமிட்டாகிட்டா.. என்னால் விடமுடியாது.” என நறுக்கு தெரித்தார் போல நாலு வார்த்தையில் கேட்டான் விசு.

பவானிக்கு ஒன்றும் புரியவில்லை.. எந்த தயக்கமும் இல்லாமல் எப்படி பேசுகிறார் என தோன்றியது அவளுக்கு. ஆனால் பதில் சொல்ல தெரியவில்லை. அமைதியாகவே இருந்தாள்.

விசு “ஹலோ, லைனில் இருக்கீங்களா” என்றான்.

பவானி போனை எடுத்துக் கொண்டே மேலே ஏறினாள் அவசரமாக “இருக்கேன்ங்க.. “ என்றாள்.

விசு அமைதியானான்.

பவானி தன்னறைக்கு வந்து சேர்ந்தவள் “அ..அது, எனக்கு படிக்கனும்ன்னுதான் எண்ணம்.. இ..இப்போ கல்யாணம் வேண்டாம்ன்னுதான் எண்ணம்.. நீ..ங்க.. என்னை படிக்க அலோ பண்ணனும்.. அ..து மட்டும்தான். எனக்கு மேரேஜ் பத்தி தெரியலை.. எ..ன்னை.. உ..உங்களுக்கு.. க்கும்.. ஒகே வா.. நான்.” என்றாள், குரல் தாழ்ந்து போகிற்று பெண்ணுக்கு. என்னமோ பழைய தவறுகளில் முழு பங்கும் தனக்குத்தான் என எண்ணம் வந்தது பெண்ணுக்கு. எனவே குரல் வெளியே வரவில்லை.

விசு, அமைதியாக இருந்தான்.

பவானி “என்னோட.. எ..என்னோட.. எப்படி கேட்க்கிறது, என்னோட பாஸ்ட் தெரியும் உங்களுக்கு..” என்றாள் சின்ன குரலில்.

விசு “இல்ல, இல்ல.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு, என்னோடத நான் பார்த்துக்கிறேன்” என்றான். இது எந்த விதத்தில் சேர்த்தி என பவானிக்கு புரியவில்லை.

ஆனால், எதிர் கேள்வி கேட்க்கும் நிலையில் அவள் இல்லை.. பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

விசு “சரி, நான் அங்கிள்கிட்ட பேசிக்கிறேன் “ என்றான், மீண்டும் திட்மானக் குரலில்.

பவானி “என்னை MBA சேர்த்து விடுவீங்களா” என்றாள், சட்டென கேட்டாள்.

விசுவிற்கு ஏனோ யோசிக்கவே தோன்றவில்லை “ஈரோட்டில் இருக்கிற காலேஜ்ன்னா.. முடியும்” என்றான் கொஞ்சம் அமைதியானக் குரலில்.

பவானி “ஒகே அப்பாகிட்ட பேசிடுங்க..” என்றாள் கொஞ்சம் சத்த்மானக் குரலில்..

விசு “சூய்ர்…” என்றான்.

பவானி “ம்.. சூய்ர்..” என்றாள்.

விசு எப்படி உணர்ந்தான் என தெரியவில்லை.. “தேங்க்ஸ்.. அங்கிள் ரொம்ப சந்தோஷப்படுவார்..” என்றவன் “பை..” என்றான்.

பவானி “பை..” என்றபடி போனை வைத்தாள்.. அப்படியே அமர்ந்துக் கொண்டாள்.. மனதில் இனம் புரியாத படபடப்பு.

விசுவிற்கும் ஒரு பெருமூச்சு எழுந்தது.. ‘ஒரு பிரச்சனை முடிந்தது டா..’  என தோன்றியது.

“இலைகள் விழுந்தாலுமே..

கிளையில் துளிர் உள்ளது..

இரவு தீர்ந்தாலுமே..

இன்னும் நிலவுள்ளது..

பாதி உயிர் போன போதும்

மீதி வாழ்வு உள்ளது..”

 

Advertisement