Advertisement

இப்போதுதான் செந்திலுக்கு அழைத்தார் பத்மநாபன். இங்கு நடந்ததை சொல்லினார். செந்தில்தான்  “அண்ணா, இருங்க, நான் நம்ம பிரைவேட் ஆபீஸ்சில் சொல்லுகிறேன்.. போலீசும் தேடட்டும், இவர்களும் பார்க்கட்டும்..” என சொல்லி வைத்தார்.

செந்தில் “முன்பு தான் வேலை செய்த அலுவலகத்திற்கு அழைத்து பேசி, பவானி சென்ற காரில் gprs இருக்கிறது என சொல்லி.. பவானி, டிரைவர் என இருவரின் எண்ணும் கொடுத்தார்.

போலீசுக்கும் அழைத்து பேசினார் செந்தில்.. “அவர்க் காரில் GPRS இருக்கு..” என்றார். அத்தோடு போலீசு கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தயங்காமல் எல்லா விளக்கமும் சொன்னார் செந்தில். பத்மநாபனுக்கு பதட்டத்தில், சில விவரங்களை.. அதாவது, வருடம், நேரம்.. போன்றவை சரியாக சொல்ல முடியவில்லை.. அதையெல்லாம் செந்தில்.. தானாகவே போலீசுக்கு எடுத்து கொடுத்தார். 

முக்கியமாக செந்திலுக்கு உறுத்திய செய்தியான வீராவின் கொலை பற்றியும் சொல்லி, அவர்களின் விவரம் சொல்லி.. தங்களின் முக்கிய தொழில்முறை எதிரிகள் பற்றியும் சொல்லி.. ஒரு இனுக்கு விடாமல் விவரம் சொன்னார் செந்தில்.

செந்தில் கொடுத்த.. எல்லா செய்திகளையும் எடுத்துக் கொண்டு..  போலீசு.. வேறு கோணத்தில் ஆராய்ந்தது. ப்பா.. விவரம் சொல்லுவதே இரண்டுமணி நேரம் சென்றது. இப்படியாக ஒவ்வொரு வேலையாக நடக்கத் தொடங்கியது.

செந்தில், வேதாவிற்கு அழைத்து பேசினார்.. வேதா ஏதும் பேசவேயில்லை.. போனை காதில் வைத்திருந்தார், அவ்வளவே.. அவருக்கு நம்பிக்கை என்பதே இல்லை. அப்படி உடைந்து போகிவிட்டார். அவருக்கு வீட்டிலேயே ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது, வேலையாட்கள் எப்போதும் வேதா செல்லும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லி, ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்திருந்தனர்.

செந்தில் இப்போது தைரியம் சொல்லி பேசினார். ஆனாலும் வேதா மறுவார்த்தை பேசவில்லை, கேட்டுக் கொண்டார் அவ்வளவே.

பத்ம்நாபனும் வாசுகியும் வந்துக் கொண்டிருந்தனர் வேதாவை பார்க்க.

செந்திலுக்கு ‘இப்படி ஏமாந்து போனேனே.. விசு வந்து கேட்க்கும் கேள்விக்கு.. என்ன சொல்லுவேன்..’ என குடும்ப நண்பராகவும்.. ‘உங்களின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு’ என வேலை செய்ய வந்தவராகவும் உடைந்து போனார்.

இரண்டு பக்கத்திலிருந்து போன் வந்துக் கொண்டே இருக்கிறது.. பேசிக் கொண்டே இருக்கிறார் செந்தில். 

இரவு ஒன்று பதினைந்துக்கு விசு, வந்து இறங்கினான், கொச்சினில். அவன் வெளியே வரவே ஒருமணி நேரம் எடுத்தது. இன்னும் லக்கேஜ் எடுக்கவில்லை.. அதற்கு காத்திருக்க வேண்டும்.

விசுவை பார்த்ததும் செந்தில்.. எதோ ஒரு ஏஜென்டிடம் சொல்லி.. மற்ற வேலைகளை கவனிக்க சொல்லிவிட்டு.. விசுவை அழைத்துக் கொண்டு வெளிய வந்தார்.

விசு “ஏன், என்ன ஆச்சு.. செந்தில்” என பலமுறை கேட்டும் எப்படி சொல்லுவது என தெரியாமல்.. காருக்கு அழைத்து வந்தார்.

மணி மூன்றை தொட்டது. கார் பொறுமையாக ஏர்போர்ட்.. வளாகத்திலிருந்து வெளியே வந்தது.. அதற்குள், செந்திலுக்கு பத்து போன் அழைப்புகள். எதையும் எடுக்கவில்லை அவர்.

கார் வெளியே வந்ததும்தான் செந்தில் “விசு..” என தொடங்கி நடந்தததை சொன்னார்.

விசுவிற்கு கேட்க கேட்க.. கண்ணில் நீர் கசிந்தது.. தன் தலையை சாய்த்துக் கொண்டான்.. கண்ணின் ஓரம் கசிந்து.. வழிந்தது. எத்தனை காதல்.. எத்தனை ஆசை.. எத்தனை கனவோடு வந்து சேர்ந்தான், இப்போது. அதெல்லாம் சற்று முன்புவரை உயிர்ப்போடு இருந்தது போல.. அப்படிதான் மிதந்துக் கொண்டு வந்தான், அவளின் கணவன். 

ஆனால், அவன் தரையிறங்கியதும்.. அவனின் ஆசைகளும், கனவுகளும்  தரையிறங்கியது போல.. எல்லாம் எங்கோ காணாமல் சென்றுவிட்டது, செந்தில் சொல்லிய நிகழ்வில். 

நொடிகளுக்குள் மாறுமா உலகம்?.. மாறுகிறது அவனின் உலகம்!.. இந்த இரண்டு மூன்று நொடிகளுக்கு முன்வரை.. ஆசையோடு இருந்த காதல் நொடிகள்.. இப்போது கவலையுடனான காதல் நொடிகளாக மாறிற்று அவனிற்கு. வாய் திறந்துக் கூட ஏதும் கேட்க முடியவில்லை அவனால்.. ‘என்னாச்சு அவளுக்கு.. எத்தனை தாங்குவாள் அவள்.. எப்படி ஆச்சு இது.. ஐயோ!.. நான் விட்டு சென்றிருக்க கூடாது.. எனக்கு, என்னால்தான் இது.. என்னை சார்ந்தவள் என்பதால்தான் இத்தனை துன்பம் அவளுக்கு.. அவள் என்ன செய்தாள்.. ஒன்றும் ஆக கூடாது அவளிற்கு.. விட மாட்டேன்.. அந்த ஸ்ரீ… அந்த வேணு.. வேலு… யாராக இருக்கும்.. ஒன்றும் ஆகாது அவளிற்கு.. விடமாட்டேன்..’ என காதலான கணவன் .. நொடிகளுக்குள் காவலனாக தன்னை உணர்ந்தான்.

விசு ”செந்தில் எந்த இடத்தில் காணாமல் போனாங்க..” என தொடங்கி, கோவையிலிருந்து கிளம்பி எவ்வளவு நேரம் ஆகி காணோம்.. உங்க ஆபிஸ்க்கு சொல்லிட்டீங்களா?.. அந்த ஸ்ரீ பற்றி விசாரிங்க.. வேணு, வேலு.. குடும்பம்.. அ..அவங்களை பாருங்க முதலில். தொழில் முறையில் யாரும் இப்படி நேரடியா செய்ய மாட்டார்கள்.. நீங்க வேணு வேலுவை பாருங்க முதலில்‘ என்றான், செந்தில் செய்து முடித்ததை எல்லாம் சரியாக அவனும் சொன்னான்..

பின் “நீங்க போனை பேசுங்க.. நான் டிரைவ் பண்றேன்..” என்றான்.

செந்தில் மறுக்காமல் வண்டியை நிறுத்தினார்.

இப்போது செந்திலுக்கு அழைப்பு வந்தது.. செந்தில் அட்டென் செய்து பேசினார். விசு இப்போது வரை கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்தது.

அவர்கள் வண்டி நின்ற இடம்.. இரு வண்டியை சேர்ந்தவர்களும் பேசிக் கொண்டது.. அதை அடுத்து நடந்தது.. என எல்லாம் ஹைவே.. கேமராவில் பதிவாகியிருந்தது, அதை எடுக்கவே.. மணி நான்கு.

இப்படி ஒவ்வொரு தகவலாக கிடைக்கிறது செந்திலுக்கு. 

விசுவின் கைகளில் கார் பறக்கிறது.. ஆனால் இன்னமும் அவனால் கோவையை வந்தடைய முடியவில்லை. செந்தில் “விசு.. ஸ்லொவ்.. விசு, நாமும் சிக்கலில் மாட்டிக்க கூடாது.. ஸ்லொவ் விசு” என சொல்லிக் கொண்டே வருகிறார்.

ம்கூம்.. கேட்பதாக இல்லை விசு.

இப்போது, பவானி சென்ற கார்.. ஈரோடு தாண்டி எங்கோ நிற்பதாக தகவல் வந்தது.

ஆனால், செந்திலின் ஏஜென்சி.. பவானியை ஏற்றிக் கொண்ட வேறு கார்.. டோல்கேட் கூட தாண்டவில்லை.. கிளை பாதையில்தான் எங்கோ சென்றிருக்கிறது.. அது ஈரோடு போகவில்லை என தகவல் சொல்லினர்.

இப்போது சான்று இருப்பதால், ஈரோடு போலீஸ்.. அந்த பவானியின் காரை தொடந்து சென்றனர். செந்திலின் அலுவலகம்.. இங்கே கிளை பாதையை தொடந்தது.

போலீஸ் வீட்டின் நிகழ்வுகளை ஆராய்ந்ததில்.. அன்று, வாட்சிமேனிடம்.. பவானி ‘யார் வந்தாலும் உள்ளே விடாதே’ என சொல்லியது இப்போது தெறியவர.. அதன்பின் cctv ஆராயத் தொடங்கியது போலீஸ்.

காலை ஆறுமணிக்கு… விசுவின் வீட்டு தெருவில்.. எதோ கார்.. பவானியை மடக்கியதும்.. அதன் எண்ணும் தெரிந்தது இப்போது. அதன்பின்தான் போலீசாரின் வேலை சரியான பாதையை எட்டியது.

விசு பறந்து வந்து சேர்ந்தான் கோவைக்கு, பவானி கடத்தப்பட்ட இடத்திற்கு. இந்த இடம்தான் என செந்தில் சொல்ல… வண்டியை நிறுத்திவிட்டான், அவளின்  கணவன். 

அந்த சாலையில் இப்போதும் வண்டிகள், பறந்துக் கொண்டிருக்கிறது..  அதிகாலையில். விசு கீழிறங்கி நின்றான். மனமெல்லாம் ‘தொலைத்துவிட்டாயா..’ என அவனை சாடிக் கொண்டிருக்கிறது. வெளியே திடமானவன் போல தோன்றினாலும்.. உள்ளே, மனதின் கேள்விக்கு பதில் இல்லாமல் தன்னிடமே தானே அழுதுக் கொண்டிருக்கிறான்.

அமைதியாக ஆராய்கிறான்.. ஏதேனும் சுவடு தெரியுமோ என தேடுகிறான் கணவன்.. ம்கூம்… ஒரு அடையாளமும் இல்லை. அவளின் செருப்பு.. பூக்கள்.. கைகுட்டை.. இப்படி எந்த அடையாளமும் இல்லை.

கணவனின் மனது தவிக்கிறது.. அந்த நடு ரோட்டில்.. ஓரமாக நிறுத்தியிருந்த தன் காரின் ஓரம் உள்ள நடைபாதையில் அமர்கிறான்.. விசு. மனது அடித்துக் கொள்கிறது.. உச்சந்தலை தெறிக்கிறது.. கண்கள் இமைக்க கூட மறுக்கிறது.. ஊசியை யாரோ இமைகளில் சொருகிவிட்டனர் போல.. குத்துகிறது. மூளை.. யோசிக்கும் திறனை இழந்தே விட்டது போல.. தன் கைகளை முதுகுக்கு பின்னால் ஊன்றி.. அமர்ந்து வானத்தை பார்த்தான் விசு.. மீண்டும் கண்ணில் நீர் “ப்பா… “ என உதடு மட்டும் அசைத்து.  

செந்தில் தூரமாக நின்று போன் பேசிக் கொண்டிருந்தவர்.. விசு, நடு ரோட்டில் அமர்ந்திருப்பது பார்த்து ஓடி வருகிறார் “எந்திருங்க விசு… என்ன இது.. காரில் உட்காருங்க..” என்றார்.

எல்லோருக்கும் இப்படி ஒரு நேரம் வாழ்வில் வந்தே தீரும் போல.. அடுத்து என்ன செய்வதென தெரியாமல்.. இருக்கும் இடம் புரியாமல்.. நிர்கதியாய் ஒரு நேரம் வந்தே தீரும் போல. விசு அலட்டிக் கொள்ளாமல், போனில் பேசியதை கேட்டான் “என்ன ஆச்சு..” என்றான்.

செந்தில் இப்போது, ‘ஒருமாதம் முன்பு.. பவானியை நம் வீட்டருகே யாரோ கடத்த முயற்சித்திருக்கிறார்கள்…’ என சொன்னார்.

விசுவிற்கு ஓய்ந்து போனது “அப்போவேவா.. யாரு.. எங்கே..” என விவரம் கேட்டான்.

செந்தில் பொறுமையாக சொன்னார்.. மேலும் அவரே தொடர்ந்தார் “விசு, கார் நம்பர் கிடைச்சிடுச்சி.. பார்த்துட்டு இருக்காங்க.. நெருங்கிட்டோம்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்டுபிடிச்சிடலாம்..” என்றார்.

விசுவிற்கு இப்படி கையை கட்டி கொண்டு அமர்ந்திருப்பது அவமானமாக இருந்தது.. ‘அவளை காப்பேன் எனத்தானே.. எனக்கு கொடுத்தார், பத்து அங்கிள்.. ச்ச… இப்படி வெறும்மையாக நிற்கிறேனே.. ஐயோ என்ன பதில் சொல்லுவேன்..’ என கண்மூடிக் கொண்டான்.

மூடிய கண்களில் அவன் கண்டுக் கொண்டே வந்த கனவுகள் அணிவகுத்தது..

“காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்..

உன்னை அன்றி யாரை தேடும்..

விலகி போகாதே.. தொலைந்து போவேனே..

நான்.. நான்.. நா..ஆஆ..ன்..

Advertisement