நிழல் தரும் இவள் பார்வை…
8
நடுநிசியில் கோத்தகிரி சென்று சேர்ந்தார், நந்தன். அழகான மலைப்பாங்கான இடத்தில், அமைதியான சூழலில் வீடு.. சிறிதான கேட்.. அதை தாண்டி பெரிய முன்பக்க தோட்டம்.. உள்ளே அளவான வீடு. சென்னையின் பரபரப்பை இங்கே தொலைக்கலாம்.. நிர்மலமான மனம், தன்போல வந்து ஒட்டிக் கொள்ளும் போல அந்த இடத்தின் தன்மையில்.
வேலை செய்வபவர்கள் உறங்கி இருப்பார்கள்… முன்னமே தான் வருவதை சொல்லி விட்டான் நந்தா.. இருந்தும்.. அவர்களை விழித்திருக்க பணிக்கவில்லை.. கேட்டை பூட்டாமல் வைத்திருக்க பணித்தான்.
எனவே தானே திறந்துக் கொண்டு.. உள்ளே சென்றான். ஜனவரி மாத.. குளிர், அந்த ஆளில்லா வீட்டை ஆக்கிரமித்திருந்தது போல.. காரில் வரும் போது தெரியாத குளிர் இப்போது முழுதாக நந்தாவை ஆக்கிரமித்தது. 
ரூம் ஹீட்டர் ஆன் செய்தான்.. கார் ஒட்டி வந்தது.. களைப்பாக இருந்தாலும்.. மனதில் அழுத்தம் அதை விட அதிகமாக இருந்தது. இது இப்படிதான் என கணக்கிட முடியாத தொழில் அவரினது. அதன் அழுத்தம் எப்போதும் போல, இன்றும் தாக்கியது.
‘அடுத்து என்ன’ என்ற கேள்வி.. அவர் தொழிலில் காலூன்றிய நாள் முதல்  இருக்கிறது. இந்த தொழில் எப்போதும் அப்படிதான்.. அடிச்சா ஜாக்பாட்தான், இல்லையேல்.. தரை தட்டும் கப்பல் நிலைதான். எனவே இப்போது இரண்டாம் நிலையில் இருக்கிறார் நந்தன்.
பணம் விழுங்கும் கலை அவருடைய தொழில். முன்னமே மக்களின் ரசனை தெரிய, அதை கொண்டு ஒரு படம் இவர் எடுக்க.. அந்த படம் வெளிவரும் போது.. மக்களின் ரசனை மாறியிருக்கும்.. படம், இவருக்கு பாடம் சொல்லி போயிருக்கும்.
ம்.. இப்போது எடுத்திருந்த, நேற்று ரிலீஸ் ஆன படமும் அந்த வகையினது போல.. டிஸ்பியூட்டர்ஸ் பேச்சு அதிருப்தியை தந்திருந்தது நந்தனுக்கு.
இப்போது, தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பெரிதாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் நந்தன். அதன் அழுத்தம் தாளாமல், பிள்ளைகள் எதிரில் அதை காட்ட முடியாமல் இங்கே வந்துவிட்டார் எனலாம்.
மணி அதிகாலை நான்கு.. உறக்கம் வரவில்லை.. களைப்பு பெரிதாக தெரியவில்லை, அங்கும் இங்கும் நடந்துக் கொண்டே இருக்கிறார். நாலு இயக்குனர்கள் அவரின் கைவசம் உள்ளனர் இப்போது. அதில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதுதான் அவரின் அடுத்த குழப்பம்.
கொஞ்சம் நேரம் அதிகமாக யோசித்தால் கூட.. ‘என்ன அப்படிதானே’ என கண்டுகொள்ளும் சுதந்திரம் அற்ற உலகம் அவருடையது. ம்.. மூளை என்ன நினைக்கிறது என ஏதேனும் கருவி கொண்டு கணக்கீட்டு கொள்வர் போல, அப்படி ஒரு கவனிப்பாளர் இவர்.  
மீடியா எப்போது அவரின் எல்லா செயல்களையும் கவனித்துக் கொண்டே இருக்கும். ஆகிற்று, இன்னும் ஒரு வாரத்தில் வெளியான படத்தின் கலெக்ஷன் பற்றி பிட்டு பிட்டு வைக்கும் மீடியா. தன் கம்பெனிக்கு தெரிகிறதோ இல்லையோ.. வெளியுலகுக்கு எல்லாம் தெரிந்துவிடும். அதனை கொண்டு, இயக்குனர்கள் தங்களின் நிலையை இன்னமும் இவரிடம் அதிமாக காட்டவோ.. இல்லை சத்தமில்லாமல் வெளியே செல்லவோ வாய்ப்பு உண்டு.
ம்.. இப்போது இவர் தயாரிப்பில் வெளியான படம் நல்ல நிதியை வசூலித்திருந்தால் இயக்குனர்கள் தன் சிறிய பட்ஜெட் படத்திற்கு கூட அதிக நிதி எதிர்பார்ப்பார். அந்த படம் சரியாக ஓடவில்லை என்றால், அதே இயக்குனர்கள் சொல்லாமல் வேறு தயாரிப்பாளரை பார்த்துவிடுவார். ஆக எல்லா பக்கமும் நந்தன் திணறிக் கொண்டிருக்கிறார்.
வீட்டிகுள்ளேயே நடந்தவர்.. ஓய்ந்து போனார் போல.. டீ போடலாம் என கிட்சென் சென்று தனக்கென வைட் டீ தயாரித்தார். இது அதிக ஆண்டி ஆக்ஸைடு உள்ளது. மனம் தன் பலத்தை இழக்கும் நேரங்களில் இது புத்துணர்ச்சி தரும்… ம், மனம்தானே அனைத்திரும் காரணம். அது சுறுசுறுப்பாக இருந்தால்.. எல்லாம் சரியாக இருக்குமே.
இப்போது அந்த சுறுசுறுப்பு தேவையாக இருந்தது போல, வெள்ளை நிற காபி மக்கில்.. அந்த நிறமில்லா வைட் டீயுடன் வந்து அமர்ந்துக் கொண்டார், ஈசி சேரில். கதகதப்பாக தொண்டையில் இறந்தியது.. டீ. இன்னும் அவரின் யோசனை நீண்டது..
இன்று மசினகுடி செல்ல வேண்டும் நண்பர்களுடன் ஒரு பார்ட்டி. தனது ஆடிட்டர்,  அட்வோகட், தனா அண்ணா.. என சென்னை நண்பர்கள் நாளை அங்கே கூடுவர்.. அதை பற்றியும் புத்தியில் ஓடிக் கொண்டிருந்தது நந்தனுக்கு.
சற்று நேரம் அந்த சேரிலேயே கண் மூடி உறங்க முற்பட்டார். அசதியில் உறக்கம் வந்தது.
காலையில் நேரம் தன்போல் சென்றது. 
ஸ்ரத்தா.. தன் வீட்டிலிருந்து நேரே ஆபிஸ் சென்றுவிட்டாள். நந்தன் போன் எடுக்கவில்லை எனவும், நேரே அலுவலகம் சென்றுவிட்டாள்.
நந்தன் ஒன்பது மணிக்கு எழுந்து ரெடியாகி வந்தார்.. காலை உணவை முடித்துக் கொண்டே.. அலுவலகம் சென்றார். 
தனி  கேபின் நந்தனுடையது. அங்கே விளக்கு எரியவும், நந்தன் வரவை உணர்ந்த ஸ்ரத்தா, அனுமதி பெற்று உள்ளே வந்தாள் “குட் மோர்னிங் நந்தன்” என்றாள்.
அழகான காட்டன் சுடிதான் இன்று அணிந்திருந்தாள், அவளின் நிறம் அந்த பிரதேசத்தில் இன்னும் கூடி தெரிய.. கன்னங்களில் லேசான பனி சிவப்பு இந்த வயதிலும்.. மினு மினுத்தது.. அளவான ஒப்பனை.. இதழ்களில் நந்தனுக்கான புன்னையோடு நின்றவளை பார்த்த நந்தனுக்கு, அத்தனை குழப்பத்திலும், இவளை பார்த்ததும் அந்த சிறு புன்னகை வந்து விடுகிறது  உதட்டில்.
அவளுக்கு பதில் வாழ்த்து சொல்லாமல் அந்த புன்னகையோடு அவளை பார்த்தான். நட்பு என்ற உறவை தாண்டிய நிலைதான் அவர்களது. ஆனால், அவர்களை பொறுத்தவரை.. அது கண்ணியமானது. ‘நீ இது செய்.. இப்படி இரு’ என எந்த கட்டளைகளும் நந்தன் போட்டதே இல்லை. அவளும் ‘ஏன் பேசலை.. ஏன் அது வாங்கி தரவில்லை’ என இதுவரை கேட்டதே கிடையாது. 
நேரம் கிடைத்தால் எப்போதேனும் கையை பிணைத்துக் கொண்டு.. அவனின் குமறல்களை கேட்டபடி பனி இரவில் இருவரும் நடப்பர்.. எங்கேனும், வழியில்லா பாதைகளில் அமர்ந்து தங்களின் பாக்டரி குறித்து கனவுகளை அவள் சொல்ல, நந்தா கேட்டுக் கொண்டிருப்பான். இதை தவிர அவர்கள பேச… பொதுவான அத்தனை விஷையங்களும் உண்டு. ம்.. எப்போதும் தனிப்பட்ட விஷையங்களை ஆர்வமாக பேசியதில்லை. கல்யாணம்.. குடும்பம் என அவர்கள் பேசியதில்லை. அதில் விருப்பமும் இல்லை அவர்களுக்கு. அவ்வளவு இழப்பு அவர்களுக்கு. இனியும் சேர்ந்து, உரிமை உறவு என தங்களை ஏமாற்றிக் கொள்ள அவர்கள் தயாரக இல்லை போலும். எனவே தவிர்த்து விடுவர்.
இப்போது ஸ்ரத்தா “என்ன பாஸ்… அந்த டாக்மெட் சரி பார்த்திட்டீங்களா.. சீக்கிரம், நம்ம கைவிட்டுப் போயிடும் லேன்ட்… எப்போ மெயில் வரும்னு வெயிட் பண்றேன்.. என்ன பண்றார் உங்க கங்கா…” என்றாள், எல்லா விதமான மாடுலேஷனிலும் ஸ்ரத்தா.
இங்கே தான்தான் பாஸ் என்பது அப்போது நினைவில் இல்லை நந்தனுக்கு “ம்.. இந்த வாரம் அவனை விட்டுடு.. எல்லோரும் ஹாலிடே மூடில் இருக்காங்க ப்பா… ப்ளீஸ்..” என்றார் தன்மையாக.
ஒரு ஜீன் புல்ஹன்ட் டீ-ஷர்ட் அணிந்து அமர்ந்திருந்தார். போன மாதத்தின் டார்கெட்.. பற்றி பேச்சு சென்றது இருவருக்குள்ளும். நந்தனுக்கு, அதில் மூழ்க முடியவில்லை.. சென்னையின் குழப்பம் இருப்பதால். எனவே “நீ பாரு ஸ்ரத்தா… வேற என்ன ஸ்டெப் எடுக்கணுமோ பாரு.. இந்த மாசம் அடுத்த ப்ராஜெக்ட் முடிச்சி ஆகணும். ப்ளீஸ்.. நீ பாரேன்” என்றார். 
ம்.. அவரின் உலகில் அவர் நம்பும் இப்போதைய ஒரே ஜீவன் ஸ்ரத்தா மட்டுமே. எள் அளவும், அவருக்கு சங்கடம் தராத ஜீவன் அவள் மட்டும்தான் அவரை, பொறுத்த வரை.
பணம் என்ற ஒன்று.. யாரையும் நம்பாது. அதே போல பணம் என்ற ஒன்று எல்லோரையும் வசீகரிக்கும். நந்தனின் உடன் இருப்பவர்கள் எல்லோரும்.. அவனின் சிறு வயது முதல் பார்த்து வளர்ந்தவர்கள்தான். ஆனால், ஒரு ‘க்’ எப்போதும் உண்டு, தொழில், வீடு, நட்பு என எல்லா இடத்திலும்.. நந்தன் எப்போது அசருவான் என காத்திருக்கும் நபர்கள், அவனிடத்திலும் உண்டு.
ஆக, ஸ்ரத்தா.. அந்த வகையில் அவனின் நம்பிக்கைக்கு உண்டானவள். எதிர்காலத்தில் ‘இது எப்படி வேண்டுமாலும் மாறும்’ என எல்லா உறவுகளையும் சொல்லலாம். ஆனால், அவனிடத்தில், ஸ்ரத்தாக்கான வார்த்தைகள் ‘அஹ…ஹா… அஹா… அவளால் முடியாது’ என்பதுதான். நட்புடன் கூடிய அழகான புரிதல் அவர்களுக்குள். 
ஸ்ரத்தா இப்போது வெளியே செல்ல.. நந்தனுக்கு அவனின் நண்பர்களிடமிருந்து அழைப்பு வந்தது. ‘வரேன் வரேன்..’ என பேசிக் கொண்டே கிளம்பி விட்டிருந்தான் நந்தன்.
பொங்கல் விடுமுறை முழுவதும் ஆதி அவினாஷுடன்தான். தினமும் விளையாட அழைத்து சென்றான். எனவே, விளையாடி முடித்து வரும் போது, உண்டு வருவது.. இல்லை போகும் போது நண்பர்கள் பார்க்க போவது என ஆதி நன்றாக ஒட்டிக் கொண்டான் அவினாஷ் அண்ணனுடன்.
அதில் அம்முக்கு சந்தோஷமான வருத்தம்.. அவினாஷ் தினமும் வீட்டிற்கு வருவது சந்தோஷம் என்றால்.. தம்பியை மட்டும் அழைத்து செல்வது கொஞ்சம் வருத்தம். இப்படியாக அவளின் நிலை.
நாட்கள் பறந்தது.. ஆதி பள்ளி சென்றான். அம்மு கல்லூரியில் பிஸி. அவினாஷ் தொடந்து அம்முவுடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால், மறந்தும் தன் கோரிக்கையை அவளிடம் சொல்லவில்லை.. என்னமோ அவனிடம், அவளின் பார்வை சிறு கர்வத்தை தந்திருந்தது, அந்த காளையிடம். அதனால் அவளிடம் போய் நிற்க மனதில்லை அவனுக்கு. ‘நான் அவளின் ஹீரோ’ என தனக்குள் சொல்லிக் கொள்கிறான் இப்போதெல்லாம். அதை காக்க அவளிடம் வாய்ப்பு பற்றி பேசவில்லை.
ஆகிற்று மூன்று மாதங்கள்…
ஆதி, போர்டு எக்ஸாம் முடித்து, வந்துவிட்டான் வீட்டிற்கு. ஆனால் அம்முக்கு நேரமே இல்லை.. கல்லூரியில் எக்ஸாம் நெருங்குவதால்.. அதிக நேரம் தன்னை படிப்பில் புகுத்திக் கொண்டாள்.
எனவே தம்பியோடு நேரம் செலவிட முடியவில்லை. ஆதி “அக்கா, கிரிகெட் கோச்சிங்.. போறேன் க்கா” என கேட்டுக் கொண்டிருந்தான்.
அம்மு “தனா அங்கிள்.. கிட்ட கேட்க்கிறேன் டா” என்றாள்.
ஆதி “அக்கா, அவினாஷ் அண்ணாகிட்ட கேளு நல்ல இடமா சொல்லுவார், நீ போனை கொடு, நானே கேட்க்கிறேன்” என சொல்லி அவளின் போனை வாங்கி அவினாஷ்க்கு அழைத்தான்.