சற்று நேரம் சென்று வெளியே வந்தாள் அம்மு.. இன்னும் மணி பனிரெண்டு ஆகவில்லை.. அந்த ப்பில் கூட்டம் நிரம்பி வழிய.. அம்முவாள் அங்கு அமர முடியவில்லை. எழுந்து வெளியே வந்தாள்.
அவளின் நண்பர்கள் “ஹேய்.. வெளியப் போகாத.. இப்போ டான்ஸ் ஆடலாம்” என அவளை தடுத்தனர், ஆனாலும் அம்மு “ச்சு… நான் வெயிட் பண்றேன் ரெஸ்டரன்ட்டில், நீங்க வாங்க” என்றாள்.
கூட்டத்தை தாண்டிக் கொண்டே வெளியேச் சென்றாள். எங்கே செல்வது என தெரியவில்லை.. தன் போனை எடுத்துப் பார்த்துக் கொண்டே, அந்த வெட்டவெளி.. டேபிள்கள் போட்டிருந்த இடத்திற்கு சென்றாள்.
அவள் எழுந்து சென்றதும், அவினாஷ் எழுந்து வந்தான் அவளின் பின்னாலேயே. இவள் டேபிள் கிடைக்காமல், எங்கு அமர்வது என பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதேனும் காலி இருக்கைகள் இருக்கிறதா என.. கண்கள் தேட.. எல்லாவற்றிலும் ஆட்கள். எனவே அப்படியே நின்றிருந்தாள்.
பின்னிலிருந்து அவினாஷ் “ஹேய்… அம்ருதா” என்றான் அவளை தொடாமல் சத்தமாக அழைத்தான்.
அவளும் முகம் விகாசிக்க திரும்பி “ம்.. தனியா வந்துட்டனேன்னு நினைச்சேன்.. வாங்க” என்றாள் வரவேற்பாய்.. குரலோ இல்லை உணர்வோ எதோ ஒன்று சொல்லியது அருகில் வருவது அவன்தான் என.
மீண்டும் அவளே “உங்க பேர் என்ன” என்றாள், அப்போது மறந்ததை இப்போது மறக்காமல் கேட்டாள்.
மென்மையாக சிரித்துக் கொண்டே “அவினாஷ். வா, இடமில்லை, கொஞ்சம் நடக்கலாம்” என்றான்.
பரந்த மணல்வெளி.. உப்புக்காற்று.. பனி இரவு… கூடவே யாரென்றே தெரியாமல் தன் கஷ்ட்டத்திற்கு வழி சொன்ன ஒருவன்.. அந்த நேரத்தில் அந்த வயதிற்கு அதுதானே சொர்க்கம்.
அம்முவுக்கு, இத்தனை நேரம் இருந்த அழுத்தம் நீங்கி.. குளிர்ந்து போனது மனது. அமைதியாக அவனுடன் சென்றாள்.
முதலில் அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை, பேசாமலும் இருக்க முடியவில்லை.. “அவினாஷ்.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ் தாங்க்யூ சோ.. மச்” என்றாள் குதித்துக் கொண்டு, அவன் செய்த உதவிக்கு மறக்காமல் நன்றி சொன்னாள்.
அவினாஷ் “போதும் போதும்.. எத்தனை தேங்க்ஸ்..” என்றான். மீண்டும் அவனே “யாரும் கண்டுபிடிக்கலையா” என்றான்.
அம்மு “எல்லாம் முக்கால் மப்பில் இருக்கானுங்க..” என்றாள் கண்ணடித்து.. சிரித்து, இந்த வார்த்தையை சொல்லி முடித்து விட்டு அவனையும் ஒரு பார்வை சந்தேகமாக பார்த்தாள். ஆயிரம் மாற்றம் வரட்டும், அத்தனை யுகங்களும் மாறட்டும்.. இந்த பெண் மனம் மட்டும் மாறாது போல அதே சந்தேகம், கொஞ்சம் எடை போடும் பார்வையும் வந்தே தீரும், தனக்கான ஆண்களின் மீது.
அவினாஷ் அதை உணர்ந்து “ஹேய்… நான் இன்னிக்கு லைட்டா சிப் பண்ணேன் அவ்வளவுதான்..” என்றான்.
அம்மு நாக்கை கடித்துக் கொண்டு கண்கள் சுருக்கி “சாரி” என்றாள் சின்னக் குரலில்.
அவினாஷ் “ம்.. அப்படி” என்றபடி வேறு எதோ கேட்டான்.. அவளும் பதில் சொன்னாள். பின் வாட்ஸ்சப் எண் பரிமாறிக் கொண்டனர். மேலும் எதோ அந்த பேச்சுகள் நீண்டது.
இப்போது அதிக ஒலியுடன் “ஹாப்பி நியூ இயர்” என சத்தம் கேட்டது எல்லா திக்கிலிருந்தும்.. வானில் பலூன்கள் பறந்தது.. வான வேடிக்கைக்கள் சத்தம் கேட்டது.. அந்த ஹோட்டல் ஒளி ஒலி வெள்ளத்தில் அதிர்ந்தது.
அந்த இடத்திலேயே நின்றனர் இருவரும். அம்மு குத்தித்தாள்.. பலூன்கள் பார்த்து.. கண்களை விரித்தாள், வெடிசத்தம் கேட்டு காதுகளை மூடிக் கொண்டாள்.
அவினாஷ், அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து நின்றான். இப்போது சற்று அந்த சத்தம் ஓயவும் அம்மு “ஹாப்பி நியூ இயர் அவினாஷ்…” என்றாள் தன் கை நீட்டி.
அவினாஷ் “தேங்க்யூ… உனக்கும் ஹாப்பி நியூ இயர்.. இன்னும் நிறைய ப்ரோபோசல்கள் வரட்டும்..” என்றான் அவளின் விரல்களை பற்றிக் கொண்டு.
அம்மு “ம்.. இந்த பிரெண்ட் கூடவே இருந்தா எல்லாம் சமாளிக்கலாம் போலவே” என்றாள்.
அம்மு “நம்ம போலாமா.. பிரெண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க…” என்றாள். இருவரும் திரும்பி நடந்தனர்.. மீண்டும் அந்த குளிர் காற்று, வானம், சத்தம் என பேச்சு சென்றது இருவருக்குள்ளும்.
அவளின் நண்பர்கள் சரியாக அழைத்தனர் அம்முவை, அம்மு போனெடுத்து “இங்க பீச் சைடில் இருக்கேன் வாங்க..” என்றாள். எல்லோரும் வந்தனர்.
இப்போது நண்பர்களுக்குள் மீண்டும், புத்தாண்டு வாழ்த்து சொல்லி ஆர்பரித்துக் கொண்டனர். அதை பார்த்து நின்றவன் “அம்ருதா நான் கிளம்பறேன்.. பை” என்றான். கூடவே “பை கைஸ்” என அந்த நண்பர்களிடமும் விடைபெற்று உள்ளே சென்றான்.
இவர்கள்.. அங்கிருந்த உணவு வகைகளில் எதையோ வாங்கி கொறித்துவிட்டு.. மெல்ல வீடு வந்தனர் பேசிக் கொண்டே. மணி அதிகாலை மூன்றை தொட இருந்தது.
இரண்டு காரில் சென்றிருந்தனர்.. நண்பர்கள். ரதீஸ் வந்து இவளை இறக்கிவிட்டு சென்றான். வீட்டில் வேலைக்கு இருக்கும் செண்பா அக்கா வந்து நின்றார், இவள் கதவை திறந்து உள்ளே வரவும்.
செண்பா சுடிதார் அணிந்த, பத்ர காளியாக நின்றார், அம்முவை பார்த்து “உங்க தாத்தா.. தூங்கவே இல்லை.. ஏன் அம்மு இப்படி” என்றார்.
அம்மு “ச்சு.. இன்னிக்கு மட்டும் தானே ஆன்ட்டி… ப்ளீஸ்..” என்றாள்.
செண்பாவும் “அதை அவர் உணரனுமே… பாவம் அம்மு.. அவர் முழிச்சிட்டே இருக்கார்.. போ, போய் பேசிட்டு வா” என்றார் கோவம் பாதி, சமாதானம் மீதியாக.
தன் தாத்தா இருக்கும் அறைக்கு சென்றாள்.. விடிவிளக்கு ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.. மெல்லிய மூச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.. கதவை திறக்கவும்.. தன்னிடம் இருக்கும் நர்ஸ் என உணர்ந்து, தாத்தா “என்ன, செபஸ்டீன் வந்துட்டாளா” என்றார்.
அம்மு “தாத்தா… வந்துட்டேன்.. நீங்க ஏன் தூங்கலை, சொல்லிட்டுதானே போனேன்.. இன்னிக்கு மட்டும்தான் தாத்தான்னு. போங்க.. உங்களுக்கு நியூ இயர் விஷ் பண்ண மாட்டேன்” என்றாள் பேத்தி.
வேணுகோபால் சிரித்தார் வாஞ்சையாய்… “எனக்கு நியூ இயரும், சாதாரண நாளும் ஒண்ணுதான் டா… அம்மு” என்றார் அவர். எழுந்து அமருவார், நடமாடுவார் வீட்டிற்குள் மட்டும். எனவே அப்படி சொன்னார் போல.
அம்மு “தாத்தா… ப்ளீஸ், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. நீங்க இப்படி பேச கூடாதுன்னு சொல்லி இருகேன்ல்ல…” என்றாள் அதட்டலாக.
பின் அவளே தன் தாத்தாவின் கட்டிலின் கீழே மண்டியிட்டு அமர்ந்து அவரை கழுத்தோடு அணைத்துக் கொண்டு “ஹாப்பி நியூ இயர் தாத்தா.. “ என்றாள்.
அவரும் சிரித்துக் கொண்டே.. அதனை ஏற்று.. “தேங்க்ஸ் டா அம்மு… எனக்கு ஒரு விஷ்…” என்றார்.
பேத்தி “எனக்கு அது என்னான்னு தெரியும்.. ஆனா, நீங்க நினைக்கிற மாதிரி நான் தப்பு பண்றது கிடையாது.. பயப்படாதீங்க” என்றாள்.
தாத்தா “ஹா… ஹ… ஹா… அம்மு, நீ கேட்டதெல்லாம் கிடைக்கும், நினைச்சதெல்லாம் நடக்கும் சந்தோஷமா இருப்பட…” என்றார் வாஞ்சையானக் குரலில்.
அம்மு “தாத்தா” என அவரின் கழுத்தை அணைத்து முத்தம் வைத்தாள். பின் “தூங்குங்க தாத்தா” என்றவள் எழுந்து சென்றாள் தன் அறைக்கு.
அம்முக்கு, அவினாஷ் மனதில் நின்றான். நடந்ததை நினைத்துக் கொண்டே உறங்கினாள்.
அடுத்து அடுத்த நாட்கள் கடந்தது.. போனும் இல்லை மேசேஜ்ஜூம் இல்லை அவினாஷிடமிருந்து, அம்முக்கு. ம், எதிர்பார்த்தாளோ.. எதிர்பார்க்க வைத்தானோ.. என்னமோ, அவளின் நம்பர் வாங்கியவன் அழைக்கவோ, ஏதும் பேசவோ முற்படவில்லை.
அம்முக்கு, என்னமோ செய்தது.. ‘எதுக்கு வந்தான்.. என்ன செய்தான், நான் ஏன் அவனை நினைக்கணும்.. ம்… தப்பா யோசிக்காதே அம்மு’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
அத்தோடு ‘யார் இவன்… நல்லாத்தான் இருந்தான்.. ம்… ‘ என அவனை நினைக்காமலும் இல்லை.. அத்தோடு, அன்று.. இருவரும் சேர்ந்து இருந்த நேரமும் நினைவு வர.. அந்த சின்ன மனம் அல்லோலப்பட்டது.
கல்லூரி இயல்பாய் சென்றது. அவளின் சீனியர்ஸ் யாரும் வந்து அதன்பின் ஏதும் பேசி கலாட்டா செய்யவில்லை, சொல்லப் போனால், இந்த ஜூனியர்ஸ்தான் அவர்களை பார்க்கும் போது.. அவ்வபோது கத்தி கலாட்டா செய்துக் கொண்டிருந்தனர். அதுவும் ஜாலியாகதான்.
அம்மு, இன்று கொஞ்சம் இயல்பாகி இருந்தாள் எனலாம்.. இந்த ஒரு வாரம் என்னமோ மனதில் தூசு என உறுத்திக் கொண்டிருந்தான் அவினாஷ். என்ன இருந்தாலும் அவனின் செய்கை அவளை சட்டென சாய்த்தே விட்டது எனலாம்.
இந்த ஒருவாரத்தில்.. முதல் இரண்டு நாட்கள் ‘அவன் அழைப்பான்’ என்ற நினைப்பில் இருந்தாள்.. அடுத்த இரண்டு நாள்.. ‘நான் அழைக்கவா’ என்ற நினைப்பில் இருந்தாள்.. கடைசி இரண்டு நாட்கள்.. ‘ச்சு.. பார்த்துக்கலாம்.. அவங்களுக்கு பிடிக்காது போல’ என தெளிந்துக் கொண்டாள். ‘ம்.. அப்படி எல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை.. எதோ வந்தான், வழி சொன்னான்.. போயிட்டான்’ என கொஞ்சம் தெளிந்திருந்தாள்.
இந்த வார விடுமுறையும் இனிதாக முடிந்தது.. அம்மு பொதுவாக வார நாட்களில் கார்டனிங் செய்வாள். அவளின் அன்னை இருந்த வரை.. வீட்டிலேயே எல்லா மூலிகை செடிகளும் வைத்திருந்தார். எனவே அதனை இப்போது வரை பராமரிப்பது தான் அம்முவின் முக்கிய வேலை. அதை வாடவே விடுவதில்லை அம்மு.