Advertisement

அத்தியாயம் 3

           காலையில் மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் செய்யும் போது தான் அவனின்  நிலை தெரிந்தது..,  காலையில் அவன் தூக்கம் கலைந்து எழுந்த நேரத்தில்., அவன்  அண்ணன் கல்யாண் உதவியோடு எழுந்து கொள்ள  முயற்சி செய்யும் போது தான்…, சொன்ன ஒரு விஷயம் தனக்கு காலில்  எந்த உணர்வும்  இல்லை என்பது தான்..,

        உடனடியாக பெரிய மருத்துவர்கள் வந்து தேவையான பரிசோதனை செய்ய., அதிகாலை மற்ற மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும்  வரும் முன்னே இவனுடைய பிரச்சனை என்னவென்று கண்டறியப்பட்டது. பிரச்சனையை உணர்ந்த வீட்டினர் தான் அதிகமாக அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

        ஏனெனில் தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு., கை மூட்டுப்பகுதி மற்றும் கீழ் கை பகுதியில் ரத்தம் வரும் அளவுக்கு கண்ணாடி வெட்டியதும்., ஆங்காங்கே கீறல்களும்.,  அவனுக்கு வெளியில் தெரிந்த அடி., நெற்றியிலும் கன்னத்திலும் லேசான காயங்கள் இருந்தாலும்., வேறு எந்த காயங்களும் இன்றி இருந்ததால் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஓரளவு மன நிம்மதியுடன் இருந்தனர்.

     ஆனால் காலை அவன் மயக்கம் தூக்கம் கலைந்து நன்கு உணர்வு வந்த பிறகுதான்.,  அவனுக்கு இடுப்பிற்குக் கீழே எந்த உணர்வும் வரவில்லை என்று சொன்னான்.

      அதற்குரிய மருத்துவர்கள் உடனடியாக வர வைக்கப்பட்டனர்., அவருடைய அரசியல் செல்வாக்கின் மூலம் மற்ற பரிசோதனைகளும் உடனே எடுத்து பார்க்கப்பட்டது. எங்கு அடிபட்டிருக்கிறது என்றே தெரியவில்லை., ஆனால் அவனுக்கு இடுப்புக்கு கீழே எந்த உணர்ச்சியும் இல்லாமல் போய்விட்டது.

      நடப்பது என்பதற்கு அவன் கால் தரையில் பதிக்க அவனுக்கு உணர்வு வேண்டும். அப்படி  உணர்வு வரும் வரை அவனால் நடக்க முடியுமா என்பதே சந்தேக கேள்வியாக அங்கே நின்றது., இடுப்பிற்கு கீழ் இப்படி நிலைமையில் இருக்கும் போது என்ன செய்ய யாரிடம் எப்படி தெரிவிக்க என்ற எண்ணத்தோடு குடும்பத்தினர் கலங்கி நின்றபோது.,  அவன் மேலும் மேலும் மனம் நோகும்படி யான விஷயங்களை அங்கு நடந்தேறியது.

       இதில் கொடுமை என்னவென்றால் அவனுக்கு அங்கு எந்த அடியும் படவில்லை காயங்களோ எலும்புமுறிவு எதுவுமில்லாமல் உணர்விழந்து போயிருந்தான்.,  முதுகு தண்டுவடத்தில் ஏதும் பிரச்னை இருக்குமா அடிப்பட்டதில் என்று பார்க்கும் போது, அங்கும் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் இதற்கு உள்ள பிரபல மருத்துவர்களை அணுகலாம் என்று மற்ற  மருத்துவர்கள் சொல்ல முதலில் அவன் காயங்கள் ஆறும் வரை பொறுத்திருந்து, பின்பு மற்றவற்றை கவனிக்கலாம் என்று அங்குள்ள மருத்துவர்கள் சொன்னதால் வீட்டில் உள்ளோரும் சரி என்றனர்.

          கல்யாண் தன் தம்பியை ஒரு குழந்தையை பார்ப்பது போல பார்த்துக் கொண்டான். மருத்துவர்களின் பரிசோதனை மருத்துவர்களின் ஆலோசனை என எல்லாம் முடிந்த பிறகு காலை 11 மணி அளவிற்கு பிறகு மணமகள் வீடான அபர்ணாவின் வீட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்தாலும் விபத்து என்று மட்டும் சொல்லியிருந்ததால் சென்று பார்த்து விட்டு வரலாம் என அபர்ணாவின் அம்மா அப்பாவோடு அபர்ணாவும் சென்றிருந்தாள்.

     அப்போதுதான் அந்த பரிசோதனைகள் முடிந்து சற்று கையின் வலி அதிகம் இருந்ததால் தூக்க மருந்தின் உதவியோடு நரேன் தூங்க வைக்கப்பட்டிருந்தான்.

         வேறு எந்த அதிகமான காயங்களும் இல்லாததால் அவனுக்கு என தனி அறை ஒதுக்கப் பட்டிருந்தது. அது சென்னையில் பெரிய மருத்துவமனை என்பதால் அங்கு இவர்களுக்கு என வசதியான தனிப்பட்ட வகையில் உள்ள லக்சுரியரஸ் சூட் போன்ற அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் அனைவரும் முன்னறையில் அமர்ந்திருக்க,  உள்ளேயிருந்த படுக்கையில் அரை தூக்கத்தில் இருந்தான்., வந்து பார்க்க வந்தவர்கள் பார்த்து விட்டு வெளியே வந்தனர்.,

    ஏற்கனவே கட்சி ஆட்கள் தொழில்துறை நண்பர்கள் என ஒவ்வொருவராக வந்து பார்த்து விட்டு சென்றிருந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து கிளம்பி இருக்க.,  அபர்ணா வீட்டினரும் நரேனின் குடும்பத்தினர் மட்டும் அங்கு இருக்க பேசிக்கொண்டிருந்தனர்., அப்போதுதான் இந்த விஷயத்தை மறைக்க வேண்டாம் என்ற எண்ணத்தோடு ராஜசேகர் மருத்துவர் சொன்னதை சொன்னார்.,

     “எந்தவித காயமும் இல்லை., அடியும் இல்லை., ஆனால் காலில் இடுப்பிற்குக் கீழே உள்ள உணர்வுகள் எதுவும் இல்லை எனவும்., உணர்வு வரும் வரை அவனால் நடப்பது சிரமம்.., நடக்க முடியாது என்பதையும் தயங்கி தெரியப்படுத்தி கொண்டிருக்கும் போதே.., அபர்ணாவின் அம்மாவான  நிர்மலா பேச தொடங்கிவிட்டார்..,

         எடுத்தவுடனே “அப்படி என்றால் கல்யாணத்தை நிறுத்தி விடுங்கள்” என்று சத்தமாக சொன்னவர்., அவர்கள் பதில் சொல்லும் முன்னரே மேற்கொண்டு பேசினார்.

       “காலம் முழுக்க உங்க பையனால  நடக்க முடியாது. என் மகளுக்கு என்ன தலையெழுத்து, வீல் சேர் தள்ளிட்டே காலத்தை கழிக்கனும் ன்னு”.. என்று தேவை இல்லாத வார்த்தைகளைப் பேசத் தொடங்கும்போதே.,

       கல்யாண் எகிறி இருந்தான். “நீங்கதான் தேவை இல்லாம பேசுறீங்க ன்னு தோணுது. நாங்க அதைப் பத்தி பேசுறதுக்கு தானே வரச் சொன்னோம்.,  ஏன் உண்மையை மறைச்சு என் தம்பிக்கு சரியாயிடும் சொல்லி கல்யாணம் பண்ணிட்டு இருக்கலாம்., அப்படிலாம் இல்லைங்க, அவனுக்கு சரியான பிறகு கல்யாணம் வச்சுக்கலாம்., இதை பத்தி பேசுறதுக்கு தான் உங்களை கூப்பிட்டோம்.,  ஆனா நீங்க என்னங்க இப்படி பேசுறீங்க” என்று கல்யாண் கேட்டான்.,

           “ஏன் நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்., கடைசி வரை வாழ வேண்டிய வாழ்க்கை., அதுல உங்க பையன் எப்ப சரியாகி நார்மலா இருப்பான்., என் பொண்ணு இவன் சரியாகுறது க்காக காத்திருக்கனும் மா…,  அப்படியே  சரியான கூட., உங்க பையனுக்கு வேற எதும் பிராப்ளம் வராது ன்னு என்ன நிச்சயம்…,  அதனால இந்த கல்யாணம் வேண்டாம்” என்று கத்தி பேசினார்.

     ராமநாதன் எவ்வளவோ கட்டுப்படுத்த முயற்சி செய்தும் அவள் பதிலுக்கு கத்தவும்.,  கல்யாண் நேரடியாக அபர்ணா விடம் பேச தொடங்கினான்…,

    ” நீ என்னம்மா சொல்ற.., அவனுக்கு சரியாக வரைக்கும் வெயிட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறியா”.,  என்று கேட்டான்.

            அபர்ணாவோ “எங்க அம்மா என்ன சொல்றாங்களோ அதுதான் முடிவு”..,   என்று சொன்னாள்.

            அனைவருக்கும் என்னவோ  போலாகி விட்டது., இவர்கள் மனம் வேதனையில் இருக்க அதே நேரம் நல்ல வேளை அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் அரை தூக்கத்தில் அனைத்தையும் கேட்டு கொண்டு தான் இருந்தான்..,

         இவர்கள் சத்தமாக பேச தொடங்கும் போதே அவன் எழுந்து விட்டான். அவனுக்கு ஏற்கனவே அதிகமான மன உளைச்சல் விபத்து பற்றிய குழப்பம் எல்லாம் சேர்ந்து இருந்ததால் அவனால் முழுமையாக தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். எனவே இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டு மறுபடியும் தூங்குவது போல கண்ணை மூடி படுத்திருந்தான்.

       அவனுக்கு மனம் ஏதோ செய்தது.., நெஞ்சிலும், வயிற்றிலும் ஏதோ அழுத்துவது போல தோன்றியது.  ‘நான் யாருக்கோ.,  ஏதோ பாவம் செய்து இருக்கிறேன். அதுதான் என்னை இப்படி பழிவாங்குகிறது’ என்று எண்ணிக்கொண்டான். முடியாத சூழ்நிலையில் தான் மனம் கிடந்து அல்லாடும் என்ன தவறு செய்தோம் என்று தவிக்கும் அதுபோல ஒரு தவிப்பில் தான் நரேன் இருந்தான் ..

       ராஜசேகரும் இறங்கி வந்து “கொஞ்சம் யோசிச்சி முடிவு பண்ணலாம்.,  எல்லாம் முடிச்சாச்சு பத்திரிக்கை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னா ஏதாவது சொல்லுவாங்க”என்று சொன்னார்.

               “நாங்க எதுக்கு கல்யாணத்தை நிறுத்துறோம். அதே மூஹுர்த்தத்துல ஒரு மாப்பிள்ளை பார்த்து எங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடுவோம்”, என்று நிர்மலா சத்தமாகவே சொன்னாள்.

       ராமநாதன் எவ்வளவோ பேச முற்படும் நிர்மலா அவர் நிலையில் நிலையாக நிற்க வேறு வழியின்றி ராமநாதன்., ராஜசேகர் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு கிளம்பி விட்டார்.,

      ராஜசேகர் குடும்பத்தினரும் எதுவும் பேச முடியாத சூழ்நிலை.,  மகனின் நிலை இப்படி இருக்கும் போது நாம் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது, என்ற சூழ்நிலையில் சரி எல்லாம் நல்லதுக்கு என்று எண்ணிக் கொண்டு திருமணம் நின்றால் நின்று விட்டு போகட்டும், அவனுக்கென்று ஒரு பெண் பிறக்காமல் போய் இருப்பாளா என்ற எண்ணத்தோடு அப் பேச்சை அத்துடன் நிறுத்திக் கொள்ள முடிவெடுத்தனர்.

        ஆனால் பெற்றவளாக லலிதாவின் மனம் தவித்தது , அதே நேரத்தில்  “அவள் பெண்ணுக்கு வேறு  மணமகன் பார்த்து திருமணம் செய்யும் போது.., ஏன் நானும் என் மகனுக்கு செய்யக்கூடாது”., என்று கேட்க ராஜசேகர் சத்தம்போட்டார்.

     “முதலில் அவன் சரி ஆகட்டும்., அதன் பிறகு திருமணத்தை பற்றி யோசிக்கலாம்”., என்று சொன்னார்.

             “என் மகனை நல்லபடியா பார்த்துக்க ஒரு பொண்ணு வேணும்”. என்று அடம்பிடிக்க தொடங்கியிருந்தார்.

         கல்யாண் க்கு நிர்மலாவின் மீது கோபம் என்றால்., அபர்ணாவின் மீது இன்னும் கோபம் அதிகமாக இருந்தது.,

       “என்ன பொண்ணு இந்த பொண்ணு., மேரேஜ் பேசியிருக்காங்க., அப்படி ஒரு சின்ன எண்ணம் கூட இல்லாம இருக்குது..,  இப்படி அம்மா பேச்சு கேட்கிற பொண்ண கல்யாணம் பண்ணி வச்சிருந்தா நாளைக்கு குடும்பத்தில் பிரச்சனையா தான் இருக்கும்.,  அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை விடுங்க”.., என்று சொன்னாலும் அவனுக்கு மனம் கேட்கவில்லை.  ‘எப்படி திருமணம் நடக்கிறது என்று பார்க்க வேண்டும்’ என்ற யோசனை அவன் மனதில் அப்போதே எழுந்தது.

        ‘இப்படிப்பட்ட பெண் திருமணத்திற்கு பிறகு எதுவும் என்றால் எப்படி இவனை கவனித்து இருக்குமா… கண்டிப்பாக இருக்காது., அப்போது இதே பேச்சு வந்திருந்தால் அது கொடுமை’  என்ற யோசனையோடு அமைதியாக அமர்ந்திருந்தான்.

          அதே நேரம் லலிதா மனம் முழுவதும் ‘அதே மூஹுர்த்தத்தில் தன் மகனுக்கு திருமணம் முடிக்க வேண்டும்’, என்ற எண்ணத்தோடு அமர்ந்திருந்தார் ..

           அபர்ணா வீட்டினர் பேசி சென்றதை நரேன் கேட்டு விட்டான்., என்பது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது..

              அன்று மாலையே லலிதாவின் அண்ணன் வீட்டினர் நரேனை பார்க்க மருத்துவமனைக்கு குடும்பத்தோடு வந்திருந்தனர். பொதுவாக சொந்தங்களுக்கு இடையே நல்ல  விஷயங்கள் பகிரப்படுகிறதோ.,  இல்லையோ.,  பிரச்சினைகளை உடனுக்குடன் யார் மூலமாவது மற்றவர்கள் காதுக்கு சென்றுவிடுகிறது.,

               அப்படித்தான் அபர்ணா வீட்டினர் திருமணத்தை நிறுத்தியதை அறிந்து இருந்தனர்.  இது தெரியாத லலிதா தன் அண்ணனிடம் மகனுக்காக அவர் மகளை கேட்கத் துணிந்தார்.

        சற்று நேரம் அமைதியாக இருந்தவர். அதன் பிறகு தன் தங்கை என்று பாராமல் மனம் நோக சொல்லிக் காட்டினார். “நல்லா  இருக்கும் போது பொண்ணு கேட்கணும் ன்னு  தோணல., அப்போ வேற பொண்ணு தேடுனீங்க.,  நானும் ஒன்னும் குறைஞ்ச லெவல் ல  இல்லையே…, வசதி இருக்கு ஆனாலும்  அப்படி அழகா இருக்கணும் இப்படி அழகா இருக்கணும் பொண்ணு பார்க்க நினைச்சீங்க.., இப்ப மட்டும் உன் மகன் வீல்சேரே கதி ன்னு ஆயிட்டான் அப்படிங்கிறதால.,  என் பொண்ண கேட்கிறயா, என் பொண்ண பாத்தா கடைசி வரைக்கும் உன் பையனுக்கு வீல்சேர் தள்ளிட்டு வர்றவ மாதிரி  தெரியுதா”… என்று சற்று அதிகமாகவே கேட்டார்.

       கல்யாண் தான் “மாமா அம்மா கேட்க தான் செஞ்சாங்க..,  நீங்கள் இஷ்டம்னா இஷ்டம் சொல்லுங்க இல்லைன்னா இல்லைன்னு சொல்லுங்க.., அதுக்காக தேவையில்லாமல் பேச வேண்டாம்”., என்று சொன்னான்.

          அபர்ணாவை போல் அழுத்தமாக அமைதியாக இல்லாத இப்பெண்.,  அதிகாரமாக கல்யாண் இடம் பதில் பேசினாள்.,  “உங்க தம்பிக்கு கடைசி வரைக்கும் வீல்சேர் தள்ளவும்.,  அவரைப் பார்த்துக்கவும்., நான் என்ன உங்க வீட்டில வேலைக்கு இருக்கிறவளா”…, என்றதோடு..,  “வேலைக்கு ஆள் வெச்சு பார்த்துக்கோங்க., இந்த நிலைமையிலும் உங்க தம்பிக்கு மேரேஜ் பண்ணனும் உங்க அம்மா யோசிக்கிறது காமெடி யா தெரியலையா” என்று சத்தமாக சொன்னாள்.,

                      அதே நேரத்தில் லலிதாவின் அண்ணனும் “இடுப்புக்கு கீழே விளங்காம போயிருச்சி., அவனால ஒரு நல்ல புருஷனா நடந்துக்க முடியுமா., அப்படி இருக்கும்போது நீ எப்படி யோசிக்காம என் பொண்ண கேட்ப”.,  என்று இன்னும் அதிகமாக சத்தமிட்டு பேசும் போது அது சரியாக சாத்தாத அந்த கதவின் இடைவெளி வழியாக அனைத்தையும் நரேன் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.,

       சற்று நேரம் எதுவும் தோன்றாமல் மனம் நொந்த படி இருந்தவனுக்கு., மற்றவர்களின் மனப்போக்கு பற்றிய எண்ணம் அருவருப்பை கொடுத்தது.., எல்லோரும் சுயநலவாதிகள் என்று தோன்றினாலும் தன் நிலையை எண்ணி மேலும் மனதளவில் நொந்து போக தொடங்கியிருந்தான்…

            பொதுவாக நமக்கு ஏற்படும் சூழல் தான்.,  நம்மை சுற்றி உள்ளவர்களின் முகமூடிகளை கிழித்து எறிகிறது., அப்படித்தான் நரேன் குடும்பத்தினர் அவன் மேல் கொண்ட பாசத்தையும்., மற்றவர்களின் குணங்களையும் அறிந்து கொள்ளும் சூழ்நிலையாக அமைந்தது., அவனுக்கு யோசனை., சரியான தூக்கமின்மை., மனதில் அழுத்தம் எல்லாம் சேர்ந்து அவன் யாரிடமும் எதுவும் கத்திப் பேசி விடுவோமோ… என்ற மனநிலையில் அமைதியாகவே இருந்தான்.

          ஏனெனில் இதுவரை அவன் வீட்டில் யாரிடமும் அதிகமான கோபத்தை காட்டியது கிடையாது.,  அவ்வீட்டில் பாசம் தான் அதிகம்.,  கண்டிப்பு இருந்தாலும் அதை சொல்லும் விதம் தனியாக இருக்கும். ராஜசேகரை பொருத்தவரை பிள்ளைகளைத் தட்டிக் கொடுத்து கண்டிப்பை காட்டி கொண்டு செல்பவர்.

எனவே வீட்டில் எப்போதும் அன்பின் சூழ்நிலை தான் அதிகமாக இருக்கும்.

       தட்டிக் கொடுத்துக் கொண்டு செல்பவர் என்றாலும்., பிள்ளைகள் ஒரு ஒழுங்குடன் இருந்தனர். அரசியல் சூழலில் அவர் இருப்பதால் பிள்ளைகளால் எந்த விதத்திலும் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்ததால்.,  அவ் வீட்டின் சூழ்நிலையும்., வெளியிலுள்ள சூழ்நிலைகளையும்., எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய பெயரோ பிள்ளைகளின் பெயரோ கெட்டுவிடக் கூடாது என்பதில் நிச்சயமாக இருந்ததால் பிள்ளைகளை அதை சொல்லியே வளர்த்தார்…

                 அங்கு அபர்ணாவின் வீட்டிலோ ராமநாதன் நிர்மலாவிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். “சொல்கிற விதமாக எந்த விஷயத்தையும் சொல்லாமல், இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு விஷயத்தையே பேசிவிட்டு உறவையே முடித்துக் கொண்டு வந்திருக்கிறாய்., இது நாளை எங்கு சென்று நிற்கும் என்று உனக்கு தெரியுமா.? அரசியல்வாதிகள் எப்போதும் நல்லவர்களாகவே  இருப்பதில்லை.., அவர்களுடைய குணங்களை சில இடங்களில் காட்டும் போது பாதிக்கப்படுவது என்னவோ அவர்களுக்கு எதிரில் இருப்பவர்கள் தான்., அந்த அறிவு கூட இல்லையா.? உனக்கு”., என்று சொல்லி அவளை சத்தம் போட்டார்.

      அவர்களுக்கு இடையே சண்டை வரவும் ராமநாதன் கோபத்தில் டெல்லிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட.., அங்கு அனைவருக்கும் நிர்மலாவின் மேல் தான் கோபம் வந்தது., “சொல்லும்விதமாக எடுத்துச் சொல்லியிருக்கலாம்., இவள் ஏன் இவ்வளவு அவசரப்பட்டாள் என்ற எண்ணத்தோடு அவர்கள் நிர்மலாவிடம் பேசி., மாப்பிள்ளை வீட்டில் சுமுகமாக பேசி முடிக்கலாம்., திருமணம் வேண்டாம் என்ற சூழ்நிலை தான்., ஆனால் அதையே சுமுகமாக சொல்லலாம்”., என்று நிர்மலாவின் பெற்றோரும் அண்ணனும் முடிவு செய்து உடனே சென்னை கிளம்பினர்.,

                ஏர்போர்ட்டில் இருந்து  கிளம்புவதற்கு சற்று முன்னர் நிர்மலாவின் அண்ணன் அபூர்வா விற்கு போன் செய்து பிரச்சினைகளை லேசாக சொல்லிவிட்டு தான் கிளம்பி செல்லவிருப்பதாகவும்.,  அத்தை வீட்டில் இருப்பாள் அத்தையோடு இருந்து கொள்.. எல்லோரும் சீக்கிரம் வந்து விடுவோம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்..

          அபூர்வா  அவள் மாமாவிடம் “ஏன் மாமா அவங்களுக்கு பேச தெரியாதா  எப்படி பேசனும் அப்படி ன்னு ஒரு பேசிக் டிசன்ஸி கூட இல்லாம  பேசுவாங்களா…,  ஒருத்தங்க அடிபட்டு கிடக்கும் போது இப்படி தான் பேசுவாங்களா..? ஏன் மாமா இப்படி இருக்காங்க., இதே மாதிரி நம்ம வீட்ல நடந்திருந்தா என்ன பண்ணுவாங்க.? கல்யாணத்தை வெயிட் பண்ணி பண்ணுங்கன்னு கேட்டு இருப்பாங்க இல்ல..,  அந்த கேர்டசி கூட இவங்களுக்கு தெரியல.., போங்க மாமா., போய் நல்ல சத்தம் போட்டுட்டு வாங்க, என்ன முடிவு பண்றாங்கன்னு சொல்லுங்க”..,  என்று சொல்லிக்கொண்டிருந்தாள்..,

          இப்ப என்ன பண்ண போறாங்க.,  அதே முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ண போறேன்.,  பேசிட்டு இருக்கிறார்கள் என்று சொல்லி..,  அவர் அங்கு நடந்ததாக இராமநாதன் சொன்ன சில விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

       “விடுங்க மாமா.., அல்லது  நீங்க போக வேண்டாம்” என்று சொன்னாள்.

       அவர் தான் மனது கேட்காமல்.., “இல்லடா அபூர்வா., நான் போய் பாத்துட்டு வாரேன். நிர்மலாவுக்கு ஒரு தடவை சொன்னாலும் புரியாது நாங்க போய் பார்த்துட்டு அதுக்கப்புறம் வந்து உனக்கு சொல்றேன்.., இல்ல னா, அங்கிருந்து போன் பண்றேன்,  நீ இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு போயிடு..,  லேட் ஆகாம பார்த்துக்கோ”.,  என்று சொன்னார்.

       “சரி மாமா., முடிந்த அளவு சீக்கிரமே போறேன்”.., என்று சொன்னாள்.

          “வீட்ல சின்னது இரண்டையும் பார்த்துக்கோ., நீ வீட்டில் இருந்தால் தான் ரெண்டும் அடங்கும்” என்று சொன்னார்…,

மூன்று பேரும் சேர்ந்து போடும் ஆட்டம் அவர் அறிந்த ஒன்று தான்…

           “நான் பார்த்துக்குறேன் மாமா., நீங்க பத்திரமா போயிட்டு வாங்க”., என்று சொல்லி அவரிடம் பேசிவிட்ட பிறகு அவரோடு உடன் செல்லும் பாட்டி தாத்தாவிடம் பேசி விட்டு இணைப்பை துண்டித்தாள்.  அவளுக்கு தன்னை பெற்றவளின் மனப்போக்கு சற்று எரிச்சலையே கொடுத்திருந்தது..,

அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது. செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு”

  • அன்னைதெரசா.

 

Advertisement