Advertisement

பதிலுக்கு நிர்மலாவின் அண்ணியும் “எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் அதை மட்டும் பாத்துக்கோங்க.., ப்ளீஸ் ன்னு யார் கேட்டாலும் அப்படி இவஹெல்ப் பண்ண போயிறா..,   மதர் தெரசா ரேஞ்சுக்கு  யோசிச்சிட்டு  எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுறாங்க…,  அதனால தான்., நான் அவ கிட்ட இதைப்பற்றி பேசுறதே இல்லை”…. என்றார்.

      “ஏன் நீ சும்மா பேசி தான் பாரேன்.,  வரட்டும்” என்று அவரும் பதிலுக்கு அபூர்வாவின் மாமா சொன்னார்..,

        நிர்மலாவின் அம்மா குறுக்கே புகுந்து இருவரையும் சத்தம் போடுவதை நிறுத்தி.,  “முதல்ல அவ  இன்னும் வரல.,  என்ன ஆச்சு போன் பண்ணு.,  நாங்க போன் பன்னா  அட்டென்ட் பண்ண மாட்டா..,  உன் போன் ல இருந்து வந்தா  மட்டும் எடுத்து கரெக்டா பதில் சொல்லுவா”..,  என்று சொன்னார்.

       அதே நேரத்தில் வாசலில் அவளுக்கான பிரத்தியோக வண்டியின் சத்தம் கேட்கவும்.,  வந்துட்டா என்று தாத்தா எழுந்து அவசரமாக வாசலுக்கு தன் பேத்தியை காண ஓடினார்..

    “பார்ரா உங்க அப்பாவ இவ்வளவு நேரம் அமைதியா இருந்துட்டு இப்ப முன்னாடி ஓடிப் போய் பேத்தியை  இத்தனை நேரம் அவர் தான் தேடிட்டு இருந்த மாதிரி அங்க போய் பேசிட்டு இருக்காரு  பாரு”….  என்று சொல்லவும் அனைவர் முகத்திலும் சற்று பெருமை கலந்த ஒரு சிரிப்பு மட்டுமே இருந்தது..,

       ஏனெனில் அபூர்வாவின் வேலை அப்படி.,  அவளுடைய பதவியின்  மரியாதை அப்படி..,  சிறுவயதிலே பெரிய பதவியை பிடித்து அத்தனை பேரிடமும் நல்ல பெயருடன் வலம் வரும் சந்தோஷம் அனைவர் முகத்திலும் தெரிந்தது…

      சிரித்த முகமாக வீட்டிற்குள் வந்தாலும் அவளது முகத்தில் களைப்பு தெரியத்தான் செய்தது.., உடனே பாட்டி தன் பேத்தியை “மேல  போய் டிரஸ் மாத்திட்டு  ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டுட்டு , பால் குடிச்சிட்டு  அதுக்கப்புறம் படுமா., நேரம் என்ன ஆகுது” என்று கேட்டார்…

      “பாட்டி ப்ளீஸ் நான் சாப்பிட்டேன்.. சாப்பாடு எல்லாம் வேண்டாம்”என்று சொன்னாள்.

      “எத்தனை மணிக்கு சாப்பிட்டு இருப்ப.., அதுவும் அவசர அவசரமாக ஏதாவது சாப்பிட்டு இருப்ப.,  நல்லா கூட சாப்பிட்டு இருக்க மாட்ட.,  நான் ஒரு தோசை வார்த்து வைக்கேன்..,  போய் குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வந்து சாப்பிட்டுட்டு போ”..,  என்று கட்டாயப் படுத்தினார்.

        அதற்குள் அவளுடைய அத்தை தன் வளர்ப்பு மகளை தலைகோதி., முகம் தடவி தன் பிள்ளை கலி  தீர்க்க வந்த பெரும் தேவதை  என்ற நினைப்பில் வளர்த்தவர் அல்லவா…  “சாப்பிட்டு தாண்டா படுக்கணும்.,  முகம் பாரு எப்படி வாடிப் போய் இருக்கு..,   நல்ல குளிச்சிட்டு வா நான் அதுக்குள்ள  சந்தனம் உரசி எடுத்து உனக்கு ரெடி பண்றேன்.., முகத்தில் அப்ளை பண்ணிட்டு போய் தூங்கலாம்” என்று சொல்லி தன் வளர்ப்பு மகளின் அழகையும் காப்பவளாக இருந்தார்..

      அவளோ சிரித்துக் கொண்டு “இப்ப நான் சாப்பிடாமல் தூங்க முடியாது.,  அதுதான வர்றேன்.,  இப்ப வந்துடுறேன்” என்று சிரித்துக் கொண்டே அவளது அறைக்கு சென்றாள்.

        சற்று நேரத்தில் வெளியிலிருந்த  சூடு அலைச்சல் உடலில் இருந்த அழுக்கு அத்தனையும் போகும் வண்ணம் குளித்து மிகவும் புத்துணர்வோடு இரவு உடையை அணிந்து கொண்டு ஹாலுக்கு மறுபடியும் வந்தாள்…

             அதற்குள் பாட்டி தோசை சுட்டு எடுத்துக்கொண்டு வர., அத்தை முகம் முகத்திற்கு பன்னீர் சந்தனம் கொஞ்சம் பதப்படுத்தப்பட்ட கற்றாழை கூழ் எல்லாம் கலந்து அவள் முகத்திற்கு தடவ எடுத்துக்கொண்டு வந்தார்…,

       அவளுடைய உணவு வேலை முடித்தவுடன் அத்தை அவளது முகத்திற்கும்.,  கைக்கும்., அவற்றை தடவி காய்ந்த பின் துடைத்து சுத்தம் செய்து அவளறைக்கு  போக சொன்னார்….

         அவளோ அனைவரையும் கிண்டலாக “நேரம்  என்ன தெரியுமா..,  ஒரு மணியைத் தாண்ட போகுது., இந்த நேரத்தில் குடும்பமே உட்கார்ந்து இந்த வேலையை பாக்குறோம் ன்னு தெரிஞ்சா பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க”.,  என்று சிரித்துக் கொண்டே சொல்ல…

        அப்போதுதான் அபூர்வாவின் மாமா “அபூர்வா மா  கொஞ்சம் பேசணும்”., என்று கேட்டார்.,

        “சொல்லுங்க மாமா”., என்று கேட்டாள்.

        ” எப்படா லீவு போடுற” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

      ” கண்டிப்பா லீவ் போடுறேன் மாமா” என்று இவள் சொல்லும்போதே.,

         “இல்லடா  உங்க அம்மா என்ன சொல்றாளோ., இல்லையோ.., உங்க அப்பா சொல்லுவாரு.,என் பொண்ணையும் கண்ணுலேயே காட்ட மாட்டேங்கறீங்க.,” என்று..,  அதுக்காகவாவது இந்த தடவை கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே நாம எல்லாம் போகணும்” என்று சொன்னார்.

         “கண்டிப்பா லீவு போடுறன் மாமா” என்று சொன்னாள்.

       அபூர்வாவின் பாட்டி “அந்த வேலையை விட்டு தான் தொலையேன் இதோட”., என்று  பாட்டி சொன்னார்..,

            “இன்னுமொரு ஒரு வருஷம் இல்ல ரெண்டு வருஷம் பார்த்துக்கிறேன்” என்று அவரிடம் கெஞ்சிக் கொஞ்சியும்  பேசிக் கொண்டிருந்தாள்.

      “நான் சொன்னா கேக்க மாட்டியா உன் கூட பிறந்தவ,   ரெட்ட புள்ளைங்கள ஒருத்தி அவளுக்கு கல்யாணம் ஆகப்போகுது..,  உனக்கு எப்ப கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்க” என்று கேட்டார்.

         “அவ பண்ணினா.,  நானும் பண்ணனும் என்ன கட்டாயமா.., பேசாம இருங்க பாட்டி நான் பண்ணிக்கிறேன்., பண்ணிக்க மாட்டேன்னு ஒன்னும் சொல்ல மாட்டேன்.,  கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன். அது ஒரு டூ இயர்ஸ் போட்டு மே.., நான் அதுவரை வொர்க் பண்ணிக்கிறேன்.., அதுக்கப்புறம் வேலையை விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்….

     “அப்போ இப்ப மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கட்டுமா”… என்று பாட்டி கேட்டார்.

    “பாட்டி ரெண்டு வருஷம் டைம் கேட்டேனே..,  அதுக்குள்ள மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க போறீங்களா..,  நான் என்ன ரெண்டு மாசம்  னா சொன்னேன்”..,  என்று கேட்டாள்…,

      “சீக்கிரம் கல்யாணத்தை பண்ணி கொடுக்கனும் னு.., எங்களுக்கு ஆசையா இருக்கு  இல்லடா” என்று சொன்னார்…

     ” அதான் இப்போ ஒரு வீட்டுக்கு கல்யாண சாப்பாடு சாப்பிட போறோம் இல்ல.., அதுக்குள்ள இன்னொரு கல்யாணமா.,  சத்தம் போடாம இருங்க”..,  என்று பாட்டியிடம் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தாள்.

        அனைவரும் இரவு வணக்கத்தோடு அவரவர் அறைக்குள் சென்று தூக்கத்திற்குள்  தொலைந்து போகத் தொடங்கினர்…

     தன்னை சுற்றி அன்பானவர்களோடு அன்பை மட்டுமே பெற்று வளர்ந்ததால் என்னவோ.,  அபூர்வாவிற்க்கு மற்றவர்களிடம் அன்பாக இருக்க தெரியும்.,  அதேநேரம் எந்த இடத்தில் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் பயன்படுத்துவாள்., கஷ்டம் என்று வருபவர்களுக்கு உதவுவதில் தன் குணத்தை கொண்டு தன்னை வளர்த்தவர்களுக்கும் பெருமை சேர்த்தாள்.

        யாருக்கும் பயப்படாத அவளுடைய துணிவு…, அவளைக் கண்டு தவறு செய்பவர்கள் கூட பயப்படும் நிலையில் வைத்திருந்தாள்.,  தன் பார்வையாலேயே அனைவரையும் அலற வைக்கக்கூடிய அளவுக்கு அதிகாரத்தை தன் பணியில் காட்டினாலும்., பிறரிடம் அன்பாக இருப்பது எப்படி என்பதை அவளிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.,  என்னும் நிலையிலேயே இருந்தாள்….

             அவளுடைய காலைப் பொழுது எவ்வளவு நேரம் கழித்து உறங்கினாலும்.,  அதிகாலையில் ஏதாவது அலைபேசி அழைப்போடும் அல்லது தொலைபேசியில் வரும் அலுவலக தகவலோடும் தான் அவளுக்கு விடியல் வரும்…,

அதன் பிறகு எழுந்து தனக்கு தேவையான உடற்பயிற்சிகளையும்., சில முக்கியமான யோகாவை மட்டும் செய்துவிட்டு அன்றாட வேலைகளில் ஈடுபடுவாள்., காலை உணவு என்பது அவள் மாமாவோடு தான்.  உணவு உண்ண நேரம் இல்லையெனில் கிளம்ப வேண்டியது வரும்., அதற்காகவே காலை காபி நேரத்தில் மாமாவோடு அலுவல் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டுக் கொள்வாள்.., ஏனெனில் அவர்  டெல்லியில் இருக்கும் தலைமை செயலகத்தில் பெரும் பதவியில் இருப்பவர் என்பதால், அவளுக்கு தேவையான தகவல்கள் ஏதும் கிடைக்குமா என்பதையும் அறிந்து கொண்டு அதன் பின்பே அவளுடைய வேலையை பார்க்க செல்வாள்…

     பிள்ளைகள் வளரும் முறை என்பது அவர்களை வளர்க்கும் பெற்றோராகிய நம் கையில் தான் இருக்கிறது., சுறுசுறுப்பையும் அன்பையும் நேர்மையும் ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாக அமைகிறது….

“உண்மையானவர்களும்., அன்புடையவர்களும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை”..

 

  • சுவாமிவிவேகானந்தர்.

Advertisement