Advertisement

அதே நேரம் சென்னையின் மறுபுறத்தில் உள்ள இன்னொரு வீட்டில் “ஏங்க ஆஃபீஸ் வேலையெல்லாம் வீட்டுக்கு தான் கொண்டு வந்து பார்ப்பீர்களா.., இன்னும் பதினைந்து நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு” என்று சொன்னாள்.

          “தெரியும் மா..,   இன்னொரு அஞ்சு நாள் வேலையெல்லாம் முடிச்சுட்டு லீவ் எடுத்துக்கிறேன்”.., என்று சொன்னார்.

           “ஆமா உங்க ஆபீஸ்ல நீங்கள் லீவ் போடுங்க”.., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.., “ஏன் உங்க  பி.ஏ  பாத்துக்க மாட்டாரா..,பிசினஸ்.,பிசினஸ்.,  ன்னு நீங்க தான் பைலை தூக்கிட்டு சுத்துங்க”.., என்று சொல்லி சத்தம் போட்டாள்..,

        “ம்ம்ம். பிசினஸ் அப்படி பார்க்க போய் தான் இன்னைக்கு அவ்வளவு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி முடித்து இருக்கு…, அது தெரிஞ்சுக்கோ சும்மா உட்கார்ந்து இருந்தா அவ்வளவு பெரிய இடத்தில் இருந்து எல்லாம் சம்மந்தம் வராது”., என்று சொல்லிக் கொண்டிருந்தார் ராமநாதன்., அருகில் அவரது மனைவி. நிர்மலா…

      “ஏங்க அபர்ணாக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டியது இருக்கு., கல்யாணத்துக்கு வாங்கினது ல சிலது விட்டு போயிருக்கு”..,

       “சரி போய் வாங்கிக்கோ., கார்டு உன்கிட்ட தான் இருக்கு., அபர்ணாவை கூட்டிட்டு போய்ட்டு வா”..,

    “ஏங்க., கல்யாணத்துக்கு இன்னும் பதினைந்து நாள் தான் இருக்கு அவளை எப்படி கூட்டிட்டு சுத்த முடியும்”..,

          “அது தான் பார்லர் லாம் போறீங்களே., அதோட எல்லாமே முடிச்சிக்கோங்க., கொஞ்ச நாளைக்கு காரை டிரைவரோடு இங்கேயே விட்டுட்டு போறேன்., மீதி வேலையெல்லாம் பார்த்துக்கோங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே…,

“ஆமா நீங்க அவளுக்கு போன் பண்ணி சொன்னீங்களா…, என்னமோ ஊர் உலகத்துல இல்லாத வேலை பாக்குற மாதிரி எனக்கு வர முடியாது.., ரெண்டு நாள் முன்னாடி தான் வருவேன் அப்படின்னு சொல்லுவா…, இல்லாட்டி கரெக்டா காலையில் வந்து நின்னுட்டு சாயந்திரம் கிளம்பனும் ன்னு., சொல்லுவா.., அப்படி எல்லாம் இருக்கக் கூடாதுன்னு சொன்னீங்களா., இல்லையா., முதல் நாள் தான் நிச்சயதார்த்தம் ங்கிறத சொன்னீங்களா”… என்று கேட்டார்.

         “ஏன் பட பட ன்னு., பொறியுற.., எல்லாம் உன் அண்ணன் செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சுருக்கான்.., என் கிட்டே ஏன்  கேட்க..,  ஏன் ஊர் உலகத்தில் யாருமே டூவின்ஸ் பெத்தவங்க., ஒன்னா வளர்க்கலையா.., நீ தான் அபர்ணா வ  நாம இங்க வெச்சிட்டு., அபூர்வா வ  உன் அண்ணன்., கையில கொடுத்த..,  உன் அண்ணனும் குழந்தை இல்லைன்னு சொன்னா..,  எனக்கு மனசு கேட்கல சரின்னு சொல்லிட்டேன்.., இவ போனதுக்கு அப்புறம் தான் அவனுக்கு ரெண்டு பிள்ளை பிறந்தாச்சு., அப்போவாவது அபூர்வா வ  இங்க அனுப்பலாம் இல்ல…, என் ராசியான பிள்ளை., என் தங்க பிள்ளை., ன்னு சொல்லி அங்கேயே வைத்து கொஞ்சி கொஞ்சி வளர்த்தான்.., அவன் மட்டுமா கொஞ்சாம  உங்க அம்மா அப்பாவும் சேர்ந்து கொஞ்சி கிட்டு இருந்தாங்க”..,

            “இப்ப நீங்க பாராட்டுறீங்களா., இல்ல திட்டுறீங்களா., அதை சரியா சொல்லுங்க”.., என்றார் நிர்மலா..,

        “ஏன் இப்ப என்ன உனக்கு” …

      “இப்படித்தான் என் முன்னாடி சொல்லுவீங்க.., அப்புறம் என்ன தெரியுமா சொல்லுவீங்க.., நீ அபர்ணாவை என்ன லட்சணத்தில் வளர்த்து இருக்க.., உன் அண்ணன் அபூர்வா வ  எப்படி வளர்த்து இருக்கான் பாரு அப்படின்னு சொல்லுவீங்க.., எனக்கு தெரியாதா உங்கள பத்தி”.., என்ற நிர்மலா சொல்லிக்கொண்டிருந்தார்.

       “உண்மையை தானே சொல்லுறேன்., செல்லம் கொடுத்து வளர்த்தாலும் அவ்வளவு தைரியசாலியா அவள வளர்த்து இருக்கான்.., எதுக்கெடுத்தாலும் அபர்ணா மாதிரி அவ உன் ட்ட வந்து ஒபினியன் கேட்கமாட்டா.., அவ எடுக்கிற முடிவு கரெக்ட்டா இருக்கும்”… என்றார் ராமநாதன்.

    “அது தானே.., அப்புறம் எதுக்கு இப்போ என்னை திட்டுறீங்க” என்றாள்..,

    “ அது நீ  அவளை கொடுத்து விட்டதால அவளுக்கு நம்ம மேல பாசம் இல்லாம போயிருச்சு”..,என்றார்.

    “ அதெல்லாம் இல்ல அவ பாசமா தான் இருக்கா.., நீங்க ரொம்ப  பண்ணாதீங்க” என்று சொல்லவும். “அவ பாசமா இருக்கா சரி., நாம பாசமா இருக்கோமா”..,

           “ஏன் இப்படி கேட்கிங்க”.. என்றாள்..,

    “பின்ன அபர்ணாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது அவளுக்கும் நாம சேர்த்து பார்த்து இருக்கனும்., இல்ல”..,

     “அவ தான் இப்ப முடியாது ன்னு., சொன்னா,,, அவ பேசும் போது வாயில என்ன கொழுக்கட்டையா., வச்சு இருந்திங்க…, அப்ப பேச வேண்டியது தானே”… என்றாள் நிர்மலா சத்தமாகவே…,

       “ நீ என் கிட்ட சண்டை பிடிக்கதிலே இருக்காத..,  போம்மா போய் தூங்குற வழியை பாரு..,  அவ ரூம்லே லைட் எரியுது என்னன்னு பாரு” என்று சொன்னார்.

    “ அவ பிரெண்ட்ஸ்ட பேசிட்டு இருப்பா”… என்றார் நிர்மலா

                “ஒரு நிமிஷம் நில்லு” என்று சொல்லவும் “என்னங்க” என்று கேட்டார்.

      “ உண்மையிலே அபர்ணாவுக்கு கல்யாணத்திலே., இஷ்டம் தானே”.., நல்ல கேட்டுட  இல்ல” என்று கேட்டார்…,

      “ஆமா.., நீங்க என்ன இப்படி கேக்குறீங்க.., 15 நாளில் கல்யாணத்தை வச்சுட்டு”  என்று கேட்டாள்..

     “இல்லை., எனக்கு தெரிஞ்சு கல்யாணம் பேசி முடிவு பண்ணுங்க னா.., எல்லாரும் மாப்பிள்ளை  ட்ட கதை பேசுறாங்க.., எனக்கு தெரிஞ்சி அபர்ணா மாப்பிள்ளை ட்ட ரொம்ப பேசின மாதிரியே தெரியலையே”.., என்று சொன்னார்.

       “ஆமாங்க.., எனக்கும் கூட இது தான் தோணுச்சு.., நான் கேட்டதுக்கு மாப்பிள்ளையோட அம்மா சொன்னாங்க.., அவன் பிசினஸ் பிசினஸ் சுத்திகிட்டே இருக்கான்..,  அவனுக்கு பேசறதுக்கு டைமே இல்லை.., நானே இது தான்., அவன் ட்ட கேட்டேன்.., அவன் பிசினஸ் ல டைட் வொர்க் இருக்குமா.., கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கிறேன் என்று சொல்லிவிட்டான்..,  எனக்கு தான் கஷ்டமா இருக்கு என்று மாப்பிள்ளையோட அம்மாவும் சொன்னங்க” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

         “சரி சரி விடு.., இப்போ உள்ளவங்க எல்லா தெரிஞ்சி இருக்காங்க.., தன்னால சரியாயிரும்.., அவளுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டால விடு.., ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கேட்டுக்கோ என்று சொல்லி விட்டு., சரி இப்போ அவ ரூமில் லைட் எரியுது என்னன்னு பாத்துட்டு.., நீ போய் தூங்கு.., கொஞ்சம் ஒர்க் இருக்கு முடிச்சிட்டு வர்றேன்” என்று சொல்லி கொண்டிருந்தார்

      ராஜசேகர்., லலிதா தம்பதியினருக்கு மூத்த மகன் கல்யாண் அவனது மனைவி லதா.., இரண்டாவது மகன் நரேன்., மூன்றாவது பெண் வினோதா அவரது கணவர் வசந்த்.., இது அவர்களது குடும்பம் அரசியலில் மிக செல்வாக்கு பெற்ற பெரும் பதவியில் இருக்கும் ஒருவரின் குடும்பம் தான் அது.

        ராஜசேகர் தான் அரசியலில் பெரும் புள்ளி., அவரது மகன் மூத்தவன் கல்யாண் அரசியலில் கால்பதிக்க தொடங்கியிருக்கிறான். இரண்டாவது மகனுக்கு அரசியல் என்பது பிடிக்காத ஒரு விஷயம்., அதனால் அவன் தனியாக பிசினஸ் என்று இறங்கி விட்டான்.., வினோதா அண்ணன்கள் மேல் பாசமாக இருக்கும் அன்புத்தங்கை., வீட்டின் செல்ல மகள்., அவள் திருமணம் செய்து இருப்பது பெரும் தொழிலதிபர் ஒருவரின் மகனை தான்..,

       கல்யாண்., லதா தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு மகனும்., ஒரு வயதில் ஒரு குட்டி பெண்ணும் இருக்கிறார்கள்., சந்தோஷமான மகிழ்ச்சியான குடும்பம் அரசியலில் பெரும் புள்ளியாக பெரும் பதவியில் இருந்தாலும் ஓரளவு நியாய தர்மங்களை காப்பாற்றும் நல்லவர். அரசியல் நல்ல பெயர் என்பது முக்கியம் அதற்காக சில நல்ல காரியங்களைச் செய்தாலும் சம்பாதிப்பதும்., எப்போதும் போல் எல்லோரையும் போல் இருக்கும் ஒரு அரசியல் புள்ளி தான் அவர்…

     ராமநாதன் , நிர்மலா தம்பதியினருக்கு இரட்டை பெண் குழந்தைகள் அபர்ணா.,  அபூர்வா., அபர்ணா தாய் தந்தையிடம் வளர., அபூர்வா சிறுவயதிலேயே அவளுடைய தாய் மாமா குழந்தை இல்லாத காரணத்தால் வளர்க்க எடுத்து சென்றுவிட்டார்.., அவர் டெல்லியில் இருப்பவர் டெல்லியில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் பெரும் பதவியில் இருக்கும் ஒருவர். நிர்மலாவின் பெற்றோரும் அவரோடு இருக்க அபூர்வா அத்தனை பேருக்கும் செல்லமாக அவ்வீட்டில் ராணியாக வலம் வந்தாள்.

     அபூர்வா எடுத்துப்போய் வளர்க்கத் தொடங்கிய சில வருடங்கள் கழித்து தான்.,அவளுடைய தாய் மாமனுக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தது.  அப்போது அவளுக்கு ஓரளவு விவரம் தெரியும் என்றாலும்., பெண்ணை நாங்கள் எங்களோடு கூட்டிப்போய் விடுகிறோம் என்று ராமநாதன் கேட்டதற்கு., நிர்மலாவின் சகோதரர் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார். அவள்  இவ்வீட்டின்  ராணி இங்கே தான் வளர்வாள் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவளை ஒரு ராணி ஆகவே வளர்த்தெடுத்தார்.., தைரியத்தில் அன்பிலும் பண்பிலும் மற்றவர்களுடன் பழகும் விதத்திலும் தனித்துவத்தோடு வளர்த்தெடுத்தார்…

    அபூர்வா வும்., அபர்ணா வும்., ஓரளவு வித்தியாசம் கண்டுபிடிக்கும் அளவிலேயே வளர்ந்து இருந்தார்கள்.., வித்தியாசம் தெரியாத அளவிற்கு இரட்டை பிறவிகள் கிடையாது. ஆனாலும் பார்ப்பதற்கு ஒன்று போல் தான் தெரிவார்கள்…, பெண்களும் நல்ல அழகாகவே இருந்ததால் அதற்குரிய தற்காப்புக் கலைகள்  சொல்லி கொடுத்து தான் அவள் மாமா அவளை வளர்த்தார்.., ஆனால் இங்கு ஒரே பெண்ணோக கையில் வைத்து வளர்த்ததால் நிர்மலா அபர்ணாவை பொத்தி பொத்தி வளர்த்தார்.  நிர்மலா சொல்வதே வேதவாக்கு.., ஆனால் அபூர்வா அப்படி கிடையாது அவள் வைத்தது தான் சட்டம்.., அவள் எடுத்தது தான் முடிவு என்ற பிடிவாதோடு தான் இருந்தாள்..,

    ஆனால் அவள்  செய்யும் செயல்கள் யாவிலும் ஒரு நேர்த்தி இருப்பதால் யாரும் அவள் எடுக்கும் முடிவுகளை தவறு என்று எப்போதுமே சொன்னது கிடையாது.., இரக்கத்தின் பிறப்பிடம் அவள் தான் என்பது போல அத்தனை பேருக்கும் உதவி செய்வாள்.,

     படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அபர்ணாவை நீ டிகிரி படிக்க வைத்துவிட்டு திருமணத்திற்கு பார்க்கலாம் என்று வீட்டோடு வைத்துக்கொண்டார்., நிர்மலா .

        ஆனால் அபூர்வா படிப்பில் படு கெட்டியாக இருந்தாலும் வீட்டில் அத்தை பாட்டியோடு சேர்ந்து அனைத்தையும் கற்றுக் கொண்டாள். அது மட்டுமல்லாமல் படிப்பிலும் அவள் ஆசை பட்டதை படித்து உயர்ந்த இடத்தில் வேலையில் அமர்ந்தாள்.  அதில் ஒரு வகையில் ராமநாதனுக்கு பெருமை தான் தங்கள் கைக்குள் வைத்து வளர்த்து இருந்தால் அபர்ணாவை போல அபூர்வா வும்  வீட்டோடு இருந்திருப்பாள் என்று நிறைய நேரங்களில் நினைப்பது உண்டு…

      “அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.”

                                                                                                                        –அரிஸ்டாட்டில்  

Advertisement