Advertisement

“ ஹெல்ப்…ஹெல்ப்…மாம்ஸ்…திருடன்…இங்க வாங்க…” என கத்திக்கொண்டு கதவை திறந்து ஸ்ரீ கீழே ஓட பார்க்க, 

“ ஏய் ஸ்ரீ கத்தாத…நான் தான். “  என இவன் ஓடி சென்று அவள் வாயை கைகளால் அடைத்து அவளை அணைத்துக்கொள்ள, காண்டானவள் அவன் கையை தட்டி விட்டு பால்கனிக்கு சென்று விட்டாள்.   

     ஸ்ரீபத்மாவிற்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முன்பு எப்படி எண்ணிவிட்டான் என ஒரு உறுத்தல். நான் என்ன தப்பு செய்தேன் என ஒரு எண்ணம். சாதாரண ஒரு அணைப்பு. 

     அன்புக்காக, உரிமைக்காக, ஆறுதலுக்காக, நேசதிற்காக, அக்கறைக்காக, அசைக்காக, தேடலுக்காக என உணர்வுகளின் இயல்பான வெளிபடுத்துதல் தானே அணைப்பு. அதற்கு இவனாக ஒரு காரணம் கண்டுபிடித்தால் ஸ்ரீ என்ன செய்ய முடியும். 

அதுவும் இன்று அவளது பிறந்த நாள். சூழ்நிலை கருதி அதை அவள் யாரிடமும் சொல்லவில்லை. நடந்து முடிந்த பிரச்சனை எத்தனை கனமானது என தெரிந்ததால் புரிந்து நடந்து கொள்கிறாள். ஸ்ரீக்கும் நிறைய ஆசைகள் இருந்தாலும், அனைத்தையும் தள்ளி வைத்து வாசுவிற்காக தானே இந்த இக்கட்டான சூழ்நிலையில் உடன் நின்றாள். 

         தற்போது எல்லாம் முடிந்து வீட்டில் இயல்பு நிலை திரும்பி இருக்க, அவள் திருமணம் முடிந்து வரும் முதல் பிறந்தநாள் இப்படி ஆகும் என எதிர்பார்க்கவில்லை. அவளும் இப்படி ஒரு சூழ்நிலையில் வாசுவிடம் இருந்து பரிசோ இல்லை வாழ்த்து கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் தன் உணர்வுகளுக்கு மதிப்பை எதிர்ப்பார்த்தாள்.

      வாசு சென்று அமைதியாக மெத்தையில் படுத்துக்கொண்டான். இன்னும் சாமதானம் செய்ய போனாள், எங்கே இன்னும் பிரச்சனை ஆகுமோ என பொறுமை காத்தான். ஒரு அனிச்சை செயலாய் தன்னை திருடனை பிடிக்க துணைக்கு அழைத்து உள்ளே ஒரு இனிமையை கொடுக்க, அப்படியே படுத்திருக்க, ஸ்ரீ தனியாக ஊஞ்சலில் இருப்பதை பார்க்க அவனுக்கு என்னவோ போல் இருந்தது. 

அவள் அருகில் இருந்தாலும் தூங்க முடியவில்லை இல்லையென்றாலும் தூங்க முடியவில்லை. 

வாசு படுத்த வாக்கிலே அவளை விடாது பார்த்திருக்க, அவள் திரும்புவதாகவே இல்லை. இத்தனை நாட்கள் ஸ்ரீ சிரித்தே அந்த வீட்டில் வளைய வந்திருக்க, இப்போது முதல் முறையாக அவனை தவிர்த்து தனித்து இருக்க, அதுவும் தன்னால் எனும் போது வாசு மண்டை காய்ந்து போனான். 

    வாசுவிற்கு எப்படி அவளை சமாதான படுத்த என தெரியாமல் அப்படியே எழுந்து அமர, என்ன செய்வது என தெரியாமல் அருகில் இருந்த மொபைல் எடுத்து சாதாரணமாக மெசேஜ் பார்க்க, அவனது காட்ஃஜில்லா  குரூப்பில் ஸ்ரீயையும் மூன்று மாதம் முன் இணைத்திருக்க, இன்று நண்பர்கள் அனைவரும் ஸ்ரீக்கு வாழ்த்து அனுப்பியிருந்தனர். காலையில் இருந்த  நிலையில் மொபைலை எடுக்காமல் இருக்க, இப்போது தான் பார்த்தான்.

அதை பார்த்ததும் சட் என தலையில் கைவைத்து கொண்ட வாசு, அவசரமாக எழுந்து கதைவை திறந்து கீழே போக, அவன் எழுந்த வேகமும், கதவை திறந்த விதமும், கீழே விரைந்த செயலையும் ஸ்ரீ திரும்பி பார்க்க, ஏதோ தன்னை சமாதான படுத்தாமல், அவன் சென்றது போல் ஒரு தோற்றம். 

     ஸ்ரீபத்மாவும் அப்படியே கவிழ்ந்து படுத்துக்கொண்டாள் ஊஞ்சலில். சிறிது நேரதிற்கெல்லாம் வாசு பரபரப்பாக மேல அவர்கள் அறை வந்தவன், ஸ்ரீயின் ஊஞ்சலின் பக்கம் வந்து நின்றான். 

அவன் அரவம் கேட்டாலும் நிமிராமல் ஸ்ரீ படுத்திருக்க, வாசு சென்று அவள் கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டினான். 

     ஸ்ரீ படார் என எழுந்தவள் அவனை பார்த்து, “ இப்போ எதுக்கு இப்படி பண்ற, என்னைய ஒன்னும் கன்வின்ஸ் பண்ண வேண்டாம். “ என கத்திவிட்டு திரும்பி அமர்ந்து கொண்டாள். 

வாசு அமைதியாக சென்று அவள் அருகில் ஒரு சதுர வடிவில் இருந்த ஒரு பெட்டியை வைத்தவன், அதன் அருகில் அமர்ந்து கொண்டான். ஸ்ரீ திரும்பி அவனை பார்த்து முறைக்க, 

“ இத ஓபன் பண்ணு ராங்கி. “ என உற்சாகமாக அவன் குரல் வர, இத்தனை நேரம் இருந்த வாசு இல்லை அவன்.

“ முடியாது டா. “ முறுக்கி கொண்டாள் ஸ்ரீ. 

அவள் கோபம் புரிந்தவன், அவனே அதை திறந்து அவள் முன்னால் காட்ட, அதில் அவள் முதல் பிறந்த நாளில் இருந்து தற்போது வரை இருக்கும் பிறந்த நாள் புகைப்படங்கள், இன்னும் மற்ற அழகிய தருணங்களில் இயல்பாய் இருந்த புகைப்படங்கள் என கிட்ட தட்ட ஐம்பது புகைபடங்கள்  இருக்க, அதற்கு கீழே உள்ளே ஒரு பழம் மட்டும் தனியாக இருந்தது. 

    ஸ்ரீ புகைப்படங்களை ஒவ்வொன்றாய் பார்க்க, அவளையும் அறியாமல் முகத்தில் சிறு புன்னகை பூக்க, கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தாள். 

     அனைத்து புகைபடங்களிலும் ஏதோ ஒரு அழகிய நினைவு. அத்தனையும் கண் முன்னால் வர, இயல்பாய் வாசுவின் அருகில் நகர்ந்து அமர்ந்து ஒவ்வொரு புகைபடத்தின் நினைவுகளையும் அந்த நாட்களின்  மகிழ்ச்சியுடன் பகிர, வாசுவும் அதில் இணைந்துக்கொண்டான். 

இறுதியாக அனைத்து புகைபடங்களையும் பார்த்தவள், வாசுவை முதலில் ஒரு முறை ஏர்போர்ட் புகைபடத்தில் பார்த்தது நியாபகம் வர, 

“ அன்னைக்கு ஏன் மாம்ஸ் அப்படி என்னய பார்த்த. “ என திடும் என கேட்க, வாசு விழித்தான். 

“ அதான் ஃபர்ஸ்ட் டைம் என்னைய அப்பா கூட ஏர்போர்ட்ல ஃப்ளைட் ஏத்தி விட வந்தப்போ அப்படி பார்த்தீங்களே. “

“ எப்போ…ஓஹ் அதுவா… நான் உன்ன பார்க்கலா…மாமாவ தான் பார்த்தேன். “

“ என்னது. “

“ ஆமா…அப்போ அப்பா என் கூட பேசாமாட்டார்ல ஆனா மாமா உன்ன அவ்ளோ நல்ல பார்த்துகிட்டார்ல…சோ அதான் மாமா பார்த்துட்டு இருந்தேன்.”

“ அதான பார்த்தேன்…எப்போ மீனுக்கு இறக்க வந்துச்சுனு. “ என அங்கலாய்த்தவள், பின்பு வேறு ஒரு புகைபடத்தில் கவனம் பதிய,     

“ எப்போ இதெல்லாம் ரெடி பண்ணிங்க, எனக்கு இன்னைக்கு ஒரு விஷ் கூட பண்ணல, ஆனா இதெல்லாம் மட்டும் செஞ்சு வச்சிருக்கிங்க.” என உள்ளே போன குரலில் ஸ்ரீ கேட்க, 

“ இன்னும் உள்ள இருக்கு பாரு. “ என அப்போதும் எதுவும் வாசு வாழ்த்து சொல்லாமல் இதை சொல்ல, ஸ்ரீ அந்த பெட்டியினுள் என்ன என்று பார்க்க, ஒரு மாம்பழம் இருக்க, ‘ அதில் என்ன ஸ்பெஷல் ’ என்பது போல் வாசுவை  பார்த்தாள். 

வாசு அந்த பழத்தையும் ருசித்து பார் என்பது போல் ஸ்ரீயை பார்த்து வைத்தான். 

    ஸ்ரீ அந்த மாம்பழத்தை எடுத்து ஒரு கடி கடிக்க, அதில் மாம்பழம் சுவை இல்லை, அதில் வெண்ணிலா ஐஸ் கிரீம் சுவை. ஸ்ரீக்கு ஆச்சர்யத்தில் கண்கள் விரிய வாசுவை பார்த்து வைத்தாள். 

“ இது என்ன மாம்பழம் டேஸ்ட் வராம ஐஸ் கிரீம் டேஸ்ட் அப்படியே வருது. “ என ஆச்சர்யமாக கேட்க, 

“ இது மாதிரி நிறைய வெரைட்டிஸ் இருக்கு. வேற வேற ப்ருட்ஸல இந்த மாதிரி நம்ப நினச்சு பார்க்க முடியாத டேஸ்ட் எல்லாம் இருக்கு. இது ஒன்னும் ஹைபிரிட் செஞ்சு வளர்கல. இது நேச்சுரலான பழம் தான்.  

இந்த மாதிரி ப்ருட்ஸ்லாம் கேரளால ஒருத்தர் இயற்கையா விவசாயம் பண்ணி வளர்க்குறாரு. இது ஒரு விவசாயியோட புதிய முயற்சி. 

அதான் ஸ்பெஷலா ஆர்டர் போட்டு வாங்குனேன். 

டூ டேஸ் முன்னயே இதெல்லாம் கிஃப்ட் பேக் செஞ்சு வச்சிட்டேன். 

பட் அது என்ன விஷயமோ தெரியல எவ்ளோ ப்ரிப்பேர்ட்டா இருந்தாலும்  கரெக்ட்டா பொண்டாட்டி பர்த்டே அன்னைக்கு இதெல்லாம் மறந்து போயிடுச்சு. 

சாரி ராங்கி … எல்லாத்துக்கும்….

நிஜமா இன்னைக்கு நடந்த ப்ராப்ளம்ல இதெல்லாம் மறந்து போச்சு. 

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மை குட்டி யானை. “ என வாசு சிரிப்புடன் ஸ்ரீயை அனைத்துக்கொள்ள 

“ தேங்க் யு டா மாம்ஸ். “ என்ற ஸ்ரீயின் கண்களில் அத்தனை மகிழ்ச்சி. மனதில் பட்டாம்பூச்சிகள் புல்லாங்குழல் வாசிக்க, வாசுவை இறுக அணைத்துக்கொண்டாள். அவள் இறுக்கங்கள் அனைத்தும் காணாமல் போக, சில நிமிடங்கள் அப்படியே அவனை அனைத்தது போல் இருந்தவள் சடார் என விலகி, 

“ பட் இந்த குட்டி யானைனு சொல்றதெல்லாம் வச்சிகாத, அப்புறம் தும்பிக்கையால தூக்கி போட்டு போய்டே இருப்பேன். 

நான் என்ன அவ்ளோ குண்டவா இருக்கேன். “ என கடுப்பாகி பேச, 

“ நீ சொன்னனு நான் டெய்லி ஃபுளோர் வொர்க் அவுட் டூ ஹவர்ஸ்  பண்றேன் தெரியுமா. நான் கொஞ்சம் கூடவா ஸ்லிம் ஆகல. “ என  சீரியஸ்ஸாக அவன் முகம் பார்த்து கேட்க, வாசுவிற்கு சிரிப்பு தான் வந்தது. 

   வாசுதேவன் ஏதோ விளையாட்டுக்கு தான் அவளை கிண்டல் செய்தான், ஆனால் அதை அவள் இத்தனை சீரியஸ்ஸாக எடுத்து மனதில் வைத்து இப்படி முயற்சி செய்கிறாள் என நினைக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் அவளை பாதித்திருக்கிறது என புரிந்து கொண்டான். 

“ ஸ்ரீ, இங்க பாரு நீ குண்டா இருக்க, ஒல்லியா இருக்கனு இங்க எதுவும் இல்ல. நான் சொன்னா அத இவ்ளோ டீப்பா எடுக்கணும்னு அவசியம் இல்லை. 

நீ என்னைய எப்பவும் போடனு சொல்லி போய்கிட்டு இருப்பல்ல, அப்படி போய்டணும். 

நான் சீரியஸ்ஸா விளையாட்டுக்கு தான் சொன்னேன். அது உன்ன இவ்ளோ அப்பெக்ட் பண்ணும்னு நினைக்கல. 

நம்ப ஆச்சி, நம்ப தாத்தாவ விட வெயிட் தான். ஆனா தாத்தாவுக்கு அவங்க இல்லாம ஒன்னுமே இல்ல.

காலைல எழும் போது ஆச்சிக்கு கை வலி இருக்கும் அவங்களால அவங்க புடவ கட்டுறது கூட சிரமம் தான், அந்த வலி போக கொஞ்சம் டைம் ஆகும். ஆன அது வரைக்கும் அவங்க உட்காந்தே இருக்கணும். 

ஆன தாத்தா எழுந்து அவங்களுக்கு அப்போவே  புடவ கட்டிவிடுவாரு, ஆச்சிக்கு தலை முடிஞ்சு விடுவாரு. 

ரெண்டு பேரும் வயசானவங்கன்றதால காதவ எப்போவும் திறந்தே வைக்க சொல்லுவேன். அப்போ எதார்த்தமா ஒரு நாள் உள்ள போயிட்டேன் அப்போ தாத்தா ஆச்சிக்கு தலை முடிஞ்சு விட்டுட்டு இருந்தாரு. நான் போய் அத வச்சு தாத்தாவ கிண்டல் பண்ணிட்டு இருந்தேன். அப்போ தான் ஆச்சி ரீசன் சொன்னாங்க. 

கல்யாணம் ஆனா புதுசுல தாத்தா சாப்பிடும் போது ஆச்சியும் பக்கத்துல உட்காந்து சாப்பிடணுமாம். இல்லைனா தாத்தாவும் சாப்பிட மாட்டாரு. எங்க நமக்கு அதிகாம வச்சிட்டு தனக்கு கொஞ்சமா சாப்பிடுவாங்களோனு தாத்தாவுக்கு ஒரு பார்வ ஆச்சி மேல இருந்துட்டே இருக்குமாம். 

ஆச்சி சமைக்கும் போதோ இல்ல தோட்ட வேலைல இருக்கும் போதோ இடையில தண்ணி குடிக்க மறந்துடுவாங்க, ஆன தாத்தா மறக்காம தண்ணி கொண்டு போய் ஆச்சிக்கு கொடுப்பார். 

தாத்தா இது நாள் வரைக்கும் நல்ல ஆரோக்கியத்தோட இருக்காங்கன்னா அதுக்கு ஆச்சி தான் காரணம். தாத்தாவுக்கு அவ்ளோ பக்குவமா எல்லாம் செஞ்சு கொடுப்பாங்க. வேற எந்த பிரச்சனை வந்தாலும் மனசால தாத்தாவ ரொம்ப பாதிக்காத மாதிரி பார்த்துப்பாங்க. அவ்ளோ ஆதரவா பேசுவாங்க, நடந்துப்பாங்க. அதனால தான் தாத்தா இப்போ வரைக்கும் நல்லா இருக்காரு. 

நைட் படுக்கும் போது கூட ஆச்சிக்கு கால் வலிக்கும்னு தைலம் தேச்சு விட்டு தான் படுப்பாரு. 

    தாத்தாவோட ஒரு நாள் தொடங்குறது ஆச்சிகிட்ட தான் முடியறதும் ஆச்சிகிட்ட தான். இதுக்குள்ள ஆச்சி ஹெவியா இருந்தாங்க ஸ்லிம்மா இருந்தாங்கனு எங்க வந்துச்சு. 

   அன்புக்கும் பாசத்துக்கும் உருவமே இல்ல, அதனால அது உருவமும் பார்க்காது. 

அப்படி தான் ஸ்ரீ நீயும் எனக்கு. 

நீ வொர்க் அவுட் பண்றனா அது உன்னோட ஹெல்த்காக பண்ணு, அத விட்டுட்டு நான் ஏதோ சொல்லிட்டேன்னு பண்ணவேண்டாம். அது உனக்கு சாட்டிஸ்ஃபாஷன் தராது. 

ஒரு விஷயம் நீ உனக்காக பண்றப்போ தான் நீ சாட்டிஸ்ஃபை ஆக முடியும் ராங்கி “ 

என ஸ்ரீயை அனைத்து கன்னத்தில் முத்தமிட, ஸ்ரீபத்மா வாசுவின் கழுத்தை சுற்றி கை போட்ட அருகே இழுத்து 

“ நான் சும்மா கை போட்டதுக்கு யாரோ ஏதோ சொன்னாங்க. இப்போ என்ன இப்படி வந்து கிஸ் பண்றாங்க. 

எனக்கும் சீரியஸ்ஸா இப்ப எதுவும் வேண்டாம். “ என வேண்டுமென்றே வாசு அப்போது சொன்னதை போல் முகத்தை வைத்து குரலில் பாவனையாக சொல்ல, 

“ ரொம்ப ஸ்ட்ரெஸ் ராங்கி, ஜெயாவுக்கு இப்படி நடக்கும்னு யோசிக்கவே இல்ல. அன்னைக்கு ஸ்டேஷன்ல நடந்தது ரொம்ப நாள மைண்ட்ல ஓடிட்டு இருந்துச்சு… ரொம்ப டென்ஷன் படுத்திட்டாங்க. அதுவே உள்ள ஓடிட்டு இருந்துச்சா, அதான் அப்போ வீட்டுக்கு வந்தும் ரிலாக்ஸ் ஆக முடில. 

நீ ஏன் அப்படி பண்றனு யோசிக்க கூட இல்ல. நமக்கு வெளியே என்ன நடந்தாலும் வீடு வரைக்கும் கொண்டு வர கூடாது தான். பட் அன்னைக்கு எல்லாம் மாறி போச்சு. ஜெயாவ வேற நீ அப்படி சொல்லவும் உன்ன தப்பா வேற நினச்சு…ரியல்லி சாரி ஸ்ரீ… “ என உண்மையாக வருந்தி சொல்ல,

“ ப்ச் அதெல்லாம் ஒன்னும் இல்ல, நம்ப ஜெயாவுக்கு நடந்தது பெரிய விஷயம். அப்படி இருக்கப்போ இதெல்லாம் நான் எதிர்பார்க்கல பட் என்னோட வியூவையும் அண்டர்ஸ்டாண்ட் பண்ணனும்னு மட்டும் தான் எக்ஸ்பெக்ட் பண்ணேன். 

நீங்க அப்படி உடனே பேசவும் எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு மாம்ஸ் “ என சொல்லி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். 

“ சாரி ராங்கி. அப்போ அப்படி வேணும்னு பேசல, அப்போ…“ என அவன் சீரியஸ்ஸாக காரணம் சொல்ல வர, கடந்து போன ஜெயாவின் சூழ்நிலைகளை அவன் நினைக்கும் படி விளக்கம் கொடுப்பதை ஸ்ரீ விரும்பவில்லை. அதிலிருந்து அவன் வெளி வந்தால் பரவாயில்லை என தோன்றியது.  

“ அதான் தெரியுமே நான் வேண்டாம்னு தான் அப்படி சொல்லிருக்கிங்க. “ என இவள் வேண்டுமென்றே சன்ன புன்னகையுடன் வம்பிழுக்க, 

“ நான் எப்போ நீ வேண்டாம்னு சொன்னேன். “ என அவனும் இயல்பாய் சிரிக்க, அந்த ஈர சாமத்தில் ஸ்ரீக்கு அந்த சிரிப்பில் வசீகரானாய் தெரிந்து தொலைத்தான் வாசு. 

ஸ்ரீபத்மாவின் அவன் முகத்தை அப்பட்டமாய் அந்த நொடியில் ரசிக்க, வாசுவிற்கும் அது தெரிந்தது. அவன் அசையாமல் அவளை பார்த்தபடி உட்கார்த்திருக்க, சில நொடிகளில் ஸ்ரீ தன்னை மீட்டெடுத்தாள். அவள் நேராய் திரும்பி உட்கார பார்க்க, அவளை அப்படி திரும்ப விடாமல் வாசு பிடித்து கொண்டான். 

“ கை எடுங்க நான் போய் படுக்கணும். “ 

“ நானும் தான் படுக்கணும். தூக்கம் வருது. ஆனா பாரேன் என் பொண்டாட்டி என்னைய சைட் அடிக்கறப்போ பாதில எழுந்து போற கெட்ட பழக்கம் என்கிட்ட இல்ல. “ என அவன் குறும்பாய் சொல்ல,

“ ஹலோ யாரு சைட் அடிச்சா, நீங்க ஒன்னும் அவ்ளோ வொர்த்லாம் இல்ல, ஏதோ பஞ்சத்துல அடிபட்ட பாண்டா கரடி மாதிரி முகத்தை வச்சிருந்திங்களேனு சும்மா பாவமேனு பார்த்தா. ரொம்ப தான் நினைப்பு. “ என சொல்லி ஸ்ரீ வம்படியாய் எழுந்து உள்ளே சென்றாள். அவள் விட்டு சென்ற பரிசு பொருட்கள் எல்லாம் உள்ளே பத்திரமாக பொறுப்பாக எடுத்து வைத்தவன், பால்கனி கதவை மூடியவாரே, 

“ ஹா…ஹா…பாண்டா கரடியவா அப்படி பார்த்து வச்ச “

“ ஆமா. “ என மெத்தை மீது  இருந்த தலையணையை எடுத்து அவன் மீது வீசினாள். 

அதை அப்படியே பிடித்தவன், ஸ்ரீ அருக வந்து அவள் மேல் சரிய, ஸ்ரீ உருண்டு படுக்க, அவன் வெறும் மெத்தையில் விழ, 

“ ஹா ஹா…தொப்பி தொப்பி…” என ஸ்ரீ சிரிக்க, 

“ உனக்கும் தொப்பி  மாட்டிவிடுறேன் வா “ என வாசு ஸ்ரீயிடம் ஆர்வமாய் அவன் தேடலை தொடங்க, அந்த இரவு மையலும் காதலுமாக இருவரையும்  உருக வைத்தது. மலை சாராலில் இன்ப சுற்றுலாவாய் அந்த இரவு இனிமை தர, அந்த நாளின் இறுக்கங்கள் அனைத்தும் காணாமல் போய் அமைதியாய் நிறைவாய் உறங்கினர் இருவரும். 

                     

       

Advertisement