Advertisement

       வாசு இப்போது தான் நிதானித்தான். இது நாள் வரை அவன் ஸ்ரீயை பற்றி நினைக்கவே இல்லை. வீட்டின் நிலைமை புரிந்து நடந்துகொள்ளும் அவர் பாங்கு, வாசுவை வேறு எதையும் யோசிக்க விடவில்லை. அவள் நிலைமை புரிந்து தான் நடந்தாள், ஆனால் இவன் தான் ஸ்ரீயை புரிந்துகொள்ள மறந்தான், மறுத்தான்.

வாசு, ஜெயாவை அழைத்து வந்தது முதல் சில நாட்கள் வாணி வீட்டுக்கு அனுப்பாமல் ஆச்சி வீட்டில் இருக்க வைக்க, ஸ்ரீ மறுத்தாள். அது வாசுவிற்கு உடன் பாடில்லை. நம் வீட்டு பெண் தானே, இங்கே அருகில் ஆச்சி வீட்டில் இருந்தால் என்ன என்று எதிர் வாதம் புரிந்தான். வாசு ஒத்துக்கொள்ளவில்லை. 

ஆனால் ஸ்ரீயின் அணுகுமுறை வேறாய் இருந்தது. அவள் ஜெயாவை நினைத்து தான் சொன்னாள். காரணம் சிவசு தாத்தா வீட்டிற்கு யாராவது சிவசு தாத்தவையோ இல்லை சுந்தரி ஆச்சியையோ பார்க்க வருவர் போவர். அப்படி வருபவர்கள் சில பேர் அக்கறையாக ஜெயாவை பற்றி விசாரித்தாலும், சிலர் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஜெயாவை சங்கட படுத்த, அருகில் இருந்து பார்த்த ஸ்ரீக்கு நிலைமை புரிந்தது. 

ஸ்ரீபத்மா, ஜெயாவின் மனநலம் பற்றி யோசிக்க, வாசுவோ அவளது பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு தாத்தா வீட்டில் இருக்க வைத்தான். இதே வாணி வீட்டில் ஜெயாவை அனுப்பி ஆச்சியை துணைக்கு வைத்தால், இத்தனை சங்கடங்கள் ஜெயாவிற்கு ஏற்படாது என்பது ஸ்ரீயின் எண்ணம். ஆனால் வாசு அதை புரிந்து கொள்ளவே இல்லை. 

“ ஸ்ரீ நீ ரொம்ப புரிஞ்சு நடந்தப்பனு நினச்சேன், ஆனா நீயும் ஜெயாவ வீட்ட விட்டு அனுப்ப சொல்ற, இத உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல ஸ்ரீ. “ என முகம் சுருங்க சொல்லிவிட்டு அவள் பக்கத்தின் நியாயம் கேட்க மறுத்து எழுந்து வெளியில் சென்று விட்டான். 

    ஸ்ரீபத்மாவிற்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தாலும் இப்போது பேசினாலும் வாசுவுக்கு புரியாது என உணர்ந்தவள் அமைதியாகி விட்டாள். அவள் அமைதியை அவளின் புரிதல் என எடுத்துக்கொண்டான் வாசு. ஆனால் அவள் பக்கத்தின் விளக்கத்தையே வாசு கேட்க வில்லை.

இது இப்படியிருக்க, ஒரு நாள் வாசு, வீட்டு பிரச்சனை விஷயமாக ஏதோ நினைத்துக்கொண்டு புரண்டு புரண்டு படுக்க, ஸ்ரீக்கு அவன் மேல் அத்தனை கோபம் இருந்தாலும் அவன் நிலை அறிந்து ஆறுதலாய் பின்னால் இருந்து அனைத்து படுத்துக்கொண்டாள். 

“ ஸ்ரீ சீரியஸ்ஸா இப்ப எதுவும் வேண்டாம். “ என அவன் முகத்தை சுருக்கி சோர்வாக விருப்பமின்னையுடன் சொல்ல, ஸ்ரீக்கு அவனை புரட்டி எடுக்க வேண்டும் போல் இருக்க, சூழ்நிலை கருதி அமைதியாகிவிட்டாள். அதன் பிறகு அவனிடமிருந்து ஒரு ஒதுக்கம். அவனிடம் இருந்து தள்ளி நிற்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் அதை வாசு உணரவில்லை. 

இப்போது எல்லா பிரச்கனைகளும் முடிய, வாசுவிற்கு இப்போது தன்னை சுற்றி என்ன நடக்கிறது என ஆராய, ஸ்ரீயின் விலகலை இப்போது தான் உணர்ந்தான். ஆனால் அவனுக்கு காரணம் தெரியவில்லை. 

காரணம் தெரியவில்லை என்றாலும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், தானே ஒரு முன் முடிவு எடுத்து பேச ஆரம்பித்தான். 

“ என்ன ஸ்ரீ இப்படி பண்ற, ஜெயா இங்க இருந்தது உனக்கு பிடிக்கலனு எனக்கு தெரியுது. ஏன் பிடிக்கலனு எனக்கு தெரில. ஜெயாவ பத்தி எனக்கு தெரிய வச்சதே நீ தான. இப்போ அவ வாணி அத்தை வீட்டுக்கு போயிட்டா. இப்போ கூட நீ இப்படி பண்ணா சரியா ? “ என அநியாயமாய் பேச, சலங்கை கட்டிகொண்டாள் ஸ்ரீ,    

“ என்ன மாம்ஸ் நினச்சிட்டு இருக்கிங்க. இப்போ நான் என்ன பண்ணிட்டேன். ஜெயா இங்க இருக்க கூடாதுனு ஏன் சொன்னேன்னு யோசிச்சிங்களா…

நம்ப தாத்தா வீட்ல அவள தங்க வச்சு பாடா படுத்திடிங்க. அவளும் மனுஷி தான, எத்தன பேருக்கு பதில் சொல்லுவா. அதுவும் தாத்தா வீட்டூக்கு வரவங்க போரவங்க எல்லாம் கூப்பிட்டு வச்சு கேள்வி மேல கேள்வி கேட்டா, அவ எப்படி ஃபீல் பண்ணுவானு கொஞ்சம்மாச்சும் யோசிச்சிங்களா…தாத்தா எத்தன பேர சமாளிப்பாரு. யோசிச்சிங்களா நீங்க. வீட்டுக்கு வரவங்களா வெளிய போங்கனு சொல்ல முடியுமா. 

ஜெயாவால அங்க ஹால்ல உட்கார முடியாம எவ்ளோ கஷ்டபட்டா தெரியுமா. அவ சேஃப்டி முக்கியம்னா, ஆச்சிய அவங்க வீட்டுக்கு அனுப்பிருக்கலாம்ல. 

அத ஏன் பண்ணல. 

நான் எப்போ ஜெயா இங்க இருக்கறது பிடிக்கலனு உங்க கிட்ட சொன்னேன். நீங்களா ஒரு முடிவு பண்ணிட்டு, அப்புறம் அதுக்கு வந்து என்கிட்ட விளக்கம் கேப்பிங்க. 

இது ஒரு பக்கம்னா… இப்படி தான் 

அன்னைக்கு…

அன்னைக்கு நைட் … 

Just a hug. 

இதுல என்ன தப்பு இருக்கு. நமக்கு வெளிய ஆயிரம் டென்ஷன் இருக்கலாம், அதெல்லாம் இங்க கொண்டு வந்து ஸ்ட்ரெஸ் ஆக முடியுமா. உங்களுக்கு மட்டுமா டென்ஷன். எனக்கும் தான் டென்ஷன். 

நீங்களாவது வெளிய இருந்திங்க, நான் வீட்டுக்குள்ள, ஆச்சிய சமாளிச்சு வீட்டுக்கு வந்த ஜெயாவோட அம்மாகிட்ட பேசி, அவங்கள பார்த்துகிட்டு, இன்னும் அக்கம் பக்கத்துல இருக்க சொந்தக்காரங்க வேற வந்து ஆச்சிகிட்ட விசாரிக்க, அவங்களுக்கு பதில் சொல்லினு எனக்கும் தான் இத்தன நாள  ஸ்ட்ரெஸ். 

நீங்களாவது வெளிய போயிட்டு ரிலாக்ஸ் பண்ண வீடுனு ஒரு இடத்துக்கு வரிங்க. நான் இந்த பிரச்சனை முடிற வரை ஆச்சி கூட வீட்ல தான் இருந்தேன். நான் எங்க போறது. 

நான் உங்கள டிஸ்டர்ப் பண்றதுக்காக உங்கள  ஹுக் பண்ணல. 

Its just a sign of emotional support. 

உங்கள திரும்பி என்னைய ஹுக் பண்ண சொல்லல, ஜஸ்ட் நான் பண்ணத ரிசீவ் பண்ண தான் சொன்னேன். அதுக்கு போய் எப்படி சொல்லிட்டிங்க நீங்க.“ என சண்டையிட்டு சுந்தரம் வீட்டுக்கு வந்து விட்டாள். 

அவள் பேசி சென்றதும் தான் வாசுவிற்கு ஓரளவு எல்லாம் பிடிபட்டது. அவன் ஸ்ரீயை எத்தனை காயப்படுத்தி விட்டான் என தெரிய, ஆண்ட்ரூ அவன் வேறு எங்கும் செல்லவில்லை, வீட்டிலே இருந்தான். திருமணம் ஆடி இத்தனை மாதங்களில் ஸ்ரீ இதுவரை இவனிடம் இப்படி கோபித்து அவள் வீட்டுக்கு சென்றதில்லை.

     இன்று அவள் சென்று ஏதோ இரண்டு மணி நேரம் தான் ஆகிறது, அது கூட அவனுக்கு ஒரு வெறுமை தந்தது. ஸ்ரீ வீட்டில் இருக்கும் பொது அத்தனை உயிர்பாய் தெரியும் வீடு, வாசுவிற்கு அவள் இல்லாமல் உவப்பானதாக இல்லை. 

     நிறைய யோசித்தவன், ஒன்றில் தெளிந்தான். இருவரும் திருமணம் முன்பு பழகிய பொழுது கூட நன்றாக பேசியிருக்க, ஒருவர் பேச்சை இன்னொருவர் முகம் கொடுத்து கேட்டிருக்க, இப்போது இவன் செய்தது என்ன என புரிந்தது. ஸ்ரீ இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்திருக்க, இன்று தானாய் யூகித்து பேச போய், அவள் வெளியே சென்றுவிட்டாள் என புரிய, என்ன செய்வது என யோசித்தவன், அன்று மாலையே சுந்தரம் வீட்டிற்கு கிளம்பிவிட்டான். 

சுந்தரம் வீட்டில் ஸ்ரீ எதுவும் வெளிக்காட்டாமல் மகிழ்ச்சியாகவே வளைய வர, வீட்டில் யாரும் எதுவும் நினைக்கவில்லை. அதுவும் பல மாதங்கள் கழித்து இன்று தான் வந்திருக்க, வீட்டில் அவளும் தேனுவும் ஒரே ஆட்டம் தான். 

      மாலை வாசுவை அங்கே பார்த்ததும், முகம் மாறியவள், மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் அவனை வரவேற்று உபசரிக்க, சுந்தரம் , கார்த்தி, தேனு எல்லாம் அவனை சூழ்ந்து கொண்டனர். இரவு உணவு அங்கே என்று ஆகி விட, சிவகாமி உணவு தயாரிக்க, வீட்டில் ஒரே குதூகலம் தான். ஆனால் உள்ளே கலவரமாய் இருந்தது ஸ்ரீ மட்டும் தான். 

       உணவு முடிந்து எல்லாரும் டி‌வி முன் அமர, வாசு நழுவி ஸ்ரீயின் அறைக்கு சென்றான். ஸ்ரீ கண்களை மூடி படுத்திருக்க, அவன் தொடவும், படார் என எழுந்தவள் அவனை முறைக்க, வாசு பூனை போல் அப்பாவியாய் அவள் முகத்தை பார்த்து ஆமர்ந்திருந்தான்.

“ தயவு செஞ்சு முகத்த இப்படி வச்சிக்காதீங்க…ஒரு நாள் என்னைய இங்க விட முடியாதா….அப்படியே பின்னாடியே வந்தரது. ஒழுங்கா வீட்டுக்கு கிளம்புங்க. “   

“ முடியாது நீயும் வா…” என அடம் பிடித்தான். 

“ எதுக்கு அங்க வந்து இன்னொரு பிரச்சனைய கிளப்பவா ? “

“ அப்படி இல்ல. ஆனா நீ வராம நான் இன்னைக்கு அங்க போக மாட்டேன். “ என்று இன்னும் அடமாய் உட்கார்ந்து கொண்டான். 

“ வர முடியாது. “ என ஸ்ரீ படுத்துக்கொள்ள, 

“ சரி நான் கீழ போய் தேனு கிட்ட நீ என்கூட சண்டனு சொல்லிட்டு கிளம்புறேன். “ என வாசு எழ, 

 “ மாம்ஸ்…” என பல்லை கடித்து கத்தியவள், எழுந்து அமர்ந்து,

“ இப்படி தான் நம்ப சண்டைய வெளி போய் சொல்லுவிங்களா ? “

“ பின்ன வேற என்ன பண்றது…என்னால தனியாலாம் அங்க இருக்க முடியாது. ” அசால்டாய் சொல்ல,

“ என்ன தனியா இருக்க முடியாது. முதல வீட்டுல பாதி நாளு, தோட்டதுல பாதி நாளுனு தான இருந்திங்க இப்போ என்ன வந்தது  ? “ வீம்பாய் கேட்க,

“ ஆமா இருந்தேன்…இப்போ அப்படியெல்லாம் இருக்க முடியாது. அதான் என் கூட தண்ணில பல்டி அடிக்குறேன்னு சொன்ன. “ 

“ நான் எப்போ சொன்னேன். “ கேள்வியாய் ஸ்ரீ நோக்க 

“ கல்யாணத்தப்போ சொன்னல. “ உண்மையை சொன்னான் வாசு. 

அவனை ஏகத்திற்கும் முறைத்தவள், “ ஆமா சொன்னேன், திமிங்கலம் கூட பல்டி அடிச்சு தான் இப்படி அடி வாங்குன பன்னு மாதிரி ஆகிட்டேன். “ 

“ இந்த நேர்ம தான் உன்கிட்ட ரொம்ப பிடிக்கும் ஸ்ரீ, ஒரு ஃப்லோல கூட நீ ஒரு பட்டர் பன்னு ஒத்துக்குற பார்த்தியா. “ என சளைக்காமல் அவளை பார்த்து மொக்கை போட,

“ ஊஃப் என்னால முடில… “ என ஸ்ரீ தலையில் கைவைத்து அமர்ந்துக்கொள்ள, 

வாசுவோ, “ அத்த, மாமா, கார்த்தி, தேனு, ஸ்ரீக்கு தலை வலிக்குது… “ என வேண்டுமென்றே அவளை ஒர கண்ணால் பார்த்துக்கொண்டே கத்தினான். 

அவன் கத்தியது கீழே டி‌வி சத்ததில் கேடக்காவிட்டாலும், எங்க கேட்டுவிடுமோ என பதறிய ஸ்ரீ, 

“ மாம்ஸ் என்ன பண்றிங்க…தேனு வந்து கேட்டா, நான் உங்கள தான் சொல்லுவேன்…அப்புறம் நீங்க தான் திட்டு வாங்குவிங்க. “ என அடக்கிய குரலில் மிரட்ட,      

 “ தெரியுதுல… அப்போ வீட்டுக்கு வா. “ என வரைமுறையே இல்லாமல் அடம் பிடிக்க, 

“ டேய் ஒழுங்கா தப்பிச்சிடு…என்கிட்ட அடி வாங்காத. “ என ஸ்ரீ அவனுக்கு ஒரு வாய்ப்பு தர,

“ அதான் ராங்கி நானும் சொல்றேன்…இங்க நீ அடிச்சா வெளிய சத்தம் கேக்கும்…

இதுவே நம்ப வீடுனா…சும்மா ஜிலு ஜிலுனு நீ அடிக்க….நான் ஓடனு…சிந்தாம சிதரமா அடி விழும்….அதனால ஒழுங்கா வீட்டுக்கு வந்துடு…” என அவள் தந்த வாய்ப்பை மறுக்க, 

‘ அடேய் ‘ என இவனை பார்த்தவள், இவனுடன் பேசி ஒன்றும் ஆகபோவதில்லை என முனகி கொண்டே அவனுடன் கிளம்பினாள்.   

     வாசு வீட்டிற்கு வந்ததும் அவனுடன் இன்னும் சண்டை போடவும் மனமில்லாமல் அப்படியே சென்று அவர்கள் அறைக்குள் தஞ்சம் புகுந்தாள். உள்ளே சென்றவள் தாழ்ப்பாள் போட்டு அவனை உள்ளே வரவிடாமல் செய்துவிட்டு, குளிக்க சென்றுவிட்டாள்.  

வாசு கதவை தட்டி பார்த்தவன், பயனில்லை என தெரிந்து, கீழே இறங்கி விட்டான்   

     ஸ்ரீபத்மா கொஞ்சம் தேறி இரவு விளக்கை அமர்ந்தி மெத்தையில் படுக்க, வாசுவோ வெளியில் இருந்து அவன் அறை பால்கனிக்கு அருகில் செல்லும் பைப்பை பிடித்து உள்ளே குதித்து விட்டான். 

       

                               

         

           

   

Advertisement