Advertisement

         மாம்ஸ்ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் எதிரிங்க…விடிஞ்சிடுச்சுசுசு.” என வாசுவின் காதருகில் வந்து மெலிதாக எழுப்பி கொண்டிருந்தாள் ஸ்ரீபத்மா.

         மையல் அரும்பிட்டு, முகிழ்ந்து, மலர்ந்து இருவரையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி முழுதாய் கொள்ளையிட்டிருந்தது. தித்தித்த பொழுதுககள் இருவர் நெஞ்சிலும் காவியம் எழுத, வார்த்தைகள் போதாமல் தேடி தத்தளித்து  களைத்து களித்திருந்தனர் தலைவனும் தலைவியும்.  

    கண்ணை விழிக்க முடியாமல் விழித்தவன் பார்வையில் விழுந்தாள் ஸ்ரீபத்மா. நன்றாக குளித்து முடித்த தோற்றம். பார்க்க பளிச்சென இருக்க, இவன் அடித்து பிடித்து எழுந்தான். 

“ டைம் என்ன ஆகுது ஸ்ரீ. “ என வாட்ச்சை அவசரமாக தேட,

“ டைம் எட்டு மணி ஆக போகுது மாம்ஸ்.” என பத்மா கூலாக சொல்ல, இவன் அவளை ஏகத்திற்கும் முறைக்க, 

“ ஏன் என்னை எழுப்பி விடல ? “ என பத்மா இழுத்து மடியில் அமர்ந்தினான். 

“ என்ன விடு டா. நா குளிச்சிட்டேன். நீ அழுக்கு பையன். தள்ளி போ. “ என பத்மா இறங்க போக, அவளை இறங்க விடாமல் மடியில் பிடித்து வைத்துக்கொண்டான். 

“ இறங்கு பார்போம். ஆமா நான் அழுக்கு பையன் தான். என்ன இப்போ. இரு உனக்கு என் காய்ச்சல் ஒட்டிக்கிச்சானு செக் பண்ணிட்டு விடுறேன். “என அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து லயித்து சோதித்து பார்த்தான் வாசுதேவன்.

 “ மாம்ஸ் என்ன பண்ற. “ ஹுஸ்கி வாய்ஸ்ஸில் அவள் மெல்ல கேட்க, 

அவளிடம் இருந்து விலகாமல் , “ உனக்கு காய்ச்சல் சரியாவே ஒட்டல. “ என இவனும் ஹுஸ்கி வாய்ஸில் பதில் சொல்ல, 

“ ஒட்டலனா போகுது விடு. முதல போய் ரெடி ஆகு. இன்னைக்கு நிறைய பிளேஸ் போகணும். அப்றோம் ஏன் இவ்ளோ கம்மியா கிஸ் பண்ண “ என இவள் அதே ஹுஸ்கி வாய்ஸ்ஸில் கணக்கு சொல்ல, வேகமாக அவளிடம் இருந்து விலக்கியவன், 

“ ச்ச ச்ச வெட்கமா இல்ல உனக்கு. இதெல்லாம்மா எண்ணி வச்ச. “ என அவன் காண்டாக, 

“ நான் ஏன் வெட்கபடணும், நீ தான தந்த.“ என ஸ்ரீ குறும்பாக சொல்ல, 

“ என்ன நான் மட்டும் பண்ணிட்டேன், நீயும் தான தந்த, அப்போலாம் நான் ஏதாவது கணக்கு வச்சுக்கிட்டேனா. “ என அவன் தரப்பு நியாயத்தை கூற 

“ சரி நீ இனிமே கவுண்ட் பண்ணி வச்சிக்கோ “ என இவள் அடக்கபட்ட புன்னகையுடன் சொல்ல, 

“ இல்ல இல்ல, மறுபிடியும் நான் ஃபர்ஸ்ட் இருந்து நான் கணக்கு வச்சுக்குறேன். “ என அவன் களத்தில் இறங்க, மனையாள் மயங்கி தான் போனாள். 

    இருவரும் பத்து மணியை தாண்டி குளிக்க செல்ல, முதலில் பத்மா தயாராகி கீழே சாமி அறைக்கு வர, வாசு குளித்து முடித்து இடுப்பில் துண்டோடு கீழே வர, யாரோ வெளியே அழைப்பு மணியை அடித்தனர்.

பத்மா உள்ளே இருக்கவும், வாசு அவசரமாக கையில் கிடைத்த லுங்கி போல் ஏதோ ஒன்றை எடுத்து உடுத்தி கொண்டு வாசல் நோக்கி செல்ல, பத்மா சாமி கும்பிட்டு வெளியே வர சரியாக இருந்தது. 

வாசு வாசல் நோக்கி செல்வதை கொஞ்சம் கூர்ந்து கவனித்து பார்த்தவள், அவன் பின்னே ஓடினாள். 

வாசு வேகமாக முன்னே செல்ல, இவள் கையில் கிடைத்த வேட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு அவன் பின்னே ஓடி நேரம் காலம் தெரியாமல் அவனை அனைத்து பிடிக்க, 

“ ஹேய், ஸ்ரீ, விடு விளையாடாத, யாரோ வந்துருக்காங்க. கைய எடு. “ குரல் கிறங்கினாலும் ஸ்ட்ரிக்ட்டாக சொல்ல,

ஸ்ரீ கையை எடுக்காமல், அவனின் லுங்கியை உருவ பார்க்க, 

“ ஏய் ஏய்ய் ஏய் விடு ஸ்ரீ. “ என வாசு இப்போது உண்மையிலே பதற,   

“ லூசு மாம்ஸ் . 

நீ போட்டுருக்கறது என்னோட ராப் அரௌண்ட் ஸ்கர்ட். இப்படி நீ போட்டுட்டு வெளிய போன எல்லாரும் என்ன பார்த்து தான் சிரிப்பாங்க.“ என ஸ்ரீ கண்களை உருட்டி பல்லை கடித்து சொல்ல, அப்போது தான் அவன் அணிந்திருந்த அவளது ஸ்கர்ட்டை பார்த்தவன் அவசரமாக அவளிடம் இருந்த வேட்டியை உடுத்தி அவளது ஸ்கர்ட்டை அவளிடமே தந்தான். 

வாசு அவளை முறைத்து பார்த்து கொண்டு, 

 “ ஸ்கர்ட்னா ஸ்கர்ட் மாதிரி போடணும் இப்படி லுங்கி மாதிரி போட்டா  எனக்கு எப்படி தெரியும். 

இதுல உன்ன பார்த்து சிரிப்பாங்கனு பீலிங்க்ஸ் வேற. என்னை பார்த்து தான் ஊரே சிரிக்கும். “ என திரும்பி பார்த்து அவளிடம் சொல்லிக்கொண்டே கதவை திறக்க முன்னே செல்ல, அப்போது தான் குளித்து வந்ததால் உடலில்  இருந்த நீர் தரையில் சொட்ட, அதனில் காலை வைத்த வாசு தரையில் விழுந்து வார, 

இவளை பேசிய கடுப்பில் நின்றிருந்த ஸ்ரீயின் கண்ணிற்கு இந்த காட்சி விருந்தாக அமைய அப்படி ஒரு சிரிப்பு அவளிடம். 

அவளை பார்த்து அதி தீவிரமாக முறைத்துக்கொண்டே எழுந்தான் வாசு. முழுதாக எழுவதற்குள் மறுமுறையும் வழுக்கி விழ, 

“ ஹா ஹா ஹா மாம்ஸ்….என்ன இப்படி மல்லாக்க விழுந்த கரப்பான் பூச்சி மாதிரி கிடக்க…ஹா ஹா…” என வயிரை பிடித்து கொண்டு ஸ்ரீ சிரிக்க, 

“ ஆணவத்துல சிரிக்காத ராங்கி. வந்து ஒரு துண்ட எடுத்துக்கொடு. “ என வாசு பல்லை கடித்தச் சொல்ல,

ஸ்ரீ ஒரு துண்டை எடுத்து போய் தரையில் போட்டு தண்ணீரை துடைக்க, வாசு எழுந்தவன் அவளை முறைத்துக்கொண்ட முன்னே நடந்து செல்ல, ஸ்ரீக்கு போகவா இருக்கவா என்னும் சிரிப்பு இன்னும் சத்தமாய் வெளிவர அதற்குள் கதவை திறந்திருந்தான் வாசு. 

“ ஆச்சி உங்கள வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டாங்க. “ என சொல்லிவிட்டு ஒரு வாண்டு திண்ணையில் இருந்து குதித்து இறங்கி ஓடி போய் விட்டது. 

   அதை கேட்ட வாசு, ‘ இதுக்க நான் இவ்ளோ விழுந்து வாருனேன் ‘ என சோகமாக நினைக்க, இவன் மைண்ட் வாய்ஸ்சை கணித்த ஸ்ரீ இன்னும் சத்தம் கூட்டி சிரிக்க, வேட்டியை சண்டைக்கு செல்பவன் போல் தூக்கி காட்டிக்கொண்டு ஸ்ரீயை நோக்கி சென்றவன், 

“ இந்தா பாரு ராங்கி, சும்மா வாய் இருக்குனு சிரிக்க கூடாது. அப்புறம் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்லை. “ என எச்சரிக்க,

“ ஹா…ஹா…ஆமா மாமஸ் உன்னோட பின்ன்‌ன்‌ன் விளைவுகளுக்கு நீ பொறுப்பா இல்லாதது தான் காரணம். “ என பாவனையாக ஸ்ரீ அவனை கலாய்க்க, முசுட்டு முகம் ஆனான் வாசு. 

“ ஓகே ஓகே…நான் ஒன்னும் சொல்லல. என்ன தான் இருந்தாலும் நீங்க ஒரு சின்ன பையன் அப்படின்றதால மன்னிச்சு விடுறேன். போய் ரெடி ஆகுங்க பைசன் “ என ஸ்ரீ அவனை பாவம் பார்த்து சொல்லிச் செல்ல, வாசு இருவரும் ஒருவழியாக கிளம்பினர்.

இருவரும் கிளம்பி ஆச்சி வீட்டிற்கு செல்ல, அங்கே உறவினர்கள் ஒருவர் பின் ஒருவாறாக வர, சிவசு தாத்தாவின் வீடு கோலாகலமாக இருந்தது. அங்கே எல்லாம் முடித்து மணமக்கள் மறுவீடு சென்றனர். அன்று அங்கே மணமக்கள் தங்க, நண்பர்கள் இவர்களை ஒரு வழி செய்து விட்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர்.   

     மாலை நேரம் கவிழ, இளம் சிகப்பு நிறம் வென்மேகங்களுக்கு இடையே ஆங்காங்கே வண்ணம் தீட்ட ஆரம்பித்திருந்தது, வீட்டில் சொல்லிவிட்டு இருவரும் வாசுவின் தோப்பு வரை செல்வதாக சொல்லிவிட்டு பைக்கில் கிளம்பினர்.

இருவர் முகத்திலும் சிலு சிலு என காற்று குளுமையாய் தழுவ, இனிமையாய் ஏதேதோ பேசிக்கொண்டே இருவரும் வாசுவின் தோப்பு வீட்டிற்கு வந்தனர். 

இருவரும் உள்ளே நுழைய, வாசுவின் பழைய பொருட்கள் எல்லாம் அப்படியே இருந்தது. உள்ளே ஸ்ரீயை அழைத்து வந்தவன், அங்கே இருந்த சிறிய மின் விளக்கை போட்டான். வாசு கயிற்று கட்டிலில் அமர்ந்து ஸ்ரீயை வாகாக மடியில் அமர்த்தி கொண்டான்.

“ மாம்ஸ் என்ன இங்க கூட்டிட்டு வந்துருக்கிங்க.” என ஸ்ரீ ஆச்சர்யமாய் ஆராய்ச்சியாய் கேட்க,

“ நான் ரொம்ப நாள் நினச்சிட்டு இருந்தேன் ஸ்ரீ. உன்ன இங்க கூட்டிட்டு வரணும்னு. 

இந்த வீடு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். 

நான் எப்படி இருந்தாலும் இந்த இடம் எனக்கு எப்பவும் ஒரு அமைதி கொடுக்கும். 

நான் இந்த வீட்ட பார்துகிட்டத விட இந்த வீடு தான் என் நிம்மதி, ஆறுதல், காதல், சோகம், சந்தோஷம்னு எல்லா நேரமும் என்ன நல்ல பார்த்துகிச்சு.” என வாசு உணர்ந்து சொன்னான்.

   ஸ்ரீ ஒன்றும் பேசவில்லை, வாசுவின் முகம் காட்டும் உணர்வுகளை, எளிதில் சொல்ல இயலா பாவனைகளை, அவன் இதயத்தின் மொழிகளை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தாள். 

“ ஃபர்ஸ்ட் அப்பா என் கூட சரியா பேசாம இருந்தப்போ, ஹோட்டல் நல்லா போணும்னு எதிர்பார்ப்பு இருந்தப்போ,

உன் பிரோபோசல் பத்தி நினசுக்கிட்டு எனக்கும் உன்ன பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டப்போ, அத எனக்குள்ள ஃபீல் பண்ணப்போ, உன்கிட்ட அத சொன்னப்போ,

அப்புறம் என்னய சுத்தி நிறைய பிரச்சனை இருந்தப்போ, அது எல்லாம் முடிஞ்சு அப்பா என்னைய புரிஞ்சுகிட்டும் என்கூட பேச தயங்குனப்போ,

நீ என்னைய விட்டு தூரமா போய் என்கூட பேசாம இருந்தப்போ, இப்படி நிறைய சிட்சுவேஷன்ல நான் ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணேன், 

பட் இங்க வந்துட்டா ரொம்ப ஆறுதலா இருக்கும். 

நான் மட்டும் இங்க இருக்கற மாதிரி இருக்காது, என்னைய சுத்தி எத்தன மரம், செடி, கொடி, பறவைகள்னு எல்லாம் என்கூட பேசுற மாதிரி இருக்கும்.

 உனக்கு புரியுதா ஸ்ரீ. “ என வாசு கண்களில் அவளுக்கு தான் சொல்ல வருவது சரியாக புரிய வேண்டுமே என ஒரு சிறு தவிப்புடன் சொல்லிக்கொண்டிருந்தான். 

அவனின் உள்ள மொழிகள் அனைத்தும் தாளம் தப்பாமல் அதே அலைவரிசையில் ஸ்ரீயின் மனதில் இடம் பிடித்துக் கொண்டிருந்தது. வாசுவின் இடது கையை மெதுவாக பற்றியவள், அவனின் பேசும் விழிகளை ஊடுருவி பார்த்தவள், 

“ எனக்கு புரியுது மாம்ஸ். நீ இவ்ளோ சொல்லணும்னு இல்ல. உனக்கு இந்த இடம் எவ்ளோ ஸ்பெஷல்னு புரியுது. “ 

என உள்ளர்ந்து ஸ்ரீ சொல்ல, அவளின் நெற்றியை முட்டிய வாசு, அப்படியே இமைகளை மூட, அந்த கணங்கள் அப்படியே ஸ்ரீயின் இதயத்தில் இனிமையாய் உறைந்து போனது. ஸ்ரீபத்மாவின் இமைகளும் மூட, இருவருக்குள்ளும் ஒரு ஏகாந்த அமைதி. 

      

Advertisement