Advertisement

                 வாசுவின் திருமண மண்டபம் முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்தது. கல்யாண அலங்காரங்கள் மண்டபத்தை பார்க்கும் இடமெல்லாம்  வண்ணமயமாக்கியிருக்க, பூக்கள் மனமும், சந்தன மனமும் மணம் பரப்ப, வாசுவும் ஸ்ரீபத்மாவும் மேடையில் கல்யாண கோலத்தில் நின்றிருந்தனர். 

         காலையில் அவர்கள் ஊரின் கோயிலில் திருமணம் முடிந்திருக்க, இப்போது முன் மதிய வேளையில் திருமண வரவேற்பு களைக்கட்டியிருந்தது. சுந்தரி ஆச்சிக்கு சிறகு மட்டும் தான் இல்லை, அப்படி பறந்து கொண்டிருந்தார். அவரை கையிலே பிடிக்க முடியவில்லை, சொந்தகளை வரவேற்பது, கல்யாண விருந்து கவனிப்பது என முகம் முழுக்க சிரிப்புடன்  சுற்றிக்கொண்டிருந்தார். 

         சிவசு தாத்தா வெண் பட்டு சட்டை வேட்டியில் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். முகத்தில் அத்தனை பூரிப்பு. சுந்தரம், சிவகாமி, கார்த்தி, தேனு, கோதண்டம், சீதாலக்ஷ்மி, கிருபா, மணி, ஸ்ரீதர் என எல்லோரும் உட்கார கூட நேரமில்லாமல் பிசியாக இருந்தனர். காட்சில்லா கேங்கில் பாதி மக்கள் மனமேடையில் மணமக்களுடன் துணை நிற்க, மீதி பேர் ரிசப்ஷன் இருக்கைகளில் அமர்ந்து சிரிப்பும், கலாய்ப்புமாக செல்ஃபி சுட்டுக்கொண்டிருந்தனர். 

    வாசுவும் ஸ்ரீபத்மாவும் மேடையில் வரவேற்பில் திண்டாடிக்கொண்டிருந்தனர். வாசுவின் சொந்தங்கள் ஆரம்பித்து கடைகளில் பணிபுரியும் நபர்கள் வரை அனைவரும் குடும்பமாய் வந்திருந்தனர். வாழ்த்துகள் ஒரு பக்கம் குவிய, பரிசுகளும் நிரம்பி கொண்டிருந்தது. பரிசுகள் மணமக்கள் கையிலிருந்து பின்னால் நிற்கும் சத்யா, சந்தியா, ராகவ், விமல் என கைமாறி மணமகன் அறைக்கு சென்றுகொண்டிருந்தது. 

   இரண்டு மணி நேரம் கழித்து ஒருவாறு கூட்டம் கட்டுக்குள் வர, அப்போது தான் பெண்ணும் மாப்பிள்ளையும் அலங்கார மேடையில் அமர நேரம் கிடைத்தது. 

“ மாம்ஸ் “ மெதுவாக யாருக்கும் தெரியாமல் பிறாண்டினாள் ஸ்ரீ. 

அப்போது தான் அசுவாசமாக அமர்ந்திருந்த வாசு அவளை திரும்பி பார்க்க, 

“ You look sooo hot ” என சிரிப்புடன் சொல்ல, 

“ ஆமா ஸ்ரீ ஏ‌சி போட்டு கூட வேர்க்குது. “ என புரியாமல் உளறினான் அழகிய வெண் பட்டு சட்டை வேட்டியில் இருந்த வாசு.

“ டேய் நான் என்ன சொல்றேன், நீ என்ன சொல்ற. “ அடக்கப்பட்ட குரலில் ஸ்ரீ கேட்டாள். புருவம் சுருக்கி யோசித்தவன் புரிந்ததும், கண்களை விரித்து ஆச்சர்யம் காட்டியவன், அவன் கன்னங்கள் மினுமினுப்பாக மாற முகத்தை வேறு புறம் புன்னகையுடன் திருப்பிக்கொண்டான்.

“ ஹேலோ மாம்ஸ். “ மெதுவாக அழைத்தாள்.

“ என்ன டி. “ உள்ளே போன குரலில் பின்னந்தலையை கோதியவாரே வாசு இவளை திரும்பி பார்த்து கேட்க, 

“ என்ன வெக்கமா. “ என ரகசியம் பேசினாள்.

“ அதெல்லாம் இல்லை. “ மிடுக்காக சட்டையை நீவியபடி சொன்னான் . 

“ இல்லையே. உங்க கன்னம் எல்லாம் பளிச் பளிச்னு இருக்கு. “ என குறும்பு புன்னகையுடன் ஸ்ரீ சொல்ல, 

“ அது உன் கிட்ட கடன் வாங்கலாம்னு இருக்கேன். அதான் கன்னம் பளிச் பண்ணி வச்சிருக்கேன். “ புன்னகையுடன் வாசு.

“ என்ன கடன் ? “ புரியாமல் கேட்டாள்.

“ என் கன்னதுல ஒன்னு, நெத்தில ஒன்னு, அப்புறம் கண்ணுல ஒன்னு கடனா தா. நீ கொடுத்ததும் வட்டி முதல் எல்லாம் சேர்த்து தந்துறேன். “ என கண்கள் மின்ன டீல் பேசினான் திருட்டு பூனை. 

“ ஒஹ் நீங்க அப்படி வரிங்களா. “ என ஒற்றை புருவத்தை தூக்கி மெலிதாக ராகம் படியவள், 

“ ம்‌ம்‌ம் ஓகே . எனக்கு கன்னதுல, நெத்தில, கண்ணுலனு தனி தனியாலாம் கொடுக்க முடியாது ஸ்ட்ரைட்டா லிப்ஸ்ல தான். “ ஒரு கண்ணை மூடி திறந்து குறும்பு பார்வையுடன் ஸ்ரீ சொல்ல, 

“ அடி பாவி, என்ன என் கிட்ட இப்படி தப்பு தப்பா பேசுற. ச்ச உன்கிட்ட இப்படி சிக்கிக்கிட்டேன்னே. “ என கலவரமாய் பதில் சொன்னான். 

“ ஓஹ் நான் தப்பா பேசுறேனா. அப்போ நீங்க கேட்டது என்ன. 

நீங்க பிரிச்சு பிரிச்சு கேட்டத, நான் ஒன்னா கொடுக்குறேன்னு சொன்னேன். அதுல என்ன தப்பு இருக்கு. “ இயல்பாய் பதில் சொன்னாள் ஸ்ரீ.

“ ஒரு வரமுறை வேணாம். இப்படியா ஃப்ளைட்ட ரன்வேல ஓட்டமா ஸ்ட்ரைட்டா டேக் ஆஃப் பண்ணுவ.“ நியாயம் பேசினான் வாசு.

“ மாம்ஸ் என்னோட ஐஞ்சு விரல மடக்கி, அதுல சூடு தேய்க்க இன்னொரு கையாள தேச்சு உன் லிப்ஸ்ல மட்டும் பன்ச் பண்ணலாம்னு நினச்சேன், அதுக்கு ரன் வே எதுக்கு ஸ்டார்ட் பண்ணணும் ஸ்ட்ரைட் அட்டாக் தான நல்லா இருக்கும். “ கை அசைவுடன் சீரியஸாக விவரித்துக்கொண்டிருந்தாள். 

“ பரவால நீ அட்டாக் பண்ணு, நான் என் ஸ்டைல்ல கவுண்ட்டர் அட்டாக் பண்ணிக்கிறேன். “ என வாசு கண்களில் குறும்புடன் சொல்ல, விழிவிரித்து பார்த்தாள் ஸ்ரீ. 

“ மாம்ஸ் நீங்க எப்போ இருந்து காம்ப்ளான் சாப்பிட ஆரம்பிசிங்க, இப்படி கல்யாணம் ஆனதும் இப்படி டக்குனு வளர்ந்துடிங்க, பேச்செல்லாம் தினுசா வருது. “

“ ஹா ஹா…உன் மாமஸ் எப்போவுமே அப்படி தான், என்ன ஃபர்ஸ்ட் வீட்டுக்கும் நாட்டுக்கும் பார்த்து உன்கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டய்ன் பண்ணேன், இப்போ அப்படியா, அதெல்லாம் நாங்களும் ரொமான்ஸ் பண்ணுவோம்ல. “ என எக்காளமிட்டான்.

“ ஹா…ஹா… ரொமான்ஸ்…நீங்க…ஹா…ஹா…” இவள் சுற்றம் மறந்து சிரிக்க, அதை பார்த்து பல்லை கடித்தவன், 

“ ஹேய் நிறுத்து ஸ்ரீ. பாரு எல்லோரும் நம்பளயே பாக்குறாங்க. “ என கண்டிக்க,

“ ஹான் இப்போ தான் பழய ஃபார்ம்க்கு நீங்க வந்த மாதிரி இருக்கு..ஹா…ஹா.”

“ ஹேய் என்ன அப்படி உனக்கு ஒரு ஆணவச் சிரிப்பு.

 ஊருக்குள்ள கேட்டு பாரு, நான்லாம் மொரட்டு பையன். “ என கெத்தாக வாசு கொக்கரிக்க,

“ஹா…ஹா…மொரட்டு பையனா…சோ சாரி மாம்ஸ்…நான் உங்கள கிறுக்கு   பயனு நினச்சிட்டேன். “ 

“ வாய் டி வாய் உனக்கு. ஏதோ பாவமே ஒரு பொண்ணு நம்ப மேல ஆச வச்சு ப்ரபோஸ் பண்ணுசேன்னு கல்யாணம் பண்ணுனா, ரொம்ப தான் பண்ற நீ. “

“ ஓஹ் நான் மட்டும் தான் ப்ரபோஸ் பண்ணேன்னா, நீங்க ஹெல்மெட் எல்லாம் போட்டு பஸ்ல என் பின்னாடி வந்த மாதிரி இருந்துச்சு. பாக்குற இடம் எல்லாம் புடிச்சு வச்சு ப்ரபோஸ் பண்ணிங்க. ஏதோ நீங்க என் பின்னாடி வந்து கெஞ்சுனதால கல்யாணத்துக்கு ஓகே சொன்னா. ரொம்ப தான் பேசுறிங்க ”.

ஸ்ரீயின் அருகே மெல்ல இன்னும் சாய்தவன், ரகசியம் பேசும் குரலில், 

“ அதாவது ஸ்ரீ, 

பட்சி வலைல சிக்குற வரைக்கும் தான் கெஞ்சல்ஸ் எல்லாம், ஒன்ஸ் சிக்கிடுச்சுனு வச்கிக்கோ அப்படியே புடிச்சு பிரியாணி போட்டுடணும். “ என பாவனையாக சொல்ல,  

“ எனக்கும் தெரியும் டா, அப்பவே தெரியும் நீ ஒரு ஃப்ராட் பையன், நான் உனக்கு பட்சியா, நீ என்ன என்னைய பிரியாணி போடுறது, நான் உன்ன பஞ்சு பஞ்சா பிச்சு ஃப்ரை பண்றேன். “ என சிலிர்த்தெழுந்தாள். 

“ ஹா…ஹா…என்ன ஸ்ரீ நீயும் ஃப்ரை அது இதுனு ஆரம்பிசுட்ட. “ நக்கல் பண்ணினான் ஸ்ரீயின் கிறுக்கு பையன். 

“ எல்லாம் உன் கூட பழகுன தோஷம். திமிங்கலத்துக்கு வாக்கபட்டா தண்ணிக்குள்ள பல்டி அடிச்சு தான ஆகணும் டா ஹோட்டல் கடக்காரா.” என கண்ணை துடைப்பது போல் செய்ய, அவள் கண்களின் மை லேசாக நழுங்கியது.

 “ உங்க கிட்ட கர்சீப் இருக்கா. என் ஐ மேக் அப் கலஞ்ச மாதிரி இருக்கு. “ என இப்போது முன்னே இருந்த மக்களை பார்த்துக்கொண்டே ஸ்ரீ கேட்டாள். 

அவள் திடும் என மரியாதைக்கு மாறியதால் அதிசயத்தவன், காலையில் இருந்த பரபரப்பில் அவளை கண்களில் நிரப்பினாலும், அவளை நன்றாக ரசிக்க முடியாமல், இப்போது தான் ஆரா அமர பார்த்தான் வாசு.  

    அடர் சிகப்பு பட்டில் தங்க பூக்கள் நிறைந்திருக்க, மணம் பரப்பு மணமகள் அலங்காரத்தில் அவன் அருகில் முகத்தில் பூரிப்பாய் அமர்ந்திருந்தாள். அதை பார்த்தவனுக்கு உள்ளே ஒரு ரம்மியமான உணர்வு பூ பூத்தது. அது கொடுத்த வாசனை மனதிற்கு இதம் பரப்ப புன்னகையுடன் அவள் அருகில் மெல்ல சாய்ந்து,  

“ கர்சீப் இருக்கு ஆனா தரமாட்டேன். “ என இப்போது இவன் ரகசியம் பேசினான்.

“ ஏன் மாம்ஸ் “ அவனை லேசாக முறைத்தாள்.

“ நீ அழகா இருக்க ஸ்ரீ. நீ எதுவும் கரெக்ஷன் பண்ண வேண்டாம். “ 

அவன் உள்ளே போன குரலில் சொல்ல, மென் புன்னகையுடன் அவனது புறம் இருந்து முன்னே அமர்ந்திருந்த மக்களை பார்த்தவாரு நேராக திரும்பியவள், வேறெங்கெங்கோ பார்த்து புன்னகையை இழுத்து பிடித்தவள், பின் திரும்பி அவன் கண்களை பார்க்க, அவன் இத்தனை நேரமும் அசையாமல் உதட்டில் அழுத்தமான புன்னகையுடன் அவளது செக்கையை தான் பார்த்திருந்தான். 

அவனது பார்வையை கண்டு ‘ என்ன இப்படி பார்வை ‘ என்பது போல் விழிவிரித்து லேசான புன்னகையுடன் கண்களால் கூட்டத்தை காட்டி அவனை விழியால் மிரட்ட, அவன் அசரவே இல்லை. பார்வையை மாற்றிக்கொள்ளவும் இல்லை. 

“ என்ன அதுக்குள்ள வெக்கமெல்லாமல் போயிடுச்சா ? “ மெதுவாக ஸ்ரீ சந்தேமாக கேட்க, 

“ எனக்கு இருக்கோ இல்லையோ, உனக்கு வந்த மாதிரி இருக்கு. “ என அவளது எக்ஸ்பிரஷனனை ரசித்தவாரே சொன்னான் வாசு. 

காட்சில்லா கேங் கீழே அமர்ந்த அஜய் கண்களில் இது பட, நண்பர்கள் எல்லோரிடமும் அவர்கள் செக்கையை பார்க்க சொல்ல, எல்லோரும் மணமக்கள் செக்கையை கூர்ந்து கவனித்தவர்கள் மணமக்களை நோக்கி ஒரே நேரத்தில் கை தட்ட, கல்யாணம் மண்டபத்தில் பாதி மக்கள் மணமக்கள் பக்கம் திரும்புவதும் அவர்களுக்குள் ஏதோ பேசி சிரிப்பதும் தெரிய, கழுத்தில் நகைகளை அட்ஜஸ்ட் செய்ய, மாலையை அட்ஜஸ்ட் செய்ய என ஏதேதோ செய்து பார்த்தாள், வாசு அவள் முகத்தை விட்டு பார்வையை திருப்பவே இல்லை. அழுத்தமான புன்னகையாக குறும்பு பார்வையுடனும் அவளை இன்னும் உத்து உத்து பார்த்து வைக்க, ஸ்ரீபத்மா விழிகள் அவனிடம் சிக்கிக்கொண்டது. 

“ பிளீஸ் டா மாமஸ். இங்க வச்சு மானத்த வாங்காத. கர்சீப் கொடு. “ கண்கள் சுருக்கி அவள் கெஞ்ச, அவன் மேலும் சொக்கி போனான். அவள் சொன்னதை செய்து முடிததும் சீதா மேடைக்கு வந்து இருவரையும் சாப்பிட்ட அழைக்க, இருவரும் விருந்துக்கு சென்றனர். மூப்பத்தி ஆறு வகைகளுடன் விருந்து. அவன் நினைத்திருந்தால் இன்னும் கூட பெரிய அளவில் செய்திருக்கலாம், ஆனால் உணவு வீணடிப்பது அவனுக்கு பிடிக்காது. நேர்தெடுத்து எல்லாம் ஏற்பாடு செய்திருந்தான். 

மணமக்கள் இருவரும் உண்ண ஆரம்பிக்க, ராகவ் பூரியுடன் வந்தான், 

“ மச்சான் இது யாருக்கு யார் ஊட்டுறதுனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.“ அவன் சொன்னனோ இல்லையோ ஸ்ரீ வாங்கி வாசுவிற்கு கொடுக்காமல் அவளே உண்ண ஆரம்பித்துவிட்டாள். சுற்றி நின்றிருந்த புகைப்பட கலைஞர், காட்சில்லா கேங் எல்லோரும் சிரிக்க, 

“ ஏய் ஏய் அப்படியே முழுங்காத ஸ்ரீ, எனக்கும் கொஞ்சம் மிச்சம் வை. “ வாசு அவசரமாக சொன்னான். பிறகு பாவம் பார்த்து அவனுக்கு கொஞ்சம் கொடுக்க, அங்கே ஒரே சிரிப்பு ஆலை. பிறகு மணமக்கள் மெதுவாக ரசித்து உண்ண நேரம் மிக அழகாய் நகர்ந்துகொண்டிருந்தது. 

     வரவேற்பு முடிந்து எல்லோரும் தாத்தா வீட்டுக்கு வர, அங்கே ஸ்ரீ விளக்கேற்றவும், பின்பு அங்கே மாலைவரை இருந்து விட்டு வாசுவின் வீட்டிற்கு சென்றனர். வாசு, ஸ்ரீ, இருவரின் நண்பர்களும் வாசு வீட்டிற்கு வந்து அவர்களை மேலும் பாடாய் படுத்தியவர்கள், இரவிற்கு தங்கிக்கொள்ள சிவசு தாத்தா வீட்டிற்கும், கார்த்தி வீட்டிற்கும் சென்று விட்டனர். 

    வாசு வீட்டில் இருவர் மட்டும் இருக்க, அலங்கரிக்கபட்ட வாசுவின் அறைக்கு ஸ்ரீ வர, வாசு பால்கனி ஊஞ்சலில் அமர்ந்திருந்தான் 

ஸ்ரீ வருவதை திரும்பி ‌பார்த்தவன், 

“ வா வா ஆசீர்வாதம் வாங்க வந்தியா. கைல பால் சொம்பு எல்லாம் இருக்கா. வந்து காலுல விழு வா “ என புன்னகையுடன் ரெடி ஆக சட்டை கையை மடித்துக்கொண்டு எழுந்து நிற்க,

“ ஓஹ் உங்களுக்கு அப்படியெல்லாம் வேற எக்ஷ்பெக்டேஷன் இருக்கா. இதோ வரேன். “ என பாலை ஒரே மடக்கில் காலி செய்தவள், அவனை நோக்கி புன்னகையுடன் நகர்ந்தவள், 

‘ ஏன் இப்படி சிரிக்கிறா. என்ன செய்யபோறா. ‘ என இவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவன் அருகில் வந்து அவனது காலை பிடித்துக்கொண்டு, 

“ மாமா என்னைய அஸ்சீர்வாதம் பண்ணுங்க மாமா, பண்ணுங்க மாமா. “ என சொல்லிக்கொண்டே அவனை காலில் ஆங்காங்கே கிள்ளி கிள்ளி வைக்க, 

“ அய்யோ அம்மா ஏய் வலிக்குது ஸ்ரீ. “ என அவன் காலை தூக்கி கொண்டு அப்படி இப்படி தவ்வியவாரே மெல்ல அலற, 

அவனை பார்த்துக்கொண்டே எழுந்தவள், தலையை சிலுப்பிக்கொண்டு, “ ஏதோ பாவமே விடுறேன். “ என சொல்லியவள் ஊஞ்சலில் அசால்டாய் அமர்ந்தாள்.

“ பொண்ண கட்டிக்கொடுக்க சொன்னா, காட்டு பூனைய கட்டிக்கொடுத்துருக்காங்க.” இவன் காலை தடவிவிட்டுக்கொண்டே கடுப்பாக சொன்னான். 

“ காட்டெறுமாக்கெல்லாம் காட்டு பூனைய கட்டிகொடுத்தா தப்பில்லை.” என சொல்லிக்கொண்டே ஊஞ்சலில் அமர்ந்தாள்.

அவள் எதிரில் சுவற்றில் ஏறி அமர்ந்தவன், அவளை சில நிமிடங்கள் அசையாமல் பார்த்துக்கொண்டே இருக்க, ஸ்ரீ ‘ என்ன’ என்பது போல் புருவத்தை தூக்கி கேட்க,  

“ இன்னைக்கு நீ எடுத்த எடிட் பண்ண செல்ஃபிஸ் சூப்பர்ரா இருந்துச்சு ஸ்ரீ.” என ரசனையாக சொல்ல,

ஸ்ரீபத்மாவின் முகம் உற்சாகதில் மின்ன, 

“ நெஜமா வா ” ஆர்வமாக கேட்டாள். 

“ ஆமா ஸ்ரீ, அதுவும் இந்த போஸ் இருக்குல்ல, இது நல்ல இருந்துச்சு.” என சொல்லிக்கொண்டே அவள் அருகில் வந்து உட்கார்ந்து தோளில் கை போட, இருவரும் சேர்ந்து வானத்தை பார்த்தனர்.            

        முதல் முறை அவன் இயல்பான அனைப்புக்குள் அவள் அமர்ந்திருக்கிறாள், ஸ்ரீபத்மாவிற்கும் வாசுவிற்கும் அது ஒரு நிறைவை தந்திருந்தது. எத்தனை போராட்டம் இப்படி ஒரு உறவு இருவருக்கும்  அமைய என அந்த நிமிடங்களை ஒன்றாக சுவாசித்தனர். மெல்ல மெல்ல அவன் நெஞ்சில் இதமாய் சாய்ந்தவள், அப்படியே வானத்தை பார்க்க, 

“ மாம்ஸ் ஸ்டார்ஸ் நல்லா இருக்கு இல்ல. ”

அவன் பதில் சொல்லாமல் அவள் தலையின் மேல் முகத்தை வைத்தவரே  ஆமாம் என அசைக்க, அவன் ஊஞ்சலை கால்களால் நிலத்தில் வைத்து  பின்னால் தள்ளி ஆட்டினான். 

காற்றில் பூவின் வாசமும், சுவாசத்தில் குளிர் காற்று உள்ளே புக அந்த ஆனந்தமாய் உள்ளே ஒரு உணர்வு ஜில்லென இறங்கியது பத்மாவினுள்.

“ மாம்ஸ் காத்து ஜில்லுனு இருக்குல. “ என அவள் அவன் மேல் சாய்ந்தவரே நிமிர்ந்து பார்க்க, அவன் அவளை பார்க்காமல், அவளை அப்படியே தூக்கி மடியில் வைத்துக்கொண்டான். அவளின் கழுத்தில் தாடையை வைத்து வானத்தை நோக்கியவன், இல்லை என்பது போல் தலையாட்டினான். 

“ ஹா…ஹா…மாம்ஸ் கழுதுல கிச்சு கிச்சு பண்ணாத.” 

“ ஏய் ஸ்ரீ நான் எங்க கிச்சு கிட்சு பண்ணேன். சும்மா இப்படி இப்படி பண்ணேன். “ என அதே போல் உல்லாச புன்னகையுடன் செய்து காட்ட,

“ ஹா…ஹா…அப்படி தான் பண்ணாதனு சொன்னேன். அப்புறம் நானும் பண்ணுவேன்.” அவள் இயல்பு பேச்சின் விளைவாய் வார்த்தைகள் வெளிவந்தது. 

“ எங்க நீயும் பண்ணு. நான் பாக்குறேன். “ 

என அவள் கழுத்தில் பின்னால் இருந்து இன்னும் குனித்து முகம் புதைத்தவன் அவள் வாசனையை ஆழமாக உள்ளிழுக்க, அவள் இதை எதிர்பார்க்காமல் அனிச்சையாய் அவனிடமிருந்து எழுந்து விலகி முன்னே சென்று கம்பிகளை பிடித்துக்கொண்டாள். அவன் அவளது செய்கையை எதிர்பார்க்கவில்லை போலும், ஏதோ ஐஸ் கிரீம் தவறவிட்ட குழந்தையாய் அவன் நின்றான். பின்பு சுதரித்தவன், “ உஃப் “ என பின்னந்தலையை கோதி தன்னை நிலைபடுத்தியவன், அவள் அருகில் மெதுவாய் எழுந்து செல்ல, அவள் நிமிரவே இல்லை, கம்பிகளில் இருந்த பெயிண்ட்டை விரலால் வருடிக்கொண்டிருந்தாள்.

“ ஸ்ரீ போதும் கம்பில இருக்க பெயிண்ட்டா ஃபுல்லா பிச்சுடாத.” இவன் அவள் கதருக்கில் ரகசியம் பேசினான்.  

அவனை முறைக்க இவள் திரும்ப, அந்த நொடி ஒரு இன்ச் கூட இடைவெளி இல்லாமல் இருக்க, இருவருக்கும் மூச்சடைத்தது. அவள் இமைகளில் ஒரு பட்டாம்பூச்சி எஃபெக்ட். வாசுவின் கண்கள் வழி புகுந்த அந்த நொடிகள் அவனுள் ஆழமாய் இறங்க, 

“ கள்ளூர பார்க்கும் பார்வை 

உள்ளூர பாயுமே 

துள்ளாமல் துள்ளும் உள்ளம் 

சல்லாபமே 

வில்லோடு அம்பு ரெண்டு

கொல்லாமல் கொல்லுதே…”        

 என வாசு அவளது நெற்றியை முட்டி மையல் வழிய பாட, ஸ்ரீ விழிகள் அலையலையாய் அவனின் மீதான ரசனைகள் கூடி போய் பார்த்தாள். 

      அங்கே ஐஸ் கட்டி மழை போல் காற்று இருவரையும் தாக்க, ஸ்ரீயின் கெண்டை மீன் விழிகளின் மேல் வாசு முத்தம் வைக்க, அவள் விழிகள் இரண்டும் அழுத்தமாய் மூடிக்கொண்டது.

அவர்களின் முதல் முத்தம். 

மென்மையாய் மிக மிக மென்மையாய் இருவருக்குள்ளும் அந்த முத்தம் பூத்தது. 

ஸ்ரீயின் கண்மணிகள் இரண்டும் கண்கணுக்குள் அங்கும் இங்கும் ஆட்டம் காட்ட, வாசுவிற்கு அத்தனை அருகில் அதை பார்க்க சுவாரசியமாய் இருந்தது. 

ஸ்ரீ மெல்ல விழிதிறக்க, இவன் கண்கள் மூடி அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான். தேனூறும் முத்தம். 

“ மாம்ஸ் நீ ரொம்ப…ரொம்ப ஹாட்டா இருக்க, நீ கிஸ் பண்ணா ஹாட்டா இருக்கு. “ என அவனது முத்ததிற்கு பதில் சொல்லாமல் மறுமுறையும் கண்களை மூடிக்கொண்டவள், விழி திறக்காமல் அவனது டெம்பரேச்சரை பற்றி ஆராய்ச்சியில் இறங்கினாள்.  

   வாசு அப்படியே ஸ்ரீபத்மாவை இருகைகளிலும் ஏந்தினான். அவள் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள கண்களை திறந்து பார்க்க, குறு குறு  பார்வையுடன் நின்றிருந்தவன்,   

“ எனக்கு ஜில்லுனு எல்லாம் இல்லை ஸ்ரீ. 

எனக்கு ரொம்ப காய்ச்சல், 

அந்த காய்ச்சல் உனக்கு சீக்கிரம் ஒட்டிக்கும் பாரு. “ 

என உற்சாகமாக சொல்லி அவளை கைகளில் அள்ளியபடியே அறையின் உள்ளே நுழைந்தான் ஸ்ரீயின் வாசுதேவன்.   

              

         

Advertisement