Advertisement

        பறவைகளின் சத்தம் வாசுவையும் பத்மாவையும் அவர்கள் உலகில் இருந்து தட்டி எழுப்ப, பத்மா அவனையே விடாது பார்த்து அமர்ந்திருந்திருந்தவள், சிறிது நிமிடங்கள் மறுபுறம் திரும்பி நீரை சலசலத்துக்கொண்டிருந்த செந்நாரைகள், வெண் கழுத்து நாரைகள், சாம்பல் நாரைகள், வரித்தலை வாத்துகள் என பார்த்தவள் அவன் புறம் திரும்பி, 
“ இப்போ நீங்க சொன்னதெல்லாம் கேட்டு உங்கள கட்டிபிடிச்சு உங்க மேல சாஞ்சுக்கணும்னு தோணுது…” என மெல்ல நிறுத்தியவள்,
“ ஆனா என்னால முடில. “ மெதுவாக முடித்தாள். 
இவனுக்கு அதிர்ச்சி தான். இவன் இத்தனை சொல்லியும் என்னாயிற்று என்ற எண்ணம். அவளை அதிர்ச்சி விலகாமல் பார்த்திருந்தான்.    
“ ஏன் இப்போ இவ்ளோ சொல்றிங்களே.
 அப்போ நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு இப்படி ஒரு ப்ராப்ளம் வந்தா. என்னைய மறுபிடியும் தள்ளி வச்சிடுவிங்களா.“ அவனை நேராக தாக்கினாள். 
“ அறிவில்ல உனக்கு. இவ்ளோ சொல்றேன் இப்படி கேக்குற. அதுவும் இதுவும் ஒன்னா ? “ கோபமாய் அவன் வினவ, 
“  என்னைய புரிஞ்சிக்கிட்ட அப்பா இருந்ததால நான் உங்க முன்னாடி இப்படி உட்கார்ந்துருக்கேன். இதுவே அவருக்கு புரியம இருந்து எனக்கு வேற மேரேஜ் பண்ணியிருந்தா என்ன பண்ணிருப்பிங்க. “
“ _______”
“ ஆபரேஷன் சக்ஸஸ் ஆனா பேசண்ட் டெட்னு சொல்ற மாதிரி ஆயிருக்கும்.”
“_________”
“ உங்களுக்கு இவ்ளோ ப்ராப்ளம் இருந்தா, என்கிட்ட அன்னைக்கு ஹோட்டல்ல பார்த்தப்போவே இது மாதிரி ஒரு விஷயம்னு என்கிட்ட சொல்லியிருக்கலாம். 
நான் டெய்லி கடன் கொடுக்கற எடுத்துல ஒர்க் பண்றேன், பேங்க் மட்டும் தான் கடன் கொடுக்குதுனு இல்லை, தர்ட் பார்ட்டி எப்படிலாம் கடன் கொடுப்பாங்கனு எங்களுக்கும் ஏதாவது நியூஸ் வரும். அது எப்படி ஹாண்டில் பண்ணலாம்னு நான் உங்களுக்கு ஒப்பினியன் சொல்லிருப்பேன். 
ஆனா அப்போ அந்த ப்ராப்ளம்ம சின்னதா நினைச்சிடிங்க. 
அதான் என்கிட்ட அது ஒரு பஞ்சாயத்துனு ஈசியா சொல்லிட்டிங்க. 
சும்மா என்கிட்ட ஒரு வார்த்தை ஷேர் பண்ணிருந்தா. நிச்சயமா. நான் அதோட டெப்த் பத்தி உங்களுக்கு சொல்லிருப்பேன். நானும் புரிஞ்சிருந்துருப்பேன். 
அப்பாகிட்ட பாதி சொல்லி மீதி சொல்ல முடியாம, உங்கள காண்டாக்ட் பண்ண முடியாம, நான் என்ன அப்பா கிட்ட சொல்ல முடியும் ? “
“_______”
அவளது பேச்சு அவனுக்கு முற்றிலுமாக புரிந்தது. பின்னே எல்லா அப்பாவும் மகள் ஒருவருடன் காதல் ஆனால் இப்போது பிரச்சனை என்று வந்து சொன்னாள் சுந்தரம் போல் நடந்துகொள்வார்கள் என சொல்லமுடியாதே. இவன் தைரியமாய் பத்மாவை விலகி வைத்தற்கு அவரும் ஒரு காரணம். 
ஆம் இவனுக்கு தெரியும் பத்மாவை காயபடுத்துவதோ கட்டாயபடுத்துவதோ சுந்தரம் செய்யமாட்டார். மகளின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பவர் என்பதாலே இவனால் துணிந்து அவளை விலகி வைக்க முடிந்தது.
“ நான் ஃபர்ஸ்ட் உங்க கிட்ட ப்ரபோஸ் பண்ணப்போ என்ன நினைச்சேன் தெரியுமா. 
நான் வீட்ல சொன்னாலே எல்லாரும் நமக்கு மேரேஜ் பண்ணிவைப்பாங்க, பட் எனக்கு உங்க கன்செண்ட் வேணும்னு நினச்சேன். அதுக்காக நான் வைட் பண்ணேன்.“
“ அதே தான் ஸ்ரீ நான் இங்கயும் பண்ணேன். நீ கல்யாணம் முடிஞ்சு அங்க வரப்போ நான் நல்ல நிலைமைல இருக்கணும்னு நினச்சேன். அதான் டைம் கேட்டேன். “
     இது தான் அவர்களுக்குள் இருந்த வெவ்வேறு கோணங்கள். பத்மா, வாசுவை விரும்புவதற்கு முன் தன்னை சுற்றி எல்லோரையும் பற்றி யோசித்து, இருவரின் குடும்பம் பாதிக்க பட கூடாது என பார்த்து பார்த்து உறுதியாக தன் விருப்பத்தை வெளியிட்டாள். 
ஆனால் வாசுவிற்கு இரண்டு குடும்பங்களை பற்றி தெரியுமாயினும் திருமண பிறகான அவர்களின் வாழ்க்கையை தான் யோசித்திருந்தான். அவனின் பிரதான விஷயமே ஸ்ரீபத்மாவின் நிலை. தன்னை திருமண முடித்து அவள் நிலை இறங்கிவிட கூடாது, அவள் தன்னை போல் பேச்சு வாங்க கூடாது என அவளை மட்டும் மையம் கொண்டிருந்தது. 
“ அதெல்லாம் சரி மாமா. 
ஆனா அப்போவே உங்களுக்கு என்னைய மேரேஜ் பண்ணறதுக்கு ஓகே தான், ஆனா அத வீட்ல சொல்லிருந்தா எனக்கு வேற வரன் பார்த்துருக்க மாட்டாங்க தான. .”
“______”
   வாசுவிற்கு குடும்பத்திற்கு வெளியில் இருந்து அழுத்தம் என்றால், அவளுக்கு உறவுகள் மத்தியில் திருமண அழுத்தம். சுந்தரம் புரிந்து கொண்டதால் ஆயிற்று இல்லை என்றால் இவள் வீட்டில் என்ன சொல்லிருக்க முடியும். 
வாசுவாது வீட்டில் இருந்து வெளியேறிவிட்டான் அதனால் அவனுக்கு அது மற்ற பிரச்சனைகளை சமாளிக்க ஒரு சிறிய இலகு தன்மையை கொடுத்தது. ஆனால் ஸ்ரீபத்மா கொச்சின்னில் இருந்தால் கூட அம்மா, ஆச்சி, தாத்தா என யாராவது தொலைபேசியில் பேசினால் இவளது திருமணத்தை குறித்து அவர்களது விருப்பத்யோ இல்லை பிரத்தனைகளையோ ஏதாவது கூறுவர். அதற்கு இவள் என்ன சொல்ல முடியும்.    
“ உங்கள விட்டு நான் தனியா இருந்தப்போ அப்பா எனக்கு டைம் கொடுக்காமா வேற வரன் பார்த்திருந்தாங்கன்னா, நான் என்ன செய்ய முடியும்னு யோசிச்சுப் பார்த்திங்களா.  
எங்க அப்பா என்னைய புரிஞ்சிக்க போய், என்னால அப்போ அதெல்லாம் ஃபேஸ் பண்ண முடிஞ்சது. 
ஆனா அப்பா அப்படி இல்லாம என்கிட்ட வேற மாதிரி ரியக்ட் பண்ணிருந்த நான் என்ன பண்ணிருப்பேன்.
இப்படி வீட்ல பொண்ணு வந்து ஒருத்தர விரும்புறேன் ஆனா இப்போ பிரச்சனை அப்படினு சொன்ன தலைய தடவி கொடுப்பாங்களா. 
நிச்சயமா அவன் யாரு என்ன இப்படி எல்லாம் கேட்டு அடுத்த ஸ்டெப்க்கு போயிருப்பாங்க.    
உங்கள பத்தி வீட்ல சொன்னா நம்ப ரெண்டு ஃபேமிலியோட ரிலேஷன்சிப் என்ன ஆகிருக்கும். 
நீங்க என்னைய நம்ப வச்சு ஏமாத்திட்டிங்கன்னு நினைக்க மாட்டாங்க.”
“ ஸ்ரீ நான் அப்படியெல்லாம்….” என வேகமாய் சொல்ல வந்தவனை தடுத்து,
“ ஆமா நீங்க அந்த டைம்ல அப்படியெல்லாம் நினச்சிருக்க மாட்டிங்க தான். 
அத நான் நம்பலாம், ஆனா வெளிய அப்படி சொல்லுவாங்களா. 
இதுவே தேனுவ அண்ணா இப்படி விட்டுருந்தா, நீங்க என்ன நினச்சிருப்பிங்க.
அதெல்லாம் விட எங்க வீட்ல நிலைமையை நினச்சு பார்த்திங்களா. எங்க அண்ணாவையும் தேனுவையும் விடுங்க. 
ஆனா அம்மா அப்பா…
அவங்களுக்கு எவ்ளோ கேள்வி.
ஏன் இன்னும் பொண்ணுக்கு கல்யாணம் ஆகல. இந்த வரன் நல்லா இருக்கும், அந்த வரன் நல்லா இருக்கும். நீங்க தான் வேண்டாம்னு சொல்றிங்கனு அவங்களுக்கு வெளில இருந்து எவ்ளோ பிரஷர். 
அவங்க ஒன்னும் தனியா இங்க இல்லையே, சுத்தி அவங்கள நேசிக்குற சொந்தகாரங்களும் தான கூட இருக்காங்க. அவங்க கேக்குற கேள்விக்கு இவங்க எப்படி பதில் சொல்லிருப்பாங்க. அத யோசிச்சிங்களா “ சொல்ல, வாசு விழி அசைக்காமல் அவளை தான் பார்த்திருந்தான்.
“________”
“ இதே நம்ப ரிலேஷன்சிப்ல நம்ப ரெண்டு பேருக்கும் ஏதோ ப்ராப்ளம் வந்து சண்ட போட்டு விலகிருந்த கூட, உங்களுக்கும் எனக்கும் ஒத்து வரலனு சொல்லலாம். நம்ப பிரிஞ்சிட்டோம்னு நான் சொல்லலாம். 
ஆனா ஒன்னுமே சொல்லாம நீங்க விலகினா, நான் என்னனு எடுதுக்க முடியும். வீட்ல என்னனு சொல்லமுடியும். 
இத்தனை பிரச்சனைக்கும் அன்னைக்கு ஹோட்டல்ல மீட் பண்ணப்போவே, அத நீங்க சின்ன ப்ராப்ளம்னு நினச்சிருந்தாலும், அத என்கிட்ட மனசு விட்டு இதான் விஷயம்னு சொல்லிருந்தா நமக்குள்ள இவ்ளோ ப்ராப்ளம் நடந்தே இருக்காது. 
உங்கள காண்டாக்ட் பண்ண முடியாம எத்தன நாள் நான் தனியா ஃபீல் பண்ணிருப்பேன். அப்போ கூட நான் ஏதாவது உங்களுக்கு தப்பு பண்ணிட்டேன்னானு நினச்ச நாட்கள் தான் அதிகம். 
உங்களுக்கு என்னாச்சுனு யார் கிட்ட என்னால கேட்க முடியும். 
அதுவும் நான் மட்டும் தான் நம்ப கல்யாணம் எப்போனு உங்கள கேட்டுட்டு இருந்தேன். அதுக்கு நீங்க அவாய்ட் பண்றப்போ என்னோட பீலிங்க்ஸ் எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பார்த்திங்களா.” 
என சொல்லியவள் கீழே குனியா, அவள் நிமிர்ந்த போது, கண்களில் நீர் திரைக்கு பின்னால் கண்மணிகள் நீந்திக்கொண்டிருந்தன. 
அந்த வினாடி வாசுவிற்கு ‘அய்யோ’ என்று உள்ளம் அரற்றியது. அவளின் வலி துடைக்க முடியா ஒரு இயலாமையை முகத்தில் தாங்கி அவளின் விழிகளின் நீரை தான் பார்த்திருந்தான். வெப்பம் தகிக்கும் நீர்.   
“ நீங்க அப்போ என்னைய அவாய்ட் பண்ணாப்போ நீங்க விலகிட்டிங்கனு இங்க புரிஞ்சது“ 
என நெற்றியை ஆள்காட்டி விரலால் தொட்டு காட்டியவள், 
“ ஆனா நீங்க என்னை விட்டு தள்ளி போயிடிங்கனு இங்க புரிய தான் டைம் ஆச்சு. “ 
என இதயத்தை தொட்டுக் கரகரக்க சொன்னவள் வேறு புறம் பார்க்க, அவள் கண்ணீர் வழுக்கட்டாயமாக உள்ளிழுக்கபட்டு கண்கள் சிவந்திருந்தன.
“ ஸ்ரீ….இப்படி சொல்லாத. பிளீஸ்… ரொம்ப வலிக்குது. ” என வாய்விட்டே அரற்றினான். அவளை காயபடுத்திவிட்டான் என தெரியும், ஆனால் அது அவளுக்கு இத்தனை வலி கொடுத்தது என அவள் வாயால் கேட்டபோது, நிச்சயமாக அவனுக்கு வலித்தது. 
ஒரு பெரும் அமைதி, இருவரும் வேறு வேறு புறம் பார்வையை திருப்பினர், சில நிமிடங்கள் பேச்சே இல்லை. காற்றில் பறவைகள் இசை மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. 
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல், பார்க்கமுடியாமல் அமர்ந்திருந்தனர். இவன் முன் கண்ணில் கண்ணீர் கோர்த்துவிட்டதே என அவளுக்கு அந்த நிமிடங்கள் பிடிக்கவில்லை. சில நிமிடங்கள் சென்று நிதானித்தவள், பார்வையை மட்டும் இவன் புறம் திருப்பினாள், 
“ சரி இதுக்கு மேலையும் இத கன்டினியூ பண்ண விரும்பல. “
அதிர்ச்சியில் வாசு உறைந்து விட்டான். 
“ ஸ்ரீ என்ன சொல்ற…”
அவனை நன்றாக பார்த்தவள், “ இந்த கான்வெர்சேஷன்ன கன்டினியூ பண்ண விரும்பலனு சொன்னேன். ”
வேகமாக துடித்த இதயம், கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது அவனுக்கு. முகத்தை அழுத்தி துடைத்தவன், இதற்கு மேல் அவளை பேசவிடாமல்,
“ இது வரைக்கும் என்ன வேணா நடந்துருக்கலாம் ஸ்ரீ. 
ஆனா இனிமே…
உன்கூட தான் இருக்கணும்னு தோணுது.
உன்ன கைய புடிச்சிக்கிட்டே நீ வாழ்நாள் முழுக்க நீ தர அடியெல்லாம் வாங்கலாம்னு தோணுது. நீ சாஞ்சுக்க மட்டும் தான் நெஞ்சு இன்னும் துடிக்குற மாதிரி இருக்கு. 
காலைல உன் முகம் பார்த்து தான் எழணும். உன்ன கட்டிபுடுச்சிக்கிட்டே சாப்பாடு சாப்பிடணும். உன் முத்தனைல தான் முகம் துடைக்கணும். நாள் பூரா உன் கூடவே இருக்கணும். உன்கூட நிறைய ஊர் சுத்தணும். உன்கிட்ட திட்டு வாங்கணும். சண்ட போடணும். நிறைய சிரிக்கணும். 
இன்னும் இன்னும் நிறைய…
உன் கண்ணு முன்னாடி பாக்குற செடில இருக்க ஒவ்வொரு இலையும் சூரியனோட வெப்பம் படுற மாதிரி தான் இயற்கை அமைக்கும். அப்போதான் இலை மூச்சு விட முடியுமாம்.
 இனிமே என் வாழ்க்கைல நான் கடந்து வர்ற ஒவ்வொரு நாளும் நீ இல்லாம கடந்து போகாது, போகவும் கூடாது. அப்போ தான் நான் மூச்சு விட முடியும்.
 அப்படி தான் என் வாழ்க்கை அமையனும்னு ஆசபடுறேன் ஸ்ரீ. “ மூச்சை ஆழயிழுத்தவன், 
“ ஃபர்ஸ்ட் எல்லாம் உன்ன பார்த்த ரொம்ப பிடிக்கும், அப்போலாம் உன்ன பார்க்க, பேச மட்டும் இருப்பேன். அதுக்கு அப்புறம் நீ என்னைய விட்டு போன பிறகு உன்ன பார்க்க முடியாம, கூட பேச முடியாம உள்ளுக்குள்ள “ 
என சொன்னவன் அவன் நெஞ்சை தொட்டு காட்டி, 
“ அவ்ளோ சத்தமா இருக்கும். வெளிய யாருக்கும் கேட்காத சத்தமா இருக்கும் ஸ்ரீ.  
என்னைய வம்பு பண்ண நீ வேணும், என்கூட மல்லுக்கு நிக்க நீ வேணும். உன் கன்னத்தோடு சேர்த்து சிரிக்குற உன் கண்ண பார்க்கணும். அத பேசுற பேச்ச என் கண்ணுக்கு கேக்கணும்னு தனியா கெடந்து அல்லாடிருக்கேன். என் மூச்சு காத்தோட கடைசி வரைக்கும் நீ வேணும் ஸ்ரீ. என்னைய கல்யாணம் பண்ணிக்கிறியா. “ என அவள் முகத்தை பார்த்து விழிகள் 
ஏக்கமாய்… 
இறைஞ்சலாய்…  
அசையாமல் நேரிடையாக அவளை பார்த்து கேட்டான். 
   ஸ்ரீபத்மா விழிகள் மேலும் சிவந்தன, கண்ணீர் அவள் பேச்சை சட்டை செய்யாமல் மீண்டும் கோர்த்து நின்றது. முதலில் இயலாமையில் கோர்த்து நின்றிருக்க, இப்போது பேரன்பால் கோர்த்து நின்றது. 
சில நிமிடங்கள் அவளது விழிகள் அவனின் முகத்தை பார்க்க, வாசுவோ அவள் என்ன சொல்லப்போகிறாளோ என தவிப்பாய் அவளை பார்த்திருந்தான். 
அவள் கண்களில் திரையிட்ட நீரை அழுந்த துடைத்தவள் எழுந்து நின்றாள். இவனும் அவளை பார்த்தபடியே படபடபாய் எழுந்து நிற்க, அவன் அருகில் சிறிது வந்தவள், அவனை விழிகளை மாறி மாறி உள்ளார்ந்துப் பார்த்து,  
 “ நிச்சயமா உங்கள பார்க்க கூடாது.
பேசக்கூடாது.
உங்கள லைஃப்ல மொத்தமா அவாய்ட் பண்ணிடனும்னு தான் நினச்சிருந்தேன். 
பட் கல்யாணம் பத்தி யோசிசப்போ…
உங்க மேல ஏதோ சின்னதா ஒரு நம்பிக்கை இருந்துச்சு. 
இப்போ அந்த நம்பிக்கைய இன்னும் அப்படியே இருக்க வச்சிடிங்க.   
நீங்க வீட்ல பேசுங்க.
எனக்கு ஓகே மாம்ஸ். “ அவன் பரிதவிப்பை பார்த்து இயல்பாய் வந்தது அவள் குரல்.
வாசு பார்வையை அகற்றாது அவளையே தான் பார்த்திருந்தான். அவனுக்கு அவள் வார்த்தையை உள் வாங்க நேரம் எடுத்தது. ஓர் ஆண்டு பக்கமாய்  காத்து கிடந்திருக்கிறான் அவளின் இந்த வார்த்தைக்களுக்காக. 
அது கிடைத்த நொடி அவனுக்குள் வான வெடி. 
    
      
 
         
    
     
      

Advertisement