Advertisement

அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், 
       கீச்…கீச்…என காற்றில் கீதம் தேனாய் பாய, தென்றல் முகத்தில் வேர்வை பூக்களை அழகாய் பறிக்க, மனம் முழுவதும் ரம்யாமான அமைதி. வெள்ளையும் கறுப்பும் கலந்த நாரைகள் கூட்டமாய் தண்ணீரில் நின்று உணவு தேட, நடக்க, நீந்த, என இருந்தவை சட்டென கூட்டமாய் பறந்தன. அங்கே காற்றில் தண்ணீரின் வாசம் சிதறி கிடக்க, நாசி தண்ணீரின் வாசத்தை சேமித்து வைக்க, மேனியோ தென்றல் கொடுத்த குளுமையை சுமந்திருந்தது. 
ஸ்ரீபத்மாவும் வாசுவும் அருகருகே பாறைபோல் உள்ள அமைப்பில் அமர்ந்திருந்தனர். ஸ்ரீபத்மாவை இத்தனை பொறுமையாக எல்லாம் வாசு பார்த்தது இல்லை. இங்கே வந்து முழுதாக ஒரு மணி நேரம் ஆகிருந்தது. 
திருச்சியில் அவன் பிரபலம் என்பதால் பொது வெளியில் அவன் நடமாடினால் இயல்பான சூழல் இருவருக்கும் வாய்ப்பதில்லை. ஸ்ரீபத்மாவிற்கு பறவைகள் போட்டோக்ரபி என்றால், அவளது விருப்பம் எப்படி இருக்கும் என இவனுக்கு தெரியும். அதனால் இங்கே இப்போது அமைதியாக அமர்ந்திருக்கின்றனர். 
அங்கே நின்ற ஒரு கொக்கு செய்யும் சேட்டையை இன்ச் பை இன்ச்சாக படம் பிடித்துகொண்டிருந்தாள். மிகவும் பொறுமை, நிதானம், காத்திருப்பு என அமைதியாய் அதனை ரசித்துகிக்கொண்டிருந்தாள். 
இப்போது அவளிடம் பேச வேண்டி அழைக்கலாமா வேண்டாமா என வாசு அவளை பார்ப்பதும், பறவைகளை பார்ப்பதும் என சிங்கிளாக சிக்கியிருந்தான் வாசு. 
இன்று இருவரும் பேசலாம் என முடிவு செய்து இங்கே வந்திருந்தனர். அவள் தனியாக வந்தாள், இவன் தனியாக வந்தான். இங்கே ஒன்றாய் சந்தித்த நொடி முதல் வாசு உற்சாகமாய் இருக்க, பத்மாவிடம் அப்படி எதையும் காணவில்லை. 
இருவருக்கும் என்ன கேட்பது, எப்படி இன்றைய நாளை எடுத்து செல்வது என ஒன்றும் தெரியவில்லை. வாசு அவளிடம் சாதாரணமாக பேசிக்கொண்டே சிறிது சுற்றி பார்க்க, அவனுக்கு வாய் வலித்தது தான் மிச்சம். இவள் கேட்டதுக்கு பதில் என்பது போல் இருந்தாள்.    
“ ஸ்ரீ…” 
அவனது அழைப்பு அவளை எட்டியதாகவே தெரியவில்லை. 
“ ம்ம்கும் ஸ்ரீ ” கனைத்து பார்த்தான், பயனில்லை.
“ ராங்கி…” 
ஓர விழியால் அவனை முறைத்துப் பார்த்தாள். ‘அப்படி கூப்பிடாத’ என்ற செய்தியை அவள் பார்வை தாங்கி நின்றது. அதற்கு அவன் இசைவதாய் இல்லை. 
நீண்ட இடைவெளிக்கு பின் கிடைத்த நெருக்கம் என்பதால் இயல்பாய் வந்தன அவன் வார்த்தைகள். 
“ நான் சொல்றத மட்டும் காதுல வாங்கிகோ ராங்கி “ என பொறுமையாக ஆரம்பித்தவன் மனம் விட்டு பேசினான். எல்லா சம்பவங்களுக்குள்ளும் மீண்டும் பயணமாயினர் இருவரும்.
     ஒன்றரை வருடம் முன் ஜெயாவின் கணவன் தேவராஜ் எக்குதாப்பை ஓரிடத்தில் சிக்கிவிட்டான். சொந்த தொழில் செய்கிறேன் என வீட்டில் சண்டையிட்டு எங்கோ கடன் வாங்கி, தொழிலில் தோல்வி அடைந்து ஜெயாவிற்கு கூட சொல்லாமல் சிவசு தாத்தாவை தனியாக சந்தித்து உதவி கோரினான். 
தாத்தாவிற்கு அவன் மேல் ஏக வருத்தம், இந்த விஷயத்தை வாசுவிடம் சொல்லலாம் என நினைத்தார் ஆனால் வாசுவை தான் தேவராஜ்ஜின் தாய் ஏதாவது இழுத்து பேசுவதால், அவருக்கு அவனிடம் சொல்ல மனம் வரவில்லை. என்ன இருந்தாலும் நம் வீட்டு பெண்ணின் கணவன் என்ற முறையில் உதவ ஒத்துக்கொள்ள, ‌ஒரு கையெழுத்து மட்டும் போதும் நீங்கள் உறுதி அளித்தால் நன்றாக இருக்கும் என சொல்லி, அவருக்கு எதுவும் சரிவர விளக்காமல் ‘ இந்த கடனை நான் சரி செய்துவிடுவேன், வெறும் ஒப்புக்காக மட்டுமே உங்கள் கையெழுத்து’ என அவரிடம் கையெழுத்து பெற்று கடன் அளித்தவரிடம் கொடுத்து இவன் அதிலிருந்து நகர்ந்து விட்டான். ஆனால் தாத்தாவிற்கு சரி வர தெரியவில்லை இதனின் ஆழம். என்பது வயதை நெருங்கும் சிவசு தாத்தா, இது ஏதோ சிறு அளவு பிரச்சனை என நினைத்துவிட்டார்.
    ஆனால் கடன் கொடுத்தவர் வட்டி போட்டு தாத்தாவிடம் அதை காட்ட, அதிர்ந்தவர் வேறு வழி இல்லாமல் வாசுவிடம் சொன்னார். வாசுவிற்கு கடனின் மதிப்பு தெரிய தேவராஜ்ஜின் மேல் கடுங்கோபம் கொண்டாலும்  எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
 “ நான் பார்த்துக்குறேன் தாத்தா. இப்போ பிசினஸ்ல இதெல்லாம் சாதாரண அமெளண்ட். இதெல்லாம் ஒன்னுமே இல்ல. நம்ப கார்த்தி பேங்க்ல பெர்சனல் லோன் இதுக்கு கொடுப்பாங்கா “ என ஒருவாறு அந்த எளிய மனிதரிடம் பொய் சொன்னான். அவனுக்கு வேறு வழி இல்லை, அவர் வயதிற்கு அவர் நிம்மதியாய் இருப்பது முக்கியம். அவர் உடல் நிலை மிக முக்கியம். பேரனை நம்பினார் அவர்.
கடன் என்னமோ சில லட்சங்கள் தான் ஆனால் வட்டி அதிகம். வாசுவால் இதை உடனே கட்டமுடியாவிட்டாலும், முயன்றால் நேரம் எடுத்து கட்ட முடியும் அந்த நம்பிக்கையில் தாத்தாவை சமாதானப்படுத்தினான்.
தேவராஜ்ஜின் வீட்டிற்கு சென்று பார்த்தால் ஜெயாவிற்கு இவனை கண்டதும் மிகவும் சந்தோஷம். அத்தனை உபசரணை இவனிற்கு, ஆனால் அவள் மாமியார் இவனை “ வா பா ” என்று அழைத்ததோடு சரி, ஆனால் ஜெயா மாமா மாமா என விரும்பி கவனித்தாள். அவள் கருவுற்றிருப்பதாய் தெரிவித்து “ இனிமே தான் நம்ப வீட்ல சொல்லணும்”  என அசையாய் இவனிடம் சொல்ல.அதற்கு மேல் வாசுவால் அவளிடம் எதுவும் பேச இயலவில்லை. அவளுக்கு உண்மையிலே எதுவுமே தெரியவில்லை. அவளிடம் தேவராஜ்ஜை பற்றி நாசூக்காக கேட்க, லாரி லோட்க்கு வெளியூர் போயிருக்காரு மாமா என சொன்னாள். திசையற்று நின்றான் வாசு.
சில சமயம் வாழ்க்கை வேறு சந்தர்ப்பமே கொடுக்காமல், இது தான் களம், இதை கடந்தே ஆக வேண்டும் என பிடித்து தள்ளிவிடும். அப்படி தான் வாசுவிற்கும் நடந்தது.  
தனியாக களத்தில் இறங்கினான். 
கடன் கொடுத்த அந்த பெரிய மனிதர் தன் அடியாட்கள் சில பேருடன் வந்து வாசுவிடம் பஞ்சாயத்து பேசினார். 
அந்த பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருந்த போது தான் பெண் பார்க்க வந்தார்கள் என சொல்லி ஸ்ரீபத்மா தனியாக வாசுவின் முன்னால் நின்ற தருணம். வாசுவும் இங்கே இப்படி விஷயம் நடந்துகொண்டிருக்க, பதட்டமாகி வெளியே வந்து அவளை உணவகத்தில் வந்து பார்க்க சொன்னான். அவள் மேல் இவர்களின் கவனம் படிவத்தை தவிர்த்தான். பிறகு அங்கே சென்று அவள் பேச்சிற்கு சம்மதித்து, இவனுக்கு எத்தனை பிரசனைக்கள் இருந்த போதும் அவளது நிலைமையும் முக்கியம் என திருமணம் பேசலாம் என உளமார தான் முடிவெடுத்தான். . 
ஆனால் அவன் எதிர்பார்க்காததெல்லாம் தட தட என நடந்தேறியது. 
      கடன் அளித்தவர் பெரிய அள் மட்டும் இல்லை, மிகவும் அபயகரமானவர். ஆள் பலம், பண பலம் எல்லாம் சேர, வாசுவை நெருக்கி தள்ளிவிட்டார்.  சீக்கிரமாக கடனை திருப்பிக்கொடு இல்லை தாத்தாவின் நிலத்தை எங்களிடம் கொடுத்து கடனை அடைத்துக்கொள் இல்லையேல் உன் உணவகத்தை தா என கடுமையாக இவனிடம் பேச, இவன் முதலில் எதிர்த்து நின்றாலும், பிற்பாடு தான் அவரின் பின்புலம் தெரிந்தது. 
இத்தனை ஆண்டுகள் தாத்தாவின் நிலத்திற்காக பாடுபட்டு மீட்டு காப்பாற்றி, சொந்த உணவாக தொழில் தொடங்கி மேல வரும் சமயம் இப்போது இவர் வந்து தா என்றதும் இவனால் எப்படி எளிதாக தரமுடியும். அதுவும் இவன் வாங்காத கடனிற்காக. 
   வாசு யாரிடமும் உதவி கோரும் நிலையில் இல்லை. கார்த்திக்கு இப்போது தான் குழந்தை வந்த மகிழ்ச்சியில் இருக்கிறான், அவனை இதில் இழுத்து விட விரும்ப வில்லை. ஆனால் விமல் வழக்கறினார் தானே என அவனை அணுக, அஜய்யும் துணையாக நின்றான். இருவரும் சேர்ந்து வைத்திருக்கும் ரைஸ் மில்லுக்கும் பிரச்சனையை கிளம்பினார் அந்த பெரிய மனிதர். இப்படி தன்னால் தன் நண்பர்கள் இதில் சிரமபடுவது பிடிக்காமல் வாசு அவர்களை இதிலிருந்து விலகி இருக்க சொல்லிவிட்டான். சென்னையில் இருக்கும் இவனது மற்ற நண்பர்களிடம் சொன்னால் நிச்சயம் இவனுக்காக வருவார்கள், ஆனால் அவர்களுக்கு இவரால் பிரச்சனை வந்தால் வாசுவால் ஏற்க முடியாது.  
தனி ஆளாய் எல்லாம் எதிர்கொண்டான். கிருபா, மணியையும் தவிர்த்தான். அவர்கள் இவனின் பிள்ளைகள். அவர்கள் இதற்குள் வந்து சிரமப்பட இவன் விரும்பவில்லை. அவர்களிடம் எதையோ சொல்லி சமாளித்தான்.
     தாத்தாவிற்கு பதில் தான் உறுதி தருவதாய் சொல்லி இவன் கையெழுத்திட்டு சிவசு தாத்தாவை இதிலிருந்து விடுவித்தான். அந்த பெரிய மனிதருக்கு இவன் எப்படியும் கடன் அடைக்க முடியாது, நிச்சயம் நமக்கு தான் நிலம் என உறுதியாக இருந்தார். 
ஆனால் அவர் எதிர்பாராரது ஒன்று தான். அவன் மரங்கள் முதிர்ச்சி அடைய எப்படியும் நாற்பது வருடங்கள் ஆகும் என எண்ணியிருக்க, இவனது பாதி மரங்களுக்கு மேல் பதினைந்திலிருந்து இருபது ஆண்டுகளுக்குள் முதிர்ச்சி அடையும் ரகம். மீதம் அனைத்தும் நாற்பது ஆண்டுகள் ஆகும். அது அவருக்கு தெரியவில்லை.
     முதலில் அவன் குடும்பத்தையே காப்பது என முடிவெடுத்துவிட்டான். வீட்டில் அம்மா, அப்பா, ஆச்சி, தாத்தா, தேனு, புது உறவாய் குழந்தை என அனைவரும் இருக்க, அவர்களின் நிழலை கூட இந்த பெரியமனிதரின் அடியாட்கள் நெருங்காதவாரு பார்த்துக்கொண்டான். 
அந்த குழந்தையின் பிஞ்சு முகத்தை கூட இவன் இன்னும் சரி வர கொஞ்ச வில்லை. கடினமா தருணங்கள். அனைதிற்கும் தன்னையே முன்னிறுதிக்கொண்டான். 
இதில் அடுத்து அடி வாசுவிற்கு வந்தது. 
     இவன் பணத்தை திரும்பி தரும் வரை கூடவே இரண்டு ஆட்களை அவனுடன் இருந்து கண்காணிக்கும்மாரு பார்த்துக்கொண்டார். அவரது அடியாட்களாகினும் இவனது உணவகத்தில் வேலை செய்வது போல் ஊருக்குள் தோற்றம்.
அப்போது தான் ஸ்ரீபத்மா அவனிடம் பேச நெருங்கியது. அடியாட்களின் கண்காணிப்பில் இருந்ததால் பத்மாவிடம் இவன் கொஞ்சம் இளக்கம் காட்டினாலும் அவளையும் கட்டம் கட்டிவிட்டால், இவனால் என்ன செய்யமுடியும். காட்சிதிரையில் வருவது போல் பறந்து பறந்து சண்டையிட முடியாதே. யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதே. சில இடங்களில் கவனமாக மிக லாவகமாக சூழ்நிலைகளை கையாள வேண்டும்.  
       அவனை நெருக்க வேண்டும் என்றால் தயங்காமல் அவளை குறி வைக்க அஞ்சமாட்டார்கள். அதுவும் கண் தெரியாத இடத்தில் இருக்கிறாள் எனில், அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் தன்னையே எளிதாக மன்னிக்க இயலா நிலைக்கு தள்ளப்படுவான். 
இவன் காதல், திருமணத்தில் முடிக்கிறதோ இல்லையோ அவள் எங்கே இருந்தாலும் அவள் பாதுகாப்பு உறுத்திபடுத்தபட வேண்டும் என ஸ்ரீபத்மாவை  ஏதோ வெளி சொந்தம் போல் அவர்கள் முன் நடந்துக்கொண்டான். கடினம் தான் மிக கடினாம் தான். 
ஆனால் இவனால் அவள் பெரிய வலியை சந்திபத்தை காட்டிலும் அவளிடம் இருந்து விலகி நின்று, உறவு முறிந்ததை போல் காட்டபடும் பிம்பம் ஏற்படுத்தும் வலி அவனளவில் சிறியது. 
பெரியதை காட்டிலும் அவளை சிரமப்படுத்த சிறியதை தேர்ந்தெடுத்தான். அனைத்தும் அவள் நன்மைக்காக.               
    வாசு ஒற்றை ஆளாய் விடாமல் போராடினான். உடல் நிலை தேறி வந்தவுடன் பணம் தந்துவிடுகிறேன் என இவன் உறுதி கொடுத்தாலும் அப்படியே விட்டுவிடுவார என்ன, அடியாட்கள் இவனது மொபைலை கேட்டனர், இவன் எப்படியோ இவனது தகவல்களை மாற்றி விட்டு தந்துவிட்டான், இவனது வெளியுலக தொடர்பு அனைத்தையும் தீவீரமாய் கண்காணித்தனர். கிட்டதட்ட இவனது வெளியுலகு தொடர்புகளை இவனே துண்டித்தான்.  
வீட்டில் கோதண்டத்துடனான பிரச்சனை இவனுக்கு வீட்டிற்குள் அடியெடுத்து வைக்காமல் இருக்க உதவிற்று. அவர் கோபத்தில் இவனை வீட்டை விட்டு போகச்சொன்னாலும் இவன் மனம் உவந்தே ஏற்றன். இந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லையென்றால் “ நான் ஏன் வெளிய போகணும், அதெல்லாம் முடியாது. “ என அவரை வம்பு செய்திருப்பான். ஆனால் அவன் அவர்களை விட்டு விலகுவதே அவர்களுக்கு பாதுகாப்பு என உணர்ந்து விலகினான்.   
    இவன் குடும்பம் முக்கியம் அல்லவா. அதை காப்பது இவனுக்கு அனைத்தையும் விட முக்கியமானதாய், முதன்மையானதாய் இருக்க எதை பற்றியும் கவலைபடாமல் காவலானாய் குடும்பத்திற்காக, குடும்பத்திலிருந்து வெளியேறி நின்றான். 
ஸ்ரீபத்மாவுடன் நேசத்திலிருந்தும் வெளியேறி நின்றான். நெருப்பு வளையத்துக்குள் நின்று வாள் சுற்றிய சமயங்கள் அவை அனைத்தும். 
தன்னை நெருக்கினால் அவளை நெருப்பு சுட்டு விட்டக்கூடாது என வாளைக்கொண்டு அவள் நெஞ்சின் முன் காட்டி தள்ளி நிறுத்தினான். நெருப்பு தணிய கார்த்திருந்தான். 
அவன் நினைத்து போல் தணிந்தது.   
அனைத்தையும் கடந்து வந்தான். அரசாங்கத்திடம் இருந்து இவனது தொகை வந்ததும் கடனை முழுமையாக அடைத்தான். தாத்தாவிடமும் கடன் எளிதாக அடைக்கபட்டதாக சொல்லிவிட்டான். அவருக்கு இன்றளவும் இவன் கடந்து வந்த உண்மை பாதை தெரியாது. அப்படியே பேரனை நம்பினார்.  
எல்லாவற்றிலிருந்தும் வெளிவந்து ஸ்ரீபத்மாவை பார்க்க வந்தால், அவள் இவனிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. தவிர்த்தாள். அவன் செய்ததை திருப்பி செய்யவேண்டும் என்பதற்காக இல்லை. மறுமுறையும் காயம்பட அவள் விரும்பவில்லை. அவனுக்கு வேண்டுமானால் அது சிறிய வலியாக அந்த சமயத்தில் தெரிந்திருக்கலாம். ஆனால் அவளுக்கு அது மிக பெரியது தானே. அவளுக்கு அப்போது அது பிம்பம் என தெரியாதே. அவள் அளவில் உண்மை என்று தானே நினைக்க தோன்றும். அவனுக்கும் அவளை புரியாத என்ன, அவள் தேறி வர காத்திருந்தான். 
தவம் கிடந்தான்.
      ஊர் வேலை, தொழில் வேலையுடன் புயல் நிவாரண பணியும் சேர்ந்துக்கொள்ள மாதங்கள் போனதே தெரியவில்லை. ஆனால் அவள் விட்டு போன வெற்றிடம் மட்டும் இவனிடம் பத்திரமாக இருந்தது. 
அவளிடம் ஒருவாறு எல்லாவற்றையும் சொல்லி முடித்து நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். 
அவனின் முகத்தையே அசையாது பார்த்து அமர்ந்திருந்தாள் ஸ்ரீபத்மா.
                                   

Advertisement