Advertisement

  ஒன்றரை வருடம் முன், 
          வாசு அவனது தோட்டவீட்டின் பின் பக்கம் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். வாசுவிற்கு ஆங்காங்கே உடலில் கட்டு இருந்தாலும், வாக்கிங் ஸ்டிக் பிடித்து அவருடன் சீரியஸ்ஸாக பேசிக்கொண்டிருந்தான். 
    இரண்டு நாட்களாக அவனை மருத்துவமனையில் காணாது, நண்பர்களிடம் கேட்டால் கூட சரியான பதில் தெரியவில்லை. கிருபாவும், மணியும், 
“ அண்ணி, அண்ணா எங்க இருக்காருனு சரியா தெரில. திருச்சிக்கு போகணும்னு சொன்னாரு அப்புறம் என்னாச்சுனு தெரில. ஆனா ஏதோ பிரச்சனைல இருக்காரு போல, எங்க கிட்ட கூட எதுவும் சொல்லல” என இரண்டு நெருங்கிய சகாக்களுக்கு கூட அவனது செயல்கள் தெரியவில்லை. 
ஸ்ரீபத்மாவிற்கு அப்போது முதலில் வந்த வரன் வீட்டினர் அன்று பத்மாவை சொந்தங்கள் பார்க்க வேண்டும் என ஒரு சிறு படயெடுப்பை நடத்தி முடித்திருந்தனர். அதுவும் அப்போது தான் தேனுவிற்கு குழந்தை பிறந்திருக்க, ஸ்ரீயினால் முழு மூச்சாக வாசுவை தேட முடியவில்லை. 
      எப்படியும் தோட்டதில் இருப்பானோ என தோன்ற, இது வரை அவனை அப்படி அவனது தோட்ட வீட்டில் தனியாக எல்லாம் சந்தித்தது இல்லை. இருப்பினும் இன்று வரன் வீட்டின் சொந்தங்களை பார்த்தவள், இதன் மேலும் தாமதித்தால் பிறகு மிகவும் சூழ்நிலை சிக்கலாகி விடும் என எண்ணியவள், மதிய வேளையில் அவளது ஸ்‌கூட்டியில் அவனது தோட்டதில் உள் நுழைந்தாள். 
இரண்டு பெரிய கார்கள் வெளியில் நிற்க, ஒரு பத்து பேராவது முரட்டு லுக்கில் உள்ளே செல்லும் இவளை கண்காணித்தனர். இவளுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. வாசுவின் மீது நம்பிக்கை இருந்தாலும் இவர்களை எல்லாம் பார்க்கும் போது உள்ளே ஒரு அலர்ட் மோட் வந்தது உண்மை. தப்பான நேரத்தில் வந்துவிட்டுமோ என உள் மனம் அடித்துக் கொண்டது. வாசுவிற்கு ஏதோ பெரிய பிரச்சனையோ என வேறு கவலை எழுந்தது. 
அடர் சிவப்பு நிற பட்டு புடைவையில், மென் அலங்காரத்தில் உள்ளே வந்தபோது வெளியில் நின்ற பத்து பேரும் இவளை உற்று பார்த்துக்கொண்டு ஏதோ கமெண்ட் செய்து சிரித்துக் கொண்டிருந்தனர். 
ஸ்ரீபத்மாவிற்கு இவர்கள் யாரும் தெரிந்த முகமாக இல்லை. இவளது ஸ்கூட்டி சத்தம் கேட்டதும் பின்னே இருந்து வாசு உடனடியாக வெளியே வந்தவன், அவளை கண்டதும் பதட்டமாகி போனான்.
அவன் ஸ்டிக்குடன் வருவதை பார்த்து பத்மா கண்களாலே அவன் கட்டுகளை வருடி கொடுக்க, 
“ ஸ்ரீ நீ ஏன் இங்க வந்த, கெளம்பு முதல.” 
இவனை இரண்டு நாட்களாக காணவில்லையே. எங்கே சென்றான் என தேடி இன்று கண்டுபிடித்தால், வந்ததும் அவளை விரட்ட, முகம் கூம்பி விட்டது அவளுக்கு. உடனே திரும்பி வண்டியை எடுக்க, அவளது முகம் போன போக்கை பார்த்தவன், மனம் கேட்காது அவளது அருகில் வந்து, 
“ ஸ்ரீ நம்ப கடைல வைட் பண்ணு. நான் ஒரு ஹாஃப் அன் ஹவர்ல வந்துறேன். “ என சொன்னவன் அவள் முகம் கூட பார்க்காது உள்ளே சென்றுவிட்டான். 
அடுத்து அரை மணி நேரம் கழித்து, 
வாசுவின் உணவகத்தில், இருவரும் எதிரெதிர் ஊஞ்சலில் அமர்ந்திருந்தனர்.
உர்ரென முகத்துடன் ஸ்ரீ அமர்ந்திருந்தாள். வாசு கை காலில் கட்டுடன்  அவளையே உற்று நோக்கிய வண்ணம் அமர்ந்திருந்தான். 
“ ஏன் ஸ்ரீ அங்கே எல்லாம் வந்த. “
நிமிர்ந்து அவனை முறைத்தவள், 
“ அது நம்ப தோட்டம் தான, தாத்தா அங்க இருந்தப்போ நானும் அங்க வந்துருக்கேன். இப்போ நீங்க இருக்கறதால தான் வரல. 
அது சரி என்னை பத்தி நினைக்காதவங்க கிட்ட நான் ஏன் எக்ஸ்ப்லைன் பண்ணனும். நான் கிளம்புறேன். “ என எழுந்து நின்றாள். 
“ ப்ச் உட்காரு முதல, ஆனா ஊனா கிளம்ப வேண்டியது. அப்புறம் எதுக்கு என்னை பார்க்க வந்த ? “ சூடாக வந்து விழுந்தன வார்த்தைகள். 
“ எங்க டா போன ரெண்டு நாளு ? “
“ அதெல்லாம் உன் கிட்ட சொல்லமுடியாது. “ இப்போது உர்ரென ஆவது அவனது முறையாயிற்று.
அவனது முகத்தின் புறம் முன்னே வந்தவள், 
“ சொல்லமுடியாதுனா சொல்ல வைப்பேன். மொளகா தின்ன காண்டா மிருகம் மாதிரி முகத்த வச்ச அப்படியே விட்டுடுவேன்னு நினைப்பா.
இவ்ளோ அடி. கட்டோட ஹாஸ்பிடல்ல இருந்து எஸ்கேப் ஆகியாச்சு. 
நான் நீ எங்க போனேன்னு எவ்ளோ தேடுனேன் தெரியுமா. “ குறைபட்டாள் ஸ்ரீபத்மா.
“ ஹேய் வாய குறை. எப்போ பாரு சவுண்ட் விட்டுட்டே இருக்கறது“ 
“ நான் சவுண்ட் விடுறேனா. ஒரு பன்ச் விட்டேனா உதடு பஞ்சர் ஆயிடும்.
வீட்ல பெரிய மாமா கூட உங்களுக்கு சண்ட. இப்போ நீங்க வீட்ல இல்லை.
போலீஸ் கேஸ்னு போய்ட்டு வந்தாச்சு. பட் என்னாச்சுனு ஒரு வார்த்தை சொன்னிங்களா. எல்லாம் இங்க வந்து தான் தெரிஞ்சுகிறேன். 
போன தடவ மீட் பண்ணபோ, சீக்கிரமா நம்ப மண்டபத்துல மேரேஜ் பிக்ஸ் பண்ண போறாத வேற டயலாக் விட்டிங்க. 
இப்போ என்ன டானா இன்னைக்கு என்னைய அன் அப்பிசியலா பொண்ணு பார்த்துட்டு போயிட்டாங்க. 
நான் யார் கிட்ட போய் சொல்றது. 
இப்போ உங்கள வந்து தேடி கண்டு பிடிச்சு பார்த்தா  கேங்ஸ்டெர்ஸ் மாதிரி உங்கள ஆளுங்க சுத்திகிட்டு இருக்காங்க. என்ன தான் நடக்குது. ” 
” ஒரு பிரச்கனை ஸ்ரீ. 
இது நம்ப ஃபேமிலி குள்ள ஒருத்தர் சிக்கிட்டாரு. அதான் ஒரு பஞ்சாயத்து. எல்லாம் கொஞ்ச நாள சரியா போயிடும். 
அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு. ” அப்போதும் பாதி மறைத்து மீதி தான் சொன்னான்.
” யாரு அவங்களாம். என்ன வேணா இருத்துட்டு போகட்டும், இனிமே இந்த பஞ்சாயத்துனு சொல்லி அது இது எதுவும் நீங்க பண்ண கூடாது. சொல்லிட்டேன். 
முன்ன ஒரு தடவ ஸ்ரீதர் காக பண்ணாத கிருபா சொல்லிருக்காங்க. 
அதெல்லாம் அட்டு பஞ்சாயத்துனு கேள்விபட்டேன்.“ 
வாசு அவளை ஏகத்திற்கும் முறைக்க, 
“ என்ன முறப்ஸ், இப்போ உங்க வீட்டுக்கு முன்ன இருந்தவங்களாம் பார்க்க சாதாரணமாவே தெரில, ஏதோ பெரிய பிரச்சன மாதிரி தெரியுது. 
நீங்க எதுவா இருந்தாலும், இதெல்லாம் வச்சிக்காதிங்க. வேணாம். “ முகத்தை சுருக்கி சொன்னாள். 
“ ஏய் என்னைய பார்த்து என்ன நினைச்சிக்கிட்டு இருக்க. நான் ஏதோ பரம்பர ரௌடி மாதிரி பேசிக்கிட்டு இருக்க. “
“ எனக்கு அதெல்லாம் தெரியாது. இதெல்லாம் நல்லாவே இல்லை, வேணாம்.”
“ நான டி வேணும் போறேன், அதுவா சிலது வருது. அவாய்ட் பண்ண முடில.”
“ சரி அது என்ன வேணா இருக்கட்டும். சீக்கிரம் முடிச்சிடுங்க. “ அதன் வீரியமும் விவரமும் தெரியாமல் பேசினாள். சரி என இவன் மண்டையை ஆடிக்கொண்டான். அவனுக்கே அதன் ஆழம் இன்னும் சரி வர தெரிய வில்லை. 
“ இப்போ என்னைய வைட் பண்ணு. பொறுமையா இரு. இப்படியே சொல்லிட்டு இருக்கிங்க. 
பட் இப்போ என்னால முடியாது. வீட்ல எல்லாரும் மேரேஜ் பிக்ஸ் பண்ண ரொம்ப ஆர்வம் காட்டுறாங்க. 
இப்போ என்ன பண்ணலாம். ” நேரிடையாக கேட்டாள். 
” ________ “
” சோ அப்போ உங்க கிட்ட பதில் இல்லை. லாஸ்ட் டைம் என்கிட்ட நம்ப மண்டபத்துல மேரேஜ்னு சொன்ன விஷயம் எல்லாம் காத்துல பறக்க விட்டு பட்டம் விட்டாச்சு. அப்படி தான. ” ஸ்பைசியாக அவனை நோக்கினாள்.
” அப்படி இல்லை. இப்போ கொஞ்சம் நிலைமை சரி இல்லை. அதான். “
பொறுமை பறந்தது அவளுக்கு, ” எப்போ தான் மாமா உங்க நிலைமை சரியாகும். 
இது வரைக்கும் நம்பள பத்தி வீட்ல பேசிருக்கோமா. இன்னும் எத்தன நாள் இப்படி. 
வீட்ல யார்கிட்டவும் நம்ப எதுவும் சொல்லல. எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு. வீட்ல சொன்ன நிச்சயமா சந்தோஷ படுவாங்க. 
உங்களுக்கு எப்படியோ. 
எனக்கு நிறைய பிரஷர் இருக்கு. ஒரு வரேன் இல்லைனா இன்னொரு வரன்னு கொண்டு வந்துருவாங்க. 
என்னைய பத்தி யோசிக்க மாட்டிங்களா ? ” கரசாரமாய் பேசிக்கொண்டிருந்தவள் தொண்டை கரகரக்க எழுந்து அங்கே இருந்த ஜன்னல் ஓரம் போய் நின்றுகொண்டாள். “
அவளது பேச்சை கேட்டு ஆயாசமாய் கண்களை மூடி இருக்கையில் சாய்தவன், சற்று தனிந்து அவளை பார்த்தான். அவளது முதுகு ஏறி இறங்கி கொண்டிருந்தது. மூக்கு உறிஞ்சினாள் போலும்.
மெல்ல எழுந்து வந்தவன், 
” ப்ச் ஸ்ரீ இங்க பாரேன். “
” நான் பார்க்க மாட்டேன் போ. ” 
அவளது புடைவை முந்தானை அங்கே இருந்த ஜுக்கில் மாட்டியிருக்க, அதை விடுவிக்க அதை அடிபட்ட கையால் எடுத்தான். 
அவன் அதை எடுத்ததும் வெடுக்கென இழுத்தவள், கோபமாக திரும்பி நின்று
” நான் இங்கே வந்ததே தப்பு. ரெண்டு நாள ஹோட்டல் லீவ் விட்டுட்டு. இப்போ யாரும் இல்லை.
 சோ அதனால மிஸ் பேகவ் பண்றிங்க. ” மூக்கை உறிஞ்சிக்கொண்டு கம்ப்ளைண்ட் வாசித்தாள். 
” அப்படியே நீ நிக்குற ஜன்னல் வழிய எட்டி வெளியே பாரு. ” 
அவனை சந்தேகமாக பார்த்துக்கொண்டே வெளியே எட்டி பார்த்தாள், வெளியே பஸ்ஸிற்கு போகும் கூட்டம் ஜகஜோதியாய் போயிக்கொண்டிருந்தது. 
” மக்க்கும்…” கனைத்தாள் அவள். 
” திரும்பு டி இங்க. 
நான் உன்கிட்ட மிஸ் பேக்கேவ் பண்றேன்னா. அச்சோ பாவம் அழுமூஞ்சியா இருக்கியேனு உன்கிட்ட வந்தா. 
என்னைய ஹராஸ் பண்ண பாக்குற. “
அவனை நோக்கி திரும்பியவள், 
” நான் ஒன்னும் அழுமூஞ்சி இல்ல. எனக்கு கோல்ட். ஷூட்டர திறங்க. நான் வெளியே போறேன். ” முகத்தை தூக்கினாள்.
” அதனா பார்த்தேன். நீயாவது அழறதாவது.
 நீ ஷூட்டர் மூடியிருந்த அப்போ தான் உள்ள வந்த. ” 
ஆமாம் அதுவே அவளுக்கு மறந்து விட்டது. ஷூட்டரின் பகுதியாக தான் வெளியே செல்லும் இயற்கை பொருள் அங்காடிக்கு வழி. அதன் வழியே வந்ததை மறந்துவிட்டாள். 
அவனை முறைத்தவள் வெளியே செல்ல பார்க்க, அவளை வழி மறித்தவன், 
” ஸ்ரீ இங்க பாரும்மா. “
” முடியாது டா. “
அவள் அருகில் கொஞ்சம் நகர்ந்து, 
” நம்ப கல்யாணம் பண்ணிகலாம். நான் வந்து சுந்தரம் மாமாட்ட பேசுறேன். ” இறுதியாக வாய் மலர்ந்தான். 
” ஒன்னும் வேணாம். ” முகத்தை வேறு புறம் திருப்பினாள்.  
”  எனக்கு வேணும். 
ஏன் உனக்கு வேணாம். இவ்ளோ நேரம் தய்ய தக்கனு குதிச்ச. 
இப்போ வேணாம்ன்ற. ” நியாயம் கேட்டான்.
” நான் தய்ய தக்கனு குதிச்சு தான் கல்யாணம் நடக்கணும்னு இல்லை. எப்போ பாரு ஃபர்ஸ்ட்ல இருந்து நானே தான் உன் பின்னாடி சுத்திட்டு இருக்கேன். 
எனக்கு ரொம்ப உன்ன கஷ்டபாடுதுற மாதிரி இருக்கு மாம்ஸ். 
நீ ஒன்னும் எனக்காக ஓகே சொல்ல வேண்டாம். விடு நான் கிளம்புறேன். ” அயர்ச்சியாய் அவள் குரல். கண்கள் வேறு திசையை பார்த்து இவனை பார்க்க மறுத்தது. 
” ஏய் சும்மா இருந்தவன இப்படி நாக்கு இழுதுக்குற அளவு பேசி ஒரு வழி பண்ணிட்டு. இப்படி மூஞ்ச தொங்க போட்டு போனா என்ன அர்த்தம். “
” நான் வீட்டுக்கு போறேன்னு அர்த்தம். “
” ஏன் உடம்புல இருக்க எல்லா கொழுப்பையும் பேசியே கரைய வச்சிட்டு வீட்டுக்கு போறளாம். போய் தான் பாரு நீ. “
” _______ “
” ராங்கி…” 
“________”
” ராங்கி இங்க பாரேன். நாளைக்கு கண்டிப்பா மாமாட்ட பேசுறேன். உனக்காக இல்லை. எனக்காக பேசுறேன். நானும் சீக்கிரம் ஃபேமிலி மேன் ஆகணும்ல. “
” இந்த டயலாக்கு ஒன்னும் குறச்சல் இல்லை. ” சலித்துக்கொண்டாள் அவள். 
” ஸ்ரீ நாளைக்கு எத்தன மணிக்கு வீட்டுக்கு வரட்டும். ” சின்சியராய் கேட்டான் வாசு.      
ஏதோ பெரிய மனதோட அவனை நிமிர்ந்து நோக்கினாள் ஸ்ரீ,      
” நாளைக்கு கொச்சின் கிளம்புறேன். ஏர்போர்ட்ல *** இந்த டைம்க்கு அட்டெண்டன்ஸ் குடுறிங்க. 
நான் அப்பாவோட அங்க வருவேன். 
வீட்ல வச்சு பேச இப்போ நம்ப ரெண்டு வீட்லயும் சிட்சுவேஷன் இல்லை. உங்க வீட்ல பெரிய மாமா கோவமா இருக்காங்க. எங்க வீட்ல பாப்பா வந்த சந்தோஷத்துல பாப்பா மேல ஃபுல் அட்டென்ஷன்ல இருக்காங்க அண்ட் இந்த வரன் விஷயம் வேற. ஏன் இவ்ளோ நாள சொல்லலனு  கேப்பாங்க.
சோ நாளைக்கு ஏர்போர்ட் வறிங்க. 
அப்பா கிட்ட உங்கள சர்ப்ரைஸ்ஸா இன்ட்ரொடியூஸ் பண்றேன், நம்ப விஷயம் பத்தி அப்பாகிட்ட நாளைக்கு பேசுறோம். அப்புறம் அப்பா வீட்ல சிட்சுவேஷன் பார்த்து எல்லாம் பேசிடுவாங்க. அவ்ளோ தான். ” என கட்டளை பிறப்பித்தவள், விடு விடு என வெளியே கிளம்பி விட்டாள். செல்லும் அவளையே விழியில் புன்னகையுடன் பார்த்திருந்தான் வாசு. 
அவர்கள் நன்றாக பேசியது அன்று தான், அதன் பிறகு எல்லாம் வேறு வேறாய் நடந்தது. 
அடுத்த நாள் ஸ்ரீ அவளது அப்பாவுடன் ஏர்போர்ட்டில் அமர்ந்த்திருந்தாள். 
” பத்து என்ன மா குழந்தைய பார்க்க வந்துட்டு ரெண்டு நாள கிளம்புற.”
” இல்ல ப்பா இப்போ நிறைய லீவ் எடுக்க முடியாது பா. இன்னும் டூ வீக்ஸ்ல ‌ சேர்த்து ரெண்டு நாள் லீவ் எடுத்துட்டு வரேன். ” என சொல்லிக்கொண்டே ஏர்போர்ட் எண்ட்ரன்ஸைப் பார்த்து பார்த்து பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். 
” என்ன ம்மா அங்கே பார்த்துட்டே இருக்க. “
” அது உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ப்பா. “
” என்ன ம்மா. ” ஆர்வமாய் கேட்டார் சுந்தரம். அவருக்கு இவள் என்ன விஷயத்தை சொல்கிறாள் என அனுமானிக்க வில்லை. ஏதோ கிஃப்ட் அது இது என ஏதாவது ஆர்டர் செய்திருப்பாள் என்றே எதிர்பார்த்தார். 
” கொஞ்சம் வைட் பண்ணுங்க ப்பா பிளீஸ். ” 
” சரி ம்மா சரி ம்மா. ” என சொல்லியவர் அவளுடன் வேறு ஏதேதோ உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். 
முழுதாக ஒரு மணி நேரம் கடந்தும் வாசுவை காணவில்லை. பத்மாவிற்கு அப்பாவிடம் என்ன சொல்வது என தெரியவில்லை. பத்மாவிற்கு மனதில் இருந்த வாசுவை அப்பாவிடம் காட்டிவிடும் உவகை எல்லாம் வடிந்து விட்டது.
” என்ன ம்மா. இன்னும் உன் சர்ப்ரைஸ்ஸை காணோம். “
” அது தெரிலப்பா. வந்துறேன்னு சொன்னாங்க. ” தட்டு தடுமாறி சொன்னாள். 
அதற்குள் ஃப்ளைட்டிற்கு அழைப்பு வர,
” யாரு மா. ” புரியாமல் கேட்டார்.
” அது டீடெயில்ல உங்க கிட்ட மொபைல்ல சொல்றேன் ப்பா. ” அவள் முகமே கவலையாய் இருந்தது. பேச்சில் ஒரு தொய்வு தெரிய ஏதோ புரிந்துக்கொண்டவர். 
” சரி மா. நீ அப்பாக்கிட்ட அப்புறமா சொல்லு. ” என ஆறுதல் படுத்தியவர், அவளை இப்போதே சொல் என கட்டாய படுத்தவில்லை. 
ஃப்ளைட்டில் அமர்ந்த ஸ்ரீபத்மாவிற்கு வாசுவின் நிலை பற்றி நிறைய எண்ணங்கள். முதலில் அப்பாவிடம் இப்படி யார் யவரென்றே தெரியாமல் ஒரு உருவமில்லா அறிமுகம் கொடுத்துவிட்டாள். அவர் வேறொன்றை எதிர்பார்க்க, இப்போது இவளது நடவடிக்கையே அவருக்கு சிலவற்றை சொல்லாமல் சொல்லிருக்கும் என அவளுக்கு புரிந்தது. அவருக்கு வரும் நாட்களில் என்ன பதில் சொல்ல போகிறாள் என தெரியவில்லை. அவன் வரவில்லையே என ஏமாற்றம், பிறகு அவன் ஏன் வரவில்லை என சிந்தனை. ஆனால் தவறி கூட அவனை தவறாக நினைக்க மனம் வரவில்லை.  
வாசுவின் மீது அவளுக்கு கோபம் வரவில்லை, ஆனால் அவன் எதானால் வரவில்லை என மனம் யோசிக்க அவள் கண் முன் அந்த கேங்ஸ்டெர்ஸ் வரவும், வாசுவிற்கு ஏதாவது பெரிய பிரச்சனையோ என தான் தோன்றியது. யாரிடம் கேட்பது என்று கூட தெரியவில்லை. சரி கொச்சின் சேர்ந்ததும் அழைத்து பேசலாம் என எண்ணியவள், அங்கே சேர்ந்ததும் அழைக்க, அவன் எடுக்கவே இல்லை. அன்று மட்டும் இல்லை அதன் பின்னான நாட்களிலும் அவன் தொடர்பு எல்லைக்கு அப்பால் தான் இருந்தான். இவள் எல்லைக்குள் வரவே இல்லை.
ஸ்ரீபத்மா தனிமை சூழப்பட்டு கொச்சின்னில் தனியாய் அவனின் அழைப்புக்காக ஒவ்வொரு நாட்களும் காத்திருந்தாள். 
கண்ணுக்குள் நீ தான் 
கண்ணீரில் நீ தான்  
கண்மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் 
என்னானதோ ஏதனாதோ சொல் சொல்…
அவளது மௌன உணர்வுகளின் பாடலாய் அவள் உள்ளம் பாடியது அவளுக்குள் மட்டும். 
அவனுக்கா மட்டும்.
     
   
          

Advertisement