Advertisement

இந்த பையன் விழுந்து விழுந்து கவனிக்கிறானேய்யா. சரி இல்லையே. தனியா சிக்குனதும் ஒரு விசாரணையா போடுவோம். ‘  என ராகவ் மனதில் வைத்து கொண்டான். 
ஆனால் ஸ்ரீபத்மாவோ யார் பரிமாறினால் எனக்கு என் பூரி தான் முக்கியம் என இலையை விட்டு அக்கம் பக்கம் திரும்பவில்லை. எல்லோரும் சாப்பிட்ட பிறகு இறுதியாக தான் அவள் எழுந்தாள். இலையில் இருந்த அனைத்தையும் முடித்து அவள் எழுந்து கை கழுவ கிச்சன் செல்ல, அவள் பின்னயே வாசு செல்ல, வாசு பின்னால் ராகவ் சென்றான். 
   அவள் கை கழுவி திரும்பி வந்து பின்னால் கன்றுக்குட்டி கத்திகிக்கொண்டிருக்க, அதற்கு பொங்கலை ஒரு இலையில் வைத்து எடுத்து சென்றாள். வாசு கன்றுக்குட்டியாய் அவள் பின்னால் செல்ல, வாசு பின்னால் முரட்டு கிடாயாய் ராகவ் சென்றான். 
ராகவ் கொஞ்சம் தள்ளி ஹால்ட் போட்டுவிட்டான்.
மரத்தடியில் ஸ்ரீ கன்றுக்குட்டிக்கு இலையுடன் பொங்கல் கொடுத்து திரும்பியதும் வாசு அவள் முன் ஒரு பேப்பர் கப்புடன் நின்றான். 
ஸ்ரீ புரியாமல் அவனை பார்க்க,
“ ஸ்ரீ இந்தா கேக். “
“ எல்லோருக்கும் ஐஸ் கிரீம் தான கடைசியா சர்வ் பண்ணிங்க, இது என்ன எனக்கு மட்டும் கேக். “ என அவனை நம்பாமல் புருவத்தை சுருக்கி கேட்டாள்.
“ கேக் எல்லோருக்கும் இருக்கு. இந்த கேக் ஸ்பெஷல்ல நம்ப ஹோட்டல்ல இனிமே போடலாம்னு இருக்கோம். நீ தான் கேக் நல்லா செய்வ, ஒரு வாய் டேஸ்ட் பண்ணி கரெக்ஷன் சொல்லிட்டா, நான் அதுக்கு ஏத்த மாதிரி சேஞ்ச் பண்ணிக்குவேன். “ என சீரியஸாக விளக்கினான்.
அவன் இப்படி சொன்னதும் அவனை இன்னும் நம்பாமல் பார்த்தவள் விலகி செல்ல பார்க்க, 
“ ஹேய் இரு ஸ்ரீ. நீ என்னை நம்பல தெரியும். இங்க பாரு. “ என சில போட்டோஸ் காட்ட, அவன் கடைகளில் இதே கேக் போல ஏதோ இருந்தது. அதை பார்த்தவள் இவனை ஏற இறங்க பார்த்து அவன் கையில் இருந்த கப்பை வாங்கி கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாக முகத்தை வைத்து ருசித்தவள், பின்பு மிக மிக சாதாரணமாக அவனை பார்த்து, 
“ அல் ஓகே. சென்டர்ல கொஞ்சம் கிரீமியா ஏதாவது வச்சிங்கன்னா நல்லா இருக்கும். 
அப்புறம் இது என்ன வீட்ல இத்தன பேர் இருக்க, என்கிட்ட மட்டும் கேக்குற பழக்கம். இனிமே இப்படிலாம் பண்ணாதிங்க. இனிமே கேக் டேஸ்ட் பண்ணுனு என்கிட்ட வராதிங்க. “
“ அதெல்லாம் முடியாது.
 உன்கிட்ட தான் கேப்பேன் நீ தான் சொல்லணும். 
ஏன் சொன்னா என்ன. “
“ நான் எதுக்கு மாமா சொல்லணும். “
“ நீ தான நாள பின்ன இந்த வீட்ல வந்து வாழ போற பொண்ணு. அப்போ என்னோட ஹோட்டல் வளர்ச்சில உனக்கு பங்கு இருக்கு தான. அதனால நீ தான் சொல்லணும். “ என சமரச பேச்சுவார்தையில் பக்குவமாக காதல் கதவை திறக்க பார்த்தான்.
அவனை அசல்டாக பார்த்தவள், “ உங்களுக்கு இங்க வேற ஒரு பொண்ண ஆச்சி பிக்ஸ் பண்ண பார்த்துக்கிட்டு இருக்காங்க. “ என அவன் திறக்க முயன்ற கதவை அப்படி இழுத்து மூடினாள். 
அவளைவிட இவன் அசல்டாக பார்த்தவன், “அதெல்லாம் வேணாம் சொல்லியாச்சு. உன் சேட்டையெல்லாம் என்கிட்ட நடக்காது. ஒழுங்கா நம்ப கல்யாணதுக்கு ரெடி ஆகு. இன்னும் ஒரே வாரத்துல நமக்கு கல்யாணம். நான் பிக்ஸ் பண்ணிட்டேன். “ என உறுதியாக சொல்ல,
அவனைப் பார்த்து உதடை வளைத்து சிரித்தவள், “ நீங்க கல்யாணம் பிக்ஸ் பண்ணுவீங்க மாமா. ஆனா நான் ஓகே சொல்லமாட்டேன். “ 
“ ஏன் ஸ்ரீ முதல இருந்து ஆரம்பிக்குற ? “ என உள்ளே போன குரலில் சொல்ல, 
“ யாரு ஆரம்பிக்குறா. நான் உங்கள ஏதாவது டிஸ்டர்ப் பண்றேன்னா. நீங்க தான் இப்போ என்னைய டிஸ்டர்ப் பண்றிங்க. “ என எங்கோ பார்த்துச்ச  சொல்ல, 
“ ஏன் ஸ்ரீ டிஸ்டர்ப்லாம் சொல்ற ? “
“ நான் அப்படி தான் சொல்லுவேன். “
“ சரி டிஸ்டர்ப்னே வச்சிக்கோ. உன்ன நம்பி தான் மேல நம்ப பெட்ரூம் பெருசா கட்டிருக்கேன். ஏன்னா நீ உள்ள வந்தா இடம் பத்தணும்ல. 
அப்புறம் கீழ சாஃப்ட் கார்பெட் போட்டுருக்கேன். நீ தூக்கதுல கட்டுல இருந்து உருண்டு விழுந்தா கூட உனக்கு பெருசா அடிபடாது. 
டைல்ஸ் கூட நல்ல மெடீரியல் தான் போட்டுருக்கேன். நீ விழுந்து அது உடஞ்சிட கூடாதுல. 
அப்புறம் இந்த முற்றத்துல நீ, நம்ப லக்ஷ்மி குட்டியோட ஓட நான் உங்க ரெண்டு பேரையும் துரத்தி பிடிக்க, இப்படி எல்லாம் நான் பிளான் பண்ணிருக்கேன் தெரியுமா.
அப்புறம் ஒரு ஊஞ்சல் கூட ஆர்டர் கொடுத்துருக்கேன், நீ அதுல நின்னு குதிச்சா கூட கீழ விழுக்காது. உன்னை அப்படி தாங்கும். என்னைய  மாதிரியே. அதுக்கு தான் ஸ்ரீ சொல்றேன், என்னை கல்யாணம் பண்ணிக்கோ “ என இசகு பிசக்காய் அவள் முன் நின்றும் அவளை பார்க்கமல் கண்களில் கனவுகளுடன் வேறு புறம் பார்த்து ப்ரபோஸ் செய்தான். 
தூரத்தில் நின்ற ராகவ்விற்கு எதுவும் கேட்கவில்லை, ஆனால் வாசு ஏதோ அவளிடம் சொல்ல, ஸ்ரீபத்மா கன்னங்கள் ஸ்பிசி மிளகாயாய் மாறியது ராகவிற்கு தெரிந்தது. 
‘ டேய் அந்த பொண்ணு கிட்ட என்ன டா சொல்ற, அந்த புள்ள உன்ன டெர்ராரா பார்க்குதே டா. ‘ என இங்க இருந்து இவன் மைண்ட் வாய்ஸ்ஸில் புலம்ப, வாசுவிற்கு கேட்டால் தானே, 
‘ அந்த பொண்ணு உன்ன அடிச்சிட போகுது டா. எதுக்கும் உன்ன காப்பாத்த நான் வரேன் டா. ‘ என மெல்ல அவர்களை நோக்கி அடி எடுத்து வைத்தான். 
ஸ்ரீபத்மா வாசு சொன்னதையெல்லாம் கேட்டவள் காண்டாகி போக கீழே சாணி கிடக்க, அதை வாசுவின் கவனம் கலையாமல் எடுத்தவள், பின்னே சிறு உருண்டையாக உருடியவள் அதை கொண்டு வாசுவின் மீது வீச, அது சரியாக வாசு இவள் புறம் திரும்பிய சமயம். 
    அந்த உருண்டை வாசுவை விட்டு பின்னால் வந்த ராகவின் முகத்தில் அடிக்க, ஸ்ரீ ‘ அச்சோ அந்த அண்ணாக்கு பட்டுடுச்சா ‘ என பதறி ஓட பார்க்க, அவள் சாணி அடித்ததும் தெரியாமல் வாசு ஓடும் அவளை தடுப்பதிலே கபடி ஆடிக்கொண்டு குறியாய் இருந்தான். 
  ஸ்ரீபத்மா எப்படியோ வாசுவை தாண்டி செல்ல பார்க்க, அப்போது அவளது கால்கள் தடுக்கி விழுவது போல் போக, அவளை காப்பாற்றுகிறேன் என வாசு பிடிக்க போய் அவன் தடுக்கி விழ, கடைசியில் ஸ்ரீபத்மா மண்ணில் மல்லாக்க விழ இருந்த வாசுவை ஃப்ளையிங் பொசிஷன்னில் அவனை தாங்கி பிடித்திருந்தாள்.
இஞ்சி இடுப்பழகா…
மஞ்ச சிவப்பழகா…
கள்ளச் சிரிப்பழகா… 
கள்ள…
இஞ்சி…
என இறுதியில் திக்கி திக்கி படியது வாசுவின் மொபைல் அல்ல… அல்ல… அல்ல…
ராகவ்வின் மொபைல். 
அதை கேட்ட வாசு தன்னிலை மறந்து பத்மாவின் முகத்தை பார்த்திருக்க, பத்மாவோ ராகவ் வருகையால் சிறிது விழித்தாலும், வாசுவை விடவில்லை. வாசுவின் நிலை அப்படி.  
ஸ்ரீபத்மாவும் நடிகை ரேவதி போல் மூச்சு விட திக்கி கொண்டு இருந்தாள். வெட்கத்தால் அல்ல, அவளது பைசன்னது வெயிட் தாங்க முடியாமல் மூச்சு விட திக்கிக்கொண்டிருந்தாள். 
ஸ்ரீபத்மாவின் மலர் முகம் இவன் வெயிட்டை தாங்க முடியாமல் தம் கட்டி இருக்கும் நிலைமையை பிரதிபலிக்க, ஆனால் வாசுவோ அவளது முகத்தை இத்தனை அருகில் பார்த்த மகிழ்ச்சியில், தன்னிலை மறந்து அப்படியே எழாமல் இருந்தான். அவனது ராங்கியின் மலர் முகத்தை நேரம் காலம் தெரியாமல் ரசிக்க, அவன் எழுவான் என முயன்று பார்த்தவள் அவனது முகத்தின் ரசனை போக்கு புரிய, அவனை அப்படியே ‘ டம் ‘ என கீழே விட்டு விட்டு ராகவ்விடம் விரைந்து, 
“ சாரி அண்ணா.  “
என சொல்லியவள் அவனுக்கு தண்ணி கொண்டு வர உள்ளே ஓடி விட்டாள். ஆனால் கீழே விழுந்த வாசு, படுத்த வாக்கிலே ஒரு கையை தலைக்கு  வைத்து தாங்கியவன் ஒருக்களித்து சயன கோலத்தில் படுத்து, ஓடும் அவளையே கண் வாங்காமல் புன்னகையுடன் பார்த்திருந்தான்.
இந்த காட்சியெல்லாம் பார்த்து அசையாமல் சாணி அப்பிய முகத்துடன் நின்றிருந்த ராகவ் காதிலும் வாயிலும் புகை வர, மெல்ல வாசு அருகில் வந்து அவன் எழ கை கொடுத்தான். 
வாசு அவனை பார்த்ததும் உள்ளே சிறிது ஜெர்க் ஆனாலும் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. முழுதாய் நனைத்த பின் ரைன் கோட் எதற்கு என்ற நிலை தான் போலும். அதனால் அவன் கை பிடித்து எழுத்தவன், அப்போது தான் ராகவ்வின் முகத்தை பார்த்தான். 
“ மச்சான் ஏன் டா கௌ டங்க் ஃபேஷயில் போட்டுருக்க. “ என புரியாமல் கேட்க, 
ராகவ், “ நானாவது முகத்துக்கு தான் டா ஃபேஷயில் போட்டுருக்கேன். நீ உன் வேட்டிய பாரு. “ என சொல்ல அப்போது குனித்து வேட்டியை பார்க்க, ஆங்காங்கே மண் பட்டிருக்க, 
“ ஓஹ் இது கேக்குறியா மச்சான், நீ எப்படி ஃபேஷயில் போட்டுருக்கியோ, அது மாதிரி இது முல்தானி மிட்டி மசாஜ் டா. “ என சமாளித்து சொன்னவன் அப்படியே வேட்டியை கழட்டி மரத்தில் சொருகி வைக்க, அவன் உள்ளே போட்டிருந்த பேண்ட்டை பார்த்து இப்போது அதிர்வது ராகவ் முறையானது. 
“ என்ன மச்சான் இவ்ளோ ப்ரிப்பேர்ட்டா வந்துருக்க. “
“ அது மச்சான், வீட்டு பூஜ முடிஞ்சதும் இந்த பிரேபரஷன்க்கு மாறிட்டேன்டா. எதுக்கும் ஒரு சேஃப்டிகாக தான். “
இதெல்லாம் ராகவ்விடம் சர்வ சாதாரணமாய் சொல்லிக்கொண்டிருந்தான் வாசு. ராகவ் கண்டு கொண்டான் என்ற நினைப்பெல்லாம் அவனுக்கு இப்போது வரவே இல்லை. இந்நேரம் அவன் எதையாவது ஊகித்திருப்பான் என வாசுவிற்கு தெரிந்தது. அது மட்டும் இல்லாமல் அவனுக்கு இன்னும் ஸ்ரீயின் கைகளில் மிதந்து கொண்டிருக்கும் நினைப்பு.   
அதற்குள் ஸ்ரீபத்மா தண்ணீரோடு வந்தவள், ராகவ்விடம் கொடுத்து விட்டு வாசுவை பார்க்காமல் திரும்பிச்செல்ல, செல்லும் அவளையே விழியெடுக்காமல் பார்த்திருந்தான் வாசு. 
மறக்குமா மாமன் எண்ணம்… 
மயக்குதே பஞ்சவர்ணம்… 
மடியிலே ஊஞ்சல் போட… 
மானே வா…
என ராகவ் மொபைல் வாசுவின் நிலையறிந்து இசைத்து கொண்டிருந்தது.     
              
        
 
      
              
      

Advertisement