Advertisement

இவர்கள் இருவரும் ஹெல்மெட்டுடன் பேருந்தில் எறியிருக்க உள்ளே இருந்த கூட்டம் இவர்களை பார்த்து சிரித்தது. இவர்கள் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு பேருந்தில் பயணம் செய்தால் மக்கள் வேறு என்ன செய்வர்.
பேருந்தில் அரை கூட்டம் தான், சில இடங்கள் காலியாக இருக்க ஸ்ரீபத்மா நடு சீட்டிற்கு பின்னே சற்று தள்ளி காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். இவர்கள் முன் படியின் அருகே சீட் இருந்ததால் இருவரும் அங்கேயே அமர்ந்தனர். 
“ ண்ணா இந்த அவமானம் நமக்கு தேவையா. என்ன ண்ணா நீங்க, இப்படி பண்ணிடிங்க. “
“ விடு டா, விடு டா… எல்லாம் உங்க அண்ணிகாக தான டா. “ 
“ இனிமே உங்க கூட வரவே மாட்டேன். எல்லோரும் சிரிக்கிறாங்க பாருங்க. ஆண்டவா நான்லாம் எங்க இருக்க வேண்டிய ஆளு. என்னைய இப்படி ஆக்கிடியே. “ என கிருபா புலம்ப, 
“ டேய் நம்ப இப்போ இப்படி எல்லாம் பண்ணா தான் டா நாளைக்கு உன் அண்ணனுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும். “
“ அப்படின்றிங்க . “
“ ஆமான்றேன். “
“ ண்ணா அண்ணி சீட் பக்கத்துல ப்ரீ. நீங்க போய் அங்க உட்கார்லம்ல.“ 
“ டேய் நான் சோலோ பெர்ஃபார்மன்ஸ் கூட கொடுத்துகிறேன் டா. நீ அடுத்த ஸ்டாப்ல இறங்கிடு. “
“ Why ? “
“ என்னால மண்டைல கட்டோட சுத்த முடியாது டா, அதான். “
“ என்ன ண்ணா இப்படி சொல்லிடிங்க, நம்ப தான் ஹெல்மெட் போட்டுருகோமே. அப்புறம் என்ன ? “
 இவர்கள் இப்படி இருக்க, கண்டக்ட்டர், பின்னால் இருந்து டிக்கெட் கொடுத்து கொண்டே வந்தவர் இவர்களிடம் வந்ததும், 
“ தம்பிகளா எங்க ஹெல்மெட் போடணுமோ அங்க போடாம இங்க போட்டா  நல்லவா இருக்கு. கழட்டுங்க. எங்க போகணும். “ என சவுண்ட் விட,
“ ரெண்டு டிக்கெட் டவுன் பஸ் ஸ்டண்ட். “ என டிக்கெட் வாங்கி கொண்டு வாசு கிருபாவை பார்க்க, கிருபா வாசுவை பரிதாபமாக பார்த்துவைத்தான். 
இருவரும் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழட்டினர். வாசுவை பார்த்ததும் பேருந்துக்குள் சலசலப்பு. 
“ தம்பி நீங்களா, என்ன தம்பி பஸ்ல வந்துருக்கிங்க.” என கண்டக்டர் ஆச்சர்யமாக கேட்க,
“ ஒன்னும் இல்ல அண்ணே, தம்பி ஆசப்பட்டான் , அதான் அப்டியே ஒரு ரைட் போலாம்னு வந்தோம். டூ வீலர்ல வந்துட்டு அப்படியே எறிட்டோமா அதான் ஹெல்மெட்டோட எறிட்டோம். “ என புழுகி வைத்தான் வாசு. 
கிருபா வேறு வழியே இல்லாமல் ‘ஈஈஈஈ’ என சிரித்து வைத்தான்.  
“ நம்ப ஊரு வாசுதேவன் தம்பியா அது. அவர் எதுக்கு பஸ்ல வந்துருக்காரு. “
“ அந்த தம்பியா…இருக்காது. “
“ அட ஆமா யா அந்த தம்பி தான். எவ்ளோ பெரிய ஆளு பஸ்ல வந்துருக்காரு. அந்தான் ஹெல்மெட் போட்டு கிட்டாரோ. “
“ வாங்கயா அவர் கூட ஒரு போட்டோ எடுத்துப்போம். “
இப்படி ஆங்காங்கே குரல்கள் வர, அதன் பின் வாசுவின் அருகே தான் மொத்த கூட்டமும். அவரவர் வந்து வாசுவிடம் கை குலுக்க, கட்டி அனைக்க, அதில் ஒரு வயதான பாட்டி வேறு அவன் தாடைய பிடித்து கிள்ளி முத்தம் வைக்க, ஒரே அட்ராசிட்டியாக இருந்தது.
அதிலும் சில கல்லூரி மாணவர்கள் வேறு வாசுவை சூழ்ந்துக்கொண்டு ஏதோ பேசி சிரித்து கட்டி பிடித்து கத்தி கொண்டு செல்ஃபி எடுக்க, மாணவர்கள் முகத்தில் ஒரு தனி மகிழ்ச்சி. அவர்களை ஒத்த ஒரு இளம் வயதினன் சாதித்தால், அதை எப்படி வெளிபடுத்துவார்களோ, அந்த உற்சாகம் அவர்கள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.   
பொதுவெளியில் மக்களின் அன்பை நம்பிக்கையுடன் ஒருவர் பெறுவது என்பது அத்தனை எளிதல்லவே. அதுவும் வாசுவை போல் ஆரம்ப கட்டதிலிருந்து மேலே வந்தவர்களுக்கு மக்களிடம் கிடைக்கும் மரியாதை, அன்பு, நம்பிக்கை எல்லாம் ஒரு தனி அனுபவம். 
வாசுவின் உணவகம் கிளைகள் டவுன்னில் அத்தனை பிரபலமாகிருக்க, அதுவும் சமூக வலைதளங்களின் மக்கள் கருத்து அதை இன்னும் பிரபலமாகியிருக்க, இவன் பேட்டிகள், இயற்கை விவசாய முறை உத்திகள் என எல்லாம் இவனை தனி உயரத்தில் வைத்திருந்தது. அதனால் வாசு இதற்கெல்லாம் பழகி இருந்தான். 
அவனது ஊரில் சாதாரணமாக தான் நடமாடுவான், ஆனால் ஊரின் எல்லையை தாண்டிவிட்டால் இவனிற்கு என தனி அடையாளம் உண்டு, மரியாதை உண்டு. அதனின் பிரதிபலிப்பு இவை. இப்போது தான் ஸ்ரீபத்மா இதை நேரில் பார்க்கிறாள். 
வாசுதேவனை நேசிக்க இத்தனை உள்ளங்கள் சூழ்ந்திருபத்தை ஒரு மென் ரசனபாவனையுடன் சாதாரணமாக பார்த்திருந்தாள். இதே அவன் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் அப்படி தான் பார்த்திருப்பாள். 
இவளுக்கு இதனால் ஒன்றும் இல்லை, ஒரு வித்யாசமான அனுபவம் மட்டுமே.
பிறகு அடுத்த ஸ்டாப் வர, இன்னும் கூட்டம் ஏற வாசு மக்களின் கவனிப்பில் தத்தளித்து விட்டான். பஸ் அந்த ஸ்டாப்பில் நின்றதும் பஸ் ஓட்டுனர் வந்து வாசுவிடம் நின்று செல்ஃபி எடுக்க, 
‘ முடில டா டேய். ‘ என ஸ்ரீபத்மா இறங்கியே விட்டாள். பின் இவனுடன் சென்றால், நேரதிற்கு வங்கியில் இருக்க முடியாது என தெரிந்து விட்டது.   
அவள் இறங்கியதை பார்த்ததும், இவனும் கிருபாவும் கூட்டத்தில் நீந்தி கீழே இறங்கினர். வாசு ஸ்ரீயை தேட, அவள் ஒரு ஆட்டோவில் சென்று விட்டாள். 
அதனை பார்த்தவன் திரும்பி பார்க்க மணியும் பின்னாலே கார் எடுத்து வந்தவன் இப்போது சரியாக அருகில் கொண்டு வர, அதில் ஏறிவிட்டனர் இருவரும். இன்னும் ஸ்ரீபத்மாவை போய் வங்கியில் பார்த்தாலும், அங்கும் தனிமையில் பேச முடியும் என தோன்றவில்லை. அதனால் இவனது ஹோட்டல் கிளை ஒன்றுக்கு போகலாம் என வண்டியை திருப்பச் சொல்லிவிட்டான்.
 “ மிஸ் பணிட்டேன் டா. “ என ஒரு இயலாமையோடு பின்னந்தலையை கோதி சீட்டில் சாய. 
“ சரி சரிண்ணா வுடுங்க ண்ணா, பொது வாழ்க்கைனு வந்தா இதெல்லாம் சகஜம். உங்கள மாதிரி ஒரு வீரரு இதுக்கெல்லாம் கலங்கலாமா. “
“ டேய்ய்ய்ய் நீ அடங்க மாட்டியா டா. “ என வாசு பல்லை கடிக்க, 
“ அண்ணே இவன விடுங்க. இப்போ என்ன பண்ணலாம். அண்ணிய எங்க மீட் பண்ண போறிங்க. “ 
“ நாளைக்கு தான் புது வீட்டு பூஜ இருக்குள்ள, அதுக்கு உங்க அண்ணி எப்படியும் வருவாங்க. அங்க வச்சு பேசணும்  “
“ ண்ணா அங்கே எப்படி ஹெல்மெட் போட முடியும். எல்லோரும் இருபாங்களே. “
“ டேய் இங்க அவனவனுக்கு ஒரு கவலைனா உனக்கு எப்டி டா இப்படி ஒரு கவலை. “ 
“ என்ன தான் நம்ப அடி வாங்கறதா இருந்தாலும், ஒரு நியாயம் வேணாமா ண்ணா. “
வாசு திரும்பி அவனை பார்த்த பார்வையில், 
“ ஓகே ஓகே…இப்போ ஏன் இவ்ளோ பாசமா பார்த்து வைக்கிறிங்க. ‘ விடு டானு ’ சொன்னா விட்டுட்டு போறேன். “ என அமைதியானன். 
பிறகு அங்கே யாரும் எதுவும் பேசவில்லை. வாசு தீவிரமாக ஏதோ யோசித்துக்கொண்டே வந்தான். அவனுக்கு ஸ்ரீபத்மாவிடம் எப்படி தனியாக பேசுவது என்பதற்கு ஒரு வழியும் கிடைக்கவில்லை. அவனுக்கு ஒரு அழைப்பு வர, பார்த்தால் ராகவ் அழைத்திருந்தான்.
“ சொல்லு மச்சான். “
“ கிளம்பியாச்சா டா. ஃபேமிலியோட நம்ப வீட்ல தான் எல்லோரும் தங்கணும்.”
“ வேன் எல்லாம் இங்க அரேஞ்ச் பண்ணிகலாம். “
இப்படி ஏதேதோ பேசி முடிதவனின் முகத்தில் ஒரு நம்பிக்கை கீற்று. 
“ மணி …நான் கடைக்கு ஒரு வாரம் சரியா வர முடியாது டா. ஏதாவது முக்கியமா இருந்தா மட்டும் என்னைய கூப்பிடுங்க. எல்லாமே நீங்க தான் பாரத்துகணும். “
“ ண்ணா என்ன ஆச்சு..“
“ ஃபிரண்ட்ஸ் ஃபேமிலியோட நாளைக்கு ஃபங்சனுக்கு வராங்க, இங்க தான் ஒன் வீக் ஸ்டே பண்றாங்க. “
“ இப்போ அதுக்கு தான் முகம் பளிச்சுனு இருக்கா. உங்க ஃபிரண்ட்ஸ் வராங்கனதும் அண்ணிய மறந்துட்டிங்க. “
“ யாரா அப்படி சொன்னது. உங்க அண்ணிய பேச வைக்க ஒரு சான்ஸ் கிடச்சுடுச்சு டா.” என உற்சாகமானான் வாசுதேவன்.

Advertisement