Advertisement

அவளின் மெல்லிய மையிட்ட விழிகளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்தவாரே,   
“ ஸ்ரீ, எனக்கு ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு விஷயம் நடந்துச்சு. “
“ ________”
“ ஒரு நாள் நான் மட்டும் தனியா என் ஹோட்டல்ல இருந்தப்போ ஒரு பொண்ணு வந்தா. 
என்கிட்ட அந்த பொண்ணு அவளோட பிரோபோசல் சொன்னா. “
“_________”
“ அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு எனக்கும் அவள பிடிச்சிது. ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சது. ஆனா அவ கிட்ட சொல்லல டைம் கேட்டேன் சில ரீஸன்ஸ்காக‌. அவளும் சரி சொன்னா.”
“__________”
“ ஆனா நான் கேட்ட டைம் முடிறப்போ, சில விஷயங்கள் நடந்துடுச்சு. தப்பு என் மேல தான். தெரிஞ்சே அந்த தப்ப செஞ்சேன். என்னால அவ பாதிச்சுட கூடாதுனு செஞ்சேன். 
அது அவள அப்போ எவ்ளோ ஹர்ட் பண்ணிருக்கும்னு தெரியும். வாழ்க்கைல சில நேரம் நம்ப முன்னாடி ரெண்டு விஷயம் இருக்கும். 
ஒன்னு சின்ன கஷ்டம் இன்னொனு பெரிய கஷ்டம். 
எப்படியும் நம்ப கஷ்டப்பட்டு தான் ஆகணும்னு எனக்கு ஒரு சிட்சுவேஷன், அதனால நான் சின்ன கஷ்டமா எடுத்துக்கிட்டேன், ஆனா அதோட தாக்கம் உன்கிட்ட எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். இருந்தாலும் அப்படி செஞ்சேன். எப்படியும் ஒரு நாள் அவள பார்த்து ஏன் அப்படி ஆச்சுனு சொல்லிடலாம்னு ஒரு நம்பிக்கை.  
ஆனா அந்த பொண்ணு என் கூட அப்புறம் பேசவே இல்லை. என்னை அவாய்ட் பண்ணிட்டா. அவள திரும்பவும் பார்க்க என்னைய அவ விடல.“
“__________” 
“ இப்போ என்னைய கல்யாணம் பண்ண சொல்லி அவகிட்ட கேக்குறேன். ஆனா அவ கண்டிப்பா மாட்டேன்னு சொல்றா. 
பட் அந்த பொண்ணு, அவளோட கண்ணுக்குள்ளயே என்னைய புடிச்சு வச்சிருக்கா. அவ கண்ணுக்குள்ள இருந்து என்னால வெளி வர முடில. 
வர பிடிக்கல. 
மூச்சு முட்டுனா கூட அதுக்குள்ள தான் விழனும்னு தோனுது. வாழ்க்கை முழுசும் அதுலயே இருக்கணும்னு ஆசையா இருக்கு. 
அவ வாய் என்கிட்ட எவ்ளோ பேசும் தெரியுமா. இப்போலாம் என்கிட்ட கொஞ்சமா தான் பேசுறா. பேசினாலும் என்னைய அவாய்ட் பண்றா.
அவளுக்கு அப்போ என்னை ரொம்ப பிடிக்கும். என் கூட முயல் குட்டி மாதிரி பின்னாடியே வருவா, என்னைய பிச்சு பிரண்டுவா, மிரட்டுவா, கைல கிடச்சத வைச்சு அடிப்பா, என் கூட விளையாடுவா, சிரிப்பா, என்னையும் சிரிக்க வைப்பா. 
ஆனா இப்போ அவ என்கிட்ட இல்லை. “ 
விடாமல் பேசியவன், கொஞ்சம் இடைவெளி விட்டான்.
 சிறிது அசுவாசம் கொண்டான். பின்பு அவள் கண்களை நேரிடையாக பார்த்து
“ ரொம்ப மாசம் கழிச்சு இப்போ அவள பார்த்தேன். என்னால சரியா மூச்சு கூட விட முடில. அவ நம்ப கிட்டா பேச மாட்டாளானு காதுக்குள்ள அவ்ளோ சத்தம். 
வெளில சத்தம் கேட்டா காத மூடிக்கலாம். ஆனா உள்ள இருந்து காதுக்குள்ள கேட்டா எப்படி மூடுறது. 
சத்தியமா எனக்கு தெரில. 
என்கிட்ட ஒன்னுமே இல்லாதப்போ அவ என்கூட இருந்தா, எனக்காக இருந்தா. 
ஆனா இப்போ நான் நினச்ச இடத்துல நான் இருக்கேன். 
பட் அவ என்கூட இல்லாம இப்போ உன் கூட இருக்கா. 
அந்த அழகானா ஹாப்பியான பொண்ண என்கிட்டயே திருப்பி கொடுத்துடு ஸ்ரீ . 
நான் உன்கிட்டாயே திருப்பி வந்துறேன்.” 
என சொல்லி முடித்து அவளை அசையாமல் ஆவலாக பார்த்து நின்றான்.
 ‘ இது உண்மையில்ல, இது கனவு ‘ என கண்களை ஒரு நிமிடம் மூடி திறந்து பார்த்தாள், ஆனால் அவன் தீவிரமாக விழிகளால் இவளின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தான். 
இத்தனை மாதங்கள் தள்ளி வைத்ததெல்லாம் ஒரே நாளில் அவன் சொல்லி முடிக்க, வாசுவிற்கு என்ன பதில் சொல்ல என அவளுக்கு தெரியவில்லை.  
வாசு விஷயத்தில் ஸ்ரீபத்மாவிற்கு ஒரு நிதானம் வந்திருந்தது. பதில் சொல்லாமல் விழிகளை வேறு புறம் திரும்பிக்கொண்டாள்.  
ஆனால் வாசுவோ தவித்துப்போய் அவள் பதிலுக்காக அந்த திருப்பிய விழிகளை பார்த்தவாரே நின்றிருந்தான்.
என் இன்பம் என் துன்பம்  
எல்லாமே நீ அன்பே 
என் வாழ்வும் என் சாவும் 
உன் கண்ணின் அசைவிலே…
என வாசுவின் மொபைல் கரோக்கி இசைக்க, அவனது உணவகத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. 
இந்த இடைவெளியை பயன்படுத்தி கட கடவென பஸ் ஸ்டண்ட்டிற்கு போகும் பாதையை நோக்கி நடக்க தொடங்கி விட்டாள் ஸ்ரீ. 
இதை எதிர்பார்க்காதவன் அழைப்பை விட்டு, அவள் பின்னே ஓட்டமும் நடையுமாக தொடர, 
” ஹேய் ஸ்ரீ நில்லு. “
அவள் திரும்பவே இல்லை.
” ராங்கி…எனக்கு பதில் சொல்லிட்டு போ.”
அவள் இன்னும் கால்களில் வேகம் கூட்ட, 
” நீ பதில் சொல்ற வரைக்கும் உன் பின்னாடி தான் வருவேன். “
அவள் அதற்கும் செவி சாய்க்காமல் முன்னேறி நடக்க, இவனும் விடாமல் தொடர்ந்தான். அவள் குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் முன்னே செல்ல, 
” ஹேய் நில்லு ஒரு பதில் சொல்லிட்டு போ. இல்லைனா உன் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்பேன். ” 
ஸ்ரீபத்மா நிற்கவே இல்லை, ஒரே நேர் நடை தான், வேகமாக அந்த பாதையின் முடிவிற்கு வந்துவிட்டாள்.  
பஸ் ஸ்டண்ட் என்னும் அந்த ஒற்றை மரத்திற்கு கீழே நிற்கும் கூட்டம் மிக சிரியதாய் இருந்தது. ஸ்ரீபத்மா விரைவாக வந்து அந்த கூட்டத்தில் நின்று கொண்டாள். 
இதே பாதையில் ஒரு நாள் அவள் ஸ்‌கூட்டியில் இவனை பின் தொடர்ந்த கதையெல்லாம் இருக்க, இன்று வாசு இப்படி நடந்தது ஸ்ரீபத்மாவிற்கு புதிதாக இருந்தது. இருவரின் விலகல் முன்னே இவளிடம் அவன் இப்படி எல்லாம் பேசியதே இல்லை. இவளாக பேசினாலும் பெரும்பாலும் ஒரு ஸ்ட்ரிக்ட் மோட்டில் தான் இருப்பான். எப்போதாவது நன்றாக பேசுவான், அப்போதும் கூட அவனது இயல்பான நட்பான பேச்செல்லாம் இவளிடம் பேசியதில்லை. ஆனால் அப்படி இருந்தவன் இன்று பேசியதெல்லாம் இவளுக்கு புதிதாக இருந்தது.
மரத்தடிக்கு சென்று நின்று இன்னும் கொஞ்சம் நிதானமாக அசுவாசம் கொள்ள, சற்று தள்ளி எதிரில் இருக்கும் வாசுவின் குடில் உணவகத்தின் முன்னே கிருபாவும் மணியும் காரில் இருந்து ஏதோ பெரிய பேக் எடுத்து கொண்டு இவள் இருக்கும் இடம் நோக்கி வந்து, இவளை விட்டு தள்ளி நின்று கொண்டனர். இவளை பார்த்து வரவேற்பாய் ஒரு தலையசைப்பு அவராளிடம். இவளும் பதிலுக்கு தலையசைத்தாள், ஆனால் என்ன நடக்கிறது என ஸ்ரீபத்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை.  
வாசுவிடம் இருந்து விலகி வந்தாலும் இவர்கள் நட்பு அப்படியே தான் இருந்தது. ‘ என்னை அண்ணினு மட்டும் கூப்பிடாதிங்க ‘ என ஒரே ஒரு கண்டிஷன் போட்டு இவர்களை வாசுவை பற்றி பேசாதவாறு ஆஃப் செய்திருந்தாள்.  
ஸ்ரீயின் பின்னே வந்த வாசுவின் வேக நடை ஆமை நடையாக மாறி கிருபாவிடம் வர, அங்கே இருந்த சிறிய கூட்டமும் வாசுவை சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்துக்கொண்டிருந்தது. ஏதோ அவன் பஸ்ஸில் வருவது அதிசயம் போல் அவனிடம் கேள்வி கேட்டு பேசிக்கொண்டிருந்தனர். 
இவர்கள் ஊரின் பெயர் சொல்லும் ஆள் இவன். அவனின் வளர்ச்சி அனைவருக்கும் தெரியும். அவன் தொழிலுக்காக வேண்டி எப்போதும் டவுன்னிற்கு போக வர கார் பயன்படுத்த, அவன் ஏதோ பஸ்ஸில் வருவது இவர்களுக்கு ஆச்சர்யமாய் இருக்கும் போலும். 
சிறிய ஊர் தானே, அவர்களுக்கு இப்போது இவன் என்ன செய்தாலும் அதில் ஒரு ஆச்சர்யம், கேள்வி, விசாரிப்பு, மகிழ்ச்சி. அனைவரும் கிராமத்து உள்ளங்கள். 
அப்போது அங்கே ஏதோ ஒரு பஸ் வர, அந்த சிறிய கூட்டத்தில்  ஒன்றிருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் அந்த பஸ்ஸில் கிளம்பி விட்டனர்.  
மீதி ஒன்றிருவர் இவனுடன் பேசி முடித்தும் இவன் கிருபாவிடம் திரும்பிய போது,    
“ நீங்க செலிப்ரிட்டி ஆனாலும் ஆனிங்க நம்ப எல்லாம் வெளிய நிம்மதியா போயிட்டு வர முடியலையே. 
ச்ச ச்ச நம்ப ரேஞ்ச்சுக்கெல்லாம் தனியாஆஆ ஒரு பஸ் வாங்கி அதுல மாஸ்ஸா போகனும். ” என கிருபா அலபறையை கூட்ட, 
“ டேய் நீ ஓவேரா போர டா. 
நான் எங்க டா செலிப்ரிட்டி ஆனே ? “ என அப்பாவியாய் வாசு கேட்டு வைக்க,
“ இந்தா ஆயிட்டிங்கள்ள….
இவ்ளோ கூட்டம் சேர்ந்த அப்போவே நம்ப எல்லாம் செலிப்ரிட்டி ஆயாச்சுல்ல.
ண்ணா உங்களுக்கு உங்க ரேஞ்ச்சே தெரில. அது என்னனா…“ என கிருபா ஒரு தினுசாய் கையசைத்து சொல்ல ஆரம்பிக்க, 
“ வேணாம் டா…எனக்கு என் ரேஞ்ச்சே தெரிய வேணாம். என்னைய ரொம்ப சோதிக்காத டா “ என வாசு பல்லை கடித்துச் சொல்ல,
“ ஓகே ஓகே இப்போ எதுக்கு உங்க பல்ல ஸ்ட்ரைன் பண்றிங்க…நம்ப உருப்படியா பேசலாம்.
ண்ணா அண்ணி என்ன சொன்னாங்க. “ என ஆர்வமாய் வாசுவின் காதை கிருபா கடிக்க,
அவனை பார்த்து முறைத்த வாசு, “ டேய் இப்போ நான் ஏதாவது உன்ன கேள்வி கேட்டேனா. “
“ இல்ல “
“ அப்போ நீயும் என்னை கேட்காத. “ 
“ இல்ல அங்க இருந்து ஓடி வந்த மாதிரி இருந்துச்சு, இங்க வந்து நடந்து வந்திங்க…
அதான் ஏதாவது நாய் விரட்டி வந்துடுச்சானு…
உங்களுக்கு அப்போ அப்படி மூச்சு வாங்குச்சே, அதான் ஒரு அக்கறைல கேட்டேன்.”
வாசு திரும்பி அவனை பார்த்த பார்வையில், 
“ ஓகே ஓகே…கடி எதுவும் வாங்கலல…அப்போ பிரச்சன இல்லை. “ என கிருபா சமாதான பட்டர்ஃப்ளையை பறக்க விட்டான்.  
இவர்கள் இங்கே பேசிக்கொண்டு இருக்க, இவர்கள் யாரையும் கவனிக்காது ஸ்ரீ வாட்சை வாட்சைப் பார்த்து வைத்தாள். 
இப்போது வாசு அவளை பார்த்து ஓரடி முன்னே வைக்க, அதை உணர்ந்தவள், அவசரமாக ஹேண்ட்பேக்கிலிருந்து வாட்டர் பாட்டில் எடுத்து கையில் இறுக்கி பிடித்து வாசுவை பார்த்து முறைத்து வைத்தாள். 
இந்த கேப்பி‌ல் ஒரு பஸ் வர அதில் அங்கே வாசுவிடம் பேசியிருந்த மற்ற ஊர் நபர்களும் ஏறி சென்றுவிட்டனர். 
ஸ்ரீயை பாட்டிலுடன் பார்த்த வாசு அசராமல், “ கிருபா நம்ப மெடீரியல்‌ எடு. “ என சொல்ல, இவர்களை என்ன செய்கிறார்கள் என பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீபத்மா. 
‘ சுத்தி யாருமே இல்லையே, ஒரு வேல நம்பள கடத்திடுவாங்களோ. அவ்ளோ பெரிய பேக் எதுக்கு வச்சிருக்கான். கார் வேற அங்க நிக்குது. 
சரி வந்தா கராத்தேல ஒரே ஸ்‌டோர்க் தான், அவன் அப்படியே விழுந்தடனும். நம்ப ஓடி போய் தப்பிசுடலாம். ‘ என எக்கு தப்பாய் பிளான் செய்து ஸ்ரீ அவனை விழியால் மிரட்டிக்கொண்டு நின்றாள்.
கிருபா அந்த பெரிய பேக்கில் இருந்து அவர்களின் மெடீரியல்ஸ்‌ எடுத்தான்.  
வாசு ஒரு ஹெல்மெட் எடுத்து தலையில் மாட்ட, 
அவனை தொடர்ந்து கிருபாவும் மணியும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக ஹெல்மெட்டை மாட்டி,
‘ நாங்க எல்லாஆஆ அடிக்கும் ரெடியா தான் வந்துருக்கோம். ‘ 
என்ற ரேஞ்ச்சில் வாசு இவளை பார்த்துவைக்க, ஸ்ரீபத்மாவிற்கு என்ன முயன்றும் அப்படி ஒரு சிரிப்பு வந்தது. 
ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் வேறு புறம் திரும்பி சிரிக்க, இப்போது அந்த மரத்தடி பஸ் ஸ்டண்ட்டில் இவர்கள் நால்வர் மட்டுமே.  
“ ண்ணா அண்ணி அந்த பக்கம் சிரிக்கிறாங்க போல, இந்த தான் நல்ல டைமிங் அப்படியே முன்னாடி நடந்து போயி தடுக்கி விழுற மாதிரி அவங்க கால விழுந்துடுங்க. “ என உசுப்பேத்த, 
“ எல்லாம் எனக்கு தெரியும் அமைதியா இரு டா. “ என சொல்லி வாசு பத்மாவை நோக்கி நடக்க, 
அவன் இவளிடம் வரும் கேப்பி‌ல் ஸ்ரீபத்மா ஸ்ட்ரிக்ட் மோடிற்கு செல்ல,  அப்போது டவுன் செல்ல இன்னொரு பேருந்து வர அதில் ஏறி விட்டாள் ஸ்ரீபத்மா. 
இதை இப்போது எதிர்பாராத வாசு ஒரு நிமிடம் தயங்கி, பின் ஏதோ முடிவு செய்தவன் திரும்பி மணியை பார்க்க, அதை புரிந்து கொண்டவன் கார் எடுத்து வர சென்றுவிட்டான்.
ஆனால் ஸ்ரீயை மிஸ் செய்யக்கூடாது என வாசு கிருபாவுடன் பேருந்தில் ஏறினான். 

Advertisement