Advertisement

        ஸ்ரீபத்மாவைப் அன்று பார்த்து வந்ததிலிருந்து வாசுவிற்கு ஏதோ ஆகிவிட்டது. கொச்சின்னில் அவள் இருந்த போது அவளது விலகல் தெரிந்தாலும், எப்படியும் ஒரு நாள் அவளை பார்த்து விடுவோம் பேசிவிடுவோம் என தன்னை தானே இத்தனை நாட்களாய் தேற்றிக்கொண்டிருந்தான். ஆனால் இரண்டு நாள் முன் இவனை தள்ளி நிறுத்திய அவளது பேச்சு இவனை தூங்க விடவில்லை. ஒன்றரை வருடம் முன் இவனது செயல் அவளை எந்த அளவு பாதித்திருக்கும் என இப்போது அவனால் நன்கு உணர முடிந்தது. 
இனியும் ஸ்ரீபத்மாவை அப்படியே விட்டால், அவளது வாழ்விலிருந்து இவனை முழுதாக ஒதுக்கி தள்ளி விடுவாளோ என வாசுவிற்கு மண்டை காய, இப்போது ஸ்ரீபத்மாவின் வீட்டின் அருகில் சற்று தள்ளி நின்று கொண்டிருக்கிறான், கூடவே கிருபாவும் மணியும்.
கிருபா, மணி, ஸ்ரீதர் இப்போது வாசுவின் திருச்சி உணவாக கிளைகளை பார்த்துக்கொள்கிறார்கள். கிருபா, மணி இருவரின் வளர்ச்சியும் இப்போது அதிகம். அவர்களுக்கு மட்டும் இல்லாமல் அவர்கள் குடும்பத்திற்கும் பெரும் வளர்ச்சி தான். அவர்கள் குடும்‌பத்தின் உழைப்பு சிவசு தாத்தாவிற்கு எத்தனை துணையாக இருந்தது என கண்கூடாக கண்டவன். எல்லாம் வாசு அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பார்த்துக்கொண்டான். 
ஸ்ரீதர் அவனது ஊரில் தனி மளிகை கடை வைத்து ஓரளவு வளர்ந்து விட்டான். அதனால் அவனது வீட்டுடன் கூடிய கடையை வாடைக்கு கொடுத்து விட்டு வாசுவின் உணவகக்கிளையை பார்த்துக்கொள்கிறான். வாசுவை விட்டு அவனாலும் தனியாக அங்கே இருக்க விருப்பமில்லை. எல்லாரும் இப்போது வாசுவின் ஊரில் தான் இருக்கின்றனர்.  
“ ண்ணா இப்போ நம்ப இங்க நின்னு என்ன பன்னபோறோம். அண்ணி உங்க கூட இந்தன மாசமா சரியா பேசறது இல்ல. 
நீங்க என்ன வேலை பார்த்து வச்சிங்களோ உங்களுக்கு தான் தெரியும். என்னாச்சுனு கேட்டா ரெண்டு பேரும் வாய திறக்க மாட்டேன்றிங்க. 
பட் என்னமோ நடந்துருக்குனு மட்டும் தெரியுது.  
உங்க கூட பேசலைனாலும் அண்ணி எங்க கூட பேசுறதே பெரிய விஷயம். 
உங்க கூட நான் நிக்கறத பார்த்தாலே அண்ணி என்கூட பேசுவாங்களோ என்னமோ. தயவு செஞ்சு எங்க ரெண்டு பேரையும் ரிலீஸ் பண்ணிங்கன்னா  ரொம்ப நல்லா இருக்கும். “
“ டேய் கிருபா நீ வாய தொறக்காத. 
அண்ணா இப்போ தான் நீங்க கரெக்ட்டான ரூட்ல போயிட்டு இருக்கிங்க. இப்படியே போனிங்கனு வைங்களேன், அப்படியே குளத்துல குதிச்சிருலாம். அண்ணி உங்ககிட்ட இருந்து ப்ரீ ஆயிடுவாங்க. “ என வசதியான ஒரு யோசனை சொன்னான் மணி.
“ டேய் நீங்க ரெண்டு பேரே போதும் டா. எங்க ரெண்டு பேரையும் சேர விடாம பண்றதுக்கு. 
நம்ப மெட்டிரியல் கார்ல இருக்கா.
சீக்கிரம் கிளம்புங்க டா.” 
“ எல்லாம் இருக்கு…இருக்கு…
இவரு பாக்க போற வேலைக்கு எடுத்துருக்குற மெட்டிரியல் பாரு. ”
“ டேய்ய்ய்ய்ய்…” என வாசு அதட்ட, 
“ கிளம்பியச்சு…கிளம்பியச்சு…  
நம்ப கடை பஸ் ஸ்டண்ட் முன்னாடி தான, அதுக்கு எதுக்கு எங்கள இதுலாம் எடுத்துட்டு வர சொன்னிங்க. “
“ ப்ச் கேள்வி கேட்டே மனுசன டென்ஷன் அக்குறது. நான் இப்போ முக்கியமா உங்க அண்ணி கிட்ட பேசணும் டா. “
“ அண்ணி கிட்ட பேசி மண்ண கவ்வுனா மீசையில மண்ணு ஒட்டக்கூடாதுனு டிரிம் பண்ணிட்டு வந்துருக்கிங்க போல “ 
“ அதான் தெரியுதுல கிளம்புங்க டா. அங்க எங்களுக்காக வைட் பண்ணுங்க டா. “
“ அண்ணா…
 அண்ணி வராங்க…வராங்க…
மானம் ரோஷம் பார்க்காம டபார்னு காலுல விழுந்துடுங்க. “ என சொல்லி மணியும் கிருபாவும் கார் ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டனர். 
  ஸ்ரீபத்மா இங்க வந்த மறுநாளே பேங்க் செல்ல ஆரம்பித்துவிட்டாள். அவள் எதிர்பார்த்தது போல வாசு அடுத்த நாளோ, அதற்கு அடுத்த நாளோ ஒன்றும் செய்யவில்லை. ஸ்ரீபத்மாவிற்கு ‘ ஹப்பா டா ‘ என மகிழ்ச்சியாகவே வேலைக்கு சென்று வந்தாள். 
இரண்டு நாட்களாக அவள் கார்த்தியுடன் போவது வருவது என இருக்க, வாசுவால் அவளை தனியாக சந்திக்க முடியவில்லை. இருவரின் பெற்றோர்களும் வீடு திரும்பிவிட்டனர்.
ஏதோ வேலை என கார்த்தி இன்று முன்னமே கிளம்பியிருக்க, எப்படியும் ஸ்ரீபத்மா பேருந்திலோ அல்லது ஸ்‌கூட்டியிலோ தான் வரவேண்டும் என வாசு இப்போது கார்த்திருக்கிறான். எப்படியோ இன்று அவளை பார்த்து பேசிவிடும் வேகம்.   
     பிங்க் ஷேட்டட் ஆரஞ்சு புடவை. ஃபிரெஞ்ச் ப்ளேட் பின்னல். கழுத்தில் ஒன்றை சன்ன செயின், வலது கையில் ஏதோ மெலிதாய் செயின் போல ஒரு ப்ரேஸ்லெட். இடது கையில் வாசு பரிசளித்த வாட்ச். அவளை பொறுத்த வரை அது தேனு இவளுக்கு பரிசளித்தது.
ஒரு மரூன் நிற ஹேண்ட்பேக். ப்ரில்ஸ் எல்லாம் முன்னுச்சியில் படர்ந்தாலும் தனியாக பின் செய்யப்பட்டிருந்தது. நெற்றியில் ஒரு கோபுர பொட்டு. நிதானமாக அந்த சிறிய வழி பாதையின் இயற்கை சுற்றிச்சூழலை ரசித்துக்கொண்டே புன்னகையுடன் ஒரு மெல்லிய நடை என ஸ்ரீபத்மா வந்துகொண்டிருந்தாள். 
ஸ்ரீபத்மாவை பார்த்தவன் பார்த்தவாரே நின்றிருந்தான். முன்பெல்லாம் கொச்சினிலிருந்து வீடியோ அழைப்பில் லைவ்வில் வரும்போதெல்லாம், ஜீன், டாப்ஸ், ஸ்கர்ட் என பார்த்து பழகியவன், இப்போது மூன்று நாட்களாய் புடவையில் பார்க்கவும், அவன் கண்கள் இமைக்க அடம் பிடித்தது. இப்படி ஒரு தனி சந்தர்ப்பத்தில் அவளை சந்தித்து பேசி எத்தனை நாள் ஆயிற்று என வாசுவிற்கு உள்ளே ஒரு உற்சாகம். 
ஸ்ரீபத்மா எதார்த்தமாக திரும்பி பார்க்க, வாசு வழியில் தொலைவில் நின்றிருந்தான். ஒயிட் டெனிம் ஷர்ட், அதற்கு சம்பந்தமே இல்லாமல் வேட்டி, கட்டு தாடி, மீசை எல்லாம் டிரிம் செய்து, கையில் ஒரு வாட்ச்சுடன் நன்றாக தலை வாரி, முகத்தில் ஒரு வசிகர புன்னகையுடன் நின்றிருந்தான். 
அவனை பார்த்தவளின் கண்கள் ஒரு வினாடி கூர்மைபெற்று அவன் தானா என பார்க்க, ‘ என்ன ரெண்டே நாள இப்படி ஆயிட்டான். ‘ என நினைத்தவள் வேறு எதுவும் நினையாது, கால்களில் வேகம் கூட்டினாள். அத்தனை நேரம் அவளிடம் இருந்த புன்னைகை மறைந்து அலர்ட் மோட்டிற்கு வந்துவிட்டாள். 
வாசுவும் அவளது மாற்றங்களை பார்த்தவாரே தான் நின்றிருந்தான். அவள் சீக்கிரமாக அவனை கடந்து செல்ல வேண்டும் என நினைத்து வேகமாக வந்து கொண்டிருந்தாள். 
அவள் இவன் அருகே வர, வாசு நடு பாதையில் வழி மறைத்து நின்று கொண்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் ஸ்ட்ரிக்ட் மோடில் இருக்க, 
“ ஹாய் ஸ்ரீ. “ என உற்சாகமாக அவளிடம் பேச ஆரம்பித்தான். 
ஸ்ரீ பெரிதாக ஒன்றும் முகத்தில் காட்டாது, “ ஹாய் மாமா. எனக்கு ஆஃபிஸ்க்கு டைம் ஆச்சு. இன்னொரு நாள் பார்க்கலாம்” என ஒட்டுதலே இல்லாமல் அவனை தவிர்பதை போல் ஒரு பாவனையில் சொல்ல,
“ ஓஹ் அப்டியா…இரு நான் கிருபாவ கார் எடுத்துட்டு வர சொல்றேன். அதுலயே நம்ப ரெண்டு பேரும் போயிடலாம். எனக்கும் டவுன்ல வேல இருக்கு. “ என மொபைலை எடுத்தான். 
“ அதெல்லாம் வேணாம் நானே போயிப்பேன். கொஞ்சம் இடம் வீட்டிங்கன்னா ஓகே. “ இவள் இறங்குவாதாய் இல்லை.
“ Baby you look soo cute da. “ என வாசு முதல் முறையாக அவன் மனதிற்கு தோன்றியதை மறையாமல் சொல்ல, 
“ What ? “ என ஸ்ரீயின் கண்கள் விழித்து மிரட்டியது. 
அவன் இப்படி எல்லாம் எப்போதும் இவளிடம் பேசியவனே இல்லை. அப்படி இருக்க இது என்ன புதிதாக என தோன்ற ஸ்ரீ அவனை தான் பார்த்து நின்றிருந்தாள். 
“ ஒரு மீடியம் சைஸ் டெடி பியர் ஆரஞ்சு சரீல இருக்க மாதிரி இருக்க ராங்கி நீ…You look sooo lovely baby. “ என வாசு குரலில் சாகோ சிப்ஸ்ஸை தூவிச் சொல்ல,
“ மாமா பிளீஸ் இனிமே என்னை ராங்கி, பேபிலாம் கூப்பிடாதிங்க. 
I don’t like it. உங்க லிமிட்ல இருந்துகோங்க.
எனக்கு உங்க கூட பேச எதுவும் இல்லை. Please let me go. Am getting late. “  ஸ்பைசி மிளகாயாய் பதிலளித்தாள் ஸ்ரீபத்மா.
“ உனக்கு வேணா அப்படி இருக்கலாம், பட் எனக்கு உன் கூட பேசணும். நிறைய பேசணும். அதுவும் உன் துரு துரு கண்ண பார்த்துக்கிட்டே பேசணும். அதுல வர எனக்கான ரியக்ட்ஷன்னா பார்க்கணும். 
அத பார்த்து ரொம்ப… ரொம்ப… நாள் ஆகுது.“ என இவன் உணர்ந்து சொல்ல, 
ஸ்ரீ ஒன்றும் சொல்லாமல் அவனை தான் சாதாரணமாக பார்த்திருந்தாள். 
“ ஓஹ் சொல்ல வந்தத சொல்லிட்டு போடனு சொல்றிய. ஓகே ஓகே. “ இவனே அவள் பார்வையை அவனுக்கு தெரிந்த அளவில் மொழிப்பெயர்த்தான்.
அவனின் இந்த பேச்சை கேட்க விரும்பாமல் திரும்பி வந்த வழியே செல்ல பார்க்க, 
“ ஹேய் என்ன உன் வீட்டுக்கே திரும்பி போக பாக்குற. நில்லு ஸ்ரீ. “ என அவள் திரும்பிய பக்கம், வாசு ஓடி சென்று அவள் முன்னால் நின்று தடுத்தான். அவனை ஒரு முறை நிமிர்ந்து முறைத்தவள், டக்கென திரும்பி பழைய பாதையிலே மட மட வென நடந்து அந்த சிறிய பாதையை கடந்து செல்ல தொடங்கி விட்டாள். 
“ ஹேய் நில்லு ஸ்ரீ…” 
அவள் நின்றாள் தானே, அவள் வேக நடையாக அந்த பாதையை கடக்க, அவளுக்கு ஈடாக அவளது ஒரு புறம் நடந்தவாரே, 
“ ஸ்ரீ, நீ என் மேல கோபமா இருக்க, புரியுது. “ என வாசு சொல்ல,
“ மாமா பிளீஸ் முடிஞ்சு போன எதுவும் இனிமே பேசதிங்க.” அவன் முகம் கூட இவள் பார்க்கவில்லை.
“ உனக்கும் எனக்கும் எதுவும் முடில ஸ்ரீ. இன்னும் எல்லாம் அப்படியே தான் இருக்கு. 
அப்போ ஏர்போர்ட் வர முடியாத சிட்சுவேஷன் எனக்கு. “
அவள் காதை மூடிக்கொண்டே நடக்க, 
“ நீ காத மூடிக்கிட்டாலும் உனக்கு கேக்கும்னு தெரியும்.”
இப்போது அவள் ஒரே நொடி நின்று இவனை பார்த்து முறைத்து பின் காதிலிருந்து கையை எடுத்து இன்னும் வேகமாக நடக்க, இப்போது வாசு அவளின் முன்னால் சென்று மறித்து நின்றான். 
“ இப்போ நீங்க வழிய விடல நான் கத்துவேன்.” விடா கண்டியாய் ஸ்ரீ.
“ நானும் கத்துவேன்… நான் சொல்றதயே கேக்க மாட்டிங்குறானு நானும் கத்துறேன். உன் பின்னாடியே வரதல துரத்தி விட பாக்குற. நான் போக மாட்டேன்.” கொடா கண்டனாய் வாசு.
“________” 
“ நான் என்ன சொல்ல வரேன்னு நீ கேட்டா தான உனக்கு என் நிலைமை புரியும். அதுக்கு கூட சான்‌ஸ் குடுக்கமா நீ விட்டுட்டு போயிட்டேனா, நான் எங்க போறது. 
ஆமா, நான் அப்போ உன்ன ஹர்ட் பண்ணிட்டேன். தெரிஞ்சு தான் பண்ணேன். அப்போ என் சிட்சுவேஷன் அப்படி. அப்போ உன்ன அப்படி சொன்னது தப்பு தான். 
அதுக்காக…அதுக்காக ரொம்ப சாரி. 
நிச்சயமா இந்த சாரி அதுக்கான சரியான பதில் இல்ல தான். ஆனா என்கிட்ட இப்போ அத தவிர சொல்ல வேற எதுவும் இல்ல.” கொஞ்சம் நிதானித்தவன், பின்பு மூச்சை அழுந்து உள்ளிழுத்து,
“ இப்போ உன்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ற ஐடியா எனக்கு இல்ல. எனக்கு வீட்ல ஒரே பிரஷர் சீக்கிரம் கல்யாணம் பண்ணசொல்லி. 
அவங்க கேட்ட அப்போவே நம்பள பத்தி சொல்லிருப்பேன். ஆனா உன்கிட்ட பேசிட்டு, உன் கூட சேர்ந்து போய் தான் அவங்க கிட்ட சொல்லணும்னு இருக்கேன். “
“ இங்க பாருங்க நீங்க கல்யாணம் பண்ணுங்க இல்ல வேற என்னமோ பண்ணுங்க. பட் என்னை விட்டுடுங்க. “
“ உன்ன அப்படிய விட்டு நான் என்ன பண்ணட்டும். எனக்கு உன்ன தான் கல்யாணம் பண்ணனும். அதுக்கு நீ ஓகே சொல்லு. “
“ முடியாது. “
“ ஏன் முடியாது. “
“ உங்களுக்கு ஓகே சொல்ல பிடிக்கல. “
“ ஆனா எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு ஸ்ரீ. ”
“ அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.”
“ நீ மட்டும் தான் என்னை எதுனாலும் பண்ண முடியும். “
ஸ்ரீபத்மா இப்போது அவனை இன்னும் முறைத்து பார்த்து வைக்க, அதனை சரியாக படித்தவன்,  
“ என்ன என் வேட்டிய உருவி ஓட வைக்கணும் போல தோணுதா ?” சிரிக்காமல் கேட்டான்.
ஸ்ரீ வேறு பக்கம் பார்வையை திருபினாள்.
வாசு அப்படியே வேட்டியை கழட்டி அவள் கையில் கொடுக்க போக, 
“ ச்ச்சி ச்ச்சி என்ன பண்றிங்க.“ என இவள் முகம் சுளித்தாள்.
“ எப்படியும் நீயா உருவலைனாலும் என்னையவே உருவி ஓட வைப்ப ? அதுக்கு தான் ப்ரிப்பேர்ட்டா உள்ள பாண்ட் போட்டு வந்துருக்கேன்.” என ஒரு ஜீன் பாண்ட்டுடன் நின்றிருந்தான். 
இதை கேட்ட ஸ்ரீபத்மாவிற்கு இத்தனை கோபத்திலும் ஒரு மென்னகை உள்ளே எட்டி பார்க்க, அதை காட்டிக்கொள்ளவில்லை, மேலும் முறைத்து வைத்தாள்.
 “ என்ன இப்போ என் பாண்ட் மேல சாணி ஊத்தலாம் போல இருக்கா. “
ஸ்ரீபத்மா அதற்கு எந்த ரியக்ட்ஷனும் கொடுக்காமல் அவனை முறைத்துக்கொண்டே நிற்க, 
அவனது பாண்ட்டில் இருந்து எதையோ எடுத்தவன், அதை ஸ்ரீயிடம் காண்பித்து, 
“ நீ அப்படியே செஞ்சாலும், நான் சோப் கொண்டு வந்துருக்கேன், அத வச்சி குளிச்சிட்டு உன் முன்னாடி தான் வந்து நிப்பேன். “
ஸ்ரீபத்மா மைண்ட் வாய்ஸ், ‘ இவரு குளிச்சிட்டு வர வரைக்கும் நான் இங்கயே நிப்பேனா, எப்படி இப்படி ஒரு மொக்க பிளான்லாம் வருது. ‘ என தோன்ற அதை வெளிக்காட்டாமல் அவனை பார்த்து நின்றிருந்தாள்.    
வாசு தொடர்ந்தான், “ நீ என்னைய மாம்ஸ்னு கூப்பிடு இல்லை டேய் வாசு சொல்லி கூட கூப்பிடு. இப்படி வாங்க போங்க சொல்லாத, ஏதோ என்னைய தள்ளி நிறுத்தர மாதிரி இருக்கு. “ என உள்ளே போன குரலில் உணர்ந்து சொல்ல,
ஸ்ரீ பார்வையை வேறு புறம் திருப்ப, அவளின் அருகில் வாசு இன்னும் நெருங்கி வந்தான். இவள் அவனை பார்க்காமல் இருக்க, இன்னும் அருகில் வந்தான். 
முன்பெல்லாம் யாராவது பார்த்து விடுவாரோ என எச்சரிக்கையுடன் இருப்பவன் வாசு, ஆனால் இப்போது ஸ்ரீ அது போல திரும்பி சுற்றும் முற்றும் பார்க்க, அங்கு யாரும் இல்லை. இவள் ஓரடி பக்கத்தில் நகர்ந்து வைக்க, அவனும் அதே திசையில் நகர்ந்தான். இவள் நிமிர்ந்து முறைக்க, இவன் பார்வையை தழைக்கவில்லை. ஒரு முடுவுடன் அவள் முன் நின்றிருந்தான் வாசுதேவன். 

Advertisement