Advertisement

    ஸ்ரீபத்மா மாலை கார்த்தியுடன் வீட்டிற்கு வந்ததும், தேனுவுடன்  கொட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டாள். கார்த்தியும் குழந்தையும் அவர்களின் தனி உலகில் விளையாடிக் கொண்டிருந்தனர். 
ஸ்ரீ கேக் செய்ய, தேனு இரவுக்கு உணவு தயாரிக்க என நேரம் செல்ல, இரவு உணவு உண்டு முடித்து டி‌வியில் புது படம் போட்டிருக்க எல்லாரும் ஹாலில் அமர்ந்துவிட்டனர். இரவு பதினொன்றை தாண்ட கார்த்தி சோபாவில் தூங்கி விட்டான். தேனு கீழே ஒரு தலையணை வைத்து தூங்கிவிட்டாள். ஆனால் ஸ்ரீபத்மாவும் குழந்தையும் கீழே உருண்டு புரண்ட வாரே கொட்ட கொட்ட விழித்து படம் பார்த்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் குழந்தையும் தூங்கிவிட்டது. 
ஒரு புறம் தட்டில் ஒரு துண்டு சாக்லேட் கேக் இருக்க, ஸ்ரீ அதை எடுத்து இன்ச் பை இன்ச்சாக உள்ளே தள்ளிக்கொண்டிருந்தாள். அப்போது தான் வாசுவின் காலிங் பெல் கேட்டது. 
இந்நேரம் யார் என பார்க்க ஸ்ரீ எழும் முன்னே, கார்த்தி விழித்துவிட்டான். அவன் சென்று யார் என ஜன்னல் வழிய பார்த்து வாசு என தெரிந்ததும், ஸ்ரீயை வீட்டின் சாவி எடுத்து வரச் சொன்னான். ஸ்ரீ எடுத்து வரவும் கதவு திறந்தான் கார்த்தி. 
கதவு திறந்ததும், “ வாடா என்ன இந்நேரத்துல வந்துருக்க. ஏதாவது எமர்ஜென்ஸியா. “ என கார்த்தி பரபரப்பாக கேட்க, 
வாசு, கார்த்தியை முதலில் பார்த்ததும் கண்கள் தானாக ஸ்ரீயை தான் தேடியது, அவள் கண்களுக்கு அகப்பட்டதும் வாசுவின் நெஞ்சம் முழுக்க ஜில்லென்ற உணர்வு. அவள் முக தரிசனம் கிடைத்த இந்த நிமிடங்கள் அனைத்தும் சாக்லேட் பேஸ்ட்ரி கிரீம்மால் அலங்கரிக்கப்பட்ட சீஸ் கேக் தருணங்கள். 
அவள் தூங்கி போயிருந்தால், இவன் அவளை பார்த்திருக்க முடியாதே. அதனால் அவன் கைகள் கூட சில்லிட்டு போய் விட்டது. மூச்சு காற்று வெளி வர சிரமபட்டாலும் எப்படியோ சமாளித்து நின்றிருந்தான். பல மாதங்கள்  கழித்து நிறைவேறிய ஆசை, அதை இவனுக்கு சட்டென கையாள தெரியாமல் தவித்து நின்றான்.   
ஒயிட் கலரில் ஏதோ சிறிதாய் ஆங்காங்கே பொம்மை போட்ட ஒரு லாங் ஸ்கர்ட், ஒரு லைட் பிங்க் ஷார்ட் ஸ்லீவ் டாப்பில், ப்ரீ ஹேர் விட்டு அவளின் கொஞ்சம் நீளமாக வளர்ந்திருந்த பிரிஞ்சஸ் முகத்தின் ஒரு பக்கத்தில் படர்ந்து வழிய, அவளது காட்டன் கேண்டி கன்னத்தில் ஆங்காங்கே சாக்லேட் சாஸ் வேறு ஒட்டிக்கொண்டிருந்தது. அரை தூக்க கண்கள் ஒரு சோபையான அழகை தர அவளின் முகம் அப்படியே அவன் உள்ளத்தில் வண்ண ஓவியமாய் வரையப் பட்டது. பிறகு மிகவும் சிரமப்பட்டு கண்களை கார்த்தியிடம் திருப்பினான். 
‘ இவன் என்ன நம்பள இப்படி பாக்குறான். ‘ என நினைத்தவளுக்கு சாக்லேட் சாஸ் ஒட்டியிருபது நியாபகம் வர, அதை அவசரமாக துடைத்தாள். அதை உணர்ந்த வாசுவிற்கு ஒரு புன்னகை கூட உள்ளே உதயமானது. ஆனால் இவன் காட்டிக்கொள்ளவில்லை. 
“ ஸ்ரீ ட்ரோலி என் கார்ல விட்டுட்டுச்சு, நாளைக்கு காலைல சீக்கிரமா ஹோட்டலுக்கு கிளம்பிடுவேன். இப்போ தான் டவுன்ல இருந்து வந்தேன், அதான் இப்போவே கொடுத்துட்டு போலாம்னு வந்துட்டேன்.“ என அடுக்கடுக்காக சமாளித்து ஏதோ வாசு கார்த்தியிடம் சொல்லி வைக்க, 
“ அதுக்கா டா இந்நேரம் வந்த. நான் என்னமோ ஏதோனு நினச்சுட்டேன். 
ஏ பத்து வரப்போவே லக்கேஜ்ஜ தாத்தா வீட்ல வச்சிருக்கலாம்ல. அங்க நல்லா ஆட்டம் போட தெரியுது, ஒரு பொறுப்பில்ல, நீ எல்லாம் என்ன தான் ஆஃபிஸ்ல பண்ணுவியோ.
எப்போ பாரு ஏதாவது அங்க விட்டுட்டு வந்துறதே வேலையா வச்சிருக்க. போய் எடுத்துட்டு வா. “ என கண்டிக்க, 
‘ நீ ரொம்ப பேசுற டா அண்ணா… உன் ஃப்ரெண்ட் தான் சொல்லாம மறந்து தூக்கிட்டு போயிட்டு.. இப்போ என்னை சொல்றத பாரு‘ என சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவள் சொல்லவில்லை. எப்படி இவன் முன்னால் என்னை அண்ணா திட்டலாம் என வாசுவை விட கார்த்தி மேல் இவளுக்கு கோபமாக வந்தது. ஆனால் அதை வாசு முன்னால் இவள் காட்டிக்கொள்ளவில்லை. இவர்கள் சத்தம் கேட்டு குழந்தை விழித்து அழ, தேனு எழுந்து விட்டாள். என்ன நடக்கிறது என தேனு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து பார்க்க, கார்த்தி எல்லாவற்றையும் அவளிடம் சொன்னவன் அவளுக்கும் தன் அட்வைஸ்ஸை ஆரம்பித்து விட்டான். தூக்கக் கலக்கத்தில் தேனு விழி விழி என விழித்து நின்றாள். அவளை பார்க்க ஸ்ரீக்கு பாவமாக இருந்தது.    
ஸ்ரீபத்மா முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாது வாசுவை பார்த்து,     “ சாரி மாமா…என்னால உங்களுக்கு அலச்சல். ரொம்ப சாரி. “ என சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் சாதாரணமாக கதவை தாண்டி காரை நோக்கிச் செல்ல ஆரம்பித்து விட்டாள். கார்த்தி இப்படி ஸ்ரீபத்மாவை திட்டவும் வாசு காண்டாகி விட்டான். 
கார்த்தியின் வாயில் கை வைத்து மூடியவன், “ போதும் டா. எல்லாரையும் திட்டி நைட்ல என் பொறுமைய சோதிக்காத. “ என அவனை அடக்கியவன், ஸ்ரீயின் பின்னால் சென்றான். 
ஸ்ரீ வாசுவின் காரின் பின்னால் சென்று நின்றிருந்தாள். வாசு வரும் போதே ஆட்டோமேடிக் லாக்கை எடுத்தவன், அவளுக்கு லக்கேஜ்ஜை இறக்கி வைக்க உதவினான். 
“ தாங்க்ஸ். “ என ஸ்ரீ அவனை பார்த்து ஒரு ஒட்டாத பாவனையில் சொல்லி வீட்டை நோக்கி நடக்க எத்தனிக்க, 
“ ஸ்ரீ…ஒரு நிமிஷம்” 
இவள் என்ன என்பது போல் அவனை பார்க்க, 
“ சாரி…கார்த்தி நைட்ல தூக்கத்துல டிஸ்டர்ப் ஆயிட்டா  இப்படி தான் திட்டுவான். நீ பீல் பண்ணாத. “ என சமாதானம் சொன்னான். 
‘ நான் உன்ன கேட்டேனா டா…
என் லக்கேஜ் இப்போவே வேணும்னு கேட்டேனா…
வீட்டுக்கு வந்து வாண்டெட்டா போட்டு கொடுத்து, நட்ட நாடு ராத்திரியில திட்டு வாங்க வச்சிட்டு, இப்போ வந்து என்கிட்ட சாரி சொன்னா ஆச்சா. 
என் அண்ணன பத்தி எனக்கு தெரியும். ‘ என சொல்ல நினைத்தாள் ஆனால் சொல்ல வில்லை. அவனிடம் இதெல்லாம் சொல்ல முன் போல் வாய்வரவில்லை. இவன் விஷயம் என்றதும் வாயை அலர்ட் மோட்டிற்கு ட்யூன் செய்து விட்டாள். 
“ இட்ஸ் ஓகே மாமா…நான் பார்த்துக்குறேன். “ என ஒரு சினேகபாவம் கூட இல்லாமல் சொல்லிச் சென்று விட்டாள். அவளின் பேச்சிலே ஒரு ஒதுக்கம் இருக்க, இனி வரும் நாட்களில் அவளை எப்படி அணுகுவது என நினைத்தனுக்கு உள்ளே உணர்த்த ஜில்லென்ற உணர்வெல்லாம் ஆவியாகி மண்டை காய்ந்து போனது. 
அவளின் இந்த ‘ மாமா ’ என்ற அழைப்பே இவனை தள்ளி நிறுத்த, அவன் மனமோ, ‘ மாம்ஸ், டேய் வாசு ‘ என்ற உரிமை அழைப்பிற்காக மிகவும் எதிர்பார்த்துத் தொலைத்தது. 
ஆனால் இவனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாதே. நொந்து போனவன்  கார்த்தியிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்று சென்றுவிட்டான். செல்லும் அவனை ஸ்ரீ திரும்பி கூட பார்க்கவில்லை. 
வீட்டின் உள்ளே வந்த ஸ்ரீபத்மா ட்ரோலியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு வந்து கார்த்தியை பிடித்துக்கொண்டாள், 
“ அண்ணா, உன்ன நான் கேட்டனா ஏர்போர்ட்க்கு வானு …
நான் வரேன்…நான் வரேன்…வந்து உன்ன கூட்டிட்டி வரேன்னு நீயா தான டயலாக் விட்ட.
உன்னால ஏர்போர்ட்டுக்கு வர முடிலனா வரமுடியாதுனு சொல்ல வேண்டியது தான, அத விட்டுட்டு எதுக்கு மாமாவ ஏர்போர்ட்க்கு அனுப்புன ? 
நான் கேப் புக் பண்ணி வீட்டுக்கு வந்துருப்பேன். நீ வரதாதால தான் இத்தன பிரச்சனையும்.
அப்புறம் எதுக்கு அவர் முன்னாடி என்னை ரொம்ப திட்டுன.
 நல்லா ஆட்டம் போட தெரியுதுனு சொல்ற. பொறுப்பில்ல, நீ எல்லாம் என்ன தான் ஆஃபிஸ்ல பண்ணுவியோனு வேற என்னைய சொல்ற. 
எப்படி நீ என்னை அவர் முன்னாடி அப்படி சொல்லலாம். 
நீ பேங்லயும் வீட்லயும் நல்லா குத்தவச்சு தேமே உட்கார்ந்துருப்ப, நானும் உன்ன மாதிரி சைலன்ட்டா உட்காருணுமா…முடியாது டா அண்ணா. “ என கார்த்தியிடம் சண்டையிட்டவள் மாடி ஏறி விட்டாள்.
கார்த்திக்கு வந்த தூக்கம் எல்லாம் பறந்தோடி விட்டது. அவனிடம் கோபம் கொண்டாலும் பெரிதாக பாடு படுத்தமாட்டாள். பாவம் பார்த்து விட்டுவிடுவாள். வாசுவை கார்த்தி வேற்றாளாய் நினைக்கவில்லை, அதனால் அவன் முன் இவளை திட்டிவிட்டான். ஆனால் ஸ்ரீபத்மாவிற்கு அப்படி இல்லை என கார்த்திக்கு தெரியவில்லை. இன்று இப்படி பேசவும், ஏதோ நடு சாமத்தில் திட்டி விட்டதால் டென்ஷனாகி விட்டாள் போல நினைத்து திரும்பி பார்க்க, தேனு அடக்கபட்ட சிரிப்புடன் இவனை பார்த்துக்கொண்டிருந்தாள். 
அதை பார்த்து காண்டாகி போனவன், “ உன் புருஷனா உன் கண்ணு முன்னாடி உன் ஃப்ரெண்ட் திட்டுறா, நீ எனக்காக பேசாம சைலன்ட்டா சிரிச்சிக்கிட்டு இருக்க ? “ என கேட்க, 
“ நான் சொல்ல முடியாதெல்லாம் என் ஃப்ரெண்ட் சொல்றப்போ ஒரு குஷி ஆயிடுது. அதான் அப்படிய உங்க ரியாக்சன பார்த்துட்டே நின்னுட்டேன். 
அப்புறம் இன்னொரு விஷயம் என் அண்ணனு இல்லை வேற யாரு முன்னாடியும் நம்ப வீட்டு பொண்ண திட்ட கூடாது. அது அவளுக்கு ஹர்ட் ஆகும். “ என சொல்லி குழந்தையை தூக்கிகிக்கொண்டு அவள் அறைக்கு சென்றுவிட்டாள் தேனு. 
கார்த்தி, “ ஹே தேனு நில்லு…என்ன சொன்னா…நான் என்ன அப்படி தப்பா பேசிட்டேன். “ என சொல்லிக்கொண்டே இவன் நிற்காமல் அவளிடம் மல்லு கட்ட அவளை தொடர்ந்து சென்று விட்டான். 
மேல் அறையில் கட்டிலில் டொம்மென உட்கார்ந்த பத்மாவிற்கு வாசுவின் மீது அப்படி ஒரு கோபம் வந்தது. அவன் இந்நேரத்தில் ட்ரோலியை பொறுப்பாக கொடுக்க தான் வந்தான் என நம்ப முடியவில்லை. அவன் பார்வை மொழிகளும், பேசியே பேச்சும் இவளுக்கு சாதாரணமாக படவில்லை. 
இதை தானே இத்தனை நாட்களாய் தவிர்த்தாள். எப்படியும் ஊருக்கு மாற்றல் வந்தால் இதெல்லாம் நடக்கும் என தெரியும், ஆனால் இங்கே வந்த முதல் நாளே அவன் இப்படி நடந்து கொள்வான் என இவன் எதிர்பார்க்க வில்லை. எப்படியும் சிறிது நாட்கள் கழித்து தான் பேச முயற்சிப்பான், அதற்குள் நாம் அவனை பற்றி ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டும் என யோசித்து வைத்திருந்தாள். ஆனால் எல்லாம் இப்படி ஒரே நாளிலே விரைவாக நடக்க, ஸ்ரீபத்மாவால் அடுத்து என்ன வரும் என அனுமானிக்க முடியவில்லை.  
அமைதியாக மெத்தையில் படுத்தவள், 
‘ என்கிட்ட மறுபிடியும் பேச வரான். அவன அவாய்ட் பண்ணிடனும். பட்டதெல்லாம் போதும். இன்னொரு முறை என்னால ஆழ முடியாது. ‘ 
என தோன்ற கண்களை இறுக்கி மூடி கொண்டாள்.  
வெளியே மழை பொழிய, மழைத்துளிகளின் சிருங்கார சத்தம் அவளை தாலாட்ட, அப்படியே உறங்கிப் போனாள். 

Advertisement