Advertisement

   “ தாத்தாஆஆஆ…” என மகிழ்ச்சியாக கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ஸ்ரீபத்மா. 
 “ கன்னுகுட்டி…வா வா வா…” என சோபாவில் அமர்ந்தாவாரே தாத்தா கையை நீட்டி அவளை ஆசையாக அழைக்க, ஸ்ரீ ஓடிச் சென்று அவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். 
வாசு ஏர்போர்ட்டிலிருந்து நேராக ஸ்ரீபத்மாவையும் தேனுவையும் சிவசு தாத்தா வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். இவன் வெளி திண்ணையில் அமர்ந்திருக்க, குழந்தையுடன் தேனுவும் ஸ்ரீபத்மாவும் உள்ளே சென்றிருந்தனர்.  
பின் கட்டிலிருந்து உள்ளே வந்த ஆச்சி, 
“ வாடா கன்னு…
என்ன இப்படி இளச்சு போயிட்டே… “ என வாஞ்சையாக கேட்க, 
“ ஆச்சி இது உங்களுக்கே அநியாயமா தெரில…நல்லா கன்னத்துல பன் வச்சு வந்துருக்கா…நீங்க போய் இப்படி சொல்றிங்க.” என தேனு நடந்த அநியாயத்தை தட்டி கேட்டாள். 
“ இங்க வா கேர்ள்…இங்க வா… “ என தாத்தாவிடமிருந்து தேனுவை நோக்கி டாப்ஸ்சை லுங்கி போல் லேசாக ஏற்றிக்கட்டி கொண்டு சென்றவள், அவளின் தோளை சுற்றி கை போட்டு,
“ இத வேற யாராவது சொல்லிருந்தா கூட நான் ஒத்துக்குவேன். ஆனா பனியாரம் சைஸ்ல இருந்த நீ இட்லி சைஸ் ஆயிட்டு என்னை சொல்ற பார்த்தியா… 
எவ்ளோ தைரியம் உனக்கு…என்னையவே சொல்லுவியா நீ…” என தேனுவின் கன்னத்தை விளையாட்டாக இப்படி அப்படி என அடிக்க, அதை பார்த்த தேனுவின் கையிலிருந்த குழந்தை அம்மாவை அத்தை அடிக்கிறாள் என  ஸ்ரீயை லேசாக அடித்தது.
“ ஏ பேத்து என்னை அடிக்க நீ ஆள் ரெடி பண்ணிட்டல… பார்த்துக்குறேன் கேர்ள் உன்ன…வீட்டுக்கு தான வருவ…அங்க இருக்கு உனக்கு. “ என மிரட்ட, 
ஸ்ரீயின் பக்கம் வந்த ஆச்சி அவளின் லுங்கி மடிப்பை இறக்கி விட்டு, “கழுத…தாத்தா இருக்காங்க…இப்படி தான் பண்ணுவியா.” என அமைதியாக கண்களை உருட்டி திட்டிவிட்டு ஒரு அடி வைத்தார். அவள் லுங்கி போல் கட்டினாலும் அந்த உடை அவள் முழங்காளுக்கு கீழே தான் இருக்கும், அதற்கு இவர் இப்படி சொல்லவும், 
“ குடும்பமே ஒன்னு கூடி என்னை அடிக்கிறிங்களா…
ரைட்டு…இனிமே இங்க வந்தா என்னனு கேளுங்க…” என சவுண்ட் விட்டு ரோஷமாக வாசலை நோக்கி கிளம்ப, 
பின்னே இருந்து ஆச்சி, “ நீ வரனு கேசரி பண்ணிருக்கேன்.” என அசராமல் சொல்ல, ஸ்ரீயின் ஐம்புனங்களிலும் ஐஸ் கிரீம் ஆறு ஓடிய உணர்வு. 
அப்படியே அபௌட் டர்ன் என திரும்பி உள்ளே வந்து சிவசு தாத்தாவின் அருகில் டங்கென அமர்ந்தாள். அவள் அமர்ந்த விதத்தை பார்த்த தாத்தா,
 “ கன்னுகுட்டி பழய சோபா மா இது…பார்த்து உட்காரு கன்னு. வெயிட் தாங்காது ” 
என நேரம் காலம் தெரியாமல் சொல்லிவைக்க, தேனு கெக்க புக்கே என சிரிக்க, அவளை பார்த்த குழந்தையும் என்ன நடக்கிறது என தெரியாமல் சிரிக்க, ஆச்சி சிரித்துக்கொண்டே சமையல் அறையினுள் உணவு எடுத்து வர சென்று விட்டார். சிவசு தாத்தவை கண்களை சுருக்கி முறைத்தவள், பின்பு சிரித்துக்கொண்டிருந்த தேனுவை பார்த்து 
“ ஓஹோ அதான் கேசரி பங்கு உங்களுக்கு குறஞ்சிடும்னு என்னை எல்லாரும் அடிச்சிருக்கிங்க…என்ன ஒரு வில்லத்தனம்… 
இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்…என் பங்கு எனக்கு வந்தகாணும்.” என சோபாவில் சம்மணமிட்டு நன்றாக அமர்ந்துக் கொண்டாள். 
ஸ்ரீயின் அருகில் வந்த தேனு, 
“ ஏ புள்ள கொஞ்ச நேரம் முன்னாடி ரோஷம் வந்து யாரோ வெளிய போக பார்த்தாங்க. அவங்கள பார்த்த ? “ என கேட்க, 
ஸ்ரீ கழுத்தின் பின்னே இரு கைகளையும் வைத்து சோம்பல் முறித்தவாறே,
“ ஏதாவது பக்கத்து வீட்டு புள்ளயா இருக்கும். 
போ மா…ஓடு…வெளிய போய் பார்த்து அந்த புள்ளய உள்ள கூட்டிட்டு வா. அதுக்கும் கேசரி தருவோம். “ என சொல்ல, தேனு ஸ்ரீயின் தலையிலே கொட்டு வைக்க வந்தாள், 
“ ஹேய்…நோ…நோ…என்னோட ஹேர் ஸ்டைல்ல டிஸ்டர்ப் பண்ணாத…
இங்க பாரு ஹனி… 
Men may come and men may go but kesari-love is forever… ”  
என கண்களில் ஹார்டினுடன் ஸ்ரீ  சொல்ல, ஆச்சி கேசரியுடன் வந்தார். அவர் இவள் கையில் தந்ததும், அதை வாங்காமல் அவர் எதிர்பாக்காத வகையில் அவரை அப்படியே பிடித்து இழுத்து அவள் மடியில் அமர்த்திக்கொண்டாள். 
“ புள்ள என்னை வுடு…ஏய் கழுத என்ன பண்ற…வுடு புள்ள
விளையாட்டு கூடி போச்சு உனக்கு…” என அவள் மடியிலிருந்த எழ திமிறிக்கொண்டிருந்தார். அவரை எழ விடாமல், அருகில் இருந்த தாத்தாவை பார்த்த ஸ்ரீ, 
“ தாத்தா ஆச்சிகாக ஒரு சாங்க் பிளீஸ்… “ என ஆசையாக கேட்க, 
ஹ… யாரடி நீ மோஹினி
கூறடி என் கண்மணி 
ஆசையுள்ள ராணி 
அஞ்சிடாமலே நீ 
ஆட ஓடி வா காமினி 
ஹ…யாரடி நீ மோஹினி…
என இன்ஸ்டண்ட்டாக பாடல் ஒன்றை அந்த எழுபத்தி ஒன்பது வயது காளை தயக்கமே இல்லாமல் பாட, ஆச்சியின் கன்னங்கள் இரண்டும் நாவல் பழமாய் உப்பி வெட்கம் கொண்டு ஒரு கையை வைத்து முகத்தை மூடி கொண்டார். 
இவர்களின் ரியாக்சன்னை பார்த்து, “ஓஹோஹோஹோஹோஹோஹோ…” என தேனுவும் ஸ்ரீயும் ஒரே நேரம் சவுண்ட் விட, இவர்களை பார்த்து பாப்பாவும் என்னவென்றே தெரியாமல், 
“ஓ..ஓ…ஓ…” என அதுவும் சிறிய அளவில் தனியாக கத்த அவர்களின் சிரிப்பு சத்தத்தில் வீடு நிறைந்து போனது. 
இதையெல்லாம் வாசு வீட்டின் வெளி திண்ணையில் அமர்ந்தவாரே பார்த்திருந்தான். 
ஆச்சி, தேனு, பாப்பா, தாத்தா, ஸ்ரீ என அனைவரும் பூந்தோட்டமாய் இருக்க, இவன் மட்டும் தோட்டத்தில் விடுப்பட்டு போன செடியாய் இருந்தான். அவனுக்கு திருச்சியில் உள்ள இவனது உணவாக கிளையிலிருந்து அழைப்பு வர, அங்கே செல்வாதாய் சொல்லி கிளம்பிவிட்டான்.
    பிறகு தாத்தா வீட்டிலே அங்கேயே சாப்பிட்டுவிட்டு தாத்தாவிடமும் அச்சியிடமும் ப்ரமோஷனுடன் ட்ரான்ஸ்பராகி வந்திருப்பதை சொல்லி அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினாள். மாலை கார்த்தி அங்கே வர இருபதால் அதுவரை இங்கேயே தங்கலாம் என தேனு சொல்ல, ஸ்ரீயும் சரி என்றுவிட்டாள். சீதாவின் அறைக்கு சென்று உடை மாற்றி படுத்து சிறிது நேரம் உறங்கி விட்டாள். இன்று தேனு பள்ளிக்கு விடுமுறை எடுத்திருப்பதால், அவள் பாப்பாவுடனும் அச்சியுடனும் சுற்றிக்கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து எழுந்த ஸ்ரீயை  அழைத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பினார் தாத்தா. 
   ஊருக்குள் செல்லும் வழியெல்லாம், “ கன்னுகுட்டி அங்கே தெரியுது பாரு அதுல இருந்து கண்ணுக்கு தெரியுற அந்த மரம் வரைக்கும் நம்மது தான். 
அந்த பண்ணை குட்டை இருக்குல அது நம்ப ராசா தான் கரை எடுத்தான். 
இங்க பாரு மழை பெஞ்ச அது போய் அங்க தெரியுது பாரு குளம் மாதிரி இருக்குள்ள அங்க போய் சேரும். நல்லா இரண்டு மூனு உழவு மழை பெஞ்சா தண்ணி சேர்ந்திரும்.  
கன்னுகுட்டி அங்க தெரியுது பார்த்தியா வெள்ளம் வந்தா ஓடையில கலக்குறத்துக்கு தண்ணி போற பாதை.  
உனக்கு கல்யாணம்னு நிச்சயம் ஆச்சுனு வையேன் நம்ப ராசா கல்யாணம் மண்டபம் வாங்கிருக்குல அதுலயே வச்சிபுடலாம். ” என போகும் இடம் எல்லாம் தாத்தா ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே வர, ஸ்ரீ மண்டையை மண்டையை ஆடிக்கொண்டு புன்னகையுடன் சரி சரி என கேட்டு வந்தாள். 
அவளுக்கு இதெல்லாம் பழகி போன ஒன்று. வாசுவுடன் விலகல் வந்த போது இரண்டு மாதங்கள் இங்கே ஸ்ரீபத்மா ஊருக்கு வரவில்லை. பின்பு குழந்தையை பார்க்க என வர ஆரம்பித்த போது, அவள் ஒன்றை நன்கு புரிந்து கொண்டாள். சிவசு தாத்தா வீட்டின் உறவு வாழ்நாள் முழுக்க தவிர்க்கமுடியாது.
   இங்கே ஊருக்கு வந்தால், அவர்களை பார்க்காமல் இவள் திரும்ப முடியாது. இவளுக்கும் வாசுவிற்கும் நடுவில் எது நடந்திருந்தாலும், தாத்தா, ஆச்சி, பெரிய மாமா கோதண்டம், அத்தை சீதா என யாரையும் இவள் வாழ்வை விட்டு ஒதுக்க முடியாதே. அவர்களின் அன்பை இவள் எப்படி தடுக்க முடியும். 
வாசு வீட்டிலோ இல்லை இவள் வீட்டிலோ ஏதாவது விசேஷம் என எது வந்தாலும் அனைவரையும் பார்த்து தான் ஆகவேண்டும். பேசி தான் ஆகவேண்டும். அப்படி இருக்கையில் வாசுவை பற்றிய பேச்சுகளை இவளிடம் அவர்கள் பகிர்வதை தவிர்க்க முடியாது. அதனால் இதையெல்லாம் சந்திக்க  ஓரளவு தாயராய் தான் இருந்தாள். 
இவர்கள் குடும்பமாவது பரவாயில்லை, எப்போதாவது தான் அவனை பற்றி பேசுவர், ஆனால் இவன் தொழிலில் வளர்ந்ததும், ஊரில் யாரை பார்த்தாலும் வாசுவீட்டு உறவுபெண் என இவளுக்கு புது அடையாளம் சொல்லி இவளிடம் அவனை பற்றி ஏதாவது பாராட்டி பேசி வைப்பர். அவனை பற்றி எது சொன்னாலும், யார் சொன்னாலும் இவள் சரி சரி என கேட்டுக்கொண்டு விடுவாள். இதெல்லாம் அவளால் தவிர்க்க முடியா பேச்சுகள். அவன் ஊருக்கு மட்டும் இல்லாமல் இவளுக்கும் அடையாளமாகி போகியிருக்க வீட்டிலோ ஊரிலோ என்ன செய்ய முடியும் இவளால்.  
   சில சமயங்களில் ஸ்ரீ, ‘ இவன் என்ன ஒரே சாங்க்ல இப்படி வளர்ந்துட்டான் ’ என விளையாட்டாய் நினைப்பாள். 
ஆனால் ஊரில் மக்கள் சில விஷயங்களை பேச, அவனது வளர்ச்சி வெறும் ஒரே நாளில் வரவில்லை, ஆண்டுக்கணக்கில் உழைத்து, நிலத்தை மீட்டு, விவசாயம் செய்து, கூட்டு பால் பண்ணை முறையை செயல் படுத்த பொறுமையாக ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, அதை பாதுகாப்பாய் செயல் படுத்தி, அதில் வரும் இடர்களை நேர்தியாக கையாண்டு, தொழில் விஸ்தரித்து, அதில் காலூன்றி, அதில் புதிய உத்திகளை புகுத்தி பின் ஊராரையும் மீட்டு என எல்லாம் செய்ய அவன் எத்தனை சாவாலான சூழ்நிலைகளை சந்தித்திருபான் என இவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அதை கொண்டு அவன் மேல் எப்போதும் ஸ்ரீபத்மாவிற்கு ஒரு மரியாதை உண்டு. 
ஆனால் இத்தனை வேலைகளுக்கும் இடையில் ஒன்றரை வருடம் முன் ஒரு வாரம் கொச்சின்னில் இவளை பார்க்க காத்து கிடந்த நாட்களளெல்லாம் வாசுவிற்கு உண்டு. அப்போதெல்லாம் ஸ்ரீ அவனை அனுமதிக்கவே இல்லை. அனுமதிக்க இவாளால் முடியவில்லை. 
தன்னுடனே ஸ்ரீ போராடிகிக்கொண்டிருந்த சமயம் அது. தன் நிலை குறித்து ஒரு சுய பரிசோதனையில் இருந்தாள். அதில் ஒரு தெளிவு பெற்று அவள் வெளி வரவே ஒன்றிரண்டு மாதங்கள் ஆகின. பிறகு தன்னை தானே தேற்றி ப்ரமோஷனுக்கான பரிட்சை, நேச்சர் போட்டோக்ரபி என தன்னை மீட்டு ஒரு ஃபார்ம்மிற்கு வந்துவிட்டாள். 
பிரச்சனைகள் வந்தாலும் அதெல்லாம் பறக்க விட்டு அவளின் வானத்தில் உற்சாகத்துடன் சிறகுகள் படபடக்க பட்டாம்பூச்சியாய் மேகங்களுக்கு வண்ணம் தீட்டி திரிவது தான் இவளது இயல்பு. 
வாசுவிற்காக இவளது இயல்பை விட முடியுமா. 
இனி வாழ்க்கை எதை கொடுத்தாலும் அதனுடன் டிராவல் செய்வது என ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். எதையும் இப்போது அவள் நினைப்பதில்லை, வாசு உட்பட. 
   ஆம், வாசு உட்பட தான். இவர்கள் குடும்பத்தில் ஒருவனாய் இருக்கும் அவனிடம் பொதுவில் பேசுவதையோ பழகுவதையோ எல்லோர் முன்னும் தவிர்க்க முடியாது. ஏன் அவன் தனியாக இவளிடம் ஏதாவது ஊரை பற்றியோ இல்லை பொது விஷயத்தை பற்றியோ பேசினால் இவளால் தவிர்க்க முடியாது. 
அவனுடன் நேசம் என்று வரும் முன்னர் கூட அவன் இவளுக்கு மாமன் தான். அப்போதெல்லாம் அவனை பார்க்கும் சமயத்தில் நேசம் தவிர்த்து ஒரு உறவினானாய் இயல்பாய் பேச முடிந்தது. 
அதே போல் இப்போது அவனிடம் பழகிகொள்ளலாம் ஆனால் தன் எல்லையில் நின்று கொள்வோம் என முடிவு செய்து விட்டாள். 
    இருவரும் நன்றாக பேசிய சமயத்தில் கூட இவள் எத்தனை அவனை பிராண்டினாலும் இவளிடம் அவன் அவனின் எல்லையிலே இருப்பான். அப்படி பட்டவன் இன்று காரில் இவளிடம் கிஃப்ட் கொடுத்த பின் உரிமையாய் செய்த செயல்கள் யாவும் இவள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அதற்கு இவள் எதிர்வினையாற்றியது ஒரு சாதாரண செய்கை தான் ஆனால் அதுவே அவனுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் என தெரியாதவள் அல்ல ஸ்ரீ. 
அதனால் இனி அவன் என்ன செய்தாலும் இவள் எதிர்வினை ஆற்றினாலும் அத்தனையும் தன் எல்லையை தாண்டி போகதவாரு பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டே சிவசு தாத்தாவுடன் நடந்து வாசுவின் புதிய நிலங்கள், அதில் செழித்திருந்த பயிர்கள், மரங்கள் என எல்லாவற்றியும் சுற்றி பார்த்தாள். இங்கெல்லாம் நான் வரமாட்டேன் என இவளால் அடம் பிடிக்கவா முடியும். சிவசு தாத்தாவிற்கு வாசுவை பற்றி பேச ஆரம்பித்தால் அதை நிறுத்துவது கடினம். கால்கள் வலிக்கும் வரை நடந்து விட்டு வீட்டுக்கு போலாம் தாத்தா என அழைத்து வந்துவிட்டாள்.     
வாசுவை கடந்து வந்துவிட்டாளா என இன்னும் அவள் முடிவு செய்யவில்லை. அப்படி கடந்து வந்திருந்தால் எனில் அவன் வேண்டாம் என ஸ்திரமாய் முடிவெடுத்திருப்பாள். ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக  அவனை தள்ளி வைத்திருக்கிறாள். இன்னும் அவனை பற்றி ஒரு முடிவுக்கு வரவில்லை. அவனை பற்றி இப்போது எதுவும் இவள் நினைப்பதும் இல்லை. 
வீட்டில் சில மாதங்களாக வரன் பார்க்கிறார்கள் என ஸ்ரீபத்மாவிற்கு தெரியாது. சுந்தரம் நல்ல வரனாக முடிவான பின் ஸ்ரீயிடம் சொல்லிக்கொள்ளலாம் என வீட்டில் சொல்லிவிட்டார். அதனால் இவளுக்கு தற்போது திருமணம் பற்றிய எந்த எண்ணமும் இல்லை. ஆனால் வாசு சம்பந்த பட்ட விஷயம் எதுவென்றாலும் அதில் ஒரு நிதானம் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டாள். 
முன் போல் ஓர் ஆர்வமாய் தன்னை தாண்டி அவன் விஷயத்தில் எதுவும் செய்து விடக் கூடாது என ஒரு கவனம் வந்திருந்தது. இப்போது வாழ்க்கையை அதன் போகில் எடுத்துக்கொண்டு ஸ்ரீபத்மா மகிழ்ச்சியாக இருக்கிறாள்.  
சிவசு தாத்தாவும் ஸ்ரீபத்மாவும் ஊர் சுற்றி வர மாலையாகி விட்டது. கார்த்தி மாலையில் வந்தவன் தாத்தா ஆச்சியுடன் சிறிது நேரம் நலம் விசாரித்து  பேசியவன் தேனுவையும் பத்மாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். 
    வாசு மதியம் சென்றவன் தான் இரவாகியும் வீடு திரும்பவில்லை. ஒரு உணவாக கிளையில் ஆரம்பித்த வேலை அங்கே இங்கே என எல்லா இடமும் சென்று தான் முடிந்தது. இவன் முதலிலே இரண்டு வீடுகள் கட்டி கொடுத்திருந்த வீட்டின் உரிமையாளர்களில் ஒருவர் வேறு ஏதோ புதிய கட்டுமானத்திர்காக இவனை அணுகியிருக்க, அதை பற்றிய வேலை என அவனுக்கு நேரம் சென்றுவிட்டது. வர தாமதமாகும் என ஆச்சிக்கு அழைத்து சொல்லிவிட்டான். பின்னிரவாகிவிட்டதால் ஊருக்கு வந்தவன் தோட்ட வீட்டிற்கு சென்று விட்டான்.  
    கட்டிலில் படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை. அவளை இப்போதே பார்க்க வேண்டும் போல் நேரம் காலம் தெரியாமல் மனதில் ஒரு ஆவல். அவளுக்கும் இவனுக்கும் இன்னும் எதுவும் நேர்பட வில்லை. ஆனால் மனம் அநியாயமாய் ஆசைக்கொள்ள, மணியை பார்த்தால் இரவு ஒரு மணி. 
அவனது மனம் இடித்துரைத்தது, ஆனால் இவன் கேட்கவில்லை. இத்தனை நாள் தான் அவள் கண் முன்னால் இல்லை. இப்போது இங்கே தான் இருக்க போகிறாள் எனும் போது நேரம் காலம் எல்லாம் பார்க்க தோன்றவில்லை. 
அவள் முக தரிசனமாவது போதும் என ஒரு ஆவல் கிளம்ப, எழுந்தமர்ந்தவன் தீவிரமாக யோசிக்க, ஒன்றும் பிடிபடவில்லை. எழுந்து வெளியே வந்து நடைப்பயின்றவன் காரின் அருகே வர, அதை தட்டிக்கொண்டு யோசித்தவன், ஒன்றும் பிடிபடாமல் பின்தலை முடியை இடது கையால் கோதியவாரே காரை சுற்றி வர, காரின் பின் டிக்கியில் ஸ்ரீயின் ட்ரோலி இருப்பது நியாபகம் வர மனம் முழுக்க ஒரு உற்சாகம். அடுத்த பதினைந்தாவது நிமிடம் கார்த்தியின் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியிருந்தான். 

Advertisement