Advertisement

     இரட்டை வால் குருவி தன் கூட்டை கவனமாக காக்குமாம். தன் கூட்டை பெரிய பறவை வந்து தாக்கினால் அதனுடன் கடுமையாக சண்டையிட்டு தன் கூட்டை காத்துக்கொள்ளுமாம். அதனால் அது வாழும் மரங்கள் தங்கள் கூட்டிற்கும் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என மற்ற அதனின் ஒத்த பறவைகள் அது வாழும் இடத்தின் அருகே வசிக்குமாம். 
    வாசு அவனதும் குழுவும் அந்த ஐந்து மாதங்களாய் செய்தது எல்லாம் கணக்கெடுப்பு. அவர்கள் ஊரில் எத்தனை விவசாயிகளுக்கு வங்கி கடன் கையை தாண்டி போய் உதவி கிடைக்காமல் சிரமபடுகிறார்கள் என கிருபாவும் மணியும் விமலின் வழிகாட்டலுடன் விவரங்கள் சேகரித்திருந்தனர். 
   இந்த விவரங்கள் எல்லாம் சேகரிப்பது அத்தனை சுலபம் இல்லை. மிகவும் கடினம். எத்தனை பேர் சரியான விவரங்கள் கூறுவார்கள் என கணிப்பது மிகவும் கடினம். அதுவும் யாராவது கேள்விபட்டால் முதலில் வாசுவின் பெயர் தான் அடிபடும். 
     கடன் பற்றி விவரங்கள் கேட்டால், உண்மையை சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது அல்லது மாற்றி சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. இது எல்லாம்  இல்லை என்றால் உனக்கு எதற்கு அதெல்லாம், ஏதாவது எங்களின் கடன் தரவுகளை வைத்து தப்பு செய்ய பார்க்கிறாயா என வாசுவின் மீது தான் பாய்வார்கள்.  
     வாசுவிற்கு அவனது தொகை வந்தவுடன் முதல் வேலையாக அவன் செய்தது கடனில் மூழ்கும் நிலை உள்ளவர்களை அழைத்து கூட்டு பால் தயாரிப்பு முறை பற்றி பேசியது. 
     இவன் கரவைகளை வாங்கி கொடுப்பான், அதற்கு அவர்கள் வாசுவிற்கு மாத மாதம் தவணை முறையில் பணம் திருப்பி தந்து விடலாம். அவர்களுக்கு கிடைக்கும் பாலில் ஒரு பெரும் பங்கை கூட்டாக வாசுவிடம் விற்று விடுவது. வாசு அதை அவன் உணவாக தொழிலுக்கு பயன் படுத்திக்கொள்வான். அது அவர்களுக்கு ஒரு சீரான வருமானம் தரும். அவர்கள் பொருளாதாரம் மெல்ல மெல்ல மேப்படும். எல்லாம் நம் பாரம்பரிய நாட்டு கரவைகள் என அக்ரீமன்ட் போட்டு வேலைகள் ஆரம்பித்தான். அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எப்போது வேண்டும் என்றாலும் விலகி விடலாம். எந்த வற்புறுதலும் இல்லை. 
   இப்படி ஆரம்பிக்க படி படியாக உயர்ந்து இந்த ஒரு வருடத்தில் அவர்களின் ஊர் கூட்டு பால் உற்பத்தியின் வழியாக எட்டிய லாபம் அவர்களின் பாதி கடனை அடைத்து புது நம்பிக்கை ஒளியை கொடுத்தது. பால் உற்பத்தியை இயற்கை முறை வழிகாட்டலுடன் அவன் மேற்கொண்டது அவர்களின் கூட்டு பால் உற்பத்தி முறையை பெரிய அளவில் வெற்றி அடைய செய்திருந்தது. ஒரு அறுபது குடும்பங்கள் வறுமை கோட்டில் இருந்து தப்பி பிழைத்து மேலே வந்தது. 
    இப்படியாக ஊரில் வாசுவின் இத்தகைய அணுகுமுறை பிடித்து நிறைய மக்கள் சேர்ந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களின் ஊரில் இதில் இல்லாதவர்கள் எண்ணிக்கை மிகவும் சொற்பம். 
    வாசுவும் அவனது தொழில் மிகவும் வளர்ந்திருந்தான். பால் விற்பனையை அப்படியே செய்யாமல் மதிப்பு கூட்டி விற்பனை செய்வது. அவனது உணவகத்தை பிராண்ட் ஆகியிருந்தான். 
   இப்போது அவனிடம் முதலில் ஆரம்பித்த உணவத்தை சேர்த்து நான்கு புதிய உணவகங்கள். அவனது முதல் உணவகம் மட்டும் அப்படியே பராமரிக்கப்பட்டு வர, மற்றவை எல்லாம் இப்போது உள்ள நாவீன அமைப்பு, அதுவும் நகரில் வெவ்வேறு இடங்களில். எல்லாம் இவனின் கட்டுமான தொழிலார்ளர்களை வைத்தே செய்திருந்தான். அதே தரமான பாரம்பரிய உணவு வகைகள், அதில் இன்னும் நேர்தியான உக்தியுடன் புதிய உணவு தயாரிப்புகள். அவனது உணவகங்களின் ஒரு நாள் வியாபாரமே லட்சங்களில் இருக்கும். அவன் இதை துரிதமாக செய்திருந்தான். ‘ விவசாயி வெளில ஒருத்தன் மதிக்க மாட்டான். ‘ என்னும் பேச்சு அவனை அறச்சீற்றம் கொள்ள வைக்க, அதன் பொருட்டே அவனின் இத்தனை அசுர உழைப்பு. அயராத முயற்சி.    
   அவர்கள் சுற்று வட்டாரத்தில் இவனது பிராண்ட் தான் இப்போது பெரிய பேர் பெற்றிருக்கிறது. இவர்களின் இயற்கை முறை பால் உற்பத்தியின் தரம் அப்படி.
     இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள், பால் சார்த்த தொழிலில் இருபவர்கள் இவனது வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல. ஊரின் கூட்டு பால் தயாரிப்பின் வாடிக்கையாளர்களும் தான். இப்போது இவனது ஊரில் இயற்கை முறை விவசாயம் மற்றும் கால் நடை வளர்ப்பு என நிறைய பேர் இவனது வழிகாட்டலுடன் பயணிக்கின்றனர். அவன் வளர்ந்தது மட்டும் இல்லாமல் அவர்களின் ஊரின் பொருளாதாரத்தை வளர்வதற்கு ஆவன செய்திருந்தான். 
இது மட்டும் இல்லாமல் இன்னும் நீர் மேலாண்மைக்காக பண்ணை ஆங்காங்கே குட்டைகள், நீர் அதிகமானால் அது ஓடையில் கலக்க என நீர் வழி பாதை  என எல்லாம் அமைத்திருந்தான். அதற்கென்றே சில நிலங்கள் கூட வாங்க வேண்டியதாய் இருந்தது, ஒரு எழுபது ஏக்கர் பக்கம் வாங்கியிருந்தான். அது எப்படியும் வீண் இல்லை அதிலும் அவனது இயற்கை விவசாயத்தை தொடரலாம் என்ற எண்ணமும் அவனுக்கு இருந்தது.  
இது எல்லாம் விட மழை நீருக்கு என நிலத்தில் நீர் தேக்கம் ஏற்படுத்தியிருந்தான். அதனால் பக்கத்தில் நிலத்தில் கூட நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.  
 இது மட்டும் இல்லை விஷயம்.  
   பொன்னி நதி கொஞ்சி விளையாடும் அவர்களின் ஊரில் புயல். ஆம் உண்மையான புயல் தான். 
   புயல் வந்தால் எப்படி இருக்கும் என அவர்கள் ஊரில் நன்றாக தெரியும். ஆனால் அதற்கு என்ன கடைபிடிக்க வேண்டும் என சரி வர சில விஷயங்கள் தெரிய வில்லை. வாசுவினது குழு களத்தில் இறங்கி வேலை பார்த்தனர் அவர்களுடன் நிறைய தன்னார்வலர்களும் சேர்ந்து கொண்டனர். அத்தனை இளைனர்கள் தன்முனைப்போடு பங்கெடுத்தனர். அவர்கள் இன்றி இது வாசுவின் குழுவிற்கு சாத்தியம் இல்லாதது. 
     அவர்கள் ஊரில் உள்ள கால்நடைகளை வீட்டின் அருகிலோ இல்லை தோட்டத்திலோ கட்டி வைக்காமல் ஊரில் நடுவே பெரிய கொட்டகை  அமைத்து அனைத்து கால் நடைகளையும் ஒன்றாய் இருக்க வைத்தனர். மாடுகள், ஆடுகள், கோழிகள் என எல்லாவற்றிருக்கும் தனித்தனியாக அனைத்தும் செய்திருந்தனர். 
      அவர்களின் ஊரில் தென்னை மரம் அனைத்தையும் காவாத்து செய்திருக்கிறதா என பார்வை விட்டனர். அப்படி கவாத்து செய்து கிடைத்த நிறைய தென்னை ஓலைகளை கால்நடை கொட்டகைக்கு மேல் சேர்த்து அடர்த்தியாககட்டி வைத்தனர். பிறகு அஸ்பெஸ்டாஸ் கூரைகளை இறங்கினர் மழை வெள்ளம் ஏற்படுத்தும் நீரை விவசாய நிலத்தில் இருந்து அப்புற படுத்த மோட்டார் இயங்கிகள் ஏற்பாடு செய்திருந்தனர். 
     மின்சாரம் துண்டிக்க படும் என அரசு அறிவித்ததால், வாசுவின் குழு ஊரில் சில இடங்களில் மக்களுக்கு ரேடியோ கொடுத்தனர். சில பேர் நாம் என்ன அந்த காலத்தில இருக்கிறோம் ரேடியோவில் செய்திகள் கேட்க என சிரிதார்கள். 
ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் வாசு  மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மொபைல்களில் சார்ஜ் தேவைபடும், அதனால் மின்சாராம் இல்லாமல் பேட்டரி மட்டும் பயன்படுத்தி ரேடியோ கேட்டுக்கொள்ளலாம் என முன்னேற்பாடாக இதை செய்ய சொல்லி உறுதியுடன் சொல்லிவிட்டான்.       
     தேனுவின் உதவியுடன் அவளது பள்ளியின் உரிமையாளரை சந்தித்து சாவியை முன் கூட்டியே வாங்கி வைத்திருந்தது வாசுவின் குழு. ஏதாவது கண மழை பொழிந்து வீடுகள் சேதமாகி விட்டால் மக்கள் அங்கு தங்க வைக்கலாம் என்ற முன் யோசனையுடன் செய்திருந்தனர். வாசுவின் கல்யாண மண்டபம் மக்கள் தங்குவதற்காக திறந்து விடப்பட்டிருந்தது. சிலர் பாதுகாப்பிற்காக அங்கே தங்கியிருந்தனர். 
   அவசர சிகிச்சைக்காக மருத்துவ உதவி என எல்லாம் ஏற்பாடாகியிருந்தது. அரசின் சார்பில் முன்னெடுப்புகள் இருந்தாலும், அந்த ஊரின் மக்களுக்கு தானே அந்த ஊரின் இண்டு இடுக்கெல்லாம் நன்றாக தெரியும். அதனால் எதையும் விடாமல் அரசு அதிகாரிகளுடன் அத்தனை வேலை பார்த்தனர் வாசுவின் குழு. 
   முன்பு வந்த புயல், அருகே இருந்த ஊரில் தாக்கிய பொது, மக்கள் குடி தண்ணீருக்காக தவித்து விட்டனர். கிணறுகள் மூடப்பட்டு எல்லாம் பம்ப் செட்டிற்கு மாறியிருந்தனர். இப்படி இருந்தால் அவசரத்திற்கு எப்படி குடி நீர் கிடைக்கும். இது எல்லாம் கணித்து அனைவருக்கும் குடிநீர், உணவு என எல்லாம் வாசுவின் குழு அரசு அதிகாரிளுடன் சேர்ந்து செய்திருந்தது. அவன் உணவாக தொழில் இருந்ததால் அது இதற்கு மிகவும் உதவியாக இருந்தது.
   புயல் ஆரம்பமாகும் முன் சுந்தரி ஆச்சி அவர்கள் வீட்டில் பின் கட்டில் இருக்கும் தென்னை மரத்துடன் பேச ஆரம்பித்துவிட்டார். 
“ எத்தன வேகமா புயல் அடிச்சாலும் நீ சாய்ஞ்ச்சுட கூடாது. எங்கள விட்டு போய்டு கூடாது. நான் தான உன்ன வளர்த்தேன், பார்த்து கிட்டேன், இந்த அம்மா விட்டு போய்ட கூடாது “ 
என அதை தடவி கொடுத்து கண்ணீருடன் மரத்துடன் உரையாடினார். அவர்கள் ஊரில் மக்கள் பலர் இப்படி அவரவர்கள் தோட்டதில் உள்ள மரங்களுடன் உணர்வு பூர்வமாக உரையாடிக்கொண்டிருந்தனர். 
அவர்களுக்கு அது வெறும் மரம் அல்ல. அவர்கள் இருபத்தி ஐந்து அல்லது முப்பது ஆண்டுகளாய் வளர்த்த பிள்ளைகள், 
அவர்களின் தென்னம் பிள்ளைகள். சிலர் வளர்த்த மரங்களை பிரிய மனமின்றி தோட்டத்திலே தங்கி விட்டனர். எதுவாயினும் தாங்களும் அதனுடனே இருப்போம் என்ற முடிவுடன்.
அப்போது ஊரில் ஸ்ரீபத்மா இருந்தாள்…
ஆம் ஸ்ரீ பத்மாவே தான்… 
        

Advertisement