Advertisement

    இன்னைக்கு நம்ப காலேஜ்க்கு ஸ்பெஷல் கெஸ்ட்டா வந்துருக்குற வாசு தேவன் சர்க்கு எங்க முதல்கண் வணக்கங்கள் அண்ட் ஹார்ட் ஃபெல்ட் தாங்க்ஸ்.
   அவார்ட் ஃபோர் தி யங் அச்சீவர் ஆஃப் தி இயர், ***** மேகஸின் அவருக்கு வழங்கிருக்காங்க. அண்ட் அது எல்லாத்தையும் தாண்டி அவரோட அச்சிவ்மெண்ட் எட்டு மாசம் முன்ன மீடியாவுல, நியூஸ்ல வந்தது நம்ப எல்லாருக்கும் நல்ல தெரியும். 
      வாசுதேவன் சர்,  A few words for us please. என ஒரு மாணவன் அறிவிக்க, வாசுதேவன் எழுந்து மேடைக்கு வர, ஒரே ஆரவாரம், கை தட்டல், உற்சாகச் கூச்சல். கடந்த ஆறு மாதமாக அவன் பெயர் டெல்டா மாவட்டங்களையும் தாண்டி மாநில அளவில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டது. 
ஒயிட் டெனிம் ஷர்ட், க்ரே நிற பேன்ட், இடது கையில் ஒரு லேடஸ்ட் வாட்ச், இன்னும் ஆகிருதியாய் உரமேறிருந்த உடல், அடர்ந்த தலை முடியும், தாடியும் நன்றாக மறைக்காத பாகங்கள் அவனது முன்நெற்றி, கண்களும் மற்றும் கன்னங்கள் மட்டுமே. ஆனால் அதுவே அவனை இன்னும் மெருகேற்றி காட்டியது. அவன் மேடை ஏறினான்.
“ இந்த வாய்ப்புக்கு ரொம்ப நன்றி. இந்த காலேஜ் ஸ்டூடண்ட் நான், இங்க சீஃப் கெஸ்ட்டா வருவேன்னு நினச்சு பாக்கல. பட் நடந்துருக்கு ரொம்ப சந்தோஷம். A Special thanks to our respected correspondent of our college. 
  நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் என் ஃபேமிலி, என் ஃபிரண்ட்ஸ், எங்க ஊர் மக்கள். 
எங்க ஊருல நடந்தது எல்லாமே எங்க மக்கள் எங்க கூட ஒத்துழச்சதுனால சாத்தியம் ஆனாது தான். அண்ட் வாலண்டியர்ஸ் நிறைய பேரு தான முன் வந்தாங்க. ‌இது ஒரு டீம் வொர்க். ஆனா எல்லா விஷயதுலயும் என் பேர் முன்ன வந்துருச்சு அவ்ளோ தான். 
இது நான் மட்டும் இல்ல, நீங்க எல்லோரும் சேர்ந்த முயற்சி செஞ்சா இது முடியும். விவசாயாம் பண்றவங்க நினச்சசாலும் இப்படி செய்ய முடியும்னு ஒரு தாட். அதுனால வந்த முயற்சி தான் இது. 
     நான் சிங்கப்பூர்ல ஜாப் முடிச்சிட்டு இங்க வந்து டூ இயர்ஸ் விவசாயம் பண்ண அப்போ, 
நல்லா இருந்த வேலைய விட்டுட்டு இங்க வந்து விவசாயம் பண்றான் பாரு. 
அதுவும் ஓர் ஏக்கர் நிலத்த அப்படியே குருவி, கிளிக்கு தானியம் கொடுத்திட்டு உட்கார்ந்திருக்குற வாழதெரியாதவன்.
இப்படி நிறைய கேட்டுருக்கேன். ஆனா 
இப்போ நான் என்னோட விவசாயத்தால தனியா தொழில இருக்கேன். 
இப்போ எல்லாரும் வந்து எங்க நிலத்துல பார்த்து நல்லா பண்ணிருக்கிங்கனு வாழ்த்திட்டு போறாங்க. 
குருவி, கிளி எங்க சுற்று வட்டாரத்துல சரியான உணவு கிடைக்காததால என் தோட்டத்துக்கு வருது. ஆனா அப்படி சாப்பிட்டு எங்க மண்ணுக்கு நல்ல உரம் கொடுத்துட்டு, பல்லுயிர் சூழல பெருக்கிட்டு தான் போகுது.   
இப்போ என்னோட நிலம் செழிப்பா இருக்குனா பறவைகள் பங்களிப்பு இருக்கறதுனால தான். 
நம்ப சரியான முறையில, இயற்கையா நம்ப விவசாயம் பண்ணா உங்களுக்கும் இது சாத்தியம் தான். நம்ப கிட்ட நூறு காய் வருதுனா அதுல ரெண்டு காய் தான் இயற்கையான முறையில விவசாயம் பண்ணி நமக்கு கிடைக்கறது. 
இதுவே உங்களுக்கு உடம்புக்கு நல்லா சத்து பிடிக்கணும்னு சொன்னா, டாக்டர்ஸ் அட்வைஸ் பண்றது இயற்கையான முறைல வந்த காய்கறிகள சாப்பிடுங்கனு தான் சொல்றாங்க. சோ நிலைமை இப்படி இருக்கு.
யார் யாருக்கு இப்போ முடியுமோ அவங்க இப்போ விவசாயம் பண்ணுங்க. 
முடியாதவங்க உங்கனால எப்போ முடியுமோ அப்போ பண்ணுங்க. ஆனா கண்டிப்பா பண்ணுங்க. பெரிய அளவுள கூட வேணாம். சின்ன அளவுல கூட பண்ணுங்க.   
ஃபாரீன்ல வொர்க் பண்ணா கூட, எல்லாம் முடிச்சிட்டு எப்படியும் நம்ப ஊருக்கு தான் வருவோம். அப்போ விவசாயம் பாருங்க. அது அவமானம் இல்லை.
அப்படி நம்ப இங்க வரப்போ நம்ப சாப்பிட சாப்பாடுனு ஒன்னு இங்க இருக்கணும்.
ஆரோக்கியமான இயற்கை சூழல் இருக்கணும்.
பார்க்க பச்சையா இருக்கறது மட்டும் தான் இயற்கை சூழல்னு இல்லை, நம்ப ஊரு மலை, காடுகள், ஏரி, குட்டை, புறம்போக்கு நிலம் எல்லாம் சேர்த்து தான். 
காங்க்ரீட் காடுக்குள்ள மட்டும் ரொம்ப நாள் நம்ப வாழ்ந்துட முடியாது, இயற்கையான குறுங்காடு இருக்கணும், அது வேணும். அப்போ தான் நம்ப அடுத்த தலைமுறை நல்லா மூச்சு விடமுடியும்.   
அப்படி நம்ப திரும்பி நம்ப ஊருக்கு வரும் போதும் நமக்கு வயசாயிருக்கும். 
பட் அது வரைக்கும் நம்ப ஊர பார்த்துகுற விவசாயிக்கு நம்ப என்ன பண்ண போறோம். 
அவங்க விளைவிக்குற பொருள குறைந்த பட்ச சரியான விலைக்கு நம்ப இப்போ இருந்தே வாங்குனாலே, நிறைய விவசாயிங்களுக்கு இங்க கடன் தொல்லை இருக்காது. நல்லா இருப்பாங்க. 
நம்ப எல்லாதையும் மாத்தணும்னு இல்ல, அட்லீஸ்ட் முடிஞ்சதா மாத்தலாம். ஒரு பூ செடி வாங்கி உங்க வீட்ல வைங்க, அதுல இருந்து கூட உங்க விவசாயம் தொடங்கலாம். நாளைக்கு உங்க பூ செடி ஒரு தோட்டம்மா மாறும்.
முயற்சி பண்ணுங்க. 
முடியும்.
நீங்க செய்விங்கனு ஒரு நம்பிக்கையோட விடைபெறுகிறேன். நன்றி. “ இவ்வாறு சொல்லி வாசு மேடையின் இருந்து கீழே இறங்கி வந்த போதே, அரங்கம் கைதட்டகளுடன் நிரம்பி இருக்க, கல்லூரியின் தாளாளர் எழுந்து வந்து அவனை கட்டி அனைத்திருந்தார். 
வாசுதேவன் அங்கே இருந்து நேரமாகி விட்டது என எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பிய போது, மாணவ மாணவியர் சில பேர்  “ அண்ணா எங்க கூட ஒரு செல்ஃபி. “ என சூழ்ந்து நின்று ஒவ்வொருவரும் உற்சாகமாக எடுத்து கொண்டிருந்தனர். 
அதில் ஒரு பெண், “ அண்ணா எங்க அப்பாவும் வந்துருகாங்க, அவங்களையும் கூட்டிட்டு வரேன். எங்க கூட செல்ஃபி பிளீஸ். “ என இவனிடம் கேட்டு சென்று அவளது அப்பாவை அழைத்து வந்து அறிமுகப்படுத்த, அவர் ஒரு நிமிடம் உறைந்து விட்டார். 
   வாசுவுடன் போலீஸ் ஸ்டேஷன்னில் வாக்குவாதம் செய்த இன்ஸ்பெக்டர் அவர். மேடையில் பேசியபோது அவனை அடையாளம் தெரியவில்லை, இப்போது அருகே வந்ததும் கண்டு கொண்டார். மகள் ஆசையுடன் அழைத்து வந்துவிட்டாள் எப்படி நகர்வது என தெரியாமல் அவர் தவிக்க, அவரது மகளோ, “ அப்பா பக்கத்துல வாங்க, அண்ணா கூட ஒரு போட்டோ எடுத்துக்கலாம். “  என வம்படியாய் அவரை வாசுவின் புறம் மிக அருகில் நகர்த்தி செல்ஃபி எடுத்துக்கொண்டாள் அந்த பெண். 
    பல மாதங்கள் முன் “ விவசாயம் பண்றது என்ன பெரிய உத்தியோகமோ, சொன்னதும் மரியாத தர. வெளியே போய் சொல்லி பாரு ஒருத்தன் மதிக்க மாட்டான். “ என்று சொன்னவரே அவனுடன் நின்று செல்ஃபி எடுக்க என நிலைமை மாறியிருக்க, வாசுதேவனின் வாழ்கையில் அத்தனை மாற்றங்கள். 
அதிசயம் என்ற வார்த்தை அவன் வாழ்வை மாற்றவில்லை, ஆனால் அவனது சீரான திட்டமிடல், அயராத உழைப்பு, அவன் எதிர்கொண்ட சவால்கள் என எல்லாம் அவனால் மற்றவர்களின் வாழ்கையில் அதிசயத்தை நிகழ்த்தியிருந்தது.
ஆம் அவன் நின்றுவிட்டான். 
வாழ்கையில் அவன் எதிர்பாத்த வண்ணம் அவன் நின்று விட்டான். விவசாயத்தில், தொழிலில், தொழில் விஸ்தரிப்பில், இன்னும் நிறைய என எல்லாம் அவன் நினைத்தை செய்து விட்டான். 
ஆனால் அவன் இதெல்லாம் திட்டமிட்டு செய்யவில்லை, அவன் திட்டமிட்டதெல்லாம் விவசாயம் மட்டும் தான், அதனின் நீட்சி இவை அனைத்தும். 
   வாசுதேவன் இத்தனை காலம் வளர்த்திருந்தது சந்தனம் . அவன் நிலத்தில் இறுதியில் மூன்று ஏக்கரில் இருந்தது. அவனது தாத்தா காலத்தில் பயிரிட்டது. மரம் வளர்ப்பில் சிவசு தாத்தா ஈடுபட்டிருந்தார். 
   பத்து ஏக்கர்ரிலும் சந்தனம் மரம் நடமால் மூன்று ஏக்கர்ரில் மட்டுமே வைத்திருந்தார். அதற்கு அவரிடம் சரியான புரிதலும் இருந்தது.
   அப்போது வாசுவிற்கு பதிமூன்று இல்லை பதினாலு வயதிருக்கும். அவன்
  “ தாத்தா நம்ப பத்து ஏக்கருக்கும் சந்தனம் மரம் வச்சிடலாம் . “  
என கேட்க, அப்போது அவர் சொன்னது இது தான், 
“ ராசா, நம்ப வச்சிடலாம், அப்புறம் அரிசிக்கு எங்க போவோம். காய்க்கு எங்க போவோம். மத்த பயிருக்கு எங்க போவோம். முதல அது முக்கியம். பணத்துக்கு மட்டும் இல்ல, நம்ப சாப்பிடுற ஒவ்வொரு பருக்கையும் முக்கியம்.
ஒரே மரமா நம்ப வச்சோம்னா பூச்சி தாக்குச்சுனா என்ன பண்ணுவா. இதே எல்லா பயிறும் மரமும் சேர்ந்து இருந்துச்சுனா, ஒன்ன இன்னொன்னு பார்த்துக்கும், காப்பார்த்தும். வெறும் காசுக்குனு மட்டும் விவசாயம் இல்ல ராசா. 
அது எல்லார் பசியும் ஆத்தறது. ஒரு வாய் கஞ்சிக்காக நாளெல்லாம் அந்த காலத்துல உழப்பாங்க. அதனால நம்ப பரம்பரியமா விதைக்கிற பயிர விட்டுட கூடாது ராசா . “ என்ற தெளிவு அவரிடம் இருந்தது. அவர் தான் வாசுவின் கை பிடித்து ஓவ்வொன்றாய் சொல்லிக் கொடுத்தார்.
பிறகு காலப் போக்கில் சிவசு தாத்தா கடன் பட, வெறும் சில லட்சங்களுக்காக அவரின் அனைத்து நிலைத்தையும் கடன் கொடுத்தவர் கேட்க, கோதண்டம் அவரால் முடிந்த அளவு அவரின் சேமிப்பை வைத்து ஓரளவு கடனை குறைத்தார்.  ஆனால் அவரால் முழுமையாக அந்த கடனை அடைக்க முடியவில்லை.
பிறகு அவருக்கும் கை மீறி போக, சில காலங்கள் சீதா தான் வீட்டில் அனைத்தையும் பார்த்துக்கொண்டார். ஒரு சமயத்தில் வீட்டின் நிலைமை புரிந்து, தாத்தா அந்த நிலத்தை விற்று கடனை முற்றிலுமாக அடைத்து விடலாம் என யோசிக்க, வாசு விடவில்லை. 
     அது வாசு படித்து முடித்த சமயம். வீட்டில் போராடினான், நான் விவசாயம் செய்து மீட்கிறேன் என சொல்ல, அன்றிலிருந்து கோதண்டத்திற்கும் அவனுக்கும் பிரச்சனை பெரிதாக ஆரம்பித்தது. 
     இத்தனை கடனிலும் வாசுவை சீதாவும் கோதண்டமும் சேர்த்து நன்றாக படிக்க வைத்திருந்தனர். அவன் படித்து முடித்து அதன் சமந்தமான வேலைக்கு செல்லாமல், விவசாயம் செய்கிறேன் என வந்து நின்றது கோதண்டத்தை பெரிதாக கோபம் கொள்ள வைத்தது. 
   கோதண்டத்தை சமாதானப்படுத்த சுந்தரத்திடம் போய் நின்றான்,
 “ அப்பா கிட்ட சொல்லுங்க மாமா. நான் இங்க இருந்து விவசாயம் பாக்குறேன். கடன் எல்லாம் அடைகிறேன். “
என உறுதியுடன் பேச, அவரும் கோதண்டத்திடம் பேச,
 “ நீ இப்போ அவனுக்காக பேசுனா அவன் உருபடாம போயிடுவான். நீ எனக்காக அவன் கிட்ட பேசு. அவன் கூட இந்த விஷயதுல ஆதரவா நிக்காத. என் கூட நில்லு. “ என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார். கோதண்டத்திடம்  வேறு வழி இல்லை, நண்பனே இப்படி சொன்னதால், அவரும் அதே போல் செய்து விட்டார். பிறகு எல்லா பக்கமும் வாசு முட்டி பார்க்க ஒன்றும் நடக்கவில்லை. அப்பாவுக்கு பிள்ளைக்கும் நடுவில் சரியான பேச்சு வார்த்தை இல்லாத அளவு முட்டல் முத்தி போய்விட்டது. ஆனால் நிலத்தை விற்க கூடாது, அந்த கடனை நான் வேலை பார்த்து அடைத்துக்கொள்கிறேன் என்று தாத்தாவிடம் வாசு உறுதியாக சொல்ல, அவரும் சரி என்று விட்டார்.  
   பிறகு வேறு வழியே இல்லாமல் வாசு சென்னை சென்று அவன் துறையிலே ஒரு கம்பெனியில் சேர, அதில் ஒரு வருடம் கடுமையான உழைப்பு , அவனுக்கே வரவு போதவில்லை. பிறகு பார்ட் டைம் வேலையாக பேக்கிங் அண்ட் மூவிங் சம்பத்தமான ஒரு கம்பெனியில் வேலை என எப்பாடியோ அடித்து பிடித்து ஒரு வருடம் கடனின் வட்டி மட்டும் அடைத்தான். இது எல்லாம் போதாது, முழுவதுமாக அடைக்க வேண்டும் என்றால் வெளிநாடு செல்ல வேண்டும் என வாய்ப்பு தேடிக்கொண்டிருக்க, சிங்கப்பூரில் ஒரு புகழ் பெற்ற நிறுவனதில் வேலை கிடைத்தது. 
    பிறகு ஐந்து வருடம் சிங்கப்பூர் தான். அங்கே தான் ராகவ் நண்பனான். ஒரே வீட்டில் இரண்டு அறைகளில் தனி தனியாக வாடகைக்கு இருந்தார்கள். சிங்கப்பூரில் அப்படி தான், வீட்டில் எல்லா வசதிகளும் இருக்கும், அதனால் அதில் அறைகளை தனித்தனியாக வாடைக்கைக்கு விட்டு விடுவார்கள் வீட்டின் உரிமையாளர்கள். 
    பிறகு இருவரும் மிகவும் நட்பாகி விட பிறகு ஒரே அறைக்கு மாறினார்கள். அப்போது வாடகை இன்னும் குறைய, வருமானத்தை இன்னும் பெரிதாக சேமித்து வட்டியுடன் முழு கடனையும் அடைத்தான் வாசு. அவனது இத்தனை முயற்சிகளையும் பார்த்து அப்போதே சிவசு தாத்தா அவனுக்கு நிலத்தை எழுதி கொடுத்துவிட்டார். அவர் எழுதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் கோதண்டம் வாசுவை அவன் விருப்பம்போல் விவசாயம் செய்யவிடாமல் இருக்க, அந்த நிலத்திலும் பங்கு கேட்பார் என நினைத்து இவ்வாறு செய்து விட்டார் தாத்தா. 
    இங்கே வந்து உணவகத்திற்காக நிலம் வாங்கியது, அதை தொடங்கியது எல்லாம் அதன் பிறகு தான் நடந்தேறியது.  
   ஆனால் கோதண்டத்திற்கு அவன் வெளிநாட்டில் இருந்த வரை மனதில் அத்தனை மகிழ்ச்சி, நம் மகன் விவசாயம் செய்து சிரம பட தேவை இல்லை. எப்படியோ அப்படியே இருந்து விடுவான் என எண்ணியிருக்க, இவன் எல்லாம் முடித்து மீண்டும் இப்படி வந்து தொடங்குவான் என எதிர்பார்க்கவே இல்லை. அது அவர்கள் இருவரின் உறவு மிகவும் அடிபட்டது. 
   அப்படி அவன் விடா முயற்சியினால் காப்பாற்றிய நிலத்தில் தான் சந்தனம் மரம் முதிர்ந்தது. அதை பாதுக்காக சிவசு தாத்தாவிற்கு மிகவும் உதவியது கிருபா குடும்பமும், மணியின் குடும்பமும் தான். அவர்கள் குடுபத்துடன் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாய் அந்த தோப்பில் தான் வசித்து, வாசு இங்கு நிரந்தரமாய் வரும் வரை நன்றாக பேணி வந்தனர். 
  சந்தான மரத்தை அப்படியே  நாம் வெட்ட முடியாது. முறையாக அரசாங்கத்திற்கும் வனத்துறைக்கும் தெரிவித்த பின்பு, வனத்துறையே வந்து வெட்டி எடுத்து செல்வர். அப்படியே அதற்கான தொகை இரண்டு மாதங்களில் வந்துவிடும். வாசுவினது இருநூறு மரங்கள். கோடிகளில் வரவு. அவனின் எட்டு ஆண்டு கால உழைப்பின் பயன் வந்தடைந்தது. ஆனால் அதற்குள் அவன் சந்தித்த சில நிகழ்வுகள் அவன் எதிர் பாராதவை.
ஆனால் இது மட்டும் தான் வாசுவின் அடையளாமா என்றால் இல்லை. நிச்சயமாக இல்லை. 
     இவன் மட்டுமா மரம் வைத்திருக்கிறான், எத்தனையோ நபர்கள் சந்தனமரம் வைத்து விவசாயம் செய்கிறாராகள். ஆனால் இவன் அதன் பின் செய்த சில செயல்கள் தான் ஊரேயே இவன் பக்கம் நிற்க வைத்தது.   
    அவன் நினைத்திருந்ததை ஊருக்காக செய்ய எண்ணியிருக்க அதற்கு முன்னே இயற்கை ஒரு சோதனையை கொடுத்திருந்தது. மிக பெரிய சாவல், ஆனால் வாசுவும் அவனின் குழுவும் இதை கையாண்ட விதத்தில் சோதனையையும் சாதனையாக்கியிருந்தனர்.  
     அவனின் ஊரின் மக்களை இரட்டைவால் குருவி போல காத்துவிட்டான் வாசுதேவன். ஆனால் அது என்ன இரட்டைவால் குருவி ? ? ?        

Advertisement