Advertisement

         ரிசப்ஷன்னில் கேட்டு தேனுவின் அறை இருந்த தளத்தை அடைந்தான். அரை மணி நேரம் முன்பு தான் தேனுவிற்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. அந்த மகிழ்ச்சி ஒரு புறம், கோதண்டம் விழித்து குழந்தையை பார்க்க வேண்டும் என காத்திருப்பு ஒரு புறம் என ஓட்டு மொத்த குடும்பமே  அங்கே இருந்தனர். இதில் கார்த்தி குழந்தை பிறந்திருப்பதை சொல்ல வாசுவிற்கு அழைத்து ஓய்ந்து விட்டான். சுந்தரமும் சிவகாமியும் மதியம் சாப்பிடாமல் இப்போது குழந்தை பிறந்த பின்பு தான் கேண்டீன் சென்றிருந்தனர். 
இப்போது வாசுவை நடக்க முடியாமல் சிரமப்பட்டு பார்க்கவும் கார்த்தி முதலில் வந்து அவனை தாங்கிக்கொண்டான. ஆச்சி இதனை பார்த்தவர் அதிர்ந்து ஓடி வந்தவர் வாசுவை பார்த்து ஆழ, அவரை கட்டி அனைத்து தனக்கு ஒன்றும் இல்லை என ஆறுதல் படுத்தினான். 
சீதா குழந்தையை கையில் வைத்துக்கொண்டு தேனு அறையிலும், சிவசு தாத்தா கோதண்டத்துடன் அவரின் அறையில் அமர்ந்திருந்தவர்கள் வெளியே வந்து பார்க்க, இருவருக்கும் வாசுவின் நிலை அதிர்ச்சி. 
வாசு அனைவரையும் அமைதி ஒருவர் பின் ஒருவராக படுத்தியவன், சுருக்கமாக நடந்தவற்றை சொன்னான். வாசு முதலில் குழந்தையை பார்க்க ஆவல் கொள்ள, குழந்தையோ அரவணைபாய் சீதாவின் கையில் உறங்கி கொண்டிருந்தது.  
குழந்தை கார்த்தியை போலும் இல்லை, தேனுவை போலும் இல்லை, அப்படியே அத்தை ஸ்ரீபத்மாவை போல். 
ஆம், குழந்தையின்‌ கண்கள், நெற்றி, கன்னம், நிறம் அத்தனையும் ஸ்ரீபத்மாவை போல். இதை எதிர்பார்க்கவே இல்லை வாசு, அப்படியே ஸ்ரீபத்மாவின் குட்டி வெர்ஷனாய் இருக்க, வாசுவிற்கு இத்தனை வலியிலும் மென் புன்னகை. 
“ புள்ளய நீ பார்த்துட்ட ராசா, ஆனா உன் அப்பா இன்னும் பார்க்கல சாமி, இன்னும் பத்து நிமிஷத்துல கண்ணு முழிச்சிடுவாருனு நர்ஸ் சொல்லிட்டு போனாங்க. வா கண்ணு அங்க போலாம். மெல்ல நட. “ ஆச்சி குழந்தையை வாங்கி கொண்டு முன் செல்ல, வாசுவிற்கு ஒன்றும் புரியவில்லை, அப்படியே புன்னகை மறைய கார்த்தியை பார்க்க, அவன் சுருக்கமாக நடந்தவற்றை சொல்ல,
 “ நல்லா தான் இங்க இருந்தாரு, அப்புறம் என்கிட்ட வந்தார், அப்படியே மயங்கிட்டாரு டா. பி‌பி ரைஸ்னு ஆயிடுச்சுனு டாக்டர் சொன்னாங்க.
இஞ்செக்ஷன் போட்டு தூங்கிட்டு இருக்காரு.“ என சொல்ல, ‘ பி‌பி ‘ என்ற வார்த்தையிலயே வாசு ஊகித்து விட்டான் இருந்தாலும்
“ எத்தனை மணிக்கு அப்பாக்கு இப்படி அச்சு. “ என கேட்க,
 கார்த்தி சொன்ன நேரம் இவன் ஊகத்திற்கு பொருந்தி வர, அவனால் தன் பொருட்டு அவர் இப்படி இருபத்தை ஏற்று கொள்ள மிகவும் சிரமபட்டு போனான். கார்த்தியிடம் மட்டும் இதற்கு என் நிலை தான் காரணமாக இருக்கும் என உள்ளே போன குரலில் சொல்ல, கார்த்தி அவனை ஒரு வழியாக சமாதானம் செய்து அழைத்து வந்தான். 
   அப்பா எழும் முன் பெரியப்பாவிடம் சொல்ல வேண்டும் என நினைத்தவன், கார்த்தியிடம் இருந்து கோதண்டத்தின் மொபைல் வாங்கி அதிலிருந்து அவருக்கு அழைத்தவன், விவரம் சொல்ல, அதன் பின் தான் அவர் நிம்மதியானார். 
கார்த்தியும் வாசுவும் உள்ளே நுழையும் முன் கோதண்டம் விழித்து இருந்தார். எழுந்து அமர்ந்திருந்தவரின் கையில் குழந்தை இருக்க, அவர் கண்கள் கனிந்திருந்தது. 
வாசுவும் கார்த்தியும் உள்ளே வர, அவர்களை பார்த்தவரின் முகம் கடுமையானது. 
“ மச்சான், மாமா என்ன சொன்னாலும் காலுல விழுதுருட, இப்போ அவர் ஹெல்த் தான் முக்கியம். இப்போ எதுவும் பேசாத. “ என வாசுவை சட்டையை சீர் செய்வது போல் ரகசியம் பேசியவன், வாசுவை தாங்கியவாறே உள்ளே சென்றான். 
     உள்ளே வந்த வாசு  இருக்கையில் அமைதியாக உட்கார, கோதண்டம் அவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தவர், ஆங்காங்கே கட்டுகள் இருப்பதை பார்த்தவருக்கு நெஞ்சம் பொறுக்க வில்லை. எப்படி இருக்க வேண்டியவன் இப்படி இருக்கிறானே என அடித்து கொண்டது. ஆனால் சில நிமிடங்களிலே அவரின் முகதிலும் ஏதோ இறுக்கம் தெரிந்தது. அதன் பின் அவரும் இவனிடம் பேசவில்லை, வாசு அவரை விசாரித்ததற்கு அவர் வாயே திறக்கவில்லை. அவர் அவனுக்கு பதில் சொல்லாமல் சீதாவை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்.
அதை உணர்ந்த சீதா இப்போது எது பேசினாலும் தவறாக போகிவிடும் என நினைத்தவர், கார்த்தியிடம் வாசுவை இங்கயே அட்மிட் செய்ய சொன்னார். எல்லாம் அதன் பிறகு தானாய் நடந்தது. 
ஸ்ரீபத்மாவிடம் குழந்தை பிறந்த தகவல் சொல்லப்பட அவள் உடனே புறப்பட்டு வருவதாக சொல்லி விட்டாள். அவளுக்கு வேறு ஒன்றும் தெரியவில்லை. அவள் இரண்டு நாள் வங்கிக்கு விடுப்பு கொடுத்து விட்டு, கடைக்கு சென்று கையில் கிடைத்ததெல்லாம் தேனுவிற்கும் குழந்தைக்கும் என நிறைய பொருட்கள் வாங்கி கொண்டு ஏர்போர்ட்டை அடைந்தாள். 
இங்கே திருச்சியில் அவள் அடுத்த நாள் காலை வந்தவுடன், கார்த்தியை அவளை அழைக்க ஏர்போர்ட் வந்த்திருந்தான். கையில் இரண்டு ட்ரோலிகளுடன் முகம் முழுக்க மகிழ்ச்சியாக புன்னகையுடன் நடந்து வந்தவள் இவனை பார்த்ததும் கட்டிக்கொண்டு வாழ்த்து சொன்னாள். அவனும் பதிலுக்கு புன்னகையுடன் இவளுக்கு பதில் சொல்லிக்கொண்டு அழைத்து வந்தான். அவன் முகத்தில் ஒன்றையும் காட்டவில்லை. தங்கை குழந்தையை பார்க்க மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறாள், வந்ததும் வாசுவை பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம் என நினைத்து, செல்லும் வழியில் கூட அவளிடம் எதையும் பகிரவில்லை. 
     அவனுடன் காரில் உற்சாகமாக இவள் பேசிக்கொண்டே வந்தவள், நடு வழியில் நிறுத்த சொல்லி, நிறைய பலூன்கள், பூங்கொத்து என ஏதேதோ வாங்கினாள். கார்த்தியால் இப்படி உற்சகமாக வரும் அவளிடம் வேறெந்த நிகழ்வையும் சொல்ல முடியவில்லை. எப்படியும் ஹாஸ்பிடல் வந்தால், தானாக எல்லாம் தெரிந்து கொள்வாள் என வாசுவை எதுவும் பேசாமல் அழைத்து வந்தான். 
    ஸ்ரீபத்மா கை நிறைய பலூங்களுடன் தேனுவின் அறை வாசலில் நின்று, 
“தேனுனுனுனுனுனுனுனு…மை டியர் அண்ணி…கங்க்ராசுலேஷன்ஸ் பேத்து. “ என உற்சாகமாக கத்தி கொண்டே உள்ளே வந்தவள் தேனுவை அனைத்து விடுவிக்க, சோம்பலாய் புன்னகைத்தாள் தேனு. 
ஸ்ரீபத்மாவை கையிலே இரண்டு அடி வைத்தார் ஆச்சி. 
“ ஆச்சிசி‌சி‌சிசி…” என அவரை கட்டி கொண்டு கன்னத்தோட்டு கன்னம் வைக்க, 
“ கழுத…வந்ததும் கத்தறது. அமைதியா வர தெரியாது. ஊரேயே கூட்டுறது “ என திட்ட,   
“ அப்படி தான் செய்வேன்….எங்க பேபி. “ என அவரிடம் கேட்க, அவர் கை காட்ட, அங்கே போட்டபடிருந்த பெஞ்ச்சில் சிவகாமியின் மடியில் குழந்தை உறங்கி கொண்டிருந்தது. அங்கே தான் அனைவரும் இருந்தனர் கோதண்டம் உட்பட. ஆனால் வாசு அங்கு இல்லை. 
ஸ்ரீபத்மா சிவகாமியின் அருகே சென்று குழந்தையை வாங்கி பார்க்க, குழந்தை இவளை மாதிரி இருப்பதை பார்த்து அப்படி ஓர் உற்சாகம். அப்படியே அங்கேயே உட்கார்ந்து குழந்தையை கொஞ்சியவள், 
“ பேபி அப்படி என்னை மாதிரி. 
தேனு நான் ஃபர்ஸ்ட் வளையல் போட்டதால தான் என்னை மாதிரி பொறந்துருக்கு. 
என் செல்லம்…
என் பட்டு…“ என கொஞ்சி கொண்டு தேனுவை பார்க்க, அவள் சிரமபட்டு சிரிப்பது போல் இருந்தது. 
என்ன இவள் இப்படி இருக்கிறாள் என அனைவரையும் பார்க்க, கோதண்டத்தையும் தவிர மற்றவர் அனைவரும் இயல்பாக இருந்தனர். ஆச்சி மட்டும் சற்று உம்மென்று இருந்தது போல் இருந்தார்.
‘ எங்க நம்ப மாம்ஸ். ஆள காணோம். ‘ என கண்கள் தேடினாலும் யாரிடமும் கேட்க முடியவில்லை.
‘ என்ன இந்த கார்த்தி பையன் அமைதியா இருக்கான். இவன் அவன் கூட சேர்ந்து ஒரு ஆட்டம் ஆடிருப்பானே. ஒன்னையும் காணோமே. ‘ என நினைத்தவள், பிறகு குழந்தையுடன் வகை வகையாக செல்ஃபி எடுத்தக்கொண்டு சில மணி நேரம் அப்படியே குழந்தையை மடியில் வைத்து  உட்கார்ந்திருந்தாள்.    
     இங்கே வரும் முன்னரே வாசுவிற்கு மொபைலில் அழைத்தாள், ஆனால்  அழைப்பு போகவில்லை. சரி இங்கே வந்து பார்த்துக்கொள்வோம் என பார்த்தால், இப்போது யாரிடம் கேட்பது என யோசித்தவள், அப்படியே பார்த்து அமர்ந்திருக்க , கோதண்டம் சிறிது நேரம் குழந்தையை வாங்கி வைத்திருந்தவர் பின்பு எழுந்து அவரது மற்றொரு அறைக்கு செல்வதை பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்பு இவள் பக்க மற்ற சொந்தங்கள், தேனு பக்க சொந்தங்கள் என வர ஆரம்பித்தனர். 
இவள் தேனுவின் அருகில் உட்கார்ந்து,
“ பேத்து ஏன் உம்முனு இருக்க, உனக்கு நார்மல் டெலிவெரி தான் சொன்னாங்க. அப்புறம் ஏதோ சிசேரியன் பண்ண பொண்ணு மத்திரி அசந்து இருக்க. என்னாச்சு. 
உங்க அண்ணனும் எங்க அண்ணனும் சேர்ந்து இந்நேரம் ரவுசு பண்ணுவாங்க. ஆனா எங்க அண்ணன் என்ன அமைதியா இருக்கான். “
தேனு மெதுவாக எழுந்து அமர பார்க்க, அதற்குள் கார்த்தி இவளை பார்த்தவன், அருகே வந்து அப்படியே அவளை தூக்கி அமர வைத்தான். 
“ ப்பா முடில டா சாமி… என்ன ஒரு வேகம். “ 
“ பத்து சும்மா இரு. “ என கார்த்தி அவளை அதட்டியவன் ஏதோ ஃபோன் கால் வர வெளியே சென்றான். 
தேனு உம்மென இருக்க, 
“ இரு செல்ஃபி எடுக்கலாம் கொஞ்சம் சிரியேன். “ என மொபைலை தூக்கி கொண்டு இன்னும் தேனுவின் அருகில் வந்து அவள் முகத்துடன் முகம் வைக்க, அவள் முகம் மலரவே இல்லை. 
“ என்ன டா பேத்து…ஏன் டல் அடிக்கிற. “ என ஸ்ரீ வாஞ்சையாக கேட்க, 
தேனு ஒன்று விடாமல் பத்மாவிடம் மெல்லிய குரலில் அனைத்தையும் சொன்னாள். வீட்டினர் மற்ற சொந்தங்களை கவனிக்க, அவர்கள் சத்ததில் இந்த சத்தம் காணாமல் போனது. 
ஸ்ரீபத்மாவிற்கு இத்தனை நடந்திருக்கிறதா என அதிர்ச்சி. வாசுவை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. 
“ இப்போ மாமா எங்க. ரொம்ப அடியா. ரூம் இங்கனு சொன்ன, இரு நான் போய் பார்த்துட்டு வரேன் “ என ஸ்ரீ எழ, அவள் கையை பிடித்து அமர்த்தியவள். 
“ அண்ணா இன்னைக்கு காலைல என்னை வந்து பார்த்துட்டு வெள்ளன எங்கயோ கிளம்பிட்டாங்க. உடம்பு எல்லாம் ஒரே காயமா இருக்காம். தலைல கைல காலுல எல்லாம் கட்டு. இருந்தும் எங்கயோ போயிருக்கு. 
எங்கனு தெரில, ஆச்சி போக கூடாதுனு அடம்புடிச்சு அழுதாங்களாம். நாளைக்கு வந்துடுவேன்னு ஒரு அவசர வேலை சொல்லிட்டு கிளம்பிட்டாங்களாம். 
அண்ணா எங்க போயிருக்காங்கனே தெரில கேர்ள். “ என சோகமாக சொல்ல, அவளை சமாதான படுத்தியவள், சிறிது நேரம் அவளுடன் இருந்து விட்டு வெளியே வந்து கிருபாவிற்கும் மணிக்கும் மாற்றி மாற்றி அழைக்க யாருமே எடுக்கவில்லை. தவித்து போனாள் ஸ்ரீபத்மா. ஸ்ரீபத்மாவை தவிக்க விட்டவனோ அவளை விட மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருந்தான். அவன் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சூழ்நிலையில் அவனையும் அறியாமல் அடியெடுத்து வைத்திருந்தான்.
     இரண்டு நாட்கள் கழித்து அவனை நேரில் சந்திக்கும் பொழுது ஸ்ரீபத்மாவும் வாசுவும் அவர்களின் வாழ்கையின் ஒரு முக்கிய முடிவை எடுத்திருந்தனர்.                           

Advertisement