Advertisement

       சமரச பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டத்தை கலைக்க சொல்லி வந்தது உத்தரவு. ஆங்காங்கே காவல் துறை முதலில் சொல்லி பார்க்க இருத்தரப்பினருக்கும் இடையே பேச்சுகள் சூடாக ஆரம்பிக்க, தடி அடி ஆரம்பமானது. 
அடி திடலின் தடுப்பில் இருந்து ஆரம்பிதது. முதல் தடி அடி ஆரம்பித்ததால், வாசுவுக்கும் பல நூறு பேருக்கும் இந்த நிலைமை. அப்படியே அவனை தாண்டி இன்னும் தடி அடிகள் உள்ளே நோக்கி பாய்ந்தது. வாசுவை காட்டிலும் நூற்று கணக்கான பேர் காயம் பட, அங்கே ஒரே கலவரமாகி விட்டது.  
வாசுவின் பெரியப்பா அந்தனை இடைஞ்சலில் சிக்கினாலும் வயதனர் என பெரிதாக தடி அடி அவர் மீது பாய வில்லை, அதற்கு அங்கு சுற்றி உள்ள பத்திரிக்கையாளர்களும் ஒரு காரணம். எல்லாம் உடனுக்கு உடன் மீடியாவில் லைவ்வில் காட்ட, தடி அடிக்கள் ஓரளவு குறைந்தது. 
ஒரு கட்சியின் பிரமுகருக்காக கேட்டரிங் செய்திருந்து வாசுவிற்கும் அவருக்கும் பிரச்சனையாகி போயிருந்ததே, அவர் இவனை கூட்டத்தில்  கண்டுகொண்டார். அவரிடம் தான் சண்டை இட்டு வந்தானே, அதை மனதில் வைத்து அவருக்கு தெரிந்த காவல் அதிகாரியிடம் இவன் விவசாயி இல்லை ஹோட்டல் வைத்திடுப்பவன். இவனுக்கு இந்த போராட்டதில் வேலை இல்லை, இவன் எதிர்கட்சிக்காரன், இந்த போராட்டதை தீவிரமாக தூண்டி விட்ட நபர்களில் அவனும் ஒருவன், அப்படி இப்படி என சொல்ல அவர் வாசுவை விடுவாதாய் இல்லை.
அரை மயக்கத்தில் விழுந்திருந்தவனை அவனின் பெரியப்பா தூக்க முயற்சிக்க, அவரால் முடியவில்லை. தண்ணி கிடைத்தால் அவனின் மயகத்தை தெளிய வைக்கலாம் என தேட கலவரத்தில் ஒரு வாய் தண்ணி கூட கிட்டவில்லை. 
ஆனால் ஒரு கான்ஸ்டபிள் இவனை இரண்டு நாட்களாக கவனித்துக் கொண்டு தான் இருந்தார். அவனின் அர்பணிப்பு, தளராத போராட்டம் என எல்லாம் அவ்வப்போது அவர் கண்ணில் பட்டுக்கொண்டு தான் இருந்தது. இந்த பிரமுகரையும் தெரியும் , அவர் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லை. இறுதியில் கான்ஸ்டபிள் தண்ணீர் கொண்டு வந்து அவனது பெரியப்பாவிடம் கொடுக்க, அவர் தெளித்து அவனை எழுப்பினார். 
     வாசுவால் எழவே முடியவில்லை, கண்ணை சரியாக கூட திறக்க முடியவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு கண்ணை திறந்தவன், மெல்ல உட்கார, அப்போது பிரமுகருக்கு வேண்டப்பட்ட காவல்துறை அதிகாரி இவனை கைது செய்ய வர, இவனை எழ சொல்ல, இவன் பாதி எழுந்த நிலையில் கால்கள் தடுமாறி மீண்டும் சரிந்து விழ, அவனை எழ சொல்லி இன்னும் தடியடி சரமாரியாக அவன் மீது விழ, அதை மீடியா காமெராக்கள் பதிவு செய்தது. அவனை அடித்து தர தர வென உட்கார்ந்தது போல பாதி தூரம் இழுத்து சென்றவர், பின்பு எழவைத்து இழுத்து சென்றார். அவனது பெரியப்பா 
“ எங்க புள்ளய விட்டுடுங்க அய்யா..
அய்யா விட்டுடுங்க அய்யா. “ கெஞ்ச கெஞ்ச வாசுவை இழுத்த சென்றார். இது எல்லாம் காமெராவில் பதிவானது. அந்த பெரியப்பாவால் கெஞ்ச மட்டும் தான் முடிந்தது, அவர் வயதுக்கு எதுவும் முடியாமல் அவர் நடு ரோட்டில் நின்று ஆழ, கான்ஸ்டபிள் வந்து அவர் எந்த ஊர் என கேட்டு வாசுவின் வீட்டில் யாரையாவது அழைத்து வர சொல்லி பஸ் ஏற்றி விட்டார். 
      வாசுவுடன் சேர்த்து அறுபது ஏழு பேர் கைது செய்ய பட்டிருக்க, போலீஸ் ஸ்டேஷன் நிரம்பி வழிந்தது. வாசு அப்படியே ஒரு ஓரத்தில் சுவற்றில் தலை சாய்த்து முதுகை முன்னே வளைத்து அமர்ந்திருந்தான். உடம்பில் நிறைய அடிபட்டிருக்க, முதுகை சாய்க்க கூட முடியவில்லை. அவனின் கைகள், கால்கள், நெற்றி, உடல் என ஆங்காங்கே ரத்தம் வழிந்து உறைந்து போய் இருந்தது. அதனின் வாடை அவன் பக்கத்தில் இருந்தவரை கூட நகர்ந்து உட்கார வைத்தது. ஆனால் எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. முகம் அத்தனை இறுகி இருந்தது. 
    அங்கே இருந்தவர்கள் யார் யாரரோ வந்து அழைத்து சென்றனர். மாலை வேளை ஆகியும் வாசுவுடன் சேர்த்து ஐந்து நபர்கள் மட்டும் இருந்தனர். வாசுவிற்கு உயிரோடு தான் இருக்கிறோமா என உணர்வு தெரியா நிலை. 
அவனை யாரோ தொட்டு எழுப்பினர். யார் என இவன் பார்க்க, அந்த கட்சி பிரமுகர் இவன் முன்னே நின்று கொண்டிருந்தார். 
“ அன்னைக்கு காசு தரலனு என்கிட்ட அவ்ளோ துள்ளுன. இப்போ எப்படி இங்க இருக்க. “
இதெல்லாம் உனக்கு தேவையா. அன்னைக்கே போட்டத எடுத்துக்கிட்டு போயிருந்தா இந்த நிலைமையில நீ இருப்பியா. 
ஆமா உங்க வீட்ல இருந்து யாரும் உன்னை வெளிய எடுக்க வரலியா. 
வீட்ல உன் நிலைமை இப்படி இருக்கும் போதே உனக்கு இந்த திமிரு. “ என சொல்ல, வாசு பேசவே வில்லை. ஆனால் அவன் கண்களில் அத்தனை சீற்றம்.
“ உனக்கு எல்லாம் இந்த அடி பத்தாது டா. இன்ஸ்பெக்டர் வரட்டும் உன்ன ஸ்பெஷல்லா கவனிக்க சொல்றேன். “ என சொல்லி வெளியே சென்று விட்டார். 
இதை அனைத்தையும் பார்த்த கான்ஸ்டபிள் வாசுவிடம் மெல்ல நெருங்கி தண்ணீர் கொடுப்பது போல் உட்கார்ந்து, 
“ ஏன் தம்பி அந்த ஆளுக்கும் உனக்கு ஏதாவது பிரச்சனையா. “ என கேட்டார். அவரும் அவர் அனுபவதில் எத்தனை நபர்களை பார்த்திருபார். அவருக்கு வாசுவின் போராட்டத்தை நேரில் பார்த்தவர் தானே, அதானால் அவரே முன் வந்து கேட்டார்.
வாசு ஆமாம் என மெல்ல தலையாட்ட, 
“ இன்ஸ்பெக்டர் வரதுக்குள்ள உனக்கு யாராவது பெரிய ஆளுங்க தெரிஞ்சா அவங்களுக்கு ஃபோன் பண்ணிக்கோ. “ என அவரது மொபைல் தர, 
 “ சர், எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் செய்ங்க போதும் . “
“ சொல்லு தம்பி. “
“ இப்போ வந்துட்டு போனாரே அவரோட மாவட்ட தலைவர் மொபைல் நம்பர் எனக்கு தெரியாது, அது மட்டும் தெரிஞ்சிக்கிட்டு வந்து ஃபோன் பண்ணி தாங்க. “ என வாசு கேட்க, 
“ சரி பா, சரி பா. “ என சொன்னவர் அதே போல் நம்பர் கண்டுபிடித்து, அவருக்கு அழைத்து வாசுவிற்கு தர, வாசு அவனின் அடையாளம் சொன்னவுடன் அவனை உடனே அடையாளம் கண்டு கொண்டார். அவனின் தொழில் நேர்த்தி அப்படி. பதினெட்டு வகைகளுடன் கட்சி கூட்டத்தில் விருந்து வைத்தவன் இவன் ஒருவன் தானே. பிறகு பணம் கேட்டு நேரிடையாக இவரை அணுகியது என எல்லாம் அவருக்கு நன்றாக நினைவிருந்தது. 
     அவர் நல்ல தலைவர், உண்மையான சில அரசியல்வாதிகளுள் அவரும் ஒருவர், ஆதி காலம் தொட்டு அந்த பிரதான கட்சியில் பணி செய்தவர். அடிபட்டு வந்தவர். அவருக்கு வாசு அழைத்ததும், அவனின் நிலைமையை நன்கு புரிந்து கொண்டார்.  
    இவன் அவரிடம் நடந்தது ஒன்று விடாமல் எல்லாம் சொன்னான். அவர் தான் அப்போதே இவனுக்காக பேசியவராயிற்றே, அதனால் தான் நேரடியாக வருவதாக சொல்லிவிட்டார். 
    இங்கே இப்படியெல்லாம் நடக்க, இவனது பெரியப்பாவோ வீடு போய் சேர்ந்தவர், வாசுவின் வீட்டிற்கு செல்ல, அவனது வீட்டில் யாரும் இல்லை. கோதண்டதிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்ல, அவருக்கு பி‌பி கூடிவிட்டது. அவர் ஹாஸ்பிடல் கேண்டீன்னில் தனியாக டீ சாப்பிட்டு, அனைவருக்கும் பார்சல் வாங்கி கொண்டிருந்தவர் இதை கேள்வி பட்டு கார்த்தியிடம் சொல்ல மாடியேறினார். மேல ஏற ஏற அவரால் எப்படி இதை சொல்ல போகிறோம் என மன உளைச்சளுக்கு உள்ளானார். காவல் நிலையம் பற்றிய அனுபவம் இல்லை. எல்லாம் சேர்ந்து அவரை தளரச் செய்தது. 
    இங்கே தேனுவின் பிரசவம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, கார்த்தி அதில் கவனமாக இருப்பதை பார்த்தவர், சரி எப்படியும் அவனை விட்டால் இப்போது யாரிடம் சொல்வது என எண்ணி அவனிடம் சொல்ல போய் சொல்லும் முன் பி‌பி ஏகதுக்கும் அதிகமாகி மயங்கி விட்டார். அவரையும் அங்கே வார்டில் சேர்க்க, அவருக்கு தனியாக சிகிச்சை போய் கொண்டிருந்தது. அவருக்கு தூங்கினால் தான் பி‌பி குறையும் என தெரிவித்த மருத்துவர், தூக்க மருந்து செலுத்தி அவரை தூங்க வைத்திருந்தனர். 
வாசுவின் பெரியப்பாவும் வாசுவின் வீட்டில் தகவல் சொல்லியாகிவிட்டது,  அவர்கள் எப்படியும் வாசுவை அப்படியே விட மாட்டார்கள், இப்போது அவர்கள் வீட்டு பெண்ணின் பிரசவம் வேறு இருப்பதால், அதிலும் அவர்கள் பிசியாக இருப்பர், வாசு வெளியே வந்ததும் நமக்கு அழைப்பான் என அவரும் அமைதி காத்தார்.
இப்படி எல்லாம் இருக்க, பின் மாலையாகி விட்டது. 
வாசு அமைதியாக இறுகி போய் உட்கார்ந்திருக்க, உள்ளே வந்த இன்ஸ்பெக்டர், இவனிடம், 
“ யார் நீ, எந்த ஊரு ? “ 
என கேட்க, இவன் சொன்னதும், 
“ அப்போ நீயும் விவசாயிங்கற. “ என நக்கல்லாக கேட்க, இத்தனை நேரம் இருந்த வலியோ, தனிமையோ, ஏதோ ஒன்று அவனை சீற்றம் கொள்ள வைக்க, 
“ சர், ஆமா நான் விவசாயி தான். மரியாதையா பேசுங்க. “ என இவன் அறச்சீற்றம் கொள்ள, 
அவருக்கு கோபம் வந்துவிட்டது, “ என்ன டா குரல் உயருது. விவசாயம் பண்றது என்ன பெரிய உத்தியோகமோ, சொன்னதும் மரியாத தர. 
வெளியே போய் சொல்லி பாரு ஒருத்தன் மதிக்க மாட்டான். “ என இன்னும் சர மாரியாக திட்ட, அதற்கு பதிலுக்கு வாசு சீற்றத்துடன் ஏதோ சொல்ல வர, அதற்குள் வந்துவிட்டார் அந்த மாவட்ட தலைவர். 
இவன் விடைத்து நின்று இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்ய தயாராய் நிற்பதை பார்த்து உள்ளே புகுந்து ஆட்டைத்தை கலைத்தார். அவர் இன்ஸ்பெக்டரின் மேல் அதிகரியிடம் வரும் போதே பேசியிருந்ததாலும், இன்னும் FIR போடததால் வாசுவை விட்டனர். மாவட்ட தலைவர் வருகிறார் என தெரிந்ததும் அந்த பிரமுகரை அங்கே ஆளையே காணவில்லை. வாசு நடக்க மிகவும் சிரம்மபட்டதால், தலைவரே வாசுவையும் அவரது காரில் அழைத்து சென்றார்.
    அங்கே திருச்சியில் தேனுவை சேர்த்திருந்த மருத்தவமனை பெயரை ஆச்சி இவனிடம் மதியம் பேசும் போது சொல்லியிருந்தார். அதனால் அங்கேயே இறங்கி கொள்வதாக சொல்ல, அங்கே அதே மருத்தவமனையில்  இறக்கி விட்டார். 
    வாசு ஃபோன் எடுத்து கார்த்திக்கு அழைக்க பார்க்க, டிஸ்ப்ளே முழுவதும் அடிபட்டு ஒன்றுமே செய்ய முடியவில்லை. முதலில் இவன் அங்கே முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்க, அவர்கள் அவனை அப்போதே அட்மிட்டாக சொல்ல, குடும்‌பத்தை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டான்.
    

Advertisement