Advertisement

    “ ராசா எந்திரி பா. சாப்பிடு. “ என ஆச்சி வாசுவை எழுப்பிக்கொண்டிருந்தார். பின் மதிய வேளை ஆகிருந்தது, வாசு அசந்து உறங்கி இருந்தான். ஆச்சி அழைத்ததும் மெல்ல எழுந்தவன் வேண்டாம் என தலையாட்டி விட்டு அவனது உணவகதிற்கு சென்று சாப்பிட்டு கொள்வதாக  சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமானான். ஆச்சி அவனை விடவே இல்லை. 
“ ராசா, ரெண்டு வாய் சாப்பிட்டு போ. “
“ கடைல பார்துக்குறேன் ஆச்சி . “
“ ஏன் சாமி, இங்கயே சாப்பிடலாம்ல. “ என ஆச்சி கெஞ்ச அவரை பார்க்காமல், இல்லை கடையில் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லி கிளம்பிவிட்டான். அவன் கடைக்கு செல்லவில்லை, ஓடைக்கு சென்று அமர்ந்து விட்டான். 
அவன் முன் நின்று செய்ய வேண்டிய திருமணம், இப்படி அவசரகதியில் சென்று வந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள மிகவும் சிரமபட்டான். சீதாவிடம் எத்தனையோ சொல்லி பார்த்தான், அவர் இறுதி வரை கேட்கவே இல்லை. இப்போது கல்யாண வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து வந்து சாப்பிடு என சொல்ல, இவனால் முடியவில்லை. இவனது கேட்டரிங் தான், ஆனால் இவன் அங்கே முன் நின்று எல்லாம் செய்திருக்க வேண்டும், அதை செய்யாவிடாமல் விருந்து மட்டும் சாப்பிடு என அழைத்தால் அவனால் அதை எளிதாக எடுக்க முடியவில்லை. 
    வாசு, சீதாவிடம் கடந்த ஒரு வாரமாக பேசுவதில்லை, அவரும் இவனை கண்டுகொள்வதில்லை. இவன் வீட்டில் இருந்தால், கோதண்டம் அவரது வயலுக்கு போய் விடுவார். இவன் வீட்டில் இல்லாத சமையம் அவர் வீட்டில் இருக்கும் படி பார்த்துக்கொண்டார். அவனை பார்த்தால் தானே ஏதாவது பேசிவிடுகிறோம், முடிந்த அளவு அந்த சூழ்நிலையை தவிர்த்துவிட்டால் போதும் என அவர் முடிவு எடுத்து விட்டார். இப்போதும் அவரால் வாசுவை பார்த்தால் அவனை பேசாமல் இருக்க முடியாது, கண்டிப்பாக ஏதேனும் பேசுவார், அதனால் இந்த முடிவு.   
    குடும்பத்தில் மகன் தாயிடம் சண்டை பிடித்து பேசுவதில்லை, தந்தை மகனை தவிர்த்தார், இப்படி எல்லாம் இருக்க ஆச்சி தான் மூன்று பேருக்கும் நடுவே தூது புறவாக பறந்து கொண்டிருந்தார். தேனுவுடன் மட்டும் அவரவர் தனியாக நன்றாக பேசுவர், அதனால் அவளுக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. தேனுவும் ஜெயாவின் திருமண அலைச்சல், அது தான் எல்லாரும் இப்படி வீட்டில் இருப்பதில்லை போல என எண்ணிக்கொண்டு ஆச்சியுடனே சுற்றி கொண்டிருந்தாள். 
தேனு வீட்டில் இருபாதால், வாசு தினமும் மாலையில் அவளுக்கு பிடித்ததாய் ஏதாவது சமைப்பான். முடிந்தவரை அவளுடன் வீட்டில் முன் வாயிலின்‌ முன்னே நடக்க வைப்பது அவனது பிடித்த வேலை.
தேனுவிற்கு பள்ளி விடுப்பு கொடுத்திருந்தாலும், அவளது சில மாணவர்கள், அவ்வப்போது அவளை தேடி வீட்டிற்கு வந்து பாடம் கேட்டு சென்றனர். எல்லாம் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்.   
    எல்லாம் இப்படி சென்று கொண்டிருக்க, இப்போது வாசு ஓடை அருகே  உட்கார்ந்திருந்தான். வனத்துறை அதிகாரி ஒருவர் அவனை தொடர்பு கொண்டு அழைக்க, இன்னும் இரண்டு வாரத்தில் வேலை ஆரம்பித்து விடலாம் என கூறினார். வாசுவிற்கு இத்தனை இக்கட்டிலும் அவன் எதிர்பார்த்திருந்த ஒரு சாதகமான செய்தி.  
இத்தனை நேரம் இருந்த மன நிலை மாறி மனம் முழுக்க உற்சாகம், யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால் நிதானித்தான். இப்போதே வீட்டிற்கு சொன்னால், பின் இந்த விஷயம் தள்ளி போனால் என்ன செய்வது. வீட்டில் யாரிடமும் பகிரவில்லை. 
ஆனாலும் சொல்லலாமல் சொல்ல அவன் மனம் விழைந்த்ததால், சீதாவிற்கு அழைத்தான்.
“ ம்மா அங்கே எல்லாம் நல்லா நடக்குதா“ என உற்சாமாக கேட்க, சீதாவிற்கு ஒன்றும் புரியவில்லை, அதுவும் இத்தனை நாட்களாய் பேசாதவன் இப்போது பேசவும், அவர் சிறிது நெகிழ்ந்து விட்டார். அவன் இப்படியெல்லாம் இவரிடம் பேசாமல் இருந்ததில்லை, அவர் வாய்யடைத்து போய் நிற்க, 
“ ம்மா வீட்டுக்கு எப்போ வருவிங்க. “
அவருக்கு கண்களில் நீர் கட்டி விட்டது, அதை அப்படியே இமை மூடி மூடி திறந்து உள்ளிழுத்தவர், “ சீக்கிரம் வந்துருவேன் பா. “ என சொல்லி வைத்து விட்டார். அவருக்கு மனம் சமன் பட நேரம் பிடித்தது.
       வாசுவிற்கு இது நெகிழ்ச்சியான தருணம், அவன் அம்மாவின் குரல் சில வாரங்களுக்கு பிறகு கேட்கிறான், கனிந்த குரல். அவரது குரலே அவரின் உணர்வுகளை சொல்ல, வாசுவிற்கு இன்று மகிழ்ச்சியான நாளாய் மாறிவிட்டது.
         கிருபாவும் மணியும் மாலை தான் வந்தனர், அவர்களை பார்த்து 
“ இன்னைக்கு உங்களுக்கு ட்ரீட்டு டா. “ என உற்சாகமாக சொல்ல,
அவர்கள் இவனை ‘ ஆஆ ‘ என பார்த்தவர்கள், 
“ அண்ணே என்னாச்சு. ஏதாவது குட் நியூஸ்ஸா.  “
வாசு, “ ஏன் சொன்னா தான் வருவிங்களா. “ என புன்னகையுடன் சொல்ல, 
உடனே கிருபா ஸ்ரீக்கு அழைக்க, கொச்சின்னில் ஸ்ரீ அப்போது தான் ஹாஸ்டலின் மாடியில் காஃபி குடித்தபடி அவளது லாப்பில் அவள் எடுத்த போட்டோசை வைத்து ஏதோ பார்த்துக்கொண்டிருந்தாள். அதனால் யாரென பார்க்காமலே எடுக்க, 
“ அண்ணி கங்க்ராட்ஸ். மேரேஜ் டேட் பிக்ஸ் ஆயிடுச்சா சொல்லவே இல்ல, அண்ணா எங்கள ட்ரீட் கூப்பிடறப்போ தான் எங்களுக்கே தெரியுது “ என கிருபா உற்சாகமாக சொல்ல, ஸ்ரீ காஃபி கப்பை அப்படியே விட அது அவளது ஸ்கர்ட்டை நனைத்து சூடாக்க, அருகில் சிறிது தூரம் தள்ளி அமர்ந்த அவளது தோழி “ காஃபி கொட்டிட்டியா ” என கேட்க, அவளுக்கு ஸ்ரீ 
“ ஆமா “ என சொல்ல, 
கிருபா இவன் கேட்டதற்கு தான் அவள் சொல்கிறாள் என நினைத்தவன், 
“ கங்க்ராட்ஸ் அண்ணி. சீக்கிரம் கல்யாணம் வைச்சிடுங்க. இல்லைனா நம்ப ஆளு எஸ் ஆயிட போராரு. இன்னைக்கு அண்ணே ஒரு நிமிஷம் கல்யாணதுக்கு வந்ததுக்கே அத்தன புள்ளைங்க சைட் அடிச்சாங்க. “
என வாழ்த்தில் ஆரம்பித்து சீரியஸ்ஸாக முடிக்க, வாசு கோபமாக அவனை துரத்தும் சத்தமும் கிருபா ஓடும் சத்தமும் இங்கே ஸ்ரீக்கு கேட்டு அழைப்பு கட் செய்யப்பட்டது. இவளது வெப்பன் சப்ளையர் படும் பாட்டை நினைத்து ஸ்ரீபத்மா புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.  
இப்படியே அடித்து துரத்தி விஷயம் என்ன என்று சொல்லாமலே கிருபாவையும் மணியையும் பார்சல் செய்து  திருச்சிக்கு பஸ்ஸில் ஆரவாரமாய் அமர்த்தினான் வாசு. 
பஸ்ஸில் அமர்ந்து ஸ்ரீபத்மாவிற்கு அழைக்க, அவன் எப்படியும் அழைப்பான் என எதிர்ப்பார்த்தவள், அவன் அழைத்த உடனே எடுத்தாள், 
“ ஸ்ரீ, நான் இப்போ உன்ன பார்க்கணும் “ என உற்சாகமாய் வாசு சொல்ல, அவனது குரலில் வழிந்த உற்சாகத்தில் ஸ்ரீ விழிவிரித்து, 
“ மாம்ஸ் என்னாச்சு. You sound so happy. “
“ ஸ்ரீ…We made it. “
“ என்னாச்சு என்ன பண்ணிங்க. “ என இவளும் உற்சாமாக கேட்க, 
“ அதெல்லாம் சொல்ல மாட்டேன் நீ இந்த மன்த் எண்ட்ல வர தான, அப்போ தெரிஞ்சுகோ, நேர்ல பார்த்து தெரிஞ்சிகோ. “
“ மாம்ஸ் என்னாச்சு பிளீஸ் சொல்லுங்க. சொல்லுணும் தான ஃபோன் பண்ணிங்க. “
“ இல்ல இது இப்போ வேணாம். அப்புறம் நீ வர அப்போ பார்த்துகோ. இப்போ சொல்றத விட நீ நேர்ல பார்த்து தெரிஞ்சிகோ. “
“ அப்புறம் எதுக்கு டா ஃபோன் பண்ண. 
மாம்ஸ் நீ எல்லாம் மனுஷனே இல்ல டா. வாண்டெட்டா கூப்பிட்டு கடுப்பாக்க வேண்டியது. 
எப்படி டா முழு பூசணிக்கையா சோறுல மறைக்கிற. “
“ அப்படி இல்ல ஸ்ரீ முழுசா போட்டா சோறுல மறைக்க முடியாது, அதனால  பீஸ் பீஸ்ஸா போட்டு சாம்பார் வச்சு சாப்பிட்டா முழு பூசணிக்கையா சோறுல மறைக்க முடியும். “ என மொக்கை போட, 
அதை கேட்டு காண்டாகி போன ஸ்ரீ அழைப்பை முடித்து விட்டாள். வாசுதேவன் முழு சிரிப்புடன் பஸ்ஸில் அமர்ந்திருந்தான். 
     ஸ்ரீபத்மாவிற்கு காஃபி கொட்டியது எரிச்சல் தர, இந்த பக்கி பயலும் ஒன்றும் சொல்லாமல் இருந்தது கோபம் தர, ஸ்ரீபத்மா அவனை டிசைன் டிசைன்னாக திட்டி மெசேஜ் அனுப்பினாள். 
இந்த பக்கி பயலும் அதை பார்த்து, “ ஈஈஈ “ என தனந்தனியாக ஒரு சீட்டில் அமர்ந்திருந்தான். அதை பார்த்த கிருபா அதை அப்படியே போட்டோ எடுத்து ஸ்ரீக்கு அனுப்ப, ஸ்ரீபத்மாவிற்கு வாசுவை துவைத்து போடும் அளவு கோபம் வந்தது. 
     ஸ்ரீபத்மாவிடம் முதலிலிருந்து இவன் ஒன்றுமே சொல்வதில்லை, இப்போது தான் ஏதோ சொல்ல வந்திருக்கிறான், அதையும் முழுமையாக சொல்லாமல் சஸ்பென்ஸ் வைக்கிறேன் என கடுப்பை கிளம்புகிறானே என நொந்து போய் அமர்ந்திருந்தாள்.
   இவ்வாறாக ஒரு வாரம் சென்றது,
              இப்போது தேனுவை ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தனர். அவளுக்கு வலி வருவதும் போவதுமாக இருக்க, மொத்த குடும்பமும் அங்கே இருந்தது. கார்த்தி டாக்டரின் அறைக்கும் தேனுவின் வார்ட்டிற்கும் அலைந்து கொண்டிருந்தான் . ஆனால் வாசு அங்கு இல்லை. 
   வாசு திருச்சியில் போராட்டதில் இருந்தான். இரண்டு நாட்களாக விவசாயிகள் போராட்டம். இவன் அவசியம் கலந்துக்கொள்ளவேண்டும் என  வீட்டில் சொல்ல அவர்கள் வேண்டாம், இப்போது தேனுவின் பிரசவ நேரம் என சொல்ல அவனும் புரிந்து வீட்டிலிருந்தான். ஆனால் தேனுவின் வழியாக இதை கேள்வி பட்ட கார்த்தி, வாசுவின் வீட்டிற்கு வந்து வாசுவிற்காக பேசி கோதண்டத்தை தவிர எல்லோரையும் சம்மதிக்கவைத்து வாசுவை அனுப்பிவைத்தான்.  
     கோதண்டம் ஹாஸ்பிடலில் வாசு இந்த சமையதில் இப்படி செய்து  விட்டானே என பொறுமையிழந்து அமர்ந்திருந்தார். ஆச்சி இறைவனிடம் பிராத்தனை வைத்துக்கொண்டிருந்தார் அவருக்கு துணையாக சிவசு தாத்தா அவரின் அருகில் அமர்ந்திருந்தார். 
சீதாவும் சிவகாமியும் தேனுவுடன் இருந்தனர். கோதண்டத்தை சுந்தரம் சமாதானப் படுத்திக்கொண்டிருந்தார். கோதண்டம் சுந்தரத்திடம் தான் மனம் விட்டு பேசுவார். அதனால் சுந்தரம் சொன்னால் தான் எதுவும் அவருக்கு மனதில் ஏறும். 
 திருச்சி, 
     பொன்னி நதி பாய்ந்து ஓடும் பூமியில் விவசாயிகளின் விளைவித்த பொருட்களுக்கு நியாயம் வேண்டி நடக்கும் போராட்டத்தின் நெருக்கடியான காலகட்டம். 
தமிழ்நாடு எங்கிலும் இருந்து விவசாயிகள் பலர் திரண்டிருந்தனர். நகரில் முக்கிய பகுதியில் நடப்பதால் காவல்துறை, தீயனைப்புதுறை, அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் என எல்லாம் தயாராய் நின்றிருந்தது. 
கடும் வெயில் அடித்தாலும் யாரும் நகர்வதாய் இல்லை. கூட்டம் ஒன்று உள்ளே செல்வதும் மற்றொன்று வெளியே வருவதுமாய் இருந்தது. போராட்டம் அப்படி தான் உயிர்ப்புடன் இருந்தது. எல்லோரும் ஒன்றாக இருந்து போராட்டம் செய்து வீட்டிற்கு சென்றால் போராட்டம் நீர்த்து விடும். அதனால் ஒரு குழு போராட்டம் செய்து வீட்டிற்கு கிளம்ப மற்றொன்று உள்ளே நுழைந்தது. எல்லாம் ஒரு ஒழுங்குடன் சுழற்சி முறையில்  நடந்துக்கொண்டிருந்தது. போராட்டத்தின் வேள்வி அனையாமல் பார்த்துக்கொண்டனர். 
இப்படி பட்ட கூட்டத்தில் வாசுவும் திடலின் மண்ணில் அமர்த்திருந்தான். போராட்டதின் தலைவர்கள் சிலர் பேச்சுவார்த்தை என மாவட்ட ஆச்சியருடன் இருக்க, இவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருந்தது. 
வாசு இரண்டு நாட்களாக களத்தில் அயராது கோஷமிடுவதும், அங்கே போரடுவருக்கு பழக்கள், பிஸ்கெட், உணவு பை, தண்ணீர் என வாங்கி கொடுபத்தும் என சுலன்று கொண்டிருந்தான்.  
இன்று ஐந்து மணி நேரமாக நின்று உரக்க கோஷமிட்டு இப்போது தான் அமர்ந்திருந்தான். அவனது ஊரில் பெரியப்பா முறை கொண்டவர் அடுத்த குழுவில் இப்போது கூட்டத்தில் கோஷமிட்டு கொண்டிருக்கிறார் . இன்னும் சற்று நேரத்தில் அவரது பங்களிப்பை நிறைவு செய்ததும் ஊருக்கு செல்லலாம் என அமர்ந்திருந்தான். தேனு ஹாஸ்பிடலில் இருப்பதாக ஆச்சி இவனை வரச்சொல்லியிருந்தார். இந்த நேரத்தில் வாசு அங்கே இருக்க வேண்டும் என அழுத்தி சொல்லிவிட்டார். இந்த பெரியப்பா வயதானவர்,  என்பத்தி ஐந்து வயதிலும் குரல் கொடுக்க வந்திருக்கிறார். அவரின் குடும்பம் வாசுவை நம்பி தான் அனுப்பி இருந்தனர். அவரை விட்டு செல்ல முடியா நிலைமை.   
இவன் திடலில் மரத் தடுப்புக்கு அருகில் அமர்ந்திருந்தான். வெளியே இருந்து ஒரு வயத பெண்மணி அங்கே இவன் அருகில் வருவதும் பின்னே சற்று தூரம் செல்வதும் என வந்து வந்து போய்க்கொண்டிருந்தார். அவர் உடுத்தியிருந்தது நல்ல புடவை தான் ஆனால் ஏனோ கசங்கி இருந்தது. கண்களில் தவிப்புடன் அங்கே திரிந்து கொண்டிருந்தார்.
வாசு அவர் அருகில் சென்றவன், 
“ ம்மா யார் நீங்க. என்னமா என் கிட்ட வரிங்க அப்புறம் திரும்பி போய்டுறிங்க ஏதாவது வேணுமா. “
அவர் ஆம் என தலையாட்டினார். 
“ என்ன மா என்ன வேணும். “
“ ஒரு சாப்பாடு பொட்டலம் வேணும் தம்பி. எனக்கு இல்ல என்வீடு பக்கத்துல இருக்க நாயிக்கு வேணும். “
இவன் அதிர்ந்து விட்டான். இங்கே என்ன ஒரு போராட்டம் நடந்துக்கொண்டிருக்கிறது, இவர் பாட்டிற்கு இப்படி வந்து கேட்கிறாரே என நினைத்து அப்படியே நின்று விட்டான்.
அவரை பார்க்க ஒன்றும் வறுமையில் இருப்பவர் போல் தெரியவில்லை. ஏன் இங்கே வந்து கேட்கிறார் என நினைத்தான். ஆனால் வாசு அவசர படவில்லை, நிதானத்தை இழக்கவில்லை. வாழ்கைக்கான போராட்டமோ இல்லை கொள்கைக்கான போராட்டமோ பொறுமையும் நிதானமும் நிச்சயம் வேண்டும் என உணர்ந்திருப்பவன். 
அவன் அவசர கதியில் கோபபடவில்லை, அவரின் அருகில் வந்து பொறுமையாக பேச ஆரம்பித்தான். 
“ ஏன் மா. இப்படி கேக்குறிங்க. என்னாச்சு. “
அவன் கேட்டதும் அவருக்கு கண்களில் நீர் வந்து விட்டது, தேம்பிக்கொண்டே அவர், 
“ என் பொண்ணுக்கு பிரசவம். பக்கத்து ஊரு தான். அங்க போயிட்டு இன்னைக்கு தான் ஒரு அவசர வேலையா ஊருக்கு வந்தேன். கொஞ்சம் நேரம் முன்னாடி தான் வந்தேன். 
என் வீட்டு ஒனரு நான் இன்னைக்கு வருவேன்னு நினைக்கல போல, வீட்ட பூட்டிட்டு ஊருக்கு போய்டாரு. என் சாவியும் என் மக வீட்ல இருக்கு. 
எனக்கு சுகர் இருக்கு தம்பி, பசி தாங்க முடியாது. கைல பஸ்ஸுக்கு தான் பணம் வச்சிருந்தேன். இங்க வந்து எடுத்துக்காலாம்னு வந்தேன். ஆனால் வீடு பூட்டி இருந்துச்சு. 
பசி தாங்க முடியாம கை கால் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு, பக்கத்து வீட்லயும் ஆளு இல்ல. இங்க நாங்க புதுசு வேற யாரையும் தெரியாது. மத்தவங்க கிட்ட போய் பசிக்குதுனு சொல்ல முடில.
பக்கத்து வீட்டு நாயிக்கு அதோட தட்டுல சாப்பாடு வச்சிட்டு வெளியே போயிட்டாங்க போல. பசி தாங்க முடியாம நான் அந்த தட்ட எடுத்து அதோட சாபாட சாப்பிட்டுட்டேன். நாய் என்னை ஒன்னும் பண்ணல, என்னை பார்த்துட்டு அமைதியா படுத்துக்கிச்சு. 
இப்போ நான் சாப்பிட்டுட்டேன், ஆனா அதுக்கு பசிக்கும்ல. அது வாய் இல்ல ஜீவன் தம்பி. 
இங்க போராட்டம் நடக்குறதால சாப்பாடு பொட்டலம் தருவாங்கனு சொன்னாக. அதான் நாயிக்கு சாப்பாடு இங்க வாங்கலாம்னு வந்தேன்.
என்னை தப்பா எடுத்துக்காதிங்க தம்பி. “ என கண்ணீர் விட்டு கை எடுத்து கும்பிட்டார்.
வாசுவிற்கு அவரின் நிலை நெஞ்சை ஏதோ செய்தது. எத்தனை பசி இருந்தால், அவர் நாயின் தட்டில் இருந்து சாப்பிட்டு இருப்பார். இப்போது அந்த நாயின் பசியறிந்து தாய்மையுடன் அதற்கும் உணவு வேண்டும் என எண்ணி இங்கே வந்து கும்பிடுகிறாரே என அவரின் மேன்மை புரிந்து பார்த்தவன், 
“ ம்மா கொஞ்சம் இருங்க வரேன். “ என சொல்லி உள்ளே சென்றவன் அவன் சாப்பிட வைத்திருந்த உணவு பொட்டலத்துடன் இன்னொரு  பொட்டலத்தையும் எடுத்து வந்தவன், இரண்டையும் அவரிடம் காட்டி, 
“ ம்மா உங்களுக்கு இன்னும் பசி வந்தா இதுல ஒன்னா சாப்பிடுங்க. 
இன்னொன்னும் இருக்கு. இது உங்க பக்கத்து வீட்டு நாயிக்கு. “
என அவரின் கையில் சரியாக கொடுத்து முடித்த சமையம் ஒரு தடியின் அடி பலமாக அவன் கையை அடித்தது, அவன் அந்த அடியை பொறுக்க முடியாமல் கையை உதறி எடுத்ததாலும் அந்த பெண்ணின் கையில் உணவு பொட்டலங்கள் பத்திரமாக சேர்ந்து விட்டது என கண்களால் உறுதி செய்து நிம்மதியானவனின் முன்நெற்றியில் கல் பட்டு ரத்தம் தெறித்தது. இப்போது அவனது கை, கால்கள், முதுகு என எல்லாம் தடி அடிகள் பலமாக தாக்க, அவன் சட்டையெல்லாம் ரத்தமாகி சரிந்து விழுந்தான். அப்போதும் தடி அடி மட்டும் இல்லாமல் உதைகளும் மிதிகளும் கிடைக்க, வாயில் உதடு கிழிந்து ரத்தம் தெறித்தது. 
“ விவசாயிகள் இல்லையேல் 
உங்களுக்கு வாழ்க்கை இல்லை. “
“ அவன் வாயிற்றில் நீங்கள் அடித்தால்
உங்கள் குழந்தைகளின் 
எதிர்காலம் இங்கு இல்லை. “ 
என ஆங்காங்கே கோஷங்கள் விண்ணைப்பிளக்க, போராட்டா களம் சிறிது சிறிதாக போர்க்களமாய் உருமாறி புழுதி பறக்க ஆங்காங்கே தடி அடிகளும், விடாத கோஷங்களும் உரக்க ஒலித்தது.
இத்தனைக்கும் நடுவில் வாசு ரத்தக் கரை உடையில் அரை மயக்கத்தில் போராட்டத் திடலின் அருகே கிடந்தான்.                                  
                                        

Advertisement