Advertisement

         ஜெயாவின் திருமணம் முடிந்து மற்ற சடங்குகள் தேவராஜ்ஜின் சொந்த ஊரில் கோவிலில் நடந்துகொண்டிருந்தது. வாணி, ஆச்சி, தாத்தா, கோதண்டம், சீதா, சிவகாமி, சுந்தரம் அனைவரும் இருந்தனர். ஆனால் வாசு அங்கு இல்லை. 
      திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நாங்களே செய்கிறோம் என விஜி சொல்லிவிட்டதால், இவர்கள் பக்கம் எந்த வேலையும் பெரிதாக இல்லை. ஆனால் இந்த திருமணம் நடத்துவதற்குள் அவர் அதிகம் வாசுவையே இழுக்க, சீதா ஸ்ட்ரிக்ட்டாக, திருமணம் மட்டும் பார்த்துவிட்டு நீ கிளம்பிவிடு என வாசுவிடம் சொல்லிவிட்டார். அவன் எவ்வளவோ போராடி பார்த்தான். ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவே இல்லை. 
     தேனுவின் வளைகாப்பு முடிந்து இரண்டு வாரங்களில் இந்த திருமணம். இதை நடத்திக்காடுவதில் சுலன்று வேலை பார்த்தவர் விஜி. அவர் எதர்கெடுத்தாலும் 
 “ உங்க வாசுக்கு கூட அதிக வயசு ஆயிடுச்சு இல்லைனா ஜெயாவ அங்க கூட கொடுத்திருபிங்க, என் பையன் ஜெயவ விட ரெண்டு வயசு தான் அதிகம் அதனால எங்களுக்கு பொண்ணு கொடுக்கறதுல உங்களுக்கு சிரமம் இருக்காது. 
வாசு…இந்த கேட்டரிங் எல்லாம் நீங்க நல்ல பண்ணுவிங்கலாமே, நம்ப ஜெயா கல்யாணதுலையும் நீங்களே பண்ணுங்க. இந்த காலத்துல வெளியே எவ்ளோ காசு கொடுத்தாலும் கல்யாண சாப்பாடுல ஏதாவது சொல்லிக்கிட்டு தான இருக்காங்க. 
நம்ப இப்போ ஜெயா மூலமா சொந்தம்னு வந்துட்டோம். நான் வேணா உங்க பையனுக்கு பொண்ணு பார்க்கட்டா. “ 
இப்படி வாணியிடம், வாசுவிடம், சீதாவிடம் என ஒவ்வொரு சந்தர்பத்திலும் ஜெயாவின் திருமண பேச்சுவார்த்தையில் அவர் பக்கம் சொந்தங்களையும் அழைத்துக்கொண்டு சம்பந்தம் பேசும் போதெல்லாம் எல்லோர் முன்னிலையிலும் இப்படி ஏதாவது பேசி செல்வார். ஒரு வாரத்தில் நான்கு முறையாவது இப்படி ஜெயாவின் வீட்டை ஏறி இறங்க, சிவசு தாத்தா, சுந்தரி ஆச்சி எவ்வளவோ எடுத்து சொல்லியும் ஜெயா அழுது அடம் பிடித்து காய்ச்சல் கண்டு மருத்தவமனையில் டிரிப்ஸ் போடும் நிலைமை. வாணி மிகவும் சிரம்மபட்டு போனார். 
     ஜெயா சின்ன பெண் தானே, தேவராஜ் அவளுக்கு அத்தனை நம்பிக்கை கொடுக்க, 
“ நான் உங்க வீட்டில என் அம்மாவை அனுப்பி சம்பந்தம் பேசினேன், உங்கள் வீட்டில தான் இழுத்து அடிக்கிறாங்க. 
யாரு அந்த சிவசு தாத்தா உனக்கு சொந்த தாத்தாவா இல்லை தான, அவங்க உங்க சொந்தம், ஏதோ உங்க அப்பாக்கு அப்புறம் உங்க அம்மாக்கு ஆதரவா இருக்காங்க. அதுக்குனு உன் கல்யாண முடிவையும் அவங்களே எடுப்பாங்களா. உன் வாசு மாமாவும் இதுல கூட்டா.
உன் கல்யாண முடிவ நீ எடுக்க மாட்டியா. உங்க வீட்ல நீ பேச மாட்டியா. “ என இவன் அவளிடம் சொல்ல, 
“ எங்க தாத்தாவ நீ அப்படிலாம் பேசாத, எங்க வாசு மாமா தான் என்னை வளத்தாரு. அவங்கள பத்தி எல்லாம் நீ பேசாத. 
எங்க அம்மா தான் நான் படிச்சு முடிச்ச அப்புறம் கல்யாணம் பண்ண சொல்றாங்க. அது கரெக்ட்டா இருக்கு, அதான் என்னால வீட்ல பேச முடில. “ என ஜெயா சொல்ல, தேவராஜ்ஜிற்கு கோபம் வந்துவிட்டது.
“ ஏன் நான் படிச்சு உன்ன பார்த்துக்க மாட்டேன்னா.
எங்க வீட்ல உன்ன படிக்க வைக்குறேன்னு சொல்றாங்க. அப்புறம் என்ன.
உங்க வீட்ல இருந்தே படி , படிச்சிட்டு வேலைக்கு போ. ஆனா அது வரைக்கும் எங்க வீட்ல வைட் பண்ண மாட்டாங்க. என் மாமா பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணிடுவாங்க. 
நீ என்னை மறந்துடு. “ என இவளிடம் கோபமாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.    
இவன் இப்படி சொல்லி சென்றதும் ஜெயா வந்து வீட்டில் சொல்லி ஆழ, சீதாவிற்கு கோபம் வந்துவிட்டது,
 “ இங்க பாரு கண்ணு கல்யாணம் பண்ண அப்படி தான் சொல்லுவாங்க. 
நீ உன் கல்யாணத்த பத்தி முடிவெடுக்கலாம் அது தப்பு இல்லை. 
நீ படிச்சு முடிச்சு சொந்த கால நின்னதுக்கு அப்புறம் முடிவு பண்ணலாம். நீ வேலைக்கு போறது காசு கொண்டு வர இல்லை. உனக்கு அப்போ தான் வெளிய ஆளுங்க எப்படி பழகுறங்கனு தெரியும். 
நீ எத்தன பேர பார்த்திருக்குற, சொல்லு. இப்போ தான் காலேஜ் படிக்குற, அத முடிக்க கூட இல்லை.   
நீ இப்படியே குதிரைக்கு கடிவாளம் கட்டுன மாதிரி தேவராஜ்னு போற, அவன உனக்கு எத்தன நாள தெரியும், 
எங்கள எத்தன வருஷமா தெரியும். உனக்கு யார நம்பலாம்னு தெரிய வேண்டாமா. அப்படி என்ன அவன் மேல உனக்கு நம்பிக்கை. 
நான் டீச்சர்ரா இருந்தப்போ என் ஸ்கூல் புள்ளைங்க எத்தன பேரோட வாழ்க்கை இப்படி போச்சுனு உனக்கு தெரியுமா. 
நீ சின்ன பொண்ணு இப்போ இப்படி எல்லாம் தான் பேசுவாங்க, அப்புறம் பிரச்சனைனு வந்தா விட்டுடுவாங்க. அப்போ என்ன பண்ணுவ. “  
என்று கேட்டார். அதற்கும் ஜெயா அந்த அழுகை அழுது, நாள் கணக்காக அடம் பிடித்து இப்போது திருமணத்தில் வந்து நிற்கிறது.
        சீதாவிற்கு தான் இத்தனை சொல்லியும் இந்த பெண் கேட்கவில்லையே என மனதில் இருந்தாலும்,‘ எங்க வீட்டு பொண்ணு நல்லா வாழணும்…’ என ஆசீர்வதித்தார். 
     வாசுவின் கேட்டரிங் தான் அங்கே, ஆனால் அவன் இல்லை. அவன் சார்பாய் கிருபாவும், மணியும் தான் பொறுப்பாய் வேலை பார்த்தார்கள். விஜி சும்மாவே அவனை எதற்காவது இழுப்பார், இப்போது திருமணத்திலும் வந்து ஏதாவது பேச்சை இழுத்து விட்டார் என்றால், சீதாவால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. வாசு வருவான், மாப்பிள்ளை தாலி கட்டும் சமயத்தில் வருவான், திருமணம் பார்த்துவிட்டு சென்றுவிடுவான் என சீதா முதலிலே வாணியிடம் சொல்லிவிட்டார்,  வாணி முதலில் வருந்தினாலும் விஜி பேசும் பேச்சை பார்த்து அவருக்கும் இது சரி தான் என்று தோன்றிவிட்டது, இருந்தாலும் ஜெயாவை நன்றாக பார்த்துக்கொண்டவன் வாசு தான், அவன் நின்று இங்கு எதுவும் செய்ய முடியவில்லையே என மனதில் இருந்தது. 
     எல்லாம் முடிந்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் விட்டு, வீட்டிற்கு வர மாலையாகி விடும் என வாசுவிற்கு சீதா தகவல் சொல்லிவிட்டார். வீட்டில் தேனு, உறங்கி கொண்டிருக்கு, வாசு பின் கட்டில் படுத்திருந்தான். காலையில் அவசர கதியில் திருமணதிற்கு சென்று வந்தது ஏதோ போல் இருக்க, ஒரு மனமோ திருமணத்தையாவது பார்க்க முடிந்ததே என சமாதானப்படுத்திக் கொண்டிருந்தது. 
     தேனுவிற்கு இன்னும் சிறிது நாட்களில் குழந்தை பிறந்து விடும் என தேதி கொடுத்திருக்க, இவன் எங்கும் வெளியே செல்லவில்லை, அப்படியே எவ்வளவு நேரம் தான் படுத்திருப்பது. 
எழுந்தான், நடந்தான், சில நேரம் அங்கே நின்ற தென்னை மரத்தை தொட்டு தடவி சாய்ந்திருந்தான், செடி கொடிகளை ஆராய்ந்துக்கொண்டு, அதற்கு நீர் விட்டு கொண்டிருந்தான். பிறகு சட்டையெல்லாம் நீர் பட்டிருக்க, வேறு சட்டை அணியலாம் என மாற்ற, அதில் பாக்கெட்டில் ஏதோ சத்தம். என்னவென்று எடுத்து பார்க்க, ஸ்ரீயின் வளையல்கள். அந்த வளையல்களை மென்மையாக எடுத்தவன், அதை வைத்துக்கொண்டு அப்படியே கட்டிலில் படுத்து விட்டான். அப்படியே தேனுவின் வளைகாப்பு நாள் கண் முன் வந்தது. 
      வளைகாப்பு அன்று வீட்டில் தேனு உறங்க, வெளியில் ஹாலில் சிவகாமி களைப்பாக படுதிருக்க, சுந்தரம் திண்ணையில் படுத்து உறங்கி விட்டார். ஆச்சியிடம் பாயாசமும் வடையும் வேண்டும் என ஸ்ரீ கேட்க, ஒன்றும் கிட்டவில்லை. அனைத்து உணவு வகைகளும் வாசுவின் உணவகத்தில் இருப்பதால் ஆச்சி ஒரு கூடையில் இரண்டு பெரிய சைஸ் தூக்கு வாளியை வைத்து அங்கே சென்று எடுத்து வரும் படி ஸ்ரீயிடம் கூறிவிட்டார். வீட்டிற்கு யாராவது வந்தால் கொடுக்க வேண்டுமே, அதற்கும் சேர்த்து எடுத்து வா என சொல்லி அனுப்பிவிட்டார். இதன் பிறகு வாசு சீதாவை வீட்டில் வந்து விட்டதும், அவனது உணவகத்திற்கு எல்லாம் சரி பார்க்க சென்று விட்டான். ஆச்சியும் சீதாவிடம் வாணி வீட்டில் என்ன ஆனது என விசாரித்து விட்டு ஜெயாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். 
     வாசுவின் உணவகம், மென் கரோக்கி இசையில் மூழ்கியிருந்தது, அவனுக்கு ஆறுதலான ஒரு இடம். வீட்டில் எத்தனை பிரச்சனை இருந்தாலும், எப்போதும் இசை அவனை தாலாட்டும்.
“ ஹாஹாஹாய்ய்ய் மாம்ஸ். “ என உற்சாகமாக கத்தி கொண்டே உள்ளே நுழைந்தாள் ஸ்ரீபத்மா. இவன் இங்கே இருப்பான் என எதிர்பார்க்காவில்லை. இவள் நடந்து வந்திருக்க, அவன் பைக்கில் வந்துவிட்டான். ஸ்ரீபத்மா கிருபா அல்லது மணி தான் அங்கே இருபார்கள் என நினைத்துத்தான் வந்தாள்.
ஆனால் கிருபாவும் மணியும் அங்கே கார்த்தியின் வீட்டில் மீதம் உள்ள அண்டா குண்டாக்களை அள்ளி கொண்டு வர சென்றிருப்பதால் இங்கே வாசு தனியாக மீதம் உள்ள உணவுகளை எல்லாம் ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தான். இவளின் குரல் கேட்டு ஜெர்க்காகி திரும்பினான். 
      உணவக வாயிலில் ஒரு லாவென்டர் வண்ண அழகிய அனார்கலியில் கையில் மருதணியுடன், நிறைய அடுக்கபட்ட வளையலகளுடன் நின்றிருந்தாள் ஸ்ரீபத்மா. அவள் கழுத்தில் புடவைக்கு போட்டிருந்த நகைகள் அப்படியே இருக்க, தலையில் பிரிஞ்ச்ஸ் சுருளாக முன்னே அழகாய் படர்ந்திருக்க,‌ வீட்டில் தான் இருக்கிர்றோமே என உடைக்கு சம்பந்தமே இல்லாமல் கொண்டை போட்டு அதில் கிளிப் வைத்திருக்க அதனுடனே வந்திருந்தாள். 
      வாசுவை, ஸ்ரீபத்மா முழு புன்னகையுடன் பார்க்க, அவளை பார்த்ததும் வாசு சிரித்து விட்டான். 
ஸ்ரீபத்மா புன்னகை அப்படியே மறையே முறைத்துக்கொண்டு உள்ளே வந்தாள். 
“ என்ன சிரிப்பு. அப்படி என்ன சிரிப்பு. “
“ ஹா…ஹா…ஹா…இல்ல ஆளும் மண்டையும் செம காமெடியா இருக்கு. “ என வயிற்றை பிடித்து சிரிக்க, ஸ்ரீபத்மாவின் காட்டன் கேண்டி கன்னங்கள் இன்னும் சூடேறி சிவக்க, தங் தங் என வாசுவை நோக்கி இன்னும் அருகில் வந்தவள்,
“ என் மண்டைக்கு என்ன எல்லாம் நல்லா தான் இருக்கு. உங்க மண்டைல தான் ஒன்னுமே இல்லை. அதான் இன்னைக்கு பார்த்தேனே உங்க ஃபிரண்ட்ஸ் கிட்ட அந்த சிரிப்பு, ‘ ஈஈஈஈ ‘ சிரிக்க வேண்டியது. 
நான் ஒரு கேள்வி கேட்ட, முறைக்க வேண்டியது.  உங்க கிட்ட போய் பாயாசம் வடைனு கேக்க வந்தேன் பாருங்க, என்ன சொல்லணும். 
போடா. “
என வந்த வழியே திரும்பி நடக்க பார்க்க, அவள் செல்லாமல் அவள் செல்லும் வழியின் முன் சென்று நின்று கொண்டான். 
இவள் நிமிர்ந்து அவனை முறைத்து பார்த்து, இடது புறம் நகர்ந்து வெளியே செல்ல பார்க்க, வாசுவும் புன்னகையுடன் அதே புறம் நகர்ந்து அவளை மறித்து நிற்க, இவள் அவனை இன்னும் முறைத்து வலது புறம் நகர்ந்து செல்ல பார்க்க, அவனும் நகர்ந்து மறித்து நின்று கொண்டான்.
“ டேய் ஒழுங்கா தள்ளி நில்லுடா. நான் போகணும். “
“ அது என்ன ஒன்னா மாம்ஸ்னு கூப்பிடுற இல்லனா வாடா போடான்ற. காலேஜ் படிக்குற அப்போ மாமா மாமானு பம்பிக்கிட்டு பேசுவ. இப்போ இந்த வாய் அடிக்கிற. உனக்கு ரொம்ப ஏத்தம் கூடி போச்சு. என்னடி நினச்சி கிட்டு இருக்க. “
“ உன்ன தான் டா எப்படி மொத்தலாம்னு நினச்சிக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு என்ன அச்சு தெரியுமா . “
“ மொத்துவடி மொத்துவ…அப்படியே தூக்கி உருட்டி விட்டேனா உருண்டு கிட்டே வீட்டுக்கு போய் சேர்ந்துடுவ. அப்படி என்ன ஆச்சுனு இப்போ குதிக்கிற. “
“ என்னது உருட்டிவிடுவியா. நீ செய்வ டா செய்வ. உன் பின்னாடியே எப்போ கல்யாணம்னு சுத்துறேன் பாரு. அதான் செய்வ. “ என அவனை வறுத்துக்கொண்டே கோபமாக ஒரு ஊஞ்சலில் சென்று உட்கார்ந்து விட்டாள். அவர்கள் முதன் முதலில் சந்தித்த அதே ஊஞ்சல். இவனும் அவள் முன் அமைதியாக அமர்ந்தவன். 
“ என்ன ஆச்சு ஸ்ரீ. “ என பொறுமையாக கேட்க, 
“ எங்க வீட்ல மாப்பிள்ள பார்த்துருக்காங்க. அவங்க வீட்ல ரெண்டு பேரு இன்னைக்கு தேனு வளைக்காப்புல என்கிட்ட வந்து பேசிருக்காங்க. அது கூட தெரியாம அவங்க கிட்ட பேசிட்டேன். “
“ அப்படியா. “
“ என்ன நொப்பிடியா. 
வீட்ல பொண்ணுனு இருந்தா வரன் வரதான் செவ்வாங்க. 
பொண்ண சும்மாவே இருக்க விடமாட்டாங்க டா. வீட்ல பொண்ணுனு இருந்தா, அவளுக்கும் ஒரு மண்டனு இருக்கும். அந்த மண்டையில ஒரு கொண்டைனு இருக்கும். 
ஆஆவூனா அதில பூ வைக்கிறேன்னு வரேன் வீட்ல கிளம்பிடுவாங்க டா மாம்ஸ். “ என நொந்து போய் சொல்ல, 
வாசுவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. 
“ ஹா…ஹா…ஹா…ஸ்ரீ அதுனால தான் உன் கொண்டையிலையும் பூ வைக்க வந்துட்டாங்களா. அத சிம்பாலிக்கா சொல்ல தான் கொண்ட போட்டுட்டு வந்தியா…ஹா…ஹா “
“ டேய் நான் சொல்றது உனக்கு காமெடியா இருக்கா. Am serious man. “  
“ ஹா…ஹா…ஹா…ஓஹ் சீரியஸ்ஸே இப்படி இருக்குமா. “ என சொல்ல ஸ்ரீ டபார்ரென எழுந்து விட்டாள். 
“ ஹேய் ஸ்ரீ அப்போ நான் தப்பிச்சுட்டேனா. இன்னொருத்தன் மாட்ட போறானா. ஹா…ஹா…“
பக்கத்தில் தண்ணீர் ஜக்கை எடுத்து அவனை அடிக்க பார்த்தாள், ஆனால் எங்கே வளையல்கள் உடைந்து விடுமோ என உஷாராய் அதை கழட்டி டேபிள் மீது வைத்துவிட்டு, அருகில் இருந்த ஜக்கை கையில் எடுத்து வர, இவன் அங்கே இருந்த காலி சட்டியை தூக்கி தலைகீழாக தலையில் கவசம் போல் வைத்துக்கொண்டான்.  
“ நினச்சேன்டி நீ இப்படி தான் ஏதாவது பண்ணுவனு. “
“ ஓஹ் அப்போ தலையில மாட்டுனா உன்ன சும்மா விட்டுடுவேனா. என்ன ஒரு அறிவு. “ என அந்த ஜக்கை திறந்து நீரை அவன் முகத்திலும் சட்டையில் ஊற்ற, 
“ ஏய்ய் குடிக்கிற தண்ணிய வேஸ்ட் பண்ணாத, அதில விளையாடாத. எத்தன பேரு குடிக்க தண்ணி இல்லாம இருக்காங்க தெரியுமா. It is a non renewable resource. “
“ இதெல்லாம் நல்லா பேசுவ டா நீ. அதிலையும் நீ தப்பா சொல்ற. It is a renewable resource. 
நீ சொல்ற தியரி படி பார்த்த நம்ப தாத்தா காலத்துக்கு அப்புறம் தண்ணி இல்லாம இருக்கணும். ஆனா நமக்கு இன்னும் மழை வந்துட்டு தான் இருக்கு. 
மழை வந்தா தான் நமக்கு குடிக்க தண்ணி நல்லா கிடைக்கும், ஆனா சுத்தி சுத்தி மரத்த வெட்டுனா எப்டி டா மழை வரும். இது எல்லாம் யோசிக்காம மத்தவங்க சொல்றாங்கனு நீயும் இப்படி சொல்லிட்டு இருக்க. “
சட்டியை கீழே வைத்தவன், முகத்தில் வழிந்த நீரை துடைத்து சிரித்துக்கொண்டே எழுந்தவன். கை தட்டிக்கொண்டே 
“ சூப்பர் ஸ்ரீ, எதுல படிச்சே. ஒரு பர்டிகுலர் தியரி படி இது உண்மை தான். எப்படி தெரிஞ்சது. “
“ ஒரு அக்ரி மேகஸின்ல படிச்சேன். உன்கூட சேர்ந்து நானும் இப்படி ஆயிட்டேன் டா  “ என அமைதியாக சொன்னவள், பேச்சு திசை மாறுவதை உணர்ந்து, உக்கிரமாகி, “ நீ பேச்ச மாத்தாத டா, ஒழுங்கா எனக்கு ஒரு பதில் சொல்லு. “
“ இன்னும் இருபத்தி ஐஞ்சு நாள் தான். அப்புறம் நான் என்னோட கமிட்மெண்ட்ஸ்ல இருந்து கொஞ்சம் ப்ரீ ஆயிடுவேன். நான் எதிர் பார்த்துட்டு இருக்க விஷயமும் எனக்கு ஓகே ஆயிடும் போல இருக்கு. 
அப்புறம் நம்ப கல்யாண மண்டபம் வாங்க அட்வான்ஸ் கொடுத்துருக்கோம்ல.“
“ நம்ப இல்ல நீ. “ என வேறு புறம் பார்த்து உர்ரென சொன்னாள்.
“ அதெல்லாம் இல்லை ‘ நம்ப ‘ மண்டபம் தான். அதில தான் நம்ப கல்யாணம்.” என வாசு புன்னகையுடன் சொல்ல, 
இதை நம்ப முடியாமல் ஸ்ரீயின் முகம் மலர்ந்து அவனை புன்னகையுடன் பார்த்தது. ஜக்கை அருகில் வைத்தவள், மெதுவாக அவன் அருகில் வந்து, அவன் விழிகளை மெதுவாக மாறி மாறி ஆவலுடன் பார்த்து, 
“ நிஜமாவா மாமஸ். “ என மென்மையாக கேட்க,
அவன் கண்களை மூடி திறந்து ஆம் என புன்னகையுடன் சொல்ல, ஸ்ரீயின் காட்டன் கேண்டி கன்னங்கள் இன்னும் உப்பி, உதடுகள் முழு புன்னகையை தத்தெடுத்தது. 
       ஸ்ரீயின் விழிகள் அவன் கண்களை பார்க்காமல் வேறு புறம் நோக்க்குவதும்ம,  உதடுகள் புன்னகைத்தும், பிறகு அவன் விழிகளை பார்ப்பதும், வேறு புறம் பார்ப்பதும் புன்னகைப்பதும், கீழே குனிவதும் பிறகு வேறு புறம் பார்ப்பதும், அவன் விழிகளை பார்ப்பதும் என டிசைன் டிசைனாய் கபடி அடிக்கொண்டிருந்த தருணங்கள் அழகாய் மிக அழகாய் அங்கே பூத்தது.
அனல் மேல பனித்துளி 
அலைபாயும் ஒரு கிளி 
மரம் தேடும் மழைத்துளி 
இவை தானே இவள் இனி 
என கரோகி மென்மையாக இசைத்துக்கொண்டிருந்தது. அதை நினைத்தவன் புன்னகையுடன் அப்படியே உறங்கி போனான்.    
        
                     
       
  

Advertisement