Advertisement

            சிவசு தாத்தா, கோதண்டம், சுந்தரம் அனைவரும் ஹாலில் சோஃபாவில் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அவர்களின் பின்னே கார்த்தியும் வாசுவும் அருகருகே நின்றிருந்தனார். வாசு ஜெயாவுடன் பேசிக்கொண்டிருபவர் யார் என தீவிர யோசனையில் இருக்க, அவனை பின்னால் இருந்து இரண்டு கைகள் தட்டி கூப்பிட்டது. 
“ மச்சான் எங்கள வெளில ரொம்ப சைட் அடிக்கிறாங்க டா, அப்படியே உங்க கூடவே நின்னுக்குறோம் டா. “ என வாசுவின் முதுகை பிரண்டினர் விமலும் அஜய்யும். 
“ சைட் அடிக்கிறாங்களா…
 உங்களயா டா. 
வா மச்சான் என்னை வெளியே கூட்டிட்டு போ, எங்க வீட்டுக்கு வந்து எங்க ஃபிரண்ட்ஸ்ஸ சைட் அடிக்கிறாங்களா.
இரண்டு ஆம்பள பசங்களுக்கு இப்படி பட்ட பகல பாதுகாப்பு இல்லைனா எப்படி அவனவன் தைரியமா வெளியே நடமாடுறது. ஒரு வரைமுறை  வேணாம். 
அந்த பொண்ணுங்க யாரு காட்டு, நல்லா நாளு கேள்வி கேக்கலாம். “ என வாசு வேட்டியை மடித்து கட்டி கிளம்ப எத்தனிக்க, 
“ மச்சான் நம்பளயும் ரெண்டு பேரு பாக்குறாங்களேனு ஆசையா வந்து சொன்ன, இப்படியா டா அத கலைக்க கிளம்புவ.  
நீ ஆம்பள பசங்க உரிமைக்காக போராட வேணாம் மச்சான். அப்புறோம் எங்கள குனியா வச்சு முதுகுல வண்டிய விட்ருவாய்ங்க டா. “ 
“ என்ன டா… இதுக்கெல்லாம் நம்ப அசர ஆளா. 
நம்ப எல்லாம் டைனோசரே வந்தாலும், அதோட வாயில படக்குனு பல்ல புடுங்கி அசால்ட்டா சைன்க்கு டாலர் செஞ்சு மாட்டுறவங்க. 
இதுக்கு போய் பயப்படலாமா டா. வா மச்சான் யாருனு சொல்லு, நான் உனக்காக நியாயத்த கேக்குறேன். “ என வாசு பொங்க,
“ மச்சான் நீ படுக்குனு பல்ல புடுங்குவ டா, அதுவும் வாய தொறந்து ‘ ஆஆ’ னு கத்தும், ஆனா அதுக்கு ஏன் டா எங்கள பிரியாணி போட கிளம்புற. “  என விமல் அஞ்ச            
“ சரி சரி  பயப்பட கூடாது. 
நிக்க இடம் வேணும்னா சொல்லுங்க டா,  
வாங்க டா, வந்து கார்த்தி பக்குத்துல நில்லுங்க டா. “ என வாசு தள்ளி நின்று அவர்கள் இருவருக்கும் வழிவிட, 
“ ப்பா ஒரு இடம் கிடைக்க எப்படி எல்லாம் வேல பார்க்க வேண்டியதா இருக்கு. தள்ளி நில்லு மச்சான். “ என விமல் கார்த்தியை மெல்லமாக சொல்ல, கார்த்தியின் காதில் விழுந்தால் தானே. அவனின் ஐம்புலன்களும் தேனுவை நோக்கி இழுக்கபட அவனது கண்கள் கூட விமலை பார்க்கவில்லை. 
“ மச்சான் இவனுக்கு என்ன அச்சு. “ என விமல் கண்களை விரிக்க, 
“ அவன் சிக்னல் கிடைக்க இன்னும் பத்து நாள் ஆகும் போல தெரியுது மச்சான்.
நீ எதுக்கும் அவன் பக்கத்துல போகாத டா. தேனு சிஸ்டர்னு நினச்சு உன்ன  கட்டி பிடிச்சு கிஸ் குடுத்துற போறான் டா. Be careful “ என அஜய் எச்சரிக்க, இவர்களின் பேச்சில் கலைந்த கார்த்தி, 
“ நீங்க எப்போ டா வந்திங்க. “ என விமாலையும் அஜய்யயும் அப்போது தான் பார்த்து விசாரித்தான். 
“ மச்சான் நான் சொல்லல, இப்போ தான் இவன் இங்க லாண்ட் ஆயிருக்கான். 
பரவால டா ஒரே நிமிஷத்துல சிக்னல் கிடச்சிடுச்சு. “ என அஜய் உறுதிப்படுதினான்.
“ என்னாச்சு மச்சான் அவன் என்ன சொல்றான். “
“ அது ஒன்னும் இல்ல டா நான் உன் பக்குத்துல நின்னா தேனு சிஸ்டர்னு நினச்சு என்னை கிஸ் பண்ணிடுவியான். “ என அஜய்யை விமலை போட்டுக்கொடுத்தான் . 
“ ச்ச ச்ச நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் டா, 
 ஆனா உன் பக்குத்துல ஒரு நல்லவன் நிக்குறானே, அவனுக்கு தோணும் போதெல்லாம் கிஸ் பண்ணுவான் டா. அவன தூங்குற அப்போ எழுப்புனதுக்கு என்னை  கிஸ் பண்ணிட்டான் டா.
எதுக்கும் அவன் கிட்ட தான் நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். ” என வாசுவை கை காட்டி கார்த்தி சொல்ல, விமலும் அஜய்யும் ‘ அப்படியா டா ‘ என்பது போல் வாசுவை பார்க்க,  
“ வாய்பிருக்கு மச்சான். “ என சொல்லி வாசு அஜய்யை நெருங்க, அஜய் அவசரமாக விமலை வாசுவின் பக்கம் தள்ளிவிட்டு கார்த்தியின் அருகில் நின்றுகொண்டாண். 
விமலோ “ என்கிட்ட உன்னோட வேலைய வச்சிகாத மச்சான். என்னோட ஃபர்ஸ்ட் கிஸ் என் கல்யாணம் அப்புறம் தான்னு பிக்ஸ் பண்ணிருக்கேன். “ என சீரியஸ்ஸாக வாசுவை மிரட்ட, 
“ அப்போ நீ கன்னி பையனா டா. மச்சான் இது இவ்ளோ நாள தெரியாம போச்சே. அப்போ உன்னோட ஃபர்ஸ்ட் கிஸ் என்கூட தான். “  என வாசு பாவனையாக தன் மீசையை நீவி விமலை அரண்டு போக செய்தவன், சிறிது நிமிடங்களில் ஆச்சி அழைக்க, கார்த்தியுடன் அவர் அருகில் சென்றான்.  
        தேனு கல்யாண பட்டு உடுத்தி, ஹாலின் நடுவில் இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவளை சுற்றி உறவினர் அமர்ந்திருக்க, முதலில் ஆச்சி தேனுவிற்கு பன்னீர் தெளித்து , கன்னத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் கும்குமமிட்டு, பூ தூவி ஆசீர்வதித்து, வேப்பிலை குச்சியை காப்பு போல் கட்டி, அதை முதலில் தேனுவிற்கு அணிவித்தார். அதன் பிறகு வெள்ளி வளையல், அதன் பிறகு சிவசு தாத்தவை அழைத்தவர், அவருடன் சேர்ந்து தங்க வளையல் அணிவித்து ஆசீர்வதிக்க, அடுத்தடுத்து சீதா, சிவகாமி, மகேஸ்வரி அத்தை என அப்படியே வரிசை சென்றது. வாணி விழாவில் தள்ளி நிற்க, ஆச்சி அவரை வற்புறுத்தி அழைத்து வந்து போடவைத்தார். பிறகு ஸ்ரீக்கு பார்த்த வரன் வீட்டில் வரனின் அம்மாவும், அத்தையும் வந்து தேனுவிற்கு வளையல் அணிவித்து வாழ்த்து கூறி ஸ்ரீயிடமும் ஓரிரு வார்த்தை இதமாக பேசி சென்றனர். அவர்கள் பேசும் போது, அவர்கள் யார் என ஸ்ரீக்கு தெரியவில்லை, ஏதோ உறவினர் போல என நினைத்து இவளும் அவர்களிடம் நன்றாக பேசினாள்.
       விழா நடக்க ஸ்ரீ சந்தனம், பன்னீர், குங்குமம், பூ இருந்த தட்டை ஏந்தி நின்றிருக்க அவளால் போட்டோஸ் எடுக்க முடியவில்லை. அவளது  நிலைமையை பார்த்து அவளது வெப்பன் சப்ளையர் அவளது பணியை செவ்வனே நிறைவேற்றிக்கொடுத்தான். 
       இறுதியில் தேனுவின் கைகள் கண்ணாடி வளையல்கள் நிரம்பி வழிய வாசுவும் கார்த்தியும் ஒருவர் பின் ஒருவராக வளையல்கள் அணிவித்தனர். ஸ்ரீயும் இறுதியில் போட, அவள் தேனுவை ‘ கையை ஆட்டு, அப்படி பார், சிரி’ என டயர்ட்டாகி செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள். எல்லாம் நன்றாக நிறைவடைய பந்தி ஆரம்பம்மாயிற்று. தேனு சாப்பிட சென்றதும் 
“ வேற யாராவது வலையில் போடுறவாங்க மனையில வந்து உட்காருங்க. “ என யாரோ குரல் கொடுக்க , சரி மனையில் வளையல் கொடுப்பார்கள் போல என ஸ்ரீ ஆசையாக அந்த இருக்கை மனையில் உட்கார்ந்தாள். சுற்றி உள்ளோர் சிரிக்க, ஸ்ரீக்கு ஒன்றும் புரியவில்லை,
“ என்னாச்சு இங்க உட்கார்ந்த வளையல் கொடுக்கறதா நீங்க யாரோ தான சொன்னிங்க. அதான் உட்கார்ந்தேன். ஏன் சிரிக்கிறிங்க. “ என அப்பாவியாய் ஒன்றும் புரியாமல் விழித்து சொல்ல,    
“ புதுசா கல்யாணம் ஆனவங்க யாராவது தான் கண்ணு இதுல உட்காருவாங்க. அவங்களுக்கு தேனுக்கு மாதிரி வளையல் போடுவாங்க, அப்படி போட்ட அவங்களுக்கு சீக்கிரம் குழைந்தை பிறக்கும் நம்பிக்கை, அதுக்கு தான் அப்படி யாராவது இருந்தா உட்கார சொன்னாங்க. 
அது சொன்னதுக்கு தான் இப்போ நீ வந்து உட்கார்ந்துட்ட…” என அவரும் சிரிக்க, 
‘ ஏதோ தெரியாம வந்து உட்காந்த்துட்டேன், அதுக்குனு இப்படி ஒரு பச்ச மண்ணுனு பாக்கமா, சுத்தி சுத்தி உட்காந்து சிரிக்கிறிங்களே மக்களே, ‘ என ஸ்ரீ அசடு வழிய சிரித்து கொண்டே எழுந்துக்கொண்டாள். ஆனால் பந்திக்கு போகும் முன் ஸ்ரீயின் இரண்டு கைகளிலும் வளையல்களை  நிரம்பியிருந்தாள். 
     வாசுவின் ப்ளான்னில் கிருபாவும் மணியும் நேர்தியாக பரிமாற, உணவு அத்தைனையும் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், அரிசி, பருப்பு என தனி ருசியுடன் இருந்தது. 
     இது மட்டும் இல்லாமல் விருந்து முடிந்து வீட்டிற்கு செல்வோருக்கு ஸ்ரீ அவளே செஞ்ச சாக்லேட்ஸ்ஸை பட்டு போல் வேலைபாடு செய்யபட்ட சுருக்கு பையில் போட்டு அனைவருக்கும் தர, குழந்தைகளுக்கு மட்டும் ஆளுக்கு இரண்டு தர முகம் மலர்ந்து வாங்கிக்கொண்டனர். 
       அனைவரும் நிறைவாக உண்ண ஒருத்தர் விடாமல் விருந்து நன்றாக இருந்தது என ஆச்சியிடம் சொல்லிச் சென்றனர். அதில் ஒரு மூன்று பேர் அவர்கள் வீட்டின் வெவ்வேறு விழாக்களுக்கு வாசுவின் கேட்டரிங் புக் செய்ய, ஆச்சி சீதாவிடமும் சிவகாமியிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்சியடைய, கோதண்டம் கடுப்புடன் எழுந்து வெளியில் சென்று அமர்ந்தார். விமல், அஜய், சந்தியா அனைவரும் வாசுவிடமும் கார்த்தியிடமும் சொல்லிவிட்டு கிளம்பினர். சந்தியாவிற்கு ஸ்ரீ சொல்லிய படியே அவள் செய்த சாக்லேட்ஸ்ஸை இரண்டு டப்பாக்கள் நிறைய தர, அவர் சிரித்து விட்டார். 
“ ஹா…ஹா…என்னங்க உண்மையிலே பார்சல் கொடுத்திடிங்க. “
“ நாங்கலாம் சொன்ன சொல் மாற மாட்டோம்ல. இத சாப்பிட்டு நீங்க வைட் போட்டா நான் ஒல்லியா தெரிவேன்ல, அதுக்கு தாங்க இது. “ 
“ என்ன ஒரு மாஸ்டர் ப்ளான். சரிங்க வரேன்ங்க “ என ஸ்ரீயை மெலிதாக ஒரு புறமாக அனைத்து விடுவித்து கிளம்பினார் சந்தியா. 
     ‌  வாசு, ஜெயாவை பார்வையில் இருந்து விலக்காமல் வைத்திருக்க, அந்த பெண்மணியோ ஜெயவை விடுவேனா என அவளை பிடித்து வைத்து பேசிக்கொண்டிருந்தார். ஜெயா அவர் பேசுவதற்கு தயங்கி தயங்கி பேசுவதும் வாணியை கவலையுடன் பார்ப்பதும், சிவசு தாத்தவை அவ்வப்போது தவிப்பாய் பார்த்த வண்ணம் இருந்தாள். மற்றவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக அந்த இனிய மகிழ்ச்சியான பொழுதை அனுபவித்தனர். வாசு கண்ணிற்கு இது எதுவும் தப்பவில்லை. எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான், ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அவன் இந்த முறை பதட்டப்படவே இல்லை, இதை மிக மிக பொறுமையாக அணுகவேண்டும் என முடிவு செய்துவிட்டான். 
   எல்லாம் முடிந்து, தேனுவை சிவசு தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்ல, கார்த்தியை வர கூடாது, அது தான் முறை என்று விட்டனர். தேனுவை அழைத்துக்கொண்டு சிவசு தாத்தா வீட்டில் நுழைய, ஸ்ரீயும் ஜெயாவும் சேர்ந்து ஆரத்தி எடுத்தனர்.  
       தேனு சிவசு தாத்தா வீட்டிற்கு வந்ததம் அவர்கள் பூஜை அறையில் சாமி கும்பிட்டுவிட்டு இளைப்பாற கீழே ஒரு அறைக்கு செல்ல, வீட்டில்  கார்த்தியை தவிர குடும்பத்தின் ஆட்கள் மட்டுமே. எல்லாரும் அப்படியே அவரவர் இடத்தில் உட்கார, திண்ணையில் படுக்க என இருந்தனர். ஒரு அரைமணி நேர இடைவெளியில் ஜெயாவுடன் சுற்றிக்கொண்டிருந்த பெண்மணி உள்ளே வந்தார். 
     எல்லாரும் வளைகாப்பில் அவரை பார்த்திருந்தாலும் வாணி, கோதண்டம், வாசு, ஜெயாவை தவிர அவரை யார் அழைத்தது, எவர் பக்க உறவு என மற்றவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. 
உள்ளே வந்த பெண்மணி, 
“ நான் விஜி, தேவ்ராஜ் அம்மா. தேனு சீமந்தம் நல்லா இருந்துச்சுங்க  “ என்றதும் வீட்டினார் அனைவரும் அங்கே கூட, ஸ்ரீ குடும்பத்தினருக்கு அவர் யார் என தெரியவில்லை, அதனால் அவரை வரவேற்று பேச, மற்றவர்கள் முகத்தில் அவ்வளவு இனிமை இல்லை. விஜி சிறிது நேரம் ஸ்ரீ குடும்பத்திடம் வளவளத்தவர், பிறகு, சிவசு தாத்தவை நேரடியாக பார்த்து, 
“ எங்க பையனுக்கு உங்க வீட்டு பொண்ண கேட்டு வந்துருக்கோம். “ என சொல்ல, முதலில் சம்பந்தமே இல்லாமல் ஜெர்க் ஆனது ஸ்ரீபத்மா தான். 
அவள் இவர்கள் தான் தேனு சொன்ன வரனோ என நினைத்து விட்டாள். அவள் விழித்து நிற்பத்தை பார்த்து, இந்த ரனகளத்திலும் குதுகலமாய் வாசுவிற்கு வாய்க்குள் அடக்கிய சிரிப்பு. 
ஸ்ரீ அப்படியே விழித்து வாசுவை பார்க்க, அவனோ தன் நெஞ்சில் ஒற்றை கையை வைத்து மேல பார்த்து ‘ தப்பிச்சிட்டேன் ‘ என்பாதாய் அமைதியாய் ரியாக்சன் தர, ஸ்ரீபத்மா கண்கள் சுருக்கி வாசுவை முறைத்தாள். 
“ நாங்க ஜெயா நல்லா பார்த்துக்குவோம்.” என ஆரம்பித்து அவர் குடும்பத்தை பற்றி சொல்லி, இவர்கள் காதலை பற்றி சொல்ல, ஸ்ரீ குடும்பத்தினருக்கு ஓரளவு நிலைமை புரிந்தது. 
இப்போது தான் ஸ்ரீ அசுவாசமானவள் வாசுவை பார்க்க, அவன் கவனம் அவளிடம் இல்லை. 
வாணி, “ இப்போ தாங்க இங்க விசேஷம் முடிஞ்சிருக்கு, நான் எல்லாருடையும் கலந்து பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்.  இன்னொரு நாள் நம்ப இத பத்தி பேசுவோம். “ என அவர் பேச்சை முடிக்க பார்க்க, அவர் விடவில்லை, 
“ அதாங்க நானும் சொல்றேன். இப்போ தான் உங்க வீட்லையும் நல்ல விசேஷம் நடந்திருக்கு, அதோட சேர்த்தி இதையும் பேசிட்டா நல்லா முடிவா சொன்னிங்கனா இன்னொரு விசேஷமும் இப்பய முடிவாயிடும். “ என விடாப்பிடியாய் நின்றார். 
   

Advertisement