Advertisement

இந்த பேச்செல்லாம் தேனுவின் அருகில் கீழே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த சந்தியா, 
“ தேனு அவங்க தான் சும்மா சொல்றாங்கனா நீங்களும் ‘ ஆஆ‘ னு பாக்குறிங்க நாளைக்கு அவங்களுக்கும் கல்யாணமாய் பாப்பா வந்தா, நீங்களும் இப்படி வளையல் போடுவீங்கனு சொல்லுங்க. 
அப்போ அவங்களோட பேபி நீங்க சொல்றத தான கேட்கும். “ என எடுத்து கொடுக்க,
 “ அப்போ இவ சொன்னது பொய்ங்களா. “ என அப்பாவியாய் தேனு சந்தியாவை கேட்க, 
“ அத நீங்க இப்போ தான் கண்டுபிடிசிங்களா. “ என சத்யா சிரிக்க, 
“ இது தாங்க என் பேத்து, நான் சின்ன வயசுல இருந்து என்ன சொன்னாலும் நம்புவா. My Bestie. “ என ஸ்ரீ புன்னகையுடன் சொல்ல, தேனு ஸ்ரீயை அவளது தோளிலே இரண்டு அடிவைத்தாள். அதை பார்த்து ஆச்சி, 
“ என்ன சின்ன புள்ளைங்க மாதிரி விளையாடிகிட்டு. அமைதியா உங்கருங்க புள்ளைங்களா. “ என அதட்டினார்.
அவர் சொன்னதும் ஸ்ரீ அப்படியே சந்தியாவின் பக்கம் அமர்ந்தவள், 
“ சிஸ்டர் ஏன் நீங்க புதுசா எனக்கு வளையல் போடுற ஐடியாயெல்லாம் கொடுத்து குதூகலமா போய்கிட்டு இருக்க எங்க ஃபேமிலில கும்மி அடிக்க பாக்குரிங்க. Why ? “ என ஸ்ரீ அப்பாவியாய் கேட்க,
“ நமக்கும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேணும்லைங்க. இப்போ இருக்க ட்ரெண்ட்க்கு அட்லீஸ்ட் ஒரு ஃபைட் ஸீன் பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு, அதுக்கு தான் இப்படி. “ என சந்தியா சொல்ல, 
அவரின் கையை பிடித்த குலுக்கிய ஸ்ரீ, 
“ ரொம்ப நல்ல எண்ணம்ங்க. நீங்க நல்லா வருவிங்க.
 எனக்கும் இங்க ஊருல ஒருதங்க கூட ஃபைட் ஸீன் வைக்கணும்னு ஆசையா இருக்கு.  
நீங்க வந்து தொடங்கி வச்சிங்கனா நல்லா இருக்கும். “
“ யாருனு சொல்லுங்க. 
எப்போனு சொல்லுங்க எங்க கூட்டதோட வந்து இறங்குறோம். மாஸ்ஸா ஃபைட் ஸீன் வச்கிக்கலாம்.
எங்க காட்சில்லா கேங் அப்படி ஒரு பெருமை வாய்ந்த கேங்.
எங்கனு டைம் அண்ட் வேன்யு சொல்லிட்டிங்கனா, நாங்க ரெடி ஆகிடுவோம். இப்போவே பாருங்க கையெல்லாம் பர பரனு இருக்கு“  என சத்யாவும் ஸ்ரீயின் கையை குலுக்க, 
“ பொறும பொறும. இப்படி எல்லாம் பொங்க கூடாதுங்க. 
நான் முதல சோலோவா ட்ரை பண்றேன். 
முடியாலைனா உங்கள அப்ரோச் பண்றேன். நீங்க வந்து சிறப்பா செஞ்சு கொடுங்க.
அதான் உங்க கேங்க எங்க அண்ணா கல்யாணத்துலயே பார்த்தேனே. எங்க மத்தவங்க எல்லாம் காணோம். “
“ என்னோட சேர்த்து மூனு டிக்கெட் தான் வந்தோம். பாய்ஸ் ரெண்டு பேருக்கும் உள்ள இடம் கிடைக்கல, அதன் வெளியே உட்காந்துருகாங்க. “
“ உங்க பேரு சந்தியா தான ராகவ் அண்ணா வொய்ஃப், கார்த்தி அண்ணா மேரேஜ் அப்போ பார்த்தது. இப்போ ரொம்ப ஸ்லிம்மா ஆயிடிங்க 
உங்கள பார்த்தா என் காதுல ரெண்டு சைட்டும் புகையாஆஆ கிளம்புது. 
என்ன டயட் சாப்பிடுறிங்க. “
“ ஹா ஹா…ஸ்டீம் வருதா…
நான் டயட்லயே இல்லைங்க…அது தான இப்படி ஆயிட்டேன். 
இத்தன நாள எங்கங்க இருந்திங்க…
கார்த்தி சொல்லுவான் என் தங்கச்சி அப்படி இப்படினு அப்போவெல்லாம் நீங்க இவ்ளோ ஃப்ரெண்ட்லியா இருப்பிங்கனு தெரியாது. 
தெரிஞ்சிருந்தா அப்போவே எங்க கூட்டனியில உங்கள இனைச்சிருப்போம். “
ஸ்ரீயின் மைண்டோ  ‘ வருங்காலத்துல உங்க கூட்டணியில தான் ஐக்கியமாக போறேங்க. இது தெரியாம ஃபீல் பண்றிகளே ‘ என வாய்ஸ் கொடுக்க, அதை அடக்கியவள்,
“ விடுங்க விடுங்க எல்லாம் ஃப்யூச்சர்ல பார்த்துக்கலாம். வளைகாப்பு முடிஞ்சு என் கூட உட்கார்ந்து சாப்பிடுங்க. நீங்க டயட்ல இல்லைனு சொல்றத நம்ப மாட்டேன். 
நான் கண்ணால பார்த்து கன்பர்ம் பண்றேன். “ என கண்களை உருட்டி ஸ்ரீ சொல்ல, 
“ வந்ததே ஃபுல் கட்டு கட்டதாங்க. 
வீட்ல இருந்தே லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டு வந்து வீட்டுக்கு போய் வேற சாப்பிடலாம்னு ப்ளான் பன்னேன், அதுக்குள்ள என்ற ஹஸ்பண்ட்டு அவசரபட்டு ஃப்ளைட் ஏத்திவிட்டாரு . “ என நொந்து சொல்ல, 
“ அட நீங்களும் நம்ப இனம்ங்களா. இது தெரியாம போச்சே. விடுங்க உங்களுக்கு பார்சல் நான் ரெடி பண்றேன்.   
அப்புறம் உங்க வளைகாப்பு கதைய சொல்லுங்க. எப்படி போச்சு“
சந்தியா புன்னகையுடன் அமைதியாக இருக்க, தான் ஏதோ தவறாக கேட்டுவிட்டோமா என ஸ்ரீக்கு தோன்ற, 
“ சாரி அக்கா ஏதாவது தப்பா கேட்டுட்டேனா. “
“ அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. அது நானும் என் ஹஸ்பண்ட்டும் லவ் மேரேஜ். 
வீட்ல ஒத்துக்கல, மேரேஜ் முடிஞ்சு கொஞ்சம் மன்த்ஸ்லயே அவரு அப்போ சிங்கப்பூர்ல போய்ட்டாரு. நான் மட்டும் தான் இங்க தனியா இருந்தேன். 
பேபி வந்தப்போ இப்படி தான் நைன்த் மன்த் பண்ணலாம்னு முடிவு பண்ணிருந்தோம். பட் அவரால ஊருக்கு வர முடில, அப்போ வளைக்காப்பு என்னோட  ஹஸ்பண்ட் குளோஸ் ஃப்ரெண்ட் வாசு அண்ணாவும், என்னோட குளோஸ் ஃப்ரெண்ட் ஆகாஷ் ரெண்டு பேரும் தான் எனக்கு வளைகாப்பு பண்ணாங்க. என் ஹஸ்பண்ட் வீடியோ லைவ்ல எல்லாம் பார்த்தாரு. “
“ சாரி அக்கா, உங்களுக்கு கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம். “ என ஸ்ரீ தன்மையாக சொல்ல, 
“ அப்படி இல்ல பா. நான் நடந்தது தான சொல்றேன். 
உங்க கிட்ட சொல்லலாம். ஒன்னும் ப்ராப்ளம் இல்ல .
வளைகாப்பு கோயில்ல முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், எனக்கு ஃபைன் வந்துடுச்சு. வாசு அண்ணாவும் அகாஷூம் தான் என்ன தூக்கிகிட்டு டாக்ஸில போனாங்க. 
கார்ல போக போக பனிக்குடம் உடஞ்சிடுச்சு, வாசு அண்ணா அவர் ஷர்ட் கழட்டி கார்ல கீழே எல்லாம் தொடச்சாரு, எனக்கு ரொம்ப எம்பரஸ்சிங்கானா மொமென்ட் அது, அதுக்கும் சேர்த்தி நான் ஆழ, 
வாசு அண்ணா, என்ன உங்க ப்ரதர்ரா நினைக்க வேண்டாம் உங்க அம்மா மாதிரி நினச்சிகோங்கனு சொன்னாரு. அந்த வார்த்தை கேட்டதுல இருந்து இப்போ வரைக்கும் வாசு அண்ணா எனக்கு இன்னொரு அம்மானு தான் நினைக்கிறேன். 
I am blessed to have such a brother in my life. “ என சந்தியா உணர்ந்து சொன்னார்.
ஸ்ரீபத்மாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஷங்கர் அவளிடம் வாசு நல்லவன், வல்லவன், நாலு என்ன பத்தும் தெரிதவன் அப்படி இப்படி என அவன் விசாரித்த வரையில் சொல்லியிருந்தான். அதனால் தான் அபி கூட சிறிதேனும் ஸ்ரீயின் காதல் விஷயத்தில் சமாதானமானார். ஆனால் ஸ்ரீபத்மாவிற்கு சந்தியா சொல்லும் விவரங்கள் எல்லாம் புதிது. ஒரு நெகிழ்சியான தருணம் அங்கே பூத்தது.
“ சோ இது தான் என் வளைகாப்பு ஸ்டோரி அண்ட் இப்போ எனக்கு ரொம்ப சேட்ட பண்ற ஸ்கூல் போற குட்டி பையன் இருக்கான். 
அவன் பொறந்ததுக்கு அப்புறம் நானும் சிங்கப்பூர் போயிட்டேன். 
தேனு மேரேஜ் டைம்ல தான் நாங்க இங்க வந்தோம் எங்க அம்மா வீட்ல எங்க மேரேஜ்ஜ அப்போ தான் அக்சப்ட் பண்ணாங்க. 
நாங்க இங்க தேனு கல்யாணத்துல இருந்தப்போ அவன் எங்க அம்மா வீட்ல இருந்தான். அதான் கூட்டிட்டு வர முடில. “
“ உங்க குட்டி பையனையும் இப்போ கூட்டிட்டு வந்துருக்கலாம்ல. நல்லா இருந்திருக்கும். “ 
“ அவனுக்கு கொஞ்சம் நாள் முன்ன உடம்பு முடில, இப்போ தான் சரியாச்சு மறுபிடியும் அலைச்சல்னா எங்க அவன் ஹெல்த்க்கு ஏதாவது வந்துடுமோனு பயமா இருந்துச்சு. அதன் விட்டுட்டு வந்துட்டேன். “
“ அப்போ மாம்ஸ்ஸோடா என் மேரேஜ்க்கு நீங்க உங்க பையன கூட்டிட்டு வரணும். “ என ஸ்ரீ ஒரு ஃப்லோவில் சொல்லிவிட்டாள். சொன்னதும் தான் உள்ளுக்குள் ஜெர்க்காகி விட்டாள்.
“Wowww…உங்களுக்கு கல்யாணாமா… கங்க்ராட்ஸ்…சொல்லவே இல்ல. எப்போ.“ என உற்சாமாக சந்தியா கேட்க,
‘ அட குப்பி புள்ள இப்படியாடி உளறுவ. கிறுக்கு புள்ள ‘ என தன்னையே திட்டியவள், 
“ அட அக்கா. 
இப்போ மேரேஜ் இல்லக்கா. 
எனக்கு ஃப்யூச்சர்ல மேரேஜ் நடக்கும் இல்ல, 
அப்போ மை ஹஸ்பண்ட்ட மாம்ஸ்னு கூப்பிடுவேன், அத சொன்னேன்.
அந்த மேரேஜ்க்கு நீங்க உங்க பையனா கூட்டிட்டு வாங்கனு ஒரு தொலைநோக்கு பார்வையோட இன்வைட் பண்ணேன் அக்கா.
இதுக்கு போயி டபாரு கங்க்ராட்ஸ் சொல்லிட்டிங்க. பரவாலை இந்த கங்க்ராட்ஸ்ஸ நான் ஃப்யூச்சர்ல யூஸ் பண்ணிகுறேன். எல்லாம் ஒரு ஃப்யூச்சர் இன்வெஸ்ட்மெண்ட் தானே “ என ஸ்ரீ எப்படியோ சமாளித்து சிரிக்க, இருவரும் சேர்ந்து சிரித்தனர். 
இவர்களின் சிரிப்பை பார்த்த வாசுவின் பார்வையும் புன்னகையை தத்தெடுக்க, அப்படி திரும்பியவனின் பார்வை எதர்தமாக அங்கே இருந்த ஒருவரை பார்க்க, அவர் ஜெயாவை அருகில் அமர்த்தி வம்படியாய் பேசிக்கொண்டிருந்தார், இதை பார்த்து வாசுவின் முகம் மாற தீவிரமான யோசனைக்கு சென்றுவிட்டான். 
   
  
        
    
     

Advertisement