Advertisement

     “ என்ன பந்தியல்லாம் ரெடி ஆயிடுச்சா டா. “ கிருபாவை மூன்றாவது முறையாக கேட்டு டென்ஷன் படுத்திக்கொண்டிருந்தான் வாசு. 
“ அண்ணே எல்லாம் ரெடி. இதோட மூனாவது தடவையா கேட்டுடிங்க. எல்லாம் ரெடி, சமையல் செய்ற அண்டா குண்டவ தவிர எல்லாம் இந்தா இந்த பெஞ்ச் மேல வச்சிட்டேன். 
இதுக்கு மேல என்னை ஏதாவது கேட்டிங்க. உங்களையும் சேர்ந்து இந்த பெஞ்ச்ல உட்கார வச்சிருவேன். “
என கிருபா வயலண்டாக வாசுவிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
       கார்த்தி வீட்டின் மாடியில் ஷாமியானா பந்தல் போட்டு விருந்துக்கு எல்லாம் தயாராய் இருந்தது. வளைக்காப்பு விருந்து என புளியோதரை, தயிர், எழுமிச்சை, தேங்காய், மாங்காய், கல்கண்டு, தக்காளி சோறு வகைகள் என பெஞ்ச் நிரம்பியிருந்தது. அப்பளம், உருளைக்கிழங்கு வறுவல், புதினா துவையல், வெண்டை மசாலா, கத்திரிக்காய் புளி குழம்பு, வெஜ் பிரியாணி, கோபி ஃப்ரை, வடை, பாயாசம் என எல்லாம் வாசு அவனது உணவகத்தில் தயாரித்து அசத்தியிருந்தான்.  
கீழே இன்னும் சற்று நேரத்தில் வளைகாப்பு நடக்கவிருக்கிறது. அதன் பிறகு மதிய விருந்திற்கு எல்லாம் தயாராகி இருக்கிறதா என மேல பார்க்க வந்த வாசு சலம்பல் பண்ணிக்கொண்டிருக்க, கிருபாவும் மணியும் டென்ஷனாகி விட்டனர்.
எல்லாம் விசாரித்து கீழே வர எத்தனிக்க, ஸ்ரீபத்மா மாடி வாயிலில் சாய்ந்து கை கட்டி இவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை இங்கே பார்த்ததும் கிருபாவும் மணியும் வாசுவை அம்போ என விட்டுவிட்டு கீழே இறங்கி போக, ஸ்ரீபத்மா கிருபாவிடம் ஏதோ சொல்லி அனுபியவள், உள்ளே அடி எடுத்து வைத்தாள். 
“ நீ என்ன பண்ற இங்க கீழே போ. “ என வாசு அதட்ட, 
“ I have been waiting for five long months.
I just need to know. 
Its Yes or no. “
“ I have not yet decided Sri. 
Will talk this later. Have lot of things to get done. Please Sri. “ என வாசு குரல் இறங்கி சொன்னான்.
      ஸ்ரீபத்மா கிருபவை மேல யாராவது வந்தால் குரல் கொடுக்கும் படி சொல்லி அனுபியிருந்தாள். இருந்தாலும் அவனையும் மீறி யாராவது வந்துவிட்டால் என்ன செய்வது என வாசுவை அவசரமாக கேட்க, வாசுவால் இப்போது எதுவும் சொல்ல முடியா நிலை. அவன் பிறகு பேசுவோம் என சொல்லிவிட்டதும், ஸ்ரீக்கு இன்று இதை முடிவு செய்யவேண்டும் என உறுதியாக தோன்றி விட்டது. அவன் ஏதாவது சொன்னால் தானே இவள் சுந்தரதிடம் பேச முடியும். அதுவும் இவளிற்கு பார்த்திருக்கும் வரனின் குடும்பதினர் வேறு இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள்.
     காட்சில்லா கூடத்திலிருந்து ராகவின் மனைவி சந்தியா, விமல், அஜய் என சிலரும் வந்திருந்தனர். அவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு வாசு வாயை திறப்பான் என தோன்றவில்லை, அதனால் இங்கே பிடித்துக்கொண்டாள்.
“ எப்போ பேசலாம் டைம் சொல்லுங்க. “
“ விசாஷம் முடியட்டும். விருந்து முடிஞ்சதும் பேசலாம். “ 
அவன் இவ்வாறு சொன்னதும் தலையை தொங்கபோட்ட படி ஸ்ரீ திரும்பி செல்ல, இவனால் அவளை இவ்வாறு அமைதியாக செல்வதை பார்க்க முடியாவில்லை. 
“ ஸ்ரீ ஒரு நிமிஷம் நில்லு. இங்க வா. “
வாசுவை பார்த்து நின்றவள், நின்றவாறே, “ வரலாம் முடியாது, அப்டியே சொல்லுங்க. “ என அவனை பாராமல் வேற புறம் பார்த்து சொல்ல, அவள் அருகில் மெல்ல அடி எடுத்து சென்றவன், அவளை மேலும் கீழும் பார்க்க, ஸ்ரீக்கு ‘ இவன் என்ன டா புதுசா ஏதோ ரியாக்சன்லாம் தரான் ‘ என அதிசயத்து வாசுவை பார்த்தாள். 
“ உன் மாம்ஸ்ஸா அப்புட்டு பிடிக்குமா உனக்கு என் டிரஸ் கலர்லயே நீயும் டிரஸ் பண்ணிருக்க. “ என வாசு அவளது முக பாவனையை ரசித்து சொல்ல, 
“ அது எப்படி மாம்ஸ் உங்களுக்கு இம்புட்டு அறிவு உங்களுக்கு. 
மத்த நேரம் நானா வந்து பேசுனா எகிறு எகிறுன்னு எகிறது, இப்போ நீங்களா வந்து பேசும் போது மட்டும் அப்படியே அமைதியா பேசுறது. 
இது ஒன்னும் உங்களுக்காக டிரஸ் பண்ணல. இது நானும் தேனுவும் ஒரே மாதிரி எடுத்த செட் சரீ. 
பேத்து தான் இன்னைக்கு இத நீ கட்டிய ஆகணும்னு அடம்புடிச்சா, அதுக்கு தான் இந்த டிரஸ். நான் என்னமோ உங்களுக்காக தான் இந்த கட்டுனேன்னு நினச்சு டிரீம்க்கு போகதிங்க. 
டிரீம்க்கு போறது பத்தி உங்க கிட்ட சொல்றேன் பாருங்க. உங்களுக்கு டிரீம் பண்ற ப்ரெய்ன் செல்ஸ் இருக்கா இல்லையானு கூட எனக்கு தெரில.“ என இவள் அவன் மீது புகார் வாசிக்க, அவளது பேச்சுகள் அனைத்தும் இவனுக்கு ஹனி கேக்காய் சுவைக்க, புன்னகையுடன் அவளது முடியின் ஃப்ரிஞ்ச்ஸ்‌ஸை பார்த்துக் கொண்டிருந்தான். 
“ ஹலோ மாம்ஸ். என்ன இப்படி எல்லாம் என் முன்னாடி ரியாக்சன் குடுத்து எஸ் ஆயிடலாம்னு நினைக்காதிங்க. நீங்க சொன்ன டைம்க்கு நான் நம்ப தாத்தா வீட்டுக்கு வருவேன் அப்போ சொல்றிங்க. “ 
இவன் அதற்கும் இவளை பார்த்து இன்னும் சிரித்து கொண்டே தலையை ஆட்டிவைத்தான். 
ஸ்ரீபத்மாவிற்கு தான் நம்ப முடியவில்லை, 
‘ இப்படியெல்லாம் செய்றவனே இல்லையே இவன், எப்போ பார்த்தாலும் முறைச்சிக்கிட்டே திரியற பய என்ன இப்படி ரியாக்சன் தரான். ‘ 
என நம்ப முடியாமல் ஸ்ரீ அவனை பார்த்து,
“  மாம்ஸ் இப்படி நீங்க ரியாக்சன் கொடுத்தா உங்கள சும்மா விட்டுடுவேன்னு நினைக்காதிங்க.   
இன்னைக்கு மட்டும் எனக்கு ஒரு முடிவு சொல்லல இங்க இருக்க உங்க அண்டா குண்டாவ எல்லாம் பறக்க விட்டுடுவேன் நானு. 
அப்புறம் சேதாரம் உங்களுக்கு தான். மனசுல வச்சிக்கோங்க “
 என ஸ்ரீ அசால்டாய் சொல்லி கீழே இறங்க, அவள் இயல்பிற்கு வந்துவிட்டாள் என வாசுவிற்கு இப்போது முழு சிரிப்பே வெளியே வந்தது. அவனின் இத்தனை நாள் அலைதல், பரபரப்பு எல்லாவற்றிலும் அவளை தனியாக தவிக்கவிட்டு இவனும் தவித்ததற்கு இப்போது அவள் என்ன பேசினாலும் கோபமே வரவில்லை. அவனின் இப்போதைய ஒரே ஆறுதல் அவளாகி போனாள்.    
   ஸ்ரீ கீழே இறங்கி வருவதையும், வாசு பின்னால் புன்னகையுடன் வருவதையும் பார்த்த கிருபா, 
‘ என்ன எப்போவுமே அண்ணே தான் அண்ணிகிட்ட முறச்சிக்கிட்டா வருவாரு , இன்னைக்கு என்ன அதிசயமா இருக்கு. ‘ 
என அவன் வாசுவின் முகத்தை பார்த்து விழித்து நின்றான். படிக்கட்டுகள் தாண்டி இரண்டு கட்டுகள் உள்ளே வந்தால் தான் உறவுகள் அமர்ந்திருந்தனர். ஆதனால் இங்கே யாருக்கும் எதுவும் தெரியவில்லை, கிருபா மட்டுமே அங்கே நின்றிருந்தான். 
  முன்னே ஸ்ரீ செல்ல, பின்னே புன்னகையுடன் வந்த வாசுவை கிருபா விழித்து வாயை பிளந்து பார்க்க, ஸ்ரீயை பார்த்தவண்ணமே இறங்கிய வாசு, அவளை பார்த்துக்கொண்டே புன்னகையுடன் கிருபாவின் தலையை பிடித்து வேறு புறம் திருபியவன். 
“ அண்ணன இப்படி எல்லாம் பார்க்க கூடாது டா. அப்புறம் கண்ணு பட்டட்டும் டா.  “ என வாசு சொல்ல, 
“ யாரு நான் கண்ணு போடுவேணா. நீங்க பண்ற லவ்க்கு நான் கண்ணு போட்டுடுவேனா. ஏதோ எங்க அண்ணி இருக்கப்போய் நீங்க பண்ற அக்க போர் எல்லாம் சமாளிக்கிறாங்க. “
“ தம்பி இப்படி உன் அண்ணயே சந்தேகபடலாமா டா. உங்க அண்ணி தான் டா என்னை திட்டிட்டு வாரா. நான் திட்டு வாங்கிட்டு வரேன் டா. “
“ திட்டு வாங்குனதுக்கா இம்புட்டு பிரகாசமா இருக்கிங்க. நம்ப முடில பிக் ப்ரோ. “
“ அதெல்லாம் அப்படி தான் டா. கண்டுக்காத. “
“ ஏதோ நல்லா இருந்தா சரி . “ என கிருபா விழா நடக்கும் முன் அறைக்கு சென்றான். முன் அறை பழைய காலத்து அறை, அதனால் வெளியும் பந்தல் போட்டிருக்க அங்கேயும் சிறு கூட்டம் நிறைந்திருந்தது. 
    தேனு கல்யாண புடைவையில் அமர்ந்திருக்க, ஸ்ரீ அவள் பக்கத்தில் பின்னால் நின்று பன்னீர், சந்தனம், குங்குமம் எல்லாம் இருந்த தட்டை வைத்துக்கொண்டு ஒரு கையில் போட்டோஸ் தேனுவுடன் செல்ஃபி இருந்தாள். தேனுவிற்கு எப்போதோ ஸ்ரீ நிறைய வளையல் அணிவித்திருக்க அதை இன்று காலையில் தான் கழட்டி இருந்தாள். 
“ ஏ கேர்ள் எனக்கு எப்பையோ நீ வளையல் போட்டுட்ட, அப்போவே வளச்சு வளச்சு போட்டோ எடுத்த, இப்போ மறுபிடியும் மா கேர்ள். “
“ ஆமா பேத்து இப்போ நீ நைன்த் மன்த்ல இருக்க, நான் உனக்கு ஃபர்ஸ்ட்டே வளையல் எதுக்கு போட்டேன்னு தெரியுமா . “
“ தெரியுமே…
பேபி வளையல் சத்தம் கேட்டு நம்ப தனியா இல்லைனு பாதுகாப்பா பீல் பண்ணும்னு. “ . 
“ நீ சொன்னது சரி தான் பேத்து, 
பட் இதுல இன்னொரு விஷயம் இருக்கு.
அது பேபி வெளியே வந்ததும் நான் வளையல் வாங்கி கொடுத்ததாலா நான் என்ன சொன்னாலும் அதோட காதுக்கு ஸ்பெஷல் வேவ் லெந்த்ல ரீச் ஆகும். 
அப்புறம் அது நான் பேசறது தான் கேட்கும், நீ பேசரத கேட்டாலும் உன்ன கண்டுக்காது. அதுக்கு தான் வாங்கி கொடுத்தேன். “ என தேனுவின் காதில் பெரிய சைஸ் காலிஃப்ளவர் சுத்த, இந்த அப்பாவி பேத்தக்குட்டிக்கு ‘ அப்படியும் இருக்குமோ ‘ என ஸ்ரீயை ‘ ஆஆ ‘ என பார்திருந்தாள். 

Advertisement