Advertisement

இளைய நிலா பொழிகிறதே 
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே 
விழாக் காணுமே வானமே…
           வாசு அவனது தோட்ட வீட்டில் வெளியே கட்டிலில் படுத்திருந்தான். ஸ்ரீபத்மா ஊருக்கு சென்று இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இரவு மிதமாய் இதமாய் சிலு சிலு என்று தென்றல் வீச, வாசு அந்த கயிற்று கட்டிலில் வானத்தில் பார்த்துக் கொண்டு இசையில் மூழ்கி கிடந்தான். 
பாட்டு நின்று அவனது மொபைல் அடிக்க, அவனின் ஆச்சி அழைத்திருந்தார். படுத்த வாக்கிலே மொபைலை பார்த்து எடுக்க, 
“ ஹலோ ஆச்சி. “
“ ராசா நீ எங்க இருந்தாலும் உடனே வீட்டுக்கு வா. “ என ஆச்சி அவசரமாக கூப்பிட, அவரது அழைப்பின் தொனியை உணர்ந்து, உடனே எழுதவன், அப்படியே சட்டையை மாட்டிக்கொண்டே கிளம்பியபடி பேசினான்.
“ என்னாச்சு சொல்லுங்க ஆச்சி. “
“ நீ வீட்டுக்கு முதல வா. நேர்ல பேசலாம். நீ சீக்கிரம் வா ராசா  “
“ வரேன் வரேன்…”
என்றவன் அவனது பைக்கில் அவசரமாய் வீட்டிற்கு செல்ல,  
அங்கே இவன் உள் நுழைந்ததும் வீட்டிற்குள் இருந்து நிறைய பேசும் சத்தம். 
    இவன் என்ன என உள் சென்று பார்க்க வாணி அத்தையின் இரு கால்களையும் கட்டி பிடித்து கெஞ்சி கொண்டிருந்தாள் ஜெயா. 
“ மா அவர் ரொம்ப நல்லவர் மா. என்ன ரொம்ப நல்லா பார்த்துக்குவார். நீ சொன்னா அவர கூப்பிடுறேன். நீ பேசுமா. “
“ அடி கழுத்த எந்திரி முதல. யார்கிட்டயும் நான் பேச மாட்டேன். இந்தன வருஷம் ஒத்த ஆள பாடுபட்டு உன்ன படிக்க வச்சா இப்படி தான் பண்ணிட்டு நிப்பியா. “ என உரத்த குரலில் சத்தமிட்டு கொண்டிருந்தார். ஆச்சி அவரை சமாதானபடுத்தும் குரலில் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார். 
   சீதா மௌனமாய் அச்சியின் அருகில் ஆதரவாய் நின்றிருந்தார். கோதண்டம் சிவசு தாத்தாவிற்கு அருகில் அமர்ந்திருந்தார்.
  வாணி அத்தை ஜெயவை யாருடனோ பஸ்ஸில் பார்க்க, வீட்டிற்கு வந்ததும் இவர் அவளை கேட்க அவள் மழுப்பிக்கொண்டே வர, இரண்டு நாட்கள் பொறுத்து பார்த்தா அவர் இன்று தாத்தாவிடம் அழைத்துக்கொண்டு வந்து அவரின் முன் அதட்ட, தாத்தா வாணியை சமாதானம் செய்து பொறுமையாக ஜெயாவிடம் கேட்க, அவள் அவனை திருமணம் செய்ய விரும்புவதாக ஒப்புக் கொண்டாள். 
     ஜெயா விஷயத்தை சொன்ன அதிர்ச்சியில் வாணி ஜெயவை திட்ட, அதற்கு தான் இப்படி வீடே சத்தமாக இருந்தது. தாத்தா எவ்வளவோ சொல்லியும் வாணி அத்தை இப்போது சமாதானமாகவில்லை. 
வாசு உள்ளே வந்ததை பார்த்ததும்,     
“ வா வாசு. இவள பார்த்தியா. “
“ என்ன பண்ணிட்டு வந்துருகானு. “ என வாணி அத்தை இவனிடம் புகார் வாசிக்க, ஜெயா அவரிடம் இருந்து எழுந்து வந்து வாசுவின் மீது சாய்ந்து ஆழ ஆரம்பித்து விட்டாள்.
“ மாமா அம்மா கிட்ட சொல்லுங்க மாமா. அவர கூப்பிட்டு பேச சொல்லுங்க மாமா. “
வாசு அவளை அவனது தோள் மீது இருந்து நிமிர்தி, 
“ என்ன மா சொல்ற. என்னாச்சு. யார கூப்பிட்டு பேசணும். “
தாத்தாவிடம் அருகில் நின்று கொண்டிருந்த வாணி அத்தை மடமட என வந்து ஜெயவை அடிக்க, 
“ அத்த நிறுத்துங்க, புள்ள மேல கைய வைக்காதிங்க. “ என வாசு இடையில் புகுந்தான். 
“ நீ இப்படி செல்லம் குடுத்து தான் இவ பண்ணிட்டு வந்து நிக்குறா. ” என குரலில் கடுமை கூட்ட, 
“ இருங்க அத்த, 
ஜெயா இப்படி முன்னாடி வா. என்னாச்சு சொல்லு. “ என இவன் கடுமையை குறைக்க பார்த்தான்.
“ மாமா நீ என்ன திட்ட கூடாது. “ என அழுது கொண்டே ஜெயா பிராமிஸ் கேட்க,
இப்போது அதிக கோவம் வர வாணி அத்தை ஜெயவை முதுகில் அடிக்க ஆரம்பித்து விட்டார்.
“ அத்த அடிக்காதிங்க. நிறுத்துங்க. முதல அவ சொல்லட்டும். “ என வாசு சத்தமிட தான் நிறுத்தினார்.  
“ காலேஜ்ல இவளுக்கு ரெண்டு வருஷம் முன்ன படிக்குற பையனம். யாரிடி  அவன். பேரு என்ன சொன்ன. “ வாணி அத்தை கடுமையாக ஜெயவை கேட்க, 
“ தேவராஜ். “ என வாயிக்குள் முனகினாள். 
“ சத்தமா சொல்லு. “ என அதற்கும் வாணி அத்தை திட்ட, 
“ தேவராஜ். “ என இப்போது பெயர் சத்தமாக வந்தது. 
“ அத்த இருங்க. நான் பேசிக்கிறேன். “
“ யார் அது. “
“ மாமா என் காலேஜ் அவரு எனக்கு சீனியர். பி‌ஜி செகண்ட் இயர் பண்றாரு.” என அந்த தேவராஜ்ஜின் அம்மா அப்பா இன்னும் சில தகவல்கள் தர, வாசுவிற்கு தெரிந்து அவர்கள் குடும்பத்தின் மீது இவனுக்கு நல்ல எண்ணம் இல்லை. இருந்தாலும் அவளை தற்போது சமாதான படுத்த,  
“ சரி விசாரிக்கலாம். “ என்று சமாதானப்படுத்தினான்.
“ என்ன தம்பி நீ விசாரிக்கலாம்னு சொல்ற. “ என விடாமல் வாணி அத்தை இன்னும் அதிகமாக கோபப்பட்டார்.
“ இருங்க அத்தை, நாளைக்கு விசாரிச்சு சொல்றேன். அப்புறம் பேசிகலாம். இப்போ இத அப்படியே விடுங்க. “ என வாசு தன்மையாக சொல்ல, அவர் கேட்பதாய் இல்லை.
“ இதே எப்படி அப்படியே விடறது. நீ சொல்ற வர நான் இவள காலேஜ் அனுப்ப மாட்டேன். “ 
“ நானும் நீங்க எல்லாரும் சரி சொல்ற வர காலேஜ் போ மாட்டேன். “ என ஜெயவும் தேம்பிக்கொண்டே சொல்ல, 
“ பார்த்தியா பார்த்தியா இவள, இதுக்கா இவள கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். காடு மழையில கிடந்து படிக்க வச்சேன். என்ன இப்படி நிக்கவச்சிடியேடி.       
உங்க அப்பா போனதுக்கு அப்புறம் எத்தன விஷயம் தனியா சமளிச்சிருப்பேன் தெரியுமா.  தனியா புள்ளய வச்சிட்டிட்டு என்ன செய்யபோறனு எத்தன பேரு கேட்டுருப்பாங்க தெரியுமா. அப்போவெல்லாம் நினச்சுப்பேன் நீ நல்ல படிச்சு வந்து என் புள்ள எப்படி வந்துருகானு பாருங்கனு காமிக்கணும்னு, இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறியே. 
உனக்கு என்னடி வயசாகுது 21 கூட முடியல, அதுகுள்ள உனக்கு இந்த உலகத்த பத்தி என்ன தெரியும். 
அம்மா சொல்றத கேளு சாமி, 
அவன் உனக்கு வேணாம் டா கண்ணு. 
அவங்க குடும்பம் பத்தி நான் கேள்விப்பட்டுருக்கேன் சாமி. நீ சொல்றேன் பையனோட அப்பா நல்லவரு தான் ஆனா மத்தவங்க சொல்லிக்கிற மாதிரி நல்லவங்க இல்ல கண்ணு. 
இவன விட்டுடு சாமி. “   என வாணி கெஞ்ச,
ஜெயா அழுகையின் உச்சிக்கே சென்று விட்டாள். அப்படியே கீழே அமர்ந்து வாசுவின் காலை பிடித்து அழுதுக்கொண்டே கெஞ்ச ஆரம்பித்து விட்டாள் ஜெயா.
“ மா… மா… மாமா…எனக்கு அவர தான் பிடிச்சிருக்கு. நான் அவர தான் கல்யாணம் பண்ணுவேன் மாமா. நீ சொன்ன அம்மா கேப்பாங்க மாமா, நீ சொல்லு மாமா. மாமா பிளீஸ் மாமா…நீ…நீ சொல்லு மாமா. “ என தேம்பித் தேம்பிக் கதறலுடன் கேட்க, வாசுவோ ஜெயவை கீழே இருந்து தூக்க முற்பட்டான்.
“ ஜெயா நீ எந்திரி மா. நம்ப முதல விசாரிப்போம். அப்புறம் முடிவு பண்ணலாம். “ என இவன் சொல்ல,
“ இல்ல மாமா, அவரு நல்லவரு தான். நீ சொல்லு மாமா. அம்மா கிட்ட. எனக்கு பயமா இருக்கு மாமா “ என மறுமுறையும் கால்களைவிடாமல் கெஞ்ச, வாசு ஜெயாவை வழுக்கட்டாயமாக கீழே இருந்து தூக்கி நிறுத்தினான்.
“ நீ எந்திரி முதல. நான் சொல்றேன்ல. நாளைக்கு நீயும் வா என்கூட ரெண்டு பேரும் சேர்ந்து விசாரிப்போம். 
அத்த நாளைக்கு நாங்க ரெண்டு பேரும் விசாரிக்க போறோம். நாங்க  வீட்டுக்கு வந்து சொல்ற வரைக்கும் இந்த விஷயத்த அப்படியே விடுங்க. 
நாளைக்கு பேசிகலாம்“ என வாசு சொல்ல வாணியால் ஏற்கவே முடியவில்லை. அவர் ஆழ ஆரம்பித்து விட்டார். 
ஆச்சியும் சீதாவும் ஜெயவையும் வாணியையும் சமாதானப்படுத்த, கோதண்டம் எழுந்தவர் சிவசு தாத்தவை பார்த்து, 
“ அப்பா நாளைக்கு நானும் போறேன். நானும் தனியா விசாரிக்கிறேன். அப்புறம் பேசிக்கலாம். “ என அவரும் பொறுப்பெடுத்தார். சிவசு தாத்தாவும் சரி என்று விட்டார். 
எங்கே ஜெயவையும் வாணி அத்தையையும் தனியாக விட்டால் வீட்டிற்கு சென்று இன்னும் சண்டை இடுவார்களோ என நினைத்து அங்கேயே இருக்கச் செய்துவிட்டார் சிவசு தாத்தா.
 ஆச்சியும் சீதாவும் வற்புறுத்தி அவர்கள் இருவரையும் உண்ணச் செய்ய, வாசு அப்போதே அவன் நண்பர்கள் வழியாக விசாரிக்க ஆரம்பித்து விட்டான்.  ஜெயா விஷயத்தை நாளை காலை வரை கூட ஒத்தி போட மனமில்லை. 
     ஆனால் அவன் விசாரித்தவரையில் ஜெயாவுடன் சுற்றியவனை பற்றி அத்தனை பெரிய எண்ணம் வரவில்லை. அவன் இன்னும் படிப்பை முடிக்க வில்லையாம், இறுதியாண்டில் இருக்கிறானாம். அவன் அப்பா சொந்தமாக லாரி வைத்திரிகிறாம், அவனது சொந்தங்கள் சிலபேர் அரசியலில் முக்கிய நிலையில் இருக்கிறார்களாம். ஜெயாவின் வீட்டை விட வசதி. 
   இதையெல்லாம் விசாரித்த வாசுவிற்கு உண்மையில் சிலது சரியாக படவில்லை. என்ன தான் ஜெயா அவனை விரும்புகிறாள் என தெரிந்தால் அதில் விருப்பம் இல்லாமல் அவர்கள் பக்க அரசியல் செல்வாக்கை கொண்டு ஏதாவது செய்து  விடுவார்களோ என எண்ணம் வந்தது. சரி வீட்டில் தாத்தாவிடம் கலந்தாலோசிக்கலாம் என தூங்கும் முன் இரவில் அவரிடம் தெரிவித்தான். அவனுக்கு ஜெயாவின் விஷயத்தை அப்படியே விடமுடியவில்லை.  
“ ராசா எதுவா இருந்தாலும் புள்ள மனசு வருத்தபடாமா நாளைக்கு நீ விசாரிச்சத புள்ளைய கூட போய் காமி. 
நம்ப இப்போ எது சொன்னாலும் புள்ளைக்கு மனசு ஏத்துக்காது. அவன் மேல அவ்ளோ நம்பிக்க வச்சிருக்கு. 
நேர்ல பார்த்து விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்டும். அப்புறம் பேசலாம். “ என அவர் ஜெயா மனம் நோக கூடாது என பார்த்துப் பார்த்துப் பேசினார்.   
    அடுத்த நாள் காலை ஜெயவையும் அழைத்துக்கொண்டு வாசு விசாரிக்க செல்ல, ஜெயாவும் வாசு விசாரித்த விஷயங்களை கேள்விப்பட்டாலும், அவளின் ஒரே நம்பிக்கை தேவராஜாய் இருந்தான்.  ஏது கேள்விபட்டாலும் ‘ அவங்க குடும்பம் வேணா அப்படி இருக்கலாம் ஆனா என் ராஜ் அப்படி இல்ல மாமா ‘ என்பாதாய் இருக்க, வாசுவிற்கு அயர்ச்சியாக இருந்தது. 
இந்த சின்ன பெண் இப்படி நம்பிக்கொண்டு இருக்கிறாளே என மனம் அடித்துக்கொண்டது. கோதண்டமும் விசாரித்த வகையில் அவருக்கும் அவ்வளவு உடன் பாடு இல்லை.  
 எல்லாரும் வீட்டிற்கு வந்து அவரவர் விசாரித்ததை சொல்ல, ஜெயா அவள் நம்பிக்கையில் அவள் இருந்தாள். இவர்கள் என்ன எடுத்து சொன்னாலும், ‘ என் ராஜ் அப்படி இல்லை. அவர் நல்லவரு தான். ‘ என உயிரின் எல்லை வரை அழுது அடம்பிடிக்க, இறுதியில் வாணி அவளின் காலிலே விழுந்து விட்டார். 
“ கண்ணு வேணாம் சாமி, அம்மா உன் காலே விழறேன் டா. அவன் நமக்கு வேண்டாம் கண்ணு. 
நீ படிச்சு முடி, அதுக்கு அப்புறமும் நீ எப்படி சொல்றியோ அப்படி பார்க்கலாம் டா. “
வாணி காலில் விழாவும் ஜெயவும் பதறி தரையில் அமர்ந்து, 
“ அம்மா வேணாம் மா, என் காலுல விழாத மா. நான் இப்போ கல்யாணம் பண்ணி அங்க போன கூட என்னை படிக்க வைக்கிறேன்னு சொல்லிருக்காங்க மா. அவங்க என்னை படிக்க வைப்பாங்க மா. நீ நம்பு மா. “ என ஜெயவும் ஆழ, 
“ கண்ணு உனக்கு உலகம் தெரில கண்ணு. அவங்க அப்படி தான் சொல்லுவாங்க. 
நீ படிச்சு முடிச்சு வெளியே போய் நாலு ஆளுங்கல பாரு, அப்போ தான் நமக்கு நல்லது நினைக்கிறவங்க யாருனு மனுஷங்கள புரிச்சிக்க முடியும் டா. 
அம்மா சொல்றத கேளு மா. இன்னும் ஆறு மாசம் தான் நீ படிச்சு முடிச்சதும் அவன் கூட உன் கல்யாணம் பத்தி பேசிகலாம் டா. “ என வாணி தேம்பி ஆழ, வீட்டில் இருப்போருக்கு இருவரையும் சமாதானப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது.
     இறுதியில் ஜெயா எப்படியோ வாணிக்காக ஒத்துக்கொண்டதும் தான் அனைவருக்கும் ஒரு ஆசுவாசம் வந்தது. அவள் படிப்பு முடியட்டும் அதன் பிறகு அவளிற்கு பொறுமையாக சொல்லி புரியவைக்கலாம் என இவர்களுக்குள் பேசி முடிவு செய்தனர். இன்னும் மூன்று வாரங்களில் தேனுவில் வளைகாப்பு, அதற்குள் இத்தனையும் நடக்க, வாணி இதற்கு வருந்தி மன்னிப்பு வேண்ட, அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. 
     இந்த சமயம் பார்த்து கொச்சினிலிருந்து ஸ்ரீ வாசுவிற்கு அழைக்க, வாசுவிற்கு இப்போது அவளிடம் பேசும் மனநிலையில் இல்லை. அவன் தொடர்ந்து அழைப்பை எடுக்கா வண்ணம் இருந்து விட்டான்.
கொச்சின், 
      இன்னும் ஒரு தினம் தள்ளி தேனுவின் வளைகாப்பு, அதற்கு நாளை திருச்சிக்கு செல்கிறாள். இரவில் வானத்தை பார்த்தபடி ஹாஸ்டல் மாடியில் தீவிரமாக யோசித்தபடி அமர்ந்திருந்தாள். 
     ஜெயாவின் விஷயத்திற்கு பிறகு வாசு படு பிசியாகி விட்டான். அதிகம் என்பதை விட மிக மிக அதிக வேலை அவனுக்கு. ஜெயாவை அவனே பாதுகாப்பாக காலேஜ்ஜிற்கு அழைத்துச் செல்வது வருவது, ஊரின் விஷயம் ஒரு புறம், இவனின் தனிப்பட்ட வேலையாக அரசு அலுவலங்கள், இவனது தொழில், விவசாயம், தேனுவின் வளைகாப்பு, இவன் திருமண மண்டபம் வாங்குவது பற்றிய விஷயம் என அவனிற்கு வேலைகள் வரிசைகட்டி நின்றது. அவனிற்கு தூங்குவதற்கே நேரம் குறைவாக தான் கிடைக்க, அவனிற்கு ஸ்ரீயிடம் சரியாக பேச கூட நேரம் இல்லாமல் போய்விட்டது. 
         வாசுவாக எதையும் ஸ்ரீயிடம் சொல்வது இல்லை. அவள் தினம் அழைக்கா விட்டாலும் அவனது நிலைமை கிருபாவிடம் ஓரளவு விசாரித்து தெரிந்து வாரம் ஒரு முறை தான் அழைப்பாள். அப்போதும் அவசரமாக பேசி வைத்து விடுவான். ஒரு நிமிடம் கூட அவர்கள் பேச்சு நீளாது. அவன் மேல் குறை கூட சொல்ல முடியாது, அவனிற்கு அப்படி அதிகபடி வேலைகள் இருந்தன, இவன் கொஞ்சம் அசந்தாலும், மிக பெரிய பிரச்சனையில் மாட்டுவான். அப்படி இருக்க ஸ்ரீக்கு நேரமே கொடுக்கவில்லை, கொடுக்கவும் முடியவில்லை.  
      இது எதுவும் முழுமையாக ஸ்ரீபத்மாவிற்கு தெரியாது. அவளிற்கு ஓரளவு தான் தெரியும். அதை கொண்டு அவளாக சமாதானபடுத்திக்கொண்டாள். அவனை நேரில் இம்முறை பார்க்கும் போது, நிறைய கேட்க வேண்டும் போல் இருந்தது. அவன் சொல்லிய மாத அவகாசம் முடியவிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்கள் தானா. 
     அவன் ஏதாவது சொன்னால் தான் இவள் சுந்தரத்திடம் பேச முடியும். இவளுக்கு முன் இவர்கள் விஷயத்தை சுந்தரத்திடம் பிறர் வழியாக தெரியவதில் ஸ்ரீபத்மாவிற்கு விருப்பமில்லை. இதற்கு எல்லாம் நடுவில் தற்போது தேனு ஒன்றை ஸ்ரீபத்மாவிடம் சொல்லியிருக்கிறாள். 
     சுந்தரத்திடம் ஸ்ரீபத்மாவிற்கு இவர்கள் உறவில் ஒரு வரன் வந்திருக்கிறதாம். குடும்பத்தில் அனைவருக்கும் ஓரளவு பிடித்து இருக்கிறதாம். அந்த வரன் பற்றிய விசாரணையில் சுந்தரம் இறங்கி இருக்கிறாராம். 
இது எல்லாம் ஸ்ரீயிடம் இரண்டு நாட்களுக்கு முன் தேனு சொல்ல, ஸ்ரீபத்மா வாசுவிற்கு அழைக்க, அவன் எடுக்கவே இல்லை. இவளின் நிலைமை இப்படி இருக்க, சரி இந்த முறை முடிவாய் ‘ என்ன மாம்ஸ் சொல்ற நீ இப்போ ‘ என கேட்டுவிடுவோம் என முடிவு செய்து விட்டாள் ஸ்ரீபத்மா.   
இத்தனை நாட்களாய் இவர்கள் போக்கில் விட்ட விதி வேறு புறம் நோக்கி செல்ல கிரவுண்ட் ஒர்க்கை ஆரம்பித்திருந்தது. 
            
      
        
            

Advertisement