Advertisement

‘ இங்க இந்த ராங்கி என்ன பண்ணிக்கிட்டு இருக்கா ? ‘
என யோசையுடன் அவளை கூர்ந்து பார்க்க அவள் ஏதோ ஒரு குச்சியை ஸ்‌கூட்டியின் முன் நெட்டு குத்தலாய் வைத்து பிடித்து வந்தாள். இவள் என்ன செய்யபோகிறாள் என யோசித்தான், ஆனால் ஒன்றும் பிடிபடவில்லை. 
     அவள் என்ன தான் செய்தாலும் எப்படியும் இவன் தான் காளைக்கு டியூஷன் எடுத்திருக்கிறானே, அதனால் மனதை தேற்றியவன் அவளை அசால்டாய் பார்த்துக்கொண்டே வண்டியை மெதுவாக ஒட்டி வர, அந்த இரண்டு கன்று குட்டிகளும் அவளை தாண்டி ஓடி விட்டது. அடுத்தது இவன் காளை தான், அவளை கடந்து செல்ல சீறி வந்து கொண்டிருந்தது. 
ஸ்ரீ ஒரு கம்பில் எதையோ சுற்றி வாசுவின் காளை முன் ஆட்ட, அது வேகம் குறைந்து கொண்டே வந்தது.
இவள் விடாமல் அதை காளையின் முன்னே காட்டிக்கொண்டே வர சில நிமிடங்கள் மெதுவாக ஓடி ஸ்ரீயின் வண்டியின் அருகில் வர தொடங்கியது, இறுதியில் நடக்கவே ஆரம்பித்து விட்டது. ஓடி வரும் மற்ற காளைகள் பாதிக்கபடாமல் ஸ்ரீ ஸ்கூடியை மண் சாலையின் ஓரமாக மெதுவாக ஓட்டி நிறுத்த, பிரேக் போட்டு அவள் அருகில் நின்றதுவிட்டது வாசுவின் காளை. அருகில் நின்ற பெண்கள் சிலர் ஸ்ரீயின் வெற்றியை பாராட்டி அவளை நோக்கி கை தட்டினர். 
     இதை வாசு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவனும் வந்து ஸ்ரீயின் ஸ்‌கூட்டியின் பின்னே பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.
பிறகு ஸ்ரீ கீழே இறங்கி நடக்க அவளுக்கு ஏற்றவாறு நடந்து ஒரு பக்கமாக ஒதுங்கியது காளை. 
       வாசுவும் வண்டியை விட்டு  இறங்கி சட்டையின் கையை மேலே ஏற்றிக்கொண்டே அவன் அருவா மீசையை முறுக்கிக்கொண்டே கோபமாக இவளை நோக்கி வேகவகமாக நடந்து வந்தான். 
    கிருபா இறங்கி வாசுவிற்கு முன் ஸ்ரீயை நோக்கி ஓடி வந்தான்.  இவர்கள் அனைவரும் ஒதுங்கியதும் அடுத்தடுத்து வந்த காளைகள் முன்னேறி சென்றன.  
கிருபா முதல் ஆளாக ஸ்ரீயிடம், “ அண்ணி கங்க்ராட்ஸ். “ என உற்சாக மிகுதியில் சொல்ல, 
ஸ்ரீ, “ வெப்பன் சப்லயர்…பப்ளிக் பப்ளிக்…பாத்து. “ என மெதுவாக அடக்க, 
“ ஓகே ஒகே அண்…வின்னர் ” என எப்படியோ தடுமாறி முடித்தான்.
     பிறகு ஸ்ரீ வாசுவின் காளையுடன் கையை ‘v’ போல் வைத்து கிருபாவின் மொபிலில் செல்ஃபி எடுத்து கொண்டிருந்தாள். கிருபவை முறைத்துக்கொண்டே பின்னேயிருந்து வாசு வர, அவனை பார்த்ததும் கிருபா மொபிலை வாங்கி கொண்டு காளையை பிடித்துக்கொண்டு சிறிது தூரமாக நகர்ந்தான். 
வாசு ஸ்ரீயிடம் நெருங்கி எகிற ஆரம்பித்தான்.      
“ ஏய் என்ன பண்ணிக்கிட்டு இருக்க  ? என்ன காட்டுன என் காளைகிட்ட ? “ என அவளிடம் கோபமாக சண்டைக்கு வர, 
“ கூல் கூல் மாம்ஸ்… 
நான் சொன்ன மாதிரி காளைய என் பக்கம் நிக்கவச்சிட்டேன். நான் வின் பண்ணிட்டேன். 
அத நீங்க ஒத்து கிட்டா நான் என்ன செஞ்சேன்னு சொல்றேன். “ என கெத்தாக புருவத்தை தூக்கி இறக்க, 
“ போடி அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன். 
நீ என்னமோ என் காளைய பண்ணிட்ட. ஒழுங்கா சொல்லு. “
“ டேய் நீ ஒத்துக்கிட்டனா நான் என்ன செஞ்சேன்னு சொல்லுவேன். 
இல்லை இப்படியே காளைய கூட்டிட்டு நம்ப தாத்தா வீட்டுக்கு வந்து தாத்தாகிட்டயே நியாயம் கேட்பேன் .
நான் காளைய புடிச்சிட்டேனா  இல்லையானு அவரே சொல்லட்டும். “  என இவள் கூலெர்ஸை ஒற்றை கையில் கழட்டி அதை அசால்டாக தூசி ஊதினாள். 
    வாசுவிற்கு டென்ஷன் கூடியது. இவள் என்னமோ செய்துவிட்டாள் அதான் காளை இவள் புறம் வந்துவிட்டது என கண்கூடாக தெரிந்தது. ஆனால் என்ன என தெரியவில்லை.
வாசு பல்லை கடித்துக்கொண்டே, 
“சரி… சரி… 
ஒத்துக்குறேன். 
என்ன தில்லாலங்கடி வேல பண்ணி என் காளைய இப்படி உன் பக்கத்துல நிக்க வச்சிருக்க. “  என கடுப்பை அடக்கிக்கொண்டு கேட்க, 
“ தோ இத வச்சி தான் “ என ஸ்ரீ ஒரு கம்பை பின்னால் இருந்து முன்னால் எடுத்து காண்பிக்க, அதில் வாசு நேற்று ஸ்ரீயிடம் சண்டை போட்டு அவளிடம் விட்டிருந்த துண்டு தொங்கி கொண்டிருந்தது. 
    வாசு இவளை பார்த்து தானே நிற்காதே என காளைக்கு டியூஷன் எடுத்தான். ஆனால் இவன் துண்டின் வாசத்தை நுகர்ந்து நிற்காதே என அதற்கு சொல்லிக்கொடுக்கவில்லையே, காளைக்கு ஸ்ரீயை பற்றி என்ன தெரியும், அதுவும் அவளது செய்த வேலைக்கு அவள் புறம் சேர்ந்து விட்டது. 
      ஸ்ரீபத்மா வாசுவின் துண்டை காட்டியாவுடன், அது அதனின் முகத்தில் அவ்வப்போது மோதியதும் அதில் வாசுவின் வாசம் பிடித்து அதற்கு கட்டுபட்டு இவள் புறம் வந்துவிட்டது. 
   மனிதன் காளையை எந்த அளவு நேசிக்கிறானோ தெரியாது, ஆனால் காளை அதை வளர்பவனை மிகவும் நேசிக்கும். 
    வாசு தினமும் அதனுடன் பழகிக்கொண்டு தானே இருக்கிறான், அவன் தூரத்தில் பைக்கில் வரும் சத்தம் கேட்டாலே, கொட்டகையில் இருந்து வெளிவந்து ‘ ம்‌மா ’ என விடாமல் கத்த ஆரம்பித்துவிடும். அவனது காலடி ஓசை, அவனது தொடல், அவனது வாசம் என எல்லாம் பழகி வைத்திருந்தது காளை.
     அவனது காளையை கையாள ஸ்ரீபத்மா இப்படி செய்வாள் என அவன் கனவா கண்டான்.  இதை இவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அந்த அதிர்ச்சியில் இவன் நிற்க, 
“ என்ன மாம்ஸ் அப்படியே ஸ்டாச்சு மாதிரி நின்னுடிங்க. 
ஸ்டாச்சு ரிலீஸ். “ என இவள் குதூகலமாக சொன்னாள். 
வீடாய் இருந்தால் இந்நேரம் கதையே வேறு, வீதியின் ஓரம் ஒரு பக்கத்தில் இருவரும் நிற்க போவோர் வருவோர் அவ்வப்போது பார்த்து வேறு செல்ல, வாசுவிற்கு எதுவும் காட்டிக்கொள்ள முடியவில்லை. யாரின் கண்ணிர்க்கும் விருந்தாக இவர்கள் இருவரும் நிற்பதை இவன் விரும்பவில்லை.
அவளை முறைத்துக்கொண்டே காளையின் இவன் பைக்கில் அருகில் சென்று அதிலிருந்த கயிற்றை எடுத்து வந்து காளையின் கழுத்தில் கட்டி அதை  பிடித்துகொண்டு பைக்கில் ஏறினான். கிருபா பின்னால் ஏற வர, அவனை வாசு முறைத்த முறைப்பில், அவன் பயந்து வீட்டிற்கு நடந்தே செல்ல தொடங்கினான்.     
பைக் மெதுவாக செல்ல தொடங்கியது 
“ யோவ் மாம்ஸ் என்ன ஒன்னும் சொல்லாம போறிங்க. “ என இவள் பின்னயே மெதுவாக பேசிக்கொண்டே வர,
“ ஸ்ரீ இது நடு ரோடு, இப்படி எல்லாம் பின்னாலே வராதே, அப்புறம் பேசலாம். நீ வீட்டுக்கு கிளம்பு. “ இவன் குரலை அடக்கி சொல்ல, 
“ அதெல்லாம் முடியாது, உங்க பிராமிஸ் நியாபகம் இருக்குல. என்ன செய்யணும்னு நாளைக்கு சொல்றேன். அது படி செய்ங்க… என்ன டீல் ஓகே வா. “
அவளை ஒரு முறை முறைத்தவன் ஒன்றும் பதில் சொல்லாமல், காளையுடன் பைக்கில் மெதுவாக செல்ல, காளையும் அவனுடன் நடந்தது. 
இவளுக்கு பொறுமை பறந்தது, அவளும் ஸ்கூட்டியில் ஏறி இவனை பின் தொடர 
“ மாம்ஸ் என்ன ஓடுரிங்கா…”
காளையனை விரட்டி கன்னி வர, இவனுக்கு ஏகத்துக்கும் பி‌பி ஏறியது.  என்ன சொன்னாலும் கேட்காமல் பின்னே வருகிறாளே என இவனுக்கு அடித்து கொண்டது. யாராவது பார்த்தால் என்ன நினைப்பார் என தோன்ற வண்டியை நிறுத்திவிட்டான். அவன் அருகிலேயே இவளும் ஸ்கூட்டியை   நிறுத்தினாள்.
“ என்ன மாம்ஸ் நிறுத்திட்டிங்க . உங்க காளை யாரையாவது வச்சு செய்யும்னு பார்த்தா, இப்படி டக்குனு அன்புக்கு அடிமையாயி நின்றுச்சு. ட்ரைனிங் பத்தலையோ. 
என்கிட்ட விட்டிங்கன்‌னா, நான் குடுகுற ட்ரைனிங்ல நல்லா நாலு பேர தூக்கி போட்டு அதகளம் பண்ணும்.
வருங்காலத்துல என் ட்ரைனிங்ல நம்ப காளையும் அதோட ஓனரையும்  தெறிச்சு ஓடவிடுறேன்.  
வரட்டா மாமோய்.
எதுக்கும் எனக்கு குடுத்த பிராமிஸ் நியாபகம் வச்சிகோங்க. பை மாம்ஸ் “
என வாசுவின் பல்ஸை ஏற்றிவிட்டு சென்று விட்டாள் ஸ்ரீபத்மா. அவளிடம் சிக்கி மீள்வது வாசுவிற்கு 
‘ ஹப்பாடா கிளம்பிட்டா…
 உப்ப்ப் ‘ 
என ஒரு அசுவாசத்தை கொடுத்தது, இவன் ஒரு நிமிடம் கண்களை மூடி நிதானித்தான். 
“ ஹலோ மாம்ஸ் “ 
என திரும்பவும் குரல் கேட்க, இவன் திடுக்கிட்டு கண்களை திறந்தான். 
ஸ்ரீபத்மா ஸ்கூட்டியை திரும்பி  இவன் அருகில் எதிர்புறம் பார்த்தபடி நிற்க, ‘ திரும்பவும் வந்துட்டாளா ‘ என அதிர்ந்து பார்க்க, அவன் முகத்தில் இருந்தே அவன் அகத்தை படித்தவள், 
“ மன்னா தங்கள் துண்டை கொடுக்க மறந்து விட்டேன், அதை தங்களிடமே சமர்பிக்க வந்தேன். 
இந்தாருங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
மறுமுறையும் கம்பு சுத்த கிளம்பி யாரிடமாவது உங்கள் துண்டை 
விட்டு… விட்டு…
மண்ணை கவ்வாதிர்கள். “ 
என வாசுவின் துண்டை அவனது பைக் மீது வைத்து விட்டு, 
புருவத்தை சுருக்கி தலையை ஒரு பக்கமாக சாய்த்து வாசுவை எகத்தாலமாய் பார்த்து,
“ நான் கிளம்புனதும் என்ன அப்படியொரு தவ நிலையில கண்ண மூடிட்டு இருக்கிங்க. 
என்கிட்ட இருந்து ஈசியா எஸ் ஆயிடலாம்னு நினைக்காதிங்க மாம்ஸ்.
எப்போ வேணாலும் வருவேன். அலர்ட்டா இருங்க. “
என மிரட்டிவிட்டு அவனை சுற்றி ஸ்கூட்டியில் ஒரு அரை வட்டம் போட்டு   தேனுவை நோக்கி கிளம்பினாள். 
வாசுவிற்கு இப்போது தான் மூச்சே வந்தது. 
‘ என்ன சேட்ட பண்றா. ‘ என நினைத்தபடி வாசு அவளது வண்டியின் பின்னே செல்ல ஆரம்பிக்க, சற்று தூரம் வந்ததும் இவனை திரும்பி பார்த்து கண்களை சிமிட்டி விட்டு புன்னகையுடன் தேனுவை நோக்கி சென்றுவிட்டாள். இவன் ஒரு நிமிடம் உறைந்து வண்டியை ஸ்லோ செய்துவிட்டு பின்பு வீடு நோக்கி மிதமாக பயணமானான். 
வாசு போகும் வழியெல்லாம் ஸ்ரீயின் நினைவு தான், கோபம் குறைந்து இன்று அவளது அனைத்து செய்கைகளும் நினைவு வர அது அப்படியே புன்னகையாக அவன் உதட்டில் பரவியது.
முன்னே சென்று கொண்டிருந்த கிருபாவிற்கு அருகில் நிறுத்தி  புன்னகையுடன் வண்டியில் ஏற சொல்ல, கிருபா நம்பமுடியாமல் வாயை திறந்து கொண்டு வண்டியின் பின் ஏறினான். 
அவனது கையில் காளையை ஒப்படைத்த வாசு, வண்டியை மெதுவாக ஓட்ட, ஊரில் பொங்கல் திருவிழாவையொட்டி கோயிலுக்கு சற்று தள்ளி கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கர் செட்டில் இருந்து வந்த பாடல் வாசுவை சிறிது தொலைவில் வண்டியின் பின்னே தேனுவவிடம் திட்டு வாங்கி கொண்டே செல்லும் ஸ்ரீபத்மாவை விழிவிலகாமல் புன்னகையுடன் பார்க்க செய்தது.
என் தராதரம் காங்காமலே
அடாவடி பண்ணாதடி 
நான் சாரசரி ஆள் இல்லடி 
தண்ணி காட்டி போகாதடி…  

Advertisement