Advertisement

       ஸ்ரீபத்மா அவள் வீட்டில் அவளது அறையில் மெத்தையின் மேல்  மல்லாக்க படுத்து தீவரமாக யோசனையில் ஈடுபட்டிருந்தாள். 
“ இது வரைக்கும் யார்கிட்டயும் வம்புக்கு போகலயே. இப்போ மாம்ஸ்ஸோட காளைய அடகுரேனு வீனா வாய குடுத்துட்டோமா. பேசாம அடக்கி வாசிச்சிருக்கலாமோ. 
இந்த வெப்பன் சப்லயர்கிட்ட ஐடியா கேட்டா எங்க ஃபேமிலி காளைக்கு எதிரா நாங்க ஐடியா சொல்ல மாட்டோம்னு சொல்லிடங்களே.  
இப்படி நட்ட நடு சாமத்துல விட்டத்த பார்க்க வச்சுட்டானே இந்த வாசு பய. “
என விட்டத்தை பார்த்து புலம்பிபடி திரும்பி பார்த்தவளின் கண்ணில் பட்டது அவள் அறையில் கீழே கலைந்து கிடந்தது இவள் உபயோகிக்கும் பொருள்கள், உடைகள் இன்னும் பிற ஏதேதோ இருந்தது. 
அதை எல்லாம் பார்த்தவளுக்கு ஏதோ தோன்ற, கண்ணில் ஹார்டின்கள் பறக்க எழுந்து உட்கார்ந்தாள். 
அதிலிருந்து தேடி ஒன்றை எடுத்தவள், அதை கையில் பிடித்துக்கொண்டு,
“ மாம்ஸே நாளைக்கு வரேன்…நம்ப காளைய என் பக்கம் நிக்க வைக்கிறேன். உங்க ஆணவத்த அடக்கி என் பாண்ட் பாக்கெட்ல நாலா மடிச்சி வைக்கலா, நான் ஸ்ரீ இல்ல. 
யாருகிட்ட ஹேய் ஹெ ஹெஹேய்…”என துள்ளி குதித்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீபத்மா.   
    வாசுவோ அவனது காளைக்கு வண்டி வண்டியாய் டியூஷன் எடுத்து அதை தயார் செய்திருந்தான். அவனது கட்டிலில் படுத்தவனுக்கு தூக்கம் வருவேனா என்று அடம்பிடித்தது. 
    அவனது மனம் ஸ்ரீயை சாதாரனமாக எடைபோட விழையவில்லை. இவனையே அந்த பாடு படுத்துவாள், இப்போது சவால் வேறு விட்டிருக்கிறாள், அதனால் நாளை உஷராய் இருக்க வேண்டும் என முடிவு செய்தவன் எப்படியோ உறங்கி போனான்.   
       அடுத்தநாள் காலை மாட்டு பொங்கலன்று காளை, கறவைகள், கன்றுக்குட்டிகள் என எல்லாவற்றையும் நன்றாக குளிப்பாட்டி கொம்பிற்கு சாயம் பூசிக்கொண்டிருந்தான் வாசுதேவன். 
      சாயம் பூசியவுடன் கரும்பை துண்டு துண்டாக வெட்டி, அதை மாலை போல் கட்டி அவைகள் அனைத்தின் கழுத்திலும் அணிவித்தான். அதன் உடல் முழுக்க சந்தனம் பூசி, அதன் கொம்பிற்கும் சந்தனம் பூசி, பிறகு பூ மாலை, நெட்டி மாலையும் போட்டு, அவைகள் முகத்தில் மஞ்சள் குங்குமமிட்டு பூசைக்கு நிறுத்திவைத்தான். அத்தனை களையாக இருந்தது வாசுவின் அனைத்து கால்நடைகளும்.    
     ஒரு கன்றுக்குட்டி அதன் கழுத்தில் தொங்கிய கரும்பு மாலையை சாப்பிட ஆரம்பித்திருந்தது, இன்னொன்று நெட்டி மாலையை சாப்பிட ஆரம்பித்திருந்தது, அது இயற்கை முறையில் தயார் செய்யப்பட்டதால் கன்றுக்குட்டி அதை சாப்பிட்டாலும் அதன் உடல் நலத்திற்கு ஒன்றும் செய்யாது. 
     கிருபாவும் மணியும் காலையில் சீக்கிரமே வந்திருந்தனர். என்ன தான் வாசுவின் காளை அவர்களை உதைத்து துவைத்திருந்தாலும் பிறகு இவர்களுடன் பழகி இவர்கள் ஃபேமிலியில் அதுவும் இணைந்து விட்டது. 
“ ண்ணா என்ன ண்ணா பொங்கல் இன்னும் கண்ணுலயே காட்ட மாட்டேன்றிங்க. “ என மணி உள்ளே பார்த்துக்கொண்டே காளையை பிடித்திருந்த வாசுவிடம் கேட்க, 
“ பொறுங்க டா. வரும். பறக்காதிங்க டா. “
“ அண்ணே அதெல்லாம் முடியாது அவனவன் காலையில சீக்கிரம் வந்தா, இப்படி தான் பொங்கல கண்ணுல காட்டமா இருப்பிங்களா. 
நான் கோவமா வீட்டுக்கு கிளம்புறேன். “
“ நீ கிளம்புடா ராசா… உன் பங்கு எனக்கு தான். “ என மணி சுறு சுறுபாக முன்னால் வந்து நிற்க,
“ டேய் ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியாடா அடுத்தவன் பொங்கல ஆட்டையா போட பாப்ப.
ஒன்னும் தெரியாத மாதிரி கூடயே சுத்த வேண்டியது. அப்புறம் வேலையா காட்ட வேண்டியது, ஏன் டா இப்படி. 
டேன்ஜரஸ் பெல்லௌ. “ என சொல்லிக்கொண்டே மணியை தள்ளி கொண்டு முன்னால் வந்து நின்றான் கிருபா.
“ டேய் அடுச்சிக்காதிங்க டா. ஏன் டா வீட்ல வந்து என் மானத்த வாங்குறிங்க. “ என வாசு அடிக்குரலில் அதட்ட, 
“ அது ஏன்னா அண்ணே…
வெளியே வேற யாரும் மானத்த விக்கல…
சரி உங்க கிட்ட வந்தா இலவசமா வாங்கலாமேனு வந்து வாங்குறோம்…
இது தெரியாதா உங்களுக்கு…”
என கிருபா வாசுவை வாரினான். 
“ பேச்சு எல்லாம் நல்லா தான் டா பேசுரிங்க. எல்லாம் உங்க அண்ணி ட்ரைனிங்கா. 
என் கூடவே சுத்திக்கிட்டு அப்படியேஏஏஏ உங்க அண்ணிகிட்ட பூரா விஸ்வசத்தையும் காட்ட வேண்டியது.
நீ தான் உங்க அண்ணியோட ஸ்பைனு எனக்கு தெரியும் டா… ஒரு நாளு என் கிட்ட மாட்டுவ அப்போ இருக்கு தம்பி உனக்கு. “ என வாசு கீழ் உதட்டை மடித்து மிரட்டினான். 
“ அண்ணே, என்ன இப்படி சொல்லிட்டிங்க…
யாரு ஸ்பை…நா…நானா…ஸ்பை…
நம்ப எல்லாம் தாயா புள்ளையா பழகிட்டு, இப்படியெல்லாம் நீங்க பேசலாமா. நீங்க யாரு… எங்க அண்ணே…
நீங்களாம் ஒரு லவ் மெடீரியலே இல்லைனு தெரிஞ்சும் அத அண்ணிகிட்ட சொல்லிருப்பேனா நானுனுனு….ஒரு வார்த்த…இல்லையே அடிச்சு கேட்டா கூட சொல்லமாட்டேன், அது தெரியுமா உங்களுக்கு…
வந்துட்டாரு என்னை சந்தேக பட்டுட்டு…
ஏன் ஏன் சொல்லல…உங்க மேல அப்புட்டு பாசம். “ என உணர்ச்சி பொங்க கிருபா சொல்ல, மணிக்கு அடக்கபட்ட சிரிப்பு. 
“ டேய் தம்பி இங்க வாயேன்…” என வாசு வேட்டியை மடித்து காட்டிக்கொண்டு கிருபவை அருகில் அழைக்க, அவன் பம்பி பின்னே செல்ல,
“ இன்னைக்கு நீ நம்ப காளை கிட்ட உத வாங்குறியோ இல்லையோ…என்கிட்ட மிதி வாங்க போற…” என அவனை நோக்கி முன்னேற, அதற்குள் சுந்தரி ஆச்சியின் குரல் வாசுவை உள்ளே அழைத்தது. வாசு கிருபவை முறைத்துக்கொண்டு உள்ளே செல்ல,  
“ அதான் உள்ளே ஆச்சி கூப்டுறாங்கள்ள…உள்ள பார்த்து போறது. கொஞ்சம் அழகா இருக்கோம்னு நம்பளயே பாக்கறது. உள்ளே போண்ணே. “ என அப்போதும் வாய் அடங்காமல் கிருபா சொல்ல, வாசு திரும்பி வந்து கிருபாவை அடிக்க துரத்த, அவன் போக்கு காட்டி கொண்டிருந்தான். 
“ ராசா…” என மீண்டும் உரக்க ஆச்சி வாசுவை அழைக்க, கிருபவை முறைத்தவாரே உள்ளே சென்றான் வாசு.                      
      வீட்டில் சுந்தரி ஆச்சி பொங்கல் வைத்து முடித்ததும், சாமி கும்பிட்டுவிட்டு கால்நடைகள் அனைத்திற்கும் சூடம் காட்டியவுடன், அவைகளுக்கு பொங்கல் ஊட்டிவிட்டார். வாசுவின் காளை வெள்ளையும் சாம்பல் நிறமும் கலந்து திடமான திமிலை சிலிர்த்த படி கம்பீரமாக நின்றிருந்தது. 
     கார்த்தியும் தேனுவும் ஆளுக்கு ஒரு வாய் ஊட்டிவிட, அதன் பிறகு அனைவரும் வரிசையாக ஊட்டிவிட்டனர். இறுதியாக கிருபாவும் மணியும் ஊட்டிவிட்டு, முதல் ஆளாக ஆச்சியிடம் பொங்கல் வாங்க வரிசையில் நின்றனர்.  
     இன்று ஸ்ரீபத்மா சிவசு தாத்தா வீட்டிற்கு வரவில்லை, நேற்றிலிருந்து கார்த்தியும் தேனுவும் சிவசு தாத்தாவின் வீட்டில் இருக்க, நேற்று மாலையே ஸ்ரீபத்மா அவள் வீட்டிற்கு திரும்பியிருந்தாள்.
    காலை பதினொன்று மணி அளவில் மஞ்சு விரட்டு அவர்கள் ஊரில் ஆரம்பித்தது. 
      வாசுவின் ஊரில் அவரவர் காளைகள், கன்றுகுட்டிகள் என வீட்டில் இருந்தவற்றை வீதியில் கொண்டு வந்து ஓட வைப்பார். சிலர் அவர்கள் காளையை மாடுபிடி வீரர்கள் பிடித்தால் பரிசு என அண்டா, வெள்ளி பாத்திரம், வெள்ளி காசு, தங்க காசு என அறிவிப்பர் , சிலர் எருதின் விளையாட்டிற்காக மட்டும் என விடுவர். அவரவருக்கு எது விருப்பமோ அப்படி பின்பற்றுவர். 
    காளைகள் துள்ளி திரிந்து ஊரை சுற்றி யாரிடமும் பிடிபடமல் ஓடி ஊரின் நடுவிலோ இல்லை எல்லையிலோ எங்காவது நிற்கும், அதை மாட்டின் உரிமையாளர் தேடி கண்டு பிடித்து திரும்பவும் வீட்டிற்கு அழைத்து வருவர். 
    சில காளைகள் ஜல்லிக்கட்டிற்கென்றே தனியாக அவர்கள் ஊரில் வளர்பார்கள். நிறைய ஆண்டுகள் தம் வீட்டு பிள்ளைகளுடன் இன்னொரு பிள்ளையாய் வளரும் காளைகளை மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு என பங்கேற்று பரிசு பெற்று தன்னை பாசத்துடன் பராமரித்து வளர்க்கும் குடும்பத்தை மகிழ்ச்சியடைய செய்யும். 
    கால்நடைகளுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு. அவைகளும் என்றாவது ஒரு நாள் இப்படி கட்டவிழ்க்கபட்டதும் மஞ்சு விரட்டில் உற்சாகமாக பங்கேற்கும்.    
       அன்று ஊரின் அராம்பத்தில் அனைவரின் கால்நடைகளும் வந்தவுடன் மேள தாள கொட்டுடன், ஒவ்வொன்றாக கட்டவிழ்க்கபட்டது.  
      அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சீறி பாய்ந்து ஓட்டம் பிடித்தது. வாசுவின் காளை வலு நிறைந்த கால்கள், திமிறிய திமிலுடன் புழுதி பறக்க ஓட ஆரம்பித்தது. வாசுவின் காளையை முதலில் பரமரித்தவர் ஜல்லிகட்டு காளையாக பழக்கியிருந்தார். அதனால் இந்த ஒரு மாத அளவில் அதை இந்த போட்டிக்கு தயார் செய்வது கிருபாவிற்கு மிகவும் வசதியாக இருந்தது.  
     அதன் கூரிய கொம்பிற்கு பயந்தே சிலர் விலக, சிலர் எதையும் பொருட்படுத்தாது காளையை தழுவ பார்த்தனர். ஒரு மாடுபிடி வீரர் மிகவும் உறுதியுடன் காளையுடன் போராடி, அதனின் திமிலை தழுவ பார்க்க, அவரிடம் மல்லுக்கட்டி அவரை கீழே தூக்கி எறிந்து தொடர்ந்து ஓடியது. இன்னொரு மாடுபிடி வீரரும் அதனுடன் போராட, அவரை அசால்டாக தூர பறக்க விட்டது, ஆனால் சுற்றிலும் மண் பரப்பு என்பதால் சில சிராய்ப்புடன் தப்பினார். அதற்கெல்லாம் அவர் கவலைபடவில்லை, அவருக்கு உண்மையான பரிசு அதனை தழுவி, அதனுடன் விளையாடுவது தான், அந்த மகிழ்ச்சி அவர் முகத்தில் படர்ந்தது.
எவாராலும் சில வினாடிகள் கூட அதை தழுவ முடியவில்லை, ‘ இது என் ஏரியா நெருங்காத ‘ என்பதாய் அத்தனை துள்ளி திமிறியது. வாசுவும் அதன் பின்னே அவனது பைக்கில் வந்துகொண்டிருந்தான். பின்னே கிருபா அமர்ந்து  ‘ ஹே ஹே ஹே ‘ என உற்சாகமாக சத்தமிட்டுக்கொண்டே அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான்.
     காளைகள் ஓடும் வழி நெடுக ஊர் மக்கள் நின்று கேட்டிகை பார்த்து அவரவர் உற்சாகமாக பேசிக்கொண்டும், அதை புகைப்படம் எடுப்பதும் வீடியோ எடுப்பதுமாக இருந்தனர். 
    இறுதியில் ஊரின் நடுவே துள்ளிக்கொண்டு ஓடி வர தொலைவில் ஸ்ரீபத்மா அழகிய பிங்க் நிற தாவணியில் ஓரமாய் நின்றிருந்தாள். இத்தனை நேரம் காமெராவுடன் படம் பிடித்துக்கொண்டிருபாள் போல, அதை அருகில் இருந்த தேனுவின் கையில் கொடுத்தாள். தேனுவிற்கு இவர்கள் காளை வருவதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. 
“ ஹேய் கேர்ள் எங்க போற, நம்ப காளை வருது அத வீடியோ எடு. “
“ பேத்து கேம்ல வீடியோ ஆன் பண்ணி தான் தந்துருக்கேன், அத அப்படியே இப்படி புடுச்சிக்கோ. “ என தேனுவின் கையில் காமெரா வைத்து லாவகமாக சொல்லிக் கொடுத்தவள், கூலெர்ஸ் அணிந்துக்கொண்டு அவளது ஸ்கூட்டியில் தயாராய் அமர்ந்தாள். 
“ என்னை இங்க நிக்க வச்சிட்டு எங்க புள்ள போற ? “
“ நம்ப காளைய புடிக்க போறேன் பேபி. “
“ விளையாடாத புள்ள, ஒழுங்கா வீடியோ எடு வா. “
“ பேத்து, காளைய புடிச்சா நம்ப தாத்தா வெள்ளி குத்து விளக்கு ப்ரைஸ் தர்ரதா ஊருக்குள்ள சொன்னாங்க. 
அந்த விளக்கு நமக்கு தான். நடக்கறது மட்டும் இப்போ பாரு பேபி. “
தேனு விழிவிரித்து ஸ்ரீயை கூப்பிட அதை கண்டு கொள்ளாமல் ஸ்‌கூட்டியை மெதுவாக ஓட்ட ஆரம்பித்திருந்தாள் ஸ்ரீபத்மா. போற வழியில் ஏதோ ஒரு குச்சியை மரத்தில் சாய்த்து வைத்திருந்தாள், அதை போகிற போகில் எடுத்தாள். அவளை தாண்டி தான் பல காளைக்கள், கன்றுகுட்டிகள் என ஓடியிருந்தது, இப்போது ஓடிக்கொண்டும் இருக்கிறது. இப்போது காளைகள் ஓடும் பாதையின் சற்று தள்ளி ஒரு பக்கத்தில் வண்டிக்கு வேகம் கூடினாள். 
இப்போது இரண்டு கன்று குட்டிகள் தாண்டி பின்னே வாசுவின் காளை ஓடி வந்துகொண்டிருந்தது. வாசுவும் இவள் ஸ்‌கூட்டியில் முன்னே செல்வதை இப்போது தான் கவனித்தான். 
“ அண்ணே அண்ணி வராங்க. “ என கிருபா வாசுவிற்கு மட்டும் கேட்கும் படி சொல்ல, 
“ தெரியுது டா. 
பேசாம வா டா. “ என அவளை பார்த்த டென்ஷனில் கிருபாவிடம் கத்தினான் வாசு.   
வாசுவின் நெஞ்சில் ஏதோ தடம் மாறியது.

Advertisement