Advertisement

எல்லாம் கும்பிட்டு விட்டு அங்கயே அமர்ந்து எல்லோரும் பொங்கல் சாப்பிட, அந்த தருணங்கள் யாவும் ஸ்ரீ காமெரா வாங்கி கொண்டது.
அனைவரும் வீட்டிற்கு சென்றதும் தாத்தா ஆச்சியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினர்.  
தாத்தா ஆச்சியிடம் முதலில் கோதண்டமும் சீதாவும் ஆசி வாங்கினர். அடுத்து அனைவரும் ஆசி வாங்கி முடித்தனர். 
தேனுவும் கார்த்தியும் கோதண்டம் சீதாவிடம் ஆசி வாங்கியதும், வாசு விழ கோதண்டம் திருநீர் பூசினார். என்ன தான் மோதல்கள் இருந்தாலும் அவன் நன்றாக இருக்க வேண்டும் என உளமாற மனதில் வாழ்தினார் கூடவே இனியாவது என் பேச்சை இவன் கேட்டு உருப்பட வேண்டும் என இறைவனிடம் தனி அப்ளிகேஷன் வேறு போட்டார். ஆனால் வெளியில் ஒன்றையும் காட்டவில்லை. இன்று ஒரு நாள் தான் வாசுவிடம் அவர் வம்பு வளர்க்காமல் இருப்பார்.   
அவர் பின்னே ஸ்ரீ நின்றிருக்க மற்றவர் யாரும் அறியாமல் தன் காலிலும் வாசுவை விழுமாறு புன்னகையுடன் செய்கை செய்ய, வாசு அவளை கண்களாலயே மிரட்டினான்.        
     வீட்டிற்கு வந்ததும் காலை உணவு முடிந்தவுடன், மத்திய உணவாக வாழையிலையில் பொங்கல் வகைகள், வேகவைத்த சர்க்கரைவல்லிக் கிழங்கு, மொச்சை பயிறு குழம்பு, பிடி கருணை மசியல், சாம்பார், ரசம் வடை, பாயாசம், என செய்து வயல் வேலையில் இருபவர்களுக்கு விருந்து வைத்தனர். 
    ஸ்ரீ மொச்சை பயிரை சாப்பிடாமல் தவிர்க்க, “ மொச்சை சாப்பிடலைனா கழுதையா பொறப்ப “ என விளையாட்டாக கார்த்தி சொல்ல, 
“ திரும்பவும் ஸ்ரீ கழுதையாவா பொறக்கும். “ என தேனுவும் கார்த்தியுடன் சேர்ந்துகொள்ள, 
“ பத்து கன்னு கழுதையா பொறந்தாலும், நம்ப வீட்டு கழுதையா தான் பொறக்கும். ” என தாத்தாவும் சேர்ந்துக்கொண்டார். 
வாசுவிற்கு ஏகத்திற்கும் சிரிப்பு, 
‘ அடேய் இம்புட்டு நேரம் என்னை பார்க்காம சுத்திக்கிட்டு, இப்போ என்ன கெக்க புக்கனு உனக்கு சிரிப்பு வேண்டியிருக்கு ‘ 
என அவன் கன்னத்திலேயே ஒரு பன்ச் விடும் நினைப்புடன் ஸ்ரீபத்மா உணவு உண்டு கொண்டிருந்தாள். 
   பின் அவரவர் இளைப்பாற. ஆச்சியும் சீதாவும் பக்கத்து வீடுகளில் பொங்கல் கொடுக்க எல்லாம் சமையல் அறையில் தயார் செய்து கொண்டிருந்தனர். 
கார்த்தியும் தேனு மாடி அறையில் படுத்து உறங்கச் செல்ல, கோதண்டம்  உள் அறையில் இளைப்பாற, தாத்தா டி‌வியில் தொட்டால் பூ மலரும் என பயணிக்க, வாசு உள் திண்ணையில் அப்போது தான் இளைப்பாற படுத்தான். 
“ மாமாஆஆஆ…” என சத்தமா கூப்பிட்டு கொண்டே திண்ணையில் ஏறி ஜங்க் என ஸ்ரீ உட்கார்ந்தாள். இவள் சத்தமிட்டதில் அவன் அடித்து பிடித்து வாசு எழுந்து உட்கார்ந்தான். 
“ ஆளும் வாயும் பாரு…எவ்வளவு சத்தம்….
கத்ததா ஸ்ரீ …ஒழுங்கா உள்ள போ…யாராவது வருவாங்க…
வாயா இது…
எப்போ பாரு கத்திக்கிட்டே “ என வாசு ஸ்ரீபத்மாவை அதட்டினான்.
“ ஹலோ எங்களுக்கு எல்லாம் நல்ல வாய் தான். ஆனா உங்களுக்கு தான் வாயே இல்ல. அப்படியேஏஏஏ போறிங்க வரிங்க. ஒரு பொங்கல் விஷ் பண்ணல.  
அதான் நம்பளாவது விஷ் பண்ணலாம்னு வந்தா விரட்டுரிங்கா. 
இதெல்லாம் சரி இல்ல மாம்ஸ் “ என இவள் அவனை மிரட்ட, 
“ இப்போ அம்மா வர போறாங்க, நீ மாட்ட போற ஸ்ரீ. “ என அவன் ஸ்ட்ரிக்ட்டாக சொன்னான்.
“ அதெல்லாம் நான் பார்த்துப்பேன். உங்கள கூட காப்பாத்துறேன். “
இவன் அவள் தொல்லை தாங்காமல் வேறு புறம் திரும்பி உட்கார, 
“ என்ன மாம்ஸ் சொக்கா எல்லாம் புதுசா, சும்மா பளிச்சுனு இருக்கிங்க. “ என இவனை பேச்சில் இழுக்க பார்த்தாள்.
விடாகண்டனாய் இவன் இவள் புறம் திரும்பவில்லை. 
“ ஓஹ் பேச மாட்டிங்களோ, ஃபோன்ல பேசுனாலும் டக்கு டக்குனு பேசிடுரிங்க. 
காலையில நல்லா என்னை பார்த்து தாங்க்ஸ்னு தலையாட்ட தெரியுது. 
என்னை கழுதனு சொன்னா சிரிக்க தெரியுது. 
ஆனா இப்போ நேர்ல பார்த்தா முகத்த திருபுரிங்க. என்ன நினச்சிக்கிட்டு இருக்கிங்க.  
அப்புறம் நா கத்துகிட்ட கராத்தேல இருந்து ஒரு வித்தய காட்டுனேனா, உங்க ஃபேஸ் தானா என் பக்கம் திரும்பும். “
இப்போது விருட்டென இவள் புறம் திரும்பியவன் 
“ ஏ என்ன என்ன ஓவேரா போயிட்டு இருக்க, நானும் கராத்தே எல்லாம் கத்துகிட்டேன். நீ என்ன வித்த காட்டுனாலும் அத எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும். “ என இவன் முகத்தை சீரியஸாக வைத்து சொல்ல, 
“ நான் சும்மா வாயில சொன்னதுக்கே உங்க ஃபேஸ்ஸ என் பக்கம் திருப்பிடிங்க. உங்க கராத்தே பத்தி எனக்கு தெரியாதா மாம்ஸ் ஹா ஹா ஹா  “
“ ஏய் என்னடி சிரிப்பு உனக்கு. “ இவன் அவளை ஏகத்துக்கும் முறைக்க, 
“ நீங்க கராத்தேல ஏதோ பெல்ட் எல்லாம் வாங்குனிங்களாம். “ ஸ்ரீ கள்ளச்சிரிப்புடன் அவனை பார்த்து சொல்ல, கொஞ்சம் ஜெர்க்காகி போனான் வாசு. 
“ ஆ.. ஆமாம். பெல்ட் எல்லாம் வாங்குனேன். இப்போ என்ன அதுக்கு. “ என இவன் குரல் தடுமாற, 
“ அப்படியா மாம்ஸ்…
எது அத்தை உங்க ஸ்கூல்க்கு சீஃப் கெஸ்ட்ட வந்தப்போ, போனா போகுதே  அவங்க பையன்னு உங்களுக்கு  ஒரு ஸ்கூல் பெல்ட் குடுத்தங்களே அதுவா சொல்றிங்க.
அத கராத்தே பெல்ட்னு ஊரெல்லாம் நம்ப வச்சிக்கிட்டு இருக்கிங்களே அதுவா…
அதுவா…
அதுவா…எந்த ஆணிடமும் இல்லாத ஒரு பெல்ட்டு 
அது ஏதோ உன்னிடம் இருக்கிறது…  “ 
என இவள் ராகமாக பாடி அவனை வார , வாசுவின் முகத்தில் ஈ என்ன ஈசல் கூட ஆடவில்லை. 
பிறகு சுதரித்தவன் அவன் தலைக்கு வைத்து படுத்திருந்த துண்டை எடுத்து அவளை அடிக்க, அதை கப்பென பிடித்துக்கொண்டாள். அதை இவள் இழுக்க அவன் இழுக்க,
“ ஏ அது என் துண்டு குடு ஸ்ரீ. “
“ போட டேய் துண்டாம் துண்டு. அதெல்லாம் கொடுக்க முடியாது. “ 
“ விளையாடாத ராங்கி எனக்கு சிலம்பம் எல்லாம் நல்லா சுத்த வரும் 
அதுல ஒன்ன உன்கிட்ட காட்டுனா…
தானா என் துண்டு என்கிட்ட வந்துடும். பார்த்துகோ “ என மிரட்டினான். 
“ அட பார்ரா…உங்களுக்கு அதெல்லாம் வருமா. எனக்கு இது தெரியாம போச்சே. 
எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, நான் போய் பெரிய மாமாவ கூட்டிட்டு வரேன். அவருகிட்ட நீங்க என்கிட்ட கம்பு சுத்த போறிங்கனு சொல்றேன் ” என அதிரடியாக சொல்லி கீழே குதித்து உள்ளே செல்ல கிளம்பி விட்டாள்.   
இவள் செய்தாலும் செய்வாள் என நினைத்தவன் இவனும் திண்ணையில் இருந்து குதித்திறங்கி அவளை மறித்துக்கொண்டு நின்று முறைத்து பார்க்க, 
“ மாம்ஸ் பிளீஸ் ரியாக்சன மாத்துங்க. எப்போ பார்த்தாலும் மொரச்சிக்கிட்டே இருந்தா நல்லாவா இருக்கும். “ 
“ மனுசன நல்லா டென்ஷன் பண்ணிவிட்டுட்டு ரியாக்சன மாத்துனு சொல்லவேண்டியது. உன்னயெல்லாம் நாளைக்கு மஞ்சு விரட்டுல நம்ப காளைகிட்ட விடணும், அது நல்லா காட்டு காட்டுனு காட்டும். 
அப்போ உன் ரியாக்சன் எப்படி இருக்குனு பார்க்கணும் ராங்கி. “ 
“ ஒஹ் அப்போ உங்க காளை என்னை காட்டு காட்டுனு காட்டும்னு  சொல்றிங்க. 
நான் மஞ்சு விரட்டுல உங்க காளைய பிடிச்சு உங்க கிட்ட கொண்டு வந்தா என்ன தருவிங்க. “ என ஸ்ரீ புருவம் தூக்கி டீல் பேச, 
“ நீ என்ன வேணும்னு சொல்லு, அப்புறம் தரேன் “ என உஷாராக டீல் பேசினான்.  ‌ 
“ ம்‌ம்‌ம் நல்ல உஷாரு தான் மாம்ஸ் நீங்க. முதல நான் வின் பண்றேன் அப்புறம் உங்க கிட்ட பேசிக்கிறேன். “ 
“ பார்போம், என் காளைகிட்ட உன் பருப்பு வேகாது ஸ்ரீ “ என இவன் விடைத்துக்கொண்டு வேட்டியை மடித்து கட்டி அவளை பார்த்து சொல்ல, 
“ அப்படியா அதையும் பார்போம் மாம்ஸ். நான் வேகவச்சு காட்டுறேன் “ என புன்னகையுடன் கெத்தாக சொல்லி தாவணியின் முந்தியை சுற்றி கொண்டே  உள்ளே சென்று விட்டாள் ஸ்ரீபத்மா.
இவனே இவன் காளையிடம் பழகி சில மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் இவன் என்ன சொன்னாலும் காளை நன்றாக செவி மடுக்கும். நாளை இவளை பார்த்தால் நிற்காமல் சென்று விடு என அதற்கு டியூஷன் எடுக்க வேண்டும் என முடிவு செய்தவன், அதன் படியே செய்தும் விட்டான். 
ஆனால் நாளை மஞ்சு விரட்டில் காளை ஸ்ரீயின் பக்கம் நிற்குமா இல்லை வாசுவின் பேச்சை கேட்டு நிற்காமல் ஒடுமா என அது தான் முடிவு செய்யபோகிறது. 
   
              
  
     

Advertisement