Advertisement

“ ஏ ராசா அந்த கரும்ப நல்லா தூக்கி கட்டு.
 இந்தா இந்த பானைய கொண்டு போய் வெளிய வையி. “
என சுந்தரி ஆச்சி வாசுவை அதை செய் இதை செய் என ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருந்தார். 
வாசு அவர் சொன்ன அனைத்தையும் செய்து கொண்டிருந்தான். அவர்கள் வீட்டின் வாசல் சிறிது தூரம் முன்னே, புதிதாக வாங்கிய மண் அடுப்பு, வண்ணம் அடிக்க பட்ட பானை எல்லாம் தயாராக இருந்தது. வீடு முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை அடித்திருந்தனர். 
காலையில் சீக்கிரமாகவே பத்மாவின் வீட்டில் பொங்கல் வைத்து முடித்திருக்க, இப்போது இங்கு தலை பொங்கல் கொண்டாட கார்த்தியும் தேனும் சிவசு தாத்தா வீட்டிற்கு வந்திருந்தனர்.  ஸ்ரீபத்மாவும் இவர்களுடன் தொத்திக்கொண்டு வந்துவிட்டாள். 
அவளது மாம்ஸை பார்த்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்ததால், இன்று கார்த்தியின் தலை பொங்கலுக்கு ஸ்ரீபத்மாவும் அவளது தலைவனை காண இரண்டு மாதம் கழித்து வந்திருந்தாள். இங்கே வந்து பார்த்தால் தலைவன் பிஸியாக சுற்றிக்கொண்டிருந்தான். வீட்டின் உள் நுழைந்ததிலிருந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள், அவன் இவளை கண்டு கொள்ளாமல் அங்கும் இங்கும் போவதும் வருவதுமாய் அநியாயம் செய்துக்கொண்டிருக்கிறான். 
ஸ்ரீபத்மா என்ற ஒரு ஜீவனை எல்லோர் முன்னும் ‘ வா ஸ்ரீ ‘ என புன்னகையுடன் அழைத்தோடு சரி, பிறகு கார்த்தியுடன் விடாமல் சேர்ந்துக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறான். 
ஸ்ரீயும் ஊருக்கு வந்ததிலிருந்து வாசு, கிருபா, மணி என அனைவரையும் பற்றி ஏதேதோ கேள்வி படுகிறாள். எதற்காக இவ்வாறெல்லாம் செய்கிறான் என யோசித்து பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் தனிப்பட்ட வேலை என்று தானே இத்தனை தான் இவள் நினைத்துக்கொண்டிருந்தாள், ஆனால் இப்போது கேள்வி படும் செய்தி எல்லாம் வேறு வழியில் சென்று கொண்டிருந்தது. இவளுக்கு யோசித்து ஒன்றும் புரிபடவில்லை, சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டாள்.              
 ஸ்ரீ கொச்சினிலிருந்து வாரம் ஒருமுறை லைவ்வில் பேசிய போதும் இவன் நன்றாக பேசினான், ஆனால் ஊரில் நடக்கும் எதுவும் இவளிடம் பகிரவில்லை, இவளுக்கு ஊருக்கு வந்து தான் சிலது தெரிந்தது. அதையும் இவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். 
எல்லாம் சேரவே இன்று ஸ்ரீ வாசுவை பார்க்க வர, தலைவன் முகத்தில் ஏதோ பிரகாசம். அதை உற்று கவனித்தால் தான் தெரியும், சீதா சிறிது கண்டு கொண்டார், ஆனால் எதுவாயினும் அவனே சொல்லட்டும் என காத்திருந்தார். 
சீதா காலையில் வாசலில் இட்ட கோலத்தின் அருகே ஒரு சிறிய நாற்காலி போட்டு தேனு அமர்ந்து வண்ணம் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் ஆரம்பத்திலிருந்து முடிக்கும் வரை ஸ்ரீபத்மாவிற்கு தோன்றிய மட்டில் போட்டோஸ் சுட்டுக்கொண்டிருந்தாள்.   ‌
ஸ்ரீயும் வாசுவின் முகத்தை வந்ததிலிருந்து பார்த்து ஏதோ அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான் என கண்டுகொண்டாள், இவளிடம் அது என்ன என தெரிந்து அவனிடம் கேட்கும் ஆவல். 
“  பொங்கல் பொங்க போகுது, எல்லாரும் வாங்க. சாமி கும்பிடலாம். “ என சுந்தரி ஆச்சி குரல் கொடுக்க, தேனு முதல் ஆளாய் கோதண்டத்தின் கை பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்து சென்றாள். என்ன தான் கோதண்டம் வாசுவிடம் காய்ந்தாலும், தேனுவிற்கு அன்பான அப்பா.     
ஸ்ரீ காமெராவில் ரெகார்டிங் போட்டு ஒரு இடத்தில் அனைவரும் தெரியும் படி முன்னே சென்று ஒரு நாற்காலியில் கமெராவை சாய்த்து வைத்துவிட்டு ஓடி வந்து சுந்தரி ஆச்சி அருகே நின்று கொண்டாள். 
  திண்ணையின் ஒரு புறம் அமர்ந்திருந்த சிவசு தாத்தா, வாசு, கார்த்தி என மூவரும் வர, இன்னொரு புறம் தனியாக அமர்ந்து தேனுவின் கோல அலங்காரத்தை ரசித்து கொண்டிருந்த கோதண்டமும் தேனுவுடன் வர, அனைவரும் வந்து பொங்கல் பானையின் அருகே நின்றனர்.
வீட்டு வாயிலில் மட்டும் இல்லாமல் பொங்கல் வைக்கும் இடத்தில் இருபுறமும் ஊன்றுகோல் நட்டு அதில் கரும்பை கட்டியிருந்தான் வாசு. அங்கும் பெரிய கோலமிட்டு, அதன் தொடக்கத்தில் தான் அடுப்பு, மஞ்சள் கொத்து கட்டப்பட்டு பானைகள் என எல்லாம் வைத்திருந்தனர்.     
 சீதா வைத்த சர்க்கரை பொங்கலும் ஆச்சி வைத்த வெண் பொங்கலும்  பொங்கி வர, சுந்தரி ஆச்சி பொங்கலோ பொங்கல் என வானத்தை நோக்கி ஒளி பொழியும் சூரியனை பார்த்து சத்தமிட்டு கும்பிட, அவரை தொடர்ந்து அனைவரும் பொங்கலோ பொங்கல் என சத்தமிட்டு கும்பிட்டனர். பிறகு ஆச்சி வேறு ஒரு பாத்திரத்தில் வாசுவின் நிலத்திற்கும் கோதண்டம் நிலத்திற்கும் படையலிட என பொங்கல் வகைகளை தனியாக எடுத்து வைத்தார்.
எல்லாரும் வீட்டிலிருந்து அவரவர் பேசிக்கொண்டே வயலுக்கு நடந்து சென்றனர். முதலில் கோதண்டம் நடக்க, பின்னே சீதாவும் ஆச்சியும் பேசிக்கொண்டு வர, தேனுவும் கார்த்தியும் அவர்கள் உலகத்தில் சிரிப்பும் பேச்சுமாக மிதந்துக்கொண்டு வந்தனர்.
வாசு சிவசு தாத்தாவின் கையை பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக அழைத்து வர, இவர்களின் பின்னே ஸ்ரீ காமெராவுடன் நடந்து வந்தாள்.
சிவசு தாத்தா அமைதியாக வராமல் வாசுவிடம், 
“ கைய விடு ராசா…நானே நடந்து வரேன். “
என அடம் பிடித்துக்கொண்டிருந்தார். 
“ அதெல்லாம் முடியாது தாத்தா, என் கைய பிடிச்சிட்டு வாங்க. வரப்புல நடக்குரிங்க பார்த்து நடங்க. “ என இவனும் சமமாய் பிடிவாதம் பிடித்துக்கொண்டு நடக்க, 
“ ராசா நீ பயபடாத. கை விடு, நான் நல்லா பார்த்து தான் வருவேன். இந்த மண்ணுலயே போறந்து வளர்ந்தவேன். அதெல்லாம் ஒன்னும் ஆகாது. ஊருக்குள்ள கேட்டு பாரு, எனக்கு இப்போவும் பொண்ணு குடுபாங்க. “ என வாய் விட 
பின்னே வந்த ஸ்ரீ, 
“ ஆச்சிசி‌சிசிசி “ என முன்னே சென்று கொண்டிருந்தவரை நடந்து கொண்டே அழைக்க,
“ ஓஓஓ‌ஓஓவ் என்னா கண்ணு “ என ஆச்சியும் நடந்து கொண்டே கேட்க,
“ தாத்தாவுக்கு இப்போவும் ஊருக்குள்ள கல்யாணம் பண்ண பொண்ணு குடுபாங்கனு தாத்தா சொல்றாங்க “
என சரியாக போட்டு கொடுத்தாள். மற்றவர் எல்லாரும் சிரிக்க, வாசு திரும்பி பார்த்து அவளை முறைத்தான், இவள் அவனை கண்டு கொள்ளவில்லை.
“ உன் தாத்தாவுக்கு நினப்பு தான். 
நானா இருக்க போயி உன் தாத்தாவ ஜம்முனு பார்த்துக்குறேன். இத வேற எந்த புள்ள வந்தாலும் இரண்டே நாளே பொறந்த வீட்டுக்கே மூட்ட கட்டிடும்.
இப்போ யாரு உன் தாத்தாவுக்கு பொண்ணு தரானு நானும் பாக்குறேன். எங்க யாரையாவது வர சொல்லு பார்போம்.”  என ஆச்சி கோதவில் இறங்கினார்.
இவர்கள் பேச்சசு அனைவருக்கும் கொண்டாட்டமாய் போய் விட்டது. 
சிவசு தாத்தாவின் மானம் காத்தாடியாக  பறக்க, அதை பிடிக்க யாரடா கிடைப்பார் என வழியில் தேடிக்கொண்டிருந்தார். 
அங்கே வயலில் யாரோ ஒரு நடுதர வயது பெண் நிற்க, சிவசு தாதாவிற்கு அவர் ஒரு வகையில் சொந்தம், அவரை பார்த்து சிவசு தாத்தா நலம் விசாரித்தார்.
“ ஏ புள்ள சொர்ணம்… நல்லா இருக்கியா…”
“ நல்லா இருக்கேன் மாமோய்…நீங்க எப்படி இருக்கிங்க ? “
“ உன் அக்காவ கட்டிக்கிட்டு பின்னாடியே போறேன் .
 நீ என்னா இப்போ கட்டிக்கிரியா, உன் பின்னாடியே நானும் வருவேன்ல ? “ என நடு வயலில் ப்ரபோஸ் செய்ய, சுந்தரி ஆச்சி அலட்டிக்கொள்ளவேயில்லை .
“ இருங்க மாமோய் என் வீட்டுக்காரரு பக்கத்துல போய்ருகாரு வந்ததும் கேட்டு சொல்றேன். “ என தாத்தாவின் பிரோபோசலை சிரிப்புடன் காலி செய்ய, ஆச்சி குதூகலமாகிவிட்டார்.
“ பத்து கன்னு பார்த்தியா உன் தாத்தாவ கட்டிக்க நான் தான் கிடச்சேன். நான் மட்டும் இல்லைனா உன் தாத்தா எப்பவோ சாமியாரா போயிருபாரு. “
“ ஆமா கன்னு குட்டி, உன் ஆச்சி மட்டும் என்னை கட்டிக்கலைனா நான் இந்நேரம் சந்தோசமா சாமியாரா இருந்துருப்பேன். என்ன செய்ய நம்ப இப்படி இருக்கணும்னு இருக்கு. “ என தாத்தா பாவனையாக சொல்ல,
“ பத்து கன்னு இப்போ யாரு வேணானு சொன்னது. 
இப்போவும் சாமியாரா போக சொல்லு, நான் என்ன வேணாம்னா சொல்றேன்.“ 
“ நான் இப்போ சாமியாரா போக ரெடி தான் , ஆனா நான் அப்படி போயிட்டா நீ தனியா இருப்ப.
அதான் உண்ண மட்டும் விட்டுட்டு நான் மட்டும் எப்படி போக, அதனால பெரிய மனசு பண்ணி இப்படியே இருந்தடலாம்னு முடிவு பண்ணிட்டேன். 
எல்லாம் உனக்காக தான் சுந்தரி. “ என தாத்தா மீசையில் ஒட்டிய மண்ணையெல்லாம் துடைத்து போட்டு சொல்ல, அனைவருக்கும் அப்படி ஒரு சிரிப்பு. கோதண்டத்தின் உதட்டில் கூட மெல்லியே சிரிப்பு.
இவர்கள் எல்லாம் இப்படி பேசிக்கொண்டே ஒருவர் பின் ஒருவராக முன்னே செல்ல, வரிசையின் இறுதியில் வாசுவும் அவன் பின் ஸ்ரீயும் நடந்தனர். 
ஸ்ரீ வாசுவிற்கு மட்டும் கேட்குமாறு மெல்லமாக ஏதோ ஒரு பாட்டை விசில் அடிக்க, வாசு திரும்பி ஸ்ரீயை முறைக்க, இவள் அவனை பார்த்து அவனது புது சட்டையும் வேட்டியும் நன்றாக இருப்பதாக விரலில் காட்ட, இவன் முகத்தில் மெல்லியே புன்னகை, தாங்க்ஸ் என்பது போல் தலையாட்டினான். எப்போதும் நன்றாக உடுத்துவான் தான், ஆனால் வேலை பொருட்டு எதாவது அடுப்பில் வேளையில் இருக்கும் போது வரும் கரை இல்லை பயிரை பரமரிக்கும் போது ஒட்டும் மண் என எதாவது அவனது சட்டையில் இருக்கும். 
    வாசு கரை இல்லா உடையை இப்போது தான் அணிகிறான், அதை கவனிக்க ஸ்ரீ தவறவில்லை. இவள் கூட லைவ்வில் பேசும் போது அவனை கவனிப்பாள் பெரும்பாலும் அவன் நேர்த்தியாய் இருந்ததாய் இவள் பார்க்கவில்லை, வயலில் நின்று பேசும் போது அவன் முகத்தில் அத்தனை களைப்பு இருக்கும், ஆனால் அதையும் மிஞ்சிய சுறு சுறுப்பு அவனிடம் எப்போதும் உண்டு. 
    உழைக்க சளைக்காதவன், இந்த இரண்டு மாத அளவில் அவள் கேள்விபட்ட வரையில் அவனுக்கு நேரம் இருந்ததாக தெரியவில்லை. 
    சில செடிகள் எல்லாம் குனிந்தே தான் பராமரிக்க வேண்டும். வேறு ஆள் வைத்தாலும், சில சமையம் ஆட்கள் பற்றாக்குறை வந்ததுண்டு. வாசு சளைக்காமல் களம் காணுவான். குனிந்தே வேலை செய்து அவனுக்கு முதுகு வலி கூட வந்ததுண்டு ஆனால் அதற்கென்று பயிரை வாட விட மாட்டான். இது எதையும் இவளிடம் பகிர்வதில்லை, இவளாக கிருபாவின் வழியாக அப்டேட்ஸ் வாங்கி விடுவாள். இவளுக்கு அவனது உடல் நிலை பற்றி கேட்க வேண்டும் போல் இருக்கும், ஆனால் எதாவது கேட்டால் யார் சொன்னது என பிடித்து கொண்டு விடுவான். 
   வாசுவை பொறுத்தவரை விவசாயம் அவனது வேலை அல்ல, அவனது வாழ்க்கை. அதில் எத்தனை வலி வந்தாலும் அதிலிருந்து விலக்குவதாய் இல்லை. அதற்கான தீர்வை கூட இயற்கை மருத்தவ வழியே எடுத்துக்கொள்வான். ‌          
    ஆச்சியும் தாத்தாவும் பேசிக்கொண்டே கோதண்டத்தின் வயலுக்கு சென்று எல்லாம் படையலிட்டு கும்பிட, பிறகு வாசுவின் வயலுக்கும் சென்று படையலிட்டு கும்பிட்டு அங்கு வாசுவின் கறவைகளுக்கும் காளைக்கும் சுந்தரி ஆச்சி பொங்கல் ஊட்டிவிட்டார். தேனுவும் பத்மாவும் கன்றுகுட்டிகளுக்கு பொங்கல் ஊட்ட, இரண்டு கன்று குட்டிகளும் விரும்பி சாப்பிட்டது.  
பிறகு சிறு இலையில் பொங்கலை பறவைகளுக்கு என வைத்தவுடன், அவை சாப்பிட்டதும் முதல் வாய் சர்க்கரை பொங்கலை எடுத்து தேனுவிற்கு ஊட்டிவிட்டவர் சுந்தரி ஆச்சி. 
வரிசையாக கார்த்தி, ஸ்ரீபத்மா, வாசு, என ஊட்டியவர் பிறகு அனைவருக்கும் இலையில் வைத்துக் கொடுத்தார். பின்பு இவர்களிடம் வயல் வேலை செய்பவர்கள் என அனைவரையும் வீட்டிற்கு மதியம் உணவு உண்ண முறையாக அழைத்தார் சுந்தரி ஆச்சி. 

Advertisement