Advertisement

“ வீடு வந்துடுச்சு. கார்த்தி தேனுவ எழுப்பு “ என எழுப்பிக்கொண்டிருந்தான் வாசு. பத்மா முதல் ஆளாய் வெளியே இறங்கி வாசுவின் வீட்டுக்குள் சென்றிருந்தாள். 
எல்லாரும் வாசுவின் வீட்டுக்குள் வர, சிவகாமி இரவு உணவை அவர்கள் வீட்டில் சமைத்து இங்கே எடுத்து வந்திருந்தார். இவர்கள் வந்த போது சிவசு தாத்தா, கோதண்டம், சுந்தரம் எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
ஆச்சி எல்லாரையும் சாப்பிட சொல்ல, ஸ்ரீபத்மா முகம் கை கால் கழுவி தயாராகி சமையல் அறையில் நுழைந்து தட்டுடன் முதல் ஆளாய் வெளியே வந்தாள். மற்றவர்கள் எல்லோரும் அப்போது தான் பின் புறம் சென்றிருந்தனர். வாசு தயாராகி வந்தவன் ஹாலை பார்க்க, ஸ்ரீபத்மா சின்சியராக இட்லியை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தாள். இவனை கூட பார்க்கவில்லை. 
இவளை பார்த்தவன் அமைதியாக தாத்தாவின் பக்கம் அமர்ந்து உண்ண தொடங்க, ஒரு வட்டம் மெல்ல உருவாக ஆரம்பித்தது. கார்த்தி, தேனு, வாணி அத்தை, ஜெயா, கிருபா, மணி என எல்லாரும் அந்த வட்டத்தை பூர்த்தி செய்தனர். எல்லாரும் சாப்பிட்டு அவரவர் வீட்டுக்கு கிளம்ப, கார்த்தி குடும்பம் மட்டும் இன்னும் இருக்க ஆச்சி, சீதா, சிவகாமி எல்லாவற்றையும் ஒதுங்க வைத்துக்கொண்டிருந்தனர். 
ஆண்கள் எல்லோரும் டி‌வியில் மூழ்கி இருக்க, தேனு, ஸ்ரீபத்மா எல்லோரும் அந்த நேரத்தில் உட்கார்ந்து கரோம் ஆடிக்கொண்டிருந்தனர். ஸ்ரீபத்மாவிற்கு ஏதோ மெசேஜ் வர, அவள் மொபைல் தேனு அருகே இருக்க, முதலில் அந்த மெசேஜ் பார்த்த தேனு,
“ எல்லா இங்க பாருங்களேன். ஸ்ரீ எடுத்த போட்டோ செகண்ட் ப்ரைஸ் வின் பண்ணிருக்கு. “ என தேனு சத்தமிட, ஸ்ரீ வாங்கி பார்த்தாள். 
அது ஒரு சீக்குவென்சியல் போட்டோகிராபி. 
ஒரு பறவை ஈசல்களை பிடித்து வந்து, ஒரு மரத்தில் செருகி வைத்து, சேமித்து உண்ணும் காட்சி.  அதனின் ஒவ்வொரு அசைவும் படி படியான காட்சிப்படமாய் எடுத்திருந்தாள் ஸ்ரீபத்மா.   
அவளது பெயருடன் அவளது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ சேர்த்து, அவள் எடுத்த ஒரு போட்டோ பெரிதாக போட்டோ பிரசுரித்திருந்தது அந்த கேரள பத்திரிகை. 
அது அப்படியே ஸ்ரீயின் மெயிலில் வந்திருந்தது. இப்போது ஸ்ரீபத்மாவிடம் தேனு அதை எல்லோரிடமும் காட்ட, எல்லாரும் வாழ்த்து சொல்ல, சுந்தரம் உடனே அருகில் இருந்த கடைக்கு சென்று, நிறைய சாக்லேட்ஸ்‌ வந்து ஸ்ரீயிடம் கொடுத்து அனைவரிடமும் கொடுக்க சொல்ல, அவளும் அனைவரிடமும் பகிர, எல்லாருக்கும் கொடுத்து முடித்து சுந்தரத்திடம் வர, அவர் அதில் ஒன்றை எடுத்து ஸ்ரீக்கு ஊட்ட, அது தேனுவின் மொபைலில் அழகிய புகைப்படமானது. அதை அனைவரும் மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தனர். 
அப்போதும் வாசுவின் அருகில் வந்து அவனுக்கு மட்டும் கேட்கும் படி, கோதண்டம், 
“ இது புள்ள..
ஆனா எனக்கும் வந்துருக்கே ஒன்னு, இந்த மாதிரி ஒன்னும் கிடையாது. “
என எங்கயோ பார்த்து முனகி செல்ல, வாசு ஒன்றும் சொல்லவில்லை. அவன் அதை பெரிதாக எடுக்கவில்லை. அவர் அப்படி தான் என அவன் பழகி இருந்தான். ஆனால் அவர் சொன்ன பிறகு தான், 
‘ஏன் பா நீங்க என்கிட்ட இப்படி இல்ல.’ என மௌனமாய் ஒரு எண்ணம் அவனிடம். 
சுந்தரம் அவரது மகளின் சின்ன சின்ன விஷயங்களையும் பாராட்டுவார், அது அவரது இயல்பு. அது இருவீட்டின் பெரியர்வார்களுக்கு தெரியும், ஆனால் வாசு இப்போது தான் முதன் முதலில் நேரில் பார்க்கிறான். ஆசையுடன் பார்த்தான், இப்படி எல்லாம் கடந்த எட்டு வருடங்களாக அவன் தந்தையுடன் சேர்ந்திருந்த தருணம் மிக குறைவு. திருமணத்திற்கு பிறகும் ஸ்ரீயை இப்படியே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஒரு எண்ணம் உறுதிப்பெற்றது. 
ஸ்ரீ இவனின் முகம் பார்க்க, அவள் அவ்வப்போது கவனித்துக்கொண்டு தான் இருந்தாள், இவனது முகமாற்றத்தை, அவளால் பெரிதாக கணிக்க முடியவில்லை, ஆனால் ஏதோ ஒரு மாற்றம் புரிந்தது. கோதண்டம் ஏதோ பேசியது, அதற்கு இவன் அமைதியாக நின்றது, பிறகு ஒரு புன்னகை எல்லாம் பார்த்திருந்தாள். 
 கோதண்டம் இவனை எதுவும் சொல்லிவிட்டாரோ, என்னவென்று தெரியவில்லையே என நினைத்தவள். வாசுவை தனியாக சந்திக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் இவளுக்கு கொச்சின் ஃப்ளைட். அதற்கு முன் அவனிடம் இரண்டு வார்தைகளாவது என்ன என்று கேட்டு விட வேண்டும் என நினைத்துக்கொண்டாள். 
தாத்தா உள் திண்ணையில் உறங்க செல்ல, கார்த்தியும் தேனும் கோதண்டத்தின் அறையில் சிறிது நேரம் படுக்க செல்ல, கோதண்டமும் சுந்தரமும் வெளித்திண்ணைக்கு சென்றனர். ஹாலில் வீட்டின் பெண்கள் எல்லாம் வேலை முடிந்து அமர்த்து பேசிக்கொண்டிருந்தனர்.  
வாசு பின் புறம் சென்று அவனது கட்டிலின் அருகே நிறைய இளநீர் வைத்திருக்க, அதில் சிலது எடுக்க வந்தான். ஆனால் அவனுக்கு முன் அவனது கட்டிலில் எதிரே இருந்த திண்டில் ஸ்ரீ அமர்ந்திருந்தாள். 
அங்கே இருந்த இளநீர், சாக்கு மூட்டை, இன்னும் கண்ணில் என்னென்ன பட்டதோ அது எல்லாம் போட்டோ எடுக்க, அவளை இங்கே இப்படி எதிர்பார்க்காத வாசு அவசரமாக உள்ளே பார்க்க, யாரும் இங்கே வரவில்லை என தெரிய,
“ நீ இங்க எல்லாம் வரக்கூடாது… உள்ள போ “ என வாசு ஸ்ட்ரிக்ட்டாக சொல்ல,
“ முடியாது… கொஞ்சம் பேசணும். நீங்க இப்போ தான் தனியா சிக்கிருக்கிங்க. இப்போ நீங்களா உட்கார்ந்திங்கன்னா ஓகே. இல்லைனா உட்காரவைப்பேன். இப்போ என்ன செயலாம் ? “ என சீரியஸ்ஸாக ஸ்ரீ கேட்க, இவள் செய்தாலும் செய்வாள் என நினைத்த வாசு வேறு வழியே இல்லாமல் முறைத்தே உட்கார்ந்தான்.
“ சொல்லு என்ன பேசணும். “
“ நான் சாக்லேட் குடுத்துட்டு வந்தப்போ, பெரிய மாமா உங்க கிட்ட என்ன கேட்டாங்க. உங்க ஃபேஸ் அப்படியே மாறிடுச்சு. என்னாச்சு ? “
“அதுவா. தனியா இட்லிக்கு நம்ப ஃபிரன்ச் ஓபன் பண்ணலாம்னு சொன்னாரு.“ 
“ What “
“ நீ சாப்பிடறப்போ செவன் இட்லிஸ் அசால்டா உள்ள தள்ளுனியா.
சரி உன்ன கல்யாணம் பண்ணா உனக்கு தனியா இட்லி செஞ்சே  இளச்சிடுவேன்னு  நினச்சு, இனிமே தனியா இட்லிக்கு நம்ப ஃபிரன்ச் ஓபன் பண்ணலாம்னு சொன்னாரு. “
“ ஹலோ வளர புள்ள சாப்பிடுறதா இப்படி தான் கண்ணு வைப்பிங்களா. 
அது எல்லாம் இட்லியே இல்ல, எல்லாம் சின்ன பனியாரம் சைஸ்ல இருந்துச்சு, நான் நைட் டிராவல் பண்ணனும், அதுக்கு தெம்பு வேணும்ல, அதுக்குனு கொஞ்சமா சாப்பிட்டேன். இதுக்கு இப்படி சொல்லுவிங்களா…
சரி பேச்ச மாத்தாதிங்க. ஒழுங்கா என்ன நடந்துச்சுனு சொல்லுங்க. ”
“ அவரு கொடுத்த பணத்துல நான் கறவ வாங்குனது அவருக்கு சந்தோஷமா, அது தான் சொன்னாரு. “ 
“______”
“ என்ன ஸ்ரீ என்னை அப்படி பாக்குற, நீ வேணா உன் பெரிய மாமா கிட்ட போய் கேளு. “
“ ______”
எல்லாம் அமைதியாக கேட்டு அமர்ந்திருந்தாள் ஸ்ரீ, அவளது முகத்தில் ஒன்றுமே காணவில்லை, ஒரு கோபம், அடி தடி எதுவும் இல்லை. விடாமல் அவனை தான் பார்த்திருந்தாள்.
“ என்ன ஸ்ரீ… இப்படி அநியாயம் பண்ற…இப்படி உத்து உத்து பார்த்தேனா…அப்புறம் உன் கண்ணு டயர்ட் ஆயிடும். போ ஹால்லுக்கு போ. “ 
“ நீங்க சரியான செங்கண் குருவி மாம்ஸ். என்ன அப்படியே டிவேர்ட் பண்ணலாம்னு பேசுறிங்க. 
நான் எதாவது கேட்டா உனக்கும் பெரிய மாமக்கும் பெர்சனல்னு சொல்லுவிங்க. பட் உங்க ஃபேஸ் மாறிச்சு. நான் பார்த்தேன். 
நான் எவ்ளோ கேட்டாலும் நீங்க சொல்ல மாட்டிங்க மாம்ஸ். சரியான அழுத்தம் நீங்க. “ என அவனை திட்டவிட்டு, கோபமாக ஏழுந்து செல்ல பார்க்க, அவளை செல்லாதவாரு, அவள் முன் அவன் காலை வைத்து தடுக்க, 
“ நான் ஹாலுக்கு போறேன்.  வழி விடுங்க. “ இவள் அவனை பார்க்காமல் உர்ரென சொல்ல, 
“ ப்ச் இப்படி கோச்சிக்கிட்டு எல்லாம் நீ போக கூடாது ஸ்ரீ… “  
அவனை முறைத்தவள், “ நான் பாடுக்கு சிங்கிள்ளா இருந்தப்போ கூட சந்தோஷமா இருந்தேன்…இப்போ உங்க கிட்ட வந்து மாட்டிக்கிட்டு, உங்க கிட்ட இருந்து ஒரு வார்த்தைய வாங்க முடியல.
இவ்ளோ நேரம் பஸ்ல நான் சொன்னதெல்லாம் சரி சரினு கேட்டுகிட்டு. இங்க வந்ததும் உங்க யூஷுவல் மோட்க்கு போய்டுறிங்க., 
தேவையானத பேசறது இல்ல, ஆனா மத்ததெல்லாம் நல்லாஆஆ பேச தெரியுது.  
இப்போ உங்க காலுக்கு எதாவது ஆச்சுனா நான் பொறுப்பு இல்ல. “ என அவன் காலை தாண்டி செல்ல பார்க்க, அவளுக்கு முன் வேண்டும் என்றே  அவள் தாண்டாதவாரு காலை உயர்த்தி திண்டின் சுவற்றில் வைத்தான். 
அவனை இன்னும் முறைத்து பார்க்க, அவளுக்கு முன் ஏழுந்து நின்றவன், 
“ இங்க பாரு ஸ்ரீ. இப்போவும் நான் அதே தான் சொல்றேன். 
இது எனக்கும் உன் பெரிய மாமக்கும் எப்போதும் நடக்குற பேச்சு தான். இதெல்லாம் ஒன்னுமே இல்ல. இது தெரிஞ்சு நீ இப்போ என்ன செய்ய போற.
இப்போ இந்த மொமென்ட் நீ எடுத்த போட்டோ ப்ரைஸ் வின் பண்ணிருக்கு. 
அதுக்கு சந்தோஷமா இரு. இந்த மொமெண்ட்ட என்ஜாய் பண்ணு. சும்மா என் ஃபேஸ் பார்த்து இவனுக்கு என்னசோ ஏதோச்சோனு ஃபீல் பண்ணாத, எனக்கு இதெல்லாம் பழக்கம் தான். என்னால முடிலைனா உன்கிட்ட சொல்றேன்.  
நீ எனக்காக யோசிக்கறது பிடிச்சிருக்கு, இல்லைனு சொல்லல, அதுக்குனு உன்னோட லைஃப்ல நடக்குற நல்ல மொமெண்ட்ஸ்ஸ மிஸ் பண்ணாத. 
இப்போனு இல்லை எப்பவும். 
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயம் தான் நம்ப மெமரிஸ்ல அழகா நிக்கும் ஸ்ரீ. இந்த மாதிரி ஒரு மொமென்ட்ட எப்போ நினச்சாலும், அது உனக்கு ஹாப்பினஸ் கொடுக்கணும்.  
என்னை இப்படியே விடு, என் பிரச்சனைய நான் ஹாண்டில் பண்ணிக்குவேன். ஒரு நாள் எல்லாம் சரியாகும். அப்பாவுக்கும் எனக்கும் பஞ்சாயத்து பண்றேனு சொல்லி கம்பு சுத்த கிளம்பிடாத. “ என பொறுமையாக சொல்ல,
ஸ்ரீபத்மா அவனையே அசையாது பார்க்க, 
“ நம்பு ராங்கி. “ 
எதை தன்னிடம் மறைக்கிறான் என ஸ்ரீக்கு தெரியவில்லை, ஆனால் அவன் ஏதோ கோதண்டத்திடம் பிரச்சனை என்பது வரை புரிந்தது. எதையும் உரிமையாக செய்ய விட மாட்டேன் என்கிறான், அதற்கு அவன் காரணங்கள் சரியாக இருக்க, இவளால் என்ன சொல்ல முடியும். 
அவன் இவளுக்காக ஒவ்வொன்றும் பார்க்கிறான், ஆனால் இவளிடம் எதையும் பகிர மாட்டேன் என்கிறான். 
திருமணம் முடிந்தால் இந்த விலகல் இருக்காதோ, இப்படி இருக்க மாட்டானோ என ஸ்ரீபத்மாவிற்கு தோன்றியது.  
அவன் பக்கம் மெல்லமாக ஸ்ரீ அடியெடுத்து வைக்க, இவன் பின்னே செல்ல, இவள் இன்னும் முன்னேற, வாசு பின்னே பின்னே செல்ல, அதற்கு மேல்  இடமில்லாமல் அப்படியே கட்டிலில் வாசு தொப்பென விழ, ஸ்ரீ அவனுக்கு மிக அருகே வர ,
“ ஹேய் ஸ்ரீ என்ன பண்ற “ என கலவரமாக தீவிரமாக மிரட்டினான்.   
அவள் கையில் இருந்த மொபைலில் அவனை போட்டோ எடுத்தவள், அதனை அவனிடம் கொடுத்து, தள்ளி நின்று அவனை முறைத்து,
“ இதுல உங்க முடியில எத்தன சால்ட்டா மாறிருக்கு பாருங்க. “என சொல்ல, 
அவன் சின்சியராக அதை பார்க்கக, தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்க, பிறகு மீசை, தாடி என ஆங்காங்கே சிலது தெரிய, 
“ ஓஹ் இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் உனக்கு பிடிக்கலையா இது போட்டோ எடுக்க தான் வந்தியா. “  
“ இதுக்கு இப்போ என்ன பண்ணலாம்னு இருக்கிங்க. “
“ நான் கலரிங்க் பண்ணிக்கிறேன். “ 
அருகில் கீழே கிடந்த தேங்காய் ஓடை எடுத்து அவன் மீது வீசினாள். அவன் அதை சரியாக பிடிக்க,   
“ தலையில இருக்க மசால் எல்லாம் எடுத்து உங்க ஹோட்டல்ல வச்சாசா. 
அப்போ கூட சீக்கிரம் வேலைய முடிக்கிறேன், கல்யாணம் பண்றேன்னு வாயில வரல. கலரிங்க் பண்றாங்கலாம்…கலரிங்க். “
“ ஏய் ராங்கி என்னை இப்படி டேமேஜ் பண்ற. அப்போ இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் உனக்கு ஓகே வா. 
கல்யாணம் தான் ப்ராப்ளம்மா. “ என அதிமுக்கிய கேள்வியை வாசு கேட்க, 
ஸ்ரீ ஏதோ கோவமாக சொல்ல வர, உள்ளே இருந்து ஆச்சி கூப்பிட்டார். ஸ்ரீபத்மா முதலில் உள்ளே செல்ல, அவள் சென்று சிறிது நேரம் கழித்து வாசு இரு கைகளிலும் பத்து இளநீர் எடுத்து வந்திருந்தான்.   
கார்த்தி, “ என்ன டா. இத்தன இளநீ… “ 
“ நம்ப தோட்டது புது மரம்.  இப்போ தான் முதல் காய் காய்ச்சது. காய் இறக்குனதும் தேனுக்குனு எடுத்து வச்சுட்டேன். இந்தா அப்படியே உன் கார்ல  வை. “ என கொடுக்க, அனைத்தையும் எடுத்து காரில் வைத்து புறப்பட்டனர். 
அவர்கள் சென்று பின்னால் வாசு வந்து உடை மாற்றி பின் கட்டிலில் படுக்க,  வாசுவிற்கு இன்று ஸ்ரீயுடனான பொழுதுகள் கண் முன் விரிய, அப்படியே மனதில் தேன் சொட்டியது. 
அவள் அருகில் இல்லாத போது தவிப்பதும், அருகில் இருந்தால் தள்ளி நிற்பதுமாய் இவனது நிலைமை இருக்க, இந்த நிலைமை சீக்கிரம் மாற வேண்டும் என மிகவும் விரும்பினான். ஆனால் இதையெல்லாம் ஸ்ரீயிடம் வெளிப்படுத்தவில்லை.  
இவனது உணவகம் சார்ந்த தொழில் விரிவாக்கம் செய்யும் பணி  ஆரம்பித்திருக்கிறான். திருச்சியில் இரண்டு வீடுகள் கட்ட இவனை வாடிக்கையாளர்கள் அனுகியிருக்கிறார்கள். எல்லாம் இப்போது நன்றாக ஆரம்பித்து இருக்கிறது. எல்லாம் நன்றாக போகும் எனும் நம்பிக்கையும் இருக்கிறது. நான்கு மதங்கள் என்பது அருகில் என்பது போல தான் தோற்றம், ஆனால் செய்ய வேண்டிய வேலைகள் அவனுக்கு நிறைய இருந்தது. அதையெல்லாம் நினைத்து அப்படியே வாசு படுக்க, ஸ்ரீயின் மொபைல் ஃபோன் அவன் முதுகில் தட்டுப்பட்டது . 
அதை எடுத்ததும் தான் அவள் இவனிடம் கொடுத்தது நியாபகம் வர, அவசரமாக வீட்டில் சொல்லிவிட்டு ஸ்ரீயின் வீட்டிற்கு வர, அதற்குள் அவள் ஏர்போர்ட் செல்ல தயாராய் கிளம்பி இருந்தாள். 
இவன் சென்று மொபைல் கொடுத்ததும், ஸ்ரீ அவளது அம்மாவிடம் பேச்சு வாங்க, சுந்தரம் அவளுக்கு சின்சியராக அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிட்டார். இதை பார்க்க வாசுவிற்கு மிகுந்த ஆவல், 
‘ என்னை எப்படியெல்லாம் பேசுன, இப்போ இப்படி நல்ல புள்ளையா நிக்குற. இதுவும் நல்லாதான் இருக்கு . நீங்க நடத்துங்க மாமா  ‘
என உற்சாகமாக அவன் முகம் இருக்க, ஸ்ரீ அதை கவனித்திருந்தாள். ‘ நெக்ஸ்ட் டைம் உனக்கு இருக்கு டா மாம்ஸ். ‘ என அவள் கண்கள் பதில் சொல்லியது. 
எல்லாம் முடிந்து ஸ்ரீ கார்த்தியுடன் காரில் ஏற, வாசுவிற்கு இத்தனை நேர உற்சாகம் எங்கோ செல்ல, அவளை கண்களால் வழியனுப்ப வாசலில் நின்றிருந்தான் வாசு. 
எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு ஸ்ரீ காரில் ஏற, இவனை பார்க்கவில்லை. இவனிடம் சொல்லிக்கொள்ளவில்லை.
‘ ஸ்ரீ என்னை பாரேன்…
ஒரு தடவ பாரேன். ‘ 
என மனதுக்குள் அரற்றி நின்றான் வாசு. 
அவள் திரும்பி அடுத்த மாதம் வரும் வரை அவளை நேரில் பார்க்க முடியாதல்லவா, அதனால் ஒரு தவிப்பு.  சுந்தரமும், சிவகாமியும் கார் புறப்பட்டதும் வீட்டின் உள் செல்ல, இவன் மட்டும் தவித்து நின்றிருந்தான்.
ஒரு மூன்று நொடி இருக்கும், 
ஸ்ரீ தலையை மட்டும் வெளியே நீட்டி திரும்பி இவனை பார்த்து மெல்ல புன்னகையுடன் தலையசைக்க, வாசுவின் மனதில் உற்சாகம் மீண்டது. அது அவனது முகத்தில் பிரகாசிக்க,
இத்து இத்து இத்துபோன 
நெஞ்ச தைக்க 
ஒத்தபார்வை பார்த்துசெல்லு 
மொத்த சொத்த எழுதித்தாரேன்
மூச்சு உட்பட 
என கார்த்தியின் காரில் ஓடிய பாடல், வாசுவின் நிலையை அப்படியே ஸ்ரீயிடம் கொண்டு சேர்த்தது. 
   
 
 
    ‌   
      
       

Advertisement