Advertisement

    திங்கள் காலை ஒன்பது மணிக்கு சிவசு தாத்தா, சுந்தரி ஆச்சி, கோதண்டம் மாமா , சீதா அத்தை, கார்த்தி, தேனு, சுந்தரம், சிவகாமி, ஸ்ரீ பத்மா, கிருபா, மணி என அனைவரும் வாசுவின் வேன்னில் வாசுவின் குலதெய்வ கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.  
ஆம், ஒரு எதிர்பாரா பயணம். உடனே முடிவான பயணம். நேற்று தான் வாங்கியிருக்கிறான் இந்த வேன். உணவக டெலிவெரி தேவைக்காக, செகண்ட் ஹண்டில் வாங்கியிருக்கிறான். அதை சிறிது மாற்றி அமைத்து வைத்திருக்கிறான். 
உள்ளே மூன்றே சீட், அதுவும் வலது பக்கம் இரண்டு சீட், கடைசியில் ஒரே நீள சீட். இடது பக்கம் காலியாக இருந்தது, அங்கே இருந்த இருக்கைகள் எல்லாம் அகற்றியிருந்தான். உணவக டெலிவெரிக்கு தேவையான பெரிய அகல அண்டாக்கள், இன்னும் பெரியதாக அங்கே நிறைய வைக்கும் அளவு இடம் வரும் அளவு மாற்றி அமைத்திருந்தான். 
இப்போது அந்த காலி இடத்தில் ஒரு கயிற்று கட்டில், அதில் தேனு உட்கார அல்லது படுத்துக்கொள்ள ஏதுவாக நல்ல பெரிய பெட் வைத்து, சாய்ந்துகொள்ள தலையணை எல்லாம் வைத்து இருந்தது, அதில் தேனு, ஆச்சி, சீதா எல்லாம் அமர்ந்திருந்தனர். 
அவர்களுக்கு பக்கத்தில் இம்மியும் இடம் விடாமல் பொங்கல் வைக்க புது மண் பானை, விறகு, மண் அடுப்பு, அரிசி மூட்டை, பருப்பு, இன்னும் தலை வாழை இலைகள், இன்னும் அன்னதானம் வைக்க என சில காய்கறிகள் என எல்லாம் நிரம்பியிருந்தது. 
வலது புறம் படிக்கட்டிற்கு அருகே இருந்த சீட்டில் சுந்தரமும், சிவகாமியும் அமர்ந்திருந்தனர். அதற்கு அடுத்து பின்னால் இருந்த சீட்டில் கோதண்டம் அருகில் கார்த்தி என அமர்ந்திருந்தனர், கடைசியில் உள்ள நீள சீட்டில் சிவசு தாத்தா, அவர் அருகில் ஸ்ரீபத்மா, ஜெயா, அவள் அருகில் வாணி அத்தை என இடம் நன்றாகவே வசதியாக இருந்தது. 
முன்னே வண்டியை வாசு ஓட்டிக்கொண்டிருந்தான், அவன் அருகில் கிருபா, மணி இருவரும் அமர்ந்திருந்தனர். ஞாயிறு விடியலில் தான் வண்டி வாசுவின் கைக்கு வந்திருந்தது. அதனால் அவன் தோட்டத்திலிருந்த பிள்ளையாரிடம் முதல் பூஜை வண்டிக்கு போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து விஷயம் சொல்ல, ஆச்சி முதன் முதலில் குலதெய்வ கோயிலுக்கு எல்லாரும் போலாம் என ஆசையாக கேட்க, நாளையே போலாம் என சொல்லிவிட்டான். 
வாசு கார்த்தியிடம் பகிர சுந்தரம் வீட்டிற்கு வர, அனைவரிடமும் சொன்னவன், 
“ மாமா இன்னைக்கு எல்லாம் ஒரேத முடிவாயிடுச்சு. வண்டி ஒரு வாரம் தள்ளி தான் கைக்கு வர மாதிரி இருந்துச்சு, ஆனா இன்னைக்கே வண்டி கைக்கு வந்துடுச்சு. 
வந்ததும் ஆச்சி கோயிலுக்கு போலாம்னு சொன்னதும் நாளைக்கே போலாம்னு முடிவாயிடுச்சு. அதான் முன்னயே சொல்ல முடில. 
நாளைக்கு நீங்களும் எல்லாரும் எங்க கூட வந்தா நல்லாயிருக்கும் . வாங்க மாமா. “ என சுந்தரத்தையும் குடும்பத்தோடு அழைத்தான். அதனால் திங்கள் அன்று விடியலிலே இந்த பயணம் தொடங்கி பயணம் இப்போது மூன்றரை மணி நேர கடந்திருந்தது, இப்போது இன்னும் சில நிமிடங்களில் கோயிலில் இருப்பர். 
ஸ்ரீ எல்லாரிடமும் மகிழ்ச்சியாக சிரித்து பேசி வந்தாள். ஆனால் வாசுவை பார்க்கவே இல்லை. வாசுவும் வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து அவ்வப்போது கவனித்துக்கொண்டு தான் இருக்கிறான், ஸ்ரீ இன்னும் மலை இறங்கவில்லை.   
சனிக்கிழமை அந்த ஃபைல் எடுத்து முதல் பக்கம் பார்த்தாள். அதில் அவன் நிலத்தை வைத்து கார்த்தியின் பேங்க்கில் கடன் வாங்கியிருந்த விவரம் இருந்தது. அடுத்து பக்கம் திருப்பினால் கல்யாண மண்டபம் பற்றிய விவரம் இருந்தது, மூன்றாம் பக்கம் திருப்பும் போது கதவு தட்டப்பட்டது. 
ஸ்ரீ, “ உள்ள வாங்க. “
உள்ளே வந்த வாசு, “ நினச்சேன் இப்படி ஏதாவது செய்வனு. “ என்று கோபமாக சொல்லி அவள் கையிலிருந்து அந்த ஃபைல்லை பிடுங்குவது போல் உடனே வாங்கியவன். 
“ மேனர்ஸ் இல்ல. இப்படி தான் அடுத்தவங்க ரூம்க்கு வந்து, பர்மிஷன் இல்லாம திங்க்ஸ் எடுப்பியா. “ என கறாராக கேட்டான்.
ஸ்ரீபத்மா, இவன் இப்படி கேட்பான் என எதிர்பார்க்கவில்லை, 
“ இதுல அண்ணா பேர பார்த்தேன். அதான் எடுத்தேன். 
அப்புறம் உள்ள பார்த்து தான் உங்களதுனு தெரிஞ்சுக்கிட்டேன். சாரி ஃபோர் தட். வேணும்லாம் பண்ணல. “ 
என அமைதியாக சொல்லி வெளியேறிவிட்டாள். வாசுவிற்கே ஒரு மாதிரியாகிவிட்டது. அவன் வேண்டும் என அவ்வாறு அவளிடம் பேசவில்லை, கீழே இவன் இருக்கும் போது தான் அந்த ஃபைல் ஞாபகம் வந்தது, எங்கே இவள் பார்த்து விடுவாளோ எனதான் அவசரமாக வந்தான். 
மூன்றாம் பக்கம் பார்த்து விட்டாளா என தெரியவில்லை, எப்படி கேட்பது என யோசித்திருந்தவன், கீழே வந்து பார்த்தால், ஸ்ரீ மருதாணி பறித்துக்கொண்டிருந்தாள். 
மெதுவாக அவள் அருகில் வந்தவன், அவனும் மருதாணி பறிக்க, 
“ நானே பறிச்சிக்கிறேன். “ ஸ்ரீ இவனை பாராமல் சொன்னாள். 
“ அந்த ஃபைல் கொஞ்சம் கான்பிடெண்ஷியல், அதான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன். சாரி ஸ்ரீ. “ வாசு தன்மையாக சொன்னான். 
அவனை பார்க்காமல், “ இல்ல மாமா, நீங்க கரெக்ட்டா தான் இருக்கிங்க. நான் தான் லூசு. 
கல்யாண மண்டபம் நீங்க வாங்குறிங்கனு தெரிஞ்சதும் ரொம்ப ஹாப்பியா இருந்தேன். ஆனா அப்படி வாங்கறது கூட உங்களுக்கு என்கிட்ட ஷேர் பண்ணனும்னு தோனல. அப்படிப்பட்டவங்க நீங்க. 
உங்க பர்மிஷன் இல்லாம உங்க ஃபைல் தொட்டது என் தப்பு தான். “ என சொல்லி செல்லப் பார்த்தாள். 
அவள் வழியை மறித்தவன், 
“ ஸ்ரீ, உன் கிட்ட சொல்ல கூடாதுனு இல்ல. இப்போ அட்வான்ஸ் மட்டும் தான் கொடுக்கலாம்னு. இன்னும் முழுசா நம்ப கைக்கு வரல. 
நம்ப வீட்ல இங்க எல்லத்துக்கும் தெரியும்,  கைக்கு வந்ததுக்கு வந்த அப்புறம் உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ள வீட்ல அத்த கேட்கவும் சொன்னேன்.
அப்புறம் அந்த ஃபைல்…
கொஞ்சம் இம்பார்டண்ட் டாகுமெண்ட்ஸ் எல்லாம் வச்சிருந்தேன். அதான்… “ என தயங்க,
இப்போது அவன் கண்களை நேராக பார்த்தவள் கோவமாக ,
“ அப்படி என்ன இம்பார்டண்ட் டாகுமெண்ட்ஸ், ஒன்னு நீங்க லோன் வாங்குனது, இன்னும் மண்டபம் பத்தி டீடெயில்ஸ், அவ்ளோ தான் பார்த்துருப்பேன். 
அதுக்குள்ள வந்து அப்படி பறிச்சு வாங்குறிங்க. அப்படி என்ன நான் பண்ணிடுவேன்னு பயம் உங்களுக்கு. 
இனிமே உங்க கூட பேசுனா என்னனு கேளுங்க. “ என சூடாக சொல்லி சென்று விட்டாள். 
வாசுவிற்கு அவள் அப்போது கோபித்தது கூட கருத்தில் படவில்லை, அவள் மூன்றாம் பக்கம் பத்தி எதுவும் பார்க்கவில்லை என்பது தான் அசுவாசமாக இருந்தது. அதில் தான் இவர்கள் குழு சேகரித்த முதல் தகவல்கள் எல்லாம் இருக்கிறது. 
முதலில் ஃபைல்லின்‌ மேலிருந்த கார்த்தியின் பெயரை எடுக்க வேண்டும் என முடிவு செய்தவன், உடனே மேலே சென்று அதை அகற்றி, ஃபைலை வேரொரு இடத்தில் பத்திர படுத்தினான்.  எல்லாம் முடித்து கீழே வந்து பார்த்தால் ஸ்ரீபத்மா அவள் வீட்டிற்கு சென்றிருந்தாள்.
ஸ்ரீ செய்து கொண்டு வந்த கேக்கை வீட்டில் எல்லாரும் சாப்பிட்டது போக ஒரே ஒரு துண்டு மீதம் இருந்தது. எடுத்து வாயில் வைத்தவனுக்கு இதயம் வரை இனித்தது.  
இதோ ஒரு நாள் முழுக்க, இப்போது வரை அவள் பேசவில்லை, இவர்கள் வீட்டின் பக்கம் வரவில்லை. இவனுக்கு எப்படி சமாதானம் செய்வது என தெரியவில்லை. இவனும் இன்று காலையிலிருந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான், இவனது ராங்கி மனம் இறங்கவில்லை. 
அருகில் இருந்த கிருபா, “ ண்ணா வொய் பீலிங்க்ஸ் ? “
“ ப்ச் ஒன்னும் இல்ல டா. “
“ ண்ணா உங்க கிட்ட ஒன்னு கேட்கணும். “ என தயங்க,
“ சொல்லு டா. “
“ நம்ப எல்லாம் இங்க இருக்கோம். ஆனா ஸ்ரீதர் மட்டும் அங்க இருக்கான். அவனையும் நம்ப கூட கூப்பிடலாமா ? “
“ தாராளமா கூப்பிடலாம் டா. ஆனா இன்னைக்கு அவனுக்கு எக்ஸாம் டா. அதான் கூப்பிடல. வேற என்னமோ கேட்கணும்னு நினைக்கிற, என்ன ”
மணியும் கிருபாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மெதுவாக கிருபா ஆரம்பித்தான். 
“ அந்த இட பிரச்சனைக்கு அப்புறம் அவன அங்கேயே இருக்க சொல்லிட்டிங்க . ஏன் ண்ணா ? “
“ அந்த பிரச்சனை முடிஞ்சப்போ டக்குனு அவன் என் கால விழுந்துட்டான் டா. அவன நான் எப்படி பார்த்துக்கிட்டேன். 
உங்கள மாதிரி தான அவனையும் பார்த்துக்கிட்டேன். நீங்க எல்லாம் ஏதாவதுனா என்னை கட்டி பிடிக்கிறிங்க. அவன் ஏன் இப்படி என் காலுல விழறான். 
நம்ப மேல பாசம் அவனுக்கு நிறைய இருக்கு ஆனா அவன் மனசுல எங்கயோ அவன் நம்ப கிட்ட வேல செய்யற மாதிரி நினைக்கிறான் போல.  
அவனுக்கு தன்னம்பிக்கை வரணும் டா. நமக்கு கீழ அவன் இல்ல, நம்ப கூட தான் அவனும் நிக்கிறான்னு அவனுக்கு நினப்பு வரணும். 
அதான் அந்த இடத்துல சின்னதா ஒரே ரூம், ஒரு சின்ன மளிகை கட இருக்க மாதிரி விஷால் கிட்ட கட்டி தர ஏற்பாடு பன்னேன்.
அதான் இத்தன மாசமா அங்கயே இருக்க சொல்லிருக்கேன். அவன் கொஞ்சம் தொழிலும் பார்த்து அங்கயே இருந்தா, தொழில நாலு பேர பார்ப்பான். அவனுக்கு ஒரு நம்பிக்கை வரும் டா. அதான் இன்னும் அவன கூப்பிடல. “
கிருபாவிற்கும் மணிக்கும் எப்படி உணர்ந்தனர் என்றே தெரியவில்லை. வாசு ஸ்ரீதரிடம் அந்த இட பிரச்சனைக்கு பிறகு அதிகம் பேசவில்லை என நினைத்திருந்தனர். ஆனால் அவன் பரீட்சை வரை வாசு தெரிந்து வைத்திருக்கிறான் என்றால் அவனை எவ்வளவு கவனிக்கிறான் என புரிந்தது.
இருவருக்கும் மனதில் சொல்ல முடிய உணர்வு. மூவரையும் இவன் தான் வளர்த்தான் இன்னமும் விடாமல் வளர்கிறான் என்ற உணர்வு அவர்களுக்கு.
பின்னே யார் உட்கார்ந்து இருக்கிறார்கள் என எல்லாம் பார்க்காமல் கிருபா வாசுவின் கன்னத்தை பற்றி ‘ இச் இச் இச் ‘ என சத்தமாக முத்தம் வைக்க, பின்னேயிருந்து எல்லாரும் பார்த்திருந்தனர். கோதண்டம் கடுப்பாக பார்க்க, ஸ்ரீ அதை பார்ததும் பார்க்காதது போல் மொபைலை பார்க்க, மற்றவர் அனைவரும் சிரிக்க, 
வாசு, “ ச்சி…ச்சி…எச்ச பன்னதா டா… என் மனமே போகுது. “ என கடிய, 
கிருபா, “ ஓஹ் உங்க நிலமை புரியுதுண்ணா, பின்னாடி அண்ணிய வச்சிக்கிட்டு இதெல்லாம் பண்ணக்கூடாது சொல்றிங்க.  ஓகே. “ என மெல்லமாக சொல்லி கிருபா சிரிக்க ,
அதே வாய்சில் “ ஏன் டா இப்படி, உங்க அண்ணி கூட எதுவும் சொல்ல மாட்டாங்க. 
ஆனா எங்க அப்பா கிட்ட என் நிலமையே ஏதோ தொட்டுக்கோ தொடச்சுக்கோனு ஒடிக்கிட்டு இருக்கு. இதுல நீ வேற இப்படி பண்ணனு வை, உன்னேயே என்கிட்டயிருந்து டிவோர்ஸ் பண்ண வச்சிடுவாரு டா. “‌
“ அப்பாடியா ண்ணா இது தெரியாம போச்சே. 
எங்கள காளைகிட்ட விட்டிங்கள்ள, முதல கோதண்டம் அப்பாக்கிட்ட அண்ணிய பேச சொல்றேன். 
அப்போ தான் உங்களுக்கு அண்ணிக்கும் கரெக்ட்டா டிவோர்ஸ் நடக்கும். “ என கிருபாவும் மணியும் சீரியஸ்ஸாக திட்டம் தீட்ட, 
“ டேய் நீங்கலாம் உண்மையில என் தம்பிங்க தானா. மனசாட்சி இல்லையா டா உங்களுக்கு. 
இங்க ஏற்கனவே முட்டிக்கிட்டு நிக்குது . இதுல இன்னும் நல்லா உங்க அண்ணிக்கு கொம்பு சீவுங்க டா. 
உங்க அண்ணி என்னை தூக்கி அடிச்சிட்டு போய்ட்டே இருகறத பார்க்கணும்னு உங்களுக்கு அம்புட்டு ஆச. 
வண்டிய எங்கயாவது நடுவுல நிறுத்துறேன், அப்படியே இறங்கி ஓடி போய்டுங்க டா. “
“ என்ன ண்ணா, இதுக்கெல்லாம் போய் கோப பட்டுக்கிட்டு. 
ஒருவேல அண்ணி கிட்ட ரொம்ப பேசிட்டிங்களோ. 
இல்ல, நான் எதுக்கு கேக்குறேனா நாள பின்ன உங்களுக்கு தான் சேதாரம் பலமா இருக்கும். 
ஹோட்டல்ல தான் நாங்க உங்க ஆளு. அங்க இருந்து வெளிய கால் வச்சிட்டா நாங்க அண்ணி சொல்றத தான் செய்ய முடியும். 
நீங்க எங்கள காளைக்கிட்ட விடுவிங்களோ இல்ல வேறு யார் கிட்ட விடுவிங்களோ எங்களுக்கு நோ ப்ராப்ளம். நாங்க எல்லாத்துக்கும் ரெடி தான் ண்ணா . “
மணி, “ அண்ணா சவுண்ட் சிஸ்டம் கொஞ்சம் வால்யூம் அதிகம் வைங்க , உங்க கிட்ட முக்கியமான விஷயம் கேட்கணும். “ 
மணி சொன்னது போலே வாசு வைத்தான். 
“ சொல்லு டா. “
“ அண்ணே இது வரைக்கும் இருபது பேர் கிட்ட தான் டீடெயில்ஸ் வாங்க முடிஞ்சது. அதுவும் அவங்களுக்கு தெரியாம அவங்க கிட்ட பேசி, வாயில இருந்து எல்லாம் தெரிஞ்சுக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆயிட்டோம் ண்ணே. 
நமக்கு கேட்டது கிடைக்கலைனா கூட பரவால ண்ணே. இந்த மாதிரி விஷயம் பேசறப்போ நாங்க உங்க ஆளு தெரிஞ்சே உங்கள சில பேரு இறக்கி பேசுறாங்க. அவங்களுக்கு எல்லாம் ஏன் நம்ப பண்ணனும்னு தோனுது. 
வேற ஏதாவது ப்ளான் சொல்லுங்க ண்ணே. இப்படியே போச்சுனா நம்ப பிக்ஸ் பண்ண டைம் குள்ள எல்லாம் கலெக்ட் பண்றது சரி வராது . கொஞ்சம் யோசிச்சு வேற ப்ளான் சொல்லுங்க. “
“ டேய் வேற ப்ளான்லாம் இல்ல டா. நம்பளே இறங்கி செஞ்ச தான் உண்டு. நீங்க உருளுங்க புறளுங்க, பட் நம்ப ஊருகாரங்க டீடெயில்ஸ் வாங்கிடுங்க டா. நான் இத இன்னும் வீட்ல கூட யாருக்கும் சொல்லல டா. சொன்னாலும் இப்போவே ஏன் இப்படினு கேட்பாங்க. 
இப்போ நம்ப பண்றது நாளைக்கு நடுற மரத்துக்கு இப்போவே விதை சேக்கறது மாதிரி. முதல எல்லாரும் கேலியா தான் இத பார்பாங்கா, இது உண்மையினு கூட நினைக்க மாட்டாங்க. ஆனா நடந்த தான் நம்புவாங்க.   
உங்க அண்ணிக்கு கூட தெரியாது. நான் இன்னும் சொல்லல. இந்த விஷயம் முடியர வரை யார்கிட்டயும் சொல்றதா இல்ல. பட் ஒரு சின்ன விஷயம் வெளியே போன கூட என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியும்.
இன்னும் நாலு மாசம் தான் டா. அது வரைக்கும் நம்பள பேசுனவங்க, பேசாதவங்கனு பிரிச்சு பார்க்காதிங்க. ஒரு நல்லது நடக்குதுனா இப்படி எல்லாம் வரத்தான் செய்யும். இதுக்குகெல்லாம் மனசு விட்டுடக்கூடாது. 
நமக்குகெல்லாம் பிரச்னை வரலைன்னா, பின்ன யாருக்கு டா வரும். எல்லாம் முடியரப்போ எல்லாரும் புரிஞ்சுபாங்க. நடுவுல ஏதாவது விஷயம்  வெளிய தெரிஞ்சா, என் பேர சொல்லுங்க டா. நீங்க சிக்கிடாதிங்க. எல்லாம் நான் பார்தூக்குறேன். ” என ஸ்திரமாய் சொன்னான் வாசு.
” ண்ணா என்ன ண்ணா இப்படி சொல்லிட்டிங்க. உங்கள தனியா எல்லாம் இதுல விட மாட்டோம். ஒன்னா தானா இறங்குனோம். எதுவா இருந்தாலும் ஒன்னா பார்த்துக்கலாம். ” அடமாக கிருபா சொல்ல,
எரிச்சலாகி போனவன், ” லூசு தனமா பேசாதிங்க டா. என் மேல கோர்ட் கேஸ் வந்தா கூட நான் பார்த்துப்பேன். கார்த்தி எனக்காக வீட்ல பேசுவான். 
ஆனா உங்க ரெண்டு பேரு வீட்லையும் நீங்க தான் உங்க ஜெனரேஷன்லயே ஃபர்ஸ்ட் டிகிரி படிக்கிறிங்க. உங்கள வச்சு தான் டா உங்க ஃபேமிலியோட அடுத்த ஸ்டேஜ் இருக்கு. அத ஏன் டா யோசிக்க மாட்டேன்றிங்க.
என்ன நம்பி தான் டா உங்க ரெண்டு பேரு வீட்லயும் என்கிட்ட விட்டுருக்காங்க.
இப்படி தான் நீங்க பண்ணுவிங்கனு சொன்னா. நீங்க ரெண்டு பேரும் இப்போவே இந்த விஷயதுல இருந்து விலகிடுங்க. நான் அப்புறம் கூட பார்த்துக்குறேன். ” என சட்டமாக சொன்னான் வாசு .
” ண்ணா என்ன ண்ணா… இப்படி பேசுறிங்க. உங்கள தனியா விட முடியாதுனு சொன்னா, இதுல இருந்து எங்க விலக சொல்லுவிங்களா.
ச்ச முதல உங்கள விட்டு தள்ளி உட்காரணும். மணி இங்க வா டா. நான் அப்படி உட்காந்துக்குறேன்.  
இப்படி தான் அண்ணி கிட்டயும் பேசி வச்சிருபிங்க. அதான் முட்டிக்கிச்சு போல, உங்களுக்கு இதெல்லாம் பத்தாது. உங்கள இன்னும் நல்லாஆஆ வச்சு செய்யணும். நாங்க விலகணும் மாம்ல…” என வாசுவை வருத்தவன், மணியிடம், 
” இந்த பக்கம் வந்து தொலையேன் டா. ” என அவனை தாண்டி சென்று அந்த பக்கம் உட்கார்த்தான்.  
கிருபா உர்ரென இருக்க, அங்கே உள்ளே ஏதோ பாடல் நல்ல சத்தமாக கேட்டாதால் மற்றவர்கள் இதை கவனிக்கவில்லை, ஆனால் இங்கேயே அவ்வப்போது பார்த்திருந்த ஸ்ரீபத்மாவிற்கு அடக்கபட்ட சிரிப்பு, 
” என்ன நம்ப வெப்பன் சப்லயர் அந்த பக்கம்மா தவ்வுறாங்க…  
கொஞ்சம் நேரம் முன்னாடி தான் முத்தம் குடுத்தாங்க, 
இந்த பைசன் என்னமோ பேசி அந்த பக்கம் தெரிச்சு ஓட விட்டுட்டான் போல … ஹா…ஹா…” என வாய்குள்ளேயே சிரித்தவள், ஜன்னல் வழி வெளியே பார்க்க அவர்கள் வர வேண்டிய ஊர் வந்திருந்தது.  
     
             

Advertisement