Advertisement

“ அது…அது வந்து…” இவள் தயக்கம் போல் இழுக்க 
“ வந்து…” இவன் அவளை போலவே ராகம் பாட,
“ நீங்க ட்ரிங் பண்ணுவிங்களா. அப்படி இல்லைனா ஸ்‌மோக் பண்ணுவிங்களா. “ என இவள் அவனை பார்த்து நேராக கேட்டாள். 
“ ம்‌ம்,,,,‌ ஆமா “ வாசு சீரியஸ்ஸாக சொன்னான். 
ஸ்ரீ முகம் சுருங்க சிறிது நொடிகள் யோசித்தவள் மெதுவாக, “ அப்போ…இனிமே…” என ஸ்ரீ இழுக்க,
“ இனிமே…” வாசு இப்போதும் அவளை போலவே ராகம் பாட, 
“ நீங்க உங்களுக்கு பர்சேஸ் பண்ணும் போது, எனக்கு ஒரு ரெட் வைன்னும், டின் பியரும் சேர்த்து வாங்குங்க. “ என இவள் புன்னகையுடன் தெளிவாக அவற்றின் பிராண்ட் பெயர்களை உற்சாகமாக சொல்ல, 
“ அடி ராங்கி…நீ இதெல்லாம் சாப்பிடுவியா…” இவன் கலவரமாக கேட்க,
“ ஏன் மாம்ஸ் சாப்பிட கூடாதா. “ என இப்போது இவளும் சீரியஸ்ஸாக கேட்டாள். 
“  இல்ல… அப்படி இல்ல … ஃபர்ஸ்ட் டைம் நீ சொல்லவும் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன். “ என இவன் உளறினான்.
“ அது மாம்ஸ் நான் ஃபர்ஸ்ட் டைம் ஹாஸ்டல்ல இருந்தப்போ… ஐ வாஸ் சோ இன்னொஸெண்ட், யு நோ ? “
“ யாருருரு…நீ…இன்னொஸெண்ட்டா…“ வாசு ஒற்றை புருவத்தை தூக்கி அவளை கேட்க,
“ யெஸ் மாம்ஸ், அப்போ நான் ஒரு பச்சிளம் பாலகி.
அங்க கூட இருந்த ஒரு பொண்ணு ஒரு நாள் டின் பியர், ரெட் வைன்னும் வாங்கிட்டு வந்தா…
சும்மா டேஸ்ட் பண்ண வாங்கிட்டு வந்தா, அவகிட்ட இருந்து ஒரு ஸ்பூன் வாங்கி பயந்துகிட்டே சாப்பிட்டேன்.
அப்புறம் பார்த்தா ஜூஸ் மாதிரி இருந்துச்சு. அந்த டேஸ்ட் ஒட்டிக்கிச்சு.
சரி அப்போ இருந்து ஒரு ஆசை, நமக்கு வர பையன் ட்ரிங் பண்ணா  நம்பளும் அவன் கூட சேர்ந்து அடிக்கலாம்ல. இப்படி ஒரு மேரேஜ் கோல்.
அதுக்கு தான் ஒரு செக்கிங்க போட்டேன். 
நான் எக்ஸ்பெக்ட் பண்ண மாதிரியே நீங்களும் சிக்கிடிங்க. 
நீங்க மேரேஜ் அப்புறம் நான் சொன்னா பிராண்ட் எல்லாம் வாங்கிட்டு வரிங்க. நம்ப ஒன்னா ஒரு சியர்ஸ் போடுறோம். “ 
என ஸ்ரீ உற்சாகமாக கைகள் இரண்டையும் தேய்த்து கொண்டு கண்கள் மின்ன வெளியே பார்த்து சொல்ல, வாசு நம்பமுடியாமல் அரண்டு உட்கார்ந்திருந்தான்.
வாசு பேச இயலாமல் அவளாயே பார்க்க, இப்போது அவன் முகத்தை திரும்பி பார்த்தவள், 
“ என்னாச்சு மாமஸ். “ என சீரியஸ்ஸாக கேட்க, 
“ அதில்ல ஸ்ரீ…என… எனக்கு ட்ரிங்… பண்ற ஹேப்பிட் இல்ல. அதான் யோசிச்சேன். “ வாசு திக்கினான்.
“ட்ரிங்…பண்ற ஹேப்பிட் இல்லயா….” என ஸ்ரீ அவனை போலவே ராகம் பாட,
அதை உணராதவன், அப்பாவியாய் ஆமோத்திதான். “ ஆமா ஸ்ரீ. “
“ அட…டா…வட போச்சே…”  என ஸ்ரீ அவனை பார்த்த சிரிக்க , 
கடுப்பாகி போனவன், “ அடி ராங்கி …போட்டு வாங்குனியா. “ 
“ இது கூட கண்டு பிடிகலையா…ஹா…ஹா…”  என ஸ்ரீ இன்னும் சிரிக்க, 
“ உன் மேரேஜ் கோல் எல்லாம் வேற லெவல்ல இருக்கே. “ வாசு அவன் தாடியை தடவியபடி இவளை பார்த்து சொல்ல , 
“ ஸ்பூன்ல சாப்பிடாது ட்ரூ மாம்ஸ், பட் மேரேஜ் கோல் அது இல்ல.
மேரேஜ் கோல்னா…அது தனி…
உங்கள கூட்டிட்டு போய் நிறையா டிராவல் பண்ணனும், நிறையா ‌போட்டோ எடுக்கணும், 
உங்க ஹோட்டல் மாதிரி, நான் வேற நல்லா ஹோடெல்ஸ் எல்லாம் பார்த்து வச்சிருக்கேன், அங்க போய் உங்க கூட உட்கார்ந்து ஃபுல் கட்டு கட்டணும். 
அப்புறம் சாங்க் கேட்டுட்டே ஒரு சேஃப் லாங் பைக் ரைட்.
அப்புறம் உங்கள மாதிரி எதையும் மனசுல வச்சிகமா உங்க கிட்ட ஷேர்  பண்ணனும்…இப்படி நிறையா…”  என அவள் கனவுகளை விரித்தாள். அப்படியே அவள் வெளியே பார்க்க, மாலை நேரம், வார்தைகளால் சொல்ல இயலா அற்புதமாய் நிலவு உயிரோவியமாய் உதயமாகி இருந்தது.
பின்னே சிறிது நேரம் அதை ரசித்தவள், புன்னகையுடன் வாசுவை திரும்பி பார்க்க, அவன் ஆழ்ந்த மௌனத்தில் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். 
“ மாம்ஸ் என்ன, நான் இவ்ளோ சொல்றேன்…ஒரே சைலன்ட்டா இருக்கிங்க ? “ இவள் இயல்பாய் கேட்க,
அவள் சொன்ன எல்லாவற்றையும் மனதில் வைத்தாலும், ’ உங்கள மாதிரி எதையும் மனசுல வச்சிகமா உங்க கிட்ட ஷேர்  பண்ணனும் ’ என்பது ஏதோ செய்ய, வாசு “ நான் உன்கிட்ட வேணும்னு எதுவும் மறைக்கல ஸ்ரீ. “ வெளியே வானத்தை பார்த்தே ஆழ்ந்து பதில் சொன்னான். 
முதலில் புரியாமல் பார்த்தவள், பின்பு புரிந்து, “ அப்போ வேணாம்னு மறைக்கிறிங்களா . “ இவளும் வானத்தை பார்த்தே பதில் பேசினாள். 
“ ச்ச அப்படி இல்ல. எல்லாம் முடிஞ்ச அப்புறம் நீயே புரிஞ்சுப்ப. பட் கண்டிப்பா நான் எந்த தப்பான வேலையும் பண்ணல“ அவன் இப்போது இவளை நேர்கொண்டு பார்த்து சொன்னான்.
“ ப்ச் நான் எப்போ நீங்க தப்பானா வேல பண்றிங்கனு சொன்னேன். நீங்க மனசு விட்டு எதுவும் என்கூட ஷேர் பண்றது இல்ல தான் சொன்னேன். 
இத தப்பா நினைக்கல, ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். பையனோ, பொண்ணோ, யாரா இருந்தாலும் அவங்க ஃபியான்சி கிட்ட சில பெர்சனல் விஷயங்கள் ஷேர் பண்றதுல ஒரு தயக்கம் இருக்கும். மே பி அவங்க எப்படி எடுத்துப்பாங்களோனு ஒரு தாட் இருக்கலாம்.
பட் உங்களுக்கு ஏதாவது கஷ்டமா எந்த விஷயம் நடந்தாலும் I’ll be there for you. I won’t mistake you. Just trust me. இவ்ளோ தான் நான் சொல்ல வந்தேன். உங்க ஹாப்பியான மொமெண்ட்ஸ் என்கூட ஷேர் பண்ணலைனாலும் எப்படியோ எனக்கு தெரிஞ்சுடுது, அது நீங்க என்கிட்ட ஸ்ட்ரைட்டா ஷேர் பண்ணனும் தான் எக்ஸ்பெக்ட் பண்றேன். 
யாராவது என்கிட்ட வந்து அவரு இப்படி புதுசா ஒன்னு செஞ்சுருக்காரு உங்களுக்கு தெரியாதனு இயல்பா கேட்டா கூட எனக்கு ஏதோ ஒரு இடதுல நீங்க என்ன விட்டு தள்ளி நிக்கிற மாதிரி இருக்கு.  “ 
வாசு இதை கேட்டவன், ஏதோ மறுத்து பேச வர, அவனை கை காட்டி தடுத்தவள்,  
“ மாம்ஸ் ஒரு நிமிஷம், நான் முடிச்சுக்கிறேன். சரி ஹாப்பியான விஷயம் ஷேர் பண்ணல, பட் கஷ்டமா ஏதாவது இருந்தா சொல்லுங்கனு தான் சொல்றேன். 
நீங்க ஏன் கறவ கன்னுகுட்டி எல்லாம் வாங்குனிங்க, வெளி பார்க்க எல்லாருக்கும் நீங்க ஏதோ புதுசா நல்லதா ஒரு விஷயம் செஞ்சிருக்கிங்கனு தான் தோணும். நானும் அப்படி தான் ஃபர்ஸ்ட் நினச்சேன். பட் நேத்து தான் அதுக்கு பின்னாடி இருக்க ரீஸன் என்னோட ஸ்பை கிட்ட மிரட்டி வாங்குனேன். நீங்க என்கிட்ட ஒரு நாள் ஃபோன்ல சண்ட போட்டிங்களே அன்னைக்கு பெரிய மாமாவோட ஃப்ரெண்ட் பலமா ஒரு சம்பவம் பண்ணிருக்காரு  போல . 
அப்போ என்கிட்ட பேசணும்னு தோனிருக்கு, பட் ஷேர் பண்ணனும்னு தோனல, அது தான் ஏன் கேட்குறேன். “ 
ஸ்ரீபத்மா கிருபாவிடம் நிறைய பேசி விஷயத்தை வாங்கிருந்தாள். யாரோ ஒரு அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகரின் தெரிந்தவர் ஒருவர் வாசுவிடம் வந்திருக்கிறார். 
கோதண்டம் அவருக்கு நண்பர் போல, அதனால் அவர் கோதண்டத்தை பிடித்து கட்சி விழா ஒன்றுக்காக சாப்பாடு தேவை, விலை அதிகம் இல்லாமல் வேண்டும் என கேட்க, வாசு கடையை பற்றி சொல்ல, அவரும் அங்கு சென்று தேவையானதை சொல்லி ஆர்டர் கொடுத்து சென்றிருக்கிறார்.
வாசுவும் கையில் இருந்த பணம் எல்லாம் போட்டு எல்லாம் நன்றாகவே செய்து கொடுத்திருத்திருந்தான். அவன் லாபம் எல்லாம் பெரிதாக வைக்காமல், மிக மிக குறைத்தே வைத்திருந்தான் . ஆனால் அடுத்த நாள் சென்று கேட்க, பணம் இன்னும் மேலிடம் தரவில்லை என சொல்ல, வாசுவிற்கு சந்தேகம் வந்து விட்டது, சில இடத்தில் பணம் வராது, அப்படியே வந்தாலும் இழுத்தடித்து தருவார்கள், அதுவும் குறைவாக தருவார்கள். ஆனால் இவன் கோதண்டத்தின் நண்பர் என்று நம்பி தானே இவ்வளவு செய்து கொடுத்தான். 
வாசு, சீதவிடம் சொல்லி கோதண்டதிடம் அவர் நண்பர் பற்றி விசாரிக்க சொல்ல, கோதண்டாமோ நண்பர் நல்ல மாதிரி என சொல்ல, வாசுவிற்கு ஏற்க முடியவில்லை, ஏன்னென்றால் வாசுவை தவிர மற்றவர்களை எல்லாம் நன்றாக தான் பேசுவார். யாரையும் ஒரு குறை கூற மாட்டார்.
எதற்கும் இருக்கட்டும் என அந்த தலைமை பிரமுகரிடம் நேராக சென்று வாசு கேட்க, தலைமை பிரமுகர் நியமனவர் போல, அவர் நேற்றே பணம் கொடுத்து விட்டதாக சொல்லி அதற்கான பேங்க் ஸ்டேட்மெண்ட்டையும் காமிக்க, வாசு இதை எதிர்பார்க்கவில்லை. வாசுவின் முகத்தை பார்த்தே புரிந்த தலைமை பிரமுகர், அவன் முன்னேயே கோதண்டதின் நண்பரை அழைத்து விசாரிக்க, அவர் மாட்டிக்கொண்டார். அவரிடம் சத்தமிட்டு, பணத்தை கொடுக்க சொல்ல, தலைமையிடம் கொடுப்பதாக சொல்லிவிட்டு, வெளியே வந்ததும் வாசுவை தனியாக அழைத்த பணம் பாதி தொண்டர்களுக்கு செலவாகி விட்டதாக சொல்லி, மீதம் மிக மிக குறைவாக மட்டுமே கொடுத்தார். வாசுவிற்கு அதை ஏற்க மனமில்லை அவரிடம் சண்டையிட்டு அப்படியே வந்துவிட்டான். அவரிடம் தேர்ந்த ஆளைப் போல் வாசுவிற்கு நடக்க தெரியவில்லை, பேச தெரியவில்லை. அவன் இது வரை இது போல் பார்க்கவில்லை. இப்போது தானே விழுந்து எழுந்து கற்றுக்கொள்கிறான். 
அடுத்த நாள் வீட்டில் கோதண்டத்தை கேட்டால், எனக்கு இப்படியெல்லாம் வரும் என தெரியாது, என சொல்லி, அப்படியே நான் சொன்னா ஆளாய் இருந்தால் தான் என்ன, தொழில் நடத்தும் நீ முன்னேயே இதெல்லாம் விசாரித்து செய்ய மாட்டாயா என இவனையே திரும்பி திட்ட, வாசு என்ன சொல்லுவான். 
கோதண்டம், நான் அந்த பணம் தருகிறேன், எனக்காக நீ ஒன்னும் இலவசமாக செய்து தர வேண்டாம் என வீம்பாக சொல்லி வம்படியாக சீதாவின் வழியாக பணம் கொடுத்து விட்டார். 
இவன் என்ன கோதண்டத்திடம் பணமா கேட்டான். ஏன் விவரம் தெரியாமல் ஆளை அழைத்து வருகிறீர்கள் என்று தான் நினைத்து அவரிடம் கேட்டான். அவன் அப்பாவின் நண்பர் என்று தானே செய்தான். தொழில் என்றாலும் கூட கோதண்டத்தின் மீது அவனுக்குள்ள மரியாதை பொருட்டே எல்லாம்  செய்தான். அது தான் உண்மை. அதற்கு இவர் ஏதோ வீம்பாக பணம் தர, வாசுவிற்கு எப்படி இருக்கும். அன்று தான் கொச்சின்னில் ஸ்ரீபத்மாவுடன் எல்லாம் முட்டிக்கொண்டது.
இப்படி எல்லா விஷயத்தையும் ஸ்ரீபத்மா சேகரிப்பாள் என நினைக்காதவன், அவளிடம் அவனது எண்ணத்தை சொல்ல ஆரம்பித்தான். 
“ உனக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு. 
இந்த விஷயதுல எங்க அப்பவோட பங்கும் இருக்கும்னாலும், இப்படி நடக்கும்னு அவரே எதிர்பார்க்காதது.   
இப்போ தான் நீ என் லைஃப்ல வந்துருக்க, இதெல்லாம் தெரிஞ்சு நீ என்ன செய்வ ? “ பொறுமையாக தான் கேட்டான்.
“ என்ன மாம்ஸ் இப்படி கேட்டுடிங்க. நான் பெரிய மாமா கூட டைரக்ட்டா இல்லைனாலும் இண்ரெக்ட்டா புரியவைக்க ட்ரை பண்ணுவேன், அவருக்கு எக்ஸ்ப்ளய்ன் பண்ணுவேன். 
தேவைபட்டா சண்ட கூட போடுவேன். “ என ஸ்ரீ உறுதியாக சொன்னாள். 
வாசு அவளை நேர்கொண்டு பார்த்து,
“ யெஸ், இத தான் நானும் சொல்றேன், 
இது தான் விஷயம்னு தெரிஞ்சா என்னை கன்ஸோல் பண்ணுவ, எனக்காக எங்க அப்பா கூட சண்ட போடுவ. 
பட் எங்க அப்பாவையும் தாண்டி இன்னும் வேற எவ்ளோவோ நடந்துருக்கு என் லைஃப்ல, அப்போ எல்லாம் நானே தான் ஃபேஸ் பண்ணிருக்கேன். 
இப்போவும் நானே தான் ஃபேஸ் பண்ணனும்னு நினைக்கிறேன். 
நீ என்னை லவ் பண்றதுக்காக எத்தன பேர் கூட சண்ட போடுவ ? “
எல்லாருக்கும் நம்பள புரிஞ்சுபாங்கனு எதிர்பார்க்க முடியாது ஸ்ரீ. 
எனக்காக நீ யார்கூடவும் சண்ட போடணும்னு அவசியம் இல்ல, நானே என் பிரச்சனைய ஹாண்டில் பண்ணுவேன்னு நம்பிக்கை மட்டும் வை, அது போதும். “ என தெளிவாக சொன்னான். 
“ அப்போ நான் ஒரு சப்போர்ட்காக கூட உங்க கிட்ட ஆறுதல் சொல்ல கூடாதுனு சொல்றிங்களா. “ 
“நான் அப்படி சொல்லல, நீ சப்போர்ட் பன்னாலும் மேரேஜ்க்கு அப்புறம் பண்ணுனு தான் சொல்றேன். இப்போ நீ நீயவே இரு. உன்னோட எந்த விஷயத்தையும் எனக்காக மாதிக்காத. 
இப்படி ஹாப்பியா சுத்தறது தான் நீ. இது தான் உன்னோட நேச்சர் ஸ்ரீ ,
இது நீ எனக்காக யார் கூடவும் சண்ட போட்டு மாறிட கூடாது. ஈவென் மேரேஜ் ஆனா கூட இப்படியே இரு. எனக்கு நீ நீயா இருக்கறது தான் பிடிச்சிருக்கு.
This is what I expect from you. இவ்ளோ தான். உனக்கு புரியுதா. “   
அவளுக்கு புரிந்தது, அவனை எண்ணி பெருமையாக கூட இருந்தது. எத்தனை பேர் காதலிக்கிறோம் என்பதற்காகவே அவர்கள் துணைக்காக மற்றவரிடம் பேசி, சண்டை போட்டு அவர்களின் சுய இயல்பில் இருந்து விலகி வாழ்கிறார்கள் என அவள் பார்த்திருக்கிறாள். 
அப்படி இருக்க, நீ நீயாகவே இரு, என் மீது நம்பிக்கை மட்டும் கொள், என்னுடன் நில், என் பிரச்சனையை நான் பார்த்துக்கொள்வேன் என தன்னம்பிக்கையாக சொல்கிறானே என எண்ணி கண்களில் கொள்ளை கொள்ளையாய் நேசம் கொண்டு வாசுவை பார்த்தாள். வாசுவிற்கு அவள் கண்களின் நேசம் அவனது உள்ளம் வரை தாக்க, அவனும் அவள் கண்களை தான் புன்னகையுடன் பார்த்திருந்தான். 

Advertisement