Advertisement

 “ இந்தா கோவில் வந்துடுச்சு. ஏ பாப்பா எந்திரி “ என சுந்தரி ஆச்சி தேனுவை எழுப்பி கொண்டிருந்தார். தேனு நன்றாக சீதா மேல் சாய்ந்து உட்கார்ந்த வாரே உறங்கியிருக்க, இப்போது தான் எழுந்தாள்.
அது ஒரு சிறிய கிராமம், அதன் நடுவே கோவில், அருகில் ஒரு வெட்டார வெளியும் அதன் தொடர்ச்சியாக சிறிய காடு என இருந்தது.  எல்லாரும் கோவில் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வர, பொங்கல் வைக்க ஆரம்பித்தார் சுந்தரி ஆச்சி.  
சிவசு தாத்தாவிற்கு அந்த ஊருக்குள் நண்பர்கள் உண்டு, அவர்களுடன் ஐக்கியமாகி விட, அத்தனை மகிழ்ச்சி முகத்தில், பழைய நண்பர்களுடன் பேசுவது அவருக்கு அலாதியாக இருக்க, சிறு பிள்ளை போல் ஆகிவிட்டார்.  
கோதண்டம், சுந்தரம் இருவரும் சேர்ந்து ஊருக்குள் அப்படியே அங்கே இருந்த அரச மரத்தடியில் அமர்ந்து அவர்கள் சிறு வயது கதையை தொடங்கி விட்டனர். இவர்கள் சிறுபிள்ளைகளாக இருந்த போது, வருடத்தில் ஒரு முறை நடக்கும் திருவிழாக்கு சிவசு தாத்தா இவர்களை அழைத்து வருவார், ராட்டினம், தேன் மிட்டாய், கடலை உருண்டை, பலூன், சுட்ட மக்காச்சோளம், கரும்பு என இவர்கள் கேட்டதெல்லாம் வாங்கி தருவார்.
அதெல்லாம் மனதில் வந்து போக, கோதண்டம் உற்சாகமாக சுந்தரத்திடம் பகிர, கடந்து வந்த வாழ்கையின் அழகிய நாட்கள் இருவருக்கும் மனதிற்கு இதம் தந்தது. 
சுந்தரி ஆச்சிக்கு ஒரு இருக்கை போட்டு அருகில் அமர்த்தி, சீதா பொங்கல் வைப்பதை தொடர, அன்னதானத்துக்கு தேவையான சாம்பார், காய் கூட்டு, வடை, அப்பளம் எல்லாம் தயாரிக்க சிவகாமி, தேனு, வாணி அத்தை, ஜெயா என ஆளுக்கு ஒன்றாக எடுத்து செய்தனர். 
வாசு, கார்த்தி அங்கே ஒரு மரத்தடியில் அமர்த்து அன்னதானதுக்கு ஏற்றார் போல் வாழை இலை பிரித்து வைக்க, கிருபாவும், மணியும் ஊருக்குள் சுற்றி பார்க்க சென்றனர். 
ஸ்ரீபத்மா போட்டோ எடுக்க காமெரா கையுமாக சுற்றி கொண்டிருந்தாள். கோவில் வெளி தூண்ணில் இருந்த சிறிய சிற்பங்கள், அங்கே சுற்றி கண்ணில் பட்ட சிட்டு குருவி, ரெட்டை வால் குருவி, குயில், காக்கை, மைனா, கொக்கு, புறா என எல்லாம் ஒவ்வென்றாக ரசித்து, அதன் இயல்பை கவனித்து, அதன் போக்கில் விட்டு படம் பிடித்துக்கொண்டிருந்தாள். 
கார்த்தியும் வாசுவும் இலைகளை தனியாக அடுக்கி வைத்துவிட்டு, அப்படியே அங்கே சுற்றி பார்த்து நடந்து கொண்டிருக்க , ஸ்ரீபத்மா காமெராவை வைத்துக்கொண்டு மண் சாலையை குனித்து பார்த்துக்கொண்டு எதையோ பின் தொடர்வது போல் கபடி ஆடிக்கொண்டிருந்தாள். இவர்கள் அவள் அருகில் சென்றனர். 
 “ பத்து என்ன பண்ற ? என்னது அது ? “ என கார்த்தியும் அவள் பார்க்கும் இடத்தை இவனும் குனித்து பார்க்க, ஏதோ சிறிய குருவி போல் இருந்தது. 
 “ எனக்கு தெரில காரு. “ என அதை விடாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் ஸ்ரீபத்மா. 
“ அது செங்கண் குருவி “ என வாசு இடைப்புகுந்தான். 
“  இப்படி ஒரு பேரா டா “ என கார்த்தி கேட்க, 
“  ஆமா டா. அதோட கண்ணு ரெட் கலர்ல இருக்கும் பாரு. “
ஸ்ரீபத்மா இவன் என்ன பேசினாலும் இவன் புறம் திரும்ப கூடாது என்று குருவியை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள்.  
“ இதோட லைஃப் ஸ்டைல் இண்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும் மச்சான். 
இது நம்பள மாதிரி மனுஷங்க வந்து போற இடதுக்கு பக்கத்துல தான் இருக்கும். ஆனா ரொம்ப பக்கத்துல இருக்காது. 
இந்த மாதிரி மண்பாதையில இருக்குற இடத்துல பொந்து வச்சு அங்க தான் தங்கும். குஞ்சு பொறிச்சதும் பொந்துக்குள்ளயே குஞ்சு குருவிய பார்த்துக்கும், அப்புறம் இந்த பொந்துக்கு பக்கத்துல ஏதாவது மனுஷங்க வந்து டிஸ்டர்ப் பண்ணா அதோட குஞ்சு குருவிய பாதுகாத்துக்கறத்துக்காக அவங்கள டைவேர்ட் பண்ணும். அவ்ளோ இண்டெலிஜெண்ட் அது.
இப்போ ஸ்ரீ அதோட பொந்துக்கு பக்கத்துல போனதும் அதோட ஃபேமிலிக்கு ப்ராப்ளம் வரும்னு நினச்சு கொஞ்சம் கொஞ்சமா முன்ன முன்ன அங்க இங்கனு பறந்து தரையில உட்கார்ந்து ஸ்ரீயோட கவனத்த திருப்பி இவ்ளோ தூரம் தள்ளி கொண்டு வந்துடுச்சு. இப்போ பொந்துக்குள்ள அதோட குஞ்சு சேஃப். 
அதோ அங்க பின்னாடி பாரு அதோட பொந்து எங்க இருக்குனு. “ என வாசு சொல்ல, அவன் சொன்னபடியே பொந்து இவர்கள் பின்னால் சற்று தள்ளி இருந்தது. 
இப்போது தான் பத்மா வாசுவை பார்த்தாள், ‘ ரொம்ப பேசுற டா ‘ என செய்தி சொல்லியது அவள் பார்வை. ஆனால் அவனிடம் பேசவில்லை.
“இத பத்தி நம்ப ஊர் வைல்டு லைஃப் பத்தின எக்ஸ்பர்ட்ஸ் ஆர்டிக்கல்ஸ் எழுதுறாங்க. அதுல படிச்சேன் மச்சான்.  “ என கார்த்தியிடம் சொல்வது போல் பத்மாவை பார்த்து சொல்ல, ஸ்ரீபத்மா இவனை கண்டுகொள்ளாமல் அந்த குருவியை சுற்றி சுற்றி போட்டோ எடுக்க ஆரம்பித்துவிட்டாள். வாசுவிற்கு தன்னிடம் ஏதேனும் கேள்வியாக ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறாளே என பீலிங்க்ஸ் ஆகி விட்டது. 
பிறகு கார்த்தியுடன் நேரம் செல்ல வாசுவிற்கு ஸ்ரீபத்மாவிடம் தனியாக பேச வாய்ப்பே அமையவில்லை.  
பிறகு ஆச்சி எல்லாம் தயார் செய்து சாமி கும்பிட கூப்பிட, அனைவரும் அங்கே சென்று சாமி கும்பிட்டுவிட்டு வர, அன்னதானம் ஆரம்பித்தது.  
கார்த்தி, தேனு, வாசு, பத்மா, ஜெயா, கிருபா, மணி என பரிமாற எல்லாம் நன்றாகவே நடந்தது. அன்னதானம் நடப்பது தெரிந்து மக்கள் வந்துக்கொண்டே இருக்க, எல்லாம் தயாரித்துக் கொண்டே இருந்தனர். 
  எல்லாம் முடித்து கிளம்ப மாலையாகி விடும் போல் இருக்க, வீட்டின் பெரியவர்கள் சிவசு தாத்தாவும் சுந்தரி ஆச்சியும் அத்தனை நேரம் காத்து மூன்றரை மணி நேரம் மீண்டும் வேன்னில் திரும்புவது அலைச்சல் ஆகிவிடும் என தெரிந்து மதியம் இரண்டு மணி போல் அவர்களை தனியாக கார் பதிவு செய்து ஊருக்கு அனுப்பிவிட்டான் வாசு. அந்த காரில் இன்னும் நான்கு பேர் வரை செல்ல இடம் இருக்க, அவர்களுடன் கோதண்டம், சுந்தரம், சிவகாமி எல்லாம் சென்றிருந்தனர். சிவகாமி செல்லும் போது ஸ்ரீபத்மாவையும் அழைக்க, கார்த்தியுடனும் தேனுவுடனும் வருவதாக சொல்லிவிட்டாள். 
அன்னதானம் எல்லாம் முடிந்து கிளம்ப மாலை நான்கு மணியாகி விட்டது. அன்று விடியலிலே புறப்பட்டதால் நல்ல தூக்கம் வர, கிளம்பிய அரை மணி நேரத்தில் எல்லாரும் உறங்க ஆரம்பித்து விட்டனர் .
தேனு கட்டிலில் தூங்க, அவளுக்கு கீழே அண்டாக்கல் இருந்த மிக அளவான இடதில் சீதா ஒரு விரிப்பை விரித்து படுத்துக்கொள்ள, பின் சீட்டில் கார்த்தியும் வாணி அதையும் உறங்க, படிக்கட்டிற்கு அருகே உள்ள இருக்கையில் ஸ்ரீபத்மா உறங்க, அவள் பின்னே ஜெயா என எல்லாம் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.  
இப்போது மணி வண்டி ஓட்ட அவன் அருகில் கிருபா உறங்கி இருந்தான். முன்னே உட்கார வாசுவிற்கு இடம் போதவில்லை, அதனால் அவன் பாதியில் இறங்கி வண்டியின் படிக்கட்டில் அமர்ந்துகொண்டான். வாசுவிற்கும் தூக்கம் தான் ஆனால் படுக்க அங்கே இடம் இல்லை. 
வேன்னில் சவுண்ட் சிஸ்டம் பாடல் இசைக்க, முகத்தை தொட்டு செல்லும் இளம் காற்றுக்கும், காதில் விழும் மென் இசைக்கும் ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை, அதன் பிறகு ஏதோ விவசாயம் பற்றிய விவரம் ஏதோ மொபிலில் படித்து மேலும் ஒன்றரை மணி நேரம் சென்றது. அது முடிந்ததும் தான் அவனுக்கு நேரமே தெரிந்தது. இன்னும் ஒரு மணி நேரம் தான் இவர்கள் ஊர் வந்துவிடும். 
அப்படியே தலைக்கு பின்னால் கை வைத்து அங்கே இருந்த அண்டாவில் சாய, ஸ்ரீயின் கால்கள் தொப்பென கீழே இவனின் தோளில் விழுந்தது. இவன் அதிர்ந்து ஸ்ரீயை பார்க்க, அவள் நல்ல உறகத்தில் கால் நீட்ட, அது இவன் தோளில் விழுந்தது. அது அப்படியே கீழ விழ பார்க்க, அவள் கால்களை பிடித்து அவன் மடியில் வைத்துக்கொண்டான். 
எங்கே விழித்து விட்டாளோ என பார்க்க அவள் நல்ல உறக்கத்தில். அவன் மடியில் இருந்த அவள் கால்களை பார்க்க, அதில் கொலுசு அணிந்திருந்தாள், அவளுக்கு அதிக உடல் சூடு எப்போதும் இருக்கும், அதனால் பாதம் சுற்றி மருதாணி வைத்திருந்தாள். அவள் கால்களுக்கு அது நன்றாக இருந்தது. 
“ ஏன் என்கிட்ட பேச மாட்டிங்குற.  தெரியாம தானா செஞ்சுட்டேன். அதுக்குனு என்கிட்ட பேச மாட்டியா. சாரி ராங்கி. “ 
என வாசு அவள் கால்களிடம் பேச, லேசாக மழை சாரல் வேறு, ஷட்டரை இழுத்து கதவை மூடியவன், அதன் வழியாக இன்னும் சிறிது சாரல் வருவதை பார்த்து, இவன் அங்கே கிடந்த ஏதோ ஒரு துணியை எடுத்து இவள் கால்களில் சாரல் விழாதவாரு போர்த்தி, அவளது தாவணியின் ஸ்கர்ட் விலகாதவாரு நன்றாக இறுக்கி போர்த்தி, அதன் மேல் இவன் கைகளை பாதுகாப்பாக வைத்து, பொத்தி வைத்துக்கொண்டான். 
ஒரு ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருந்தான். பிறகு சாரல் குறைந்து நின்றே விட்டது. அதன் பிறகு ஷட்டர் ஏற்றி விட்டு அமர்ந்து அவள் கால்களை மறுமுறையும் தூக்கி மடியில் பத்திரமாக பஞ்சு போல் எடுத்து வைத்துக்கொண்டான். 
ஒரு இரண்டு நிமிடம் சென்றிருக்கும், அவன் மடியிலிருந்த இடது கால் தானாக மேலேறி அவன் கண் முன் சுற்றி சுளுக்கு எடுக்க, அதன் பின் தான் வாசு ஸ்ரீயின் முகத்தை பார்க்க, அவள் கண் விழித்து இவனை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தாள். 
அதை பார்த்ததும் இவன் அவள் கால்களை எடுத்து உடனே கீழே வைத்து, வெளியே பார்க்க ஆரம்பித்து விட்டான்.  ஸ்ரீ திரும்பி பின் பக்கம் பார்க்க, அனைவரும் அசந்து உறங்கி இருந்தனர். ஸ்ரீ எழுந்தவள் அவனது அருகே படிக்கட்டில் வந்து அமர்ந்தாள். 
அவன் உடனே எழுந்து விட்டான்.
“ ஏய் என்ன பண்ற, முதல எந்திரி. யாராவது பார்தாங்கன்‌னா என்ன செய்வ. எந்திரி முதல. “ என வாசு அடி குரலில் சத்தமிட, 
“ யாராவது பார்த்தாங்கன்னா, நீங்க என் கால் கிட்ட சாரி கேட்டுட்டு இருந்திங்கனு சொல்றேன். “
“ ஏய் வாய பாரு, நான் ஒன்னும் கேக்கல, நீயா எதாவது உளராத. “  
“ அப்படியா மாம்ஸ், உங்க தோள் மேல வேணும்னு தான் கால் போட்டேன். என்ன பண்றிங்கனு பார்த்தா, கால் கிட்ட சாரி கேட்டுட்டு இருக்கிங்க. 
அப்புறம் சாரல் அடிக்கமா கால்க்கு துணி போர்த்துவாறாம், ஷூட்டர் சாத்துவாரம், அப்படியே கை வச்சு மறச்சுபாறாம். 
என்ன ஒரு பெர்ஃபார்மன்ஸ்… “ என சொல்லி ஸ்ரீ புன்னகைக்க, 
வாசு அதிர்ச்சியாக, “ அப்போ நீ தூங்குனா மாதிரி சும்மா உட்காந்திருந்தியா.“
“ மாம்ஸ் மொக்க போடத்திங்க. அத தானா முதல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன். மறுபிடியும் ஷாக் ஆனா எப்படி.. “
வாசு குனித்த தலையுடன் அப்படியே ஒரு படி விட்டு கீழே பாவமாய் உட்கார, 
“ மாம்ஸ் நீங்க ரொம்ப படிப்ஸ் போல இருக்கே. “
“ அப்படியெல்லாம் இல்ல…” என வாசு உம்மென்று கூற, 
“ அதான் அப்போ அப்போ முழுச்சு பார்த்தேன்னே . ஒன்னா சாங்க் கேக்குறிங்க, இல்லைனா ஏதோ ஆர்டிக்கள்ஸ் படிக்கிறிங்க. அதுவும் பக்கத்துல யார் தூங்காம இருக்காங்க அப்படினு நிமிந்து கூட பார்க்காம. “
“ அப்படியெல்லாம் இல்ல, நீ தூங்குன அதான் அப்படியே உட்கார்ந்துட்டேன். “ என இவன் வெளியே பார்த்து சொல்ல,
“ சும்மா உடான்ஸ் விடாதிங்க. நான் முழுச்சிருந்தாலும் இப்படி தான் பண்ணிருபிங்க. “
வாசு இப்போது இவளை முறைக்க,
“ கோச்சிக்கிட்டா…வந்து சமாதானம் செய்ய தெரியரதில்ல. இந்த முரப்ஸ் ஒன்னும் குறச்சல் இல்ல. “
“ நான் தான் ஃபர்ஸ்ட் டைம் சாரி கேட்டேனே. நீ தான் பேசமாட்டேன் சொல்லிட்டு போய்ட்ட “ வாசு அவளை பார்க்காமல் விறைப்பாக சொல்ல,
“ அப்படி போன அப்படியே விட்டுடுவிங்களா. “ இப்போது ஸ்ரீ முறைக்க,
“ எப்படி உன்கிட்ட பேசறதுனு தெரில, ஃபர்ஸ்ட் டைம் என்கிட்ட கோச்சிக்கிட்ட, அதான் எப்படி உனக்கு புரியவைக்கறதுனு தெரில. “ என உண்மையாகவே உணர்ந்து மெல்லச் சொல்ல,
“ இப்படி பச்ச மண்ணாஆஆ இருந்தா எப்படி. நீங்க இன்னும் வளரனும் மாம்ஸ். இதுக்கெல்லாம் தனியா ட்ரைனிங்கா குடுக்க முடியம் “ என ஸ்ரீ புன்னகைத்து சொல்ல,
“ பச்ச மண்ணுனு சாதாரணமா நினைக்காத ஸ்ரீ. 
அது தான் எந்த உழவும் போடாம தானா விளையும், மலை பகுதில இருக்கும். அது பழம், காய் எல்லாம் தானா தரும். மனுஷங்க உழைப்பே பெருசா தேவை இல்ல. 
நம்ப இப்போ விவசாயம் பண்ற நிலத்த அந்த காலத்துல வெந்த மண்ணுனு சொல்லுவாங்க. அந்த காலத்துல வெந்த மண்ணுல எப்படி காய் விளையும்னு அதிசயமா கேட்பாங்க. 
மனுஷனோட முதல் நவீன புரட்சியே வெந்த மண்ணுல உழவு பார்த்து விவசாயம் பண்ணுனது தான். அப்படி அவங்க விவசாயம் பார்த்த நிலத்துல தான் இப்போ நம்ப விவசாயம் கன்டின்‌யு பண்றோம். 
அக்ரி ரிலேடெட்டா வந்த பண்டிகை தான் எல்லாம். பொங்கல் ஆரம்பிச்சு எல்லாம். “ என வாசு விளக்க ஆரம்பித்து விட்டான்.  
ஸ்ரீ அருகில் இருந்த கம்பியில் நொந்து போய் தன் தலையை சாய்க்க , 
“ ஸ்ரீ என்னாச்சு தலை வலிக்குதா. இரு ஆச்சி ரெடி பண்ண தைலம் வச்சிருக்கேன். இரு தரேன் “ என சின்சியராக எடுக்க எழுந்தான். 
“ மாம்ஸ் இப்போ நீங்க உட்காரல அப்படியே வெளியே குதிச்சிருவேன். “ என ஸ்ரீ மிரட்ட,
வாசு புரியாமல் உட்கார்ந்தான்.
“ மாம்ஸ் நீங்க எப்பவும் இப்படி தான.
 இல்ல என்கிட்ட பேசும் போது மட்டும் இப்படி ஸிபீச் குடுக்க ஆரம்பிச்சிடுவிங்களா “ என ஸ்ரீ சீரியஸ்ஸாக கேட்க, இப்போது தான் வாசுவிற்கு அவள் தொனி புரிந்தது.
காண்டாகி போனவன் “ உன்கிட்ட எல்லாம் போய் சொன்னேன் பாரு, என்ன சொல்லணும். போய் மேல உட்காரு. “ என ஸ்ரீயை கடிந்தான்.
“ ஓகே ஓகே கூல் மாம்ஸ். 
நீங்க பெரிய அக்ரி பையன் தான் ஒத்துக்குறேன். அதுக்குனு இப்படி கிடச்ச கேப்புல எல்லாம் ஸ்பீச் குடுத்தா எப்படி. 
மீ பாவம்ல. “ என ஸ்ரீ இறங்கி வந்தாள். 
இப்போதும் வாசு மலை இறங்காமல் இருக்க, 
“ மாம்ஸ்…”
“_____” அவன் பேசாமல் திரும்பிக்கொள்ள, 
“ டேய் வாசு…” இப்போது இன்னும் கொஞ்சம் சத்தம் கூட்டினாள்.
“ கொழுப்புடி உனக்கு எல்லாம்… எல்லார்தையும் சத்தம் போட்டு எழுப்பாத. “ என ஸ்ரீயை பார்த்து வாசு அடிக்குரலில் கடிய, 
“ ஓஹ் ஓகே ஓகே…அப்போ மெல்லமா பேசவா “ என இவள் ஹஸ்கி வாய்ஸ்ஸில் மெதுவாக கேட்க, 
“ நீ பேசவே வேணாம். போய் மேல உட்காரு. “ கை எடுத்து கும்பிடாத குறையாக வாசு சொல்ல,
“ நோ மாம்ஸ். உங்க கிட்ட ஒரு முக்கியமான கேள்வி கேட்கணும் அதான் கூப்பிட்டேன்.”
“  என்ன கேட்கணும் உனக்கு “  என இவன் புருவத்தை தூக்கி மிரட்டுவது போல் கேட்ட, 

Advertisement