Advertisement

அந்த மாதம் இறுதியில் சனி கிழமைக் காலை திருச்சிக்கு வந்து சேர்ந்தாள் ஸ்ரீபத்மா. வந்ததும் அப்படி ஒரு புத்துணர்ச்சி. சொந்த மண்ணினில் பயணம்  ஒரு அலாதியான உணர்வு .
வீட்டில் உள்ளே அடி வைத்தாள் ஸ்ரீ  
“ ஹேய் பேத்துக்குட்டிடிடி …”
நிமிர்ந்து பார்த்த தேனுவிற்கு ஆச்சர்யம் , ஸ்ரீ இன்று வருவாள் என எதிர்பார்க்கவில்லை, ஸ்ரீ சொல்லி கார்த்தி மறைத்து விட்டான்.
சந்தோஷமாக எழுந்து ஸ்ரீயின் அருகே வர, தேனுவின் கையை பிடித்து ஆட ஆரம்பித்து விட்டாள் ஸ்ரீ.
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
என்று ஆடிக்கொண்டே தேனுவின் விரல்களை பிடித்து அவளை மெலிதாக ஆட உந்த, தேனுவிற்கு சிறு வெட்கம் ஆனால் ஆட ஆசையாக இருந்தது , ஹாலில் யாரும் இல்லை என்பதை சுற்றி பார்த்து விட்டு, அவளும் மென்மையாக ஸ்ரீயுடன் ஆட ஆரம்பித்து விட்டாள்.
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
என பாடிக்கொண்டே கார்த்தி  இவர்கள் ஆடுவதை பார்த்து , தேனுவிற்கு பின்னால் சிரித்து நின்றான். தேனுவிற்கு வெட்கம் வந்து ஸ்ரீயின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
“ அண்ணா…கலக்குற…இந்தா இப்படியே ஃபாலோ பண்ணிக்கோ “
 என ஸ்ரீ தேனுவை வம்படியாக பிடித்து கார்த்தியின் கையில் கொடுத்து, அம்மாவின் அறைக்கு சென்றாள். அம்மா அப்பா இருவரும் விடியலிலே அவர்கள் வயலுக்கு சென்று விட்டனர். இருவருக்கும் இவள் வருவது தெரியாது, கார்த்தியை சொல்ல வேண்டாம், சர்ப்ரைஸ்ஸாக இருக்கட்டும் என்று சொல்லி விட்டாள் . இங்கே வந்து பார்த்தால் ஆளை காணோம். பொக்கென்று போய் விட்டது ஸ்ரீக்கு . சரி அவர்கள் வரட்டும் நாம் தயார் ஆவோம் என மேலே அவள் ரூமிற்கு சென்றாள்.
எல்லாம் தயாராகி கீழே வரவும், ஹாலில் அம்மா அப்பா தேனு கார்த்தி எல்லாரும் காஃபி அருந்தி கொண்டே ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.
ஸ்ரீ அவளின் அப்பாவின் பக்கம் வந்து சம்மனமிட்டு அமர்ந்தாள்.  
“ என்ன சிரிப்பு எல்லாம் பலமா இருக்கு .
 ம்மா உன் பொண்ணு வந்துருக்கேன். இங்கே இப்படி சிரிச்சிக்கிட்டு இருக்க, ஒரு ஷாக் காணோம், சர்ப்ரைஸ் ரியாக்சன் காணோம் “
ப்பா என்னப்பா நீங்களும் இவங்க கூட சேர்ந்துட்டிங்களா. “ என வந்ததும் வரததும் அவரை கோதவில் இழுத்தாள்.
சுந்தரம் “ பத்து , ஒரு தடவ ஷாக் ஆகலாம். நீ தான் அடிக்கடி இப்படி வந்து நிப்பியே. அதான் இங்கேயே உட்காந்துட்டோம் .
எத்தன தடவ தான் நம்பலும் சர்ப்ரைஸ் ஆகுற மாதிரி நடிக்கிறது. “ என சுந்தரம் சிரித்து சொல்ல,
 “ ஹப்பா டா இன்னைக்கு தான் பத்து உங்க அப்பா உன்ன பத்தி உண்மைய சொல்லிருக்காரு.
ஏங்க உங்க நேர்ம ரொம்ப நல்லா இருக்குங்க. “  சுந்தரத்தையும் பத்மாவையும் சேர்த்து சிவகாமி வார, தேனு கேக்க பொக்கே என சிரித்தாள்.
தேனுவை கண்கள் சுருங்க பார்த்த ஸ்ரீ , “ எல்லாம் என் அண்ணியோட வேலையா. சர்ப்ரைஸ் போட்டு உடச்சிட்டாளா .
 உன்ன சும்மா விட மாட்டேன் புள்ள. “ என கண்களை உருட்டி மிரட்டினாள்.
“ அம்மா இன்னைக்கு காலையில பூரி போடுங்க ம்மா. மதியம் வெஜ் பிரியாணி வேணும், கூட தொடுக்க ஏதாவது நல்லா பண்ணுங்க. அப்புறம் நைட்க்கு என்னனு அப்புறம் சொல்றேன். “ என ஸ்ரீ வரிசையாக அடுக்கினாள்.
“ ஆள பாரு வந்ததும் மெனு சொல்றத. ஒழுங்கா சமைக்க கத்துக்க, வர்ற மாப்பிள்ள உனக்கு செஞ்சு போடா மாட்டாங்க, நீ தான் செய்யணும். அதுக்காச்சும் கத்துக்க. “ என சிவகாமி சொல்ல,
“ மம்மி இப்போ எல்லாம் பசங்க சூப்பர்ரா சமைக்கிறாங்க. அதனால நான் எனக்கு வர மாப்பிள்ள கிட்டாயே சமைக்க கத்துக்கிறேன். நீங்க இன்னைக்கு இதெல்லாம் ரெடி பண்ணுங்க. “ என இவள் விடுவேணா என பேசினாள்.
அதற்குள் சுந்தரதிற்கு ஏதோ மொபைல் அழைப்பு வர உள்ளே எழுந்து சென்றார்.
“ நினப்பு தான், வர மாப்பிள்ள நல்லா குமட்டுலயே இடுச்சு சொல்லி தருவாங்க. அப்போ நீ எப்படி கத்துக்கரனு நானும் பாக்குறேன்.
சரி பின் பக்கம் நம்ப தோட்டத்துல போய் ரெண்டு வெங்காயம் எடுத்துட்டு வா. இப்போவே செய்ய ஆரம்பிச்சா தான் சீக்கிரம் செய்யலாம். “ என சிவகாமி சொல்லி கிச்சனில் நுழைந்து விட்டார்.
கார்த்தி, “ பத்து “
ஸ்ரீ, “ யெஸ் ப்ரோ “
கார்த்தி, “ இந்த பிங்க் கலர்ல ரவுண்ட்டா உன்ன மாதிரியே இருக்குமே அதுக்கு பேரு தான் வெங்காயம்.
எங்க கரெக்ட்டா நம்ப தோட்டத்துல பறிச்சு எடுத்துட்டு வா பார்ப்போம். “
அவ்வளவு தான் கார்த்தியின் மேல் பாய்ந்து அவன் முடியை பிடித்து ஆட்ட ஆரம்பித்துவிட்டாள் பத்மா.
தேனு, “ அப்படி தான் நல்லா ஆட்டு ஸ்ரீ  …ம் அப்படி தான்…விடாத” என உற்சாகமாகி கை தட்ட ஆரம்பித்து விட்டாள் .
“ அடி பொண்டாட்டி நான் உன் ஹஸ்பண்ட்…என்ன காப்பதமா கை தட்டுற நீ…” என கார்த்தி தேனுவை இழுக்க, தேனுவும் சேர்ந்து கார்த்தியின் கைகளை இறுகப்பிடித்து கொண்டாள். அது ஸ்ரீக்கு வசதியாக போக இன்னும் கார்த்தியை அடிக்க ஆரம்பித்து விட்டாள்.  அப்படியே தேனுவும் இது தான் சாக்கு என அருகில் சோபாவில் இருந்த சின்ன தலையணையை எடுத்து கார்த்தியை அடித்தாள். ஒரே நேரத்தில் இரு பக்க தாக்குதல். கார்த்தி இருவரிடம் இருந்தும் தப்பிக்க போராட, தேனுவிற்கும் ஸ்ரீக்கும் அப்படி ஒரு சிரிப்பு .
“ என்ன காப்பாத்த யாருமே இல்லையா…அம்மா…” என  கார்த்தி கூப்பிட்ட அடித்த நொடி,
“ நான் இருக்கேன் டா மச்சான்…” என வாசலில் புன்னகையுடன் நின்றிருந்தான் வாசு.
அவனை பார்த்ததும் தேனு மகிழ்ச்சியாக அவனை நோக்கி ஓடி விட்டாள்.
“ ஹேய் பார்த்து மெதுவா வா தேனு…” என வாசு அவளை அதட்ட,
ஸ்ரீ கார்த்தியை அடிபதை நிறுத்தி விட்டு நல்ல பிள்ளை போல் அமைதியாக நின்றிருந்தாள். கார்த்தி இவர்களிடம் இருந்து தப்பித்தவன் வாசுவை வரவேற்றான்.
“ வா மச்சான்..வா வா…எப்படியோ இவங்க கிட்ட இருந்து என்ன காபத்திட்ட…
என்னோடது பிஞ்சு மூஞ்சுனு கூட பக்கமா என்னை அப்படி அடிகாரங்க டா ரெண்டு பேரும். “     
“ அதான் வந்துட்டேன்ல மச்சான் பார்த்துக்கலாம் யாரு உன் மேல கை வைக்கிறங்கனு. “ என தேனுவையும் ஸ்ரீபத்மாவையும் ஒரு சேர பார்த்து சொல்ல, ‘ என்கிட்டயவா ‘ என்ற ரீதியில் வாசுவிற்கு யாரும் அறியாமல் ஸ்ரீயின் கண்கள் பதில் சொல்லியது.
வாசுவின் கையிலிருந்த கூடையை பறித்த தேனு அதில் என்ன இருக்கிறது என தேட, ஒரு தூக்கு வாளி , அதில் பாதியளவு சீம்பால் இருந்தது. தேனுவிற்கு மிகவும் பிடிக்கும்.
“ அளவா சாப்பிடு தேனு…” என கார்த்தி அக்கறையாய் தேனுவிடம் சொல்ல, சரி சரி என தலையை ஆட்டிவிட்டு கிச்சன்னிர்கு எடுத்து சென்றாள்.
“ இரு மச்சான் வந்துறேன் “ என வாசுவை தனியாக விட்டு அவன் அறைக்கு ஏதோ எடுக்க சென்றான் கார்த்தி.
“ ஹலோ மாம்ஸ்… எப்படி இருக்கிங்க…என்னை பாக்கமா இளச்சிட்டிங்க போல…” என ஸ்ரீ உற்சாகமாக அவனிடம் கேட்டாள். அவன் பதில் சொல்வதற்குள் கிச்சன்னிலிருந்து சிவகாமி காஃபியுடன் வந்தார்.
“ வாங்க தம்பி…நல்ல இருக்கிங்களா…என்ன போன தடவ பார்த்ததுக்கு இப்போ இளச்சிட்டாப்புல இருக்கு. “ என விசாரித்து கொண்டே காஃபி கொடுத்தார்.
‘ இதை தானடா நானும் கேட்டேன். ‘ என ஸ்ரீபத்மாவிற்கு ஒரு சிரிப்பு, ஆனால் வெளியே கட்டிக்கொள்ளாமல் அடக்கினாள். ஆனால் வாசுவிற்கு தெரிந்தது.
“ இல்ல அத்த கொஞ்சம் வேல, அலச்சல். “
“ வேலை எல்லாம் எப்பவும் இருக்கும். நம்ப உடம்ப நம்ப தான் தம்பி பார்த்துக்கணும். காடு , வயலு, தோப்பு , கடைனு எத்தன தான் தனியா பார்பிங்க. “ என வாசுவிடம் கேட்டவர், ஸ்ரீயிடம் திரும்பி “ போய் ரெண்டு வெங்காயம் பறிச்சிட்டு வா. “ என பின் தோட்டத்திற்கு அனுப்பினார்.
“ அதில்ல அத்த, நம்ப பசங்க ரெண்டு பேரும் கூட இருக்காங்க. அவங்க கூட மாட எல்லாம் பண்ணுவாங்க. இந்த தடவ கடை வேலயோட வேற வேலையும் சேர்ந்துடுச்சு. கொஞ்சம் அதிக அலச்சல் அவ்ளோ தான். “
“ ஏன் தம்பி நான் ஒன்னு கேள்வி பட்டேன். நீங்க…”
என்ன கேட்க போகிறார் என ஒரு நொடி யோசித்தான், “ சொல்லுங்க அத்த…எதுவா இருந்தாலும் சொல்லுங்க. “ என உரிமையாய் ஊக்கினான்.
“ அதில்ல தம்பி நம்ப ஊருக்குள்ள இருக்க கல்யாண மண்டபம் நீங்க விலைக்கு பேசுறிங்கனு நம்ப கார்த்தி சொன்னுச்சு…“
‘ ஹப்பா டா, இது தானா ‘ என ஆசுவாசமானவன், “ ஆமா அத்த, மண்டபம் கேட்டு வச்சிருக்கேன். விலை தகஞ்சு வர மாதிரி இருக்கு. வந்தா வாங்கலாம்னு இருக்கேன்.
அது விஷயமா தான் கார்த்தி பேங்க்ல லோன் கேட்டுருக்கேன். பேங்க்ல சேங்க்ஷன் பன்னாங்ன்னா அட்வான்ஸ் குடுத்துடலாம்னு இருக்கேன்  “ உள்ளதை அப்படியே சொன்னான்.
“ நல்லபடியா வாங்குங்க தம்பி. நம்ப குடும்பத்துல நீங்க வாங்குனா ரொம்ப சந்தோசம். “ என உளமாற வாழ்த்தினார்.
உண்மையில் வாசு பத்மாவை திருமணம் முடிக்கும் முன் சிலது செய்ய எண்ணி வைத்திருக்கிறான். அதில் ஒன்று தான் இது. அவளை கரம் பிடிக்கும் முன் அவன் ஒரு ஆளாய் அங்கே நிற்க வேண்டிய அவசரம். இன்று இல்லையென்றாலும் பின்னாளில் அதை வாங்கும் எண்ணம் உண்டு தான், அதை பொறுமையாக செய்யலாம் என எண்ணியிருந்தான்.
ஆனால் இப்போது அவசரமாக எல்லாம் செய்ய ஆரம்பித்திருக்கிறான். இப்போதே ஒரு மாதம் ஓடி விட்டது. இன்னும் நான்கு மாதங்கள் தான் இருக்கிறது. ஏற்கனவே இவன் குழு வேறு ஒன்றில் இறங்கி எல்லாம் ஆரம்பித்து விட்டனர். அது வேறு தனியாக இருக்கிறது.
ஆனால், என்று பத்மா காத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டாளோ, அன்றிலிருந்தே ஒரு கூடிய பொறுப்புணர்ச்சி, அவளுக்காக இன்னும் முன்னேற வேண்டும். அதன் பொருட்டே எல்லாம் விரைவு படுத்தியிருக்கிறான்.
இன்னும் இந்த உணவகம் மட்டும் இல்லாமல் வேறு சிலதும் செய்ய வேண்டும் என எல்லாம் எண்ணி திட்டமிட்டு வைத்திருக்கிறான். முதல் அடியை இப்போது எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டான்.
சொல்லபோனால் அவனிடம் சேமிப்பு தற்போது பெரிதாக இல்லை. அவசரம், அல்லது உணவத்தின் தேவைக்கு என்று தனியாக இருக்கிறது அவ்வளவே. ஆனால் பெரிய அளவில் எதுவும் இல்லை. இப்போதிருந்த ஆரம்பித்தால் தான் எல்லாம் நான்கு மாதங்கள் கழித்து சாத்தியபடும் என்ற எண்ணம். அதை விட கோதண்டம் பேச ஒரு வார்த்தை இடம் கொடுக்க கூடாது என்ற எண்ணம் வழுபெற்றிருந்தது. இத்தனை நாட்கள் எப்படியோ, ஆனால் அவனுடனான ஸ்ரீயின் வாழ்க்கையில் யாரும் அவளை எதுவும் சொல்லி விட கூடாது என பார்த்து பார்த்து எல்லாம் செய்ய ஆரம்பித்திருந்தான்.
அதற்குள் பத்மா வெங்காயும் பறித்து பின் வாசல் வழியே இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.
“ வேலையோட சேர்த்து உடம்பயும் பார்துகங்க தம்பி. நம்ப நல்ல இருந்ததா தான் வீட்ல எல்லார்தையும் நீங்க பார்த்துக்க முடியும்.  “ என முடிக்க, அதற்குள் பத்மா அருகில் இவர்கள் அருகில் வந்திருந்தாள்.
“ ம்மா இந்தாங்க. “ என ரெண்டு வெங்காயம் மட்டும் நீட்டினாள்.
“ அது எப்படி கண்ணு ரெண்டு வெங்காயம் கேட்டா ரெண்டு வெங்காயம் மட்டும் தான் எடுத்துட்டு வருவியா.
என்ன பொண்ணோ. போ போய் இன்னும் பறிச்சிட்டு வா. “ என சிவகாமி ஸ்ரீயை வார,  
வாசுவிற்கு அப்படி ஒரு சிரிப்பு ஆனால் அதை அடக்க முற்பட்டிருந்தான். ஆனால் ஸ்ரீயின் கண்ணுக்கு தப்பாவில்லை. அப்போது அவனை முறைக்க வேறு முடியவில்லை.  
“நீங்க தானா மா ரெண்டு வெங்காயம் கேட்டிங்க. ரெண்டு வெங்காயம்னு கேட்டா ரெண்டு தான் கொண்டு வர முடியும் ம்மா .  “
என இவளும் அவன் முன் இவளுக்கு நடந்த அவமானத்தை துடைக்க முயன்றாள். அதற்குள் சுந்தரம் வந்தவர்  வாசுவை வரவேற்று அவனிடம் உரையாட ஆரம்பித்தார்.
அவர்களை பார்த்தவள், இவனை பிறகு பார்துக்கொள்ளலாம் என தேனுவை தேடி சென்றாள். தேனு கிச்சனில் ஒரே ஒரு சீம்பால் கட்டியை வைத்து கொஞ்ச கொஞ்சமாக பிட்டு சோகமாக சாப்பிட்டுக்  கொண்டிருந்தாள்.
“ என்ன பேத்து அம்மா ஒன்னு தான் சாப்பிடணும்னு சொல்லிடங்களா.”
ஆமாம் என்பது போல் அப்பாவியாய் தலையாட்டினாள் தேன்மொழி.
“ பாப்பா வந்ததுக்கு அப்புறம் நிறைய சாப்பிடலாம். இப்போ அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. உனக்கு ஒன்னு வாங்கிட்டு வந்துருக்கேன். நீ சாப்பிட்டு வா அத பார்ப்பியாம். நான் போய் அண்ணாக்கு சீம்பால் கொடுத்துட்டு வரேன் “
என கார்த்திக்கு தட்டில் வைத்து அவன் ரூமிற்கு விரைந்தாள். அவன் ஆஃபிஸ் வேலை பார்க்கும் ரூமில் இருக்க, அங்கே சென்று அவனிடம் கொடுத்தாள். அவன் அவளை கவனிக்காமல் அப்புறம் சாப்பிடுகிறேன் என சொல்லி விட்டு ஏதோ அவசரமாக ஒரு ஃபைல் எடுத்து ஒரு பேக்கில் போட்டுக்கொண்டிருந்தான்.
“ டேய் அண்ணா…கார்த்தி பையா இது ஒழுங்கா சாப்பிடு. ஆஃபிஸ் வேலையெல்லாம் அப்புறம் பார்பியாம். “
“ ஒரு தடவ சொன்னா கேளு…இது வாசுவோட வேல… அவன் கிட்ட கொடுத்துட்டு அப்புறம் சாப்பிடுறேன். “
“ அப்படி என்ன வேல. “
“ அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது போ. “
அதற்குள் வாசு கிளம்புகிறேன் என சொல்லி செல்ல காத்திருக்க, சிவகாமி வந்து இவனை அழைத்தார்.
எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டான் வாசு. அவன் கிளம்பிய பின் சிவகாமி அவன் மண்டபம் வாங்கும் விஷயத்தை வீட்டில் சந்தோஷமாக பகிர, தேனு, கார்த்தியை தவிர மற்றவர்களுக்கு இது புது செய்தி.
ஸ்ரீபத்மாவிற்கு கூட இது புது செய்தி. அவளுக்கு மகிழ்ச்சி, ஆனால் தன்னிடம் சொல்லவில்லையே என உள்ளே ஒரு மெல்லியே கோபம். நேரில் பார்க்கும் போது பேசிக்கொள்வோம் என விட்டுவிட்டாள்.
அன்று மதியம் வாசுவின் உணவகம் செல்ல, அது பூட்டி இருந்தது. ஆனால் அவன் அரிசி கடை மட்டும் திறந்தது. அங்கே சென்று பார்த்தாள் யாரையும் ஆளை காணவில்லை. வெப்பன் சப்லயருக்கு அழைத்து பார்த்தாள், கிருபா அழைப்பை எற்றான்.

Advertisement