Advertisement

      ஸ்ரீபத்மா, வாசுவிடம் பேசி ஒரு வாரம் மேல் ஆயிற்று . வாசு அவளிடம் ஒரு யோசைனையை முன் வைத்திருந்தான் . அவன் சொல்வதை தேர்ந்தெடுப்பதா அல்லது வேண்டாமா என முழு யோசனை .
இந்த ஒரு வாரம் இவளும் வாசுவிற்கு அழைக்கவில்லை, அவனும் இவளை அழைக்கவில்லை , முழு தேர்வையும் அவளிடம் விட்டுவிட்டான். 
அன்று, 
“ சொல்லுங்க மாமா. என்ன டிசிஷன் ? “ என இவள் ஆர்வமாக கேட்க,
“ தாத்தா புரிஞ்சுப்பார் ஸ்ரீ . பட் அப்பா கண்டிப்பா பொண்ணு கேட்க மாட்டார். அவருக்கும் எனக்கும் டெர்ம்ஸ் சரி இல்ல. கண்டிப்பா ஓகே சொல்லமாட்டார். 
நான் கொஞ்சம் செட்டில் ஆகணும் ஸ்ரீ . 
வீட்டுல பேச சில விஷயத்துக்கு நான் ரெடி ஆகணும். 
நான் இப்போ எடுத்துருக்க சில இனிட்டியடிவ் பிராசஸ் முடிய கண்டிப்பா டைம் எடுக்கும்.
பட் அப்படி நடந்துட்டா, அப்பா கூட என்ன புரிஞ்சுக்க நிறையா சான்ஸ் இருக்கு. அப்போ அவர் பொண்ணு கேக்கலைனாலும் கூட நோ சொல்ல அப்போ அவருக்கு பெரிய காரணம் இருக்காது. ‌
அப்போ எல்லாம் சுமூத்தா போகும். 
உனக்கு மாமா கிட்ட மறைக்கிறது கில்டியா இருக்குனு சொல்ற, ஐ கேண் அண்டர்ஸ்டாண்ட் தட் . 
அப்படி அவ்ளோ மன்த்ஸ் மாமா கிட்ட சொல்லாம இருக்கறது கஷ்டம்னு நீ பீல் பண்ணா, ஒன்னு பண்ணலாம்.
மாமா கிட்ட நான் தனியா பேசுறேன். 
நானா உன்ன கல்யாணம் பண்ண கேக்குறேன். ஒரு ஃபைவ் மன்த்ஸ் வைட் பண்ணுங்கனு அப்புறம் எங்கேஜ்மெண்ட் ஆர் மேரேஜ் எதுனாலும்  வச்சுக்கலாம்னு நான் பேசுறேன் .  
நீ என்ன சொல்ற ஸ்ரீ ? “
ஸ்ரீக்கு உடனடியாக என்ன சொல்வது என தெரியவில்லை.  
“ நான் யோசிச்சு சொல்றேன் மாமா. “
“ ஓகே ஸ்ரீ . நீ டிசைட் பண்ணிட்டு சொல்லு. “ என வைத்து விட்டான். அவனுக்கும் அன்று முழுவதும் இது தான் மனதில் தீவிரமாய் ஓடியது, அவள் எது சொன்னாலும் சரி. அதன் படி செய்து விடுவோம். 
‘ ஆனா ஒரு வேல இம்மீடியட்டா மேரேஜ் மாதிரி ஏதாவது அன்எக்ஸ்பெக்டட்டா வீட்ல சீக்கிரம் டிசைட் பண்ணிடாங்கன்னா,
கல்யாணம் அப்புறம் அப்பா நிச்சயமா வீட்ல என்னை பேசாம இருக்கவே மாட்டார். 
கல்யாணம் ஆச்சுனா, என்னை வச்சு ஸ்ரீக்கு எதாவது பேச்சு வந்துச்சுனா, அப்போ தோட்ட வீட்டுக்கு அவள கூட்டிட்டு வந்துடணும் , அங்கயே இருந்துகலாம். அவள யாரும் எதுவும் சொல்லிட கூடாது.
ஸ்ரீயும் எனக்காக என்கூட கல்யாணம் செஞ்சு வந்து எதுவும் பேச்சு வாங்க கூடாது.    
சீக்கிரம் தோட்ட வீட்ல ஒரு ரெண்டு ரூம் கட்டணும். ‘ என அப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டான். 
அதற்கு தேவையானதை எல்லாம் அவனே பார்த்து கட்டிவிடுவான் . பொருள்கள் எல்லாம் இவன் எப்போதும் வாங்கும் இடத்தில் சொல்லி வைக்க வேண்டும் என நினைத்து கொண்டான். 
அவள் இப்போது எது சொன்னாலும் சரி, இந்த விஷயத்தில் இப்போதே இறங்க வேண்டும் என அந்த பேச்சு வந்த நாளிலிருந்து இப்போது வரை உறுதியாய் இறங்கிவிட்டான். ஆனால் வீட்டில் ஆச்சியிடம் அந்த தோட்ட வீட்டை புதுப்பிப்பது பற்றி சொல்லவும், அவர் இப்போது எதுவும் செய்ய வேண்டாம், அதை அப்படியே நிறுத்திவிடு என்று விட்டார். தேனுவிற்கு குழந்தை பிறந்ததும் தான் எல்லாம் என்று விட்டார். வாசு அதற்கு மேல் தொடரவில்லை, நிறுத்தி விட்டான். என்ன செய்வது என தெரியவில்லை, சரி ஸ்ரீபத்மா சொல்லட்டும் அதன் பின்பு பார்ப்போம் என முடிவு செய்து விட்டான்.
கொச்சின், 
அன்று ஸ்ரீபத்மாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 
வாசு வீட்டின் அவன் நிலைமையை முழுமையாக சொல்லாவிடிலும், அவன் எண்ணியதையும் சொல்லிவிட்டான். இவளுடைய எண்ணமும் தெரிந்து அதற்கும் மதிப்பு கொடுத்து சுந்தரத்திடம் பேச தயாராய் இருக்கிறான். வெறும் வாய் பேச்செல்லாம் இல்லை. உண்மையாலுமே பேசி விடுவான் என இவளுக்கு தெரியும்.
ஆனால் இவ்வளவு நாள் அவன் விருப்பம் வேண்டும் என எண்ணி, காத்திருந்து அதையும் பெற்று. இப்போது எல்லாம் நன்றாக செல்லும் போது, அவனை வற்புறுத்துவது போல் அவளுக்கு தோன்ற, சரி பிறகு யோசிப்போம் என விட்டு விட்டாள்.
ஆனால் இந்த ஒரு வாரமாய் பலதும் யோசித்து விட்டாள். இதற்கு மேல் தானே குழப்பிக்கொள்ள கூடாது. வீட்டிற்கு பேசுவோம் என வீட்டினரிடம் பேசினாள். தேனுவிடம் பேசும் போது ஒன்று தெரிந்தது. அவர்கள் பக்கம்  திருமணம் என்று வந்தால், நிச்சயத்துடன் எல்லாம் நிற்காது, சீக்கிரம் திருமணம் வைத்துவிடுவார். இது தான் அவர்கள் வழக்கம். 
இந்த ஒரு வாரம் காக்கவைத்து இப்போது தான் வாசுவிற்கு அழைத்தாள். அவனும் இவள் எது சொன்னாலும் செய்து விடுவோம் என தான் அழைப்பை ஏற்றான்.
எடுத்ததும் அவள் ‘ நீ எப்படி இருக்கிறாய் ’ என நலம் கூட விசாரிக்கவில்லை, இப்படி தான் ஆரம்பித்தாள்,
“ மாமஸ், எங்கேஜ்மெண்ட் இப்போ தென் மேரேஜ் அப்புறோம் எல்லாம் நம்ப தாத்தா  ஒத்துக்க மாட்டாங்க போல,
வீட்ல சொன்னா  உடனே எங்கேஜ்மெண்ட் அண்ட் மேரேஜ்னு எல்லாம் பேசிடுவாங்கனு நினைக்கிறேன் . தேனு கிட்ட பேசுனப்போ தாத்தா வீட்ல இது தான் பழக்கம்னு சொல்லிட்டா. “
ஸ்ரீக்கும் புரியவில்லை என்ன சொல்வது என, அவளுக்கு தோன்றியதை சொன்னாள், “ இம்மீடியட்டா மேரேஜ்னா கூட எனக்கு ஓகே தான் மாமா . 
மேரேஜ் மட்டும் கூட முடியட்டும், நான் நெக்ஸ்ட் ஃபைவ் மன்த்ஸ் கொச்சின்லயே இருத்துப்பேன். 
நீங்க சொன்ன உங்க விஷயம் எல்லாம் முடிஞ்ச அப்புறம் நான் நம்ப ஊருக்கே ட்ரான்ஸ்பர் வாங்கிக்கிறேன் மாமா. 
நான் அந்த ஃபைவ் மன்த்ஸ்ஸும் சமாளிச்சிப்பேன் மாமா. டிரஸ்ட் மீ. “ அவள் சொல்லும் போது நிச்சயமாக சமாளிப்பேன் என்ற நம்பிக்கையுடன் சொன்னாள்.
வாசுவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. ஒரு புறம் தனக்காக இத்தனை யோசித்திருக்கிறாள் என ஒரு மகிழ்வும், மறுபுறம் நடப்பு தெரியாமல் பேசிக்கிறாளே என தோன்றியது. 
“ ஹேலோ மாமஸ் என்ன சிரிப்பு. “    
“ அது எப்படி கல்யாணம் பண்ணிட்டு உன்ன அங்க தனியா விட்டுடுவாங்களா. நம்ப வீட்ல உன்ன இம்மீடியட்டா இங்க ட்ரான்ஸ்பர் கேக்க சொல்வாங்க.  
மேரேஜ்க்கு அப்புறம் நீ இங்கயே வந்துட்டாலும் எனக்கு ஓகே தான், நானும் என்னடோ விஷயம் கூட இப்போதைக்கு மேனேஜ் பண்ணிப்பேன். 
பட் அப்பா…“ என வாசு நடமுறையை சொன்னான், கடைசியில் அப்படியே தொடராமல் நிறுத்தி, அதை தொடர விரும்பாமல்,  
“ எனக்கு நீ என்ன சொன்னாலும் ஓகே ஸ்ரீ . அது படி பார்த்துக்கலாம். “ என முடித்து அவளை தீவிரமாய் வீடியோ காலில் பார்க்கவும், ஸ்ரீ அவன் விட்ட ‘அப்பா ’ என்ற சொல்லையே நினைத்தவள், சில வினாடிகள் சென்று,
“ ஓகே மாமா. எதுவா இருந்தாலும் ஃபைவ் மன்த்ஸ் கழிச்சே பார்ப்போம். 
நான் ஏதாவது வரன் பத்தி பேச்சு வந்த கூட அப்போ எங்க அப்பா கிட்ட பேசிப்பேன். புரிஞ்சுபாங்க. 
ஐ வில் வைட் ஃபோர் யு மாமஸ். “   என புன்னகையாக முடிக்கவும் வாசுவின் முகாதிலும் ஒரு ஆசுவாசம், அவனுக்கும் தேவையான நேரம் கிடைத்ததே என்ற எண்ணம். அந்த மகிழ்வு அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிய, ஸ்ரீக்கு தான் சரியாக தான் சொல்லியிருக்கிறோம் என தோன்றியது . ஆனால் உள்ளே ஒரு யோசனை ‘ பரவால கல்யாணம் முடிக்கலாம்’ அப்படியென்று ஒரு வார்த்தை அவனிடம் இருந்து வரவில்லை என தோன்றியது. அதை வெளிக்காட்டவில்லை.  
“ மாமா நான் ஒன்னு கேக்கலாமா. “
“ சொல்லு ஸ்ரீ. “
“ உங்களுக்கும் பெரிய மாமாவுக்கும் என்ன பிரச்சன. நான் தெரிஞ்சுக்கலாமா ? இல்ல இப்போ சொல்ல கம்பர்டப்ளா இல்லைனா, வேற ஒரு டைம்ல கூட சொல்லுங்க, ஓன்னும் ப்ராப்ளம் இல்ல.  “ என இவள் நிதானமாக கேட்கவும், 
அந்த பக்கம் வாசுவின் முகம் அமைதியாகி விட்டது. கண்கள் வேறு எங்கோ பார்க்க, சில வினாடிகள் கழித்து ஸ்ரீயை பார்த்தவன்,
“ உன்கிட்ட சொல்ல கூடதுனு இல்ல ஸ்ரீ . இப்போ ஷேர் பண்ண விரும்பல. இன்னொரு டைம் கண்டிப்பா சொல்றேன். இப்போ அதுக்கான டைம் இல்லனு  நினைக்கிறேன். “ அவன் பொறுமையாக சொன்னான்.
என்னதான் ஸ்ரீ விரும்புகிறாள் என்ற போதும், இது அவனுக்கும் அவன் அப்பாவிற்கும் உள்ள ஏதோ கருத்து வேறுபாடு, அதை அழுத்தி கேட்க இப்போது இவள் விரும்பவில்லை.
அவனுக்கான ப்ரைவசி சில விஷயங்களில் சில நேரம் மதிக்க பட வேண்டும் என நினைத்தாள், ஆனால் அவன் மனதில் இருக்கும் கஷ்டத்தை அப்படியே விட மனமில்லை, 
“ இட்ஸ் ஓகே மாமா. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் . இப்போ வேண்டாம்.
பின்ன ஒரு நாள் சொல்லுங்க. ஆனா அப்போ கண்டிப்பா சொல்லணும். நீங்க எந்த கஷ்டமும் மனசுலயே வச்சிக்க கூடாது, நானும் இனிமே உங்க கூட தான், சோ நானும் தெரிஞ்சுப்பேன். 
என்னால முடிஞ்ச வரைக்கும் அத சால்வ் பண்ண உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன். இப்போனு இல்ல, எப்பவும். 
நான் தான் ப்ரபோஸ் பண்ண அப்போவே சொன்னேன்ல, உங்கள கண்கலங்காம பார்த்துப்பேன். “ என இவள் பாவனையாக புருவத்தை உயர்த்தி புன்னகையுடன் சொல்லவும், 
வாசுவிற்கு சிரிப்பு வந்து விட்டது. 
“ என்ன சிரிப்பு…அப்படி என்ன சிரிப்பு…பள்ளு எல்லாம் சுளுக்கிக்க போகுது. “ 
“ டெய்லி ஹோட்டல்ல வெங்காயம் கட் பண்ற அப்போ என் கண்ணுல தண்ணி வரும், அப்போ நீ வந்து என்ன செய்வ ? “
“ மாம்ஸ் நீங்க லவ் பண்ண குவாலிபிகேஷன் இல்லாத ஆளு. எப்போ பாரு ஹோட்டல் ஹோட்டல்லுனுட்டு. 
என்னை ஃகிரேவி பண்றேன்னு சொல்ல வேண்டியது. 
இல்ல யாரையாவது புடிச்சு தரேன் பொரிச்சிடுனு சொல்ல வேண்டியது. 
சரியான ஹோட்டல் கடகாரரு மாமஸ் நீங்க. 
ஆனா நீங்களே என்கிட்ட பொரிவிங்கனு நினச்சு பார்க்கலா தான…ஹா…ஹா…“
“ ராங்கி நீ சின்ன வயசுல இவ்ளோ பேசமாட்ட. இப்போ இப்படி அயிட்ட. “
“ அதெல்லாம் அப்படி தான். நீங்கலாம் அமைதியா ரௌடிஸம் பண்றவங்க…நாங்க எல்லாம் ராவா களத்துல இறங்கிடுவோம். உங்கள மாதிரி இல்ல. நீங்க இன்னும் வளரணும் மாமஸ். ஹா…ஹா… “   என இவள் அவனை வார,
“ ப்பா…முடில…ராங்கி…தயவு செஞ்சு இப்படி டெரரா பேசுறேன் சொல்லி காமெடி பண்ணாத.
நல்ல வேல, சுந்தரம் மாமா உன்ன என்னை மீட் பண்றதுக்கு நிறையா கண்டிஷன்ஸ் போட்டு என்னை காப்பாத்திருக்காரு.
அதனால உன் தொல்லைல இருந்து நான் கொஞ்சம் ரிலீஃப் ஆயிட்டேன். ஹப்பா டா…” என பெரிதாக மூச்சு விட்டு இவன் வேண்டுமென்ற அவளை கடுப்பேத்தினான்.
“ ஓவரா அடாதீங்க மாமஸ்…பின்னாடி உங்களுக்கு நடக்குற சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்ல. “ என இவள் கண்களை உருட்டி சொன்னாள்.
“ நான் உஷார் ஆயிட்டேன் ராங்கி… 
உன்னோட ஆளுங்கனு சொல்லி இங்க ரெண்டு சின்ன பசங்க சுத்திக்கிட்டு இருக்காங்கல, அவங்கள எப்படி கவனிக்கணுமோ, அப்படி கவனிச்சிட்டேன். “ என இவன் இரு கைகளையும் பின்னத்தலையில் வைத்து அசால்டாக சோம்பல் முறித்தான்.
“ மாமஸ் அவங்கள என்ன பண்ணிங்க.
 ஒழுங்கா உண்மைய சொல்லுங்க. “ இவள் அவனை மிரட்ட,
இவன் அவளை லைவ் காலில் பார்த்து எல்லாம் முடித்துவிட்டேன் என்பது போல் கண்களை மூடி திறந்து அழுத்தமாக புன்னகைத்து, “ குட் நைட் “ என சொல்லி வைத்து விட்டான். 
ஸ்ரீ கொச்சின்னில் அவளது வெப்பன் சப்லயர் எண்ணி கலவரமாக அமர்ந்திருந்தாள். 
இத்தனை நாளாக இங்கே ஊரில் கிருபாவும் மணியும் இவனிடம் வசமாக சிக்கியிருந்தனர். இன்று தான் அவர்களுக்கு அளித்த வேலையில் இருந்து விடுதலை செய்திருந்தான் வாசு. அதை நினைத்து சிரித்து அமர்ந்திருந்தான் வாசு.  
அடுத்து நாள் காலை, வாசுவின் உணவகம்,
“ தம்பிகளா….எங்க இருக்கீங்க…” ஆர்பாட்டமாக உள்நுழைத்தான் வாசு.  
“ சொல்லுங்கண்ணா “ முகத்தை தூக்கி வைத்து கேட்டான் கிருபா. மணி வாசுவை ஒரு முறை முறைத்துவிட்டு அவன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தான் .
“ டேய் என்ன டா… குரல் எல்லாம் உள்ள போய் இருக்கு . மறுபிடியும் தோட்டத்துக்கு போறீங்களா டா. “
“ ஏன் ண்ணா நாங்க மிதி வாங்கறது உங்களுக்கு அவ்ளோ சந்தோசமா. “ இப்போது மணி கேட்டுக்கொண்டே வாசுவின் அருகில் வந்தான். 
“ பின்ன இல்லையா டா. நம்ப காளை கிட்ட நீங்க ரெண்டு பேரும் மிதி வாங்கறது பாக்க அவ்ளோ நல்ல இருக்கு டா “ 
“ அண்ணி சொன்ன மாதிரி நான் பண்ணது ஒரு குத்தமா . அதுக்குனு என்னையும் மணியையும் அந்த காளைய பார்த்துக்க சொல்லி விட்டுடிங்க. 
எங்கள தொவச்சு எடுக்குது அது . கேட்டா பழக்கட்டும்னு சொல்லிட்டிங்க. எத்தன உதை தெரியுமா, எத்தன அடி..
.எவ்வளவுவுவு… 
எப்படியோ அது கூட ஃப்ரெண்ட் ஆகுற நேரம் பார்த்துதுது… எங்கள நிறுத்திடிங்க…
கேட்டா இப்போ புது வேலனு சொல்றிங்க.
நீங்க எல்லாம் என் முன்னாடியே நிக்காதிங்க ண்ணா. 
அண்ணி கிட்ட சொல்லி உங்கள முதல டிவோர்ஸ் பண்ண சொல்லணும்.‌ “ என கிருபா அவன் பாட்டிற்கு வாசுவை கடிய, 
“ விடு டா தம்பி…இதுக்கெல்லாம் அண்ணன் கிட்ட கோவிச்சுக்கிலாமா ‌.
இந்த அண்ணனுக்காக இது கூட பண்ண மாட்டிய. அப்புறம் விஷால் வருவான் . மத்ததெல்லாம் அவன் சொல்லுவான். அவன் சொல்ற மாதிரி நீயும் மணியும் பண்ணிடுங்க. இது நமக்குள்ளயே இருக்கட்டும் சரியா  தம்பிகளா. “
“ சரி ண்ணா . அப்படி என்ன ண்ணா வேல. “ 
“ அது எல்லாம் அவன் சொல்லுவான் டா . “ என்று வாசு சொல்லி சென்று விட்டான். 
அன்று மதியம் போல் விஷால் இவர்கள் உணவகத்திற்கு வந்தான். கிருபாவும் மணியும் தான் இருந்தனர். அவனை எப்போதும் போல் உபசரித்து. கடையை வெளியே பூட்டிவிட்டு, வாசுவின் தோட்டத்திற்கு சென்றனர். 
வாசு லோட் அனுப்ப வெளியே சென்றிருந்ததால் இவர்கள் மட்டும் அங்கே இருந்தனர், சுற்றி தோட்டதில் ஆள் இல்லை, மதிய நேரம் எல்லாம் காற்றாட இருந்தது. பெரிதாக யாரும் இல்லை.
மெதுவாக பேச்சை தீவிரமாக ஆரம்பித்தான் மணி  “ சொல்லுங்க அண்ணா…என்ன செய்யணும்…ஏதோ யாருக்கும் தெரியக்கூடாதுனு வாசுண்ணன் சொன்னாங்க. என்ன விஷயம். “
விஷாலும் தீவிரமாகவே சொல்ல ஆரம்பித்தான். இது தான் விஷயம், என எல்லாம் விலகினான். கொஞ்சம் தப்பினாலும் வாசுவின் பெயர் ஊருக்குள் சரிந்து விடும் அபாயம் இருந்தது. ஆனால் நடந்துவிட்டால் அந்த ஊருக்கே ஒரு நல்ல முன்னேற்றம் வரும், அப்படி தான் இருந்தது அந்த விஷயம். 
இருவரும் திகைத்து நின்றிருந்தனர். ஊருக்குள் சொன்னால் யாரும் இதை எளிதாக நம்ப கூட மாட்டார்கள். வாசு மிகவும் தெளிவாக இதை செயலாற்ற இருக்கிறான் என விஷாலின் பேச்சில் நன்றாக தெரிந்தது. 
மணிக்கும் கிருபாவிற்கும் இதை எவ்வாறு எடுத்து செய்வது என தெரிவில்லை. நிச்சயமாக சவால் மிகுந்த விஷயம் தான், கொஞ்சம் பிசக்கினாலோ அல்லது விஷயம் கசிந்தாலோ, வாசு பெயர் ஏகத்துக்கும் ஆட்டம் காணும், இல்லையென்றால் இவர்கள் சேகரிக்க போகும் தரவுகளே உண்மையாக இல்லாமல் பொய்யாக உருமாறும் வாய்ப்பு உண்டு. வாசுவிற்கு அவப்பெயர் கூட வரலாம் .  ‌
கிருபாவும் மணியும் இதை எப்படி கையாள வேண்டும் என படி படியாக சொன்னான் விஷால். எல்லாம் முடிய ஐந்து மாதம் ஆகும். அதற்குள் யாருக்கும் சந்தேகம் வராமல் இதை முடித்தாக வேண்டும் என்று உறுதியாக வாசு நினைத்திருக்கிறான் எனவும் தெளிவுப்படுத்தினான். 
இது முதலில் ஆரம்பித்தது வாசு , இதில் அவன் பங்கு பிரதானமாய் இருக்க போகிறது என புரிந்தது . இதற்குள் முன்பே கார்த்தி இறங்கி இருக்கிறான் எனவும் சொன்னான். விஷால் இதில் பின் இருந்து அனைத்தையும் ஒருங்கிணைக்க போகிறான் எனவும் தெரிவித்தான். கிருபாவும் மணியும் அடிமட்டதில் இருந்து அனைத்தையும் சேகரிக்க போகின்றனர் என சொன்னான். இருவரின் பங்களிப்பு தான் இதில் அடித்தளமாக இருக்க போகிறது எனவும் சொன்னான். இது ஒரு கூட்டு முயற்சி, இவர்கள் குழு வெற்றி பெற்றால், அதனின் தாக்கம் வேறு நிலையில் இருக்கும் என இருவருக்கும் புரிந்துத் துணித்து இறங்கினர். 
  
 
   

Advertisement