Advertisement

நினைவினில் நிறைந்தவளே…
அத்தியாயம் 25
மகியை தனியாக அழைத்த ஹர்ஷ வர்தனா..,,அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்…
“அண்ணா உனக்கு புதுசா வந்த அத்தைய முன்னாதியே தெதியுமா..??” என்று அவளது சிறு மூலையில் உதிர்த்த கேள்வியை தொடுக்க…
” எனக்கு தெரியும் டா ஹர்ஷூ குட்டி ” என்றான் அவள் கேள்விக்கு பதிலாக…
” ன்னா உனக்கு எப்பிடி தெதியும்..???ஆனா நீ தான் அவுங்கத்த தெதியாதுனு தான சொன்ன..?? ” என்க 
” ஆமா டா குட்டி…” 
” ஏன் ன்னா…???” 
” அதுக்கு பதில் எனக்கும் தெரியாது டா குட்டிமா.. நீ சின்ன பொண்ணு இதபத்திலாம் யார் கிட்டயும் கேக்க கூடாது சரியா..??” என்று ஹர்ஷூவின் தலையை வருடிய படியே கூற..
அந்த குழந்தையும் சரியென தலையசைத்தது…
இதை எல்லாத்தையும் திவ்யாவிடம் ஃபோன் பேசிக்கொண்டு இருந்த மீனு கேட்கும்படியாக ஆனது…
இதை யெல்லாத்தையும் மனதிலே வைத்து கொண்டவள்..,, அறைக்கு சென்று மகி பேசியதை நினைவில் வைத்துக் கொண்டே துணிகளை அடுக்க..,, கண்களில் தூசி விழுந்தது போல் இருந்த.., அதே நேரம் கால் தவறி கப்போர்டில் இடித்து கொள்ள..,, செல்வா தன் காதலை நினைவுகளாக வைத்திருக்க வேண்டி .. அவன் வாழ்வில் நடந்த விடயத்தை எழுதின டைரி கீழே விழுந்தது…
அதை கண்ட மீனு..,,அந்த புத்தகத்தை எடுத்து பார்க்க அது டைரி போல் இருக்கவும் அதை திறந்து பார்த்தால்…
அதில் முதல் பக்கத்திலே..,,நினைவினில் நிறைந்தளே..!!! என்றும் அதற்கு கீழ்
என் இதய கூண்டில் 
வசிக்கும் 
என் இதய ராணியின்
நினைவுகள்…
என்றும் எழுதியிருந்தது… அதில் செல்வாவின் கண்ணீர் துளிகள் கூட இடம்பெற்றிருந்தன….
இதனை கண்ட மீனுவிற்கு மனம் வலித்தாலும் ..,, இது அஞ்சலிக்காக எழுதப்பட்டது என்று சரியான நேரத்தில் தவறாக புரிந்து கொண்டாள்…
அடுத்த பக்கத்தை திருப்பி படிக்க தொடங்க ஆரம்பித்தாள் மீனு…
******
(ஃபிளாஷ் பேக் )
வாழ்வின் விடியலை நோக்கிய 
பயணம் என்று அறியாமல் 
இரவு நேர பயணத்தில் ஈடுபட்டேன்….
என் இதய ராணியான அவள் 
என்னை நோக்கி என் பயணத்தில் 
கலந்து கொள்ள ஓடி வந்து கொண்டிருந்தாள்….
என் உதிரம் கூட அவளது ஓட்டத்திற்கு ஏற்ப
என் உடலில் வேகமாக பாய்ந்தது….
எனது கரம் என் அனுமதி இல்லாமல்
அவளின் முன் நீட்ட…..
அவளது கரமும் எந்தன் கரத்துடன் சேர்க்கப்பட்டது…
வாழ்வின் இறுதிவரை உந்தன் கரத்தை விட மாட்டேன் என்ற சத்தியத்தோடு….
இருவரது விழிகளும் இமைக்க மறந்து 
பார்வையாலே எதையோ தேடிக்கொண்டு இருக்க…
இவர்களது தேடலில் இரு மனங்களின் சங்கமத்திற்கான பயணம் அழகாக தொடங்கியது…
அந்த இரவு நேரம் முதல் செல்வாவின் கண்கள் ‌அவளையே தான் இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தது…
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் ,அப்படியே உறங்கியும் போனான்…
செல்வாவை ஒருவர் எழுப்பவே எந்திரித்தவன்..,,” தம்பி கோவை வந்து ஐந்து நிமிஷம் ஆச்சு பா ” என்று சொல்விட்டு சென்றார்…
உடனே பைகளை எடுத்து கொண்டு கீழே இருங்கிய செல்வாவின் கண்கள் மீனுவையே தேடியது… ஆனால் அவன் கண்ணுக்கு படாமல் மீனு சென்றுவிட்டாள்…
அவளை காணாத சோகத்திலே பார்க்கிங் ஏறியா வந்தவனை ஒரு குரல் அழைத்தது…
அந்த குரலை கூட கேட்காத படி நடந்து சென்று கொண்டிருந்த செல்வாவை பின்னாடி இருந்து அவனது முதுகில் பலமாக அடிக்கவே..,, சுயநினைவு பெற்றவன் தன்னை அடித்தது யாராக இருக்கும் என்று கோபமாக திரும்ப…
அங்கே முரளிதரன் கோபமாக நின்று கொண்டிருந்தார்…
” மாமா நீங்க இங்க என்ன பண்றீங்க..???.. அப்பறம் எதுக்கு இந்த குழந்தைய இப்போ அடிச்சீங்க..??இருங்க அக்காகிட்ட சொல்லி தரேன் ” என்று கோபமாக கேட்க…
” அடேய்..!!!உங்க அக்கா காலையிலேயே என்ன எழுப்பி ..தம்பி வரான் போய் கூட்டிட்டு வாங்கன்னு என்ன தூங்க விடாம இங்க அனுப்பி வச்சிட்டா..ஆனா நீ என்னனென்னா நான் காத்து கத்து கத்துறேன் நீ பாட்டுக்கு யாரையோ கூப்பிடுற மாதிரி போற…இதுல உங்க கொக்கா கிட்ட சொல்றேன்னு வேற சொல்ற ” என்று பொறிந்து தள்ளினான் அவனின் அக்கா‌ கணவன்…
“எனது கொக்கா வா..இத மட்டும் நான் என் அக்கா கிட்ட சொன்ன நீங்க அவளோ தான் மாமா.. பாத்துக்கோங்க ” என்று முரளியை கிண்டலடிக்க…
” போடா போ போய் மொதல அத செய்.. இதுக்கெல்லாம் பயந்து போற ஆள் இல்ல நானு… ” என்றான் காலரை தூக்கி விட்ட படி….
உடனே செல்வா தன் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து காதில் வைத்து ” அக்கா மாமா சொன்னத கேட்டியா..??” என்று பேச 
அடுத்த நொடி அதை பிடுங்கிய முரளி ” அச்சோ சக்தி மா நான் சும்மா சொன்னேன் டா .. இதெல்லாம் பெருசா எடுத்துக்காத மா என் செல்லம்ல நீ ” என்று அவன் பாட்டிற்கு பேச செல்வாவிற்கு தான் சிரிப்பை அடக்க முடியவில்லை….
அப்போது தான் முரளிதரனின் மூலையில் பல்ப் எறிய…,,அவனது மொபைலை எடுத்து பார்க்க ,அப்போ தான் தெரிந்தது லைனில் சக்தி இல்லை என்று..
” ஏன்டா இப்படி பண்ண..??? நான் ஒரு நிமிஷத்துல பயந்துடேன் தெரியுமா ” என்றான் கோபமாக …
” நீங்க தான் ஓவரா பேசுனீங்க அதுனால தான் இந்த டீர்ட்மெண்ட் உங்களுக்கு .. அக்கான்னா என்ன அவ்ளோ பயமா மாமா ” என்று அவன் கேட்க…
” டேய்..!!!இதுக்கான பதில் நீ ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வருவீல அப்ப தெரியும் ” என்றான்..
உடனே செல்வாக்கு மீனுவின் முகம் நினைவில் வந்து போனது…
“அத அப்ப பாத்துக்கலாம் மாமா…எனக்கு வர போற பொண்டாட்டிய நான் ராணி மாதிரி வச்சு பாத்துக்குவேன்‌ ” என்றான் பெருமையாக.
” அதையும் தான் பாப்போம்” என்க
” அத நீங்க அப்புறம் பாப்பீங்களாம் இப்ப வந்து வண்டிய எடுங்க ” என்றான்…
” இல்ல டா… ஆதியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான் அவனையும் கூட்டிட்டு வர சொன்னா உங்க அக்கா ” என்க 
அவனும் சரி என்று கூறிவிட்டு பார்வையை சுழல விட்டு கொண்டு இருந்தான்…
சிறிது நேரத்திலே ஆதியும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வர.,மூவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றனர்…
வீட்டிற்கு முன் காரை நிப்பாட்டின முரளி..,,அவர்கள் இருவரையும் இறக்கி விட்டுட்டு காரை ஷெடில் விட சென்றுவிட்டான்…
இவரும் உள்ளே செல்ல அந்த வீடு அமைதி என்ற பேருக்கு பொருத்தம் இல்லாமல் இருந்தது…
” அக்கா இங்க என்ன‌ நடக்குது ” என்று கேட்டுக்கொண்டே செல்வாவும் ஆதியும் உள்ளே வந்தனர்…
“அட நீ ஏன் டா என்ன கேக்குற..??” என்று சலித்துக் கொள்ள
” என்னாச்சு கா எதுக்கு இப்படி சலிச்சுகிறீங்க..??” என்று ஆதி சக்தியிடம் கேட்க..
” அதுக்கு நான் பதில் சொல்றேன் டா ” என்று சொல்லிக்கொண்டே அர்ஜுன் அறையில் இருந்து வந்தான்..
” டேய் அர்ஜூ நீ எப்போ வந்த..??? நைட்டு தான வரேன்னு சொன்ன..ஆனா எங்களுக்கு முன்னாடியே வந்து நிக்கிற ” என்று செல்வா அவனை பார்த்து கேட்க…
” ஆமா டா.. நா நைட்டு வருவேன்னு தான சொன்னேன்..எந்த நைட்டு வருவேன்னு சொல்லலையே ” என்றான் கைகளை விரித்து காட்டியபடி…
இதை பார்த்து செல்வா மற்றும் ஆதி தலையில் அடித்துக் கொண்டனர்…
“சரி டா நாங்க வரும்போது ஏன் வீடு ஒரே சத்தமா இருந்துச்சி..??” என்று ‌ஆதி கேட்க..
” அதுக்கு பதில் நான் சொல்றேன் ” என்று சொல்லி அர்ஜுன் வெளி வந்த அதே ரூம்ல் இருந்து வெளியே வந்தான் மகிலேஷ் .
“டேய்..!!!யாரோ ஒருத்தர் சொல்லுங்க டா ” என்றான் ஆதி சிறு கோபமாக…
“நான் சொல்றேன் ஆதி ” என்று அர்ஜுன் முன் வர ” நான் சொல்றேன் ஆதி ன்னா ” என்று மகி முன் வர…
இருவரும் நான் நான் என்று மீண்டும் அதை வைத்து சண்டையை தொடங்க…
” இப்ப ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா…” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான் முரளிதரன்…
“அண்ணா இந்த ஞாயத்த நீங்களே கேளுங்க ..”என்க 
“சரி சொல்லு ” கை முஷ்டிகளை மடக்கிய படியே சொன்னான்…
“அண்ணா…!!! நான் காலைல சீக்கிரமா எந்திருச்சிட்டேன்னு எனக்காக சக்தி பால் கொண்டு வந்தா…அந்த நேரம் பார்த்து இந்த குட்டி சாத்தான் எந்திருச்சு எனக்காக கொண்டு வந்த பால்ல வாங்கி வேகவேகமாக குடிச்சிட்டான் ” என்று மகியை முறைத்துக் கொண்டே சொல்ல…
இதை கேட்ட மற்ற மூவரும் தலையில் அடித்துக் கொண்டனர்…
“இல்ல இல்ல அர்ஜுன் சித்தப்பா பொய் சொல்லுது ” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு
” நான் எங்க டா பொய் சொன்னேன்..நீ தான் எனக்காக கொடுக்க வந்த பாலை குடிச்ச .. அதுவும் பிரஷ் கூட பண்ணாம ” என்றான் சிறு குழந்தையாகவே மாறி…
“டேய் மகி..!!அப்போ நீ பால்ல பிரஷ் பண்ணாம தான் குடிச்சியா ” என்று சிறு கோபமாக சக்தி கேட்க
மகி திருட்டு முழி முழிக்க…அவனை கண்ட அர்ஜுன் பலிப்பு காட்டினான் …
அவனை முறைத்து விட்டு..,,,” போங்க உங்க எல்லாரோடையும் டூ..நீங்க எல்லாரும் சித்தப்பா சொல்றத தான் நம்புறீங்கள.. நான் பெட்ல தோத்துட்டேன் உங்களால ” என்று கோபித்து கொள்ள…
” டேய்…!!!இங்க என்ன நடக்குது..???” என்றான் செல்வா…
” நானும் சித்தப்பாவும் ஒரு பெட் கட்ணோம் ..அதுல எங்க ரெண்டு பேத்துல யார் சொல்றத நம்புறீங்கன்னு பாக்குறதுக்கு ” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அதே நேரத்தில் கோபமாகவும் சொன்னான்…
” ஏன்டா ” என்பதுபோல் அனைவரும் அர்ஜுனை முறைத்து பார்க்க….
அர்ஜுன் நைசாக அந்த இடத்தை விட்டு அகன்றான்…
” மகி கண்ணா இனி இந்த மாதிரியான பெட்லாம் கட்டி விளையாட கூடாது சரியா ” என்று சக்தி புரிய வைக்க முயற்சித்தாள்.
“சரிங்க மம்மி ” என்று கூறிவிட்டு அர்ஜுன் இருந்த அறையை நோக்கி ஓடினான்…
“இதுக ரெண்டோட தொல்ல தாங்க முடியல பா ” என்று சக்தி சளித்து கொள்ள…
“சரி விடு சக்தி மா..!!!இவுங்க ரெண்டு பேரால தான நமக்கு என்டர்டெயின்மென்ட் கிடைக்குது ” என்றான் முரளி….
” ஆமாங்க ” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்…
அதன் பின் அந்த ஒரு வாரமும் கலகலப்பாகவே சென்றது…
அடுத்த நாள் கல்லூரி என்பதால்…,, அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு செல்ல தயாரானார்கள்….
அர்ஜுனும் ஆதியும் எல்லா துணிகளையும் எடுத்து வைக்க இந்த ஒரு வாரத்தில் மீனுவின் ஞாபகம் செல்வாவிற்கு அப்ப அப்போ வந்து சென்றது….
இது காதல் தான் என்று உணர்ந்தும்…,,அதை அவளிடம் சொல்ல முடியாமல் , ஏன் அவள் எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியாமல் செல்வாவின் மனம் தான் மிகவும் மோசமாக துடி துடித்துக் கொண்டு இருந்தது…
இதை எதுவும் தெரியாத மீனுவோ நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள் அவளது தோழி திவ்யாவுடன்…..
அதன் பின் இரவு நேரமாக மூவரும் கிளம்ப தயாராக..,,மகியை காணாது எங்கே என்று செல்வா சக்தியிடம் கேட்க….
” அவன் எங்க இங்க இருக்க போறான்..பக்கத்து வீட்ல இருக்கிற மீனுவோட சேர்ந்து மோட்டு பட்லு பாத்துட்டு இருப்பான்..இரு நான் போய் கூட்டிட்டு வரேன் ” என்று சொல்லி மீனுவின் வீட்டிற்கு சென்றாள்….
சிறிது நொடிகளிலேயே மகியை அழைத்து வந்தாள் சக்தி….
” டேய் மகி….!!!!மாமா உனக்காக ஒன்னு ஊர்ல இருந்து வாங்கிட்டு வந்தேன்.. சரி அதை குடுக்கலாம்னு பார்த்தா நீ போய் பக்கத்து வீட்டு பொண்ணுக்கூட சேர்ந்து டீவி பாக்குற ” என்று செல்வா அவனை பார்த்து சொல்ல…
” நான் தான் உன்கூட டூ விட்ருக்கேன்ல அது உனக்கு தெரியாதா..???நீ வாங்கிட்டு வந்த எந்த பொருளும் எனக்கு வேண்டாம் ” என்றான்.
” அடேய்..!!! நீ கேட்டது தான் டா வாங்கிட்டு வந்தேன் ” என்க
” எனக்கு எதுவும் வேணாம் ” என்றான் மகி…
” சரி செல்வா…!!!மகி தான் வேணாம்னு சொல்லிட்டான்னே அப்ப அத என்கிட்ட கொடு  நான் வச்சிக்குறேன் ” என்றான் அர்ஜுன்…
” அய்யோ இதுக ரெண்டும் திரும்ப சன்டைய ஆரம்பிக்கிதுங்களே ” என்று மனதில் புலம்பி கொண்டு இருந்தான் ஆதி….
” இல்ல மாமா எனக்காக தான் வாங்கிட்டு வந்தது…மாமா அத என்கிட்ட கொடு எனக்காக தான வாங்கிட்டு வந்த ,சித்தப்பாக்கு தராதா ” என்றது குழந்தை…..
” இப்போ தான் வேண்டாம்னு சொன்ன ” என்று செல்வா புருவங்களை உயர்த்தி கேட்க…
” இல்ல அது எனக்கு‌ வேண்டும் ” என்றான் மகி விடாப்பிடியாக…
” சரி தரேன் ” என்று சொல்லி பையில் இருந்த ரிமோட் காரை எடுத்து கொடுத்தான்….
அதை வாங்கி கொண்ட மகி அவனுக்கு கிஸ் ஒன்று தர., அதை பெற்றுக் கொண்டவன் அனைவரிடமும் கூறி, ஆதியையும் அர்ஜுனையும் அழைத்துக் கொண்டு அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்றான் .
இவை அனைத்தையும் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து இரு கண்கள் கவனித்து கொண்டு இருந்தது….

Advertisement