Advertisement

Episode  24

உள்ளே நடந்து சென்று வாசல் கதவில் கை வைத்தவள் தன் கைக்குள் திறப்பு இருப்பதை உணர்ந்து திறப்பை போட்டு திறந்தாள். 

கதவு லொக் விடுபட்டும் கதவு திறக்காமல் இருக்கவே கதவை தள்ளினாள்.அப்போதும் கதவு திறக்கவில்லை என்ற பிறகு தான் அவளுக்கு உள்ளே தாழ்ப்பாள் போட்டிருப்பது புரிந்தது. 

‘அடக்கடவுளே திறப்பிருந்தும் உள்ளே போக முடியவில்லையே…!’ என யோசித்துக்கொண்டே வீட்டை வெளிப்புறமாக சுற்றி வந்தவள் சைட் பக்கமாக ரெரசிற்கு செல்லும் படிகள் இருக்கவும் அதனருகில் சென்று ‘மேலே போகலாம்’ வாய்க்குள் முனகியபடி ‘மடமட’ படிகளில் காலை வைத்தவள் சற்று தயங்கி நின்று விட்டு பின் வேகமாக மேலே ஏறி சிட்அவுட்டுக்கு வந்தவள் அதிர்ந்து நின்றாள்.

ஏனெனில் அங்கே இருந்த கல்லாசனத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவன் செந்தூர். 

அவனை அந்த நிலையில் கண்டவள். ‘இவ்வளவு நேரமாக இப்படியே உறங்குகின்றானா’ என நினைத்தவாறு அவனருகே சென்று அவன் முகத்தை உற்று நோக்கினாள். அவன் நல்ல உறக்கத்தில் இருக்கவே என்ன செய்வது என்று புரியாமல் அவனருகே காலருகே அமர்ந்தாள். அவன் எழும்புவதாயில்லை என்பதை உணர்ந்து அவனது ஆசனத்தோடு தலை சாய்த்திருந்தவளை தூக்கம் தழுவ தூக்க கலக்கத்தில் அவன் மடியில் தலை சாய்ந்தாள்.

தனது மடியில் கனமான பொருள் ஒன்று விழுந்தது போலிருக்கவே தூக்ககலக்கத்துடன் இமைகளை திறந்தவன் முற்றிலும் தூக்கத்தை திறந்தான். 

மடியில் கிடந்த தலையை வருடியவன் எழுந்து அமர்ந்து, அவள் தூங்குவதையே வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவன் திடுக்கிட்டான். அவனது மடியில் தலை வைத்து குனிந்து படுத்திருந்தவளின் தலை மறுபுறம் திரும்பவும் அவளது கழுத்துக்கு கீழே இருந்த முன்னழகு அப்பட்டமாய் தெரியவும் அவன் மூச்சை வெளியே  விடக்கூட முடியாதவாறு அமர்ந்திருந்தான். 

‘முருகா என்னை சோதிக்காதே…! நான் வாங்கி கொடுத்த சுடிதார் என் பீலிங்சோட விளையாடுதே…!’ 

அவன் அமர்ந்திருந்த வாக்கில் பார்த்தால் அவளது சிவந்த தேகத்தில் வெளிச்சம் படாத இடம் அவன் கண்களிற்கு இன்னும் வெள்ளை வெளேரென்று ‘பளபள’த்தது. இதற்கு மேல் இந்தநிலை நீடிக்குமானால் நிலைமை கைமீறக் கூடும் என்பதை உணர்ந்து அவன் அவளை எழுப்பினான். 

அவள் எழும்பாது அவனுக்கு போக்கு காட்டவும் அவன் திணறினான்.அவன் முதுகுத்தண்டில் மின்னல் வெட்டியது. போல சொல்ல முடியாத உணர்வில் சிக்கித்தவித்தான். அவளும் அவனுக்கு டவ்ஃப் கொடுக்கவே அவன் பாடு திண்டாட்டம் ஆனது. அவனது மூளை வேலை நிறுத்தம் செய்ய, அந்த நொடி அவள் அவனது மனைவி, தான் அவளது கணவன் என்ற எண்ணத்தை தவிர அவனது மனதில் வேறு எதுவும் இல்லை. தனது கைகளால் அவளது முகத்தை நிமிர்த்தியவன் அவளது நெற்றி,கண்,காது,கன்னம்,என அனைத்து இடங்களிலும் அழுத்தமாக முத்தமிட்டவன் எழுந்து அவளை கைகளில் தூக்கிக்கொண்டு தன் பெட் றூமிற்குள் சென்றவன் அவளை தன் பெட்டில் படுக்க வைத்து விட்டு, மறுபடியும் அவளது கன்னத்தில் இன்னும் அழுத்தமாக முத்தமொன்றை பதித்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

சவரை திறந்து விட்டு வெகு நேரமாக அதனடியில் நின்றும் அவன் உணர்வுகள் கொந்தளித்த வண்ணமே இருந்தது. இருந்தாலும் எவ்வளவு நேரத்திற்கு தான் அதில் நிற்பது என்று யோசித்தவன் மனதையும்,உடலையும் ஒருவாறு கட்டுக்குள் கொண்டு வந்தவன் இன்னும் சிறிது நேரம் சவரின்  கீழே நின்று விட்டு டவலைக்கட்டிக்கொண்டு வெளியே வந்து மெதுவாக கபேட்டை திறந்தான். 

அப்படியிருந்தும் அவள் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து இருந்தாள். 

“ஏய் நீ எழுந்து கொள்ளக்கூடாது என்று நினைத்தேன் அதற்குள் எழுந்து விட்டாயா?” என்றான். 

“ம்… என்றவள் அவன் நின்ற காலத்தை பார்த்து தலை குனிந்தவள்,  சீக்கிரமாக ரெஸ் சேஞ் பண்ணி விட்டு வாங்க. பசிக்குது.”, என்றாள். 

“சரி நீ இறங்கி கீழே டைனிங்ஹோலுக்கு போ நான் வருகின்றேன்.” என்றான். 

அவளும் கீழே இறங்கி பேய் டைனிங்டேபிளிள் அருகில் சென்று பார்த்தால் அது கவிழ்த்து வைத்த தண்ணீர் கிளாசோடு காலியாக இருந்தது. ‘சாப்பாட்டையே காணவில்லை’ என யோசித்த வண்ணம் அருகில் இருந்த நாற்காலியில்அமர்ந்ததாள். 

அவள் அமரவும் வீட்டு ஹாலிங்பெல்லும் ஒலித்தது. அவள் பதறி எழுந்து நிற்கவும்,செந்தூரும் இறங்கி கீழே வந்தவன் அவள் பதறிக்கொண்டிருப்பதை பார்த்து அவளருகில் வந்தவன் மறுபடியும் ஹாலிங்பெல் அடிக்கவும் திரும்பி கதவை நோக்கி சென்றவன் தயங்கி நின்று அவளை பார்த்தவன் கண்மூடித்திறந்து விட்டு கதவை திறந்தான். 

கதவை திறந்தவன் அப்படியே உறைந்து நின்றான்.  . ஏனெனில் எதிர்பாரத நேரத்தில் நடக்கும் விடயங்களை ஜீரணிப்பதற்குள் அவனது தாயும், தந்தையும் உள்ளே வந்தனர். 

அவனை விட அவள் அதிகமாக உறைந்து நின்றாள். அவனது தாயார் என்னென்னவெல்லாம் பேசுவார் என்று அவளுக்கு தெரியுமே… ! இப்போது என்ன சொல்வார்களோ என்று உள்ளூர உதறல் எடுத்தது. 

உள்ளே வந்த அவர்கள் இருவரும் பைகளை அவனிடம் கொடுத்து “இந்தா தம்பி முக்கியமான பொருள் எல்லாம் இந்த பையினுள் இருக்கு கவனமாக கொண்டு போய் வை.” என்றார். 

அவன் செல்லாது தயங்கி நிற்கவும், அவனது தாயார் இருப்பதற்காக ஷோபா நோக்கி சென்றவர் தியா தயங்கி நிற்பதை கண்டவர்,தன் முகத்தில் புன்னகையை வர வைத்துக்கொண்டு “வாம்மா… தியா… எப்படி…இருக்கின்றாய்.சாப்பிட்டியாம்மா…? நானும், உன் மாமாவும் உன் வீட்டுக்கு வருவதாக இருந்தோம்.எங்களை அலைப்பிக்க கூடாது என்று நீயே வந்து விட்டாய்.” என்றார். 

“தியா…” என்று கண் கலங்கிய வண்ணம் வந்த மாமனார் அவளது தலையை வருடிக்கொடுத்வர், கடைசியில் நீ மறுபடியும் இங்கேயே வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம். என்றவர் ஃபிரஸ்அப் ஆகி வருகின்றேன் என்று உள்ளே சென்றார். 

தியா பதில் எதுவும் சொல்ல வாய்வார்த்தை வெளியே வராது தலையை மட்டும் ஆட்டியவள் என்ன?  நடக்கின்றது என  புரியாது நின்றாள் தலைக்குள் பூச்சி பறந்தது. 

“அப்பாடா… எவ்வளவு தூரப்பயணம் கால் எல்லாம் வலிக்குது”  என்ற அவனது தாயார் முன்னால் இருந்த டீபாயில் காலை தூக்கி வைத்தார்.

தகப்பன் உள்ளே செல்லும் போதே அவனும் பைகளை உள்ளே வைப்பதற்காக சென்று வெளியே வந்தவன் தாயார் கால்வலி என்று உட்கார்ந்திருப்பதை உணர்ந்தவன் அவரது அருகில் வந்து கீழே அமர்ந்து அவரது கால்களை பிடித்து விட ஆரம்பித்தான். 

திகைத்து விழித்தவர் மகன் தனது காலை பிடிப்பதையும்,தியா அவனருகில் இருப்பதையும் பார்த்தவர் விழிகள் இரண்டும் நிறைந்தது. இப்போது தான் அம்மா இருப்பது தெரிந்ததா…? என்றார். 

“இல்லம்மா நான் எப்போதும் உங்களை வருத்தப்பட வைத்ததில்லையே…?” என்று இழுத்தான்.

“அதுதானே… அம்மாவோடு பேசுவதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடுகிறாயே… ?அதைக்கூட என்னால் புரிந்து கொள்ள முடியாது என்று நினைத்தாய்.”

“இல்லம்மா… நான் ஏதாவது பேச ஆரம்பித்து உங்களிடம் கடுமையாக பேசி விடுவேன் என்று தான் ஒதுங்கி போனேன்.”

“கடுமையாக என்றாலும் என்னுடன் பேசியிருக்கலாம் தானே, இல்லை என்றால்  அம்மாவோடு சண்டையாவது போட்டிருக்கலாம். ஆனால் கதைக்கின்ற மாதிரி கதைத்து என்னை தள்ளியல்லவா வைத்திருந்தாய்.” என்றவர் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் அவனது கைகளில் விழுந்து தெறித்தது. 

“அம்மா….! ப்ளீஸ் அம்மா அழாதீங்க…என்னால் எல்லார் வாழ்விலும் கஸ்ரம் தான். என்னை நம்பி வந்தவர்கள் யாரையும் சந்தோசமாக வைத்து பார்க்க முடியாத பாவி நான். என்னை மன்னித்து விடுங்கள்.” என்றவன் தாயின் மடியில் தலை வைத்து படுத்தவன் கண்களிலும் கண்ணீர் பெருகியது. 

தாய், மகனது பாசவலைக்குள் செல்ல முடியாமல் தியா எழுந்து வாசலை நோக்கி நடந்தவள் அப்படியே வெளியேறி ஒரு ஆட்டோ பிடித்து தன் றூமுக்கு வந்தவள், எதுவும் தோன்றாமல் அப்படியே தொய்ந்து சுவரில் சாய்ந்து அமர்ந்தவளின் மனதில் ஆயிரம் கற்பனைகள் ஓடி மறைந்தன.

மறுபடியும் முதலில் இருந்தா… ! என அவதிப்பட்டவள் விழிகள் இரண்டும் கலங்கிச்சிவந்தது. அவனும் ஆயிரம் முறை அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டான்.மறுபடியும் அவனோடு சேர்ந்து வாழ அழைப்பு விட்டுக்கொண்டு தான் இருக்கின்றான். அந்த அழைப்பு அவள் மனதுக்கு இதமாக இருந்தது. எத்தனை வன்மம் அவன் மீது இருந்தாலும் அவை எல்லாம் இப்போது குறைந்து ‘ஆதவனை கண்ட பனித்துளிகளாய் உருகி நின்றமை என்னவோ? உண்மை தான்.

அவளது கோபத்தை, அவன் தான் எத்தனை கஸ்ரப்பட்டு, இரத்தம் சிந்தியல்லவா? குறைத்திருந்தான். அவள் அவனை மனதார மன்னித்தாலும் அவனுடன் ஒட்டியும், ஒட்டியும் தான் இருந்தாள். 

இனிமேல் என்ன? நடக்கும்  என நன்றாக உணர்ந்திருந்தாலும்,அவள் எப்படி அவனுடன் ஒட்டி, உறவாட முடியும். அப்படியே ஒட்டி உறவாடினாலும் அவள் பிரயோசனமற்ற வெற்றுப்பொருளே… !

“பெண்மையின் அதி உன்னத நிலை தாய்மை.”அதை அடைய அவளுக்கு குடுப்பினை இல்லை. இவை எல்லாவற்றையும் கடந்து அவன் அவளை ஏற்றுக்கொண்டாலும் அவளது வாழ்வு முழுமை பெறுமா? என தன்னிலையில் இருந்து சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்தவள் தன்னை சமாதானப்படுத்தி திடமான முடிவை எடுத்தவள் தன்னை சமாதானப்படுத்த சற்று நேரம் கண்களை மூடி அமரந்தவளுக்கு அது இலகுவாக இருக்கவில்லை. 

அவன் தனது வீட்டில் தாயின் மடியில் தலை வைத்து இருந்தான். அது அவனுக்கு நீண்ட ஆறுதலை தந்தது. 

“கண்ணா… தியா என்னடா சொல்லுகிறா?” என்றார் தாயார். 

தாயின் மடியில் படுத்தபடியே தலையை திருப்பாது “அவ பிடி கொடுக்கின்ற மாதிரி தெரியவில்லை, என்ன? செய்வதென்று புரியவும் இல்லை.”என்றான்.

“அம்மா போய் பேசிப்பார்க்கட்டுமா… ?”

“வேண்டாம் அம்மா. நான் பார்த்துக்கொள்கின்றேன். என்னால் முடியவில்லை என்றால் நீங்க ஹெல்ப் குடுங்க… ” 

“சரி… அவ ஏற்கனவே வேதனையில் இருக்கின்ற பொண்ணு அவளை வருத்தப்பட விடாமல் கவனமாக ஹாண்டில் பண்ணு தம்பி.”

“ம்ம்… என்றவன்,தியா மேலே போய்விட்டாள் போல நான் மேலே பேய் பார்க்கின்றேன். நீங்கள் ரெஸ்ட் எடுங்கள்.” என்று கூறியவன் எழுந்து மேலே தன் அறைக்கு சென்று அவளை அழைக்க, பதில் இல்லாமல் போகவே எல்லா இடமும் சென்று தேடியவன் அவளை காணாது திகைத்தவன் தனது ஃபேன் எடுத்து அவளுக்கு ஹோல் போடவும் மறுமுனையில் கட் செய்யப்பட்டது. 

கடவுளே…என தலையில் கை வைத்தவன் ‘அவள் அம்மா வந்த பொது பதட்டமாக இருந்தாள். நான் அவளை கவனிக்காமல் விட்டுவிட்டேன் என நினைத்தவன் கையிலிருந்த  ஃபோனை  பாக்கெட்டுக்குள் வைத்த வண்ணம் அவன் வீட்டுக்கு பின்னால் இருந்த குறுக்கு பாதை வழியே தியாவின் இருப்பிடம் நோக்கி ஓடியவன் சரியான இடம் வந்ததும் தயங்கி நின்று அங்குமிங்கும் பார்த்து விட்டு சுவரேறி குதித்து உள்ளே சென்று அவளது றூம் கதவை தட்டினான்.

Advertisement