Advertisement

Episode 14
“சரி அக்கா எதுவாக இருந்தாலும் கேட்கணும் என்று முடிவு பண்ணி விட்டீர்கள். கேளுங்கள் என்னால் முயன்ற வரை பதில் சொல்கின்றேன்.”
“நான் சுற்றி வளைக்காது நேரடியாகவே கேட்கின்றன் தியா.என்றவள், உன் மேல் ஒரு லவ் என் மச்சினனுக்கு இருக்கும் போல, அவனை நீ கல்யாணம் பண்ணி எங்கள் வீட்டுக்கே வந்திடு தியா.அப்படி என்றால் உன்னை நான் எப்போதும் பக்கத்திலே வைத்து பார்த்து கொள்வேன்.எங்கள் எல்லோரையும் விட செந்தூர் உன்னை நன்றாக பார்த்துக்கொள்வான்.உன் வாழ்நாள் பூராக அவன் பாதுகாப்பிலும்,அன்பிலும் சந்தோமகவும்,நிம்மதியாகவும் இருக்கலாம்.நீ அவனை கல்யாணம் பண்ண ஓகே சொல்லு தியா.” என்றாள்.
தியாவின் முகத்தில் எந்த வித உணர்ச்சியுமில்லை.  ஆனால் மனம் வலித்து துடித்தது.இப்படி ஒரு வாழ்வு கிடைக்க வேண்டிய நேரத்தில் ஏன் கிடைக்கவில்லை என்று உள் மனது ஊமையாய் அழுதது. எட்டு வருடங்களாக மற்றவர்கள் முன் மறைத்து வைக்கப்பட்ட உணர்வுகள் உண்மையான அன்பு கொண்ட சிந்துவின் முன் கண்ணீராய் வெடித்து சிதறிவிடுமோ? என வழமையாக உணர்ச்சிகளை மறைத்து வைக்கும் முறையில் மனதை இறுகப் பூட்டிக்கொண்டு கசந்த புன்முறுவலை வெளியேற்றி விட்டு எழுந்து கைகளை கழுவி விட்டு, மறுபடியும் அதே இடத்தில் வந்து அமர்ந்தாள்.
“ஹலோ… தியா மேடம் நிறைய யோசிக்க வேண்டாம்.நான் கேட்ட கேள்விக்கு நல்ல பதிலாய் சொல்லு,”என உரிமையாய் கேட்ட சிந்துவை தவிர்க்க முடியாது தலை குனிந்தாள்.
“என்ன தியா நான் கேட்டது உனக்கு பிடிக்கவில்லையா?” என கேட்டு சிந்து முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.
“இல்லை அக்கா.எனக்கு அடிபட்டிருப்பதால் ஒரு மனிதாபிமான அடிப்படையில்
செய்கின்றீர்கள்,என நினைத்தேன். ஆனால் நீங்கள் திடீரென இப்படி ஒரு கேள்வியை கேட்டதால், என்னால் பதில் சரியாக கூற முடியவில்லை.”என்றாள் தியா.
“இது சரியான பதில் இல்லையே தியா.இது சம்மந்தமாக நாங்கள் உன் உறவினர்கள் யாரிடமாவது பேச வேண்டுமா? அப்படி என்றால் சொல்லுமா? போய் பேசுகின்றோம்.”
“அதுக்கு அவசியம் இல்லை அக்கா.அப்படி சொல்லிக் கொள்ளும் படியாக யாரும் எனக்கு இல்லை.”
“சாரி தியா நான் உன் மனசை கஸ்ரப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடு.”
“அக்கா நீங்கள் ஏன் என்னை இதற்குள் இழுக்கிறீர்கள்.என்னை விட ‘நல்ல நல்ல’ வசதி வாய்ப்பு,குடும்ப பிண்ணணி உள்ள பெண்கள் எத்தனையோ பேர் உங்கள் வசதிக்கு ஒத்து வருவார்களே……! எங்கள் ஆபிசில் கூட அவர் பின்னால் பைத்தியம் மாதிரி என் நண்பி ஒருத்தி திரிகிறாள் அவளை வேணும் என்றால் பாருங்கள் அக்கா.”
“யார்? அவன் பின்னால் பைத்தியம் போல சுற்றினாலும், அவன் நினைப்பு எல்லாம் உன்னை சுற்றி தான் இருக்கிறது தான் தியா.உன் பெயரைக் கேட்டாலே அவன் விழிகளில் மின்னல் தெறிக்கின்றது.உதடுகளில் ஒரு புன்னகை தவழ்கிறது.இது எதுவும் நீ சொல்கின்ற பெண்கள் மீது அவனுக்கு வராது.”
“ஆனால் என்னை தவறாக நினைக்காதீர்கள் அக்கா. என் கடந்த காலம் பற்றி நான் யாரிடமும் இதுவரை சொன்னதேயில்லை. சொல்லுகின்ற அளவிற்கு யாரும் இருந்ததும் இல்லை. நான் சொல்லப்போகும் கதையை கேட்டால் இன்றோடு நீங்களும் என்னுடன் பழகாமல் விடக்கூடும்.ஆனால் உங்கள் மனதில் இப்படியொரு வந்த பிறகு கட்டாயமாக சொல்லியே ஆக வேண்டும்.என்றவள் அக்கா ஏற்கனவே எனக்கு திருமணமாகி விட்டது.”
“என்னது? சும்மா விளையாட்டு பண்ணாதே தியா….”
“என்னக்கா நம்புவது கடினமாக இருக்கிறதா? ஆனால் அது தான் உண்மை.”
“கேட்கின்றேன் என்று தப்பாக நினைக்காதே தியா. நீ சொல்வது உண்மையென்றால் உன் புருசன் எங்கே?
தெரியாது?
“என்னது? கல்யாணமாகி விட்டது என்கிறாய்.உன் புருசன் யாரென்று தெரியாதா? போகட்டும் இப்போது அவர் எங்கே இருக்கிறார் அதையாவது சொல்லு.”
“தெரியாது.? ஏன் அவர் என் முன்னாடி வந்து நின்றால் கூட என்னால் கண்டுபிடிக்க முடியுமோ? என்று கூட தெரியாது?”
“என்னடி சொல்கின்றாய்…. இதெல்லாம் எப்படி? என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமலிருக்கவும் முடியவில்லை.”
“என்னாலேயே சில சமயங்களில் நம்ப முடிவதில்லை.அக்கா. என் வாழ்வு என்ன? என நான் உணரும் முன்னரே என் திருமண வாழ்வு ஆரம்பித்து அதே  வேகத்தில் முடிந்தும் விட்டது.நான் என் புகுந்த வீட்டில் இருந்து வரும் போது என்னிடம் இருந்தது என் உயிர் மட்டும் தான்.அதன் பின் என் மானத்தை காப்பாற்ற ஊர்,ஊராக இன்று வரை ஓடிக்கொண்டு தான் இருக்கின்றேன்.”
“என்னை மன்னித்து விடு தியா.உன் மனதில் இவ்வளவு ரணம் இருக்கும் போது,நான் ஏதேதோ பேசி உன் மனதை நோடித்து விட்டேன்.அப்படி செய்திருக்க கூடாது.மறபடி என்னை மன்னித்து கொள் தியா.”
“பரவாயில்லை அக்கா, உங்களுக்கு என்னை பற்றி தெரிந்திருந்தால்  கேட்டிருக்க மாட்டீர்கள் தானே. அவரிடம் சென்று சொல்லுங்கள், வேறு நல்ல பெண்ணாக பார்த்து வாழ்க்கை துணையை அமைத்து கொள்ள சொல்லுங்கள். வீண் கற்பனைகளோடு என்னை தொடர வேண்டாம் எனவும்,எப்போதும் என்னை விட்டு தள்ளியிருக்க சொல்லுங்கள்.”
“சரி தியா நான் நாளைக்கு வருகின்றேன்.நீ இப்ப ரென்சனாக இருக்கின்றாய்.போய் ஓய்வெடு.சும்மா கண்டபடி எதையும் யோசித்து மனதை குழப்பாதே….. எல்லாம் நல்ல படியாக உன் வாழ்வு அமையும். உனக்காக நான் கடவுளிடம் வேண்டுகிறேன்.” என்றவாறு கிளம்புவதாக கூறி கிளம்பினாள்.
அவள் போவதை வெற்றுபார்வையாக பார்த்து கொண்டிருந்த தியாவின் விழிகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
வெளியே சென்று கொண்டிருந்த சிந்துவின் மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடின.அதுவும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளை தோற்றுவித்தன. ‘அவளுக்கு திருமணம் ஆகி விட்டது என்கிறாள். ஆனால் செந்தூர் அவளை விரும்புகின்றான். அவளுக்கு கல்யாணமான விடயம் அவனுக்கு தெரியுமா?
தெரிந்து தான் விரும்புகின்றானா? இல்லை தெரியாதா? தெரியாது எனில் அவனுக்கு தெரியும் போது தாங்க மாட்டானே?’ என அப்ரிரியூட்  பரீட்சைக்கு வரும் வினாக்களிற்கு விடை கண்டு பிடிக்க குழம்புவது போல தன்னை தானே குழப்பிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள். வீட்டுக்கு வந்தும் பலத்த யோசனையில் இருந்தவளை
கணவன் வந்து இரண்டு மூன்று முறை கூப்பிட்ட பின்னரே நினைவுக்கு வந்தாள். நினைவுக்கு வந்தவுடன் கணவனிடம் சென்றவள், “கதிர் நான் உங்களிடம் முக்கியமான விடயம் பற்றி பேச வேண்டும்.”
என்றாள்.
“நானும் வந்ததிலிருந்து பார்க்கின்றேன்,பலத்த யோசனையாய் இருக்கின்றாய்.ஏதேனும் பிரச்சனையா?”என்றான். கணவன்.
“கதிர் நான் இன்று தியாக்கு சாப்பாடு கொண்டு போனேன் அல்லவா? பேச்சு வாக்கில் செந்தூரை கல்யாணம் பண்ணுகிறாயா?எனக் கேட்டேன்.”
“தியா என்ன பதில்
சொன்னா.” என கேட்டான் கணவன்.
“அதை ஏன் கேட்கிறீர்கள. அவள் சொன்ன பதிலில் எனக்கு தலை சுத்தியது இன்னும் நிற்கவில்லை….”
“அப்படி என்வாக இருக்கும்.” என கணவன்  யோசித்தான்.
“ரொம்ப யோசிக்க வேண்டாம் என்ன? என்று நானே சொல்லி விடுகின்றேன். தியாக்கு கல்யாணம் ஆகி விட்டதாம். இது தெரியாமல் நம்ம செந்தூர் அவளை விரும்புகின்றான்.” என்று சிந்து ‘படபட’த்தாள்.
“அதுக்கென்ன சிந்து. இது தான் விடயமா? இதுக்கு தான் அலட்டிக்கிறியா? சும்மா சப்பை மாட்ரருக்கெல்லாம் நீயும் பயந்து,எனக்கும் பயங்காட்டாமல் வேலை ஏதாவது இருந்தால் போய் பார்.”
“என்ன? கதிர் நான் என்ன? சொல்கின்றேன். நீங்கள் என்ன? சொல்கிறீர்கள். உங்களுக்கு என்னவாயிற்று பினாத்துகிறீர்கள்.” என மனைவி கேட்கவும், “இப்போது உனக்கென்ன தெரியனும், நான் சொல்லுகின்றதை கவனமாய் கேளுடி. தியாக்கு கல்யாணமானல் என்ன? என் தம்பி அவளை தான் காதலிக்கின்றான்.அவளை தான் கல்யாணமும் பண்ணுவான். போதுமா? விளங்கி விட்டதா?” என இன்னும் அவளை நன்றாக குழப்பி விட்டு மகள்களுடன் விளையாடும் கணவனை உதைக்க வேண்டும் போல் இருந்தது. ‘இனி இவருடன் கதைத்து பிரயோசனமில்லை நேரடியாக செந்தூரிடம் பேச வேண்டியது தான்.’ என முடிவு பண்ணி,அவனுக்கு ஹோல் போட்டு உடனடியாக வரச் சொன்னாள்.
மனவைியின் செயற்பாட்டை கண்டும் காணாது இருந்தவன், ‘இவளை  நான் சின்னதாக குழப்பியதற்கே இப்படி குழம்பி போய் நிற்கிறாள்.இதற்குள் தன் குழப்பத்தை தெளிவிக்க பிரச்சனைக்கு காரணமான குழப்பவாதியை கூப்பிடுகின்றாளே…….! அவன் வந்தால் வகை தொகையாய் வைத்து செய்வானே…….! அப்போது இவளுக்கு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி.’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு மகள்களுடன் விளையாட்டை தொடர்ந்தான்.
சிந்து ஹோல் பண்ணியவுடன் ‘என்ன? பிரச்சனையாக இருக்கும்.’ என யோசித்த வண்ணம் அண்ணணின் வீட்டுக்கு வந்தான். வீட்டுக்குள்ளே அவன் நுழையும் போதே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த தமயன் தென்பட அவனருகில் சென்றவன், “ஹாய் அண்ணா, அண்ணி உடனே என்னை வரச் சொன்னார்கள் என்ன? விடயம் என்று தெரியுமா? என கேட்டுக் கொண்டே அவனும் விளையாட்டில் சேர்ந்து கொண்டான்.
“அது சரி தம்பி உன் நாக்கு இப்போது நன்றாகி விட்டதா?”
“ம்ம்……. கொஞ்சம் பரவாயில்லை.”
அப்போது தான் அவனை கண்ட சிந்து, “தம்பி ரீ கொண்டு வரவா?” என கேட்க கொலை வெறியானான் செந்தூர்.
“அண்ணி இவ்வளவு வேலை மினக்கெட்டு ரீ குடிக்க தான் கூப்பிட்டீர்களா? நானும் என்னமோ? ஏதோ? என்று விழுந்தடித்து வந்தால் நீங்கள் ரீ குடிக்கிறியா? வடை சாப்பிடுகிறாயா? என கேட்டு வதைக்கிறீர்கள்? எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது,
கிளம்புகின்றேன்.” என கூறி கொண்டு,அண்ணன் குழந்தைகள் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு எழுந்தான்.
“கடவுளே….. செந்தூர் நீ ஓவராக பில்டப் பண்ண வேண்டாம்.நான் கேட்கின்ற கேள்விக்கு பதிலைச் சொல்லி விட்டு போ என்றவள், என் தூரத்து உறவில் ஒரு நல்ல,படித்த,குணமான,அழகான பொண்ணு ஒன்று இருக்கின்றது.உனக்கு வரன் பார்க்கட்டுமா?” என்றாள் சிந்து.
“அண்ணி நான் தான் தியாவை லவ் பண்ணுகின்றேனே….! உங்களுக்கும் தெரியும் தானே பிறகு ஏன்? இப்படி ஒரு கேள்வி.”
“வேண்டாம். தியா உனக்கு சரிப்பட்டு வரமாட்டா…..!”
“ஏன்? என்ன? காரணம்.”
“அவளுக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டதது”என்றாள்.
“ஓஓஓ….. அதுவா அண்ணி, அதற்கென்ன அதனால் ஒரு பிரச்சனையுமில்லை.”
“என்னடா… பைத்தியமா? உனக்கு ஏற்கனவே கல்யாணமான பொண்ணை எப்பிடிடா…..?”
“அது தியா அவ புருசன் யார் என்று சொன்னாளா?”
“இல்லை….அவன் முகம் அவனுக்கு ஞாபகம் இல்லை என்று சொல்கிறாள்.”
“அது தான் அவ புருசன் நான் தான் அண்ணி.”
“போடா போய் கற்பனையில் இரு….. எனக்கு ஒன்றும் புரியவில்லை.தலை சுற்றுகின்றது.”
“இதுக்கே தலை சுற்றுகின்றது என்றால் எப்படி? அண்ணி.அவ புருசன் நான் தான் என்றே அவளுக்கே தெரியாது.மறந்துட்டா போல.” என்றான்.
“அவ என்னடா என்றால்,மறந்து போனாளாம்.நீ என்னடா என்றால் அவ புருசன் நீ தான் என்கிறாய். சத்தியமாய் சொல்கின்றேன் எனக்கு ஒன்றும் புரியவில்லை. உன் விளக்கத்தை விட உன் அண்ணன் சொன்ன விளக்கமே பரவாயில்லை சாமி,” என கூறிக்கொண்டு ஷோபாவில் போய் ‘தொப்’ என்று இருந்தாள்.
“அண்ணி உங்களுக்கு சரியாக விளங்கவில்லை என்று நினைக்கின்றேன்.நான் வேணுமென்றால் திரும்ப சொல்லவா?” என்றான்.
“மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க போறியா? நீ,தயவு செய்து போகிறாயா? வந்தவுடன் வேலை இருக்கின்றது என்று கிளம்பினாயே……! இப்போது வேணுமென்றால் கிளம்புகிறாயா?” என அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கூறிய சிந்துவை பார்த்த அண்ணன்,தம்பி இருவரும் பலமாக புன்னகைத்து அவளை வெறுப்பேற்றினர்.
“சரியான பைத்தியக்கார குடும்பத்திடம் வந்து மாட்டியது என் தப்பு தான்.” தலையிலடித்துக் கொண்டு எழுந்து சமயலறை பக்கமாக சென்றாள்.
தனது மனைவி உள்ளே சென்றதும் தம்பியைப் பார்த்த கதிரவன், “என்னடா தம்பி, தியாக்கு தனக்கு கல்யாணம் நடந்த கல்யாணம் நினைவிருக்கிறது என்றால் அவளது கணவனான நீயும் அவள் நினைவில் இருக்க வாய்ப்பிருக்கிறது தானே?” என கதிரவன் தன் தம்பியை பார்த்தான்.
“எனக்கும் அதே எண்ணம் தான் அண்ணா. ஞாபகம் இருக்கிறதென்றால் அவள் என்னுடன் சகஜமாக கதைக்க மாட்டாள்.ஆனால் அவள் என்னுடன் சாதாரணமாக கதைக்கிறாளே ..….. !”
“ஏன்டா? தம்பி தியா வெறும் பேச்சோடு நில்லாது உன்னை வெளுக்கவும் செய்கின்றாள்.அதில் உனக்கு அலாதி பெருமை வேறு.இதுக்கு உன் அண்ணி எவ்வளவோ? பெட்டர்.” என்றே  சொல்லலாம்.
“அண்ணா, பொண்டாட்டி கிட்ட அடி வாங்காதவன் நல்ல புருசனாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதை விட அப்படி அடி வாங்குகின்ற புருசன் மார்கள் எல்லோரும் வரம் வாங்கி பிறந்தவர்கள் தான், அந்த வகையில் நான் கொடுத்து வைச்சவன் தான் அண்ணா.” என்றான்.
“ஆமாண்டா நீ வரம் வாங்கி வந்தவன் தான்டா….. ஆனால் ஒன்று நன்றாய் சமாளிக்கின்றாய் போ.எங்கிருந்து தான் விதவிதமாக சமாளிக்க தெரிந்து வைத்திருக்கின்ற படியால் நீ பிழைத்துக் கொள்ள வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது.” என்றான் கதிரவன்.
“அதை விடு அண்ணா. இப்போது தியாவை ரீச் பண்ணுவதற்கு என்ன? செய்யலாம்….”
“முதல்ல அவகிட்ட நீ யார் என்பதனை சொல்லு.அவ உன்னை மறந்த காரணத்தை தெரிந்து கொள்.அதற்கு பிறகு டூயட் பாடு.அதற்கு முதல் கண்ட கற்பனையில் மூழ்காதேடா.அவ்வளவு தான் சொல்லுவேன்.”
“அதுவும் சரி தான். நாளைக்கே முயற்சியில் இறங்க போகின்றேன்.என்னை விஷ் பண்ணு அண்ணா.”
“வாழ்த்துக்கள் தம்பி.சென்று வா.வென்று வா.”
“சரி அண்ணா நான் கிளம்புகின்றேன்.”என கூறிக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தவனுக்குள் ஆயிரம் எண்ணங்கள்.எல்லாமே அவனை குழப்பிய வண்ணம் இருந்தது.தியா இருக்கும் வீட்டில் தான் ஒரு நொடியும் இருக்க மாட்டேன் என பெற்றோரிடமும்,சகோதரரிடமும் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அப்போது தான் அவன் தொடங்கியிருந்த எஸ்.எஸ் கென்ராக் பில்டிங்கில்  ஒரு றூமில் போய் தங்கியிருந்தான்.அதனால் தான் அவள் வீட்டை விட்டு வெளியேறினாள்.ஆனால் அதன் பிறகு அவள் பட்ட துன்பங்கள் எல்லாம் ஒரு பெண் இப் பிறவியில் அணுபவிக்க முடியுமா? என்னும் அளவிற்கு இருக்கின்றது.அந்த வலிகள் எல்லாம் தாங்கி அவள் இன்று சிலையாய் வாழ்கின்றாள்.அவனோ? தனக்கு கிடைத்த அழகான வாழ்வை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டு,தொலைத்த வாழ்வை தேடிக்கொண்டிருக்கின்றான்.
எல்லோருக்கும் வாழ்க்கை ஏதோ ஒரு விடயத்தை விரும்பியோ? விரும்பாமலோ கற்றுத்தரும்.அதை உணர்ந்து,திருந்தி வரும் நேரம் நம் கையிலிருந்த வாழ்க்கை எம்மை விட்டு ரொம்ப தூரம் விலகி போயிருக்கும்.அதனை மறுபடியும் கைகளுக்குள்ளே கொண்டு வர வேண்டுமெனில் மலையை கட்டி இழுக்கும் அளவு போராட வேண்டும்.
அதே போல் தான்  செந்தூருக்கும் வாழ்க்கை நிறைய கற்று கொடுத்து விட்டது.இப்போது மலையை அசைக்க நினைக்கின்றான்.மலை சீக்கிரமாக அசைந்து விடுமா? அல்லது கல்லை எடுத்து தண்ணீரில் போட்டு கரைக்க தான் முடியுமா?
செந்தூரும் தான் தொலைத்த ‘தியா’ என்னும் அவனது வாழ்வை தன்னோடு இணைக்க எவ்வளவோ…..! போராடுகின்றான்.ஆனால் அவளை அவன் தன்னோடு இணைத்து கொள்வானா? தியாவுக்கு தான் யார்? என செந்தூர் சொல்வானா? தியா அவனை ஏற்கும் காலம் வருமா? என கற்பனைகளோடு வீட்டக்குள் சென்றவன் முன் தமக்கையும்,தாயும் ஒரு போட்டோவை காட்டி “தம்பி இந்த போட்டோவில் இருக்கின்ற பெண் எவ்வளவு அழகு? இல்ல.” எனக்கூறி அவனை கொலை வெறி கொள்ள வைத்தனர்.
அவர்களது கேள்விக்கு அவனனது பதில் என்னவாக இருக்கும்…….?

Advertisement