Advertisement

Episode 07

ஆபிசுக்குள்ளே இருந்தவன் திடீரென எழுந்து கண்ணாடி ஜன்னல் கதவுகளை  மூடியிருந்த திரைச்சீலைகளை விலக்கி ஒதுக்கி விடும் போதே அலுவலகத்திற்குள் ஆட்கள் வரத்தொடங்கியிருந்தனர். ‘ஐ சூப்பர்… தியா இப்போது வருகின்ற நேரம்’ தான் என மனதுக்குள்  நினைத்தவன் நாற்காலியில் இருப்புக் கொள்ளாது எட்டி எட்டி பார்த்துக் கொண்டவனுக்கு சாதுவாக கழுத்து வலியே ஆரம்பித்திருந்தது.’என்ன இன்னும் இவளை காணவில்லையே லீவைக்,கீவை போட்டு விட்டாளோ?’ என மனம் கடிவாளமின்றி பறந்தது.

அவன் கண்டபடி யோசித்து களைத்து சோா்ந்து போய் இருக்கும் போதே சரியான நேரத்திற்கு வந்தாள். அவள் வந்த பின் தான் அவன் கதிரையில் தளர்வாக இருந்தான்.

தியா உள்ளே வந்தும் தனது காபினுக்குள் நுழைந்தும் தனது கைப்பையை வைத்து விட்டு ‘லப்டப்’ஐ தூக்கிக் கொண்டு செந்தூரின் காபினை நோக்கிச் சென்று அவனது கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள்.

உள்ளே சென்று “குட்மோனிங் சேர்.” என்று கூறிக் கொண்டு அவனருகில் அவள் நேற்று இருந்த கதிரையில் உட்கார்ந்து வேலையை ஆரம்பிக்க எத்தனிக்க அவன் அவளிக்கு பதில் விஷ் பண்ணியவன் “தியா ஏன் இவ்வளவு எக்ஸ்பிரஸ் வேகம் லஞ்சுக்கு பிறகு தான் இந்த ரோயிங் அனுப்ப  வேண்டும்.நீங்கள் தானே முக்கால் வாசிக்கு மேலே நேற்றே முடித்து விட்டீர்களே …..! எனறான்.

ஆமாம் சேர் எனக்கு ஏற்கனவே செய்து கொண்டிருந்த  ரோயிங் வேக்கை விட்டு விட்டு தான் இந்த வேக் அா்ஜன்ட் என்கிறதனால் தான் இங்கே வந்தேன் சேர்.இதை முடித்துக் கொடுத்து விட்டு பென்டிங் வேக்கை செய்யனும்.” என்றாள்.

‘ஆமாம் இவ சின்சியர் சிகாமணி என்பதை நேற்றே அவன்  தெரிந்து கொண்டான்.அதை மறந்து விட்டு உன்கிட்டே வேலையைப் பற்றி கேட்டது என் தப்பு தான் தாயே….!’ என்று தன்னைத் தானே மனதுக்குள் நொந்து கொண்டான். அகிலும் சிறிது நேரத்தில் வரவும் அவர்கள் மூவரும் வேலையில் ஆழ்ந்தனர். வேலைக்கு நடுவே அவன் அவளைப் பார்க்க, அவள் தலையை இடைக்கிடையில் பிடித்து விடவும் அவன் தலையை பார்தவன் அவள் தலைக்கு குளித்து விட்டு ஈரத்தலையுடன் இருப்பதைத் கண்டு ஏசியை நிறுத்தி விட்டு ஃபான் சுவிச்சை போட்டு விட்டு வேலையில் ஆழ்ந்தான்.

அவளும்  தலை ஈரமாக இருப்பதை உணர்ந்து தான் இருந்தாள். தீடிரென அவனது செய்கை அவளிற்கு நன்மை    அளிப்பதாகவே இருந்தது.

வேலையில் இருந்தவர்களை அகில் பத்தரை மணியளவில் “சேர் இப்போது ரீ ரைம் இதுக்கு மேலே இருந்து வேக் பண்ணி என் வயிற்றுக்கு வஞ்சகம் செய்ய மாட்டேன் .” என்று கன்டீனுக்கு கிளம்ப தயாராகியவனை பார்த்த செந்தூா் “இரு அகில் நானும் வருகின்றேன் என்று எழுந்தவன். தியாவை நோக்கி தியா நீங்களும் வருகிறீர்களா?” என்றான்.

“இல்லை சேர் நான் வரவில்லை இன்னும் பத்து நிமிடத்தில் வேலை முடிந்து விடும் முடிந்த பிறகு பிரண்ட்ஸ் கூட வருகின்றேன்” என்றாள்.

“ஓகே தியா நீ உன் ப்ரண்ட்சோட ஆடிப்பாடி வருவதற்குள் கன்டீனில் சமோசா காலியாகி விடும்.” அதனால் நாங்கள் முதலில் போகின்றோம் என்று விட்டு அகில் விறுவிறு என்று முன்னே செல்லத் தொடங்கினான்.

தயங்கி நின்ற செந்தூரும் ‘சமோசாக்கு செத்தவனாடா நீ’ என்று மனதுக்குள் அகிலை அர்ச்சனை செய்து கொண்டு பின் தொடர்ந்தான்.

தியா தனது வேலையை பத்து நிமிடங்களிற்குள் முடிக்கலாம் என்று நினைக்கையிலே தலைவலியும் சாதுவாக தொடங்கியது.’சாதுவன வலி தானே ஒரு கப் ரீ குடித்தால் போய் விடும்.’ என நினைத்தவுடனே எழுந்து நண்பிகளிடம் சென்றாள்.

தியா கதவை திறந்து  உள்ளே செல்ல சுஜாவும், வினோவும்  அவளை பார்த்து நக்கல் சிரிப்பு சிரிக்கவும்,தியா கடுப்பாகி “என்னடி நக்கல் சிரிப்பு இது சரியில்லையே….. என நினைத்துக்கொண்டு எதுக்கடி பல்லு சுளுக்கிற மாதிரி இளிப்பு.” என்றாள்.

ஏன் தியா அவனைப்பற்றி நாங்கள் கதைத்ததற்கு ‘குய்யோ முய்யோ’ என்று குதித்தாய்.இப்ப என்னடா என்றால் அவன் றூமிலேயே, அவனுக்கு பக்கத்திலேயே இருந்து வேக் பண்ணுகிறியே தியா என இழுத்தாள் சுஜா.

“நாங்கள் அவனைக் கண்டாலே ஃப்ரீஸ் ஆகி நிற்கின்றோம். நமக்கெல்லாம் அவன் பக்கத்திலே போவதற்கு கூட வாய்ப்பு இல்லை. இங்கே  உனக்கு அவனை கண்ட நாள் முதல் பாரக்கவே பிடிக்கவில்லை.ஆனால் நீ அவன் பக்கத்தில் இருந்து வேலை செய்கிறாய்.இருந்தாலும் கடவுளுக்கு கண் இல்லை.” என்று வினோ சகட்டுமேனிக்கு புலம்பித் தள்ளினாள்.

“அவள் புலம்புவதை தாங்க முடியாமல் “எனக்கொரு டவுட்”என்றாள் தியா.

“என்ன டவுட் ரெல் மீ.”

“ஆகா ஓகோ என்று அவனைப் பற்றி புலம்பறீங்களேடி அவன் மூஞ்சி முழுக்க தாடியும்,மீசையும் தான் தெரியுது. கண்ணுக்கு கூலிங் களாசை போட்டுக்கிட்டே இருந்து கம்பியூட்டரில் வேலை செய்கிறான். அவன் நெற்றி மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிந்ததே.என்றவள் இதிலே என்ன நல்லா இருக்குது என்று இரண்டு பேரும் உருகிக் கரைகிறீர்களோ…..! தெரியவில்லை.”என்றாள்.

“ஏய் அவன் தாடி,மீசை வைத்திருக்கிறதை இப்பத்தான் பார்தியா.”

“ம்…. ரீ குடிக்க கூப்பிட்டான். அப்பதான் நான் வரவில்லை என்று சொல்வதற்காய் அவன் மூஞ்சியை பாா்க்க வேண்டிய கெட்ட சூழ்நிலை எனக்கு உண்டாகி விட்டது.” என்றாள் தியா.

என்னடி சொல்கிறாய் அவன் உன்னை ரீ குடிக்க கூப்பிட்டானா….?

“யெஸ் டி.”

“அவன் கூப்பிட்டும் நீ போகவில்லையாடி.”

“வினோ உனக்கு என்ன காது செவிடா…? அவன் கூப்பிட்டால் உடேன அவன் பின்னால போகவேணுேமோ…?” என்றாள் தியா.

“அவன் பின்னால போக இந்த ஆபிசில உள்ள எல்லாப் பொண்ணுங்களும் ரெடி.ஆனால் அவன் யாரையும் கண்டு கொள்ள மாட்டான். உன்கிட்ட மட்டும் வலிய வந்து கதைக்கிறான். ஆனால் நீ அவனை கண்டுக்க மாட்டேன் என்கிறாய்” என்று ஒரு பெரிய மூச்சொன்றை விட்டாள் வினோ.

நல்ல சான்சை மிஸ் பண்ணி விட்டியே தியா என்று அங்கலாய்த நண்பியை முறைத்துக் கொண்டு, “இது ஆஸ்காா் அவாா்ட்டு அதை  நான் போய் வாங்காத மாதிரி பேசாதே.” என்றாள்.

“இது அதுக்கு மேலே தியா .”

“அவன் கூட போய் ரீ குடிக்கிறது ஆஸ்காருக்கு மேலே என்றாலும் எனக்கு அது வேண்டாம்.”

“உனக்கு வேண்டாம் என்றால் பரவாயில்லை தியா. இனிமேல் அவர் உன்னை கூப்பிட்டால் உனக்க பதிலாக என்னை சஜெஸ்ற் பண்ணு நான் ஜாலியா அவர் கூட போகின்றேன்.” என்றாள் வினோ.

“ஏய் வினோ  இந்த மூஞ்சை முழுக்க தாடி,மீசை வளர்த்து வைச்சிருக்கற முள்ளம்பன்றிக்கு பின்னால போவதற்கு நம்ம அகிலே பரவாயில்லை.” என்றாள் தியா.

“அடியேய்… உங்க சண்டையில் என் வாழ்க்கையை நாசம் பண்ணி விடாதீங்கடி. என்ற சுஜா அகில் என்னோட ஆள்.” என்றாள் சீரியசாக.

“இது எப்பயிருந்து” என அதிா்ந்தனர் மற்ற இருவரும்.

“அது.. அது… மூன்று மாதமாக” என்றாள் சுஜா.

“என்னது மூன்று மாசமா இருக்கிறியா” என்றாள் வினோ.    

“ஏய்  வினோ அவளே சீரியஸ்சா இருக்கிறா. நீ அவளை சீண்டாதே.” என்ற தியா.”அது சரி இது அகிலுக்கு தெரியுமா?”  என்றாள்.

“ம்ம்… அவன் தான் முதல்ல ப்ரப்போஸ் பண்ணினவன். எனக்கும் அவனை பிடிச்சிருந்துதா… ! அதனால் ஓகே சொல்லிட்டேன்.” என்றாள்.

“அது தான் அந்த ‘முட்டைக்கண்ணனை’ பற்றி நாங்கள் ஏதாவது சொன்னால் ‘தாங்கு தாங்கு’ என்று தாங்கினியா….?” என்று வினோ  சுஜாவை காய்ந்தாள்.

“இல்ல வினோ நான் வேணும் என்று சொல்லாமல் விடவில்லை. இன்னும் என் வீட்டுக்கு தெரியாது. அதுதான் பயத்தில யாருக்கும் சொல்லவில்லை.” என்ற சுஜாவை முறைத்தாள் வினோ.

“ஆக நாங்கள் அகிலை கழுவி ஊத்துறதை தாங்க முடியாமல் தான் இப்ப உன் காதல் கதையை எங்களுக்கு சொன்னாய் போல.”

“என்ன இருந்தாலும் அவன் ஆளுடி.”என சுஜா கூற மற்ற நண்பிகள் இருவரது முகத்திலும் சிரிப்பு தோன்றியது.

“சரி விடு எங்கிருந்தாலும் வாழ்க. என்ற கூறிய வினோ சுஜாவைப் பார்த்து அப்ப என் றூட் கிளியர்.” என்றாள்.

“என்னடி நீயும் யாரையாவது உன் ஆள் என்று கை நீட்டப் போகிறாயா?” என வினோதினியைப் பாா்த்து தியா கேட்க, வினோ இல்லை என்பது போல தலையை ஆட்டினாள்.

“பின்னே ஏன்டி டுவிஸ்ட்  வைக்கிற மாதிரி கதைக்கிறாய். நேரடியாக விசயத்துக்கு  வா.” என்றாள சுஜா.

அது…அது

“தயவு செய்து இழுத்து ரம்பம் போடாமல் விசயத்தை சொல்லுடி வினோ.”

“சொல்லலாம் ஆனால் நீங்கள் இரண்டு பேரும் என்னை திட்டக் கூடாது.” என்றாள்.

“ப்ளீஸ் வினோ” என்று தியா கை இரண்டையும் எடுத்துக் கும்பிடுவது போல  காட்டவும் தான் வினோ மனமிரங்கி, “அதுடி சுஜாக்கு அகில் இருக்கிறான்.உனக்கு அவனைக் கண்டாலே ஆகாது. அப்ப அவனை போட்டி  இல்லாமலே சைட் அடிக்கலாம்.” என தன்பாட்டில் எண்ணக் கனவுகளை விதைத்துக் கொண்டிருந்தாள்.” வினோ.

ஏய் எருமை. நீ சொல்லுகிறது எந்த பைத்தியம் என்று நாங்கள் அறிந்து கொள்ள முடியுமா? வினோ என்றாள் தியா.

“என்ன? தியா….! பட்டென்று என்னோட பால்கோவாவை பைத்தியம் என்று

சொல்லிட்ட…. என் மனசு எப்படி வலிக்குது என்று உனக்கு புரியாது விடு.”

“அந்த பாழப்போன பால்க்கோவா யாா்? என்றுதான்  நானும் கேட்கிறேன். நீயும் பதில் சொல்லாமல் இழுத்தடித்து என் உயிரை குறைப்பதிலேயே குறியாய் இரு.” என்று அலுத்துக் கொண்டாள். தியா.

தான் சொல்லப்போகும் பதிலால் தியாவின் ‘பிபி’ எல்லையை தாண்டும் என அறிந்த வினோ இருந்த இடத்தில் இருந்து எழுந்து ஓடிப்போய் கதவருகில் நின்று கொண்டு, தியா பி கூல் என்றாள். இவள் என்ன சொல்லப் போகிறாள்.ஏதோ விதண்டாவாதமாக சொல்லப் போகிறாள் என்ற திகைப்புடனேயே பாா்த்துக் கொண்டிருந்த தியாவை நோக்கி, கண்ணடித்தவள் அவன் தான்டி நம்ம ஆபிஸ் ரோமியோ நம்ம செந்தூர் தான். என்றவள் நான் கீழே போகின்றேன் எனக் கூறிக் கொண்டு ஓடிவிட்டாள்.

“அடிங்….  மானமுள்ளவள் என்றால் நில்லுடி. என்னது நம்ம ரோமியோவா? உன் வெட்கம் கெட்ட காதல்ல என்னை எதுக்குடி இழுக்கிறாய்.” என கத்திய தியாவின் கத்தலை கேட்க வினோ அங்கு நின்றால் தானே.

“சுஜா பாா்த்தியாடி இவளும் இவ பேச்சும் எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அவளை…….” என்று படபடத்தவளை சுஜா தான் ஆறுதல் படுத்தி கன்டீனுக்கு அழைத்துச் சென்றாள்.

கன்டீனுக்கு சென்றவர்களுக்கு இன்னும் ‘பிபி’ தலைக்கேறியது. “ஏய் இவ அடங்க மாட்டா இரு இவளை என்ன செய்யுறேன் என்று பாா்.” என அங்கும் இங்கும் எதையோ தேடி அவள் அருகே இருந்த தண்ணீா் கிளாசை எடுத்து அவள் மீது தண்ணீரை ஊற்ற கையை உயர்த்தியவள் கையை தடுத்த சுஜா “என்ன தியா அவ மேலே ஊத்தப்போறியா?” என்றாள்.

“ம்…  இல்லை அவ மண்டையை உடைக்கப் போறேன்.”

“தியா கூல் கூல்” என்று சுஜா அடக்கினாள்.

“பார்றி சுஜா அங்க என்ன பேச்சு பேசினா…. இப்ப இங்கே வந்து அகில் பக்கத்தில இருந்து கொண்டு அவனுக்கு எதிர்ல இருந்து ரீ குடித்துக் கொண்டிருந்த செந்தூரை சைட் அடித்துக் கொண்டிருக்கிறாள்.”

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த சத்தத்தில் திரும்பி பார்த்த அகில் இருவரையும் வரச் சொல்லி அழைக்க அவர்கள் இருவரும் வினோ பற்றிய கடுப்பை மனதிற்குள் மறைத்துக் கொண்டு அவனருகில் சென்றனர்.

அவர்கள் அருகில் வந்ததும் ஏய் சுஜா,தியா வாங்க இதிலே உட்காருங்க என அழைக்க தியா இன்னும் கான்ட் ஆனாள். ‘இவன் சுஜாவை லவ் பண்ணுகிறான் அதனால் இவன்  சொல்லுகின்ற எல்லாவற்றையும் நான் கேட்கணுமா?’ என மனதிற்குள் அரற்றிய வண்ணம் இருந்தவளை நிமிர்ந்து பார்த்த செந்தூர் அவள் நின்றிருந்த கோலத்தை கண்டு  திகைப்படைந்தவன் பின் புன்னகைத்தான்.

ஏனெனில் அவள் அப்படி ஒரு. போசில் அகில் கூப்பிட்டவுடன் அப்படியே கையில் இருந்த தண்ணீர் கிளாசை வினோவின் தலைக்கு மேல் அடிப்பது போல ஓங்கியிருந்தவள் அந்த நிலையிலேயே அவளை பாா்த்த நம்ம செந்தூா் ‘என்ன நம்ம ஆளு கையில் கிளாசை ஏந்தி நிற்கும் பத்திரகாளியாக மாறி நிற்கிறாளே…! விட்டால் வினோதினி மண்டையை பிளக்கிற வெறியோட இருக்கிறா…. போல’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “ தியா ஏன்? தண்ணீர் கிளாசை வைத்து கிரிக்கட்டுக்கு போல் போட ட்ரை பண்ணுகிறீர்களா? என அவன் கேட்க்க அவனது கேள்வியை உணர்ந்தவர்கள் தியாவை பாா்த்து விட்டு சிரிக்கவும் இன்னும் கான்ட் ஆகி செந்தூரைப் பாா்த்து முறைத்துக் கொண்டே ‘ம்… உன் மண்டையிலேயே  ஒன்று போடப்போகிறேன் பாா்றா’ என்று மனதுக்குள் கூறிக்கொண்டே வெளியே சிரித்து சமாளித்தவளை பார்த்து பட்னெ கண்ணை அடித்தான்.

அவனது செயலில் அதிர்ந்தவள் கையிலிருந்த தண்ணீா் கிளாசை கீழே விட்டாள்.அது விழுந்து உடைந்து சிதறியது.

தீடிரென தனது செயலை உணர்ந்து  உடைந்த கண்ணாடி துண்டுகளை அவள் பொறுக்கிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் அவளது நெஞ்சு அவன் கண்ணடித்ததை எண்ணி பொருமிக் கொண்டிருந்தது. என்ன தைரியம் இருந்தால் என்னைப் பார்த்தே கண்ணடிப்பான் பொறுக்கி, ராஸ்கல் ஆம்பிளை என்கின்ற திமர். இருக்குடா மகனே உனக்கு, தனியாக மாட்டு அப்ப வைக்கிறேன் சங்காபிசேகத்தை அவ்வளவு கேவலமாக  என்னை நினைத்து விட்டான்.என மனதுக்குள் மண்டகப்படி நடாத்திக் கொண்டிருந்தவள் முன்பாக அவன் எழுந்து வந்து அவளுக்கு கெல்ப் பண்ணுவது போல குனிந்து இருந்து ஏய் முட்டைக்கண்ணி எதுக்கு முறைக்கிறாய் முழி கழண்டு கீழே விழப்போகுது என்றான்.

“விழுந்தால் எடுத்து ஒட்டி விடுறியா..? வந்து இரண்டு நாள் ஆகவில்லை பொறுக்கி மாதிரி பிகேவியர்.” என்று அவளும் அவனைப் போல கூறினாள்.விளக்குமாத்துக்கு பேர் பட்டுக்குஞ்சம் என்கிற மாதிரி இந்த அகில் உன்னைப் பற்றி ஆகா,ஓகோ என்று புலம்பினானே…….! ஆனால் நீ ….” என்று இழுக்க…

“ம்ம் சொல்லு நான் என்ன பொறுக்கி மாதிரி நடந்தேன்  என்கிறாயா?”

“பின்னே நீ என்ன ஜென்டில்மேன் என்கிறாயா?” என்றாள்.

“கண்ணடிச்சது தப்பா ..?”

“இல்லைச்சாமி அது தப்பில்லை. ஆனால் உன் கண் என்னைப் பாா்த்து அடிச்சது தான் தப்பு.இனி மேல் உன் ஆந்தைக்கண்ணுக்கு  சொல்லி வை என்னை பார்த்து அடிக்க கூடாது என்று, மறுபடி என்னை பாா்த்து உன் கண் அடிபட்டுச்சு…. கண்ணை நோண்டி, அதை கம்பி வைச்சு குத்தி குப்பையிலே போட்டு விடுவேன்.”

“நான் கண்ணடிக்கும் போது நீ ஏன் பாா்த்தாய்.அப்படி என்றால் உன் கண்ணை  என்ன பண்ணுவதாம்.”

“பைத்தியம் மாதிரி உளறினாய் என்றால் உன்னை கொலை பண்ணி போடுவேன்.”என்றாள்.

‘உன் நினைப்பில கொஞ்சம் கொஞ்சமா செத்துபிழைக்கிறதற்கு  நீ இப்பவே கொல்லுடி.’ என்று மனதிற்குள் நினைத்தவன் “அது சரி உனக்கு மரியாதை தெரியாதா?” என அவன் வினவவினான்.

இல்லை தெரியாது ? ஏன் நீ சொல்லித் தரப் போறியா?”

“நீ ரெடி என்றால் நான் சொல்லித்தாறேன் வா.”

“யாரு நீ ? டேய் என் கடுப்பை கிளப்பாமல் போ.” என்று  கூறி கையில் பொறுக்கிக் கொண்டிருந்த கிளாசால் கீறி விட்டாள்.

கண்ணாடி துண்டு அவன் கையில் ஆழமாக இறங்கி இரத்தம்  கொட்ட தொடங்க வலி தாழாது “அம்மா” எனக் கத்திய வண்ணம் கையில் ஏறியிருந்த கண்ணாடித் துண்டை இழுத்து எடுத்தான்.இரத்தம் இன்னும்  அதிகமாய் ஒழுகி அவனது வெள்ளை நிற சேட்டை கறையாக்கியது.

Advertisement