Advertisement

Episode 10
வரமாட்டேன் என்று முறாய்ப்பாய் நின்றவளை அவனும் விடாது “தியா நீ இப்போது வரவில்லை என்றால் உன்னை குண்டுக்கட்டாக கடையிற்குள் தூக்கிக் கொண்டு போவது மட்டுமில்லாது ஊட்டிவிடவும் வேண்டி வரும். நான் செய்ய மாட்டேன் என்று நினைக்காதே…!” என்றான்.
“நான் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவேன் என்னடா செய்வாய்.” என்றாள்.
“நீ ஹொஸ்பிட்டலிலும் இந்த வசனத்தை சொன்னதாக எனக்கு ஞாபகம். அப்போது என்ன சொல்லி உன் வாயை அடைத்தேனோ அதே போல் இன்னொரு காரணம் என்னிடம் இருக்கிறது.அதை யாா் கேட்டாலும் பதில் சொல்லி நான் சமாளித்துக் கொள்வேன் நீ உன் வாயை சாப்பிடுவதற்கு மட்டும் திறந்தால் போதும் தாயே வா…….” என அவளை இழுத்துக்கொண்டு ஹோட்டலுக்குள் செல்ல எத்தணிக்க அவள் இந்த பெரிய ஹோட்டலுக்குள் நான் வரவில்லை என்று அடம்பிடித்தாள்.
“ஒன்று மாற்றி ஒன்று எப்படித்தான் புதுபுது காரணங்களை தோற்றுவிக்கிறாய் என்று தான் தெரியவில்லை….?” என அலுத்துக் கொண்டவன் பசியால் துடித்துக் கொண்டிருந்தான்.
அவளும் களைத்து ஓயந்திருந்தாள் தான்  ஆனால் அந்த பெரிய ஹோட்டலில் போய் உணவு உண்ணும் அளவிற்கு அவளிடம் பணமில்லை. இங்கு ஒரு நேரம் சாப்பிட  கொடுக்கும் பணத்திற்கு அவள் மூன்று நாளுக்கு மூன்று நேர உணவை தாராளமாக உண்பாளே…..! இங்கு விலைக்கேற்ற தரமும் இருக்கும்.அதற்காக அவள் சரியில்லாத உணவையா  உண்கிறாள். இல்லையே…?
இங்கே இவனுகள் போடுகிற ஏசிக்கும் இருக்கின்ற கதிரை,மேசைக்கும் சேர்த்தல்லவா பில் போடுவார்கள. அவளிடம்   தான் அவ்வளவு பணம் ஏது இவனிடம் கைநீட்டி விட்டு எப்படி உடனே திருப்பிக் கொடுப்பது என்று மிகப் பெரும் சங்கடத்தில் இருந்தவள். ‘இவன் என் நிலையை புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.’ என மனதுக்குள் நினைத்தவள் அப்படி அவளது கவலைகளை யாரும் புரிந்து கொள்ள நினைப்பவர்களாக இருந்தால் அவள் தனிமரமாக தவித்ததுக் கொண்டிருக்க மாட்டாளே…..!
அவனும் அவளிற்காகத் தான் வாதாடிக் கொண்டிருந்தான். அவளை அப்படியே விட்டால் இன்று சாப்பாடு என்ற ஒன்றை மறந்து பட்டினியாக கிடந்து விடக்கூடும் என்ற காரணத்தால் அவனும் பிடிவாதமாக சாப்பிட அழைத்து செல்வதில் குறியாய் இருந்தான். மற்றயது இன்னொரு காரணமும் இருக்கிறது.ஹொஸ்பிட்டல் பில் பற்றி அவள் கேட்ட போதே அவள் முகம் இறுகியிருந்தது. அப்போதே அவளிடம் கையில் போதுமானளவு பணம் இல்லை என்பது அவன் ஊகமாக இருந்தது.
எனக்கு கையேந்திபவன்ல வாங்கி உண்பது தான் பிடிக்கும் என அந்த மிகப்பெரிய ஹோட்டலின் முன் தள்ளுவண்டியில் வைத்து உணவினை ஒருதள்ளுவண்டிக்கடை வழங்கிக்கொண்டிருக்க அதனைச் சுற்றியும் பல மக்கள் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
இதுக்கா என்று மனதுக்குள் முகம் சுளித்தவன் “சரி வா நடையோர தள்ளுவண்டிக் கடைக்கே போகலாம்”. என்றான்.
‘என்னது ஹோட்டலுக்கு இவன் கூட போவதை டைவேட் பண்ணுவதற்காய் கையேந்திபவனுக்கு போகலாம் என்றால் அங்கேயும் போகலாம் வா…. என்கிறானே சரியான மண்டைக்கனம் பிடித்தவன்.’ போல என நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அவன் கையேந்தி பவன் அருகில் சென்று விட்டான்.அவளும் நேர்ந்து விட்ட கிடாய் போல அவன் பின்னால் சென்றாள்.அவர்கள் செல்லவும் அக்கடையில் உணவை முடித்த ஒரு ஐந்தாறு பேர் வெளியேறவும் அவர்கள் அமர்ந்திருந்த ஸ்டூல்கள் ப்ரீயாகின.அந்த ஸ்டூல் ஒன்றில் அவன் அவளை அமருமாறு சைகை செய்துவிட்டு,அவள் அமர்வதை திருப்தியாய் பார்த்த பின்னரே உணவை ஆடர் குடுக்கச் சென்றான்.
சிறிது நேரத்தில் இரண்டு தட்டுக்களுடன் அவளருகில் வந்தவன் ஒன்றை அவளிடம் கொடுத்து விட்டு அவளருகில் இருந்த ஸ்டூலில் அமர்தவன் அவளைப் பார்த்து “முட்டைத் தோசை தான் இருக்கிறதாம் நீ அது சாப்பிடுவாய் தானே என்றான்.
“ஆமாம் சாப்பிடுவேன் என்றாள். ஏன் அப்படி விசித்திரமாய் சாப்பிடுவியா….என்று கேட்கிறாய்.” என்றாள்.
“ஒன்றுமில்லை சும்மா தான் கேட்டேன்.” என்றவன் தன் தட்டில் இருந்தததை உண்ணத் தொடங்கினான்.
“நீயா? சும்மா கேட்கிற ஆளு.என்ன? விசயம் என்று சொல்கிறாயா இல்லை? இதை குப்பைத்தொட்டியில்
போட்டு விட்டு போய்க்கொண்டே இருக்கவா?” என்றவளை பாா்த்தவன் மறுபடியும் தன் தட்டைப்பார்த்து உண்ணத் தொடங்கினான்.அவனது செயல் அவளை வெறுப்பேற்றியது. இருடா என்னையே வெறுப்பேத்துறியா? என்றவள் தட்டை தூக்கிக் கொண்டு எழுந்தவள் எழுந்த வேகத்தில  பட்டென அமர்ந்து அவனை முறைத்தள்.ஏனெனில் அவன் கால் க்ரோஸ் போட்டு அவளை தடுத்திருந்தான்.
“என்னடி மனுசன் சாப்படும் போது கூட தொண்டையில் கை வைத்து நெரிப்பது போல என்னடி கேள்வி இது?” இப்ப நீ சாப்பிடுகிறாயா? இல்லை உன் காலுக்கு க்ரோஸ் போட்டது போல வாய்க்கும் ஏதாவது வைத்தியம் பண்ணணுமாடி? என்றான்.
“ஹலோ சும்மா சாப்பாடு வாங்கித்தந்து விட்டு சாப்பிடு சாப்பிடு என்றால் எப்படிச் சாப்பிடுவதாம்”என்று அவள் தன் கையை உயரத்திக் காண்பிக்க அவளது உள்ளங்கை இரண்டிலும் பன்டேஜ் சுற்றப்பட்டிருந்தது.
அதனகை் கவனித்தவன் முகம் மிருதுவாயிற்று. “ஹே சாரி… டி… என்றவன் சரி நீ வாயைத்திற நான் உனக்கு ஊட்டி விடுகிறேன்.” என்றான்.
“என்னடா…. தம்பி உனக்கு குளிர் விட்டு போய்விட்டதா? கண்ணடிச்சதற்காக தானே ஹொஸ்பிட்டல் வரை வந்தாய்… மறந்திட்டியா…?” என்றாள்.
அவளது தம்பி என்ற அழைப்பிலேயே  அவன் உலகம் சுற்றுவது போல இருந்தது. “ஏய்… ஏய்…. என்னடி சொன்னாய் தம்பி என்றா என்றவன் முகம் வேப்பெண்ணெய்யை தொட்டு நக்கினால் முகம் எப்படி மாறுமோ அது போல மாறியது. “தியா வேணும் என்றால் என்னை உயிர் போகும் வரை மாற்றி மாற்றி குத்தி உன் ஆத்திரத்தை அடக்கிக் கொள் பட் என்னை தம்பி என்று கூப்பிட்டு தொலைக்காதே…!” என்றவன்” தனது உணவுத்  தட்டை எடுத்து குப்பைத்தொட்டியில் எறிந்தவன் அவளது உணவை வாங்கி இன்னும் இரண்டு முட்டைத் தோசைகளை வைத்து பார்சலாக கட்டித்தருமாறு கூறியவன் அவரகள் பார்சலாக கட்டிக் கொடுத்த உணவுப்பொட்டலத்தையும் மேலதிகமாக மினரல் வோட்ர் பொட்டிலையும் வாங்கிக் கொண்டு பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு,அவளை மணிக்கட்டில் பிடித்த பிடியாக இழுத்துக் கொண்டு போய் காருக்குள் ஏற்றி கதவை அறைந்து சாத்தியவன் காரை ஸராட் செய்து  வேகமாக ஒட்டினான்.
“நான் இன்னும் கைகூட கழுவவில்லை. அதற்குள் உனக்கு அவ்வளவு அவசரமா?” என அவள் முனக. “இந்தா  இதால் துடை” என அவனது கைக்குட்டையை அவள் மீது தூக்கிப்போட்டான்.
“ஆமாம். இப்போது எதற்கு இவ்வளவு ஸ்பீடாக போகிறாய்.”
“வாயை மூடிக்கொண்டு பேசாமல் வாடி.வாயில நல்லா வந்திடும்.”
“இப்போது நான் என்ன சொல்லி விட்டேன் என்று இவ்வளவு கொந்தளிக்கின்றாய்.”
“ப்ளீஸ்  தியா டோன்ட் ரோக்.இதுக்கு மேலேயும் எதுவும் நீ பேசி என்னை டெம்ப் பண்ண வேண்டாம். என்னை காரையாவது நிம்மதியாக ஓட்ட விடு…..”
“முடியாது இப்போது நீ என்ன என்று சொல்லு  என்று அவள் வற்புறுத்தவும் அவன் சாலையோரம் காரை சடன்ப்ரேக் போட்டு நிறுத்தினான்.”
அவன் போட்ட ப்ரேக்கில் முன்பக்கமாக இருந்த டாஸ்போட்டை தலையால் முட்டிவிட்டு வந்தவள் “உன்கூட கார்ல வருகின்ற காரணத்துக்காக என்னை கொலை பண்ணுகின்ற அளவிற்கு போய் விட்டாயா?” என்று அடிபட்ட தலையை தடவிக்கொண்டாள்.
“சீட்பெல்ட் போடணும் என்கின்ற கொமன் சென்ஸ் கூட உனக்கு இல்லையா?” என்று கூறியவன் அவளது
தலையை அழுத்தி தேய்த்து விட்டான்.
உன் கரசனத்துக்காக யாரும் ஏங்கிக்கிடக்வில்லை…..  தம்பி கையை எடு என்றது தான் தாமதம் அவளது தலையை தேய்த்து விட்டுக் கொண்டிருந்தவனின் கைகள் அவள் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தது.அவளும் அதே வேகத்துடன் அவனது கையை தட்டி விட்டவள். “ உன்னை எனக்கு இரண்டு நாளாய்த்தான்டா தெரியும் அதற்குள்ளே…. நீ எனக்கு கண்ணடிச்சாய் இப்போதென்னவென்றால் கழுத்தை நெரிக்கிறாய். உனக்கு என்ன தாண்டா பிரச்சனை.” என்று அவளும் சீறினாள்.
“உனக்கு நான் தம்பியாடி…..”
ஓ….ஓ அது தான் சேருக்கு கோபம் வருகுதோ? அப்படி என்றால் உன்னை சும்மா விடக்கூடாதே…..! என அவள் குறும்பு கூத்தாட மனதிற்குள் சிரித்தவள் “சாரி…சாரி என்னை விட உனக்கு எப்படியும் நாலைந்து வயதேனும் கூட இருக்கும்.உன்னை நான் தம்பி என்றால் மரியாதை குறைவாக இருக்காகது. அதனால் இனி உன்னை அண்ணாத்தை என்று தான் சொல்லப் போகிறேன். சரியா அண்ணாத்தை” என்றாள்.
அவனுக்கு அவள் சொல்வதைக்கேட்டு வந்த கோபத்தில் அவளது முகத்தை  அவனது கையால் அழுத்தி அவளது உதடுகளை பாரத்தவனுக்கு அவனது மனைவி அருகில் இருக்கிறாள்.அதுவும் அவன் கைப்பிடியில் இருக்கிறாள் என்ற நினைவே அவனைச்சுற்றி என்ன நடக்கின்றது  என்பதை மறக்கடித்திருக்க அவன் அவளின் இதழ் நோக்கி குனிந்து அவளது உதடுகள் நோக்கி சென்றவன் கடைசி நிமிடத்தில் என்ன நினைத்தானோ ச்சை….. என்று அவள் முகத்தில் இருந்து கையை எடுத்தவன் தனது முகத்தையும்  திருப்பிக் கொண்டவன் கார் ஸ்ரயரிங்கில் தன் கையை குத்திக் கொண்டு தன் தலைமுடியை அழுந்தக் கோதிக்கொண்டவன் அவள் முகத்தை திரும்பிப் பாராது “ஐ ஆம் ரியலி வெரி சாரி தியா.வந்ததிலிருந்தே உன் விசயத்தில் எல்லாமே தப்பு தப்பாய் முடிகிறது.”என தன்னைத் தானே நொந்து கொண்டான்.
அவளும் அவனை நன்றாக சீண்டி விட்டோம் என உணர்ந்ததனால் அமைதியாகேவே இருந்தாள்.
“அவளது அமைதியைக் கலைத்தவன் தியா நீ சாப்பிடவே இல்லை சாப்பிடுகிறாயா…..?” அவள் எதுவும் பேசாது அமைதியாக சாலையை வெறிக்க அவளது  மௌனத்தை சம்மதமாகக் கொண்டவன் கார் வின்டோவை ஓப்பின் பண்ணி இருந்தவாறே எட்டி கைகளை கழுவியவன் உணவுப்பொட்டலத்தை திறந்து தோசையை ஒரு விள்ளல் எடுத்துக் கொண்டு, “தியா இந்தப்பக்கமாக திரும்பு” எனவும் அவள் திடீரென திரும்பவும் அவள் வாயருகே இருந்த தோசையை அப்படியே இன்னும் நெருக்கமாக உதடுகளில் தொடுவது போல அவன் வைத்துக் கொண்டிருக்கவும் அவள் தன்னிலை உணர்ந்து வாயைத்திறந்து வாங்கிக் கொண்டவள் அவன் ஊட்ட ஊட்ட ஊண்டு முடித்தாள்.அவன் தண்ணீர் போத்தலையும் திறந்து அவளிடம் நீட்ட அதையும் வாங்கிக் குடித்தவளிற்கு அப்போது தான் பேச்சு வந்தது. “எல்லாத் தோசையையும் எனக்கு தந்து விட்டு நீ இன்று பாதிப்பட்டினியாக கிடக்கப் போகிறாயா…?” என்றாள்.
“பரவாயில்லையே….. இப்போவாவது உனக்கு கேட்கவேணும் என்று தோன்றியதே…..அதுவே எனக்கு வயிறு நிரம்பியது போல இருக்கிறது என்றவன் அவள் குடித்து விட்டு வைத்த தண்ணீரை எடுத்து அவன் தன் தொண்டையினுள் சரித்துக்கொண்டான்.
“ரொம்ப  ரொம்ப நன்றி.” என்றாள் மிகுந்த அமைதியாக….
“அடடே தியா நீயா பேசுறது?அப்படியன்றால்  உன்னை இனிமேல் அமைதியாக பேச வைக்க வேண்டுமென்றால் அதற்கு செம ஐடியா இருக்கிறது.” என்றான்.
“என்ன? என்ன? ஐடியா சொல்லு…..” என்றவளைப்பார்த்து புன்னகைத்தவன் “சொல்கிறேன் நீ பிறகு குஸ்தி மாஸ்ரர் ஆகி என்னை பந்தாடமாட்டேன் என்று சத்தியம் பண்ணு நான் சொல்கிறேன்.” என்றான்.
அவள் “சர சரி சத்தியம் என்னவென்று சொல்லு” என்றாள்.
“ம்ம்…”  என அவன் இழுக்கவும் அவளது விழிகள் கோபத்தில் விரிவதைக் கண்டவன் “சொல்லுகின்றேன் தாயே உனக்கு கோபம் வரும் போது உன்னக்கு முட்டைத்தோசையை தந்தால் நீ சைலண்ட் ஆகிவிடுவாயில்ல தியா.” என்றவன் விரல்கள் ஸ்ரயரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது.
“ஓஓஓஓ……. நீ என்னை நேரடியாகவே சாப்பாட்டுராமி என்று சொல்லாமே…. எதற்கு சற்றி வளைத்து பவுடர் போடாதே என்ன.” என்றவள் அதுசரி தள்ளுவண்டிக் கடையில் முட்டைத்தோசையை தந்து விட்டு சாப்பிடுவியா என்று விசித்திரமாக கேட்டனீ……”.என்றாள்.
விடமாட்டா போலயே என்று நினைத்துக் கொண்டு “இன்று வெள்ளிக்கிழமை” என்றான்.
“அது எனக்கு தெரியாது பார் என்றவள் அதற்கும் இன்று வெள்ளிக்கிழமை என்பதற்கும் என்ன சம்மந்தம” என அவள் புரியாது குளம்பினாள்.
இல்லை முட்டை அசைவம் என்பதால் இன்று வெள்ளிக்கிழமை எனபதாலும் எங்கே நீ சாப்பிடாமல் இருந்து விடுவாயோ என்று நினைத்தேன்.” என்றான்.
‘எனக்கு மூன்று நேரம் நிம்மதியாக சாப்பிடுவதே பெரிய பிரச்சனையாக இருக்கு இதில் இவன் வெள்ளி, சனி என்று நாள் கிழமை பார்க்கிறான்.’என்று மனதுக்குள் நினைத்தவள் “ஏன் வெள்ளிக்கிழமையில் முட்டைத்தோசை சாப்பிட்டால் வயிற்றுக்குள் போகாதா?” என்றாள்.
“இல்லைத்தாயே…! உன்னுடைய ப்பிலோசபியைப்பற்றி நான் எதுவும் கேட்கவில்லை.நான் உன்னிடம் வெள்ளிக்கிழமை பற்றி பேசியது தவறு தான்.” என கைஉயர்த்தி பின்வாங்கினான்.
“சரி இப்போது என்னைக் என் றூமில் விடுகிறாயா?”என்றாள்.
“ம்…. சரி பாதையை சொல்லு” என்றவன் அவள் இடத்தை நோக்கி செலுத்தினான்.அவளது இடம் வருவதற்கு நூறு மீற்றர் தூரம் முன்னால் அவள் நிறுத்தச் சொல்லி இறங்கிக்கொண்டாள்.
அவன் புரியாது பார்க்கவும் தவறாக நினைக்காதீர்கள்.எனக்கு யாருமில்லை என்று தெரிந்து தான் வீட்டுக்கார அம்மா வீடு கொடுத்தார்கள்.இந்த நேரத்தில் உங்கள் காரில் போய் இறங்கினால் தவறாகி விடக்கூடும்.” என்றவளை இமைக்காது பார்த்தவன் பார்வையில் இருந்த அர்த்த்ததை அவள் புரிந்த கொள்ளும் நிலையிலில்லை. வருகிறேன் என்ற தலையசைப்புடன் அவள் அடியெடுத்து வைக்கவும் அவன் கார்க்கதவை திறந்து இறங்கியவன் “தியா ஒரு நிமிசம்” எனவும் நின்றநிலையிலே
திரும்பிப்பார்த்த தியா என்ன எனபது போல் பார்வையால் வினாவினாள்.
அவன் கையிலிருந்த துணிப்பையுடன் அவளருகில் வந்து “இதை நீ மறந்து விடவில்லை.” என்று தெரியும்.அதனால் கொண்டு செல் என்றான்.
“இல்லை….” என அவள் இழுக்கவும் அவன் “ஏற்கனவே இதற்கான விளக்கம் தந்து விட்டேன் என நினைக்கின்றேன்.இதற்கு மேலும் நான்  இங்கே நின்று விளக்கம் தரவும் தயார்.உன்னிடம் யாரும் இரண்டு பேரும் ரோட்டில் நின்று தர்க்கம் செய்வதை பார்த்தால் நன்றாயிராது.” எனவும் அவள் செய்வதறியாது திகைத்தவள் அவனது கையிலிருந்த துணிப்பையை பறித்துக்கொண்டு ‘விறுவிறு’ என தன் இடத்தை நோக்கி நடந்தாள்.
உனக்கு அடிக்கடி ஷாக் ட்ரீட்மென்ட் குடுத்தால் தான் சரிப்பட்டு வருவாய் என தனக்குள்ளே பேசிக்கொண்டவன் காரை லொக் போட்டு விட்டு அவளைத் தொடர்ந்து நடந்தவன் அவள் அவளது இடத்திற்குள் சென்று மறையவும் ‘ஓஹோ இது தான் உன்னிடமா? கண்டு பிடித்தாயிற்று.’என மனதிற்குள் நினைத்துக் கொண்டு  இது எந்த இடம் என அந்த குறுகலான அந்த வீதியில் நின்று சுற்றிப்பார்த்தவனிற்கு அவன் தினமும் பாரக்கும் பரீட்சயமான இடம் போல் இருக்கிறதே என யோசித்துக் கொண்டு சுற்றியிருந்த வீடுகளைத்தாண்டி மேலே பார்த்தவன் அசந்து போய்ப்பார்த்தவன் அப்படியே நின்றான்.ஏனெனில் சுற்றியிருந்த ஓட்டு வீடுகளை தாண்டி உயரமாக தெரிந்தது.அவனது மாடிவீட்டின் பின்பக்கமும் அவனது றூம் பினபக்க கதவும் அத்தோடு சேர்த்து அமைக்கப் பெற்ற  ரெரஸ்சும் தான்.அவன் ப்ரீயாகவோ அல்லது சீரியசாக இருக்கும் போதோ அவன் விரும்பி அமரும் இடம் அதுதான். அவன் அங்கிருந்து அவன் ஒவ்வொரு நாளும் பார்க்கும் போது அவளது இடம் தெரியும்.அவன் மேலேயிருந்து வழமையாக பார்ககும் இடம் இன்று அருகில் பார்க்கவும் சற்று நேரம் புரியாது திகைத்து உண்மை தான்.அவன் வீடு மெயின் ரோட்டைப் பார்த்து முன்பக்கம் இருப்பதனால் பின் பக்கமாக அவனது தாய்,தந்தை வருவது குறைவு பாதி நேரம் குடித்தனம் நடாத்துவது இந்த ரெரசில் தான்.ஏன் ?தூக்கம் வராத நாட்களில் ரெரசில் படுத்துக் கொண்டு வானத்தை பாரத்துக்கொண்டும், சுற்றியுள்ள மரங்களில் இருந்து வரும் பறவைளின் சத்தத்தை ரசித்துக்கொண்டும்,சிலுசிலுக்கும் தென்றல் அவனை வருடிச்செல்ல அவன்தூங்குவான்.   இந்த நிமிடத்தில் இருந்து அவனது மொத்த நேர குடியிருப்பே அவனது அறையின் பின்பக்மாக இருக்கும் ரெரஸ் தான்.அப்படியென்றால் தானே அவளை அங்கிருந்து பார்க்கமுடியும். என பலவாறான கற்பனையுடன் காரை செலுத்தினான்.

Advertisement