Advertisement

Episode 09
அவன் கூறுவதை மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து “காயம் ரொம்பவும் ஆழமாக பட்டுவிட்டதா….” என்றவளின் குரல் உள்ளே போயிருந்ததுடன் அவள் கண்களும் கலங்கியிருந்தது.
“இட்ஸ் ஓகே தியா தப்பு என் பேரிலும் தான்.”என்றான்.
“தையல் போட்டிருக்கா என்றவள் எத்தனை..” எனக் கேட்டாள்.
“ஏழு என்றவன் சரி விடு தியா நடந்தது நடந்து விட்டது இனி இப்படி பட்டென ரென்சன் ஆகுவதை நிறுத்து அது  மற்றவர்களுக்கும் ஆபத்து உனக்கும் ஆபத்து ” என்றான்.
“ஐ ஆம் ரியலி சாரி சேர்.நானும் அவசரப்பட்டு அப்படி கண்ணாடிக கிளாசால் குத்தியிருக்க கூடாது மறுபடியும் என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள்.
“இல்லை சேர் நான் தனியே இருக்கிறதால் அப்படி இருக்கும் என நினைக்கின்றேன் என்றவள் யுனிவசிட்டியிலும் ஒரு சிங்களப் பையன் என்பின்னாலேயே திரிஞ்சான் என்ன சொன்னாலும் கேட்கவில்லை ஒரு நாள் ரொம்பவும் வம்பு பண்ணினான் அப்போ அவனை என்ன சொல்லி டைவேட் பண்ணுறது என்று புரியாது ரொம்ப டென்சன் ஆகி ரோயிங் வரைகின்ற பென்சிலால் அவன் எனக்கு பக்கத்தில் வந்த உட்காரவும் அவன் சீட்டுக்கு கீழே வைத்து விட்டேன். பென்சில் அரைவாசிக்கு மேல் ஏறிவிட்டது. அதுக்கு பிறகு தான் எனக்கு நிம்மதியே….. என்றாள்.”
அவன் திடுக்கிட்டுப் போய் அவளைப் பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவனது நெஞ்சை யாரோ கொதிக்கும் சுடுநீரில் போட்டு மிதக்க விடாது அமிழ்த்துவது போல வலியால் துடித்தான்.எல்லாம் அவனால் தான் அவன் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் இவள் மானத்தைக் காத்துக் கொள்ள வன்முறையில் சென்றிருக்க மாட்டாள். நான் ஒரு சுயநலப்பிறவி இதைப் போன்று எத்தனை சம்பவங்களில் இருந்து தப்புவதற்காக என்னென்ன ஆபத்துக்களை தோற்றுவித்தாளோ தெரியவில்லையே தன் மனதை மனதுக்குள்ளேயே கீறிக்கிழித்துக் கொண்டிருந்தவன் கேட்ட எனக்கே இப்படி
வலிக்கிறதே….! இத்தனை கொடுமைகளையும் அனுபவிக்கும் போது இவள் வேதனை மிகப் பெரிதே….என தன்நினைவில் இருந்தவனை அவள் குரல் நிஜ உலகிற்கு கொண்டு வந்தது.
“அப்புறம் சேர் ஓரு செமிஸ்ரர் எக்ஸாம் எழுத விடவில்லை அவ்வளவு நாளும் வெளியே கமபியூட்டர் கோர்ஸ் இரண்டும் ஒரு பியூட்டிசன் கோர்சும் மிச்ச நேரம் சூப்பர் மார்க்கட் ஒன்றில் பாட்ரைம் வேலைக்கு போனேன் என்றாள்.
அவன் பேச நாவெழாது அப்படியே இருந்தான். அவன் பேசாது இருப்பதைப் பார்த்தவள்  “சாரி சேர் இப்படி பல பிரச்சனைகளை நான் பேஸ் பண்ணியிருக்கிறேன். இன்றைக்கு உங்களுக்கு… நாளைக்கு எவனோ? யார் பெத்த பிள்ளையோ என்கிட்ட வாங்கி கட்டிக்க போறான் என்றுதெரியல்ல…”
என்றவளை பார்த்துக் கொண்டு இருந்தவன் “இப்படி பண்ணுவது உனக்கு என்ன பெருமையா?” என்றான்.
“இது பெருமை என்று நான் எப்போது சொன்னேன். இது என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு வழி என்றாலும் இதனால் வர்ற இழப்பும் அதிகம் தான்” என்றாள்.
“இப்ப கூட உங்களை குத்திவிட்டேன். அதனால் எனக்கும் காயம்.அப்புறம் கொஸ்பிட்டல் செலவு. நீங்க வேற ப்ரைவேட்ல அட்மிட் பண்ணி விட்டிருக்கிறீர்களா? இந்த மாச சம்பளத்தையே பிடுங்கி விடுவார்கள் அப்புறம் பாதி நாள் பட்டினி. இன்றைக்கே டிஸ்சார்ச் பண்ணினால் நல்லா இருக்கும். ஒவ்வொரு முறையும் என் மானத்தை பாதுகாக்க என் உயிரை பணயம் வைக்கிறேன்.இதுல எங்கே சேர் பெருமை இருக்கிறது.அடுத்ததாக எவன் வாலாட்டப் போகிறான் அதை எப்படி தடுப்பது என்ற பயமும்,பதட்டத்திலுமே என் நாட்கள் கழிகின்றது.” என்றாள்.
“பட்டினி என்றால் சாப்பிடாமல் இருப்பியா….தியா.”
“பட்டினி என்றால் சாப்பிடாமல் இருப்பது என்று தான் அர்த்தம் என்று நான் நினைக்கிறேன்.” என்றாள்
“ச்சு… தியா  மூன்று நேரமும் சாப்பிடாமல் எப்படி…?” என அவன் கேட்க “அதுவா சேர் தண்ணீர் என்ற ஒரு பொருள் இருக்கின்றதனை மறந்து விட்டீர்களா? என்றவள் இப்பாது வேலை கிடைத்த பிறகு மூன்று நேரமும் சாப்பாடு ஓகே தான்.வேலை கிடைக்க முன்…. சரி சேர் என்ர கதையை விடுங்கள் அது அவ்வளவு இன்ரஸ்ற்ராக இராது எனக்கே அதை நினைக்க பிடிக்காது.என்றவள் நாம் போகலாமா? இல்லையா? என்று கூட தெரியவில்லையே….! இந்த அகில் லூசு… ஆளைக்காணமே…. இவ்வளவு நேரம் என்ன பண்ணுகிறான் என்று தெரியவில்லையே…..! உங்களிற்கு ஏதாவது சொன்னானா என்று அவள் வினவ,அவன் அதுக்கு..
“தியா அவன் அப்பவே வீட்டுக்கு போய்விட்டான். என்கிட்ட சொல்லிவிட்டு தான் போனான்.” என்றான்.
‘என்னது போயிட்டானா….? என்கிட்ட சொல்லாமல் போய்விட்டானே…… பாவி பில் எப்பிடி கொடுக்கிறது என் கைப்பை வேற ஆபிசில் இருக்கிறதே’ என யோசித்த வண்ணம் இருந்தவளை அவன் அழைத்து  “தியா இப்போது உனக்கு ஓகே என்றால் நாம் கிளம்புவோமா?” என்றான்.
“ம்…. அது….. பில்  செட்டில் பண்ண வேணுமே” என்றவள் முகம் களையிழந்து இருந்தது.
“அதை அகில் முதலலேயே செட்டில் பண்ணிவிட்டான். இனிமேல் கிளம்பலாமா?” எனறான்.
“ஓகே” என்றவள் கொடுக்கப்பட்ட இருவரது மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.
வெளியே வந்து அவர்கள் நிற்க அவனது காரை அவனது ட்ரைவர் கொண்டு வந்து நிறுத்தவும் “தியா ஏறு”என்றான்.
அவள் தயங்கியபடி நிற்கவும் அவன் “என்ன” என்றான்
“இல்லை சேர் என்னை பஸ்ராண்டில் இறக்கி விடுங்கள்.நான் போய்க் கொள்வேன்.” என்றாள்.
“எப்படி……? நடந்தா? என்றவன் தியா தயவுபண்ணி ஏறு உன் ஆா்கியூமென்ட்ஸ் எல்லாத்தையும் மூட்டை கட்டி வை.எனறவன் அவளை காருக்குள் தள்ளி தானும் ஏறிக் கொண்டு கதவைச் சாத்தி விட்டு ட்ரைவர் வண்டியை எடுங்கள்.” என்று பணித்து விட்டு அவளை ஓரக் கண்ணால் பார்த்தவன் அவளை உள்ளே தள்ளி விட்டதற்கு திட்டுவதற்கு தயாராகின்றாள் என்பதை உணர்ந்தவன் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து, தலையை பின்பக்கமாக உள்ள இருக்கையில் சாய்த்து கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.
அவன் கண்ணை திறப்பான் என எதிர்பார்த்து அவனையே திரும்பி திரும்பி பார்த்து சலித்தவள் என்ன செய்து அவனை எழுப்பலாம் என நினைத்தவள் அவள் குறும்பு மனம் கூத்தாட தனது துப்பட்டாவின் நுனிப்பகுதியை சுருட்டி அவனது மூக்கிற்குள் விட்டுவிட்டாள். அவனும் தீடீரென இச்செய்கையால் ஏற்பட்ட கூச்சத்தால் அவள் பக்கமாகமாகவே இரண்டு மூன்று தும்மல்களை தும்மியவன் தன் செயல் உணர்ந்து “சர…ரி சாரி தியா.” எனவும் அவளுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “சேருக்கு தும்மல் வந்தால் எப்படி தும்ம வேணும் என்று தெரியாது போல” என்றாள்.
என்ன இவ பேச்சே சரியில்லையே…… என்று அளது கை போன திசையைப் பார்த்தவன் அவளது கை முறுக்கி வைத்திருந்த துப்பட்டா  நுனியை அவசரஅவசரமாக குலைத்து விடுவது தெரிந்தது.”ம்கூம்….. உன் வேலை தானா இது? வாய் இங்கே பேசுது கையும் கண்ணும் கீழே இருக்கும் போதே நீ தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும் என ஊகித்தவன்.பட்டென அவள் துப்பட்டாவை பறித்து தனது முகத்தை துடைத்து விட்டு திருப்பிக் கொடுக்கும் போது தான் அவளை திரும்பி பார்த்தான் அவன் துப்பட்டாவை இழுத்த வேகத்தில் அவளது சுடியுடன் சேப்டிபின் குத்தியிருந்ததால் அது இழுபட்டு சுடிதார் தோள்பட்டை கிழிந்திருந்ததையும் அவள் அதை கையால் அதை மறைக்க சிரமப்படுவதையும் கண்டவன் கையிலிருந்த துப்பட்டாைவை அவள் மீது போர்த்து விட்டவன்  ட்ரைவரை நோக்கி“ட்ரைவர் வண்டியை சைட் பண்ணுங்கள் என்றவன் கார் நின்றவுடன் கதவைத் திறந்து கொண்டு இறங்கி ட்ரைவர் அருகில் போய் ட்ரைவர் நீங்கள் இங்கிருந்தே கிளம்புங்கள்.” என பஸ்சுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு அவனே காரை ஓட்டியவன் அங்கிருந்த பெரிய துணிக்கடை முன்பாக நிறுத்தியன் அவளை காருக்குள்ளே அமரும்படி கூறியவன் துணிக்கடைக்குள்ளே சென்றவன் லேடீஸ் செக்சனுக்குள்ளே சென்று கண்ணை கவர்ந்த சுடிதார் அயிட்ரங்களை ஏழெட்டு செலக்ற் பண்ணியவன் இவ்வளவையும் கொண்டு போய் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மறுப்பு தான் தெரிவிப்பாள் என்று நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் ஒரே பையில் அடங்கும் வகையில் வைத்து பாக் பண்ணி தருமாறு கேட்டு வாங்கினான் அது கொஞ்சம் பெரிய பையாகவே இருந்தது.அதை கவுண்டரில் இருந்து பில் செட்டில் பண்ணி வாங்கும் போதே அவனுக்கு உதைத்தது அவள் இதை வாங்கிக் கொள்வாளா? என்று…. என்ன நடந்தாலும் கொடுத்து விட வேண்டும் எனபதில் உறுதியாக இருந்தான்.
அவன் கடைக்குள் இருக்கும் போதே அவள் உடையை சரி செய்து விட்டு அவனுக்கு அர்ச்சனை நடாத்திக் கொண்டிருந்தாள்….. ‘இருந்த ஐந்து செட் சுடிதாரில் ஒன்று போயிடுச்சே….. இவனுக்கு என்கூட வம்பிழுக்கிறதே வேலையாய் போய்விட்டது.என்று திட்டும் போதே தான் அவன் மூக்கிற்குள்ளே துப்பட்டாவை சுருட்டி விட்டதனால் தானே அவன் இழுத்தான்’என யோசித்துக் கொண்டே அவன் பக்கமாக யோசித்த மனதை அடக்கிக் கொண்டு தனது சிந்தனையை வீதியில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது செலுத்தினாள்.
கடையிலிருந்து வெளியே வந்த செந்தூர் காருக்குள் ஏறி அவளை திரும்பி பார்த்தவன் அவள் தன்னை அஜெஸ்ட் பண்ணியிருப்பது தெரிந்தும் அவன் கையிலிருந்த பார்சலை அவளிடம் நீட்ட  அவள் அதை வாங்காது என்ன என்பது போல் பார்க்க “தியா இது உனக்கு தான்” என்றான்.
“எனக்கு வேணடாம்.”
என்னால் தானே உன் சுடிதார் டமேஜ் ஆனது,உன்னைப் பார்த்து நான் கண்ணடிச்சதால்தானே கொஸ்பிட்டல் வரை வந்து உன் பாதி சலரி போனது. அது எனக்கு ரொம்ப கில்டியாக இருக்கிறது.அதுக்கு ஈக்குவல் பண்ணின மாதிரி நினைத்து வாங்கு தியா” என்றான்.
“முடியாது என் ஒரு சுடி தான் டமேஜ் ஆனது. இதில் நிறைய இருக்கும் போல பை இவ்வளவு பெரிசா இருக்கிறதே” என்றாள்.
“தியா ப்ளீஸ்  கை வலிக்குது பிடி என்று வலியால் முகம் சுழிக்க அவன் முகத்தை நிமர்ந்து பார்த்தவிட்டு பையை கையில் வாங்கி அருகே வைத்தவள்.மற்ற கை தான் நல்லா இருக்கே அதை யூஸ் பண்ணுவதற்கென்ன என்று சிடுசிடுத்தவள் கை ரொம்ப வலிக்குதா” என்றாள்.
“இல்லை. சைத்தான் வேதமோதுவதென்பது இது தானா தியா.நீயே கையை கிழிக்கிறாய் இப்போதென்ன என்றால் வலிக்குதா என்று கேட்கிறாய்.” என்ற செந்தூரைப் பார்க்காது தலையை குனிந்திருந்தாள்.அவளை சீண்டும் வகையில் தியா உன் முகத்தை தயவுசெய்து சீரியசாக வைக்காதே அதைப் பார்பதற்கு சகிக்கவில்லை” என்றான்.
“உன்னை யாரும் என் முகத்தை சகித்துக் கொள்ள சொல்லவில்லை.நீ ஏன் என்முகத்தை பார்க்கிறாய் நேரே பாதையைப் பார்த்து வண்டியை ஓட்டு இல்லை என்றால் உன் முகம் சகிக்கமுடியாமல் போய்விடும் பரவாயில்லையா?” என்றாள்.
“அப்போது நான் வண்டியை விபத்துக்குள்ளாகி விடுவேன் என்கிறாயா? கூட நீயும் தான் வருகின்றாய் மறந்து விட்டாய் போல” என்றான்.
“நான் தான் ஏதும் நடக்கப் போகிறதென்றால் கதவை திறந்து வெளியே குதித்தாலும்  குதிப்பேனே தவிர உன் கூட வரமாட்டேன்”என்றாள்.
“ஏன் தியா உனக்கு சொந்தக் காசிலே தான் சூனியம் வச்சுப்பழக்கம் என்று தெரிந்தும் உன்கிட்ட பேசியது என் தவறு தான்” என்றான்.
“ஆமாம் நாங்கள் சொந்தக்காசில்  சூனியம் வைக்கின்றோம்.இவர் பக்கத்து வீட்டுகாரன் காசை எடுத்து சூனியம் வைப்பாராம்.வண்டியை பார்த்து ஓட்டு என்பதற்கு இத்தனை பேச்சு எனக்கு தேவை தான்” என்று அலுத்துக் கொண்டாள்.
“அவன் எதுவும் பேசாது காரை நிறுத்தவும் “என்ன  காரை நிறுத்தி என்னை வதைக்கப் போகிறாயா” என்றாள்.
“இல்லைடி உன்கிட்ட அடி,மானம்போற அளவிற்கு பேச்சு எல்லாம் வாங்கியும் இந்த சொரணை கெட்ட வயிற்றுக்கு பசிக்கிறதே.பெபோமன்ஸ் பண்ணின உனக்கு சந்தோசத்தில் பசிக்கவில்லை போல” என்றான்.
“பசிக்கிறது. நீ சீக்ககிரமாக கொண்டு போய் என்னை என் இடத்தில் விட்டாய் என்றால் நான் என் றூமுக்கு போய் நூடுல்ஸ் போட்டு சாப்பிடுவேன். நீ என்ன என்றால் காரை நிறுத்தி கதையளக்கிறாய்” என்றாள்.
“நீ நூடுல்ஸ் தானே தொடர்ந்து சாப்பிடுவாய்.அது தான் போல உன் தலைமுடியும் நூடுல்ஸ் மாதிரி சுருள் சுருளாக ரொம் நீட்டாக வளர்ந்து இருக்கிறது”என்றான்.
உனக்கு பசி மயக்கத்தில் என் தலைமுடி நூடுல்ஸ் மாதிரி தெரிகின்றது என்று நினைக்கிறேன்.தயவு செய்து என் தலைமுடியை கடித்து சாப்பிட்டு விடாதே” என்று விட்டு அளது தலைமுடியை அவன் நூடுல்ஸ் என்று அதனை வாயால் கடிப்பது போல கற்பனை தோன்ற அவளுக்கு சிரிப்பு மலர்ந்தது.
“நான் ஒன்றும் நீ மனதுக்குள்ளே  நினைக்கின்ற மாதிரி உன் தலையைக் கடிக்கமாட்டேன் இதுக்கு மேலேயும் நீ லேட் பண்ணுவதென்றால் நிச்சயமாக உன் மூக்கு,வாய்,கன்னம் எல்லாவற்றிலும் சதை இருக்காது பரவாயில்லையா? என்பது போல் பார்க்க அவள் மறுபடியும் கற்பனைக்கு செல்ல அவன் அதை கலைத்தான்.”அம்மா தாயே உன் மைண்ட் வாய்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கு” என்றான்.
‘இவன் எப்படி என் மைண்ட வாய்கச கட்ச்’பண்ணினான். என்று யாசிக்கும் போதே அவன் அவளை தடுத்து “உலகத்திலேயே இல்லாத மைண்ட் வாய்ஸ் பாரு அது தான் மானங்கெட்ட உன் மைண்ட் வாய்சை கட்ச் பண்ணிவிட்டேன்” எனக்கூறி அவளை கடுப்பேற்றினான்.
“மைண்ட் ரீடிங் படிச்சியா… நான் நினைக்கிறதை அப்படியே சொல்றியேடா”…..என வியந்தாள்.
‘நீ நினைக்கிறதை சொல்ல உன் முகத்தை பாரத்தாலே போதமேடி’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு உன் மைண்ட் வாய்சை கண்டு  பிடிக்க நான் ஏன்? மைணட் ரீடிங் படிச்சிருக்கணும் அது தான் ஊருக்கேட்குதே”
என்றான்.
“அப்படியா? நீ ரொம்ப பேசுகிறாய்….. எனக்கு பசிக்கவில்லை நீ போய் சாப்பிட்டு வா அதுவரைக்கும் நான் உன் காரில் இருந்து காற்று வாங்கப்போகறேன்.” என்றாள்.
“அது தான் தெரியுமே….! நீ காற்றை குடித்து பசியாற்றிக் கொள்கின்றவள் என்பது. இன்று அந்த மெதேட்டை விட்டுவிட்டு என்னுடன் சாப்பிட வா. உனக்கு சாப்பாடு தராமல் நான் மட்டும் சாப்பிட்டால் எனக்கு வயிறு வலிக்காதா….. உன்கிட்ட எத்தனை அடி, உதை எல்லாம் வாங்கி விட்டு கடைசியாக பட்டினி போட்டு கொல்லுகின்ற அளவு கொடுமைக்காரியாடி நீ.உன்னைப் பார்த்தால் அமைதியாய் ,அடக்கமாய்,அப்பாவி போல இருந்து கொண்டு உள்ளுக்குள்ளே அத்தனை சாடிஸ்ற் குணத்தையும் உனக்குள்ளே ஓழிச்சுவைச்சிருக்கடி…”
என்றான்.
“ஹலோ ஹலோ  என்ன மரியாதை தேயுது….. பொண்ணுங்களுக்கு மரியாதை குடுக்க தெரியாதா?”என்றாள்.
“என்னடி ஃபோனா கதைக்கிறாய்.உன் முன்னாடி தானே குத்துக்கல்லாய் நிற்கிறேன் தெரியவில்லையா? ஹலோவை கிலோ போடுகின்றாய். என்னமோ வந்ததிலிருந்து நீ எனக்கு  மரியாதையா குடுக்கிறாய்.மரியாதை குடுக்கிறவர்களிற்கு மரியாதை குடுக்கலாம்.மரியாதையே என்ன விலை என்று கேட்கிறவ மரியாதைபற்றி கதைக்ககூடாது.அதுவும் நீ இதைப்பற்றி பேசக்கூடாது.” என்று பொருமித்தள்ளி விட்டான்.இப்படி ஏதாவது சொன்னால் அவள் சாப்பிட வருவாள் என்பது அவனது கணிப்பு ஆனால் அவள் .’தியா’ அல்லவா.?
“சரி சேர் எனக்கு மரியாதை தெரியாது உங்களுக்கு நல்ல மரியாதை விதம் விதமாக தெரிந்திருக்கிறது. இனிமேல் உங்களைப் போல மரியாதை தெரிந்தவர்களிடமே பழகிக்கொள்ளுங்கள் என்னை விடுங்கள் நான் ஆட்டோ பிடித்து என் றூமிற்கு போய்க் கொள்கின்றேன்” என்று காரை விட்டு இறங்கியவள் வீதிக்கு மறுபக்கமாக செல்ல  எத்தனிக்க அவன் அவளது கையை வலுகட்டாயமாக பிடித்து இழுத்துக் கொண்டு ஹோட்டலை நோக்கி நகர்ந்து கொண்டு “இப்போது சாப்பிடு பிறகு நானே ஆட்டோ பிடித்து அனுப்பி வைக்கிறேன்”என்றான்.
“ஒரு மண்ணும் வேண்டாம் நான் இப்பவே இந்தநிமிடமே போக வேண்டும்.”என்று முரண்டு பிடித்தாள்.
தியா அவனுடன் உணவு உண்ண செல்வாளா……???

Advertisement