Advertisement

Episode 08

அவன் கையிலிருந்து வழிந்த இரத்தத்தை கண்ட அகில் பதறி எழுந்து வந்து “சேர் என்னாச்சு… பிளட் ஏகப்பட்டது வெளியே போகுது.” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே செந்தூர் தனது ஜீன்சில் இருந்த தனது கைக்குட்டையை எடுத்து கையை சுற்றிக் கட்டினான். அதையும் தாண்டி இரத்தம் வழிந்தது.

அதைக் கண்டு மற்ற மூவரும் பதறிக் கொண்டே….. “சேர் ப்ளீடிங் அதிகமாக இருக்கிறது. வாங்க கொஸ்பிட்டலுக்கு போகலாம்” என அழைத்தனர்.

தனது செயலை உணர்ந்த தியா  என்ன செய்வது என்று அறியாது ‘திருதிரு’ என முழித்துக் கொண்டு கையை பிசைந்து கொண்டிருந்தாள்.

அவன் அத்தனை வலியிலும் தியாவை பார்த்து “தியா உன் கையிலும் ப்ளட் வருகிறது பாா்.”என்றான்.

அவள் கையில் இருந்த கண்ணாடித்துண்டு இருபக்கமும் கூர்மையாக இருந்தமையால் அவள் குத்திய வேகத்திற்கு அவளது உள்ளங்கையை பதம் பார்த்திருந்தது.

அவளும் அவன் சொன்னதைக் கேட்ட பிறகு தான்  கையை பாா்த்தாள். அவனது கையிலிருந்து வந்த இரத்தத்தை கண்டு  பதட்டத்துடன் நின்றவள் தன் கையிலிருந்த இரத்தத்தை்காணவும்,ஏற்கனவே இருந்த தலைவலியும் சேர்ந்து  தலையை சுற்றி மயங்கி விழுந்தாள்.

ஓடி வந்து அவன் பிடிக்க முன் கீழே விழுந்தவளின் தலையை தன் மடியில் தூக்கி வைத்து “தியா தியா” என்று எழுப்பியவன் அவள் கண் திறக்காது இருக்கவும் மேசை மீதிருந்த தண்ணீர் குவளையை எடுத்து அவள் முகத்திற்கு தெளித்தவன் அவள் எழும்பாது இருக்கவும் கை வலிக்க வலிக்க அவளை தூக்கிக் கொண்டு காருக்குள் ஓடினான் என்றே சொல்லலாம்.அவன் பின்னே அகிலும் கொஸ்பிட்டல் நோக்கி. விரைந்தான்.

கவர்மென்ட் கொஸ்பிட்டலில் போா்மாலிட்டீஸ் அதிகமென்பதால் ப்ரைவேட் நர்சிங் ஹோமிற்கு சென்றான்.

அவளை ஐசியூ வில் அட்மிட் பண்ணி விட்டு, டாக்ரர் அவனது காயத்தை சுத்தப் படுத்திக் கொண்டே பேச்சுக் கொடுத்தாா். “மிஸ்ரர் செந்தூரன் காயம் எப்படி வந்தது.”

சோ் அது….. ‘பொண்டாட்டி குத்தியது என்றா சொல்ல முடியும்’என மனதிற்குள் நினைத்துக் கொண்டு ….. டாக்ரர் பதிலுக்காய் காத்திருப்பதை உணர்ந்து “உடைந்த கண்ணாடித்துண்டு  என் அவதானப் பிழையால் கையை கிழித்து விட்டது.என்றான்.

ஐசியூ வில் இருக்கும் பேசண்ட்க்கும் உங்களளவு ஆழமான காயம் இல்லை என்றாலும்,அதற்கு வெறும் பன்டேஜ் போட்டால் போதும்.உங்களிற்கு தான் கையில் ஏழு தையல் போட்டிருக்கிறது.கையை கொஞ்சம் கவனமாக பாருங்கள்  ஸ்ரெஸ் பண்ண வேண்டாம்.காயம் ஆழம் என்பதால் தையல் அறுந்து போவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்றவர்.இப்போதைக்கு வலி தெரியாது இருப்பதற்கு ஒரு ‘டப்லட்’ தருகின்றேன் அரை மணிநேரம் கழித்து காயம் செப்ரிக் ஆகாமல் இருக்க ஊசி போடனும் இப்ப கொஞ்சம் ரெஸ்ற் எடுங்க மிஸ்டர் செந்தூா் என டாக்ரர் கூற அவரை இடை மறித்து “இல்லை சேர் பரவாயில்லை நான் ஐசியூ வில இருக்கிற தியாவை பாா்க்கலாமா…..?”

“இல்லை இப்போது பார்க்க முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்தில  நோமல் வாட்டுக்கு மாற்றிய பிறகு போய் பாருங்கள். இப்போதைக்கு உங்களிற்கு தான் ஓய்வு அவசியம்.”என்று கூறி விட்டு  டாக்ரர் வெளியேறினார்.

“இவ கூட வம்பு இழுத்திருக்க கூடாது. தன்னையும் காயப்படுத்தி என்னையும் குத்தி கிழிச்சிட்டாளே… என்னை யாா் ? என அடையாளம் தெரியாத போதே கண்ணாடி கிளாசை ஏத்திட்டா…… தெரிஞ்சா கத்தி எடுத்து ஒரே குத்தாய் குத்தி கொலை பண்ணுற அளவுக்கு போனாலும் போவா அந்த மகராசி.” என பல நினைவுகளுடன் கண்ணயர்ந்தான். அவன் கண்ணயர்ந்து சில நிமிடங்களிலே அவனை யாரோ உலுக்குவது போல தோன்ற  கஸ்ரப்பட்டு விழி விரித்தவன் நர்ஸ் ஒருவர் அவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருப்பதை உணரந்து என்ன விசயமென கேட்டான்.

“நல்ல வேளை நீங்கள் எழுந்து விட்டீர்கள் சேர். உங்களுடன் வந்த பேசன்ட் நோர்மல் வாட்டுக்கு மாற்றப் பட்டு விட்டார். அந்தப் பொண்ணு கத்தி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுது நீங்கள் வந்து என்ன என்று பாருங்கள்”என்றாள்.

“சரி சிஸ்ரர் நீங்கள் செல்லுங்கள் நான் வருகின்றேன்.”என்று எழுந்து அவளது அறையை நோக்கி ஓடினான்.

அவளை அட்மிட் பண்ணியிருந்த வாட்டுக்குள் சென்றவன் ஒரு கணம் அதிர்ந்து பின் தன்னை சுதாகரித்துக் கொண்டு கீழே சிதறிக்கிடந்த பொருட்களை எல்லாம் அந்தந்த இடத்தில் வைத்து விட்டு  அவள் சுருட்டி எறிந்திருந்த படுக்கை விரிப்பை எடுத்துக் கொண்டு அவளருகே வந்தவன் அவள் முழங்காலில் தலையை புதைத்து அழுது கொண்டிருப்பது அவள் முதுகு குலுங்கும் விதத்தில் தெரிந்தது.

“தியா தியா என்ன இது? ஏன் இப்பிடி பெட்சீட் மற்றப் பொருளெல்லாம் எடுத்து றூம் ஃபுல்லா சிதறி விட்டிருக்கிறாய். என்டாம்மா….உனக்கு உடம்புக்கு ரொம்ப முடியல்லயா…? என்று அவளது அருகில் சென்று அவளது தலையை தொட்டு முகத்தை நிமிர்த்தினான்.என்ன நடந்தது என அவன் உணரமுன் அவள் தனது முழுப்பலத்தையும் கொண்டு அவனை பெட்டில் இழுத்து விட பலன்ஸ் இல்லாமல் அவளது பெட்டில் குப்புற விழுந்தவனின் முதுகில் சரமாரியான அடிகள் இடிகளாக விழுந்தன.

“ஏய்….தியா விடு….. கைக்காயம் தட்டுபட்டு தையல் பிரியப் போகுது” என்று அவன் கத்த அவளது காதுகளில் விழுந்தால் தானே.

“தியா விட்றி வலிக்குதடி ப்ளீஸ் என்று அவன் கெஞ்ச அவளுக்கு இன்னும் கோபம் வெறியாக மாறியது.

“ஏன்டா நான் உனக்கு என்ன துரோகம் பண்ணினேண்டா, உன்னை நல்லவன் எண்டு என் மனசுக்குள்ளே நினைச்சனான் தெரியுமோ? நீ என்னடா என்றால் என்னை எவ்வளவு கேவலமாக நினைச்சிருந்தால் என்னைப் பார்த்து கண்ணடிப்பாய் என அவனது தலை முடியை பிடித்து குலுக்கியவள் அவன் முதுகில் இரண்டு குத்து ஓங்கிக் குத்தி விட்டு மறபடியும் அழத்தொடங்கினாள்.

இவளது கதையைக் கேட்டவன் அவளை தடுக்காது என்ன வேணும் எண்டாலும் செய் என்பது  போல அப்படியே துவைத்து காயப்பட்ட துணி போல அப்படியே கிடந்தான்.

‘அடிப்பாவி….! இதுக்கு தான் இந்த மொத்து மொத்தினியா..உன்னைப்பார்த்து கண்ணடிச்சிருக்க கூடாதடி… என் தப்பு தான் கண்டபடி கதைக்கிற வாயில ‘லிப் டு லிப் கிஸ்’தான் பண்ணியிருக்கனும்…என மனதிற்குள் நினைத்தவன் அப்படி மட்டும் நடந்திருந்தால் இன்றைக்கு எனக்கு வாயிலதான் தையல் போட்டு பன்டேஜ் சுத்தியிருப்பார் டாக்ரர் என மனதுக்குள் நினைத்த வண்ணம் அடிச்சு முடிச்சிட்டா போல…….’என கையை மெதுவாக ஊண்றி எழ முயற்சிக்க தையல் அறுந்ததன் அடையாளமாக வெள்ளை பன்டேஜை தாண்டி இரத்தம் கசிந்து கொண்டிருக்க  வலியைப் பொறுத்துக் கொண்டு அவளருகில் அமர்ந்தான்.

ஆள் பாரக்க வத்திக்குச்சி போல இருக்கிறா….. ஆனால் அடி ஒவ்வொன்றும் இடி போல இருக்குது. ‘ சரி இவளை இப்போதைக்கு சமாதானப்படுத்துவோம்’ என நினைத்தவன் “தியா ஐ ஆம் சாரி. நான் அப்பிடி பண்ணியிருக்ககூடாது. இனிமேல் அப்படி பண்ணமாட்டேன்.உண்மையாகவே என்னை மன்னித்து கொள்.” என்றான்.

“உங்களை மாதிரி பொறுக்கியள் எல்லாம் இஸ்ரத்திற்கு என்ன வேணும் எண்டாலும் செய்யுறதுக்கு ஆம்பிளை என்ற திமிர் தானே காரணம்.அடுத்த ஜென்மத்தில நீ பொம்பிளையா பிறந்தால் தான் உனக்கெல்லாம் எங்கட கஸ்ரம் விளங்கும்.” என அவனிற்கு பெரிய மண்டகப்படி ஒன்றை நடாத்திக் கொண்டிருந்தாள்.

“தியா ஸ்ரொப் ப்ளீஸ் .எனக்கும் அம்மா,அக்கா என்று உறவுகள் இருக்கத்தான் செய்கிறார்கள்”.என்றான்.

“ஆமாம்….. பெரிதாக அக்கா,அம்மா என்று அளக்கிறாயே உன் அக்காவைப் பார்த்து யாரும் கண்அடிச்சிருந்தா நீ என்ன செய்வாய்” என்றாள் தியா.

இவளது கதையைக் கேட்டு அவன் கண்கள் சிவந்து,கைமுட்டிகள் இறுகி நரம்புகள் புடைத்து வெடிப்பது போல இருந்து.

சாதரணமாக உன் அக்கா பற்றி சொன்னதற்கே உனக்கு நரம்பு புடைக்கிறதே, இப்படி ரோசப்படுகிறவன் இன்னொரு பொண்னைப் பார்த்து கண்ணடிக்கிறது கொஞ்சம் கூட பொருத்தமான செயல் இல்லையே…… என வியந்தவள் ஆனாலும் உன் அக்கா கொடுத்து வைத்தவர் தான்.நீ பொறுக்கியாய் இருந்தாலும் அக்காக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னாடி வந்து தாங்குவதற்கு நீ  இருக்கிறாய்.ஆனால் எங்களை போல பெண்களிற்கு யாருமில்லை என்ற துணிவில் தானே உன்னைப் போன்ற ஆண்கள் வாலாட்டுகிறீர்கள்.” என்று வாங்கு வாங்கென்று வாங்கி விட்டாள்.

செந்தூருக்கு அவனது தவறு புரிந்து இருந்தாலும் அவன் காதல் கொண்ட மனதிற்கு இந் நிகழ்வு ஒரு இனிமையாக இருந்ததையும்  அவன் ஆழ்மனது அறிந்து தான் இருந்தது.

பில் செட்டில் பண்ணி விட்டு வந்த அகில் தியாவின் பெட்டில் செந்தூர் இருக்கவும் “சேர் ஏதாவது பிரச்சனையா” என்றான்.

அவன் பதில் சொல்லு முன் அங்கு வந்த நர்ஸ்  “என்ன சேர் இப்பிடியொரு கேள்வியை கேட்கிறீர்கள். இந்த பொண்ணு பண்ணிய ஆர்ப்பாட்டத்தில் இவங்களை அமைதிப்படுத்த டாக்ரர் தான் இவரை வரச் சொன்னார்” என்று நர்ஸ் கூறி முடிக்க, செந்தூர் நர்சுக்கு மனதுக்குள் நன்றி கூறிக் கொண்டான்.

நர்ஸ் அங்கேயே நிற்கவும் “என்ன சிஸ்ரர்” என்றான்.

“இந்தப் பொண்ணுக்கு ஊசி போட வேணும்.”என்றவாறு ஊசியில் மருந்தை ஏற்றவும் செந்தூர் பெட்டில் இருந்து எழ முயற்சிக்க நர்ஸ் அவனை பார்த்து “ எழும்ப வேண்டாம் சேர் உங்கள் கையிலிருந்து இரத்தம் வருகிறது. கையில் தையல் பிரிந்து விட்டதா என செக் பண்ணி மறபடியும் பன்டேஜ் போட்டு விடுகின்றேன் என கூறிக் கொண்டு அகிலை திரும்பி பார்த்து நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள்.” என்றாள்.

அகில் வெளியே செல்லவும் நர்ஸ் ஊசியோடு தியாவை நோக்கி முன்னேற தியாவுக்கு பயத்தில் கைகள் நடுங்க “சிஸ்ரர் நான் நோர்மலாத்தானே இ..இரு..க்…கி..றேன்.என வாய் குழறியவள் பின்நோக்கி நகர்ந்து அவனை இடித்துக் கொண்டு விழித்தவள் செய்வதறியாது திகைக்க “இதோ பாருங்கள் மேடம் எனக்கு அடுத்தடுத்து வேலை இருக்கிறது.உங்களோடு மட்டும் நிற்க்க முடியாது.சீக்கிரமாக கையை நீட்டுங்கள்.” என்றாள்.

“தியா கையை காட்டும்மா” என்ற செந்தூரைப் பார்த்து ‘மலங்க மலங்க’ விழித்தவளைப் பார்தவனுக்கு அவனது அண்ணன் மகள் மதுக்குட்டியைப் பார்ப்பது போல தியா இருந்தாள். இவ்வளவு நேரம் அவனைப் போட்டு பின்னியெடுத்தது இவள் தானா? இல்லை இவ உடம்பிற்குள் ஆவி ஏதும் புகுந்து இருக்குமோ? என நினைக்கும் வகையில் இருந்தன அவள் செயற்பாடுகள். ஊசியைப் பார்த்து பயந்து போய் இருந்தாள்.  

“எறும்பு கடித்தது போல தான் இருக்கும். நீ உன் கண்ணை மூடிக் கொள் தியா.நான் உன் கையை அசையாமல் பிடித்துக் கொள்கின்றேன்.” என கெஞ்சி மன்றாடி அவளை வழிக்கு கொண்டு வருவதற்குள் இருவருக்கும் போதும் என்றாகி விட்டது. நர்ஸ் ஊசியை அவளது கையில் ஏற்றவும் வலியில் முகத்தை திருப்பி அருகில் அமர்ந்து கையை பிடித்தவன் நெஞ்சில் புதைத்துக் கொண்டு, மற்றக் கையால் அவனது முதுகை சுற்றி வளைத்துக் கொண்டாள்.நர்ஸ் ஊசி போட்டுவிட்டு, அவனது கைக்காயத்தை பிரித்து புதிதாக மருந்திட்டு கை தட்டுப்பட்டதால் தான் இரத்தம் வருகிறது. தையல் பிரியவில்லை என கூறிச் சென்ற பிறகும் அவன் நெஞ்சில் தான் புதைந்திருந்தாள்.அவனது நிலையோ சொல்லத் தேவையில்லை.பத்து பனி மலை,ஆயிரம் தென்றல் காற்று வந்து உடம்பில் மோதும் போது வருமே ஒரு சுகம் அது போன்ற ஒரு மனநிலையில் இருந்தவன் இரண்டாம் முறையாகவும் அதே நர்ஸ்சுக்கு மனதிற்குள் நன்றி கூறிக் கொண்டான்.

மனமில்லாமல் அவளை எழுப்பியவன் அவள் அசையாது இருக்கவும் பதட்டமாகி அவளின் முகத்தை நிமர்த்தியவன் நிலை பரிதாபமாய் இருந்தது.ஊசி போடும் போது தலையை சுற்றிக் கொண்டு வருவது போல் இருக்க அவன் நெஞ்சில் சாயந்த வண்ணம் கண்ணை மூடியவள் உடல் அசதியால் கண்ணயர்ந்தவள் அப்படியே உறங்கியவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.இதைப் புரியாது அவன் தான் ஏகப்பட்ட அளவிற்கு எக்ஸ்சைட்மென்ட் ஆகி விட்டான். ‘இது தேவையாடா செந்தூர் உனக்கு என கையை தன் முகத்துக்கு நேரே நீட்டி தன்னைத் தானே திட்டிக் கொண்டவன் கண்ணடித்ததற்கே கதகளி ஆடியவள் கட்டிஅணைக்கிறாளா?’என மனதிற்குள் நினைத்த படி விழித்தாள் என்றால் ஒரு  குச்சுப்புடியே என் முதுகில் ஆடுவாள் என்ற எண்ணமே அவன் மனதிற்கு இதமாய் இருக்க அவனை மீறி உதடுகள் புன் முறுவல் பூத்தன.

லேசாக தூக்கம் கலைந்து எழுந்தவள் தான் எங்கே இருக்கின்றோம் என புரியாது யோசித்தவள் தலையை மேலே நிமிர்த்தி பார்த்தவள் கண்களில் பட்டது அவன் புன்னகையே….. இவன் மேலேயா இவ்வளவு நேரம் இருந்தோம் என்ற நினைப்பிலேயே அவள் உடம்பெல்லாம் எரிய அவனிடமிருந்து விடுபட்டு எழுந்து அவனை முறைக்கவும் அவன் என்ன? என்பது போல பார்த்தான்.

“என்டா இது தான் சாக்கென்று கட்டிப்பிடிக்கிறியா…” என்றாள்.

அவனுக்கு வந்த ஆத்திரத்தில் “ஆமாம் இப்போது அதுக்கு என்ன செய்கிறதாய் உத்தேசம்” என்றான்.

அவள் கோபத்தில் தலையணையை தூக்கி வைத்துக் கொண்டு பெட் மீது ஏறி நின்று அவனை அடிப்பதற்காய்  தலைக்கு மேல் ஓங்கியிருந்தாள்.

“ஆரம்பிச்சிட்டா….. இனி அடங்கமாட்டா…. எனநினைத்துக் கொண்டு இப்ப என்ன நீ என்னை அடிக்கனும் அதுக்கு முன்னால் நான் உன்னை ஒருதரம் கட்டிப்பிடித்துக் கொள்கின்றேன் அதுக்கு பிறகு அடி ஏனென்றால் தப்பு செய்யாமல் தண்டனை அனுபவிக்கின்றதென்றால் மனசுக்கு சங்கடமாக இராதா” என கேட்டவன் அவன் தான் சொன்னதை நடாத்திக் கொள்ள போவது போல அவனும் பெட் மேல் ஏறினான்.

“டேய் மேலே ஏறாதே… அப்புறம் நான் சத்தம் போடுவேன்…. பிறகு வெளியில்  இருந்து ஆட்கள் எல்லோரும் வந்து உன்னை சட்னி ஆக்குவார்கள்… பரவாயில்லையா….” என்றாள்.

“பரவாயில்லடி…. நீ…. அடிக்காத அடியையா அவர்கள் அடிக்கப் போகிறார்கள் என்றவன். கத்து… கத்தடி…. பார்க்கலாம் என்றவன் அதற்கு முதல் உன் தலைக்கு மேல் இருக்கின்ற சிசிடிவி கமராவைப் பார் அதில தெரியும் நீ என்னை கட்டிப்பிடிச்சியா…. இல்லை நான் உன்னை கட்டிப்படிச்சேனா என்பதை அது காட்டும் பரவாயில்லை என்றால் கத்து….” என்றான்.

‘இவன் சொல்வது உண்மையா இருக்குமோ?’ என நினைத்தவள் அப்படியே தலையணையை பெட்டில் போட்டு  விட்டு அதற்கு மேல் அமர்ந்தவள் அவளது கெத்தை விடாது “அது கத்தலாம் தான் ஆனால் நீ சீவ்ப் என்ஜினியர். உனக்கு என்னால தர்மஅடி விழுந்தால் உனக்கு நம்ம  ஆபிசில் மரியாதை இருக்காதே என்று தான் யோசிக்கிறேன்……” என்றாள்.

“ம்…நல்ல யோசனை உனக்கு என்று கிண்டல் பார்வை பார்த்தவன் மற்றவர்கள் அடிச்சால் மரியாதை இல்லை.  நீ அடிச்சால் மட்டும் நம்ம ஆபிசில் எனக்கு மரியாதை கிலோக்கணக்கில் கிடைக்குமா? என்றான்.

அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்து விட்டு “உன் ஜோக்குக்கு என்னால் இவ்வளவு தான் சிரிக்க முடியும்  என்றவள்.சும்மா கவலைப்படாதே நான் அடிச்சது யாருக்கும் தெரியாது. நான் யாருக்கும் சொல்ல மாட்டேன் . எனறவளை திரும்பி பாரத்து சிரித்தவன் பதிலுக்கு நீ என்னை கட்டிப்பிடித்ததை நான் யாரக்கும் சொல்லக் கூடாது அதுதானே உன் டீல்” என்றான்.

“நீ சீவ்ப் எஞ்ஜினியர் ஆவதற்கு முழுத்தகுதியும் உனக்கு இருக்கு பார்.நான் என்ன மாட்டர் என்று சொல்லி முடிக்கவேயில்லை.பட்டென்று பொயின்ரை பிடித்து விட்டாய்.உனக்கு கற்பூர புத்தி” என்று சிலாகித்தாள்.

“பின்னே இருக்காதா….. உன்னைப் போல ரவுடி ஸ்ராபை எல்லாம் வைச்சு மேய்க்கிறது என்றால் கொஞ்சமேனும் மண்டைக்குள்ளே இருக்க வேண்டுமல்லவா?” என்றான்.

“நான் ஒன்றும் ரவுடி இல்லை நான் எல்லாம் ரொம்ப அமைதி, வெரி இனொசன்ட் தெரியமா?” என்றாள்.

“ம்கூம் நான் கூட இன்று காலை  வரை அதாவது கண்ணாடி கிளாசால நீ என்னை குத்துகிற வரை அப்படித் தான்

நினைத்தேன்.”என்றான்.

Advertisement